“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து திமுக விலகி விட்டது” என்று கூறுவதைக் காட்டிலும், “விலகுவதைத் தவிர கருணாநிதிக்கு வேறு வழி இல்லை” என்றே கூறவேண்டும். இனிமேலும், வெளியேறவில்லையென்றால் தமிழக மக்களின் பொதுக்கருத்து தனக்கு எதிராகத் திரும்பிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக கருணாநிதி இந்த முடிவினை எடுத்திருக்கிறார் என்பது எல்லோரும் புரியக்கூடிய ஒரு விடயம்.
ராஜபக்சே அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தில், இனப்படுகொலை, போர்க்குற்றம், சர்வதேச விசாரணை போன்றவற்றை சேர்க்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பலரும் கோரிக்கொண்டிருக்க, இதற்கு நேர் எதிரான வேலையை ஜெனிவாவில் டில்லி செய்திருக்கிறது.
“அமெரிக்க தீர்மானத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை இன்னும் கண்ணால் பார்க்கவில்லை” என்று நேற்று வரை கூசாமல் புளுகிக்கொண்டிருந்தார் ப.சிதம்பரம். ஆனால், அமெரிக்க தீர்மானத்தில், சர்வதேச விசாரணைக்கும் சோதனைக்கும் வாய்ப்பளிக்கின்ற எல்லா சொற்களையும் நீக்குவதில் இந்திய அரசுதான் ஜெனிவாவில் முனைந்து வேலை செய்திருக்கிறது.
இது ஊகமல்ல. அம்னஸ்டி இன்டர்நேசனல், இந்தியாவின், தலைமை எக்சிகியூடிவ், ஜி. அனந்த பத்மநாபன் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார். (first post.com, 19.3.2013)
“இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச சமூகத்தின் கவலைகள் பெரிதும் புறந்தள்ளப்பட்டுவிட்டன. இது மிகப்பெரிய பின்னடைவு. தற்போதைய நகல் தீர்மானம், நம்பகத்தன்மை வாய்ந்த, சுயேச்சையான விசாரணையை நடத்துவதற்கான அமைப்பை உருவாக்கும் பொறுப்பை இலங்கையிடமே விட்டிருக்கிறது’. திங்களன்று முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட நகல் பெரிதும் மென்மையாக்கப்பட்டு விட்டது. இந்த திருத்தங்களில் இந்தியத் தலையீட்டிற்கான தடயங்கள் ஏராளமாக இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.
நாங்கள் அப்படியெல்லாம் திருத்தம் கொண்டு வரவே இல்லை என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சாதித்துக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரம். தாங்கள் கொண்டு வர விரும்பிய திருத்தத்தை “தடயம்” தெரியாத வகையில் வேறு நாட்டை வைத்து செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இப்போதும் திருத்தம் கொண்டுவர முயற்சிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர பேசிக் கொண்டிருப்பதாகவும் சிதம்பரம் சொல்கிறார்.
இது எல்லாம் காக்கா நரி கதை. ஜெனிவாவில் எதுவும் நடக்காது. நாடாளுமன்றத்திலும் எதுவும் நடக்காது. இனப்படுகொலை, போர்க்குற்றம் என்று எழுதி ஒரு தீர்மானத்தை சுற்றுக்கு விட்டால், பாரதிய ஜனதா முதல் ஆளாக ஆட்சேபிக்கும். குறிப்பாக ஒரு நாட்டின் பெயர் சொல்லி எந்த தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் அனுமதிக்க முடியாது என்று ஏற்கெனவே தெளிவு படுத்திவிட்டார் முரளி மனோகர் ஜோஷி. மேலும் நாளை ஒரு நாளுக்குள் நடக்கிற விவகாரம் அல்ல இது. நடந்தாலும் அந்த தீர்மானக் காகிதம் பீ துடைக்க கூட உதவாது.
நாம் கவனிக்க வேண்டிய விசயம் வேறு இருக்கிறது. முலாயம், மாயாவதி ஆதரவு தந்துவிட்ட பின்னரும் திமுகவை காங்கிரசு தாஜா செய்ய முயற்சிப்பது ஏன் என்பதுதான் அந்த விசயம். தமிழக மக்களின் பொதுக்கருத்து தனக்கு எதிராக திரும்பிவிடும் என்ற அஞ்சி காங்கிரசு இதை செய்யவில்லை. கருணாநிதியை கைக்குள் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டிய தேவை காங்கிரசுக்கு இருக்கிறது. அதேபோல தப்பித்து வெளியேற வேண்டிய தேவை கருணாநிதிக்கும் இருக்கிறது.
காரணம் 2 ஜி விவகாரம்.
மன்மோகன் சிங், சோனியா, ப.சிதம்பரம் உள்ளிட்ட அனைவரும் சம்மந்தப்பட்ட கூட்டுக் களவாணித்தனமே 2 ஜி அலைக்கற்றை கொள்ளை. இந்த விவகாரத்தில் பரம்பரைக் கிரிமினல்களான காங்கிரசுக்காரர்கள், தாங்கள் தப்பித்துக் கொண்டு ஆ.ராசாவையும் திமுகவையும் மட்டும் காவு கொடுத்து விட்டார்கள். இதுநாள் வரை கசியாத இது தொடர்பான உண்மைகள் இப்போது இப்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
அலைக்கற்றை ஊழலில் திமுகவை மட்டும் ஊழல் கும்பலாக காட்டி, உத்தம வேடம் போட்ட காங்கிரசின் இந்த களவாணித்தனத்துக்கு சுப்பிரமணியசாமி, பார்ப்பன ஊடகங்கள், பார்ப்பனத் அதிகாரத் தரகுக்கும்பல், ஜெயலலிதா, சோ உள்ளிட்ட அனைவரும் இந்த நிமிடம் வரை ஒத்துழைத்திருக்கின்றனர்.
“திராவிட வெறுப்பு, தமிழின வெறுப்பு, தமிழகத்திலிருந்து பார்ப்பன எதிர்ப்பை துடைத்தெறிய வேண்டும் என்ற வெறி” ஆகிய “கொள்கைகளில்” உடன்பாடு கொண்ட இவர்கள், சு.சாமியை முன்நிறுத்தி தங்கள் காரியத்தை நடத்தி முடித்து, ஜெயலலிதாவையும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி விட்டனர்.
அலைக்கற்றை ஊழல் வெளிவந்த காலத்தில், மன்மோகன் சிங் கறை படாத சொக்கத்தங்கம் போலவும், அவர் மீது கடவுள் கூட குற்றம் சாட்ட முடியாது என்பது போலவும், அந்த அப்பிராணி மனிதருக்குத் தெரியாமல் ராசா கொள்ளையடித்து விட்டதைப் போலவும், அனைத்திந்திய ஊடகங்களும், உச்சநீதிமன்றமும் ஒரு பில்டப் கொடுத்து தூக்கி விட்டன. கல்லுளி மங்கன் மன்மோகன்சிங்கும், அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு, தனக்கு தெரியவே தெரியாது என்று கூசாமல் அடுக்கடுக்காக பொய்களை அவிழ்த்து விட்டார்.
“மன்மோகன் சிங்கிற்கு தெரியாமல் இது நடக்கவில்லை. நீங்கள் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று ஊடகங்கள் சு.சாமியைக் கேட்டபோது, “என்னுடைய இலக்கு திமுக மட்டும்தான்” என்று பச்சையாக பதிலளித்தார் சு.சாமி.
இந்த ஊழலை விசாரிக்க “கூட்டு பாராளுமன்றக் குழு (JPC) அமைக்க வேண்டும்” என்று கோரி பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டபோது, யோக்கிய சிகாமணி மன்மோகன், “ நான் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்” என்று உருக்கமாக அறிக்கை விட்டார். உடனே காங்கிரசு களவாணிகள், “நாட்டாமை நீங்களா.. அந்த நதியே காஞ்சு போனா” என்ற ரேஞ்சுக்கு சீனைப் போட்டு கண்ணீர் வடித்தனர்.
இன்று நடப்பது என்ன?
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான ராசா, “நான் கூட்டு பாராளுமன்றக் குழுவில் ஆஜராகி பேச வேண்டும்” என்று மன்றாடுகிறார். நான் கூப்பிட மாட்டேன் என்கிறார் குழவின் தலைவர் சாக்கோ. இப்படி ஒரு அயோக்கியத்தனத்தை யாராவது எங்காவது பார்த்திருக்க முடியுமா? எவன் எவனோ சாட்சியம் அளிக்கிறான். முதல் குற்றவாளியும் சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரும் பேசக்கூடாதாம்.
“ஆ.ராசாவை ஏன் அழைக்க மறுக்கிறீர்கள்?” என்று புரட்சித்தலைவியோ, சுப்பிரமணியசாமியோ கேட்கவில்லை என்பதுதான் இந்த மர்மக் கதையின் சிறப்பு.
கடந்த சில நாட்களாக இந்து நாளேட்டில் ஷாலினி சிங் எழுதி வரும் கட்டுரைகள், மன்மோகன் சிங்கிற்கு இந்த கொள்ளையில் நேரடியாக தொடர்பிருப்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கின்றன. முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற கொள்கை விவகாரத்தில் மட்டுமல்ல, கடைசி நேரத்தில் தேதியை மாற்றியது என்ற முக்கியமான ஊழல் குற்றச்சாட்டிலும் மன்மோகன் நேரடியாகவே சம்பந்தப் பட்டிருக்கிறார் என்பது அம்பலமாகியிருக்கிறது.
அது மட்டுமல்ல, இந்த ஊழல் விவகாரம் வெளிக்கிளம்பிய பின்னர் “இந்த விவகாரத்திலிருந்து என்னை பத்திரமாக கொஞ்சம் எட்டத்தில் வைப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள்” (keep me away at arms length) என்று மன்மோகன் சிங் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததும் வெளியில் வந்து விட்டது.
மன்மோகன் சிங்கை காப்பாற்றும் வகையில் துறை அதிகாரிகள் தமக்குள் பேசி வைத்துக்கொண்டு கூட்டு பாராளுமன்றக் குழுவில் பொய் சாட்சி சொல்லியிருக்கிறார்கள் என்பதும் அம்பலமாகிவிட்டது
இவ்வளவு விசயங்கள் இருந்தபோதிலும், பாஜக, அதிமுக ஆகிய யாரும் நாடாளுமன்றத்தில் கூச்சல் போடவில்லை. மன்மோகன் சிங்கை ராஜினாமா செய்யச் சொல்லி கேட்கவில்லை.
“ஈரத்துணியைப் போட்டு ராசாவின் கழுத்தை மட்டும் சத்தமில்லாமல் அறுத்துவிடலாம்” என்பதே இவர்களின் திட்டம். இப்போது கத்தவில்லை என்றால் திமுக எப்போதுமே கத்த முடியாது. அமைச்சரவைக்கு உள்ளே திமுகவை வைத்திருந்தால், எதையாவது சொல்லி, வாயை அடைத்து விடலாம் என்ற காரணத்தினால்தான், “ எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். உள்ள வாங்க” என்று நைச்சியமாக கருணாநிதியைக் கூப்பிடுகிறது காங்கிரசு.
இந்த விசயத்தில் திமுக காங்கிரசுடன் எந்த அளவுக்கு மோதப்போகிறது என்று நமக்கு தெரியாது. வேறு பல பிரச்சினைகள் சமன்பாடுகள் இருக்கலாம். ஆனால் உள்ளே இருக்கும் வரையில் பேசவே முடியாது. வெளியே வருவதற்கு அலைக்கற்றை ஊழலைக் காரணமாக காட்டுவதை விட, ஈழத்தமிழர் பிரச்சினையை காரணமாக காட்டுவது மதிப்பான விசயம் இல்லையா? அந்த வகையில் ஜெனிவா திமுகவுக்கு கை கொடுத்திருக்கிறது.
மன்மோகன் சிங் என்ற திருடனை (அதாவது சோனியாவை) திமுக சந்திக்கு இழுக்குமா? ஒரு வகையில் பார்த்தால் இழுத்துத்தான் ஆக வேண்டும். இலங்கைப் பிரச்சினையைப் போலவே இதிலும் திமுகவிற்கு வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு இழுக்கும் பட்சத்தில் என்போர்ஸ்மென்ட் டைரக்டரேட் மூலம் கலைஞர் தொலைக்காட்சியின் சொத்துகளை முடக்குவது, கனிமொழியை மீண்டும் கைது செய்வது என்ற திட்டத்துடன் காங்கிரசு தயாராக இருப்பதாக சில பத்திரிகைகள் கூறுகின்றன.
திமுகவோ, காங்கிரசோ, ஜெயல்லிதாவோ அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று ஊகிப்பது நமக்கு தேவையில்லாத வேலை. அவர்கள் என்ன செய்தாலும், என்ன பேசினாலும் அதன் பின்னால் இப்படியொரு பின்புலம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து வைத்திருப்பதுதான் அவசியம்.
தமிழ், திராவிடம், பார்ப்பன எதிர்ப்பு போன்ற அனைத்தின் மீதும் மாளா வெறுப்பு கொண்ட, காங்கிரசு, பாஜக, சு.சாமி, சோ, இந்து ராம், ஜெயலலிதா உள்ளிட்ட மெகா பார்ப்பனக் கூட்டணி ஒரு புறம்.
திராவிடம், தமிழ் என்று பேசிப் பிழைத்து, ஊழல், சந்தர்ப்பவாதத்தில் புழுத்து பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கையின் கவுரவத்தையே குழி தோண்டிப் புதைத்த திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு புறம்.
திராவிட இயக்கத்தின் மீதான துவேசத்தையும், பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் மீதான தங்களது அபிமானத்தையும் மறைத்துக் கொண்டு, ஈழப்பிரச்சினையில் திமுகவின் துரோகத்தைக் காட்டி, அதன் மூலம் தங்களது ஆழ்வார் வேலையை நியாயப்படுத்தும் தமிழினவாதிகள் ஒருபுறம்.
லாவணி தொடங்க இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் பாடகர்களைப் பற்றிப் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் கச்சேரியை நாமே முடித்து வைக்க முடியும்.
– சூரியன்
2002 ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்த போது குஜராத்-யில் முஸ்லீம் மக்கள் மீது ஒரு இனப்படுகொலையினை ஆர்.எஸ்.எஸ், பாஜக, பஜ்ரங்தள் போன்ற பாசிச அமைப்புகள் நட்த்தியபோதும் வாய்மூடி மெளனமாக இருந்தவர் கருணாநிதி.
இப்படி வாஜ்பாய் உடன் இருந்த அதே கருணாநிதி தான் அடுத்து மதவெறி அரசாளக்கூடாது என காங்கிரஸ் கூட்டணிக்கு ஜம்ப் செய்து தொடர்ச்சியாக 9 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியிலும் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை வகித்தார். அதில் பிரச்சனை வந்தப்ப கூட டெல்லி சென்று மிரட்டி அமைச்சர் பதவி வாங்கி வந்த கருணாநிதி ஈழத்தில் 2009-ல் இனப்படுகொலை உச்சத்தின் போது 4 மணி நேரம் மெரினாவில் உண்ணாவிரதம் இருந்துவிட்டு போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது எனவும், ஈழமக்களுக்கு விடுதலைவாங்கி தந்துவிட்டதாகவும் கூட கூறிக் கொண்டார்.
இப்படி தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த கருணாநிதி குஜராத் இனப்படுகொலைக்கும், ஈழத்தமிழ் இனப்படுகொலைக்கும் மட்டுமல்ல இந்திய கொலைகார அரசு ஏற்படுத்திய விலைவாசி உயர்வும், பெட்ரோல்-டீசல் விலைஉயர்வு, நேரடி மானியத் திட்டம் என அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், 2ஜி,காமன்வெல்த் முதல் நிலக்கரி சுரங்க முறைகேடு, ஹெலிகாப்டர் பேரம் வரை நடந்த அனைத்து கொள்ளைகளுக்கும் உடன் இருந்த கூட்டாளி ஆவார். விதர்பா விவசாயிகள் தற்கொலைக்கும் பசுமைவேட்டை உள்நாட்டுப்போருக்கும் மட்டுமல்ல ஆபத்தான கூடங்குளம் அணு உலைகளுக்கும் கூட அவர் பங்காளி என்றால் அதை மிகையில்லை.
‘இந்தியாவின் பங்கு இருக்குமாயின் அதுவும் விசாரிக்கபட வேண்டிய ஒன்று’ தான் என இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்து, ‘ஈழத்தில் போரை நடத்தியது தன்னுடைய அரசு தான் என்பது கூட தனக்கு தெரியாது போல தற்போது நாடகமாடுகிறார் கருணாநிதி. ஆனால் போரை நடத்திய இந்திய அரசில் அங்கமாக இருந்த கருணாநிதியையும் விசாரிப்பது தானே சரியாக இருக்க முடியும்.
ஈழத்தமிழின படுகொலையின் இரத்தம் இந்தியாவின் கைகளில் மட்டுமல்ல… ஓட்டுப்பொறுக்கி அரசியலே இந்திய மக்களுக்கு மட்டுமல்ல ஈழத்திற்கும் தீர்வு என தொடர்ந்து இந்திய அரசுக்கு காவடி தூக்கிய கருணாநிதி, ஜெயலலிதா, திருமா, வைகோ, சீமான், பழ.நெடுமாறன் போன்றவர்களின் கைகளிலும் படிந்து இருக்கிறது என்பதே உண்மை.
நமது வாழ்வினை அழிக்கும் அதே இந்திய அரசு தான் ஈழத்தமிழர்களின் வாழ்வினையும் அழித்து உள்ளது. அந்த இந்திய அரசையும் அதன் மீது நம்பிக்கை வைக்க சொன்ன துரோகிகளையும் தண்டித்தால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் நீதி கிடைக்கும்.
திராவிட இயக்கத்தின் மீதான துவேசத்தையும், பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் மீதான தங்களது அபிமானத்தையும் மறைத்துக் கொண்டு, ஈழப்பிரச்சினையில் திமுகவின் துரோகத்தைக் காட்டி, அதன் மூலம் தங்களது ஆழ்வார் வேலையை நியாயப்படுத்தும் தமிழினவாதிகள் ஒருபுறம்////////Correct sir…
“முதல் குற்றவாளியும் சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரும் பேசக்கூடாதாம்.” – இதில் சு.சாமி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் மிகத் தெளிவாக இருக்கிறது. ராசாவை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என சு.சாமி அளித்த பேட்டி ஏற்கனவே தினமணியில் வெளிவந்துள்ளது.
கட்டுரை சரியான கோணத்தில் பிரச்சனைகளை மிகத் தெளிவாக முன்வைத்துள்ளது.
ஆமாம்.ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமான திராவிட இயக்க மாணிக்கங்களை அனியாயமாயன்றோ குறைகூறி விட்டனர் கயவர்கள்.மிக அற்புதமான கட்டுரை.
\\பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கையின் கவுரவத்தையே குழி தோண்டிப் புதைத்த திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு புறம்//
இது தான் மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. நேற்று NDTV யில் தெனாவெட்டாக பேசிக்கொண்டிருந்த சு.சாமிக்கு தக்க பதிலடி கொடுக்க ஆளில்லையே என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது.
2 ஜி ஊழலில் பார்ப்பன அருண்சொரி யை முறைப்படி விசாரணை செய்ய வலியுறுத்த அவாள்கள் மறுப்பது ஏன்?
// அலைக்கற்றை ஊழலில் திமுகவை மட்டும் ஊழல் கும்பலாக காட்டி, உத்தம வேடம் போட்ட காங்கிரசின் இந்த களவாணித்தனத்துக்கு சுப்பிரமணியசாமி, பார்ப்பன ஊடகங்கள், பார்ப்பனத் அதிகாரத் தரகுக்கும்பல், ஜெயலலிதா, சோ உள்ளிட்ட அனைவரும் இந்த நிமிடம் வரை ஒத்துழைத்திருக்கின்றனர். //
வினவு : (பார்ப்பனக் கும்பலைப் பார்த்து) சரவணன் சொம்பைத் திருடிக்கிட்டுப் போய் வித்ததை மீனாட்சி காட்டிக் கொடுக்காமல் எல்லாப் பழியையும் தானே ஏத்துக்கிட்டு இருக்காளே.. அவளைப் போய், நீங்க எல்லாரும் தெரிஞ்சே திட்டுனீங்களேடா.. பாவிகளா.. உருப்படுவீங்களா நீங்க..
மீனாட்சி : (புன்சிரிப்பை ஒன்றை சிந்திவிட்டு) டேய் சரவணா, டேய் பார்ப்பான்ஸ்.. எனக்கு யாரும் இல்லேன்னா நினைச்சீங்க.. எங்க அண்ணன் வினவு வந்துட்டாருடா.. உங்க எல்லாரோட ஆட்டமும் குளோஸ்…
– தொடரும்…
அம்பி, உங்களது பொறுமையும், நிதானமும் இவ்வளவுதானா, கட்டுரையின் மையப்பொருளை விளங்கிக் கொள்வதில் என்ன பிரச்சினை?
/ கடந்த சில நாட்களாக **இந்து நாளேட்டில்** ஷாலினி சிங் எழுதி வரும் கட்டுரைகள், மன்மோகன் சிங்கிற்கு இந்த கொள்ளையில் நேரடியாக தொடர்பிருப்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கின்றன //
// தமிழ், திராவிடம், பார்ப்பன எதிர்ப்பு போன்ற அனைத்தின் மீதும் மாளா வெறுப்பு கொண்ட, காங்கிரசு, பாஜக, சு.சாமி, சோ, ** இந்து ராம் **, ஜெயலலிதா உள்ளிட்ட மெகா பார்ப்பனக் கூட்டணி ஒரு புறம். //
இந்து ராம் இப்போது ஆசிரியர் பொறுப்பில் இல்லை என்றாலும் இந்து பெரிதும் அவரது அவாளது திட்டப்படிதான் நடக்கிறது. எடுத்துக்காட்டு, ஈழப் பிரச்சினை தொடர்பான அதனுடைய ராஜபக்சே ஆதரவு நிலை. இருப்பினும் போபார்ஸ் ஊழல், 2 ஜி ஊழல் போன்றவற்றின் சில தரவுகள் ஒரு பத்திரிகை என்ற முறையில் இந்துவில் வெளியிடப்படுகிறது. எனினும் இதனால் அதனுடைய அடிப்படை மாறவில்லை. அதனால்தான் இன்றும் இந்துவில் ஜெயவின் செய்திகள் ஒரு வித பக்திப் பரவசத்தோடு வெளியிடப்படுகின்றன. அதே சலுகை கருணாநிதிக்கு கிடையாது.
வினவு,
இந்து ராம் ஒரு சீன ஆதரவாளர்….
//எடுத்துக்காட்டு, ஈழப் பிரச்சினை தொடர்பான அதனுடைய ராஜபக்சே ஆதரவு நிலை. //
இது சீன ஆதரவு நிலை…சுவாமியும் சீன ஆதரவாளர் தான்…
//அதனால்தான் இன்றும் இந்துவில் ஜெயவின் செய்திகள் ஒரு வித பக்திப் பரவசத்தோடு வெளியிடப்படுகின்றன//
அப்படியா….காதில் பூ சுற்றாதீர்….கனிமொழி இந்து பத்திரிகையில் வேலை செய்து இருக்கிறார், இந்து முன்னாள் ஆசிரியர் ரவி மாறன் குடும்ப உறவினர்…இந்து ஆசிரியரை கைது செய்ய ஜெ உத்தரவிட்டது நினைவில்லயா?
அவாள் திட்டம் அது இது என்று டுபாக்கூர் விடாதீர்…
ஆமாம்நீங்கள் எப்படி? சீனா ஆதரவாளரா?
// அலைக்கற்றை ஊழலில் திமுகவை மட்டும் ஊழல் கும்பலாக காட்டி, உத்தம வேடம் போட்ட காங்கிரசின் இந்த களவாணித்தனத்துக்கு சுப்பிரமணியசாமி, பார்ப்பன ஊடகங்கள், பார்ப்பனத் அதிகாரத் தரகுக்கும்பல், ஜெயலலிதா, சோ உள்ளிட்ட அனைவரும் இந்த நிமிடம் வரை ஒத்துழைத்திருக்கின்றனர். //
சென்ற சட்ட மன்ற தேர்தல் பிரசாரத்தில் தெருவுக்கு தெரு, திமுகவை 2G விஷயத்தில் காய்ச்சி எடுத்த அண்ணன் தா பாண்டியனை விட்டுவிட்டீர்களே!
தா பாண்டியன் ஜெயாவின் அடிமை என்பதால் இந்தப்பெருமையில் அவரது பெயர் வருவதை அடிமையும் விரும்ப மாட்டார், அம்மாவும் விரும்ப மாட்டார்.
வெங்கடேசன், இதில் முரண்பாடு இருப்பதாக கருதுகிறீர்களா? விசயங்கள் அப்படி கருப்பு அல்லது வெள்ளை என்று இருப்பதில்லை. போபர்ஸ் ஊழல் இந்து பத்திரிகையில்தான் அம்பலப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வடிவமைப்பதில் இந்த ராம் முக்கியப் பாத்திரம் ஆற்றினார். அதை புலிகள் ஏற்க மறுத்தது முதலே வன்மம் கொண்டு புலிகளை எதிர்க்கத் தொடங்கினார்.
பாஜக வுக்கு எதிரான அம்பலப்படுத்தல்கள் இந்துவில் வந்திருக்கின்றன என்பது உண்மை. சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ராகவன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு மோடியின் மீது குற்றமில்லை என்று கூறியதும் அவரை குருமூர்த்தி பாராட்டியதும் உண்மை. அந்த ராகவன் பிரன்ட் லைஃ இதழில் காலம்னிஸ்ட் என்பதும், மோடி வழக்கில் ராகவன், சோ, குருமூர்த்தி, ராம் இடையே இ மெயில் பரிமாற்றம் நடந்தது அம்பலமானதும், அது தொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று ராம் மறுத்த்தும் உண்மை.
// விசயங்கள் அப்படி கருப்பு அல்லது வெள்ளை என்று இருப்பதில்லை.
நன்றி.
மெகா கூட்டணியில் இருக்கும் சு சாமி இன்னொரு பங்காளியான சிதம்பரத்தை துரத்துவதையும் குறிப்பிட விரும்புகிறேன். அல்லது, இதற்கு பின்னாலும் ஏதேனும் சூட்சுமம் உண்டா?
// விசயங்கள் அப்படி கருப்பு அல்லது வெள்ளை என்று இருப்பதில்லை.
முற்றிலும் உண்மை. ஆனால், இந்த மிக நல்ல கோட்பாடு உங்கள் பல கட்டுரைகளில் இருப்பதில்லை என்பதே என் உணர்வு. நாங்கள் மட்டும் முழுதும் வெள்ளை, மற்றெல்லாரும் முழுதும் கருப்பு என்ற தொனி கட்டுரைகளின் மையப் பொருளை உள்வாங்கவிடாமல் distract செய்துவிடுகிறது என்பதே என் ஆதங்கம், வருத்தம்.
As usual, whatever the topic is, there has to be an anti Brahmin rant – why can’t Vinavu acknowledge Anantha Padmanabhan, Amnesty International speaking on behalf of Srilankan Tamils human rights is a Brahmin too. Also, how come the castes of people like Chidambaram chettiar are not mentioned. By Vinavu’s arguments, for all the drama and backstabbing by Mu Ka and his clan,the whole of Vellalars need to be blamed too.
வினவு கட்டுரைகளை படித்ததன் மூலம் இது தொடர்பாக எனது புரிதலை பிரஸ்தாபித்துவிடுகிறேன். Apologies for stating the obvious.
நான்கு திருடர்கள் ஒரு வீட்டில் கொள்ளையடிப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது, அவர்களது குற்றம் மட்டுமே முக்கியமே தவிர, அவர்களது ஜாதி மதம் irrelevant. அதே சமயம், ஒரு இந்துக் கும்பல் ஒரு தர்காவிற்கு தீவைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இதை, இந்துத்வா தீவிரவாதம் என்று தான் கூற வேண்டும். இங்கே குற்றவாளிகளின் மதம் relevant.
ஒரு குற்றச் செயலின் பின்புலத்தில் ஜாதீய, மத நோக்கம் இருக்கும்போது இவை குறிப்பிடப்படுகின்றன.
கருணாநிதி, சிதம்பரம் ஆகியோரின் ஊழல், இன்ன பிற குற்றங்கள் அவர்களது ஜாதீய பின்புலத்தை (வெள்ளாளர்-செட்டியார்) அடிப்படையாக கொள்ளவில்லை. இந்த குற்றங்கள் அவர்களது பச்சை சுயநலத்தால் விளைவன. எனவே, அவர்களது ஜாதி இந்த விஷயத்தில் irrelevant.
சோ, சு சாமி, குருமூர்த்தி, இந்து ராம் விஷயம் வேறு. சொந்த சுயநலத்தால் விளைந்ததல்ல இந்த கூட்டணி. பார்ப்பனீய கொள்கை (?) நோக்கோடு, அந்த பின்புலத்தில் உருவாகி, பார்ப்பனீய agenda வை நிறைவேற்ற காய் நகர்த்தும் கூட்டணி. எனவே, இது பார்ப்பனக் கூட்டணி என அழைக்கப்படும். இங்கே “பார்ப்பன” என்ற சொல் அவர்கள் எந்த ஜாதியில் பிறந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டுவதற்காக கூறப்படவில்லை. அவர்களது cartel இன் பின்புலத்தை குறிப்பிடுகிறது.
இது பார்ப்பன பின்புலத்தில் விளையும் குற்றங்களுக்கு மட்டுமல்ல. மற்ற குற்றங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக தருமபுரி சம்பவம் “வன்னிய வெறிச்செயல்” எனவும், பரமக்குடி “தேவர் ஜாதி வெறிச்செயல்” எனவும் அழைக்கப்படும். முத்துராமலிங்கனார் “தேவர் சாதி வெறியர்” ஆகிறார். மருத்துவர் ராமதாஸ் “வன்னிய ஜாதி வெறியர்” ஆகிறார்.
1. Chettiars as a group are more into business and have interests across the nation and around the world. Because of their business interests, they never openly identifywith any ideology and avoid public visibility ( especially after Burma). They never opposed Dravidiian ideology openly but politically they are active in Congress. How do you say Chidambaram does not represent Chettiar’s interest in this case, when many Chettiars have business in Colombo?
2. Though DK was started by Kannada speaking Periyar, the DMK and Dravidian movement grew up on the shoulders of Vellalars – Anna, Kalaignar, Nedunchezhian, Anbazhagan etc. If DMK people want to question Hinduism, they would only pick on Kanchi Mutt but leave out the Vellalar Aadheenams – the Aadheenams have as much or more clout and wealth than the Kanchi Mutt among Tamil Saivites. The conflict between Vedantic Advaita and Saiva Siddantham has been going on for centuries. More than the Brahmin media, it is Sun Meda group that dominates the Tamil media. With his Spice jet, KD brothers have more to gain in a friendly Srilanka.
3. The Kshatriyas – Vanniar in the north and Mukkulathor in the South left Congress many decades ago. Vanniars started their Toilers party which became PMK later. Mukkukathors came to DMK after the death of Muthuramalinga Thevar mainly because of MGR, not just because of his charisma but because he was a Kshatriya Nair.
Thanks to Vinavu for publishing this. Regards!
இப்படி ஒரு கோணத்தில் 2g விஷயத்தை எங்கும் படித்தாய் ஞாபகம் இல்லை (வினவிலும் கூட). நான் கேட்கவந்ததை வெங்கடேசன் கேட்டு விட்டார், வினவின் பதிலில் முழு திருப்தி இல்லை, ஏனென்றால் hindu -விலிரிந்து காட்டப்படும் நிறைய மேற்கோள்கள்தான். ஹிந்து ராம் பற்றிய செய்திகள் தரும் உண்மை வினவின் கருத்திற்கு ஏற்புடையதாக இருப்பினும், ஹிந்து நாளிதழ் is better than most என்பதே என் அபிப்ராயம்.
BTW, There is an unwritten law in the Corporate world, if you cant play politics it will swallow you, hence better be smart! Lack of this turned up against Raja and he wasnt able to escape. But he wasnt a scapegoat though! எவ்வளவு உண்மை வெளியில் வந்தாலும் ndtv -யும் மற்ற குரைக்கிற மீடியாவும் ஆசீர்வாதம் செய்தால் தான் எதுவும் நடக்கும். இந்த விலகல் டிரமாவிலும், முக்கிய செய்தி திமுக காங்கிரஸ் விட்டு சென்றதுதான், ஜெனீவா தீர்மானத்தை பற்றியோ அல்லது அமெரிக்க நாடகத்தை பற்றியோ அல்ல, என் செய்வது! தமிழனுக்கே அது புரியவில்லை!
இதே கருணாநிதி இவர்களுடைய ஆட்சியின் நான்குவருடங்களில் பார்பனர்களுடன் கூடி குலாவி கொஞ்சிய அழகை தமிழ் நாடே பார்த்து சிரித்தது. பார்ப்பனர்களின் மனம் குளிர்வதர்காக ஈழ தமிழர்களையும் காவு கொடுத்தது. பார்பன ஏடுகளான தினமலர், தினமணி போன்ற பத்திரிக்கைகளுக்கு அரசு விளம்பரங்களை அள்ளி கொடுத்தது, கொலைகார காஞ்சி சங்கராச்சாரி வழக்கை நீர்த்து போக செய்தது, எஸ்வி சேகர் போன்ற அக்மார்க் பார்பனனை கட்சியில் சேர்த்து மகிழ்ந்தது இப்படி நிறைய சொல்லலாம். இதனால் மனம் குளிர்ந்த பார்பனர்கள் எல்லாம் தன குடும்ப 2ஜி ஊழலை கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்று கைப்புள்ள கருணாநிதி நம்பினார். ஆனால் அந்த ஆட்சியின் கடைசி ஒரு வருடத்தில் பார்பானியம் கருணாநிதிக்கு எதிராக தன விஷ பல்லை காட்டியது. இப்போ திரு திருன்னு முழிக்கிறார். தான் கொண்ட கொள்கையை மறந்தவருக்கு நன்றாக வேண்டும். இப்போது சி பி ஐ ரைடு வேற நடந்துக்கிட்டு இருக்காம் நம்ம தளபதி வீட்டில். அனுபவி ராஜா அனுபவி
எதிரிகள் நம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிகிறார்கள். துரோகிகளைக் கண்டுதான் மனம் அஞ்சுகிறது. அவர்கள்தான் எப்போது என்ன செய்வார்கள் எனத் தெரியாது.
கருணானிதியை தமிழின காவலர் என்று தூக்கிவைத்து கொன்டாடுவது பாசிசம்! இப்படி பார்பன சதி வியூகத்தில் மாட்டிக்கொன்ட கருணானிதியை கண்டு சந்தோஷப்படுவது சாடிசம், அரை வேக்காட்டுத்தனம்! சம்பந்தப்பட்டிருப்பது தி மு க மட்டுமல்ல, தமிழர்நலனும்தான்! தி மு க வின் சமூக சீர்திருத்த திட்டஙகளை இனி பார்பன பாதந்தாஙகிகள் கையில் என்ன பாடு பட போகிறதோ! முற்போக்கான மாற்று தலைமை உருவாகாமல், திமுக பலமிழப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல! பார்பனர்கள் வேண்டுமானால் குதூகளிக்கட்டும்; பகுத்தறிவு கொண்டோர் சிந்திக்கட்டும்! ஆய்வுகள் தொடரட்டும்!
அருமையான கருத்து… திமுக மாட்டிக்கொண்டது என்று பார்ப்பனர்கள் குதூகளிப்பதை விட அதனால் பயனடைந்த தமிழர்கள் சிலர் அதிகம் கொக்கரிக்கிறார்கள்.
தமிழ்நண்டுகள் கதை தான் நினைவுக்கு வருகிறது.
அம்பி அவர்களே! சரவணன் – மீனாட்சி கதை பொருத்தமில்லையே! அப்படியானால் தி மு க (மீனாட்சி) 2 ஜி வழக்கில் குற்றமற்றது எஙகிறீர்களா? ஆனாலும் பார்பன சதி என்று வினவு அம்பலப்படுத்தியதை விரும்பவில்லை; அப்படித்தானே!
//… there is no difference between jaya and karunanithi in sabotaging students’ protests. What Karunanithi did during his time has been adopted by Jaya now. But mindless people who found fault with Karunanithi’s action earlier are praising Jaya. This is ridiculous. So your questions should be directed towards those senseless people who are praising Jaya for no reason….// Sukdev! ypu are 100% correct!