ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் போராட்ட அறிவிப்பு!
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி யின் தொடர் நடவடிக்கையாக, ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து, 20.03.2013 புதன்கிழமையன்று காலை 11.00 மணியளவில், பரங்கிமலையில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
எமது கோரிக்கைகள்:
1) ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரும் மோசடியான தீர்மானத்தை எதிர்க்கிறோம்!
2) ஈழப்போரை முன்னின்று வழிநடத்திய போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் பங்காளியான காங்கிரசு கும்பலிடமே இராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோருவது அயோக்கித்தனமானது.
3) இராஜபக்சேவை சர்வதேசப்போர்க்குற்றவாளியாக அறிவித்து, ஹிட்லரின் படைகள் உள்ளிட்ட இரண்டாம் உலகப் போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
4) ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தங்களது ஊடகம் சார்பில் செய்தியாளர்களை அனுப்பிவைத்து எமது போராட்ட நிகழ்வை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்போராட்ட நிகழ்வு குறித்த விரிவான தகவல்களுக்கும், எம்முடனான தொடர்பிற்கும் 9566149374 என்ற எண்ணை அழைக்கவும் விழைகிறோம்.
தகவல்
கணேசன், ஒருங்கிணைப்பாளர்,
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
மின்னஞ்சல் : studentfront2013@gmail.com
மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை இடுவதற்குப் பதிலாக
தமிழகத்தில் /சென்னையில் உள்ள மத்திய அமைச்சர்களின்
இல்லங்கள்/சத்திய மூர்த்தி பவன் அருகில் முற்றுகை இட்டு
போராட்டம் நடத்தினால் கோரிக்கைகள் மத்திய அரசால் ஏற்கப் பட
அதிக வாய்ப்பு உண்டு
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் தொடர் போராட்டங்களுக்கு வாழ்த்துக்கள்.
மாணவர் முன்னணியின் தொடர் போராட்டங்களுக்கு வாழ்த்துக்கள்.