Friday, May 2, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபச்சையப்பன் கல்லூரி: தொடங்கியது போலீஸ் அடக்குமுறை!

பச்சையப்பன் கல்லூரி: தொடங்கியது போலீஸ் அடக்குமுறை!

-

police-brutalityழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில், பச்சையப்பன் கல்லூரி மற்றும் கோயம்பேடு செயின்ட் தாமஸ் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்களும் மாணவிகளும் இன்று காலை 11 மணியளவில் பச்சையப்பன் கல்லூரி வாயிலில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அமெரிக்கத் தீர்மானத்தை நிராகரிக்க கோரியும், இந்தியாவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியும் மாணவர்கள் முழக்கமெழுப்பிக் கொண்டிருந்த போது, எந்த வித முகாந்திரமும் இன்றி மாணவர்கள் மீது தடியடி நடத்த தொடங்கியது போலீசு. கீழ்ப்பாக்கம் ஜி 3 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் சுமார் 50 பேர் கொண்ட போலீசு படை மாணவர்களை சுற்றி வளைத்து தாக்கத்தொடங்கியது.

மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

“தேவ்டியா பையா, ஈழம்னா ரோட்டை மறிப்பீங்களா, பச்சையப்பன் காலேஜுன்னா பெரிய மயிரா?” என்று வாய்க்கு வந்தபடி ஏசியபடியே, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஏழுமலையை குறி வைத்து தாக்கி வண்டியில் ஏற்றினார் கீழ்ப்பாக்கம் ஆய்வாளர் பரமசிவம். தடியடிக்கு அஞ்சி யாரும் கலையவில்லை. மாணவர்கள் மறியலைத் தொடர்ந்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர் ஏழுமலையை விடுதலை செய் என்று கீழ்ப்பாக்கம் போலீசு நிலையத்தில் திரண்டனர் மாணவர்கள். ஏழுமலை உடனே விடுவிக்கப்பட்டார். கடுமையாக காயம் பட்டிருப்பதால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

ஈழத்தாய் அரசின் உண்மை முகம் அம்பலமாகத் தொடங்கி விட்டது. காலையில் பிடித்து மாலையில் விடும் ஈழ ஆதரவு கபட நாடகம் முடிந்து கொண்டிருக்கிறது. மாணவர் போராட்டத்தின் மீதான அடக்குமுறையின் தொடக்கம் இது. அடக்கு முறைக்கு பணிய மாட்டோம் என்பதை மாணவர்கள் தம் நடவடிக்கைகளின் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.