ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில், பச்சையப்பன் கல்லூரி மற்றும் கோயம்பேடு செயின்ட் தாமஸ் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்களும் மாணவிகளும் இன்று காலை 11 மணியளவில் பச்சையப்பன் கல்லூரி வாயிலில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அமெரிக்கத் தீர்மானத்தை நிராகரிக்க கோரியும், இந்தியாவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியும் மாணவர்கள் முழக்கமெழுப்பிக் கொண்டிருந்த போது, எந்த வித முகாந்திரமும் இன்றி மாணவர்கள் மீது தடியடி நடத்த தொடங்கியது போலீசு. கீழ்ப்பாக்கம் ஜி 3 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் சுமார் 50 பேர் கொண்ட போலீசு படை மாணவர்களை சுற்றி வளைத்து தாக்கத்தொடங்கியது.
மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
“தேவ்டியா பையா, ஈழம்னா ரோட்டை மறிப்பீங்களா, பச்சையப்பன் காலேஜுன்னா பெரிய மயிரா?” என்று வாய்க்கு வந்தபடி ஏசியபடியே, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஏழுமலையை குறி வைத்து தாக்கி வண்டியில் ஏற்றினார் கீழ்ப்பாக்கம் ஆய்வாளர் பரமசிவம். தடியடிக்கு அஞ்சி யாரும் கலையவில்லை. மாணவர்கள் மறியலைத் தொடர்ந்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர் ஏழுமலையை விடுதலை செய் என்று கீழ்ப்பாக்கம் போலீசு நிலையத்தில் திரண்டனர் மாணவர்கள். ஏழுமலை உடனே விடுவிக்கப்பட்டார். கடுமையாக காயம் பட்டிருப்பதால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
ஈழத்தாய் அரசின் உண்மை முகம் அம்பலமாகத் தொடங்கி விட்டது. காலையில் பிடித்து மாலையில் விடும் ஈழ ஆதரவு கபட நாடகம் முடிந்து கொண்டிருக்கிறது. மாணவர் போராட்டத்தின் மீதான அடக்குமுறையின் தொடக்கம் இது. அடக்கு முறைக்கு பணிய மாட்டோம் என்பதை மாணவர்கள் தம் நடவடிக்கைகளின் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
போலீசு என்பது ஆளும் வர்க்கத்தின் அடியாள் படை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
மாணவர் போர்குணமிக்க போராட்டம் வளர்ந்து வருகிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
பாக்கெட்டை தடவும் காக்கிகளுக்கு மாணவர் பொராட்டம் பற்றீ பெச தகுதி இல்லை!
“தேவ்டியா பையா, ஈழம்னா ரோட்டை மறிப்பீங்களா, பச்சையப்பன் காலேஜுன்னா பெரிய மயிரா?” என்று வாய்க்கு வந்தபடி ஏசியபடியே, —–இதையே திருப்பி பேசினா அந்த ஏவல்கள் சும்மா இருக்குமா?????????
அது ஈழத்தாய் அல்ல ஈனத்தாய்
பச்சையப்பன் பத்த வைத்த தீ பரவட்டும் தமிழ்நாடெங்கும்…………..
காவல் துரயே உன்னை காவுதுரை என்பதா இல்லை கலகத்துரை என்பதா இல்லை. காட்டு மிரான்டிதனமாக நடக்கும் உனக்கு சொந்த புத்தி இருந்தால் காங்கிரஸ்காரனை அடி அல்லது அம்மாவின் கழிவை குடி
பாசிச வெறி பிடித்த ஜெயாவின் காலித்தனம் இனி தான் வெளிவரும்.இவளுக்கு பயந்தவரல்ல மாணவர் படை. இவள் தான் ஈழத்தாயாம்….ஈழப்பேய் இவள், ஈழநோயும் இவள் தான்.
இந்த ஏழுமலை தான் உண்மையான ஹிரோ. உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.