privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஸ்ரீரங்கம்: பார்ப்பனியத் தீண்டாமைக்கு இடைக்காலத் தடை!

ஸ்ரீரங்கம்: பார்ப்பனியத் தீண்டாமைக்கு இடைக்காலத் தடை!

-

மிழக அரசு சட்டமான ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்பதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ள நிலையில், தமிழக அரசு இந்து அறநிலையத்துறை திருவரங்கம் கோவிலில் 4 விதமான பணி நியமனத்திற்கு இந்து பிராமணர் அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும் எனவும் 15-3-2013 அன்று விண்ணப்பிக்க இறுதி நாள் என பொறுப்பாகவும் விளம்பரம் கொடுத்திருந்தது.

படம் : பி.பி.சி.
படம் : பி.பி.சி.

அர்ச்சகர் உட்பட கோவில் பணியாளர் அனைவரையும் நியமிக்கும் அதிகாரம் அரசு அதிகாரத்திற்கு உட்பட்டது; முறைகேட்டில் ஈடுபடும் அர்ச்சகர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என பிற அரசு ஊழியர்களுக்கு உள்ள விதிமுறைகள் இவர்களுக்கும் உள்ளது; அரசு வேலைவாய்ப்பில் பிறப்பை வைத்து சாதிபாகுபாடு பார்க்கக் கூடாது; தீண்டாமை எந்த வடிவத்தில் அமுல்படுத்தினாலும் தண்டனைக்கு உரிய குற்றம் எனவும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது; வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இவை எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளன. சட்டப்படியே தீண்டாமை கடைப்பிடிக்கப் படுவதற்கு மீண்டும் ஒரு சாட்சிதான் திருவரங்கம் கோவில் விளம்பரம்.

பிப்ரவரி – 13 ஆம் தேதியிட்டு, சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த, தகுதியான வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு 15.03.2013 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு கீழே காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன, அதாவது

1. பதவி பெயர் – இளநிலை உதவியாளர்
ஊதிய விகிதம் – ரூ. 5,200 – 15,900+ தர ஊதியம் – ரூ. 2,400
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 3
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் கணினி – தட்டச்சுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் – பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

2. பதவி பெயர் – பிரதான ஆலயக் காவலர்
ஊதிய விகிதம் – ரூ. 4,000 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 10
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

3. பதவி பெயர் – பிரதான ஆலய சிறீபாதம்
(சிலையைத் தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் – ரூ. 4,100 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 4
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பதவி பெயர் – உபகோயில் சிறீபாதம்
(சுற்றுப் பிரகார சிலையை தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பதவி பெயர் – உபகோயில் காவலர்
(சுற்றுப் பிரகார கோயில் காவலர்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 7
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

6. பதவி பெயர் – சன்னதி வாசல்
(சுற்றுப் பிரகார கோயிலின் அர்ச்சகர்)
ஊதிய விகிதம் – ரூ. 4,100 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

7. பதவி பெயர் – உபகோயில் பரிசாரகர்
(உதவி வேலைகள்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 1
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட ஏழு வகையான பணியிடங்களுக்கும் இணை ஆணையரிடம் – செயல் அலுவலர் எஸ்.கல்யாணி அவர்களின் பெயரிலும், இரா.சேஷாயி (தலைவர்) எஸ்.பி.ரங்காச்சாரி, கே.என்.சீனிவாசன், ஏ.டி.கஸ்தூரி, பராசர.ஆர். சிறீவெங்கட பட்டர் (சுழல் முறை அறங்காவலர்) ஆகிய அறங்காவல் குழுவினர் பெயரிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறநிலையத்துறை வெளியிட்ட விளம்பரங்களும் விண்ணப்ப படிவமும் (படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

இப்படி அதிமுக்கியமான அணுஆயுத பணிக்குதான் இந்து பிராமண அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும் என அறமே இல்லாத அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்திருந்தது. பிற அரசுப் பணிகள் போல் கோவில் பணி நியமணங்களிலும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டப்படியானது.கேள்விக்கு இடமில்லாமல் புனித போர்வையில் ஆலயத்தில் நடக்கும் அநீதிகள் அரசின் அரவணைப்பில் இது வரை அரங்கேற்றபட்டு வந்தன. இனி ஆதினங்களானாலும் ஆலயமானாலும் அதன் வரவு செலவுகள், ஊழியர்களின் பணி நியமணம் அனைத்திலும் பொது மக்கள் தலையிட வேண்டும். அவையும் நமது சொத்துக்கள்தான் என்பதை மக்கள் உணரவேண்டும்.

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் விளம்பரத்திற்கு எதிராக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்யபட்டது.

அவரது மனுவில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.

“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்.
பி.பி.சி. செய்தி

  1. Unless the present Jayalalitha government which is a anti-people one removed no solution.Majority in Tamilnadu voted to Jaya are non-brahmins who regret now has to wait long to remove this anti-people government. Brahminisam is like a dead fish today and it cannot get life again.

  2. இது ஒரு மதப்பிரிவினையோரின் நம்பிக்கை…. ஆறு கோடி தமிழர்கள் ஒரு பிரச்சனையும் எழுப்பாத போது வினவுக்கு ஏன் இந்த தேவையில்லாத அக்கறை… அனைத்து சாதியினைரையும் அர்சகர் ஆக்க வேண்டும் என்று ஒரு அருமையான சட்டதை கொண்டு வந்த பெரியாரின் சீடரை… மக்கள் சாணி மொழுகி வீட்டில் உக்கார வைத்து விட்டதும்… இதை பிற சாதியினருமே ஒரு பிரச்சனையாக நினைக்கக்கூட இல்லாத போது… வலுக்கட்டாயமாக எதற்கு வினவு அவர்களிடம் வாங்கி குடிக்க வேண்டும்? ஒரு மட்டமான கட்டுரை…

    • திரு தமிழன் அவர்களே! உங்களால் மட்டும் எப்படி இந்த மாதிரி யோசிக்க முடிகிறது? உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்பதே கிடையாதா?

    • The person who do not have any belief in equality is calling himself as “Indian”.Vinavu is not Thinnai or Tamil Hindu.com to applaud the activities of fundamentalists.Kalaignar was defeated in last Assembly elections.True.But his party secured 48% votes from TN people.Do not forget that fact.Just by defeating in one election,you can not defeat the Dravidian ideology.This “Indian”should mind his language while talking about a great political leader and 5 times CM. You are selfish and you are still living in stone age.As I suggested earlier,either mend your language or change your pet name.Free advice to you.You can practice your sanadhana dharma by participating in the debates of the above mentioned websites.These websites are monopolised by your kind of people.

  3. இந்தியா வந்துட்டேளா…உண்மையை சொன்னா பொறுக்காதே நோக்கு, கெளப்பின்டு வந்துருவேள். அது சரி அவாளுக்கு மட்டும் என்ன சப்பக்கட்டு, அர்த்தமில்லாத மானங்கெட்ட மந்திரத்தை கூட சொல்லத் தெரியாம பூணுலயும், குடுமியும் மாட்டிகினு வந்துடறது. போய்யா போ….போ…

  4. why is the government managing hindu temples?

    They have no right to question why someone is an archakar at an iyengar temple?

    Iyengars ll only be the priests of iyengar temples,why do all those heroes who talk today didn’t think of this longtime ago.

    • Wow, What are you talking about? Since you mentioned long time ago, All the temples were Thamizh’s and these so called people (Aryans/Nazis) came inflicted hatred and caste and started occupying the temples and now restricting others.

      • Kumar,

        These iyengars were the ones who ran away with the idols and protected them when malik kafur was raiding these temples,they are not aryans/nazis.

        They are the same DNA as normal tamil people and they were the ones who have been managing the temples since they were built,The government has been occupying the temples since 1947 and it was always their temples sicne the beginning.

    • govt is managing hindu tembil bcas all ayyengars are aattyapoting the koil sothu.. and govt also want to aattayapottu so only govt managing..

      long time ago manu law rule…now that law has been kicked of with its followers …

      • coimbthur thambi,

        In Trivandrum we saw how many tonnes of gold is still there in the temple vault,the priest and the kings never touched it,sivan/perumal sothu kola naasam.

        Tiruchendur vairavela thirudi thinna dravida kazhagam and co vukku ellam koilla vittu kudukka mudiyathu,

        none of the ayyengars took the temple wealth,it is still there,vaai koosama poi solla theenga,

        ullukulla ellam konikkum.

        • What is the use of the golds and diamonds which are kept in a dark room in a country where most of the people dosen’t have proper sanitation, apart from that from where those jewels came from..

          not only the DK peolple but also the iyyengars who are managing the temple are koottu kalavaaanis…jewela tirudurathu mattum illa, ukkaanthu oosila thingarathum thiruttu thaan.. so only both iyengars and govt are trying to swallow the wealth..

          //none of the ayyengars took the temple wealth,it is still there,vaai koosama poi solla theenga, ullukulla ellam konikkum//

          are you the advocate for the fraud iyyengars…

          enakku vaai konnalana naa unmai sonnatha arthamaa?

          • Do you have proof?

            I am married to one and i can vouch for their integrity in temple matters.

            Ya,so some iyengar/dharmakartha ll go and say that this guy stole this and end up dead.

            Thats not kootu kalavani,thats uyir bhayam.

            Stealing gold and getting 3 kg rice is not one and the same thing.

    • First of all,how can you call it as Iyengar temple?Was it built by Iyengars?As I mentioned in one of my earlier comment,the kings who built this temple,like in other temples,gave the monopoly of priesthood only to brahmins,which practice is not legally valid today.That is why,High Court has stayed the advertisement itself and sent notice to the officers of HR&CE department.The Honourable Justice may pass orders against the HR&CE officers for practicing untouchability.The idea behind reserving even the posts of statue carriers meant that the sanctity of the statues will be lost if carried by non-brahmins.That is blatent practice of untouchability which is against our constitution.Now is the time to end this monopoly.

      • The kings are also not valid today,so what?

        According to your question,some mason builds hospitals,why dont go to him for treatment?

        These temples were built,pratisthai was done according to vedic beliefs and thus,only the iyengars ll have the right to manage these temples.

        These were the people who protected the idols against mughal raids and saved the panchaloka vikaraham not the people applying for jobs.

        Thats explains why they deserve to be the priests.

        • ஹரிகுமார்,

          // These were the people who protected the idols against mughal raids and saved the panchaloka vikaraham //

          மாலிக் காபூரையும், முகலாயர்களையும் குழப்பி விட்டீர்களோ? பார்ப்பனர்கள் நம்பெருமாள் திருச்சிலையை காப்பாற்றினர் என்பதற்கு கோவில் ஒழுகிற்கு வெளியே ஏதேனும் ஆதாரம் உள்ளனவா?

          • yeah i was mixing up Alauddin Khilji and Aurangazeb,

            But in this regard of their greed for temple gold,they are the same.

            And you always want paid christian media proofs for hindu history,because they are always the impartial ones to report Indian history,ones without agenda,adhu eppadi ippo varaikkum othai elumbu thundukkaga enna sonnalum namburaainga,remba nallavunga.

    • அரிக்குமார், அப்படியா ! இன்னும் அதிகமா பார்ப்பனர்கள் பேசணும். செயல்படனும் .அப்போதான் பார்ப்பனர்கள் கொட்டத்துக்கு ஒரு முடிவு வரும்.

        • //Most common people also want brahmins to continue to manage the temples,// உணமையிலேயே அப்படி இருந்தா ஏன் இங்க கத்திகிட்டு . 100 வருசத்துக்கு முன்னாடி இருந்த பார்ப்பன கொட்டம் அடக்கப்பட்டது, பார்ப்பன பாம்பின் பல் பிடுங்கப்பட்டது . பல் பிடிங்கியதோடு விட்டது பெரிய தப்பு.இப்போது இருக்கும் மிச்ச கொட்டமும் அடக்கப்படும்.

    • அதான் அந்த பராசரன் இருக்காரே.. வெங்கடேசன் சார் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஒரு தலித் அர்ச்சகர் கையில் திருநீறு வாங்கிப் பூசிக் கொள்ளவேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பது போல நானும் ஒரு தலித் பட்டாச்சார்யார் கையால் அரங்கன் திருவடித் திருச்சாத்தை தலையில் வாங்கி கொள்ளவேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறேன்..

      ஆனா பாருங்கோ, எட்டாங் கிளாஸ் வரை படிச்ச ஒரு 8 அய்யங்கார் அம்பிகள் அரங்கன் கோயிலில் பல்லக்கைத் தூக்கியோ, சன்னதி வாசலில் முறைவாசல் பண்ணியோ பிழைத்துப் போகட்டுமேங்கற நல்லெண்ணமே இல்லாம, எல்லா அம்பிகளையும் கோவில்களில் இருந்தும் கூட விரட்டி விடவேண்டும் என்று கருப்புச் சட்டை, சிவப்புச் சட்டை நாத்திகாள், இந்த அப்பாவி ஆத்திக தமிழ் அர்ச்சகர்களையும் சேர்த்துண்டு, எல்லோருமா சேர்ந்து அரங்கனுக்கு சேவை சாதிப்போம்ன்னு சொல்றது சந்தேகாஸ்பதமான்னா இருக்கு..

      • ஏன்னாநீஙக இப்படி சொல்லிட்டேள்!
        அரங்கன் சேவை ஒரு அரசாங்க வேலை, தொண்டுன்னு சொன்னது யாரு?
        15 + 7-1/2 + 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு இன்னும் குடுக்கலையே!
        பெருமாளாவது, அரஙகனாவது, அது ஒரு வேலை வாய்ப்பு அலுவலகம்!
        சும்மா ஆத்துக்குப் போய் தூஙுங்கோ!

      • அம்பி,
        அரங்கன் திருவடி சாத்து வேண்டாம். அது வேஸ்ட். உட்டுடுங்கோ. “முனியேறித் தனி புகுந்து பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள்” பரவுவோம். ஏன்னா, இராமானுசரும் “பாரியலும் புகழ் பாண் பெருமாள் சரணாம் பதுமத்து ஆரியல் சென்னி” யோட தான் இருந்தார்!

  5. என் சொந்த ஊர் ஸ்ரீரங்கம் தான். இங்கே பார்ப்பனர்களின் அட்டகாசம் தாங்க முடியாது. கோயிலில் வேலை செய்து பிழைக்க வந்த கூட்டம் கோயிலின் சொந்தக்காரன் போல நடந்துகொள்கிறது.

    இங்கே நிறைய பேருக்கு அர்ச்சகர் டிரைனிங் குடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு வேலை தரவில்லை.

  6. ரங்கநாதன் கூறியது போல அர்ச்சகர், பரிசாரகர், ஸ்ரீபாதம் போன்ற மதத்தோடு நேரடி சம்பந்தம் பெற்ற பணிகளுக்கு இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிபந்தனை மட்டும் சரியானதாக இருக்கும். செயல் அலுவலர், அலுவலக உதவியாளர், காவலாளி போன்ற பிற கோவில் பணிகளுக்கு இந்த நிபந்தனையும் தேவையில்லை என்பது என் கருத்து.

    இப்படி ஒவ்வொரு கோவிலாக போராடிக்கொண்திருந்தால் வேலைக்கு ஆகாது. உச்சநீதிமன்ற அர்ச்சகர் வழக்கில் வெற்றி பெறுவதே சரியான வழி. அவ்வழக்கில் வெற்றி பெற, இன்று நடைபெறும் அறுபத்துமூவர் விழாவில் வலம் வரும் திருநாளைப்போவார் அருள் புரியட்டும். என் வாழ்த்துக்கள்.

    • You can go and research about saint ramanujar and what he went around doing?

      btw,most of you heroes dont know one thing that ramanujar converted many dalits into vaishnavism and they exist as iyengars today and could easily be amongst the priests at srirangam.

      who is collecting money boss?

      The govt takes all the money from the hundi,the priests dont get anything.

      In the old system,the temple was the economy of the kingdom and was the safest place to keep the wealth.

  7. Why do you not plan to have a Hindu Father in a Christian Church, a Christian Maulvi in a Mosque, or a Buddhist Guru in a Sikh Gurudwara? Too much attention to a wrong cause! Just imagine, the Hindu temple as area at least advertising, have you seen a Gurudwara advertising???

  8. மனசாட்சி அற்ற ‘இந்தியன்’, மாறிவரும் வெஙடேசன், மாற்ற முடியாத அரிகுமார் மற்றும் அவாளுக்கே உரித்தான நக்கலுடன் அடக்கி வாசிக்கும் அம்பிகள், கச்சேரி களை கட்டுகிறது! அதுசரி, ஏற்கனவே திருவண்ணாமலை கோவிலில் பரிசாரகர் பணிக்கு பார்பனர் மட்டுமே விண்ணப்பிக்க கோரிய அரசாணை பற்றிய வழக்கு என்ன ஆனது?

    • // அவாளுக்கே உரித்தான நக்கலுடன் அடக்கி வாசிக்கும் அம்பிகள் //

      அடக்கிக் கொள்ள முடியாமல்தான் இப்படி ஆகிவிட்டீர்களா, கருத்துச் சிகரமே..!

  9. வினவு,
    தேவர் சிலை உடைப்பு பற்றிய கட்டுரையின் மறுமொழிப் பகுதி மூடப்பட்டுள்ளது. என்னவென்று பாருங்கள். நன்றி.

  10. மாற்று மதத்தவர்க்கும்…கோவில் பணித் தேர்வில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் ! # மாத்தி யோசி !

    • அடுத்த மாதத்திலிருந்து கோவைப் பகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள், நாயுடுகள் முதலானோர் கழிப்பறை, பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் வேலைகளை செய்ய இருக்கிறார்கள். அருந்ததி மக்கள் விவசாயம் செய்தும், தொழிற்சாலைகளை நடத்தவும் இருக்கிறார்கள். இந்த மாற்று யோசனையை ஐயா ரம்மி ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது முக்கியமானது.

      • தங்களுக்கு சிறு திருப்தி அளிக்கும் இரண்டு செய்திகள்:

        1) திருப்பூர் முதலிபாளையத்தில்..அரசு சார்பு நிறுவனமான தாட்கோ , ஆதிகுடிமக்கள் ..தொழில் முனைய ஏதுவாக..ஒரு தொழிற்பேட்டையை நிறுவி உள்ளது..அதில் பகுதி கூட இன்னும் பயன் படுத்தப் படவில்லை..இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாததல்ல..! ( முடிந்தால் ..அதன் இப்போதைய நிலை குறித்து..ஒரு அலசல் கட்டுரை எழுதலாமே! )

        2) என் பயன்பாட்டில் இருக்கும் வீடு & அலுவலகக் கழிவறைகளை..பல வருடங்களாக அடியேன் சுத்தம் செய்து வருகிறேன்.! .ஆனால் பிற இடங்களுக்கு சென்று சுத்தம் செய்ய இன்னமும் மனப்பக்குவம் வரவில்லை ! மேலும் சிலர் இதேபோல் செய்துவருவதை அறிகிறேன் !
        (காந்திவழி எல்லாம் இல்லை..யாரும் கிடைக்கவில்லை என்பதை அறிக!)

  11. கோவிலுக்கு செல்லாவிட்டாலும் ஒரு ஆர்வத்தினால் கேட்கிறேன்…
    தெரிந்தவர்கள் யராவது பதலளிகவும்…

    மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு இடைத்தரகர் எதற்கு?
    எல்லாம் தெரிந்த இறைவனுக்கு பக்தனைப்பற்றி தெரியாதா?

    இப்படி ஒரு பூசாரி வேண்டும் என்று கூறும் நூல் எது? அது தான் ஆகம விதியா?

    பல கோவில்களில் ஏ.சி, டைல்ஸ், மின் விசிறி வைப்பதை ஆகம விதி தடுக்காதா?

    இந்த விதி இன்டர்நெட்டில் கிடைக்குமா?

    • veeran,

      There are actually temples which doesn’t have one.
      In my mom’s village near tenkasi,we have our own small sastha temple.

      There is no archakar there and broadly only we worship there.

  12. வீரன்,
    வேறு யாரும் பதில் சொல்லாததால் எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன். முதலில் சில disclaimers. நான் ஆகமம் எதையும் படித்ததில்லை. ஆன்மீக வார இதழ்களில் வந்த கட்டுரைகள், கேள்வி-பதில்கள், துணுக்குகள் போன்றவற்றில் இருந்து எனக்கு கிடைத்த புரிதல் இது. இதில் பல தவறுகள் இருக்கலாம். மேலும், இதை ஒரு academic நோக்கோடு எழுதுகிறேன். நீங்களும் அப்படியே எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். எனவே, ஏன் எப்படி என்றெல்லாம் கேள்வி கேட்கப்படாது 🙂 நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் நேரடி பதில் சொல்லாமல் நீண்ட விளக்கம் சொல்வதற்கு மன்னிக்கவும்.

    ஆகமங்கள் என்பவை வேதங்கள், புராணங்கள் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட கருத்துக்களை தேர்ந்தெடுத்து, தொகுத்து ஒரு தெளிவான மதத்தை வரையறுக்க முயலும் நூல்கள். இப்படி பல நூல்கள் உள்ளன. வைணவத்தில் வைகானசம், பாஞ்சராத்ரம் என இரண்டு ஆகமங்கள் உண்டு. சைவத்தில் 28 என நினைவு. இந்த ஆகமங்கள் கோவில்களை பற்றி மட்டும் பேசுவதில்லை. அவற்றில் பல அங்கங்கள் உண்டு. முதலில் ஏதாவது ஒரு இறையியல் தத்துவத்தை முன் வைக்கும் (உதாரணமாக, “எல்லாம் பிரம்மம்” என்பது போல). அடுத்து உலகம் உருவான விதம் பற்றிய கதை ஏதாவது இருக்கும் (உதாரணமாக, விஷ்ணுவின் தொப்புளில் இருந்து பிரம்மா பிறந்தார், அவர் உலகத்தை படைத்தார் என்பது போல). அடுத்து, ஒரு மனிதன் மேற்கொள்ளவேண்டிய சமய சடங்குகள், மந்திரங்கள், பூஜை செய்யும் முறைகள் எல்லாம் விளக்கப்படும். கூடவே ஆச்சார, அனுஷ்டானங்கள், “உண்மையே பேசு” போன்ற அறிவுரைகள் எல்லாம் இருக்கும். இப்படி போகும் ஆகம நூலின் முக்கிய அங்கம் கோவில்கள் பற்றியது. கோவில் அமைக்கும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள், சாமி சிலை வடிவமைப்பு, அங்கு செய்ய வேண்டிய பூஜை முறைகள், கும்பாபிஷேகம் போன்ற சிறப்பு நிகழ்வுகள் பற்றிய விதிமுறைகள் எல்லாம் இருக்கும். வழக்கம் போல இவற்றினூடே வர்ணாஸ்ரம பேதமும் இருக்கும். ஒவ்வொரு கோவிலும் இவற்றில் ஏதாதவது ஒரு ஆகமப்படி இயங்குகிறது. உதாரணமாக, திருப்பதி கோவில் வைகானச ஆகமத்தையும், திருவரங்கம் கோவில் பாஞ்சராத்ரம் ஆகமத்தையும் மேற்கொண்டுள்ளன.

    மேற் சொன்னவற்றில் ஆகமங்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கும். சைவ ஆகமங்கள் சிவனையும், வைணவ ஆகமங்கள் விஷ்ணுவையும் முதல் தெய்வங்களாக சொல்லும் என்பது தெளிவு. ஆனால், இரண்டு சைவ ஆகமங்கள், இரண்டு வைணவ ஆகமங்கள் இடையேயும் வேறுபாடுகள் உண்டு. வைணவம் பற்றி சிறிது தெரியும் என்பதால் அந்த ஆகமங்கள் பற்றி ஒரு சில குறிப்புகள்.

    காலத்தால் முந்திய வைகானசம், விகனசர் என்ற முனிவராலும், பாஞ்சராத்ரம் விஷ்ணுவாலும் எழுதப்பட்டது. ஒப்பீட்டளவில் வைகானசம் “பிற்போக்கானது” என்றும் பாஞ்சராத்ரம் “முற்போக்கானது” என்றும் சொல்லலாம் (எல்லாமே பிற்போக்கு தானே அப்படின்னு கேள்வி கேட்கப்படாது. நான் என்னை சொன்னேன்). வைகானசத்தில் விஷ்ணு மட்டுமே தெய்வம். எனவே, ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் போன்றோரை வழிபட அனுமதி கிடையாது. வேதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தமிழுக்கு இடம் கிடையாது. மந்திரங்கள், சமய சடங்குகள் செய்ய பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுமதி. பாஞ்சராத்ரம் இந்த விஷயங்களில் வேறுபடும். இந்த ஆகமத்தில் வேதங்களுக்கு இணையாக நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை ஓதலாம். ஆழ்வார்களை வழிபடலாம். பொதுவில் வர்ணாஸ்ரம பாகுபாடு ஒப்பீட்டளவில் குறைவு. ஒரு கட்டுரையில் இந்த ஆகமப்படி (சூத்திரர்கள் உட்பட) யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என கூறியிருந்தது. உண்மையா என எனக்கு தெரியவில்லை. பூஜை முறைகள் போன்றவற்றிலும் இரண்டு ஆகமங்களுக்கு இடையே வேறுபாடு உண்டு. இராமானுஜரின் காலத்துக்கு முன் வைகானசமே கோலோச்சியது. ஆழ்வார்கள் பால் அதிக ஈடுபாடு கொண்ட ராமானுஜர் பல கோவில்களை பாஞ்சராத்ரம் ஆகமத்துக்கு மாற்றி விட்டதாக சொல்கிறார்கள். மேற்சொன்ன விஷயங்கள் முற்காலத்தில் இருந்தபடி. இக்காலத்தில் வைகானச கோவில்கள் மாறிவிட்டன. அங்கும் ஆழ்வார்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஒரு கோவிலின் அர்ச்சகர் ஆக விரும்புபவர் அந்த கோவில் ஏற்றுள்ள ஆகமத்தை கற்றறிந்து தீட்சை பெற வேண்டும். இங்குதான் பார்ப்பனர்கள் பிரச்சனை செய்கிறார்கள் என்பது என் புரிதல். யார் வேண்டுமானாலும் தீட்சை பெற முடியாது, இது பிறப்பால் வருவது என்பது அவர்கள் வாதம். உதாரணமாக வைகானச மதம் என்பதே பிறப்பால் வருவது. எனவே, ஒரு வைகானச அர்ச்சகனுக்கு பிறந்தவனே வைகானச தீட்சை பெற முடியும் என்பது. இந்த வாதத்தின் படி பிற பார்ப்பனர்கள் கூட வைகானச அர்ச்சகர் ஆக முடியாது! இது பற்றி அந்த ஆகமத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என எனக்கு தெரியவில்லை.

    இப்படி ஆகமங்கள் கற்றுத்தான் பார்ப்பனர்கள் அர்ச்சகர்கள் ஆகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. ஏதோ குத்து மதிப்பாக ஒரு பூஜை, சில மந்திரங்கள், சுலோகங்கள் என ஒப்பேற்றி கொண்டுள்ளார்கள். வினவு ஒரு கட்டுரையில் கூறியது போல, பார்ப்பனர்கள் ஆகமத்தை காரணம் காட்டி எல்லோரும் அர்ச்சகர் ஆவதை தடுத்தால், பதிலுக்கு அதே ஆகமத்தை காட்டி கோவணத்தை உருவி விடலாம். ஆகமத்தில் தேர்வு எழுதி, வெற்றி பெற வேண்டும் என்பதில் இருந்து பிரச்னையை துவக்க முடியும். அர்ச்சனை செய்து தட்டு நீட்டி தட்சணை கேட்க ஆகமத்தில் அனுமதி உண்டா என கேள்வி எழுப்பலாம். எனது கணிப்புப்படி ஆகமத்தில் நான்கு வேதங்களும் ஓதத் தெரிந்து இருக்க வேண்டும் என்பது ஒரு விதியாக இருக்கும் என நினைக்கிறேன். இதில் அதர்வண வேதம் தெரிந்தவர் (மிக சில பேர்) வட நாட்டில் மட்டுமே இருப்பதாக கேள்வி. நான்கு வேதம் ஓதத் தெரியாதவரை கோவில் அர்ச்சகராக நியமிப்பது பாஞ்சராத்ர மத நம்பிக்கைக்கு எதிரானது என ஒரே போடு போடாலாம்.

    இப்போது நீங்கள் கேட்ட கேள்விகள் பற்றி எனது புரிதல் (இதிலும் தவறுகள் இருக்கலாம்). அர்ச்சகர் என்பவர் இடைத்தரகர் அல்ல. அவரது பணி அக்கோவில் பின்பற்றும் ஆகம விதிகளின் படி, தினமும், குறிப்பிட்ட வேளைகளில் பூஜை, அபிஷேகம் போன்றவற்றை செய்வது மட்டுமே. பேர், நட்சத்திரம் கேட்டு அர்ச்சனை செய்வதெல்லாம் பிற்கால வழக்கம். கோவிலுக்கு செல்லும் பக்தர் ஒருவர் தான் விரும்பிய வாறு சாமி கும்பிடலாம். இதற்கு அர்ச்சகர் தேவையே இல்லை. உதாரணம் சொல்வதானால், ஒரு கோவிலை museum என கொண்டால், பக்தர்கள் பார்வையாளர்கள். அர்ச்சர்கர் curator. அர்ச்சகர்/curator இன் பணி கோவில்/மியூசியத்தை பாதுகாப்பது. அவருக்கும், பக்தர்கள்/பார்வையாளர்களுக்கும் நேரடி தொடர்பேதும் தேவையில்லை. நீங்கள் கேட்ட AC, டைல்ஸ் பற்றி எனக்கு தெரியவில்லை 🙂 இவைகளுக்கு ஆகம அனுமதி இருக்காது என்றே நான் நினைக்கிறேன். ஏதாவது ஒரு ஆகமத்தை வரிக்கு வரி ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழிபெயர்த்து சொல்லும் இணையதளம் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உங்கள் கேள்வியை பார்த்தபின் தேடியதில் கீழே உள்ள பக்கங்கள் கிடைத்தன.

    http://en.wikipedia.org/wiki/%C4%80gama_%28Hinduism%29

    http://en.wikipedia.org/wiki/Pa%C3%B1caratra

    http://yajurvedaustralasia-resources.info/wp-content/uploads/2010/10/introduction-to-the-pancaratra1.pdf

    http://sivaagama.blogspot.in/2012/01/blog-post.html

    http://srirangapankajam.wordpress.com/tag/sri-pancharathram/

    முடிவில், இந்த ஆகமங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு திவ்யப் பிரபந்த-தேவார அடிப்படையில் ஆலய வழிபாட்டை எளிமைப்படுத்த வேண்டும் என்பது என் சொந்த விருப்பம்.

    • நன்றி வெங்கடேசன் அவர்களே…

      இதைப்பார்த்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆதல் வழக்கு வெற்றி பெறும் என்று தோன்றுகிறது…

      அரசியல்நிர்னையத்துடன், ஆகமத்தில் உள்ள ஓட்டைகளையும், தற்போது ஆகம விதிகள் மீரப்படுவதையும் சாதீய சக்திகளை கவிழ்க்கலாம் என்று தோன்றுகிறது…

      வழக்கறிஞர் திரு. ராஜூ மற்றும் குழு ஆகமங்களையும் அலசியிருப்பார்கள் என்றென்னுகிறேன்…
      வென்றால் நன்று…

    • // நான்கு வேதம் ஓதத் தெரியாதவரை கோவில் அர்ச்சகராக நியமிப்பது பாஞ்சராத்ர மத நம்பிக்கைக்கு எதிரானது என ஒரே போடு போடாலாம்.//

      இதைத்தான் உடன்பிறப்பே நுனிப்புல் மேய்வது என்பர் முன்னோர். 4 வேதத்தையும் அறிவது மிகக் கடினம். வைணவ ஆலயங்களில் பணி புரிய யஜுர் வேதம் அறிந்தாலே போதுமானது.(அதுவும் சில ஸூக்தங்கள் மட்டுமே என்று எண்ணுகின்றேன்.- இன்றைய நிலையில்).

  13. சிறு திருத்தம்
    //அரசியல்நிர்னையத்துடன், ஆகமத்தில் உள்ள ஓட்டைகளையும், தற்போது ஆகம விதிகள் மீரப்படுவதையும் சாதீய சக்திகளை கவிழ்க்கலாம் என்று தோன்றுகிறது…//
    அரசியல்நிர்னையத்துடன், ஆகமத்தில் உள்ள ஓட்டைகளையும், தற்போது ஆகம விதிகள் மீரப்படுவதையும் *சுட்டிக்காட்டி** சாதீய சக்திகளை கவிழ்க்கலாம் என்று தோன்றுகிறது…

  14. ஜாதி அடிப்படையில் கோவில் நுழைவு, அர்ச்சகர் ஆவது போன்றவை தடை செய்யப்படுவது போக பணத்தின் அடிப்படையில் வேறுபாடு காட்டும் ஒரு வழக்கத்தை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். பணம் கொடுத்தால் சிறப்பு வழி தரிசனம், இல்லாவிட்டால் சாதா தரிசனம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதன் அடுத்த கட்டமாக டிக்கெட் வாங்கினால் தான் சன்னதிக்குள் செல்ல முடியும், இல்லாவிட்டால் வெளியே இருந்துதான் தரிசிக்க முடியும் என்றொரு வழக்கம் உள்ளது. சென்னையை சுற்றியுள்ள கோவில்களில் இதை நான் கண்டதில்லை. இரண்டு வருடம் முன்பு திருத்தல யாத்திரையாக மதுரை சென்ற பொது இதை பார்த்தேன். நான் நேரில் கண்ட சில உதாரணங்களை பதிவு செய்ய விருப்பம்.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் ஒரு தேவார தலமும் கூட. இங்கு உறையும் ஈசனை திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடியுள்ளனர். இந்த ஈசன் சன்னதி சிறப்பு தரிசனம் செல்லும் வழியில் இருப்பதால், சாதா தரிசனம் வழியில் செல்வோர் தரிசிக்க முடியாது. தேவார பாடல் பெற்ற ஈசனை தரிசிக்க விரும்புபவர் பணம் கொடுத்தால் தான் முடியும்.

    அடுத்து திருமோகூர். “தாள தாமரை தடமணி வயல் திருமோகூர்” என்று நம்மாழ்வார் பாடிய இத்தலம் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. மதுரைக்கு அருகில் உள்ளது. இங்கு டிக்கெட் வாங்கினால் தான் சன்னதிக்கு உள்ளே செல்ல முடியும். இதில் பிரச்சனை என்ன வென்றால், சன்னதி வாயில் உயரம் குறைவு. பெருமாள் திருச்சிலை உயரம் அதிகம். வெளியில் இருந்து பார்த்தால் திருமுடி (கிரீடம்), நெற்றி போன்றவற்றை தரிசிக்க முடியாது. திருப்பாணாழ்வார் காட்டிய வழியில் திருமுடி முதல் திருவடி வரை தரிசனம் செய்ய விரும்புவோர் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால்தான் முடியும்.

    இதே போன்ற நிலையை மதுரை கூடலழகர் கோவிலிலும், திருப்பூவணம் கோவிலிலும் கண்டேன். இந்த வழக்கத்தை எதிர்த்து வழக்கு போட வேண்டும் என்று ஆசை.

  15. கோவில் சீர்திருத்தம் இன்றைய அவசியமான தேவை! சாதாரண மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி பக்தர்களை மொட்டை அடிக்கும் கூடாரமாகவே கோவில்கள் உள்ளன! எல்லா மதத்திலும் இதேநிலைதான்! சாமி கும்பிட போகிறவனும், சாரய கடைக்கு போகிறவனும் போதைக்கு அடிமைகளே!
    மக்களை ஏமாற்றும் சூதாட்டம், சீட்டு கம்பனிகள் போல இவைகளையும் நெறிப்படுத்த வேண்டும்! அதற்கு அனைத்து சாதி அர்ச்சகராவது மிகவும் அவசியம்!

  16. Ajaathashatru,

    Indha maaperum sindhanai udicha andha mandaikkulla irukkura andha edatha naanga ellarum paakanum,neeyellam national museumthula irukka vendiya aalu.

  17. எனது குறிக்கோள்:
    1)மனிதர்களில் சரி பாதி உள்ள பெண்களையும் அர்ச்சகர்களாக்க வேண்டும். இது சாதி மதம் இல்லாமல் அனைத்து சாதி பெண்களையும் முன்னேற்ற வேண்டும்.
    2)சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, பாரசி, யூத, புத்த, ஜைன மதத்தை சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக வேண்டும். அவர்கள் அர்ச்சகராக மாதம் தோறும் கல்வி உதவித்தொகை (Mஇனொரிட்ய் ஸ்ச்கொலர்ச்கிப்) வழங்கப்பட வேண்டும்.
    3)யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியனின் சொல்லுக்கு ஏற்ப உலகில் உள்ள எல்லா நாட்டவர்களுக்கும் அர்ச்சகராகும் உரிமை வழங்கப்பட வேண்டும். குறைந்தது ஒவ்வொருநாட்டிலிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதியை பெரிய கோயில்களில் நியமிக்க வேண்டும்.
    4) வருங்காலத்தில் வேற்றுகிரக வாசிகள் நமது உலகிற்கு வருகை தந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்.

    பின் குறிப்பு: அனைத்து கோயில்கலையும் அரசு எடுத்துக்கொண்டு உள்ளதால் இந்த முயர்ச்சியயும் அரசு தன் செலவில் செய்ய வேண்டும்.வாருங்கள்நாம் அனை வரும் சேர்ந்து நமது உரிமைக்காக போராடுவோம்.

    • 5) அமெரிக்கா, கனடா அல்லது ஐரோப்பிய நாடுகளிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக பார்ப்பனர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

      6)வேற்றுக்கிரக வாசிகளுக்கு அர்ச்ச்கர் வாய்ப்பளிக்கப்படும் போது, வேற்றுக்கிரகங்களிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக பார்ப்பனர்களை வேற்றுக் கிரகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் தான் இந்த எல்லோரும் அர்ச்சகராகும் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

      7) பார்ப்பனர்கள் இவ்வளவு பரந்த மனத்துடன், தமது வாழ்வாதாரத்தையும் இழந்து மற்றவர்களையும் அர்ச்சகர்களாக்க ஒத்துழைப்பதால் பார்ப்பன அர்ச்சகர்கள் அனைவருக்கும் CNN விருது வழங்கி, அவர்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு அறக்கட்டளையைத் தொடங்க வேண்டும். 🙂

      பின் குறிப்பு: இவற்றை அரசு செலவில் செய்ய நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டால் இந்த திட்டங்களை நிறைவேற்ற வெளிநாடுகளில் கையேந்துவதில் தவறில்லை. ஏனென்றால் தமிழர்கள் அனைவரும் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு கடமைப்பட்டுள்ளார்கள்.

  18. இந்து மத கடவுளர்களே வேற்றுக்கிரகவாசிகள் தான். 🙂 Read: Erich Von Daniken’s books.

  19. ஐயா,
    உண்மையாகவே அர்ச்சகராகா விழைவோர் இஸ்கானில் விண்ணப்பிக்கலாமே. அங்கு இதுபோல சாதி வேறுபாடு கிடையாது.

    நன்றி

Leave a Reply to nonethuponavan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க