privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபள்ளிக் குழந்தைகளை பட்டினி போட்ட அமெரிக்கா!

பள்ளிக் குழந்தைகளை பட்டினி போட்ட அமெரிக்கா!

-

அமெரிக்கப் பள்ளி மதிய உணவு
படம் : rt.com

மெரிக்காவில் ஒரு பள்ளியில், மதிய உணவுக் கட்டணம் நிலுவை  வைத்திருந்த சிறுவர்களுக்கு பரிமாறிய உணவை குப்பையில் கொட்ட வைத்து பட்டினி போட்டுள்ளது ஒரு தனியார் நிறுவனம்.

அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸில் அட்டல்போரோ நகரில் உள்ள ராபர்ட் ஜே கொயலோ நடுநிலைப்  பள்ளியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 25 சிறுவர்கள் இரண்டு வாரம் வரை உணவு மறுக்கப்பட்டுள்ளனர். இந்தப் பள்ளி ஒரு அரசு பள்ளிக்கூடம்; இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பின்னணியைக் கொண்டவர்கள். இங்கு மதிய உணவு பரிமாறும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான விட்சன் நியுட்ரிஷன் எனும் நிறுவனம் பெற்றுள்ளது. சிறுவர்கள் மதிய உணவு பெறுவதற்கு, முன் பணம் கட்டிய அட்டைகளை பயன்படுத்த வேன்டும்.

25க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன் பணம் நிலுவை  வைத்திருந்ததை பட்டியலிட்டு, அந்த மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டாம் என்று விட்சன் நிறுவன மேலாளர் ஊழியர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து டிரேயில் உணவை வாங்கிக் கொண்ட மாணவர்களை அதை குப்பைக் கூடையில் போடுமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள் ஊழியர்கள். இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த நிகழ்வு தொடர்ந்துள்ளது. பள்ளியின் தலைமையாசிரியருக்கோ பெற்றோர்களுக்கோ இதைப் பற்றிய தகவல் தெரிவிக்கக் கூட விட்சன் ஊழியர்கள் தயாராக இல்லை.

பின்னர் இதைப் பற்றி தெரிய வந்த பெற்றோர்கள் கொதித்து போயினர். தம் பிள்ளைகள் பட்டினியாக இருந்ததற்கு அவர்களால் கோபப்பட மட்டும்தான் முடிந்தது. அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தின் மீது இப்படி கோபப்படத்தான் முடியும், சட்ட ரீதியாகக் கூட தண்டிக்க முடியாது.

இதைப் பற்றி கருத்து தெரிவித்த விட்சன் நிறுவனத்தின் பத்திரிகை தொடர்பாளர் “அந்த கல்வி மாவட்டம் முழுவதிலும் மாணவர்கள் தர வேண்டிய மொத்தத் தொகை $1,800 (சுமார் ரூ 90,000)” என்றும் “பண வசூல் செய்வதற்கு வேறு அணுகுமுறையை கடைப்பிடித்திருக்கலாம்” என்றும்  கூறியுள்ளார். அந்த வேறு முறை என்ன என்பது அவருகே வெளிச்சம். 90,000 ரூபாய் கடனை வசூலிப்பதற்கு குழந்தைகளின் தட்டிலிருந்து உணவை பறிப்பதுதான் அமெரிக்க முதலாளித்துவம் முன் வைக்கும் மனிதாபிமானம்.

‘கட்டணம் கட்டவில்லையா, உணவில்லை, உணவை குப்பையில் கூட போடுவேன் ஆனால் சிறுவர்களுக்கு தரமாட்டேன்’ என்பது ஒரு பள்ளிக்கூடம், 25 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சிறு விஷயமல்ல. இது தான் முதலாளித்துவம் இயங்கும் முறை. உணவுப் பொருட்கள் விளைச்சல் அதிகமாகிவிட்டால் விலை குறைந்துவிடும் என்று உணவுப் பொருட்களை கடலில் கொட்டும் அதே மனநிலை. ‘கடலில் கூட கொட்டுவேன் ஏழைகளுக்கு குறைந்த விலையில் கொடுக்க மாட்டென்’ என்ற அதே பாஸிஸ மனநிலை. அதன் நடை முறை வடிவம் தான் இந்த பள்ளியில் நடந்த சம்பவம்.

அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளும், அதில் படிக்கும் மாணவர்களின் நிலையும் நிச்சயமற்ற எதிர்காலத்தை கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னும் ஒரு சாட்சி சிகாகோ நகரில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதும் அதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் மீது ஏவப்பட்ட வன்முறையும்.

சிகாகோ நகரில் இருந்த எண்ணற்ற ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிக்கூடங்களை நிர்வகிக்க போதிய பணமில்லை என்று பல பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு விட்ட்ன. அவற்றில் படிக்கும் மாணவர்களின் நிலைமை? பணம் இருப்பவர்கள் அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்துக் கொள்ளலாம். மீதமிருப்பவர்கள் படிப்பை நிறுத்திக் கொள்ளலாம்.

உலகம் முழுவதும் கொள்ளையடித்து வரும் அமெரிக்க முதலாளிகளிடம் கொஞ்சமாக வரி வசூலிக்கும் அமெரிக்க அரசு மக்களுக்கு அந்த பணத்தை செலவழிக்கும் என்பது கூட இப்பொழுது பொய்யாகி விட்டது. ஈராக் குழந்தைகளை ஈவு இரக்கமற்று கொன்றொழிக்கும் அமெரிக்கா தங்கள் நாட்டு குழந்தைகளை இரக்கத்துடன் கொல்லாமல் உயிரோடு நடு ரோட்டில் விடுகிறது. இது தான் அமெரிக்க மனித நேயம் போலும்!

மேலும் படிக்க
School forces students who can’t pay to skip lunch, then trashes the food