privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச்சட்டையின் காவிப்புத்தி !

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச்சட்டையின் காவிப்புத்தி !

-

டந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத் நகரில், தில்சுக் நகர் எனுமிடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் இறந்துபோனார்கள்; ஏறத்தாழ நூறு பேர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை தொடங்கும் முன்பே, இன்னும் சொல்லப்போனால் குண்டுவெடிப்பில் இறந்து போனவர்களையும் காயமடைந்தவர்களையும் அப்புறப்படுத்தும் முன்னரே, “அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காகவே இக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாகவும்; இந்தியன் முஜாஹிதீன் என்ற முசுலீம் தீவிரவாத அமைப்புதான் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாகவும்” மைய அரசு, மாநில அரசு, போலீசு, உளவுத் துறை, பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் என அனைத்து நிறுவனங்களும் ஒரே குரலில் அடித்துக் கூறின.

தில்சுக் நகர்
ஹைதராபாத் தில்சுக் நகரில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரிக்கும் போலீசு.

ஆனால், இக்குண்டு வெடிப்பு நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட பின்னும் இக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக ஒரு துரும்பைக்கூட போலீசாலும் உளவு நிறுவனங்களாலும் காட்ட முடியவில்லை.  இக்குண்டு வெடிப்பு குறித்து தற்பொழுது போலீசிடமும் உளவுத் துறையிடமும் இருப்பதெல்லாம் ஏதாவதொரு முசுலீம் தீவிரவாதி அமைப்பு இக்குண்டு வெடிப்பை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் மட்டும்தான். இப்படியொரு சந்தேகம் கொள்வதற்குக்கூட அதனிடம் வலுவான ஆதாரங்கள் கிடையாது.  மாறாக, நாடெங்கும் போலீசுத் துறையிடம் ஊறிப்போயுள்ள முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் அடிப்படையிலிருந்து மட்டுமே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இது காழ்ப்புணர்ச்சி காரணமாக போலீசு மீது சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு அல்ல.   “ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் நடந்தால், அது முசுலீம்களின் வேலையாகத்தான் இருக்கும்; அந்த முசுலீம் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பான்.  இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உத்தரவுப்படிதான் இயங்கியிருக்கும் என்றுதான் தற்பொழுது போலீசு சிந்திப்பதாக” ராமன் என்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி கூறியிருப்பதை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜுவும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.

எனினும், ஆந்திர மாநில போலீசோ தனது சந்தேகத்தை மட்டுமே முன்னிறுத்தி இக்குண்டு வெடிப்பு தொடர்பாக பல அப்பாவி முசுலீம் இளைஞர்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.  இந்த அப்பாவி முசுலீம் இளைஞர்களுள் முப்பத்திரண்டு வயதான முகம்மது ரயீசுதினும் ஒருவர்.

முசுலீம் இளைஞர்கள்
2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முசுலீம் இளைஞர்கள், இந்திய அரசை மன்னிப்புக் கேட்கக் கோரி நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

ஆந்திர போலீசார் ரயீசுதினைத் தீவிரவாதி என முத்திரை குத்தி வேட்டையாடுவது இது முதன் முறையல்ல.  2007-ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கிலும் ரயீசுதின் ஹைதராபாத் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டார்.  இரண்டு ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றம் அவரைக் குற்றமற்றவர் எனக் கூறி விடுதலை செய்தது.  பொய் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டதால் ஆந்திர மாநில அரசு ரயீசுதினுக்கு நட்ட ஈடு வழங்கியது.  ஆனாலும், போலீசு ரயீசுதினைத் தீவிரவாதிகள் பட்டியலில் வைத்தே கண்காணித்து வருகிறது.  ரயீசுதின், தில்சுக் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் எதிர்பாராதவிதமாகச் சிக்கிக் காயமடைந்ததையே காரணமாகக் காட்டி, குண்டு வைக்க போனபொழுது அவர் காயமடைந்திருக்கலாம் என்ற கதையைக் கட்டி, அவரைச் சந்தேகத்தின் பேரில் சட்டவிரோதமாகத் தூக்கிச் சென்று விசாரணை நடத்தியது, ஹைதராபாத் போலீசு.

முசுலீம் இளைஞர்களை போலீசு  வேட்டையாட, ஏதாவதொரு குண்டு வெடிப்போ அல்லது தீவிரவாதத் தாக்குதலோ நடக்க வேண்டும் என்ற கட்டாயம்கூட இப்பொழுது அருகிவிட்டது. போலீசும் உளவுத்துறையும் தாங்கள் இயங்கி வருகிறோம் எனக் கணக்குக் காட்டுவதற்கே, முசுலீம் தீவிரவாதத் தாக்குதல் பீதியைக் கிளப்பிவிடுவதையும்; தாங்கள் கிளப்பிவிடும் பீதியையே ஆதாரமாகக் காட்டி முசுலீம் இளைஞர்களைக் குறிவைத்துத் தூக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

அகமது மிர்ஸா, முத்தி-உர்-ரஹ்மான்
கர்நாடாகா மாநில போலீசாரால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட இளம் ஆராய்ச்சியாளர் அய்ஜாஸ் அகமது மிர்ஸா (இடது) மற்றும் பத்திரிகையாளர் முத்தி-உர்-ரஹ்மான் சித்திக்.

பெங்களூரூ நகர போலீசு கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூரூ மற்றும் ஹூப்ளியில் 15 முசுலீம் இளைஞர்களை வீடு புகுந்து கைது செய்தது.  பெங்களூரூ போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் மகாராஷ்டிரா போலீசார் நான்டேட் நகரைச் சேர்ந்த 4 இளைஞர்களைக் கைது செய்தனர்.  “இந்த 19 இளைஞர்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொபா மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்ற இரு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்; கர்நாடகாவைச் சேர்ந்த முக்கியமான அரசியல் தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லும் திட்டத்தோடு இவர்கள் இயங்கி வந்தனர்.  இக்கும்பலைச் சேர்ந்த ஹகீன் ஜமாதார், ஷோயிப் அகமது ஆகிய இருவரையும் நாங்கள் அவர்கள் அறியாமலேயே வேவு பார்த்து வந்தோம்.  இந்த இருவரும் ஆகஸ்டு 29 அன்று கன்னட பிரபா பத்திரிகையைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹா என்ற பத்திரிகையாளரைச் சுட்டுக் கொல்ல முயன்றபோது, நாங்கள் இந்த இருவரையும் அமுக்கிப் பிடித்து விசாரித்து, இந்தக் கும்பலின் திட்டத்தை முறியடித்ததோடு, மற்றவர்களையும் கைது செய்தோம்” – என இந்தக் கைதுகள் குறித்து போலீசு ஒரு சுவாரசியமான கதையை அவிழ்த்துவிட்டது.

போலீசால் கைது செய்யப்பட்ட இந்த 19 இளைஞர்களுள் ஒருவரான அஜஸ் அகமது மிர்ஸா இந்திய இராணுவத்தின் ஆராய்ச்சி அமைப்பில் இளம் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்தார்; முத்தி-உர்-ரஹ்மான் சித்திக் டெக்கான் ஹெரால்டு என்ற ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்; இரண்டு இளைஞர்கள் முதுகலை மருத்துவ மாணவர்கள்; மற்றொருவர் கணினிப் பொறியாளர்.

முகமது ரயிசுதீன்
தில்சுக் நகர் குண்டுவெடிப்பு தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முகமது ரயிசுதீன்.

இந்த இளைஞர்கள் அனைவரும் ஒரு மாதம் வரை போலீசு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.  எனினும், இவர்கள் குறித்து போலீசு புனைந்த கதைக்கு எந்தவொரு சிறு ஆதாரத்தையும் போலீசால் காட்ட முடியவில்லை.  “இவர்களுக்குச் சர்வதேச முசுலீம் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு கிடையாது; தீவிரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டமும் இவர்களிடம் இல்லை” என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு பெங்களூரு நகர போலீசு தள்ளப்பட்டது.  எனினும், சட்டவிரோதமான முறையில் இந்த இளைஞர்களைக் கைது செய்ததை நியாயப்படுத்துவதற்காக, இந்த இளைஞர்கள் உள்ளூர் தீவிரவாதிகள் எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, போலீசு.

கர்நாடகா பா.ஜ.க. அரசு புனைந்துள்ள இந்தப் பொய் வழக்கின் விசாரணையைத் தற்பொழுது மைய அரசின் தேசியப் புலனாவு அமைப்பு நடத்தி வருகிறது.  இந்த 19 இளைஞர்களுள் 15 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செயப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலான பிறகும் நான்கு இளைஞர்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியாமல் போனதால், அவர்களைக் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருக்கிறது.

விடுதலையானவர்களுள் இளம் ஆராய்ச்சியாளரான அஜஸ் அகமது மிர்ஸாவும் ஒருவர். அவர் குற்றமற்றவர் என்ற உண்மை ஏறத்தாழ சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமான பிறகும்கூட, இந்திய இராணுவம் அவரைத் திரும்ப வேலைக்கு அமர்த்திக் கொள்ளாமல், அவர் பிணையில் விடுதலையான அதே நாளில் அவரை வேலையிலிருந்து தூக்கியடித்து விட்டது.

இந்து மதவெறிக் கும்பல் நடத்திய குண்டு வெடிப்பு வழக்குகளில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ள கர்னல் புரோகித் விவகாரத்தில், இந்திய இராணுவம் இதே அளவுகோலைப் பயன்படுத்தவில்லை.  இந்திய இராணுவம் கர்னல் புரோகித்தை இன்னமும் பதவியிலிருந்து விலக்காமல், சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை அம்பலப்படுத்தியிருக்கிறது, ஜமாத் இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பு.

லியாகத் அலிஷா
டெல்லியில் குண்டு வைக்க வந்த தீவிரவாதி என்று டெல்லி போலீசாராலும்; பாகிஸ்தானிலிருந்து சரண்டைய வந்த முன்னாள் தீவிரவாதி என்று காஷ்மீர் அரசாலும் கூறப்படும் லியாகத் அலிஷா (வட்டத்துக்குள்)

இந்து மதவெறிக் கும்பலின் தளபதியான மோடியின் குஜராத் அரசு மட்டுமல்ல, மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள்கூட முசுலீம் தீவிரவாத பீதியைக் கிளப்பி, தம் மனம்போன போக்கில் முசுலீம்களைக் கைது செவதில் மும்மரமாக உள்ளன.  அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் விதத்தில் டெல்லி நகரில் குண்டு வைக்கும் நோக்கத்தோடு, பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமான முறையில் டெல்லிக்கு வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த காஷ்மீரியான லியாகத் என்ற தீவிரவாதியைக் கைது செய்ததோடு, “அவரிடமிருந்து ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்டுப் பல்வேறு வெடிபொருட்களையும் கைப்பற்றியிருப்பதாக” டெல்லி போலீசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால், டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரைச் சேர்ந்த லியாகத், பாகிஸ்தானிலிருந்து சரணடையும் நோக்கத்தோடுதான் இந்தியாவிற்கு வந்ததாகவும்; தங்கள் மாநில போலீசு அவர் சரணடைவதற்கு அனுமதித்திருப்பதையும் எடுத்துக் கூறி, டெல்லி போலீசின் பித்தலாட்டத்தை காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாவே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

போலீசும் உளவுத்துறையும் பரிசு, பதவி உயர்வுக்காகவே இது போன்ற பித்தலாட்டங்களில் ஈடுபட்டு, அப்பாவி முசுலீம்களைக் கைது செய்து, பொய் வழக்குகளில் சிக்க வைத்து வதைத்து வருவது அடுத்தடுத்து அம்பலமாகி வந்தாலும், ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும் போலீசின் இந்த அதிகார அத்துமீறல்களைக் கண்டித்து ஒரு வார்த்தைகூடப் பேச மறுக்கின்றனர்.  முசுலீம் இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டு வருவது குறித்து சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் பாசுதேவ் ஆச்சாரியா எழுப்பிய கேள்விக்கு, “மைய அரசிடம் அந்த முசுலீம் இளைஞர்கள் குறித்தெல்லாம் எந்தவிதமான ஆவணப் பதிவுகளும் கிடையாது” எனத் தான்தோன்றித்தனமாகவும் திமிராகவும் பதில் அளித்திருக்கிறார், உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 1994-ஆம் ஆண்டு ஜகந்நாத் பூரி ரத யாத்திரை நடந்த சமயத்தில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட முயன்றதாகக் கைது செய்யப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 11 முசுலீம்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், அவர்கள் மீது பொய் வழக்கு புனைந்த போலீசு அதிகாரிகளைக் கண்டிப்பதற்கு மாறாக, “தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பணிபுரிந்து வரும் போலீசு அதிகாரிகளின் பதற்றத்தையும், அப்பணியின்பொழுது அவர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகளையும் நீதிமன்றம் புரிந்துகொள்வதாக” அத்தீர்ப்பில் குறிப்பிட்டு, போலீசின் அத்துமீறல்களுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறது.

தேசிய மற்றும் உள்ளூர் பத்திரிகைகள் இது போன்ற வழக்குகளில் போலீசின் ஊதுகுழல்களாகவே செயல்பட்டு வருகின்றன.  “ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில், குண்டு வெடிப்பை நடத்துவதற்கு தீவிரவாதிகள் எப்படியெல்லாம் திட்டம் தீட்டினார்கள்” என்றெல்லாம் புலனாய்வு என்ற பெயரில் தெலுங்கு ஊடகங்கள் முசுலீம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை நடத்தியுள்ளன.  பெங்களூரு வழக்கில், “பத்திரிகையாளர் முத்தி-உர்-ரஹ்மான் சித்திக், இராணுவ ஆராய்ச்சியாளர் அஜஸ் அகமது மிர்ஸா ஆகிய இருவர்தான் இந்த நடவடிக்கையின் மூளைகள்” என்றவாறு கன்னட ஊடகங்களால் கதை கட்டப்பட்டன.  அந்த இருவர் மீதும் போலீசால் எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை என்ற உண்மை அம்பலமான பின்னரும்கூட, கன்னட ஊடகங்கள் தங்கள் அவதூறு பிரச்சாரத்திற்கு மன்னிப்புக் கேட்க முன்வரவில்லை.

பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் முசுலீம் வெறுப்பு இந்து மதவெறி பாசிச அரசியலில் ஊறிப் போயிருப்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் அழுந்தச் சொல்லுகின்றன.

– குப்பன்.

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

  1. It is a well known fact only Muslims from the Muslim community and not from Hindu or Christian community indulges in all terrorist activities in India because the present central government and most of the political parties in India supports Muslims to get their votes and come to power with the idea of looting this nation.Most of the Muslim terrorists in India knows that Indian people are very weak in nature and laws are in favour of them.
    Unless a strong government rule india with iron hand by detaining all such terrorists in Andaman cellular jails till their death including those anti-social elements who supporting such terrorists cannot.

    • பாலகிருஷ்ணன், இந்த பொய்யை இன்னும் எத்தனை தடவை வாந்தி எடுப்பீர்கள், இதை காப்பி எடுத்து எழுதிய நேரத்தில் கொஞ்சம் கட்டுரையை படிக்கலாமில்லையா?

    • அடேங்கப்பா என்னமா கூவுராறு நம்ம பாலகிருஷ்ணன்….

      இதில் சிரிக்கத் தக்க விடயம் என்னவென்றால் கிறித்தவர்களையும் கொஞ்சம் உள்ளே இழுத்துக் கொண்டது தான்….ஏதாவது தார்மீக தொடர்பு இருந்தாலும் இருக்கலாம் 🙂

      அது சரி பாலகிருஷ்ணன்…இந்த பிரக்யா சிங் தாகூர், கர்னல் புரோகித், ப்ரவீன் தொகாடியா மற்றும் கேமந்த் கர்கரே-வின் கொலைக்குப் பின் புலமாக இருந்தவரெல்லாம் முசுலீம்களா என்ன….

    • Well Said, Balakrishnan. Also, i feel it is because of people like Vinavu, the muslim youth gets provoked and indulge in Terrorist activities. According to Vinavu, the police have not found a single evidence against Muslims for the bomb attack. But, even after 10 years, with no evidence against narendra modi, they keep repeating that Modi is responsible for Gujarat riots. Their selective stance and biased reporting is done with the single point agenda of separating Hindus and Muslims through hate propaganda. There are hundreds of terrorist cases where Muslims are involved. Have they written anything about it? There are thousands of cases where Hindus have been arrested without evidence. So, if at all there are one or two cases against muslims, where there is no evidence, it is not a big thing. FYI, when Modi made preventive arrests of 18000 Hindus, there were no evidence against them. I feel, Terrorist activities are Trademark of Muslims. There are some good muslims too. THey are 1) rare and 2) keep quiet and dont speak against their brothers since they fear retribution from mullahs and ulemas. Please read “World of Fatwas” by Arun Shourie.

    • 1. Allegations against Hindus have not been proved yet. In fact, whatever they are accusing about police in this article as “anti-muslim” can be applied for these cases as well.

      2. Vinavu’s article is a self-goal. In examples, they have given, after Bangalore bomb blasts, the police have arrested 19 people and 4 are innocent and they have been freed. Now, they are making these 4 arrests very big issue. What about the remaining 15 who have been arrested? Are they not MADHA VERIYARGAL?

      After being a Vinavu vaasagar for few weeks, i understood their intentions. It is clearly to divide Hindus first, then hindus and muslims, later provoke people through hate articles. We need to check their funding – i wont be surprised if they have sources from gulf.

      @ Hari: I have found in many articles, you are doing a commendable job by remaining the alternative and true voice. But is it worth it?

  2. உன்மைதான் மர்கன்டெய கட்ஜு சொன்னது சரிதான் 90% இந்தியர்கல் முட்டல்கல் என்ட்ரு சுயமாக யொசிக்க குட தெரியமல் இருகிரர்கல் பலர்…. என்ன கொடுமை இது அவர் சொன்ன ஆட்டு மந்தைகலில் தொலர் பலக்ரிஷ்னன் தன் முதலில் இருபர் போல….. அருமையான ஒரு பதிப்பு….

  3. i am strongly against this post…….u all say hinus are anti christ r anti muslims……what we all did to them….even if there are so many countries declaring them as christian nation and muslim nation , y not India only nation where hindus lives a lot to be declred as Hindu nation? rather it was declared as secular….

    and coming to the point , how many terrorist organisation can u name who are not muslims.almost all are muslims.suspecting is police job….let them do their work…s that they can find the culprit and prevent the hazard again…its hard for the police to correclty find who is the culprit…understand this…

    if they had lived disturbing us then y should we are going to disturb us…in our country still more(including huindus) are supporting other religions not knowing it has been attacked in indirect ways…one is making conversion and other is making riots …..

    i dont find anything wrong in asking India to be declared as Hindu nation when they ask for additional reservation…..even now they had been given so many incentives and enjoying so much which hindus are not….

    they want india to be converted into as their religion country and want to destroy its tradition though it has so many values..so they are doing these things….

    they ahd already transformed 75% of their whole world…..egypt now only has its pyramids but their traddiotn was totaly earthed and its now fuly occupied by muslims….

    they cant do these things in china ,coz chinese will screw them like any thing …but what abt Indians……reallly we are illicha vayans

    to ur Information.
    approsimatly in Mizoram and tripura in 1991 population of Hindus was 100% but now its only 4*

    in 1991 INDIAs Hindu population is 89% but now it is only 80% …if future it will decrese to 70 ythen 60 then 50 thren 45 and then its easy for them to treat us like a slave ….that what they are expecting and we will be totaly in their control and atlast hindus will become 10 or 9% and hinduism will die…..

    its them they are starting the war ..not us….Hindus will live peacefully if they are…. i still feel ashamed to write these things but to save my motherland and its tradition i had to….

    if they still want India to be secular…ask them to make middle east and catholic nations to be secular

    • திருவாளர் வெங்கட் அவர்களே இந்துக்கள், இந்துக்கள் என்று சொல்கிறீர்களே அவர்கள் யார்? இந்துக்களின் இலக்கணம் என்ன? தகுதிகள் என்ன? நீங்கள் இந்துவா? நீங்கள் இந்து என்பதற்கு என்ன தகுதியைக் கொண்டிருக்கிறீர்கள்.

      • Hindu………dharmathai pinpatrubaan……thai tanthayarai mathikka katru koduthavan…..guruvai mathikka katrukoduthavan…..ulagirku jothidam, yoga,dhiyanam ,kalari,(mother of karate and kung fu),pranayamam, kamam( kamasutra),sitha maruthuvam, ayurvedam mattrum pala katru koduthavan…..

        Kadavulai vazhipadauvathi vida aduthavargalukku dharmam (charity ) or dharmathai pinpatrinalum narkathi adaivai endru ulagirku solliyavan……ivar than kadavul,ivarai pinpatrinal mattume sorgam selvai endru moodathanamaga sollathavan(as per christianity and islam)….aadhiyileye pengalukku mathippu alithavan(worshipping goddess as mother,respecting wifes of rishis (arunthathi ,agalikai etc)…..poythuma illai innum vilakkam venduma?

    • அப்படின்னா சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் குறிப்பாக வரையறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட தலித்துகள் — இவர்கள் எல்லாம் யார்?

      • indhukkal nanku varnathavaraga pirikka pattvargal……
        bramanan……kadavulai poojikka udhvubavan,kodavulai poojikka vendiyathal suthamaga (so many rituals like eating only vegetables) vazhabavan……bikshai eduthe unavu arunthubavan(in old ages.according to vedas…)

        kshatriyan…..opatra veeran…nattai padhukakka uyirayum koduppavan….balam vendiyathal mamisangalyum unnubavan….

        vaishyan…….viyabaari….naatai sezhumaiyaga akubavan….kadal kandandhui vanigam seibavan….

        suthiran……mattra intha moovarukkum udhavi seibhavan….(in those old age, peoples who are disabled r cant work could be named as soothirar)

        pazhangalathil oru bramannin pilai than bramanan enbathu kidayathu…..thanthaiyidam irunthu intha varnam vanthathu kdayathu……kala polkil ivai mariyavai…varnam avaravagalin velaiyai poruthe amainthathu…

        idhil oruvarai vidu innoruvar thazhtrhar alla

        example …….valmiki – a hunter but wrote ramayana….like this so many things…

        idhil nalam varnathavare dalit enru azhaika padukinranar……

    • சொல்வதை தெளிவாகவும், நேரிடையாகவும் சொல்லுங்கள். தலித்துகள் யார்?

        • உங்கள் வியாக்கியானம் விளக்கெண்ணைத் தனமாக இருக்கிறது. எஙகள் பகுதியில் ஒருவர் கள்ளர் சாதியைச் சேர்ந்தவர், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். படிக்கும் காலத்தில் தாழ்த்தப்பட்டவர் என்று சான்றிதழ் வாங்கி தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய விடுதியில் தங்கிப் படித்தார். இப்போது அவரை என்ன சொல்லி அழைப்பீர்கள்? இந்த கண்ராவியையெல்லாம் விடுங்கள். தலித் இந்துவா? இல்லையா?

            • அப்படியானால் நீங்கள் ஏகபோகமாக அனுபவிக்கும் உரிமைகளை அவர்களுக்கு தர ஏன் மறுக்கிறீர்கள்? குறைந்த பட்சம் மனிதனாகவாவது மதிக்கலாம் அல்லவா?

              • madhikkalainnu yaaru sonnanga,

                100 varushathukku munnadi nadanthathai patri naan sollala,

                aana 100 varusham munnadi kooda,pallarmaar enga thatha kooda ukkandhu pesuvaanga,avungalukku nilam kuthakaikku vidapattadhu,athanaala avungalum payan adainchanga.

                manushana mathikkama thaan,ithellam nadanducha?

                • ஹல்லல்லோ மிஸ்டர் ஹரிகுமார், நடைமுறையில் ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்டால், 100 வருடங்களுக்கு முன், பின் என்ற கதையோடு, பள்ளர்மார் எங்க தாத்தாவோடு உட்கார்ந்து பல்லாங்குழி விளையாடினார்கள், பேசிக்கொண்டிருந்தார்கள் என்று கதை அளக்காதீர்கள். இப்போது உங்கள் தாத்தாவோடு உட்கார்ந்து பேசியவரின் பேரனோடு நீங்கள் தோள் மேல் கைபோட்டு பேசி, நீயும் இந்து தான் நானும் இந்து தான் என்று சொல்லி செயலில் நிரூபித்துக் காண்பியுங்கள்.

                  • already appadi thaan irukku,

                    en friends neraya perula neenga solra pallarmaar,parayarmaar irukkanga.

                    neenga sollura thol mela kai,sarakku ellame 5-6 varushathukku munnadiye nadanthiruchu.

                    and intha pallankuzhi,kummi ponra insulting vaarthaigala use pannadheenga,

                    ungala maadhiri aalunga ellam avungalukku oru masura kooda pudungi pottadhu kedayathu.

                    avungala summa usupethi thevamaar kooda sandai poda vachathu mattum thaan unmai.

                    neenga endha ulagathula irukeenga sir?

                    • இவ்வளவு தூரம் இவ்வளவு எல்லாம் செய்திருக்கிறீர்கள். கோயிலுக்குள்ளும் (கருவறைக்குள்ளும்) கூட்டிப்போங்களேன்.

                    • உங்கள் தென் தமிழ்நாட்டில் பல்லாங்குழியும், கும்மியும் என்ன கெட்ட வார்த்தைகளா?

                    • அவர்களின் மசிரை புடுங்கி போட்டது இல்லைதான். ஆனால் அவர்களை மனிதர்களாக நினைத்து ஒன்றாக இருக்கிறோம்.

                  • and Mr.tamizh

                    I can assure you that we are from South TN and we are not weak people like you,falling for every otehr ideology.

                    so,dont try to analyse things for which u dont have a level of intelligence for.

                    • அவர்களின் வலியை நான் உணர்ந்தவன். அந்த அறிவு எனக்குப் போதும் ஸார். உங்களைப் போல் மேதாவித் தனம் எனக்குத் தேவையில்லை ஸார்.

            • நான் அவருடைய விலாசத்தை தருகிறேன். நீங்கள் போய் அவரிடம் நீங்கள் தலித்து தான் என்று சொல்லிப் பாருங்களேன்.

                • //hindu thaan.//

                  ஹரிகுமாரு இப்போ சொல்லுங்க அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாமா? கருவரைக்குள் வரலாமா?

                • அவருக்கு நிச்சயம் கோபம் வரும். ஆனால் அவர் வருத்தப்படுகிறாரா? இல்லையா? என்பதை பார்ப்பதற்கு நீங்கள் இருப்பீர்களா என்பது நிச்சய்ம் இல்லை. ஏனெனில் அந்த அளவிற்கு அந்த வார்த்தையின் மேல் குரோதத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.

                  • idha maadhiri ellam neraya pera paarthachu sir,

                    andha vaarthai mela avalavu krodham irundha avuru yen avunga kooda viduthiyila utkarnthu padicharu,saapitaaru,thoongunaaru,

                    appadis enja aalukku kovam ellam vandha adhu oru comedy thaan.

                    athu enn anee irukka,maata naan irukka maaten.

                    appadi ellam ulagam iruntha vinavu thalame irukkadhu.

                    • உண்மையிலேயே நீர் வீரமிக்கவராய் இருந்தால், இங்கு எழுதியதை அவரிடம் நேராக கேளும். (உம்முடைய மெயில் முகவரியை தந்தால் நான் அவரின் விலாசத்தைத் தருகிறேன்.) இப்போது அவர் வைத்திருக்கும் கல்வி வளாகத்தினுள்ளேயே உமக்கு ஒரு வீடு கட்டி கொடுத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார். நீ இருக்க மாட்டே, நான் இருக்க மாட்டேன் என்பது உண்மையா, பொய்யா என்பது புரியும். அப்படி நடந்தால் அதையும் வினவு தான் எழுத வேண்டியிருக்கும்.

  4. I will tell the answer vinavu for the question who are HINDUS?.

    Hindus are

    1)Through out the Indian history(especially during mughal period), those who are killed,raped and converted to muslim by muslim invaders

    2)those living in pakistan have been force fully abducted and converted to muslim

    3) Those are driven out in kashmir valleys by muslim terrorists.

    4) killed by bomb blasts all over india.(If you are telling that bomb blasts are only for retaliation against kashmir problem or sivasena problem, then please refer to my first point.)

    5) Those worship places has been demolished and converted in to mosques.

    If you want,i will give hundreds of points also. Dont worry venkat,balakrishnan and sridhar. If BJP comes to power, all the illegal bangladesh migrants will be driven out from india. Muslim quotas will be removed. Even if bjp loots all of the people money, still i will vote. The reason is they are only ones who supports HINDUS. I will pray that they have to come to power.

    • செத்தவர்கள் மட்டும் இந்துக்கள் என்று சொல்லிவிட்டு சாகாதவர்கள் இந்துக்கள் இல்லை என்ப்தை ஒத்துக் கொண்டதற்கு நன்றி

      • nangal sethavargal alla …sagadikka pattavargal……..sagadikka padugiravargal…..muslimgal kattya madha maatream seiyum bodhum …..christiangal ragasyamaga madha maatram seiyum bodhum ,indhiya secular enbathirkaga madhippu koduthu vai moodi kondirupavargal……aanal indhanai vaithui engalai kozhagal endru enna enna vendam…..engal veerathai indhiya sarithiram sollum…sattathiruku mathipuu koduthu kai katta pattirukirom……kattavizhthal enna nadakum endrum umakku theriyum……avargal engailai seendum bodhu, porkodi thookinal naangal madhavaadhigal…….

        muslimgal mathiriyum isulamiyalgal mathiriyum indhu madhathai parappum nokkam engallukuu illai……antha eena buthyum keezh buddhiyum engallukuu kidayathu…..indralavum avarkalai mariyathaiyudan vaithu ullom…….

        ippothu ungal murai vinavu avargale….isulamiyan ,chruthuvan yaar………avanin illakanam enna……

        • அவன் மதமாற்றம் செய்கிறான் என்றால் ஈனபுத்தியில்லாத, கீழ் புத்தி இல்லாத மானமுள்ள நம்மவன் ஏன் மாறுகிறான்? எதற்காக மாறுகிறான்?

  5. VinothIndia is hindu majority country. If a bomb explosion happens, most of the persons killed will be hindus only. one or two’s will be muslim or some other communities.
    ஹிந்து மெஜாரிட்டி நாடு என்பதால் முஸ்லிம் தீவிரவாதிகளால் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாக மக்கள் மத்தியில் மாயை உருவாக்க ஹிந்து தீவிரவாதிகளே குண்டு வைத்து ஹிந்துக்களை கொன்று முஸ்லிம்கள் தலையில் பழியை போட்டு மெஜாரிட்டி ஹிந்துக்களிடம் வோட்டு வாங்கவே .
    சின்ன மீனை போட்டு பெரியமீனை பிடிப்பதுதானே மீன் பிடிக்கும் யுக்தி

    • appo twin tower blast nadathiyavar americanaa…mumbai terror attack…..ajmal kasav…….ellam hinduva……..americavudan natpu uravu kondukitte osama olithuvaithavargal pakistan muslimgal thane…..vetkamaga illai ……en intha kozhaithanam ungalukku…….take every country where muslims having government ….having any or other problems…….

  6. i*****m , from your point of view, muslims are peace loving persons who never killed any hindus in india like in kashmir. If sivasena or BJP wants, they can go and directly kill muslims. it wont need any reasons to start fight with muslims.

    Vinavu,

    Please target rich,politicians and bhramins. Please dont support muslims.

  7. நேற்று ஹைட்ராபாத் இன்று பெங்கலூரு நாளை சென்னை அடுத்து இந்தியா முழுவதும்!!!! இந்த முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொடுமையொ கொடுமையொ!! என்று தனியும் இந்த கொடுமை. அய்யகொ! என் தாய் மக்களே விழித்தெழுங்கள்!!!!!

    • என்னங்கடா இது கொடுமையா இருக்கு. குற்றவாளி யாருன்னு போலீஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பே முஸ்லிம்களின் மீது பலியை போடுகிறீர்கள். நாளைக்கு உங்கள் வீட்டில் குழந்தை பிறந்தால் கூட் முஸ்லிம் தீவிரவாதிகளின் சதிச் செயல் என்று கூப்பாடு போடுவீர்கள் போலிருக்கிறதே. வரும் சட்டமன்ற தேர்தலில் மண்ணை கவ்வப்போகிறோம் என்று தெரிந்து கொண்டு தேச பக்தியை குத்தகைக்கு எடுத்திருக்கும் காவிகள் இதை ஏன் செய்திருக்கக் கூடாது. மாற்றி யோசித்துப் பாருங்கள்.

  8. உள்ளாட்சி தேர்தலில் பாசக படுதோல்வி. அடுத்தமாதம் சட்டசபை தேர்தல். குண்டு வெடித்த இடம் பஜக அலுவலகம். குண்டு வெடிப்பு பஜக அலுவலகத்தில் நடத்தினால் ஆதாயம் பஜகவிற்கு. எதிரிக்கு ஆதாயம் கிடைப்பதை எந்த மடையனாவது விரும்புவானா. சோ இது RSSன் கைவன்னமாக ஏன் இருக்கக்கூடாது?

    • முதலில் படி. நான், நண்பர் திருவாளர் ஹரி அவர்கள் சொல்லித் தான் முஸ்லிம்களின் வேதத்தைப் படிக்க ஆரம்பித்தேன். இன்னும் முடியவில்லை. விளக்கங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சும்மாவாவது அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று இங்கு வந்து புலம்பிக் கொண்டிருக்காதீர்.

      • @Thamizh,

        I too support the cause of innocent muslims mistreated for mistakes of few terrorists. Muslims are good people and they deserve respect.

        BUT, at the same time, islam as an ideology is very irrelevant and irrational. the koran is full of violence and fairy tales. Don’t ask them explanations. They will never tell you the truth! Just read the translation like Yusuf Ali or Pickthal. aprom Thamizh Arabi ayira poguthu!

        • HisFeet ,

          “islam as an ideology is very irrelevant and irrational. the koran is full of violence and fairy tales. ”

          நான் இதுவரை குரானை படித்தவகையில் பெரிய ஆச்சரியம் என்னத் தெரியுமா? உங்களின் இயேசுவாகிய ஈசாவைப் பற்றி அதில் அதிகம் சொல்லியிருக்கிறது. மிகவும் புகழ்ந்து கூறியிருக்கிறது. ஆனால் நீங்களோ எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற தொனியில் அது கட்டுக்கதை என்று இட்டுக்கட்டிக் கூறுகிறீர்கள். கிருஸ்துவ மதத்திலிருந்து மாறியவர்கள் தானே இப்போது யூசுப் அலியாகவும், முகம்மது பிக்தாலாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி நீங்கள் சொல்லும் விஷயம் தெரியாமல் போனது. நான் தமிழ் மூலமாகத் தானே அரபி கற்றுக் கொள்ள முடியும்? ஆகவே நான் எப்போதும் தமிழாகத் தான் இருப்பேன். கவலைப்படாதீர்கள்.
          இன்னொரு விஷயம் – என்னிடம் புதிய ஏற்பாடு இருக்கிறது. புதிய ஏற்பாடு என்று ஒன்று இருக்கும் போது பழைய ஏற்பாடு என்று ஒன்று நிச்சயம் இருக்குமல்லவா? அது எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்களேன்.

          • @Thamizh,

            please understand that I am also from a very liberal background. I don’t care about what Koran says about Jesus or Mary. I only care about the human rights, equality for women, progressive nature and tolerance in Koran.

            If you want Old Testament, you can buy it from any Christian literature shop or stalls in Churches. And I tell you now itself, OT is much like Koran. Some cases even worse than Koran and some places better than Koran. It all depends. Because OT was written not by one author and in one geographical region or period of time like Koran. And I don’t believe in divine authorship of Bible too. I just use it to study about Jesus just like we use distorted history to learn about Buddha.

            To be frank, if anyone believes any scripture is 100% divine and 100% correct and relevant to today’s life, he is doomed. Most muslims believe this and Islam enforces this. That’s the problem I have with Islam. I have completed Bible course from a reputed seminary. They teach that “Bible is of human origin and we can’t take it literally. When science or facts contradict with Bible, then we should change Bible’s interpretation.”

            • தற்போதைய பாதர்மார்கள் தவறு செய்தால், இயேசுவின் போதனைகளை குற்றம் சொல்வீர்களா? அல்லது தவறு இழைக்கும் பாதர்களை குற்றம் சொல்வீர்களா? முகம்மது அவர்களின் கடைசி சொற்பொழிவு என்ற ஒன்று எனக்கு படிப்பதற்கு கிடைத்தது. அதில் நீங்கள் சொல்லும் மனித உரிமை, சமூகத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை, மற்றும் மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அனைத்து துறைகளிலும் எப்ப்டி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. ஆகையால் அவரின் போதனை தவறு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும். அதை பின்பற்றுவதாக பெயர் வைத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யும் தவறுக்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாகும்.
              மரியம் ஜமிலா என்ற இங்கிலாந்து பெண் பத்திரிக்கையாளர் (அவர் கிருத்துவத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்) கூறியதைப் பாருங்கள்: அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் முஸ்லீம்கள் வாழும் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பி வந்த பின் இவ்வாறு எழுதுகிறார்.”நல்லவேளை நான் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் முஸ்லிம்களைப் பார்த்தேன். முதலில் முஸ்லிம்களைப் பார்த்திருந்தால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பேனா என்பது சந்தேகம் தான். அந்த அளவிற்கு அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளில் இருந்து பிறழ்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் என்று இன்று கூறிக்கொள்பவர்கள் எல்லாம் மேற்கத்தியக் கோட்பாடுகளின் பால் விழுந்து கிடக்கிறார்கள்” என்று கூறுகிறார்.

              • sorry to say! I won’t blame Christ for mistakes of few pastors at the same time, I won’t give Muhammad the credit for those peace-loving muslims. I have read koran (attai to attai 7 times, various translations in Tamil and English). Even able to read some Arabic. But all saw was just mumbo-jumbos like Adam created from clay, Noah’s flood, flying horse, incorrect scientific details etc. Boss, Catholic church apologized to Galileo and it offically accepts (at least parts) of evolution. But Muslims will never do. There is no room in Islam for that.

    • vinoth

      ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்னு ஏசுகூடத்தான் சொல்லியிருக்காரு. அத வச்சி அமெரிக்காவையோ அல்லது கிறித்தவ நாடுகளையோ எடைபோட முடியுமா? அவ்வளவு ஏன் புத்தரின் போதனைகள வச்சி ராஜபக்சேவை எடைபோட முடியுமா.

  9. ஆமாம்! அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடந்த குண்டு வெடிப்புக்குக்கூட இந்துக்கள் தான் காரணம்!! சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த ஷியா சன்னி முஸ்லீம்களிடையே நடந்த குண்டுவெடிப்பு கூட காரணம் இந்துக்களாகத்தான் இருக்கும்!!!!!
    இன்று இராக்கில் குண்டு வெடித்து இருபதுக்கும் மேல் கொல்லப்பட்டார்கள். இது கூட இந்துக்களின் செயலாகத்தான் இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    சபாஷ் வினவு! இவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடித்து விட்டீர்களே!!! உங்களுக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!! உங்களோடு ஜால்ராப்போடுபவர்களுக்கும் சேர்த்துத்தான்!!!!!!!!!!!!

  10. ஈராக்கிலும் பாக்கிலும் குண்டு வெடிக்குது என்பதற்காக இந்தியாவிலும் குண்டு வெடிச்சா அது முஸ்லீம்தான் காரணமா? இப்படி வெட்டி ஒட்டலாம் என்றால் இப்படியும் வெட்டி ஒட்டலாம், ஈராக்கும் பாக்கும் முஸ்லீம்கள் பெரும்பான்மை உள்ள நாடுகள் எனவே அங்கு குண்டு வைப்பது முஸ்லீம். இந்தியா பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ள நாடு எனவே இங்கு குண்டு வைப்பது RSSதான்

    • அப்படியா மோனே?ஷியா சன்னி மாறி மாறி வெடிச்சு விளையாடுறாங்க..அதுக்கு யாறு மோனே காரணம்?

      • அப்பனே உனக்கு விசயமே தெரியாதா எல்லாவற்றிற்கும் அந்த பரம்பொருளே காரணம்.

  11. I am also telling the same thing. stand against religious extremism == stand agains Mus****. First read their history then you will came to know why siva sena has taken sword against those ****** *******

Leave a Reply to தமிழ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க