privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நீதியற்ற மோடியின் குஜராத்தில் ஒரு குடும்பமே தற்கொலை!

நீதியற்ற மோடியின் குஜராத்தில் ஒரு குடும்பமே தற்கொலை!

-

மிழ்நாட்டில ஜனநாயகமே இல்லை. சாதாரண மக்களுக்கு எந்த நாதியும் இல்லை. இந்த லோக்கல் கட்சிகளை எல்லாம் ஒழிச்சாத்தான் நமக்கு விமோச்சனம். காங்கிரஸ் ஊழலின் உருவம். தேசியக் கட்சியான, தேச பக்த கட்சியான பாரதீய ஜனதா கட்சியை, குஜராத்தில் முன்னுதாரண ஆட்சி நடத்திக் காட்டியிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியில அமர்த்தினாத்தான் நாடு உருப்படும்.” இது நரேந்திர மோடி ரசிகர்களின் அங்கலாய்ப்பு.

குஜராத்தில் என்ன நிலைமை என்று பார்ப்போம்.

35 ஆண்டுகளாக ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வந்த இடத்தை பிடுங்குவதற்காக மேட்டுக்குடி வர்க்கத்தினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அராஜகங்களை பின் வரும் கட்டுரை விவரிக்கிறது.

காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பா.ஜ.க. ஆண்டாலும் சரி, மாநிலத்தில் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி இன்றைய போலி ஜனநாயக அரசமைப்பில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்க வழியில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

35 ஆண்டு காலமாக வாழ்ந்த இருப்பிடம் அநியாயமாக பிடுங்கப்பட்ட அநீதியை எதிர்த்து ஒரு குடும்பமே கூட்டாக தற்கொலை செய்து கொண்டுள்ளது. மனதை நொறுக்கும் இந்த தற்கொலை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கோட்டில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது.

நேபாளத்தை சேர்ந்த மான்சிங் என்பவர் ராஜ்கோட்டிலுள்ள ரையாதர் பகுதியில் உள்ள சோட்டுநகர் கூட்டுறவு வீட்டு வசதி குடியிருப்பில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தவர். தங்கியிருந்து வேலை பார்ப்பதற்காக, குடியிருப்பு சங்கத்தினால் அவருக்கு 1978 ஆம் ஆண்டு 900 சதுரஅடி இடம் வழங்கப்பட்டுள்ளது. மான்சிங் அந்த இடத்தில் சிறிய வீடு கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் 35 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

6 வருடங்களுக்கு முன் மான்சிங் காலமானார். அதற்கு பிறகு அங்கு தொடர்ந்து வசித்துவந்த குடும்பத்தினரை வீட்டை விட்டு உடனே காலி செய்யவேண்டும் என்று சோட்டுநகர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டது; அதை ஏற்றுக் கொள்ளாத மான் சிங் குடும்பத்தினருக்கு மின்சார இணைப்பை வெட்டுவது, தண்ணீர் தர மறுப்பது என்று பல தொல்லைகளை அளித்திருக்கின்றனர்.

2012 மே மாதம் சோட்டுநகர் வீட்டு வசதி சங்கம், மான்சிங் குடும்பம் ஒதுக்கப்பட்ட இடத்தைவிட அதிக அளவு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக ராஜ்கோட் நகராட்சிக்கு பொய் புகார் அனுப்பியது. நகரட்சி மான் சிங் குடும்பத்துக்கு இடத்தை விட்டு வெளியேறக்கோரி நோட்டீஸ் அனுப்பியது.

மான்சிங் குடும்பத்தினர் இடத்தை விட்டு உடனே வெளியேறவில்லை என்றால், அவர்களது வீடு ஏழு நாட்களுக்குள் தரைமட்டமாக்கப்படும் என்று மேலும் ஒரு நோட்டீஸில் ஆகஸ்ட் மாதம் பீதியூட்டப்பட்டது. ‘1978-ல் மான் சிங்கிற்கு வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் வழங்கி கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் வசித்து வரும் இடம் தங்களுக்கே உரிமையானது’ என்று மான்சிங்கின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

self-immolation-2ஏப்ரல் 2 ஆம் தேதி நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அதை அறிந்த குடும்பத்தினர், இதற்கு மேலும் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது என்ற விரக்தியோடு ராஜ்கோட் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணைய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மான் சிங்கின் மகன் பரத் (40), அவரது மனைவி ஆஷா (35), மான் சிங்கின் இளைய மகன் கிரீஷ் (27) ஆகிய மூவரும் சம்பவத்தன்றே உயிரிழந்தனர். மான்சிங்கின் மனைவி வசுமதி (60), மகன் மகேந்திராவின் மனைவி ரேகா (35) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு இறந்து விட்டனர்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய கிரீஷின் மனைவி கௌரி, ‘வீட்டு வசதி சங்கத்தினரும் அப்பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகளும், மான் சிங்கின் குடும்பத்தை தொல்லைகளுக்கும், வேதனைக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கி வந்தனர்’ என்றும். ‘குடியிருக்கும் இடத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், வேறு வழியின்றி உயிரை விடத் துணிந்தோம்’ என்று கூறினார்.

இந்த குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு வீட்டு வசதி சங்கத்துடன் சேர்ந்து தொல்லை தந்த ஆளும் பி.ஜே.பி. கட்சி பிரமுகர்கள், தற்கொலை சாவுகளுக்கு பிறகு முதலை கண்ணீர் விட்டு, மாநகராட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பொய் வேடமிட்டு வருகின்றனர். கிரீஷின் மரண வாக்குமூலத்தில் அவரது குடும்பத்தை, பி.ஜே.பி. கவுன்சிலர்கள் ராஜ்பா ஜாலாவும், கமலேஷ் மிரானியும் சோட்டு நகர் கூட்டுறவு வீட்டு வாரிய சங்க உறுப்பினர்களுடன் சேர்ந்து மிரட்டியதாக கூறியுள்ளார்.

தீக்குளிப்புகாங்கிரஸ் கட்சி எம்.பி.யும், தேசிய மனித உரிமை கமிஷன் உறுப்பினருமான ராஜு பர்மர், மான் சிங் குடும்பத்தினருக்கு, நஷ்டஈடு தந்து அனுதாபங்கள் தெரிவிக்க சென்றிருக்கிறார். இறந்துபோன பரத்தின் மூத்த மகள் மது அவர் கொடுக்க வந்த காசோலையை ஏற்க மறுத்து, “எங்களுக்கு முன்பே உதவ ஏன் முன்வரவில்லை?” என்று விரட்டியிருக்கிறார். போலீசையும், மாநகராட்சியையும் பலமுறை அணுகியும் யாரும் உதவவில்லை என்றும், தந்தையும், தாயும், உறவினர்களும் நெருப்பில் எரியும் போதும் அவர்களை காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லை என்றும் புலம்பி அழுது இருக்கிறாள் அந்தப் பெண்.

‘சோட்டு நகர் கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினர், அவர்கள் வீட்டிற்கு வரும் மின்சாரத்தை தடை செய்து, குழந்தைகள் தெரு விளக்கின் ஒளியில் படிக்க வேண்டியது ஏற்பட்டது’ என்றும், ‘தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தினர்’ என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராம் சிங் குடும்பத்தினர் நியாயம் கிடைக்கும் வரையில் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்துள்ளனர். அவர்களுக்கு நீதிகிடைக்க உதவுவதாக அதிகாரிகள் வாக்குறுதி வழங்கிய பின்னரே சடலங்களை பெற்று சென்றுள்ளனர்.

வழக்கம் போல போலீஸார் குற்றச்சாட்டுகள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குற்றவாளிகளை கைவசம் வைத்துகொண்டே, குடும்பத்தினரை இந்நிலைக்கு ஆளாக்கிய அயோக்கியர்களை பிடித்தே தீருவோம் என்று முழங்கிவருகிறார் ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் பி. சிங். குடியிருப்பில் வசிக்கும் துஷ்யந்த் தனக், ஹரேஷ் வஜா, மற்றும் ஜெயந்தி டோலாக்கியா ஆகிய மூவரை பெயருக்கு கைது செய்துள்ளனர்.

சோட்டுநகர் போன்ற குடியிருப்புகள் பணம் சேர்க்க முடிகின்ற நடுத்தர வர்க்கத்தினரை தனித் தீவுகளாக வாழ வைப்பதற்காக அமைக்கப்பட்டவை. மான் சிங்கின் மறைவிற்கு பின், அவருடைய செக்யூரிட்டி வேலையை அவர் குடும்பத்தினர் யாரும் செய்யவில்லை எனினும் அவரது குடும்பத்தினர் அந்த பகுதியின் அங்கத்தினராகவே வாழ்ந்து வந்துள்ளனர். பணக்காரர்கள் வாழும் இடத்தில் அவர்கள் குடியிருப்பதை கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினாலும், பிற குடியிருப்பவர்களாலும் ஏற்க முடியவில்லை. அவர்களை வெளியேற்றும் நோக்கில் அந்தப் பகுதியில் செல்வாக்கு பெற்ற அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இறுதியாக சட்டரீதியாக தாக்குதல் நடத்தி வெளியேற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

பணம் படைத்தவர்களுக்குத்தான் வாழும் உரிமை என்ற இந்த சமூக அமைப்பில் உழைத்து வாழும் ஏழைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மோடியின் குஜராத் இதற்கு விதிவிலக்கு அல்ல.

மேலும் படிக்க
Fearing eviction, 5 of family set selves afire
Family self-immolation: Family agree to take bodies for cremation
NHRC member visits grieving family in Rajkot with aid

  1. இது இன்னம் கொஞ்சம் புலனாய்வு தேவைப்படும் விஷ்யம் போல உள்ளது…

    காவலாளி பணிக்கு குடியிருப்பு ஒதுக்கப்பட்டால், அது காவல் பணி செய்ய வசதியாக வேலை இருக்கும் இடத்திற்கு அருகில் கொடுக்கப்படும். பணி முடிந்து அடுத்த காவலர் வரும்போது அவருக்கு கொடுக்கபடவேண்டும், கலக்டர் பங்களா முதல் குடியரசு தலைவர் மாளிகை வரை இதற்கு எண்ணிறைந்த எடுத்துகாட்டு உண்டு.

    இத்தனை ஆண்டு குடியிருந்ததால் வீடு எங்களுக்குதான் என வேலை செய்பவர் கேட்க முடியாது. வீட்டை காலி செய்ய கோரும் உரிமை வீடு கொடுத்தவர்க்கு உண்டு.

    இந்த விஷயத்தில் காவலரே காலியிடத்தில் வீடு கட்டி குடியிருப்பதால் , வீட்டிற்கான மதிப்பை தருமாறு கேட்கலாம். ஆனால் காலிசெய்யமாடேன் என கூற முடியாது. இது ஒரு தீர்வு,

    அப்படி அந்த வீடு அவசியம் என நினைத்தால் காவலர் மறைவுக்கு பின் வீட்டில் வேறு யாராவது அந்த வேலையை செய்து இருக்கலாம். இது ஒரு தீர்வு,

    சங்கத்தில் பேசி இடத்திற்கான விலையை கொடுத்து வீட்டை சொந்தமாக்கி இருக்கலாம். இது இன்னொறு தீர்வு.

    //பணக்காரர்கள் வாழும் இடத்தில் அவர்கள் குடியிருப்பதை கூட்டுறவு குடியிருப்பு சங்கத்தினாலும், பிற குடியிருப்பவர்களாலும் ஏற்க முடியவில்லை. //

    35 ஆண்டுகளாக அவர்கள் பணக்காரகளாகவா இருந்தார்கள் ? ஏற்க இயலாத வாதம். கட்டுரையை மட்டும் வைத்து பார்த்தால் காவலர் இறந்தவுடன் இடத்தை வீட்டை சங்கத்திற்கு எந்த விலையும் தராமல் குடியிருந்த அனுபவ பாத்தியத்தை மட்டும் வைத்து அபகரிக்க திட்டமிட்டனர் என கொள்ளலாம். முடிவெடுக்கு முன் தகுந்த புலனாய்வு தேவை.

    தரமான கட்டுரைகள் இடம்பெறும் வினவில் ஏன் இப்படிபட்ட படைப்புக்கள் ?

    எழை என்பதால் எது செய்தாலும் சரி என ஆகிவிடாது.

  2. 2012 மே மாதம் சோட்டுநகர் வீட்டு வசதி சங்கம், மான்சிங் குடும்பம் ஒதுக்கப்பட்ட இடத்தைவிட அதிக அளவு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக ராஜ்கோட் நகராட்சிக்கு பொய் புகார் அனுப்பியது. நகரட்சி மான் சிங் குடும்பத்துக்கு இடத்தை விட்டு வெளியேறக்கோரி நோட்டீஸ் அனுப்பியது.வினோத் இது உஙக கண்ணுக்கு தெரியவில்லையா

    • //6 வருடங்களுக்கு முன் மான்சிங் காலமானார். அதற்கு பிறகு அங்கு தொடர்ந்து வசித்துவந்த குடும்பத்தினரை வீட்டை விட்டு உடனே காலி செய்யவேண்டும் என்று சோட்டுநகர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் உத்தரவிட்டது;//

      இது உங்க கண்ணுக்கு தெரியவில்லையா சிவக்குமார்?

      // அதை ஏற்றுக் கொள்ளாத மான் சிங் குடும்பத்தினருக்கு மின்சார இணைப்பை வெட்டுவது, தண்ணீர் தர மறுப்பது என்று பல தொல்லைகளை அளித்திருக்கின்றனர்.//

      மாநகராட்சியிடம் சங்கம் பொய்புகார் கொடுத்தன்னுனே வைச்சுக்குவோம்… நியாயமா சொன்னப்ப என்ன பண்ணினாங்க?

      இதாவது உங்க கண்ணுக்கு தெரியுதா? ஆறு வருடம்னா 2013-6 2007 ஆக இருக்கலாம். 2007ல் காலி செய்யவேண்டிய வீட்டை 2012 வரை ஆக்ரமிப்பது எப்படி சரியாகும்?

      இதில் மோடி எங்க வந்தார் ? மோடி ஆட்சி பண்ணினா ஆக்ரமிப்பாளர்களை அகற்ற கூடாதா? இதை சரின்னு சொன்னா உங்க வீட்டை அல்லது கடையை யாரும் இப்படி ஆக்ரமிச்சா அவங்க சொல்லுறது சரின்னு விட்டுடுவீங்களா?

      இதை சரின்னு சொல்லீட்டா சென்னை பெங்களுருன்னு மாநகரங்களில் ஆக்ரமிப்ப சுலபம பண்ணலாம் அது உங்களுக்கு சரியோ ?

      இடம் ஆனை விலை குதிரை விலை விற்கும் இடங்களில் திருப்பூரும் ஒன்று நகர மத்தியில் செண்ட் விலை 20 லட்சத்தை தாண்டி பலகாலம் ஆகிவிட்டது. கிரவுண்ட் கோடிக்கு மேல்.

      இங்கெ நொய்யல் ஆறு நகர மத்தியில் இருக்குது. அதில் ஆக்கிரமிப்பில் ஆற்றையே உண்மையில் காணொம். இரண்டு கரையிலும் கட்டப்பட வீடுகள் நெருங்கி வந்து ஆறுங்கிறது 2 அடி அளவு சாக்கடையாக ஓடுது.

      இந்த நிலையில் 2009-2010ம் ஆண்டு வளம்ன்னு ஒரு தனியார் அமைப்பு திருப்பூரின் உள்கட்டமைப்பய் மேம்படுத்தியது. 2 ஆற்று பாலம் ரோடுகள் எல்லாம் அதன் சார்பில் போடப்பட்டது. ஆற்றை சுத்தபடுத்தி 2011ம் வருட காணும் பொங்கலை ஆற்றங்கரையில் கொண்டாட முடிவு செய்து சுத்தப்படுத்தும்போது ஆக்ரமிப்பாளர்களிடம் கடும் எதிர்ப்பு வந்தது.

      தனியார் அமைப்பு மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்ரமிப்பு இடத்துக்கு பதில் வேறு இடம் தருகிறோம் என்றதும் 1 குடும்பம் தவிர அனைவரும் ஒப்புகொண்டனர். அந்த குடும்பம் முஸ்லீம் குடும்பம் ஆகும். அவர்கள் மட்டும் வீட்டை காலிசெய்ய முடியாது என உறுதியுடன் இருந்தனர். மீறி காலிசெய்தால் குடும்பத்தினர் அனவரும் கலக்டர் அலுவலத்தில் விஷமருந்துவோம் என கூறினர். எனவே கலக்டரும் இது மத பிரச்சனையாகிவுடும் எனவே இப்படே விட்டு விடுங்கள் என கூறிவிட்டர்.

      2011 செப்டம்பர் மாதம் 2ம் தேதி நொய்யல் நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. ஏதோ தடுபணைகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு நிற்க 3 நாள் ஆனது. வெள்ளபெருக்கில் பலகோடி சேதம் ஏற்பட்டது. பலர் பலியாயினர். அதில் இந்த குடும்பம் மொத்தமாக 5 பேரும் பலியானது. பலியான்வர்களுக்கு 2 லட்சம் நட்ட ஈடு அறிவிக்கபட்டது ஆனால் 10 லட்சம் நட்ட ஈட்டடை வாங்க கூட யாரும் இல்லை.

      இப்படி ஆக்ரமிப்பு கதைகள் பல சொல்லலாம். ஆக்ரமிப்பு சரியா என்பது தான் என் கேள்வி, சரியற்ற விஷ்யத்தை உயர்த்த கட்டுரை ஏன் ?

      இந்த கட்டுரை ஆக்ரமிப்பினால் ஏற்படும் பாதிப்பு பற்றி கூறியிருந்தால் சரியான இருந்திருக்கும்.

      • ஓ.கே. ஆற்றை ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். நேற்றைக்கு வந்து இன்றைக்கு வீட்டை கட்டவில்லையே? அவர்கள் அங்கு வந்த பிறகு எத்தனை தேர்தல் வந்து விட்டது. ஓட்டு கேட்க எல்லா கட்சி நாய்களும் அங்கு போனதல்லவா? அப்போது ஆக்கிரமிப்பு என்று தெரியவில்லையா? சரி இப்போது அவர்களை வெளியேற்றுவோம். அவர்களை எங்கே அனுப்புவது? பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கு அனுப்பி விடலாமா? அல்லது ராஜபக்ஷ்யேவின் இலங்கைக்கு அனுப்பிவிடலாமா? என்னமோ இவர்கள் அம்பானி மாதிரி 22 மாடி கட்டியது போல் பேச வந்திட்டீரே. (அவருடைய மாளிகையும் முஸ்லிம்களின் வக்ப் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியது தான் தெரியுமா உங்களுக்கு)
        ஆக்கிரமிப்பு தவறென்று ஒத்துக்கொள்வோம். இந்த அரசாங்கம் அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமையான் இருப்பிடத்திற்கு – இந்த பாவப்பட்ட மக்களுக்கு என்ன செய்யப்போகிறது? அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறது?

        • // சரி இப்போது அவர்களை வெளியேற்றுவோம். அவர்களை எங்கே அனுப்புவது?//

          //ஆக்ரமிப்பு இடத்துக்கு பதில் வேறு இடம் தருகிறோம் என்றதும் …..// வேறு இடம் தருகிறொம் என்று கூறிய பிறகும் தான் இடம் மாறவில்லை.

          //இந்த அரசாங்கம் அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமையான் இருப்பிடத்திற்கு – இந்த பாவப்பட்ட மக்களுக்கு என்ன செய்யப்போகிறது? அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறது?//

          எப்பவாவதூ இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படுவதையும் , வீடு தேவைப்படும் மக்களீன் எண்ணிக்கையையும் கணக்கிடு பார்த்தால் எதுவும் செய்யவில்லை என்றே கொள்ளலாம்.

          ஆனால் இப்பொது இருப்பதை நீங்கள் அரசு என நினைப்பதால் தான் உங்களுக்கு இத்தனை வருத்தம்… உண்மையில் அரசு என்பது மக்களை பாதுகாக்க வேண்டும்….

          நடைமுறையில் நாடு என்பது ஒரு வேட்டை காடு. மக்கள் விலங்குகள். அரசு என்பது வேட்டைகாரர்கள். இப்படி வைத்து பாருங்கள். மிருகங்களிடம் உங்களை வேட்டையடித்தான் நான் வாழவேண்டும் நீங்களாக வந்து சாகுங்கள் என்றால் வருமா?

          அதற்கு பதில் காட்டை பாதுகாக்கிறோம் மிருகங்களை பாதுகாக்கிறோம் என்று கூறி, பாதுகாப்பு காரணங்களுக்காக தேவயான வசுல் வேட்டையை வேட்டைகாரர்கள் செய்கிறார்கள்.

          இங்கு ஒவ்வொன்றாக் பொருத்தினால் எல்லாம் பொருந்தி வரும்…

          இப்படி இருப்பதை அரசு என்று அவர்கள் சொல்லுவார்கள் சொன்னால் தான் அவர்ளின் பிழைப்பு ஓடும். நாமும் நம்பவேண்டுமா என்ன ?

          • சரி. இப்போது நீங்களே எல்லாவற்றையும் ஒத்துக்கொள்கிறீர்கள். இந்த ஜனநாயக அரசு சரியில்லை என்கிறீர்கள். இதற்கு மாற்றுவழி என்ன? அதையும் சொல்லுங்கள். அவர்கள் அப்படி செயல்படுவதால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

  3. சரியான வழிகாட்டல் இல்லாமல் நடந்தேரி விட்ட ஒருநிகல்வு.ஒரு வேலை வழிகாட்டுதலை பெற்று முறைபடி அனுகி இருந்தாலும் பெரிதாக மாற்றம் இருந்திருக்க சாத்தியம் இல்லை. குஜராத் இனபடு கொலை நடந்த போது மோடி கூறிய கருத்து என்னவென்று நாம் அறிவோம். கலவரதின் போது இஃக்சான் ஜாஃப்ரி என்ற MPக்கும் அவரிடம் அடைக்கலம் பெற்ற 40கும் மேற்பட்ட இசுலாமியர்கலி்ன் நிலையும் மறக்க முடியது.MPயும் மற்றவர்களும் எறித்து சாம்பல் ஆக்கபட்டனர்.MPன்நிலையே இப்படி என்றால் கடைசி குடிமக்களான இவரை போன்றோறின்நிலை பற்றி சொல்ல தேவை இல்லை.நரேந்திர மோடி போன்ற இன வெறியர்கள் பதவிகளை விட்டும் துடைத்தெறியப்படாத வரை இது போன்ற அல்ல இன்னும் பல மடங்கு பெறிய நிகழ்வுகள் தடுக்க முடியாததாகை இல்லை….இல்லை…. தவிற்க முடியாததாக மாறி விடும். காரணம், அரசனெவ்வழியோ மக்களும் அவ்வழியே!!!.தலைமை மாற்ற படாதவரை குடிமக்களின் நிலை மாறப்போவது இல்லை…

      • ///கலவரம் பற்றிய முழுவிபரம் எங்கே கிடைக்கும் ?///

        குஜராத் கலவரத்தை பற்றியா கேட்கிறீர்கள் வினோத்?

        இது ‘என்னது காந்திய சுட்டுட்டாங்களா’ என்பது போல் உள்ளது.
        இன்கு வினவில் பல கட்டுரைகள் இருக்கின்றன, தெகல்கா குஜராத் கலவரம் பற்றி பல உண்மைகளை வெளிக் கொணர்ந்திருக்கிறது, தேடிப்பார்க்கவும்.

      • என்றைக்கு இம்ப்போர்ட் ஆனீர்கள் இந்தியாவிற்கு? அதுவும் தமிழ்நாட்டிற்கு?
        எங்களையெல்லாம் திருவாளர். பாக்கியராஜ் படத்தில் வரும் அதிர்ச்சி பைத்தியம் ஆக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறீர்களா? பெருமாள் விடுமுறையில் போயிருப்பதால் அந்த இடத்தை உங்களை விட்டு நிரப்பச் சொல்லியிருக்கிறாரா?

  4. சரியாக சொன்னீர்கள்…எண்கள் கட்சியான காங்கிரசு ஆளும் மாநிலங்களில் தரமாக நீதி வழங்கப்படுகிறது..மதசார்பற்ற எங்களை ஆதரியுங்கள்

  5. பாவம் வெய்ய காலம் வேற…ரொம்ப அதிகமாகிடுச்சு போல…பரவாயில்ல வினவு மாத்திரை தவறாமல் சாப்பிட்டால் சரியாகிடும் ஆனா மாத்திரைகள் என்பதே பன்னாட்டு மொதலாளிகள் தயாரிப்பதால் உங்களுக்கு கொடுக்க முடியாதே?

  6. உண்மைதான்….பிற மாநிலங்களில் மனுநீதி சோழர்கள் ஆட்சி செய்வதால் தரமான நீதி சுடச்சுட கிடைக்கிறது

  7. இந்தியாவிலேயே நீதி இல்லை. இந்தியாவில் நீதி கிடைக்க வாழ்நாள் முழுவதும் நீதிமன்ற வாசலில் அலைய வேண்டி உள்ளது. சும்மா மோடியை மட்டும் குறை சொல்லி என்ன பயன்.

    நீதி துறை முழுமையாக செப்பனிடப்பட வேண்டும்.

    • ஏம்ப்பா ராமன் முன்னால காப்புரிமைக்கு வக்காலத்து வாங்குன இங்கன நீதியப் பத்தி பேசுற. உங்களுக்கு எல்லாம் வெக்கமே இருக்காதா.

      • அடுத்தவன் உழைப்பை திருட நினைக்கும் கூட்டம் தானே வெட்கப்பட வேண்டும் ? நீங்களே வெட்கப்படவில்லை

  8. சரி உங்கள் பார்வையில் நீதி என்றால் என்ன?பொதுமக்கள் மத்தியில் தூக்கில் போடுவதா(சோவியத் சீனா பாணியில்)

  9. நீதியுள்ள உ.பி பீகார் ஜார்கண்ட் ஒரிஸா ஆகியவற்றுக்கு இணையாக குஜராத் இல்லைதான்…

    • ஏம்பா அங்கெல்லாம் நீதி தெருவெல்லாம் நிரம்பி வழிகிறது தெரியாதா?ஒரு மணியடிச்சா போதும் குற்றவாளிக்கு தூக்குதான்

Leave a Reply to மைக்மோகன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க