Friday, August 12, 2022
முகப்பு செய்தி எம்.ஆர்.காந்தி தாக்குதல்: பாஜகவின் தேர்தல் ஒத்திகை!

எம்.ஆர்.காந்தி தாக்குதல்: பாஜகவின் தேர்தல் ஒத்திகை!

-

எம்.ஆர்.காந்தி
எம்.ஆர்.காந்தி

குமரி மாவட்டத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த எம் ஆர் காந்தி தாக்கப்பட்டதை வைத்து ஒரு பெரும் வன்முறையை கட்டவிழ்க்க ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது. ஆங்காங்கே மதவெறித் தீயை ஊதி விட்டுள்ளனர். மக்கள் அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போய் கிடக்கின்றனர். எந்நேரமும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தோர் தாக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

எம்.ஆர்.காந்தி பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கும் பொன். இராதாகிருஷ்ணனால் ஓரங்கட்டப்பட்டவர். இது வரை நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் நாகர்கோவில் தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணனே போட்டியிட்டுள்ளார். ஒரு முறை தவிர்த்து மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் பா.ஜ.கவின் மதவெறி அரசியல் தந்திரம் அங்கு பலிக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போது எம் ஆர் காந்தி ஆதரவாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொன். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நாகர்கோவில் வீதியெங்கும் போஸ்டர்கள் முளைத்தன.

பாராளுமன்ற தேர்தலை மிக அணுக்கமாக அனைத்து கட்சிகளும் உணரும் நிலையில், எம்.ஆர். காந்தியை 2014ல் நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட வைக்க அவரது ஆதரவாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். காங்கிரஸ் — திமுக கூட்டணி உடைந்துள்ள நிலையில் தமது வெற்றி எளிதாக இருக்கும் என்று இந்து மதவெறி கூட்டத்தின் அனைத்து தரப்பும் நாக்கில் எச்சில் ஒழுகக் காத்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தான் எம்.ஆர். காந்தியை அங்ககீனப்படுத்தும் இந்த முயற்சி அரங்கேறி உள்ளது.

வழக்கம் போல முஸ்லிம்கள் மீதோ அல்லது குமரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்கள் மீதோ, இல்லை முசுலீம்கள் மீதோ பழியை போட்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. உட்கட்சி மோதல் அரசியலில் தான் தி.மு.க.வின் தா. கிருட்டிணன் காலை நடை சென்ற போது கொல்லப்பட்டார். எம்.ஆர். காந்தி தாக்குதல் சம்பவமும் தா.கிருட்டிணன் கொலைச் சம்பவத்தையே பெரிதும் ஒத்திருக்கிறது.

கடையடைப்புஎம் ஆர் காந்தி தாக்கப்பட்டதை வைத்து பாரதீய ஜனதா கட்சி 22-ம் தேதி திங்கள் கிழமை குமரி மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி ஞாயிறு மாலையும், திங்கள் காலையிலும் பஸ்கள் மீது பாஜ குண்டர்கள் கல்வீச்சு நடத்தினர். மாவட்டம் முழுவதும் 50 பஸ்கள் உடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்கள், கல்லூரி பஸ்களும், வேன்களும் கல்வீச்சில் சேதம் அடைந்தன. குளச்சல் அருகே பஸ் மீது கல் வீசப்பட்டதில், டிரைவர் ராபர்ட் கிங்ஸ்லி என்பவர் படுகாயம் அடைந்தார்.

இத்தகைய வன்முறை செயல்களுக்கு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 850 போலீசார் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வழக்கம் போல எரியும் தீயில் குளிர் காய்வதற்கு தயாராகி விட்டனர் பாஜ கட்சியினர். தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் எம்.ஆர்.காந்தி மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார். பா.ஜ. தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இல.கணேசன் “நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். மத பின்னணி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்’ என்கிறார்.

இல கணேசன்
இல கணேசன்

குமரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மத பயங்கரவாதத்தை உரம் போட்டு வளர்த்து வரும் இந்துத்துவா கும்பல் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதை வாக்குகளாக அறுவடை செய்யத் தயாராகிறது. சச்சரவுகளை ஊதிப் பெருக்கி, வன்முறை சம்பவங்களை உற்பத்தி செய்து, கலவரங்களை தூண்டி விட்டு இந்துக்களின் மனதிலும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் மனதிலும் அச்சத்தை உருவாக்கும் வேலையை செய்து வருகிறது.

இதே போல கோவை மாவட்டத்திலும் கோவையை ஒட்டிய குன்னூர் பகுதிகளிலும் வன்முறை சம்பவங்களையும் தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகின்றன இந்துத்துவ அமைப்புகள். கோவையில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தகராறு செய்வது, முஸ்லீம்கள் மீது வெறுப்பை உமிழும் பிரசுரங்களை வெளியிட்டு வினியோகிப்பது, கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக பொய் பிரச்சாரம் செய்வது, விநாயகர் ஊர்வலம் மூலம் பதட்டத்தை உருவாக்குவது என்று பல ஆண்டுகளாக நாடு முழுவதும் செய்து தேர்ந்த உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வன்முறை சம்பவங்கள், பதட்டம், கடையடைப்பு இவற்றின் மூலம் மக்கள் மனதில் பயத்தைத் தூண்டி விட்டு, தமது இந்து வாக்கு வங்கியை ஊதிப் பெருக்கி காட்டி கூட்டணி பேரம் பேசுவதற்கும், பேரம் படியா விட்டால் சில ஆயிரம் ஓட்டுக்களை பொறுக்குவதற்கும், மக்களை பிளவுபடுத்தும் இந்த கேவலமான தேசவிரோத செயலை செய்து வருகின்றன பாஜகவும் மற்ற இந்துத்துவ அமைப்புகளும்.

உழைக்கும் மக்கள் அனைவரும் நாட்டு மக்களை மதம் என்ற பெயரில் இரண்டாக பிளந்து போடும் இந்த தேச விரோத, பார்ப்பன பாசிச பயங்கரவாத கும்பலின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் அவர்களை வேரறுக்க வேண்டும்.

மேலும் படிக்க
பாஜ நிர்வாகி மீது தாக்குதலை கண்டித்து குமரியில் கடையடைப்பு கல்வீச்சில் 50 பஸ் சேதம்

 1. வெட்டு குத்தெல்லாம் மாவோ கம்யூனிஸ்ட்களின் வேலையாச்சே. அதையே பி.ஜே.பிகாரனும் செஞ்சா உங்களுக்கு கோபம் வரத் தானே செய்யும். புரட்சிக்கு ஒரு மட்டு மரியாதை வேணாம். ஆயுதபாணி தீவிரவாதிகளுக்கே மரியாதை இல்லாம்ம போச்சே.

  • ஆமா அமைதி புறா அண்ணே,
   பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் கலவரம், குஜராத் கலவரம், மண்டைகாடு கலவரம் இதையெல்லாம் மவோயிஸ்டு தான் பிஜேபிகாரன் போல வேஷம் போட்டுகிட்டு செஞ்சான்னு அப்பிடிங்கிர உண்மையை ஏன்ண்ண சொல்லல. பீ ஜேபி காரன் இருக்கிறத இந்த கலவரத்த வச்சி தானே மக்களுக்கு தெரியும்

 2. எம்.ஆர். காந்தி ஏற்கனவே பொன். ராதாகிருஷ்ணனால் அரசியல் கொலை செய்யப்பட்டவர். மீண்டும் எம்.ஆர் காந்தி அரசியல் பிரவேசம் செய்வதை தடுக்கும் உத்தியாக இந்த தாக்குதல் அவர் மீது பாய்ந்துள்ளது. ஒரு சராசரி இந்து பார்வையில் இந்த சம்பவத்துக்கு ஒரு முஸ்லிமோ கிறிஸ்தவனோ தான் காரணம் என்று ‘இயல்பாக’ சிந்திப்பதே ஆர்.எஸ்.எஸின் பலம். இத்தாக்குதல் சம்பவத்தின் மூலம் பொன். ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்துள்ளதோடு தனது சித்தாந்தத்துக்கும் பெரிய ஆதாயத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

  ஊடகங்கள் ராமதாஸை அம்பலப்படுத்துவது போன்று ஆர்.எஸ்.எஸை அம்பலப்படுத்த தயங்குகின்றன. இந்த கருணாநிதியை பார்க்க இப்போது பயமாக இருக்கிறது. கலைஞர் நியூசின் செய்தியாளர்கள் மோடிக்கும், பா.ஜ.க தொடர்பான செய்திகளுக்கும் பெரும் முக்கியத்துவம் அளிப்பதை பார்க்க கேவலமாக இருக்கிறது.

 3. உமக்கு வந்தால் அது ரத்தம்…ஒரு இந்துவிற்க்கு வந்தால் அது தக்காளி சட்னியா???

  இது போல் தமிழகமெங்கும் நடந்து கொண்டு தான் உள்ளது..

  • தமிழகம் முழவதும் இது ஒரு போலப்பாவே செய்கிறீர்களா. இப்படி எல்லாம் அரசியல் செய்ய இதற்கு பேசமா மோடி கையில் இருக்கும் நீள பைப்பை பிடிச்சுக்கிட் தொங்கலாம் பையா

   • ஆமாய்யா இதுவே ஒரு சிகப்பு சட்டக்காரணுக்கோ, வெள்ளை பைஜாமாக்காரணுக்கோ வந்திருந்தால், இந்தக்கட்டுரை எப்படி இருக்கும் தெரியுமா….
    அராஜகம், காவி குண்டர்களின் ரவிடியிசம்…….இந்துத் தீவிரவாதம்(இல்லாத)

    ஆனால் ஒரு பாஜாக்காக் காரன யாராவது வெட்டுனா…அது நடிப்பா…பாஜாக்கா என்ன திமூகா போல பெரிய கட்சியா பதவிக்காக கொலசெய்ய????(த கி, பொட்டு சுரேஸ் ரேஞ்சுக்கு)

    இல்ல இந்த வயசான காலத்துல அவர்நடிச்சு, குமரியில என்ன ஜெயிக்கவா போரார்…

    • பையா, எம்.ஆர்.காந்தி படுத்திருக்கும் படத்தில் தலையில் ஒரு தொப்பி மாதிரி ஒன்று அணிந்திருக்கிறார். இடுப்பு வரை துணியில்லாமல் பிறகு ஒரு பச்சைப் போர்வை போர்த்தியிருக்கிறார். கழுத்து, நெஞ்சு, இடுப்பு, கை முதலான எந்த பாகத்திலும் ஒரு காயம், அடி, பாண்டேஜ் கூட இல்லையே? குறைந்த பட்சம் ஒரு பிளாஸ்திரி கூட இல்லையே? தாக்க வந்தவர்கள் இவ்வளவு ஆபத்தில்லாமலா தாக்கியிருப்பார்கள். இல்லை ஜீக்கள் போட்ட திரைக்கதையில் லாஜிக் மீறலா? ஒருவரை அடிபட்டதாகக்கூட ஒழுங்காக காட்ட முடியவில்லை, இவ்வ்வளவுதானா உங்களது சாமர்த்தியம்?

     பிறகு இந்து இந்துன்னு அடிக்கடி கூட்டம் சேர்க்க முயல்கிறீர்களே, அந்த இந்துன்னா யார்? அதில் யாரெல்லாம் சேர்த்தி? ஆர்.எஸ்.எஸ் சங்க ஜாலக், கார்யவாஹ், பிரச்சாரக் இன்னபிற பதவிகளில் வீற்றிருக்கும் அம்பிஜீக்களின் குடும்பத்தில் ஏதாவது தாழ்த்தப்பட்ட ஸ்வயம் சேவக் வீட்டிலிருந்து பையனை தெரிவு செய்து திருமணம் முடித்திருக்கிறீர்களா? அப்படி ஒரு அழைப்பிதழையாவது உங்களை காட்ட முடியுமா? இல்லை எனில் பிறகு ஏன் இந்து இந்துன்னு ஜந்து மாதிரி புலம்புகிறீர்கள்? அக்ரகாரத்து கட்சின்னோ, அவாள் கட்சின்னோ, இல்லை ஆதிக்க சாதி கட்சின்னோ சொன்னா அதுல ஒரு நியாயம் உண்டு. மாறாக இந்து இந்து, இந்துக்களெல்லாம் ஒண்ணுன்னு பொய் சொன்னால் வாய்க்கு போஜனம் கிடைக்காது.

     • அது சரி வயசான் ஆளு ஓங்கி ஒரு அடி அடிச்சா போய்ச்சேர்ந்துருவார்ன்னு நினைத்திருக்காலாம், அவர் தாக்கப்பட்டபோது பொது மக்களும் அவ்ரை விரைவாக காப்பற்றீயிருக்கிறார்கள்…சார்..பொண்ணு எடுக்கிறது அவனவ்ன் சொந்த விருப்பம், அழகிரி தாழ்த்தப்பட்டவ்ர் வீட்டீல் பொண்னெடுத்தவர் தானே…(அவங்கப்பாவ மாதிரி ந்டிக்காத ஆனால் ஒரு சராசரி இந்துதான் அழகிரி…

      இவ்வளவு ஏன் என் நெருங்கிய நண்பன்(தேவர்) மணமுடித்திருப்பது ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணைத்தான்….இத்தனைக்கும் கணவனை இழந்த அந்தத்தாய் ஒருநாள் கூட அந்தப் பெண்ண வசை பாடியதில்லை…வினவு அண்ணே…இதல்லாம் இப்ப சர்வசாதாரணமாக் நடந்து கொண்டு தான் உள்ளது…

      • இந்துக்கள் ஒற்றுமைக்காக திராவிட இயக்க தலைவரது குடும்பத்தைத்தான் உங்களால் உதராணம் காட்ட முடிகிறது. ஏன், ரங்கசாமித் தேவர், தாணுலிங்க நாடார், வன்னியராஜன், இல.கணேசன், இவர்களது குடும்பத்தை ஏன் காட்ட முடியவில்லை? பிறகு உங்களது நண்பனது பெயரைச் சொல்லி தப்பிக்கிறீர்கள். ஆக இந்துக்களெல்லாம் ஒன்று இல்லை என்பது இந்து அமைப்புகளிலேயே வேரோடிப் போயிருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டதால் நீங்கள் பேசியிருப்பது சேம் சைடு கோல்! பார்ப்பனியத்தில் சாதி அமைப்பை ஒழிப்பதற்கு திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்தான் முக்கிய பங்காற்றியருக்கின்றன. எங்களது அமைப்புகளில் இத்தகைய சாதி – தீண்டாமை ஒழிப்பு திருமணங்கள் மாதந்தோறும் நடக்கின்றன. சென்னையில் இருந்தால் வந்து சந்தியுங்கள், உங்களுக்கு அதை நேரிலேயே காட்டுகிறேன். ஒரு வேளை நேரில் பார்த்தால் பையா தம்பி திருந்த வாய்ப்பிருக்கிறது, வாருங்கள்!

     • neenga yen endha kudumbathilayavadhu thaazhtapatta pennai manam mudikkalayannu kekka maatreenga?

      illa,oru velai thaazthapatta payanayye manam mudikkalainnu ungalukku epapdi theriyum?

      illa ungalukku therinja payyan vinapichu,illainnu solli irukkangala?

      sangha parivarula ulla edhavadhu oru thaazthapatta swayamsevak kitta poi neenga vinappam seyya solla vendi,athoda result ennavendru enagalukku sollungalen.

      • தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள், தமிங்கிலீசில் எழுதும் யாருக்கும் பதிலளிப்பது இல்லை.

       • Ok.

        So,why dont you go and ask a dalit swayamsevak to go ask for a girl of an upper caste swayamsevak in marriage?

        and why are you not talking about an uppercaste swayamsevak having a lower caste bride?

        • மதம், குழு, இனம், சாதி, கோத்திரம் அனைத்தும் தத்தமது புனிதத்தை பெண்களின் மீதே கட்டியிருக்கின்றன. ஒரு மதத்தை மற்றொரு மதம் தாக்கும் போது அதிகபட்சமாய் பெண்களை ரேப் செய்வதே அந்த மதத்தின் கௌரவத்தை சீர்குலைக்க போதுமானதாக இருக்கிறது. தன்னின பெண்களோடு இரத்தக் கலப்பு என்பதை ஒரு ‘உயர்’சாதி ஆணால் எப்போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆகவே தாழ்த்தப்பட்ட பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் திருமணம் செய்வதை விட தாழ்த்தப்பட் ஆண்கள் ஆதிக்க சாதி பெண்களை மணம் புரிவது மிகுந்த பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. இதை ரஜபுத்திர பெண்கள் கூட்டம் கூட்டமாய் உடன்கட்டை ஏற்றி கொல்லப்பட்டதிலிருந்து, நாயக்கன் கொட்டாய் வரை காணலாம். ஆகவேதான் இது குறித்து விவாதம் வரும்போது குறிப்பாக இப்படி எடுத்துக்காட்டி சொல்லி பேச நேரிடுகிறது. பொதுவில் அனைத்து வகையிலும் மனிதர்கள் கலந்து சாதி ஒழிவதையே விரும்புகிறோம். மற்றபடி உங்களைப் போன்ற பொழுது போக்கிற்காக சமூக விசயங்களை பேசுபவர்களிடம் டியூசன் கட்டணம் வாங்காமல் வகுப்பு எடுப்பது எரிச்சலைத் தருகிறது.

         • which Hindu Kingdom raped women when they conquered someone else,

          The UpperCaste oppose mixed marriages both ways,the reason why they oppose their women doing mixed marriage is that,they do not want to establish family relationship outside their own circle as they want to protect their culture and in Indian tradition,the bride’s father always is under pressure from the groom’s family and have to behave in a more polite way.

          In case of dalits vs other castes,both kind of mixed marriages are opposed as the women of a family have ability to influence the minds of the men.

          Rajput women did Jauhar(not the same as sati),all women did sati to avoid getting raped by the enemies,no honourable women wants to be a consort in a sultan’s palace and want to get raped.The women chose death over getting raped.

          Nayakkan kottai and Rajput Jauhar has no connection,honour suicide is not the same as jauhar.

          And you take tution for me?

          Vinavu,i know the kind of knowledge your authors have and how half baked most of it is.I have live first hand knowledge of most things and trust me tution,even my one year old son ll have more clarity than people liek you who make fools of innocent masses by selling them unattainable dreams.

          Lazy people like you sit and eat on undiyal kaasu,you dont have the right to talk about normal hardworking people.

          You are the biggest exploiter of the human mind like all communists.

          Yous till did not answer my question,why dont you talk to a dalit syawamsevak and ask him to do what you want him to?

          • //as they want to protect their culture // இதுதான் விசயம். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கலாச்சாரம், வாழ்க்கை முறை, உணவு முறை, எல்லாம் வேறுபடுமென்பதால் இந்துவெல்லாம் ஒன்று இல்லை என்று உள்ளது உள்ளபடி ஒத்துக் கொண்டதற்கு நன்றி. ஆக ஒரு ஆதிக்க சாதிக்காரன் இந்துவெல்லாம் ஒன்று என்று கூக்குரலிட்டால் அதை எதிர் கொள்வது எளிது – உன் பெண்ணை எனக்கு மணமுடிப்பாயா என்று கேட்டால் துண்டைக் காணாம், துணியைக் காணோம் இந்து மதமும் வேணாம், இந்து ஒற்றுமையும் வேணாம் என்று ஓடி விடுவான். ஹரிகுமாரும் ஓடுகிறார். ஒரு சிம்பிள் கேள்வியிலேயே இந்துத்துவாவை கருத்து ரீதியாக இல்லை என்று ஆக்கிவிடலாம் என்பதற்கு இந்த ஹரியின் அரிப்பு விளக்கம் ஒன்றே போதும்.

          • @harikumar
           why should an RSS leader should make comments like ///பெண்கள் கணவனின் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வீட்டை ஒழுங்காக பராமரித்து வர வேண்டுமாம்///

           if he really mean that he is in an aim to close or bomb all the girl schools

           and your kind of people will talk about wahabi and taliban but won’t even face the comment of an RSS leader

     • \\அந்த இந்துன்னா யார்? அதில் யாரெல்லாம் சேர்த்தி?\\

      அது ஒன்னும் கம்பசூத்திரமோ, ஆதாம் ஏவாளின் ஆப்பிள் கதையோ அல்ல…

      போன வாரம் பேங்ளூரில் நடந்த குண்டுவெடிப்பின் பிண்ணனியை கண்டுபிடிக்க முடியாமல் திணரியபோது…ஒரு ஆட்டோக்காரரின் துப்பு தான் 4 குற்றவாளிகளினை பிடிக்க உதவிற்று…

      மதுர மெகபூப்பாளையம்
      திருனெல்வேளி மேலப்பாளையம் மற்றும் கேரளா சேட்டாஸ்…இந்த நாலு பேரும் சம்பவம் நடந்த அன்று காலையில் 4 மணிக்கு அங்கு சென்று உருதுவில் திட்ட்ம் தீட்டியிருக்கிறார்கள்…அதைதான் அந்த ஆட்டோஓட்டுனர்…போலீஸுக்கு சொல்லி
      காவல் துரை அந்தக் கயவர்களை பிடிபப்த்ற்கு உதவியதுடன் 5லட்சம் சன்மானத்தை குண்டு வெடிப்பில் காயமுற்றவர்களுக்கே கொடுத்தும் விட்டார்..அவ்ர் தான் உண்மையான இந்தியன்….

      ஒரு உண்மையான் இந்துவிற்க்கு யார் மேலும் வெறுப்பும் இல்லை..

      யாருக்கும் அவன் எதிரியும் இல்லை…

      • நீ என்ன சொல்ல வர்றே. பாய்ங்கள காட்டிக்கொடுக்குறவனெல்லாம் இந்துன்னு சொல்ல வர்றியா. இல்ல RSS மனசுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்குறவனெல்லாம் இந்துன்னு சொல்ல வர்றீயா? இந்து யாருன்னு கேட்டா இந்தியன்னு பினாத்துற. சொல்றதுல ஏன் இத்தன பிலாக்கணம்.

      • அதெல்லாம் செட் அப் சார் .பாஜக அலுவலகம் அருகே குண்டு வைத்து அவர்களுக்கு ஆகபோவது என்ன?இப்ப தேர்தல் நடக்கும் சமயத்தில் பாஜகவுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி ஓட்டுக்களை வாங்கி கொடுக்கும் கட்டாயம் முஸ்லிம்களுக்கு என்ன வந்து விட்டது?

    • பையா, இல.கணேசனுக்கும் – ஷண்முகநாதனுக்கும் நடந்தது என்ன சண்டை? உமா பாரதிக்கும் – சௌகானுக்கும் நடந்தது என்ன சண்டை? கோவிந்தாசார்யாவுக்கும் மோடிக்கும், எடியூராப்பாவுக்கும் – ஷட்டர், சதானாந்தாவுக்கும், கல்யாண் சிங்குக்கும் – பாஜக தலைவர்களுக்கும், இப்படி தேசிய அளவிலும், கவுன்சிலர் தெருவிலும் அடித்துக் கொள்ளும் பாஜகவை அறிவீர்களா? திமுக அளவுக்கு இன்னும் கொலை நடக்கவில்லையே தவிர மற்ற எல்லா கோஷ்டி மோதல்களும் உண்டு. விரைவில் கொலையும் நடந்தாலும் நடக்கும்.

      • அதானே சண்டையில சட்டை கிழியலைன்னா அது சண்டையா? எல்லாம் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கன்றது உங்களுக்கு புரிய்து ஹரிகுமாரு. ஆனா பையாவுக்கு பாஜகன்னா வெல்லம் மாதிரி இனிக்குது போல.

     • வினவு ,என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள் .மோடி தனது சக அமைச்சரான ஹரே பாண்ட்யாவை போட்டு தள்ளவில்லையா? ஹரே பாண்ட்யாவின் தந்தை மோடியை தனது மகனின் பிரேதத்தை பார்க்க வருகையில் எதிர்க்கவில்லையா? அதன் பின்னர் மோடியை எதிர்த்து போட்டியிட்டாரே .
      ஆனால் திமுக காரர்கள் பழியை அடுத்தவர்கள் மீது போடவில்லை .அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்கனி

 4. மிகவும் மோசமான ஒரு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி இந்த பொன். ராதாகிருஷ்ணன். மோடியின் தமிழக பதிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

  தமிழகத்தில், காளான் போன்று முளை விட்டுள்ள பலவண்ண தமிழினவாதிகளும் ஈழப் பிரச்சினையில் காங்கிரஸை மட்டுமே கருவறுக்கிரார்கள். இதில், மறைமுக ஆதாயத்தை பெறும் ஆர்.எஸ்.எஸ, ஈழத்தின் ஜென்மப் பகையாளி என்பதை அறியாத தற்குறிகள் போன்று இருக்கிறார்கள்.

  நேற்று என்னுடன் டெலிபோனில் உரையாடிய ஊர் நண்பர் பலமுனைகளில் மக்களின் உரிமைகளை காப்பதில் காங்கிரஸ அடைந்துள்ள தோல்வி தான் பா.ஜ.க பக்கம் மக்களை சற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றார். அது காங்கிரஸின் தோல்வி அல்ல; இந்த அரசமைப்பின் தோல்வி என்று அவர் போன்ற எண்ணற்ற மனிதர்களை உணர வைக்கும் அரசியல் கடமை மலையை போன்று நேற்றைய மாலை நேரத்தை கனக்க வைத்தது.

 5. //வழக்கம் போல எரியும் தீயில் குளிர் காய்வதற்கு தயாராகி விட்டனர் பாஜ கட்சியினர்.//

  எரியும் தீயை பற்றி கவலையில்லை, அதைப்பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால், குளிர் காய்வதைப்பற்றி மட்டும் கட்டுரை. நல்ல வினவுத்தனம்.

 6. வெடிகுண்டு வெடிப்பதாலும் ,இந்து முன்னணி தலைவர்களை தாக்கினாலும் காவல்துறையினராலும் ஹிந்து தீவிரவாதிகளாலும் முஸ்லிம்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் .முஸ்லிம்களின் பொருளாதாரம் பதிக்கப் படுகிறது .நிலைமை இப்படியிருக்க தேர்தல் நேரத்தில் பாஜக அலுவலகம் அருகே குண்டு வைத்து சிலரை காயப்படுத்தி பாஜக வுக்கு ,ஓட்டுக்கள் வாங்கிக் கொடுக்கவும் தலயிலும் கையிலும் பிரைவேட் ஆஸ்பத்திரியில் அட்மிட ஆகும் அளவுக்கு லேசான காயத்தை ஏற்படுத்தி அவரை பிரபலமாககவும் முஸ்லிம்களுக்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது?
  தலைவர்களை தாக்குதல் .குண்டுவைத்தல் மூலம் யாருக்கு ஆதாயமோ அவர்களே குண்டுவைக்கிரார்கள் ,தாக்குகிறார்கள்

  • AAR,

   The family members of the so called terrorists claim that they have nothing to do with the terror strikes. Today some Islamic organisations petitioned the DGP that innocent people have been arrested for terrorist activities. Simply don’t buy the versions of police and BJP.

  • Avangallaam Muslims boss.. so by default they attain innocent status in front of vinavu. Even if caught red handed like kasab was, ‘circumstances’ made them that way. But Hindus senjaa adhu periya kutram. Correct dhaane vinavu Annen?

 7. மனிதரை மனிதராக மதிக்கத் தெரியாதவன்; ஒருவரை விரோதியாக பாவித்துவிட்டு விரோதி செய்வது அனைத்தையும் விரோதமாக பார்க்கிறவன் பார்வையிலும் சிந்தனையிலும் கோளாறுகள் இருக்கும். அந்தவகையில் ”வினவு’ மதிப்பிற்குரிய மனிதர் எம்.ஆர்.காந்தியை பற்றி இக்கட்டுரை வெளியிட்டுள்ளது. எம்.ஆர்.காந்தி ம.க.இ.க.வின் உறுப்பினராக இருந்தால் இன்னொருவிதத்தில் வெளியிட்டிருக்கும். வினவு எழுதுவதும் வெளியிடுவதும் பிழைப்புக்குரிய அரசியல்தான் என்பது இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது.

  • போலீஸ்காரர்கள் தங்கள் மீதுள்ள நிர்பந்தத்திற்கு பழைய கேஸ்களை மேலப்பாளையத்தில் தேடி நாகர்கோவிலில் கைது செய்ததாக முடித்துவிட்டார்கள் .இனி வழக்கில் அவர்கள் சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் மாலேகான் , போன்று அவர்கள் விடுதலையாவார்கள் .ஆக இப்போதுள்ள பரபரப்புக்கு தீர்வு கிடைத்தாயிற்று

 8. இன்று தினத்தந்தியில் ஒரு செய்தி. குமரி மாவட்ட எல்லையில் போலீஸ் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது ஒருவர் போலீசை கண்டதும் ஓடி இருக்கிறாராம். விரட்டி சென்று பிடித்து விசாரித்ததில் எம் ஆர் காந்தியை வெட்டிய ஒரு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர் அவர் என்பது தெரிய வந்துள்ளதாம்.

 9. பா.ம.க வுக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பா.ஜ.க வுக்கு இஸ்லாமியர்கள் இளித்த வாயர்கள். ஆஹா! சாதி அரசியலுக்கும் மத அரசியலுக்கும்தான் என்னே ஒற்றுமை! தமிழகம் உருப்பட்டமாதிரிதான்!

 10. தாங்களே செய்கை செய்துவிட்டு அதை அடுத்தவர் மீது பழி போட்டு ஆதாயம் தேடுவதில் ஓட்டுப் பொறுக்கிகள் மிகவும் தேர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு பிதாமகன்கள் சங்பரிவாரங்கள்.அத்வானி x மோடி,கர்னாடகாவில் பா ஜ க அரசியல்,தமிழ் நாட்டில் பொன் ராதா,இல க,எச்சி ராஜா கோஷ்டிகள்.லஞ்ச ஊழல் கொலை கொள்ளை கலவரம் எல்லா தகிடு தத்தங்களையும்,செய்துவிட்டு வாய் கூசாமல் புழுகுவதோடு,இந்தப் பூனையும் பால் குடிக்குமா?என்பதைப் போல தத்ரூபமாக நடிப்பதில் சங் பரிவாரங்களுக்கு இணை சங்கே தான்.அது தான் நாகர்கோவிலில் நடந்துள்ளது.பொன் ராதாவின் ஆட்கள் தான் கோதாவில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள்.கோவையிலும் இதே சதித் திட்டத்தை தீட்டி வருகிறது பா ஜ க கும்பல்.சட்டசபையில் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் அம்மையார்.அங்கே மதப் பூசல்கள் ஒன்றும் நடை பெறவில்லையாம்.அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு சம்பவங்கள் நடைபெறுகிறதாம்.அமைதிக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாம்.மதத்தின் பெயரால் யார் பங்கம் ஏற்படுத்தினாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுமாம்.அம்மாவை ஆதரிக்கும் பாய்மார்களே உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை.கருணாநிதி மட்டுமல்ல அம்மாவும் தேர்தலை நோக்கி தான் நயமாகக் காய் நகர்த்துகிறார்.வழக்கம் போல் ஏமாறப் போவது என்னவோ அப்பாவி மக்கள்தான்!

  • தமிழகமெங்கும் மதுர, திண்டுக்கல் இன்னும் பல பல ஊர்களில் பல இந்து முண்ணனி, மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டதும் – அவங்களே செய்கை செய்து வீட்டு அதுத்தவர் மேல் பழி போடுவது தானா செவத்தி???

   எத்தனை கொலைகள்…
   எத்தனை கொலைகள்…

  • னீலகிரியில் இந்து அமைப்புகளின் பிரதினிதிகளின் முகம் கை கால்களின் கொடூரமாக தாக்கப்பட்டு குற்றுயிரும் கொலையிருமாக கிடைப்பது என்ன கமல் விஸ்வரூபத்தை வெளியிட நடித்த நடிப்பா?

   இல்லை எத்தனையோ இந்து தலைவர்களை கொன்ற போதும் அதையும் இல்லாத இந்துதீவிரவாததின் கணக்கில் சேர்க்கும் வினவின் நடிப்பா?

 11. ஒரு மலையாள மார்க்சிஸ்டு நாங்க எப்படி லிஸ்ட் போட்டு அரசியல் எதிரிகள போட்டுத்தள்ளுனோம்னு பகிரங்கமா மேடையில பேசுனான்….[ இந்த லட்சணத்துல இவன்லாம் மந்திரியா வேற இருந்தான் ]அதப்பத்தியெல்லாம் மூச்சுக்கூட விட மாட்டிங்க…….ஹிந்துக்கள வெட்டுனா அது உங்களுக்கு இளக்காரம்…….இப்படியே பண்ணிக்கிட்டு இருங்க…….கடைசியில நாலு பேர் கூட தேறமாட்டீங்க……. சான்றோன்

 12. Vinavu,

  Dont crack jokes and laugh yourself like TR movies.Every woman likes/marries a guy for their emotional bond and respect,not because of political reasons.

  Try asking someone to compete in General category and then people ll give you respect.

  Ask government teachers to go to school and teach sincerely,instead of instigating half educated students when they beyond the learning curve of their lives.

 13. Your article shows your poor knowledge. Hindu are minority in southern part of Tamilnadu. Hindu is nothing but an group of 1000 of religious denominations.

  Inter caste marriage is nothing to do with the concept of Hinduisum.

  You must know the difference between abrahamic religion and non-abrahamic religion. I think you are severely infected by the abrahmic virus…

 14. nagaraj

  I am not able to reply to your post or vinavu’s post above it as there is no reply button,

  To answer you,let me see the quote from the RSS leader who said women are around to do household chores.

 15. sorry,i just read his comments about the marriage contract between the man and women,

  it is true that this is the old marriage idea but i feel they got his words got wrongly translated into english,he said in hindi Ghar Sambhalna,which means veetai paramarithal in tamizh but it actually means taking care of the house,not only houshold chores but everything in the house,say from kids to and so on…

  so,he was not saying women are good enough for that,he was talking about a family system of not only India,world over.

 16. எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!
  —————————————————————————————
  நமது சந்தேகம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் பார்வையில் மட்டும் திருமணம் ஆகாத எம்.ஆர்.காந்தி, தனது சொத்துக்களை தனது தம்பி மகனுக்கு தருவதாக வாக்களித்து விட்டு, பின்னர் தனது சகோதரியின் மகளுக்கு அச்சொத்துகளை எமாற்றி கொடுக்க முற்பட்டதுமின்றி, வீட்டை மூன்றாம் நபருக்கு விற்பதற்காக முன்பணம் வாங்கியதாலும், ஆத்திரமடைந்த எம்.ஆர்.காந்தியின் தம்பி மகன் தான், எம்.ஆர்.காந்தியின் தலையை கம்பால் அடித்து காயப்படுத்தினான்.

  காந்தி தாக்கப்பட்டதை அடுத்து இரண்டு நாட்கள் பேருந்து இயக்கத்தை குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் நாகராஜ் நிறுத்தினார். இந்த நபர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமகவுக்கு அபராதம் விதித்துள்ளது போல நொறுக்கப்பட்ட பேருந்துகளுக்கு பாரதிய ஜனதாவிடமிருந்து அபராதப் பணம் வசூலிக்க வேண்டும். மரக்காணம் வன்முறை தொடர்பாக உண்மை வெளிச்சத்திற்கு வந்தது போல உடனடியாக M R காந்தி தாக்கப்பட்ட வழக்கில் உண்மைநிலையை வெளிப்படுத்த இயலவில்லை. இது இந்து மதவெறி கூட்டத்தின் சாமர்த்தியத்தையே காட்டுகிறது.

  மேலும் இந்த சம்பந்தவத்தோடு சிறிதும் தொடர்பில்லாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு வாபஸ் பெறப்படுமா? பத்திரிகைகளில் முஸ்லிம் பெயர்கள் வெளியானதை தொடர்ந்து அந்த சமூகம் குறித்து பொதுப்புத்தியில் மேலும் பசுமரத்தாணியாக இறங்கியுள்ள தப்பெண்ணத்திற்கு பரிகாரம் தேட ‘தினத்தந்தி’, ‘தினமலம்’ போன்றவை முன்வருமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க