Wednesday, February 21, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய ராமதாஸ் ! நாடகமாடும் ஜெயா அரசு !

குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய ராமதாஸ் ! நாடகமாடும் ஜெயா அரசு !

-

மிழ்நாட்டை பீடித்திருக்கிறது ஒரு பாசிச அரசியல் கும்பல். சில ஆயிரம் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை வைத்து கட்சி நடத்தி வரும் ராமதாஸ் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, தனது மகனை முதலமைச்சர் ஆக்குவதற்காக மக்களிடையே கலவரத்தைத் தூண்டி விடும் உத்தியை வந்தடைந்திருக்கிறார்.

இந்திய அளவில் இந்துத்துவா சக்திகள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை நாட்டின் எதிரிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து செயற்கையான எதிரியை உருவாக்குவது போல, தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஆதிக்க சாதி குடும்பங்களின் எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் ராமதாசின் தலைமையிலான வன்னியர் சங்கமும் பாட்டாளி மக்கள் கட்சியும்.

“தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்டும் கூலிங் கிளாசும் போட்டுக் கொண்டு வந்து வேறு சாதி பெண்களை மயக்கி காதலித்து திருமணம் செய்து விடுகிறார்கள்” என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஊர் ஊராக போய் நடத்தி வருகின்றார் ராமதாஸ்.

2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு விழா மாநாட்டில் “வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” என்று காடுவெட்டி குரு பேசினார்.

அந்த மாநாட்டைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் செல்வாக்குடன் இருக்கும் பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. தருமபுரியில் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் இளவரசன்-திவ்யா காதல் பிரச்சனையில் தலையிட்டு 300 தாழ்த்தப்பட்ட சாதியினரின் வீடுகளை அடித்து உடைத்து நாச வேலை செய்தனர். தொடர்ந்து, பல ஊர்களில் காதலித்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் கொலை, இளம் பெண்கள் கொலை என்று வன்முறை நிகழ்வுகளுக்கு வித்திட்டனர் பா.ம.க.வினரும் வன்னியர் சங்கத்தினரும்.

வன்முறை சம்பவங்களை தூண்டி விட்டு, ஆதரித்து பேசிய வன்னியர் சங்கத்தின் மீதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும் உரிய சட்டப் பிரிவுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது ஜெயா அரசு.

சாதி வெறி கூட்டணிதனது ‘கலாச்சாரக் காவலன்’ வேடத்தை அணிந்து கொண்டு ராமதாஸ், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் பயணம் செய்து அந்தந்த பகுதியில் உள்ள ஆதிக்க சாதி அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டம் நடத்தினார். ‘வீட்டுப் பெண்களை மயக்குகிறார்கள்; பெண்ணை திருமணம் செய்து சொத்தை அபகரிக்கப் பார்க்கிறார்கள்’ என்ற பிரச்சாரம் ஒரு சராசரி நடுத்த வர்க்கமாயும் ஆதிக்க சாதியுமாய் இருப்பவர்களை இழுத்தது.

இதை அடிப்படையாக வைத்து சாதி சங்கங்கள் என்ற பெயரில் ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து நடத்தி உள்ளூர் தாதாக்களாக விளங்கும் பல்வேறு ஆதிக்க சாதி சங்க நபர்களை ஒருங்கிணைத்து 2016 சட்ட மன்ற தேர்தலில் ஒரு பலமான சக்தியாக வளர்ந்து விடலாம் என்று திட்டமிடுகிறார் ராமதாஸ்.

மக்களிடையே சாதியின் பெயரால் பகைமையை வளர்த்து குளிர் காய நினைக்கும் வன்னியர் சங்கத்தை தடை செய்து ராமதாசையும், அவரது கும்பலையும் வன் கொடுமை சட்டத்தின் கீழும் குண்டர்களும் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல், ஓரிரு மாவட்டங்களில் ராமதாஸ் நுழையத் தடை என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு மூலம் நாடகமாடியது ஜெயலலிதா அரசு. தேவைப்படும் போது மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுகளை நீதிமன்றம் மூலம் ரத்து செய்து சுதந்திரமாக நடமாடி விஷத்தை கக்கிக் கொண்டிருந்தார் ராமதாஸ்.

பெரும்பான்மை வன்னியர்களிடையே அவரது அரசியலுக்கு ஆதரவு குறைந்து விட்ட நிலையில், வன்முறையை தூண்டி விடுவது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது பகைமையும், வன்மத்தையும் வளர்ப்பது என்ற அரசியலை தொடர முடிவு செய்து ஏப்ரல் 25-ம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா என்று மாநாடு ஒன்றை நடத்தினார்கள் வன்னியர் சங்கத்தினர்.

pmk-crowd‘ஒரு கோடி வன்னியர் குடும்பங்கள் கூடும் மாநாடு’, ‘நாங்க வாளை உறையிலிருந்து வெளியில் எடுத்தா ரத்தம் பார்க்காம உள்ளே போகாது’ என்றெல்லாம் முட்டாள்தனமான அதே நேரம் வெறித்தனமான கோஷங்களுடன், ஆங்காங்கே கட்சி பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்து வளர்ந்திருக்கும் அரசியல் ரவுடிகள் திரட்டி வந்த ஆட்களை வைத்து மாநாடு நடத்தினர். போக வர வாகன வசதி; போகும் போதும், வரும் போதும், மாநாட்டின் போதும் குடிப்பதற்கு டாஸ்மாக் சரக்கு; பிரியாணி; மாமல்லபுரத்தில் குத்தாட்டம்; போன்ற கவர்ச்சிகளுடன் சில பல ஆயிரம் பா.ம.க.வினர் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.

மாமல்லபுரம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதிலிருந்தே அந்த மாநாட்டின் வெறி மற்றும் ‘வீரத்’ தன்மையை புரிந்து கொள்ளலாம். அந்த உதிரிகள்தான் போன வழியெல்லாம் அராஜகம் செய்து குடித்து கும்மாளமிட்டிருக்கின்றனர்; பெண்களை கேவலமாக பேசியிருக்கின்றனர்; வீடுகளை அடித்து உடைத்திருக்கின்றனர். இவர்களால் பாமகவிற்கு ஓட்டுப் பொறுக்குவதற்கு கூட லாயக்கில்லை.

“மாநாட்டுக்கு வரீங்க, ஆனா தேர்தல்ல ஓட்டு போட மாட்டேங்கறீங்க” என்று மேடையில் தலைவர்கள் புலம்புமளவுக்குத்தான் அந்த கூட்டம் இருந்தது. கூடிய நபர்களில் ஆளுக்கு 10 ஓட்டை வாங்கிக் கொடுத்தால் சில தொகுதிகளில் டெபாசிட்டாவது வாங்க முடியும். ஆனால், சென்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் டெப்பாசிட் வாங்குவதே முடியாது என்ற நிலையில்தான் இவர்களது கட்சி செல்வாக்கு இருக்கிறது.

மத்திய அரசில் அமைச்சர் பதவிகள் வகித்து அடித்த கொள்ளைப் பணத்தில் தொலைக்காட்சி, நாளிதழ் என்று தி.மு.க., அ.தி.மு.க. வணிக சாம்ராஜ்யங்களைப் போல தாமும் கட்டியமைக்க முயற்சித்தும் செல்ப் எடுக்கவில்லை.

இந்த சாதி வெறிக் கும்பலை கைது செய்து, வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டிய தமிழக அரசோ சட்ட வாதம் பேசி நாடகமாடுகிறது. ‘பிளெக்ஸ் பேனரில் வீரப்பன் படத்தை போட்டு விட்டார்கள்’, ’10 மணிக்கு முடிக்க வேண்டிய கூட்டத்தை 11.30 வரை நீட்டித்தார்கள்’, ‘குடித்து விட்டு மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தினார்கள்’, ‘அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்’ என்று உப்புச் சப்பில்லாத பிரிவுகளில் வழக்குகளை தொடுக்கிறது ஜெயா அரசு.

வன்னியர் சங்கம்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக கொலைவெறியைத் தூண்டினார்கள் என்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், மக்களை சாதி ரீதியாக பிரிக்கும் வகையில் வன்முறை பிரச்சாரம் செய்தார்கள் என்று குண்டர்கள் சட்டத்தின் கீழும் ராமதாசையும், காடுவெட்டி குருவையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய ஜெயலலிதா, “நீங்கள் வழக்கு போடச் சொன்னீர்கள், போட்டு விட்டோம், அதை எதிர் கொண்டு நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வீர்கள்’ என்று ராமதாசுடன் செல்லமாக வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்.

தி.மு.க.வின் தலைவரோ கள்ள மௌனம் சாதிக்கிறார்.

இதற்கிடையே ராமதாஸ், ஜி கே மணி, காடுவெட்டி குரு கைதைத் தொடர்ந்து பா.ம.க. ரவுடிக் கும்பல் வட மாவட்டங்கள் எங்கும் பேருந்துகளை கொளுத்துவது, கல் எறிவது என்று நாச வேலைகளில் இறங்கியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் இரண்டு பிரதான ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுமே ஓரிரு சீட்டுகளை கொடுத்து பா.ம.க.வை தமது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் சாத்தியத்தை விட்டுக் கொடுக்க விரும்பாமல், ராமதாசின் நச்சு அரசியலுக்கு பால் வார்க்கின்றனர். இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகளால் சாதி வேறுபாடுகளை ஒழிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

உழைக்கும் வன்னிய மக்கள் உட்பட அனைத்து பிரிவு மக்களின் ஆதரவுடன் ராமதாஸ், குரு மீது வன்கொடுமை சட்டம், குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும், வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் உடனே தடை செய்ய வேண்டும் என்றும் நாம் போராட வேண்டும்.

 1. அருமையான பதிவு.

  நேற்றிலிருந்து வேலைக்கு சென்ற மக்கள், உறவினரை பார்க்க வந்தவர்கள், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவர்கள் என கோயம்பேட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊருக்கு செல்லமுடியாத வேதனையில் இருக்கிறார்கள். வன்னிய ஆதிக்க வெறியர்கள் பேருந்தை எரிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.

  தருமபுரியில் தலித்துக்களே தங்கள் வீடுகளை கொளுத்திக்கொண்டு, 8 கோடி நஷ்ட ஈடு பெற்றதாக அன்புமணி பேசுகிறார். என்ன ஒரு வக்கிரமான பேச்சு? இதற்காகவே உள்ளே தள்ளவேண்டும்.

 2. you see, mr thiruma leader vck givs intruction to his cadare to marry uper caste girls and help them to provide support interms of money , vehicle, house and etc. plan to marry uper caste girls. some times after the marriage ,after the first night , the same vck leaders inform to the girls parents and make deal them sent back the girls with lums of money.
  is the ways to eradicate catism?. was the way of ambedkar. instead of giving righjt directio to dalits youth to study and utilise the govermnet benefits. vck make the roudyism.
  then how the other cast can calm. the same vck cadre killedone cipler boy for marrying dalits girl in vilupuram last year. if they are not against caste . why they are ready to marry subcastes of dalits?.

  • எதாவது ஒரு அரசு மருத்துவமனையில் போய் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து பாருங்க எத்தனை இளம் பெண்கள் தன்னை எரித்துக்கொண்டும், வரதட்சணை கொடுமை என்று வருகிறார்கள் அனைவரும் தன் சொந்த சாதி காரர்கள் தான் காரணம். கொஞ்சம் மகளிர் காவல் நிலையத்திற்கு போய் பாருங்க அங்க இதுபோன்ற பிரச்சனைகளுக்குதான கட்டபஞ்சாயத்தே நடக்கும். இவர்களோடு ஒப்பிடும் போது காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களிடம் சாதி, மதம், வரதட்சணை எல்லாம் குறைவு குறைந்தபட்ச ஜனநாயகமாவது இருக்கும. ஆனால் உங்கள் சாதிவெறியை உமிழ என்னென்ன காரணமெல்ல சொல்றீங்க முடியல!

    • ethukku etha uthaaranam kaattuthu paaru?
     jaathi certificatela enna jaathi podrangalo antha jaathi padi reservation kudupanga. nee pengalukkaana ida othukkeda peruvathargaka mubaikku train erma iruntha sari 😉

     • hisfeet,

      why doesn’t a dalit girl’s kids deserve reservation,why is reservation on the basis of the father’s caste?

      why not the mother’s?

      I mean even the dalit women were suppressed for centuries right?

      unakku thaan badhil solla mukkudhu,eppadiyo adakkikittu pinaathura.

    • தாய், தந்தை யாருடைய சாதியை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம் அதேப்போல் சாதியே குறிப்பிடாமலும் இருக்கலாம்.

     உமக்கு என்ன பிரச்சனை? பார்பனராக இருந்தாலும் பரவாயில்லை, ஏழையாக இருந்தால் எதாவது தகுடுதித்தம் செய்து SC என்று சான்றிதள் வாங்கி சலுகையை பெற்றுக்கொள்ளுங்கள். மல்லையா, அம்பானி போன்ற முதலைகள் மக்கள் வரிப்பணத்தை ஆட்டையை போடும்போது ஒரு ஏழை நடுத்தர பார்பனன் சிறிய சலுகையை பெற்றால் என்ன குடியா முழுகிவிடும்?

     ஒரு ஏழை பார்பனர் தனது பசியை போக்கிக்கொள்ள பணக்காரனை அடித்து பிடிங்கி தனது பசியை போக்கிகொண்டாலும் அது தர்மம் தான். தவறே இல்லை ஏனேன்றால் ஏழைகள் இருக்க காரணம் பணக்காரர்கள் தான்.

     ஆனால் நீதி என்பது ஒருவருக்கானது மட்டும் இருக்கமுடியாது வறுமை போன்ற அநீதியை எதிர்த்தால் மட்டும் போதாது அதைவிட கொடூரமான மனித உரிமை மீறலான சாதி, மதம், இனம், etc., போன்ற எல்லா அநீதியையும் எதிர்க்க வேண்டும் அதுதான் நீதி. ஆனால் அந்த நீதி உம்மிடம் கடுகு அளவு கூட இல்லை. சரி கேட்க மறந்துட்டேன் நீங்க பணக்காரரா? அப்படினா ஒரு பார்பனர் ஏழையா இருக்க காரணமே நீங்கதானே! உங்களிம் உள்ள அளவுக்கு அதிகமான செல்வத்தை எடுத்துத்தான் ஏழைப் பார்பனரின், ஏழ்மையை போக்கவேண்டும். அது தான் நீதி. ஆனால் அதெல்லாம் உங்களுக்கு புரியாது.

     • Naan ezhaiya,panakkaarananratha vidunga,unmaiya naanga naduthira vargama irunthu ippo konjam nalinju poittom,aanalum oru ezhai pirpaduthapattavurukko/thaazthapattavarukko kedaikka vendiyatha thatti parikka manasu varala.

      Andha needhi enkitta illainnu neenga thappa purinjikittu irukeenga.

      naan saadhikku ethiri illa thaan,aanaa ocyila ukkandhu saapidanumnnu nenaikkiravan kedayathu,yaaraiyum aeichum pozhaikkanumnnu nenaikkiravanum kedayathu.

      Neenga solradhayum naan othukkuren,panakarana irukuura paarpanan ezhai paarpanan thooki vudanum.

      aana naan ketta kelvi adhu illeenga,amma dalita irunthu appa generala iruntha,pasangalukku reservation legalla kedaikanuma koodatha?

  • உங்க சாதி பெண்களை நீங்களே கேவலப்படுத்திறீங்க.யார் வந்து லவ் பண்றேன்னு சொன்னாலும் அவனோட குடும்பம் நடத்த போயிருவாங்களா அந்த பெண்கள்.இதுல உங்க தல ”ஐயா” எனும் பொய்யா சொல்லுது.ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டு வந்து தலித்கள் அவுக வூட்டு பெண்களை மயக்கிராங்கலாம்.ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டுருந்தா அவன் பின்னால போயிருவாங்கன்னு சொல்றது உங்களுக்குத்தான் கேவலம்.உங்க வீட்டு பெண்களை இப்படி இழிவு படுத்தும் குய்யா மேலதா நியாயமா உங்களுக்கு கோவம் வரணும்.இந்த லூசுத்தனத்தை எல்லாம் நம்பி இங்க வந்து சொல்றீங்கன்னா இதுதான் புத்தி மட்டு.

 3. இன்னும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு போட வேண்டும் என்பது சரியானது. ஆனால் குண்டர் சட்டம் சரிப்படுமா என தெரியவில்லை. அம்மா சமீபத்தில் குண்டர் சட்டத்தில் உள்ளே அனுப்பிய பலரையும் நீதிமன்றம் வெளியே விட்டு விட்டது!

 4. வினவின் வன்னியர் மட்ரும் ராமதசின் மீதனா வன்மமே இந்த கட்டுரை. வினவுவுக்கு மட்டுமல்லாது அனைது அரைசியல் இயக்கங்கலிடமும் ,மகபலிபுர வன்னிய பெருவிழா மக்கல் கூட்டத்தை பார்த்து பயம் கொன்டதே இந்த விமர்சினம் மட்ரும் புலம்பல்கலுக்கு காரனம்.

 5. //மத்திய அரசில் அமைச்சர் பதவிகள் வகித்து அடித்த கொள்ளைப் பணத்தில் தொலைக்காட்சி, நாளிதழ் என்று தி.மு.க., அ.தி.மு.க. வணிக சாம்ராஜ்யங்களைப் போல தாமும் கட்டியமைக்க முயற்சித்தும் செல்ப் எடுக்கவில்லை.//

  அட——-, என்றைக்கு தொலைக்காட்சி,நாளிதழ் வணிக சாம்ராஜ்யங்களைப் போல நடந்து கொண்டது.

  • இப்படியெல்லாம் இருந்தால்தானே பாஸ் உங்களைப்போன்ற முட்டாள்களை ஏமாத்த முடியும்.

   இத்தனைநாள் தமிழ் தமிழ் என்று பேசிவிட்டு இன்று சாதி சாதி என்று மாறலையா. முன்பு அம்பேத்கார் படத்தை போட்டவன் இன்று அப்படியே தலைகீழா மாறலையா? அப்படிதான் நாளைக்கு மாறும். (அடிதட்டு மக்கள் இன்று கொஞ்சம் வளர காரணமானவர் அண்ணல் அம்பேத்கார் என்பதை மறுப்பது உங்களுக்கு நீங்களே செய்துக்கொள்ளும் துரோகம்).

   சரி ஒரு தொலைக்காட்சி ஆரம்பிக்க எத்தனைக் கோடி பணம் தேவைப்படும்? எங்க வீட்டுபக்கத்தில் இருக்கும் அனைத்து வன்னிய வகுப்பை சார்ந்த நண்பர்களின் வீடும் அடிப்படை தேவைக்கூட பூர்த்தியாக வில்லை. அந்த பணத்தை தன் சொந்த அடிதட்டு மக்களுக்கு கொடுத்தா எம்புட்டு நல்லா இருக்கும், அட போங்க பாஸ்! அடிதட்டு மக்களை முதலாளிகள் நல்லா சுரண்டி கொழுக்கிறார்கள் அந்த எதிரிகளை உட்டுபுட்டு தடுக்கி விழுந்தால் தூக்க ஓடிவரும் பக்கத்துவீட்டு சகோதரனை எதிரினு சொல்லி ஏமாத்தி திசைதிருப்பரவனால என்ன நடக்கபோவுது, வெட்டு குத்துதான்.

   • இப்படி தமிழர்கள் தமிழீழத்தில் இன அழிப்பு செய்யும்போது இப்படி ஒரு மாநாடோ அல்லது அழைப்போ விடுத்திருக்கலாமே போராட்டத்திற்க்கு…………. தமிழ் மொழி…. தமிழ் இனம் என்பதைவிட ஆரியன் விதைத்த ஆரிய அடிமையான சாதி என்னும் தீயை தூக்கி பிடிக்கும் நாயாவே இருந்தீர்கள் ………………….. வேதனை…….. கொடுமை.

    தமிழர்கள் என்ற சிந்தனை ஓட்டத்திலிருந்து ராமதாஷ் தன் சுயநலத்திற்க்காக வன்னியர்களை பிரித்து சூழ்ச்சி வலையில் அந்த மக்களை சிக்கவைக்கப்பார்க்கிறது பாட்டாளி மக்கள் கட்சி………..

    • //இப்படி தமிழர்கள் தமிழீழத்தில் இன அழிப்பு செய்யும்போது இப்படி ஒரு மாநாடோ…. //

     தமிழர்கள் தமிழீழத்தில் இன அழிப்பு செய்தார்கலா அல்லது செய்யபட்டார்கலா????

 6. அ ப்பன், மகன் இருவரும் மருத்துவம் பார்க்கும் போதே மற்ற சாதியினரை வேண்டும் என்றே கொன்றிருப்பார்கள் .இதை பற்றி ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.படித்த மருத்துவ தொழிலை பார்க்காமல் வருவாய் அதிகம் என்று சாதி மற்றும் அரசியலை கையில் எடுத்துள்ளனர்

 7. குருவை யும் அன்புமணியையும் ராமதாசையும். இந்த சமுதாயத்திகல் வாழ அருகதை அற்றவர்கள். வன்னிய உழைக்கும் மக்களுக்கும் எதுரானவர்கள். விட்டு வைக்க்வே கூடாது .சட்டங்கள் செல்லாது மக்கள் தீர்ப்புதாம்.எனவே மக்க்ள் மன்றம் கட்டி இந்த பாஷிசைத்தை தண்டிக்கவேண்டும்.

 8. பேப்பர் வண்டியில் பயணம் செய்து மனைவியுடன் ஊர் திரும்பினேன்: டாக்டருக்கு மனநோய் என்று நினைக்கிரேன்

 9. It is true that Dr.Ramadas posing a heavy challenge to other political parties’ survival in Taminadu especially to both ADMK and DMK by erode their votes. Now, Dr.Ramadas challenging not alone but along with other all casts. In India caste system not disappeared even in this advanced era but only growing.So, future governments would not be formed in Tamilnadu without the support of other casts now joined under the head of Dr.Ramadas.
  Further,Jayalalitha’s present actions against Dr.Ramadas only making him more popular and also advantage to Dr.Ramadas; because earlier Dr.Ramadas was alone there,now all powerful communities are with Dr.Ramadas.
  Muthuramalinga Theaver is being worshiped today, because of such drastic actions taken by the then Congress regime in Taminadu and I think that Jayalalitha’s present actions, no doubt would make Dr.Ramadas become a family God of all Vanniyars in future.

 10. தலித் மற்றும் வன்னியர் இல்லாத அதிகாரிகள் நடுநிலை விசாரணை நடத்தவேண்டும். இப்போது பெரும்பாலான காவல் துறை அதிகாரிகள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவே இப்போது அளிக்க பட்டு இருக்கும் கோப்புகள் அனைத்தும் தலித் சமூகத்துக்கு சாதகமாக உள்ளது. தலித் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு பிற சமூகம் மீது பழி சுமத்தலாம் என காலம் மாறி கொண்டு வருகிறது. இப்படி செய்வதால் தலித் மக்கள் பிற இனத்தவரிடம் இருந்து அன்னியப்பட்டு கொண்டு வருகிறார்கள். தலித் என்பது குற்றம் செய்து தப்பிக்க கொடுத்த பட்டம் இல்லை

 11. நடப்பதை மக்கள் கவனிக்கிறோம். நிச்சயம் இதனால் ராமதாஸ் அய்யாவின் மீது உள்ள மரியாதை கூடி கொண்டே போகிறது. அணைத்து சமுதாய மக்களுக்காக போராடும் போராளிக்கு சோதனைகள் வருவதை ஏற்க முடியாது, அணைத்து சமுதாய பாதுகாப்பு தலைவர் அவர்க்களுக்கு இழைக்கும் அனைத்திற்கும் பாடம் புகட்டுவோம்.

  • “நடப்பதை மக்கள் கவனிக்கிறோம்”

   நாங்களும் மக்கள் தான். மாக்கள் இல்லை. கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பசுமைத் தாயகம்னு பேரை வைத்துக்கொண்டு மரத்தை வெட்டுவதையும், குடிக்காதே, புகைக்காதேன்னு சொல்லிக்கொண்டு, மாநாட்டுக்கு வந்தவர்களையெல்லாம் அதிலேயே குளிக்க வைத்து ரொம்ப ஸ்டெடியா கொண்டு வந்ததையும், பஸ்ஸையும் வீடுகளை எரித்ததையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது எப்படி ராசா, தான் செய்தால் தப்பில்லை, மற்றவன் செய்தால் கொலை குற்றம் என்று கூப்பாடு போடுகிறீர்கள்?

  • “அணைத்து சமுதாய மக்களுக்காக போராடும் போராளிக்கு சோதனைகள் வருவதை ஏற்க முடியாது,”
   வோட்டுப் பொறுக்குவதற்கு போடும் கூட்டத்தைப் போய் சமுதாய மக்களுக்காக போராடுவதாக பில்டப் கொடுக்கிறீர்களே ராசா!! மின் கட்டண உயர்விற்காக தெருவில் இறங்கி போராடினாரா? அல்லது பஸ் கட்டண உயர்விற்காக போராடினாரா? (பஸ் எரிப்பு போராட்டத்தில் வேண்டுமானால் மெடல் கொடுக்கலாம்.) அவருக்கு அருகாமையில் இருக்கும் நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட போராடிக்கொண்டிருக்கிறார்களே அதற்கு தெருவில் இறங்கி போராடினாரா?
   சரி இதையெல்லாம் விடுங்கள். போராளி என்றால் சோதனை வரத்தானே செய்யும்? அதை ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும்?

 12. “அணைத்து சமுதாய பாதுகாப்பு தலைவர்”

  நான்கு அமைப்புகளுக்கு தலைவராக கூறிக்கொள்ளும் மொள்ளமாறிகளை வைத்துக் கொண்டு நீங்களாகவே ஒரு பட்டம் கொடுத்துக் கொண்டால் சரியாகிவிடுமா? இவர்களை எல்லாம் உள்ளே வைப்பது மட்டும் போதாது. கும்மு கும்முன்னு கும்மி நுங்கெடுக்கனும்.

 13. இப்படி தமிழர்கள் தமிழீழத்தில் இன அழிப்பு செய்யும்போது இப்படி ஒரு மாநாடோ அல்லது அழைப்போ விடுத்திருக்கலாமே போராட்டத்திற்க்கு…………. தமிழ் மொழி…. தமிழ் இனம் என்பதைவிட ஆரியன் விதைத்த ஆரிய அடிமையான சாதி என்னும் தீயை தூக்கி பிடிக்கும் நாயாவே இருந்தீர்கள் ………………….. வேதனை…….. கொடுமை.

  தமிழர்கள் என்ற சிந்தனை ஓட்டத்திலிருந்து ராமதாஷ் தன் சுயநலத்திற்க்காக வன்னியர்களை பிரித்து சூழ்ச்சி வலையில் அந்த மக்களை சிக்கவைக்கப்பார்க்கிறது பாட்டாளி மக்கள் கட்சி………..

 14. வினவின் சாடல் சரியானதே! என்னதான் இருந்தாலும் அம்பிகளின் மவுனம் ஒரு குறைதான்! அவாள் சார்பாக யார் சார் வறீஙக?

 15. ஒ! அரிகுமார் கூட அற்புதமான கருத்து சொல்லியிருக்கிராரே! அவரின் கருத்தை ஆதரிக்கிறேன்! கலப்புத்திருமணத்தில் பிறக்கும் குழைந்தகள் தஙகள் பெற்றோர் ஒருவருடைய சாதியை கோரலாம்! சட்டப்படி தடையிருக்கிறதா? அல்லது த்ற்போது இட ஒதுக்கீடு ஊழல் போல பார்ப்பனீய குசும்புகள் உள்ளனவா?

 16. Only father’s caste.

  There is a case where a brahmin woman didn’t get the job of her dalit husband who died on the job on account of raising her children,this was done by Mu Ka.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க