ராமதாஸ் கைது குறித்து தினமணியில் வந்த செய்தியைப் பார்த்து விடுவோம் :
“ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும்” என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்…. ” என்றார்.
ஓட்டுப் பொறுக்கி அரசியலில் கூட்டணிகளின் மூலம்தான் காலம் தள்ள முடியும் என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளாக உருவாகியிருக்கும் நிலை. இதனால் தமிழகத்தில் கூட்டணி என்பது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் ஒன்றாக நம்பப்படுவதால் இத்தகைய கூட்டணிகளில் மாறி மாறி இடம் பிடித்து பிழைத்து வந்த பாமக-வை கருணாநிதி எப்போதும் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்.
வாக்கரசியலின் லாப நட்டம் பார்க்காமல் கருணாநிதி வாய்தவறி பேசும் ஒரு விசயம் இந்துத்துவ எதிர்ப்புதான். அதுவும் கூட அவரைத் தவிர ஏனைய திமுக தலைவர்கள் விரும்புவதில்லை என்பதால் சமீப காலங்களாக அதையும் அடக்கித்தான் வாசிக்கிறார். மற்றபடி சங்கராச்சாரி கைதைக்கூட திமுக கொண்டாடவில்லை என்பதும் அவரையும் விடுதலை செய்ய விரும்பியதும் நமக்குத் தெரியும். சேது சமுத்திரத் திட்டத்தைக் கூட வெறும் பொருளாதார பலன்களைச் சொல்லித்தான் திமுக ஆதரிக்கிறதே அன்றி ராமர் பாலம் குறித்த பார்ப்பனிய புளுகுகளை அம்பலப்படுத்தி அவர்கள் பேசுவதில்லை.
அந்த வகையில் திமுக அனைத்து விதமான சமூக தட்டுக்களுடன் அவை அநியாயமாக இருந்தால் கூட இணைந்து செல்லவே விரும்புகிறது. திராவிட இயக்கத்தின் சீரழிந்த இந்த நிலை ஒருபுறமிருக்கட்டும்.
ராமதாஸ் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்? தலித் மக்கள் மீது துவேஷத்துடன் பேசினார் என்றாலும் அதை தவிர்த்த மற்ற சட்ட பிரச்சினைகளை வைத்து கைது செய்திருக்கிறது ஜெயா அரசு. ராமதாஸ் சமீப காலமாக சாதி வெறியையும், ஆதிக்க சாதி சங்க தலைவர்களை வைத்து கூட்டங்கள் நடத்தியதையும் கருணாநிதி கண்டித்ததே இல்லை. சொல்லப் போனால் கொங்கு வேளாளர் கட்சியுடன் சென்ற தேர்தலில் கூட்டணி வைத்ததே திமுக தானே.
திமுகவைப் பொறுத்த வரை சாதிக் கட்சிகள் தமது வலிமையை வாக்கு எண்ணிக்கையில் காண்பிக்கும் பட்சத்தில் வரவேற்று சேர்த்துக் கொள்ளும். பலமில்லை என்றால் சீண்ட மாட்டார்கள். ஆக இத்தகைய கணக்குகளை வைத்தே கருணாநிதி தற்போது ராமதாசுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். தேமுதிக வருகிறதா இல்லை என்ற நிச்சயமின்மை இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று ராமதாசுக்கும் ஒரு துண்டு போட்டு வைக்கிறார்.
அந்த அறிக்கையில் நாவடக்கம் குறித்துதான் அவர் கவலைப்படுகிறார். அதாவது திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் காடுவெட்டி குரு முதலான அற்பங்கள் அநாகரீகமாக பேசுவதுதான் அவரது கவலை. அது போல தன்னை மட்டுமல்ல மற்ற கட்சிகளையும் நாகரீகமாக பாமக பேசவேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள்.
மற்றபடி “நான் என்ன மேளம் அடிக்கிறவனா” என்று தலித் மக்களை இழிவு படுத்திய காடுவெட்டி குருவின் சாதித் திமிரெல்லாம் அவருக்கு கவலை இல்லை. தாங்கள் நினைத்தால் தமிழகத்தை எரித்து விடுவோம் என்று ஆதிக்க சாதி வெறியின் ‘வலிமையை’ அவர் தற்பெருமையாக பேசியதும் பிரச்சினை இல்லை. ஒருவேளை தன்னைவிட தாழ்த்தப்பட்ட மக்கள் மலிவானவர்கள் என்று கூட கருணாநிதி நினைத்திருக்கலாம்.
ஆனாலும் கருணாநிதி தன்னையறியாமலே கூட சில நல்ல விசயங்களை செய்யவும் வாய்ப்பிருக்கிறது. சமச்சீர் கல்வி, அண்ணா நூலகம், தலைமைச் செயலகம் தொட்டு பல்வேறு பிரச்சினைகளில் கருணாநிதிக்கு எதிர் தரப்பில் ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்ட ஜெயலலிதாவை நாம் அறிவோம். கருணாநிதியும் அறிவார்.
அதன்படி தான் ராமதாசை விடுதலை செய்யச் சொன்னால் அதற்கு நேரெதிராக அவர் மீது குண்டர்கள் சட்டம் போடக் கூட வாய்ப்பிருக்கிறது என்பது கருணாநிதிக்கு தெரியாதா?
அதனால் உண்மையில் கருணாநிதி பாமக தலைவர்கள் கைதை ஆதரிக்கிறாரா? அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்பதால்தான் இப்படி வஞ்சப்புகழ்ச்சி பாணியில் சொல்கிறாரா? இந்தக் குழப்பம் உங்களுக்கு இருக்கிறதா?
வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா..!
உயிர் கொடுத்த “ஜெ” க்கு நன்றி..
நல்ல நுணுக்கமான பார்வை என்றே இதைச் சொல்ல வேண்டும் .
\\கருணாநிதி தன்னையறியாமலே கூட சில நல்ல விசயங்களை செய்யவும் வாய்ப்பிருக்கிறது. சமச்சீர் கல்வி, அண்ணா நூலகம், தலைமைச் செயலகம் தொட்டு பல்வேறு பிரச்சினைகளில் கருணாநிதிக்கு எதிர் தரப்பில் ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்ட ஜெயலலிதாவை நாம் அறிவோம். கருணாநிதியும் அறிவார்.\\
உண்மையில் கருணாநிதி பாமக தலைவர்கள் கைதை ஆதரிக்கிறார் அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்பதால்தான் இப்படி வஞ்சப்புகழ்ச்சி பாணியில் சொல்கிறார். எதுக்கும் ஆச்சு என்ற பாணிதான்
தி.மு.க. மட்டுமல்ல, இன்று தங்களை பெரும்பான்மை தலித் மக்களின் பிரதிநிதிகள் என்று அறிவித்துக்கொள்ளும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எல்லா தலித் இயக்கங்கள்/கட்சிகளுமே ப.ம.க வுக்கு சற்றும் குறையாமல் கட்டைப் பஞ்சாயத்து செய்து தான் பிழைத்து வருகின்றன என்பதால், அவர்களுக்கு ராமதாசை எதிர்க்கும் அர வலிமை சற்றும் இல்லை. இதனால் பாதிக்கப்படுவது இந்த அமைப்புகளை நம்பும், நம்பாத எல்லா தலித் மக்களும் தான். புரட்சிகர அமைப்புகளின் அரசியலையும் பாதையையும் தவிர வேறு சரியான மாற்று கிடையாது என்பதை தலித் மற்றும் எல்லா சாதி உழைக்கும் மக்களும் தம் அனுபவத்தில் உணர்ந்துகொள்ள இதுதான் சரியான தருணம்.
பலமுறை அனுபவப்பட்டும், தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தும் அதை அவர்கள் உணராததற்கு எது காரணமாக இருக்குமெனக் கருதுகிறீர்கள்?
பிரச்சனைகளுக்கான தீர்வும், தீர்வுக்கான சரியான பாதையும் மக்களிடம் சென்று சேரவில்லை. அவர்களுக்கு புரியும்படி/ நம்பும்படி அவர்களுக்கு விளக்கவில்லை. தவறை மக்கள் மீது சுமத்த முடியாது, அதை கொண்டுசேர்ப்பவர்கள் தான் ஏற்கவேண்டும். அதுமட்டுமல்லாமல் மக்கள் இதையெல்லாம் அறியக்கூடாது என்பதில் மக்களை ஏய்த்துப்பிழைப்பவர்கள் திசைதிருப்பும் வேலையை நன்கு செய்கிறார்கள் திருமாவளவன், ராமதாஸு, கலைஞர், ஜெயா என்று அனைவரும் இதில் அடங்குவர்.
தீர்வும், பாதையும் மக்களிடம் சென்று சேராதது மட்டும் காரணமன்று என நினைக்கிறேன். அதையும் தாண்டி இன்னும் காரணிகள் இருக்கக்கூடுமென படுகிறது. எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. மக்களின் consciousness அதிகரிக்க வேண்டும் என்பதை மட்டும் குறிப்பாக சொல்ல முடியும்.
why is smaacheer kalvi mentioned to be a great thing?
it doesn’t compete with CBSE/ICSE?
if you have greaaaat knowledge why cant you people compete in IIT and foreign colleges for your engg courses.. for what purpose you are competing in local tamilnadu colleges…
They already do that,my question is out of concern.
un pillaiyum giramathil irukkuravan pillaiyum ore puthagathai padithaal unakku pidikkumaa?andha puthagam CBSE/ICSE sylabussaaga irunthaal othukkollavemaattaai.atharkku oru muthal adi vaithathume evvalavu ponguneengada dei poonaikku oru kaalam endraal yaanaikku nichayam oru kaalam undu.
aadhavan,
neenga nalla purinchikkunga,enga appa ammavum gramathula padichavunga thaan.
Gramthula ulla payyanum nalla padikka therinjavan thaan,kanidhamum ariviyalum avanukku theriyadhu varadhunnu oru avasiyamum illa.
katradhu thamizh padathula varra maadhiri pala prabhakargal irukkanga,aana padangaloda tharatha koraikanummnnu thevai illa,adhu assiriyar ozhunga illai endru thaan eNNa thonrugirathu.
ஹரி,
இது தொடர்பாக ஏகப்பட்ட கட்டுரைகள் வினவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. பெரும் விவாதங்களும் நடந்திருக்கின்றன. நானும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நீங்களும் தேடிப் படித்தறியலாமே? புதிதாக ஒரு வாதப் பொருளை இங்கு உண்டாக்க வேண்டாம்.
sari,ok.
ங்கராச்சாரி கைது செய்யப்பட்ட போது முதலில் அதனை வரவேற்றார், கருணாநிதி. ஆங்கில ஊடகங்களில் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் இந்த விசயத்தில் ஒன்றுபட்டிருக்கிறார்கள், என்றார்கள். உண்மையில் அது கருணாநிதிக்கு, அவர் தாங்கிய கொள்கைகளுக்கு பெருமை அளித்தது. ஆனால், கருணாநிதி அந்த பெருமையை விரும்பாமல், சங்கரனிடமிருந்து ஆட்சி பொறுப்பேற்ற உடனே நைவேத்தியம் பெற்றுக் கொண்டார்.
கருணாநிதி இப்போது இந்துத்துவ அரசியலோடு மோதும் இடம் சேது சமுத்திர பிரச்சினை. இந்த பிரச்சினையில், மற்ற ஓட்டு கட்சிகள் அனைத்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. கருணாநிதி மட்டுமே தீவிரமாக இருக்கிறார். இந்த திட்டம் செயல்பட துவங்கினால் அவருக்கு கிடைக்க இருக்கும் பெயர் என்பதை தாண்டி இப்பிரச்சினையில் இந்துத்துவ அரசியலோடு வலிந்து அவர் மோத விரும்புவது தெரிகிறது. மே 15 -லிருந்து சேது சமுத்திர திட்டம் குறித்து விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த இருக்கிறார். கருணாநிதி இந்த விசயத்திலாவது வழக்கமான வழவழா அரசியல் நிலையை கடைபிடிக்காமல் இருக்கட்டும்.
ஓ! இப்படி எல்லாம் கூட அரசியல் வாதிகளின் பேச்சுக்களில் உள்ளர்த்தம் இருக்கிறதா? நல்ல அலசல். இரசிக்க முடிகிறது.
கருணானிதி பெரியாரிடம் பகுத்தறிவும், ராஜாஜியிடம் அரசியலும் கற்றவர்! பகுத்தறிவு அவவப்போது பதுஙகிக்கொண்டாலும், சாணக்கியம் எப்போதும் விழித்துக்கொண்டிருக்கும்! பெரிய்வர் என்ற வகையில் அவரின் அறிவுரைகளை அனைவரும் ஏற்கவேண்டும்! ஆடுகள் சண்டையிட்டு ஓனாய்களுக்கு விருந்தாக வேண்டுமா? சமீப காலமாக மருத்துவர் அய்யா, தமிழ்னாட்டு முத்தாலிக் போலத்தான் பேசிவருகிரார்! இது ஒரு திட்டமிட்ட அரசியல்நாடகம் ! ஜெயாவின் அரசாட்சி அப்படியே எம் ஜி யார் பாணி போல இல்லை?
வினவு கருனானிதியை விமர்சிக்கிறதா, ஏட்டிக்கு போட்டி என்பதை தவிர மற்றபடி சொந்த மூளை இல்லாதவர் என்று ஜெயாவை விமர்சிக்கிறதா?
தலித் மற்றும் வன்னியர் இல்லாத அதிகாரிகள் நடுநிலை விசாரணை நடத்தவேண்டும். இப்போது பெரும்பாலான காவல் துறை அதிகாரிகள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவே இப்போது அளிக்க பட்டு இருக்கும் கோப்புகள் அனைத்தும் தலித் சமூகத்துக்கு சாதகமாக உள்ளது. தலித் என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு பிற சமூகம் மீது பழி சுமத்தலாம் என காலம் மாறி கொண்டு வருகிறது. இப்படி செய்வதால் தலித் மக்கள் பிற இனத்தவரிடம் இருந்து அன்னியப்பட்டு கொண்டு வருகிறார்கள். தலித் என்பது குற்றம் செய்து தப்பிக்க கொடுத்த பட்டம் இல்லை
உங்களது விளவு வெப்சைட், ஒரு சாதினர்க்கு சாதகமாக செயல் படுகிறது, மற்ற சாதியினரை இழிவு படுத்துகிறது என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது…இவ்வாறு தங்களது வெப்சைட் முலம் தமிழ் நாட்டின் சாதி கலவரம் ஏற்பட துண்டுகீர்கள்,இப்படியே ஒரு தலைபச்சமாக செயல் பட்டால் கண்டிபாக தாங்கள் பல வினைவுகனை, நீதிமன்றத்தில் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்…
இராஜ்குமார்
அட்வகேட்
வாருமய்யா வக்கீலு, மேடை போட்டு ஒரு சாதிக்கு விரோதமாக எல்லோரும் நாய்கள் போல் குரைத்த போது எங்கே போயிருந்தீர்? நீதி மன்றத்தில் உறங்கிக் கொண்டிருந்தீரா? சாதிக் கலவரத்திற்கான காரத்தை தூவி விட்டு விட்டு, அதை விசிறி விடுவதற்கு மற்ற சாதி அசிங்கங்களை துணைக்கு வைத்துக் கொண்டு வீராப்புடன் பேசும் போது என்ன மப்பில் இருந்தீரா? போய்யா விளங்காதவரே!
/உங்களது விளவு வெப்சைட்/
யோவ் வக்கீலு அது விளவு இல்லை வினவு.
எங்க சொல்லு
வி….
ன….
வு…
வினவு.
நீரெல்லாம் என்ன….த்த வாதாடி,
என்ன….த்த சாட்சியம் வச்சு,
என்னமோ போ.
இதுக்க எங்க வக்கில் வண்டுமுருகன் எவ்வளவோ தேவல.
அண்ணே ராஜ்குமார்,
மொதல்ல தமிழ்ல ஒழுங்கா எழுத கத்துக்குங்க!
// விளவு
வினவு
// சாதினர்க்கு
சாதியினருக்கு
// தமிழ் நாட்டின்
தமிழ் நாட்டில்
// தூண்டுகீர்கள்
தூண்டுகிறீர்கள்
// வினைவுகனை
விளைவுகளை
உங்க சீனியர் யாரு? வக்கீல் வண்டு முருகனா?
தமிழ் நாட்டில் மொத்தம் 20 சதவிகிதம் தலித் மக்களே வாழ்கின்றன…
அப்படி இருக்கும் போது எப்படி அய்யா எல்லா அரசு அதிகாரிகளும் அவர்களாகவே இருக்க முடியும்..
அப்படியென்றால் மொத்த தலித்துகளும் அரசு அதிகாரிகளாகவா உள்ளனர்…?
வாய் கூசாமல் பொய் கூறாதீர்கள்…
துச்சாதனன் துகிலுரித்துக் கொண்டு இருக்கிறான். பீஷ்ம பிதாமகர் இதுவரை ஏதும் பேசாமல் வாய்மூடி மௌனியாய் இருந்தார். இப்போது திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார், “அவன் ஒரு பொண்ணை அவமானப் படுத்தம்னு அப்படி செய்யலீங்க. புடவை டிசைன் எப்படி இருக்குன்னு பாக்கத்தான் உருவினான். பச்ச புள்ள. தெரியாம செஞ்சுட்டான் மன்னிச்சு உட்டுடுங்க”. “நாவடக்கம்” என்ற சொல்லுக்கு இளம்பூரணர் எழுதிய உரை இது!
கூட்டணியை மனதில் வைத்து கலைஞர் செய்யும் பச்சையான கேப்மாரித்தனம் இது. வழக்கமாக எல்லாரையும் தோலுரித்து தோரணம் கட்டும் நீங்கள் இந்த விஷயத்தில் ஏனோ காமெடி செய்து மழுப்பிக் கொண்டு இருக்கிறீர்கள். ஏனோ?
அல்லது “வஞ்சப்புகழ்ச்சி” என சீரியஸாதான் சொன்னீங்களா? அப்படின்னா கேக்கறவன் கேனை. எருமைமாடு ஏரோப்ளேன் ஓட்டும். எலிகாப்டரும் ஓட்டும்.
திருக்குவளையில் பிறந்த கருணாநிதி,திராவிடத்தால் வளார்ந்தார்.அண்ணாவோடு சேர்ந்து அமைச்சர் ஆனார்.மூத்த தலைவர்களை முகம் குப்புறத் தள்ளி முதலமைச்சர் ஆனார்.அரசியல் சாணக்கியம் கற்று அவர்தம் குடும்பத்தை அதிகாரத்துக்கு வாரீசாக்கினார்.திருமண வீட்டில் மணமகனாகவும்,எழவு வீட்டில் புணமாகவும் முன்னின்று புகழ் சேர்க்கிறார்.ஆட்சியும் கட்சியும் எப்போதும் அவருக்கு சொந்தமாக இருக்கும் சூழல் வேண்டிடுவார்.ஆட்சி போனாலும் கட்சி கையிலிருக்கும்.குடும்ப சண்டையைக் கூர்மையாய் வளர்த்துவிட்டு கூர்ந்து கவனிப்பர்.கூட்டணி தர்மத்தில் அவர்தான் தமிழகத்தின் முன்னணி.ஆரிய எதிர்ப்பு ரத்ததில் ஊறிப்போயிருக்கும்.ஆர்.எஸ்.எஸ். கூடிவரும்போது ரத்தம் மரத்துவிடும்.அடைந்தால் திரவிட நாடு இல்லாவிட்டால் ஆளை விடு.எந்த சாதியில் எவ்வளவு வோட்டு யாருக்கு விழும்.விரல் நுனியில் விளையாடும் புள்ளிவிவரம்.ஆனால் சாதித் தலைவர் இல்லை.வன்னியர் ஓட்டைக் குறிவைதே மருத்துவருக்கு சிகிச்சை.அரசியலில் யாரும் நிரந்தர உறவுமில்லை,பகையுமில்லை என்ற உயரிய தத்துவதிற்கு உயிர் கொடுத்த பிறவிக் கலைஞர்.இப்போது அம்ம்ம்மாவுக்கு ஆசான் இவர்தான்..எதிர்மறை ஆசான்.கருணாநிதியைப் பற்றி இப்படி கவிதை பாட அந்தக் கலைஞரால் தான் முடியும் என்பது முக்கால உண்மை .இதை நான் இன்றைய கடமை, கண்ணீயம்,கட்டுப்பாடோடு சொல்கின்றேன்.தொண்ணூறு வயதிலும் ஓய்வின்றி உழைக்கிறார், உருளுகின்றார்.எல்லாவற்றிலும் வளர்ச்சியே கண்டார்;ஆனால்..அந்தோ கொள்கை மட்டும் குழிக்குள் போனது!!!
yes, engalukum andha doubt iruku… Karunanidhi playing double game…