முகப்புஅரசியல்ஊடகம்சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!

சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!

-

‘சொல்வதெல்லாம் உண்மை’ –  இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கும் அதே பழைய மசாலா. கண்ணீர், கோபம், ஆவேசம், அடிதடி எல்லாம் இதிலும் உண்டு. விஜய் தொலைக்காட்சியில் லஷ்மி செய்த வேலையை ஜீ (Zee) தமிழில் இப்போது நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். (முன்பு நிர்மலா பெரியசாமி செய்தார்). தாங்க முடியாத அருவருப்பும், ஏழை மக்களின் அந்தரங்க வாழ்கையை அம்பலமேற்றி காசு பண்ணும் வக்கிரமும் நிறைந்த இந்த நிகழ்ச்சி சமூக உளவியலில் பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது.

சொல்வதெல்லாம் உண்மைஅடுத்தவர்களின் அந்தரங்கத்தை தெரிந்துகொள்ளத் துடிக்கும் மனித மனதின் வக்கிரத்தை வளர்த்தெடுப்பதுதான் இதன் முதல் அபாயம். அரசல் புரசலாகவும், தாங்கள் ஒரு தவறிழைக்கிறோம் என்ற குற்றவுணர்வுடனும் புரணி பேசும் மக்களை, அந்த மனத் தயக்கத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி விடுவிக்கிறது. கள்ள உறவுகள், விடலைகளின் காதல் பஞ்சாயத்துகள், குடும்ப சிக்கல்கள்… இவற்றை தொடர்ந்து பார்க்கும் மக்களின் மனம் ‘தான் மட்டும் தவறிழைக்கவில்லை; ஊரே இப்படித்தான் இருக்கிறது’ என எண்ணுகிறது.

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என இதை எடுத்துக்கொள்வது ஒரு வகை. மாறாக, தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களின் மனம் தன் கணவனை, தன் மனைவியை, உறவுகளை, சுற்றங்களை சந்தேகிக்கிறது. புதிய குடும்பச் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த இரண்டு வகைகளையும் தாண்டி, ‘எல்லாரும் செய்யுறான்.நாமளும் செய்வோம்’ என எண்ண வைத்து ஒழுக்கக்கேட்டுக்கு ஓபன் பாஸ் கொடுக்கிறது.

முதலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வரும் பங்கேற்பாளர்கள் யார்? பார்வையாளர்கள் யார்? தங்கள் சொந்தக் குடும்பப் பிரச்னையை பொதுவில் வைத்துப் பேசத் தயங்காத உழைக்கும் வர்க்கத்து ஆண்களும், பெண்களும்தான் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். போலி கவுரவத்தை காப்பாற்றுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இதன் பார்வையாளர்கள். தங்கள் வீட்டின் ரகசியங்கள் வாசல் வரையிலும் கூட சென்றுவிடக்கூடாது என அப்பார்ட்மென்டின் கதவுகளை இறுக மூடிக்கொண்டு முடைநாற்றத்தை அடைத்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை இரவு நேர பொழுதுபோக்காக ரசித்துப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தீர்ப்பு வழங்கிய; வழங்கும் லஷ்மி, நிர்மலா பெரியசாமி, லஷ்மி ராமகிருஷ்ணன் போன்றோர்… இந்த இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்களும் அல்ல. அவர்கள் அசல் மேட்டுக்குடிகள். ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவத்தில் அல்ல… கேள்வி ஞானத்தில் கூட அறிந்துகொள்ள விரும்பாத இவர்கள்தான் ஏழைக் குடும்பங்களின் பிரச்னைகளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். அதுவும் அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் அறிவார்ந்த தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே நிலவும் ஆணாதிக்க மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே பேசுகின்றனர். ஏழைகளின் பிரச்னைகளை நடுத்தர வர்க்கம் பார்த்து ரசிக்க, மேட்டுக்குடிகள் தொகுத்து வழங்க, முதலாளிகள் கல்லா கட்டும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஒரே ஒரு பணக்காரக் குடும்பம் கூட கலந்துகொண்டது இல்லை.

ஆனால் தங்கள் சொந்தப் பிரச்னைகளை கேமராவின் முன்பு மக்கள் எப்படி கூச்சமின்றிப் பேசுகின்றனர்? நீங்களும், நானும் பேசுவோமா?ஆனால் இவர்கள் பேசுகிறார்களே, எப்படி? “அவங்க காசு வாங்கியிருப்பாங்க”  என்றோ, “எல்லாம் செட்-அப்” என்றோ பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு விடை காண ’சொல்வதெல்லாம் உண்மை’ எப்படி உருவாகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சமாதானம், சண்டை, பேச்சுவார்த்தை, போலீஸ் புகார்… என பல வழிகளிலும் தங்கள் குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு தேடி முயற்சித்து, எதிலும் தீர்வு கிடைக்காமல் உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கும் மக்கள்தான் இவர்களின் இலக்கு. ‘ஏதேனும் ஒரு வழியில் பிரச்னை தீராதா?’ என ஏங்கிக் கிடப்பவர்களை அணுகி, ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’ என ஆசைகாட்டி அழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை திறந்து, தங்களுக்கு டி.ஆர்.பி. தரக்கூடிய செய்திகளை கண்டறிவதுதான் இவர்களின் அதிகப்பட்ச ஆய்வுப்பணி. அடுத்த கட்டமாக அந்தந்த ஊரில் இருக்கும் அவர்களின் நிருபர், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து தேன் ஒழுகப் பேசுவார். மனைவியை மடக்கிவிட்டால் போதும், கணவனை அழைத்து வருவது எளிது.

‘உங்க மனைவி எங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் உங்களை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார். நீங்கள் வந்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவில்லை எனில் அவர் சொல்வது மட்டும்தான் வெளியே வரும். டி.வி. பார்ப்பவர்களுக்கு அதுதான் நியாயம் என்று தோன்றும்’ என்று தர்க்கப்பூர்வமாக மடக்குவார்கள். ‘எங்கள் நிகழ்ச்சியில் வந்து பேசிவிட்டால் உங்களுக்கு நீதி கிடைத்துவிடும். அதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று ஆசை காட்டுவார்கள். ‘படித்தவர்கள் ஏமாற்றமாட்டார்கள்’ என்று நம்பி வரும் ஏழைகளை திட்டமிட்டு உணர்ச்சிவசப்படச் செய்து, அறிவின் தந்திரத்தால் அழ வைத்து… அனைத்தையும் படம் பிடிப்பார்கள். நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இடைவேளையில், பங்கேற்பாளர்களின் நடவடிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினரால் உளவியல் உத்திகள் வகுக்கப்படும். குறைந்த பட்சம் கண்ணீர், அதிக பட்சம் அடிதடி… எதுவும் சிக்கவில்லையா? ஒரு சென்டிமெண்ட் டிராமாவுக்கு உத்திரவாதம் கிடைத்துவிட்டால் தயாரிப்புக் குழுவுக்கு நிம்மதி. அதன்பிறகு அந்த குடும்பம் சேர்ந்ததா, பிரிந்ததா, நடுத்தெருவில் நிற்கிறதா என்பதை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

சொல்வதெல்லாம் உண்மை
‘ சொல்வதெல்லாம் உண்மையில் ‘ கலந்து கொண்ட ஒரு பெண் ! ஜீ டி.வி.யின் விற்பனைப் பொருள்.

பொதுவாக உங்கள் வீட்டில் யாராவது அடித்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்? உடனே ஓடிச்சென்று விலக்குவீர்கள். அதையும் மீறி சண்டை நடந்தாலும் ‘நாலு பேருக்குத் தெரிந்தால் அவமானம்’ என்று கண்டிப்பீர்கள். இது மனிதர்களின் பொதுப் பண்பு. ஆனால் இவர்களை பொருத்தவரை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அடித்துக்கொண்டால் உற்சாகம் அடைகிறார்கள். முடிந்தவரை அதை உசுப்பேற்றி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என நம்பி வருபவர்கள் நிகழ்ச்சி முடியும்போது பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு வருவதால் பிரச்னை தீர்வதில்லை; அதிகமாகிறது என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. கொட்டிய வார்த்தைகளும், அழுத கண்ணீரும் நாளை தொலைகாட்சியில் வரப்போகிறது என்ற எண்ணமே அவர்களை அச்சுறுத்துகிறது. தாங்கள் ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கியதைப் போல உணர்கிறார்கள். “சார், டி.வி.ல போட்றாதீங்க சார். பேசுன வரைக்கும் பேசுனதா இருக்கட்டும். இப்படியே விட்ருங்க சார்” என்று கெஞ்சிக் கதறினால் அதையும் படம் பிடிப்பார்களேத் தவிர நீதி கிடைக்காது. மாறாக நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்வரை கருணை முகம் காட்டியவர்களின் உண்மை முகம் அப்போதுதான் வெளியே வரும். இதுதான் “தி மேக்கிங் ஆஃப் சொல்வதெல்லாம் உண்மை”.

ஆனால் இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா?

பஞ்சாயத்துக்கு வருகின்ற பிரச்சினைகள் ஒரே விதமாக இருந்தபோதும், பார்வையாளர்களைப் பார்க்க வைப்பது எப்படி என்பதே இவர்களது பிரச்சினை. எனவே, தனியே அழைத்துப் போய் உசுப்பேற்றிவிடுவதும், மோதலை உருவாக்குவதும் இத்தகைய நிகழ்ச்சிகளில் சர்வ சாதாரணமானது. இதை கேமராவுக்குப் பின்னே சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நிகழ்ச்சியிலேயேப் பார்க்க முடியும். சமீபத்தில் ஒரு விடலைப் பையனும், பெண்ணும் காதல் பஞ்சாயத்துக்கு வந்திருந்தனர். பெண்ணின் அம்மா எதிரே அமர்ந்திருக்கிறார். தன் அம்மா ஒரு விபச்சாரி என்று பட்டவர்த்தனமாக அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார். உடனே நிகழ்ச்சியை நடத்தும் லஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார். அனைத்தும் ஒளிபரப்பப்படுகிறது. இனி சாகும் வரையிலும் அந்த அம்மாவும், மகளும் சேரப் போவது இல்லை.

இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், டி.வி-யில் ஒளிபரப்பான பிறகு என்னவாகிறது என்பதை யாரும் பேசுவதில்லை. என்.டி.டி.வி-யில். ’ராக்கி கா இன்சாப்’ என்ற பெயரில் இந்தி நடிகை ராக்கி சாவந்த் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு பெண், தன் கணவனை ஆண்மையற்றவன் என்று கூறியதால் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான். இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம்.

நிர்மலா பெரியசாமி
மேட்டுக்குடி நிர்மலா பெரியசாமி ஏழைகளின் கதைகளை விற்கிறார் !

இன்னொரு பக்கம் இந்த மேட்டுக்குடி பாப்பாத்திகள் நடத்தும் பஞ்சாயத்தின் மூலமாக, சாதாரண மக்கள் நெறிகெட்டவர்கள் போலவும், நாட்டாமை செய்யும் வர்க்கத்தினர் பெரிய ஒழுக்க சீலர்கள் போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் நீதிபதிகளாக செயல்படுகின்றனர். அதனால்தான் பல வீடுகளில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, அதில் கலந்துகொள்ளும் மனிதர்களுடன் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்கின்றனர். ‘அவன் மேலதான் தப்பு’ என்றோ, ‘ஐயோ பாவம் இந்தப் பொண்ணு’ என்றோ திரையில் விரியும் காட்சிகளுக்காக உண்மையாகவே மனம் இறங்குகின்றனர்.  கற்பனைக் கதைகளே பார்வையாளர்களின் கருத்தையும், கண்ணோட்டத்தையும் பாதிக்கும் என்னும்போது ரியாலிட்டி ஷோக்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.

சித்தரிக்கப்பட்ட டி.வி. சீரியல் பாத்திரங்களுக்காக பாவப்படும் மக்களின் மனம், அதை விட கூடுதலாக இந்த நிகழ்ச்சிகளோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. காரணம், சீரியல்களில் குடும்பத்தில் சண்டை நடக்கும். இதில் குடும்பமே நேரடியாக வந்து சண்டை போடுகிறது. தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றி பெறுவதற்கான அடிப்படை மக்களின் இந்த மனநிலைதான்.

ஆனால், உண்மையான மனிதர்கள், உண்மையான பிரச்னைகள் என்பது வரைதான் இது உண்மை. அந்த உணர்ச்சிகள் உண்மையானவை அல்ல. அது நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு தூண்டப்பட்டு மிகையாக சித்தரிக்கப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு போர்னோகிராபி. இதைப் பார்க்கும் ரசனையும் சாவித்துவாரம் வழியே பார்க்கும் அதே ரசனைதான்.

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் அப்பாவி ஏழைகளின் அந்தரங்கம் மட்டுமே அலசப்படுவதாக தெரியலாம். ஆனால் ஊடக வியாபாரத்தில் பணக்காரர்களின் அந்தரங்கமும் தப்புவதில்லை. பத்திரிகைகளின் சினிமா கிசுகிசு, மேற்குலகின் டயானா விவகாரம் போன்றவை இத்தகையவைதான்.

விஜய் டி.வி.
விஜய் டி.வி. ஷோக்கள் !

’ராக்கியின் சுயம்வரம்’ போன்ற நிகழ்ச்சிகள் அப்பட்டமாக ஒத்திகை பார்க்கப்பட்டு, திரைக்கதை எழுதப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. பணத்துக்காக சினிமாவில் ஆடைகளை அவிழ்த்து ஆபாச நடனம் ஆடும் ராக்கி சாவந்த், தனது திருமணத் தெரிவையும் டி.வி.யில் லைவ் ஆக நடத்தினார். ‘யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்’ என்ற அறிவிப்பு பரபரப்பான செய்தியாக மாற்றப்பட்டதே தவிர அது ஒரு அப்பட்டமான விபச்சாரம் என்பதை யாரும் பேசவில்லை. சபலத்துடன் பலர் விண்ணப்பித்தார்கள். முடிவில் ராக்கி ஒரு கனடா தொழிலதிபரை தெரிவு செய்தார். திருமணம் தள்ளிப்போடப்பட்டு, கடைசியில் ‘நடிக்கக்கூடாது என்று சொன்னதால் திருமணம் ரத்து’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் இது நாடகம் என்றும், இதில் பணத்துக்காக தானும், பிரபலத்துக்காக தொழிலதிபரும் நடித்ததாகவும் ராக்கி கூறினார். கோடிக் கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய குற்றத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. இதை வைத்து இவர்கள் கொள்ளையடித்த பணத்துக்கும் கணக்கில்லை.

2009-ம் ஆண்டு இந்தியத் தொலைகாட்சிகளின் மொத்த வருமானம் சுமார் 5.5 பில்லியன் டாலர். இதில் ரியாலிட்டி ஷோக்களின் வருமானம் கணிசமானது. இவர்களுக்கு 70 கோடி இந்திய செல்போன் வாடிக்கையாளர்கள்தான் முக்கிய இலக்கு.  ‘உங்கள் மனம் விரும்பிய போட்டியாளர் இவர் என்றால் … என்று டைப் செய்து இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்’ என்ற வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.ஸில் இருந்துதான் ரியாலிட்டி ஷோக்களின் 30 முதல் 40 சதவிகித வருமானம் வருகிறது. இந்த வருமானத்தின் அளவு குறைந்தால் ரியாலிட்டி ஷோக்களுக்காக இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களும் அதிகரிக்கும்.

solvethellam-2
மேற்கத்திய ரியாலிட்டி ஷோக்கள் ! உண்மையின் பெயரில் மலிவான ரசனை !!

இன்றைய நிலையில் தொழில்முறை ஆபாசப் படங்களைக் காட்டிலும் செல்போன்களில் எடுக்கப்பட்ட ‘கேண்டிட் வீடியோக்களுக்குதான்’ மவுசு அதிகம். யூ-டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் இத்தகைய ஒரிஜினல் 24 கேரட் வீடியோக்களுக்கான பார்வையாளர்கள் சர்வ சாதாரணமாக லட்சங்களைத் தொடுகிறார்கள். பள்ளி மாணவர்களின் செல்போன்களில் கூட இத்தகைய கேண்டிக் கேமரா காட்சிகள் இருக்கின்றன. இதற்கும் ’ரியாலிட்டி ஷோ’க்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

எப்போதுமே, நிலவும் டிரெண்டை பயன்படுத்தி கல்லா கட்டும் நிறுவனங்கள் ‘உண்மையை’ விரும்பும் மக்களின் மனநிலையை மட்டும் விட்டுவைக்குமா? பல தொலைக்காட்சி விளம்பரங்கள் கேண்டிட் கேமராவால் எடுக்கப்பட்டதைப் போல திட்டமிட்டு எடுக்கப்படுகின்றன. பஞ்சாராஸ் அழகு சாதனப் பொருள், இந்துலேகா எண்ணெய், ஆரோக்கியா பால் உள்பட பல விளம்பரங்கள் இப்படி ஒளிபரப்பாவதை காணலாம். இதை ‘ஒரு விளம்பர யுத்தி’ என்றோ, சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை ‘ஒரு கிரியேட்டிவ் கான்செப்ட்’ என்றோ சிலர் சொல்லக்கூடும். ஆனால் உண்மை வேறு. டி.வி.யை நிறுத்தியதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி தோற்றுவித்த உணர்வு மறைந்துவிடுவது இல்லை. மாறாக, அது உங்களை பயிற்றுவிக்கிறது. குரூரத்தை ரசிப்பதற்கு, வக்கிரத்தை விரும்புவதற்கு கற்றுத்தருகிறது. அது உருவாக்கும் உணர்வுதான் ஒரு போரை பொழுதுபோக்காக; போலீஸ் அராஜகத்தை ஹீரோயிசமாக புரிந்துகொள்ள இட்டுச் செல்கிறது.

இவர்கள் இத்தனை தூரம் மெனக்கெட்டு செட் போட்டு, கான்செப்ட் பிடித்து ரியாலிட்டி ஷோ நடத்தத் தேவையில்லாமல் சொல்ல வேண்டிய நடைமுறை உண்மைகள் ஏராளமாக நாட்டுக்குள் இருக்கின்றன. சாதித் தீண்டாமை முதல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரை ‘உண்மைகளுக்கா’ பஞ்சம்? இவற்றை சொல்வதற்கு எந்த ரியாலிட்டி ஷோவிலும் இடம் இல்லை. எனில் இவற்றை ‘ரியாலிட்டி ஷோ’ என்ற சொல்லால் அழைப்பதே தவறானது. உண்மையில் இவற்றின் ஒவ்வொரு நொடியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திரைக்கதை எழுதப்படுகின்றன. வட இந்திய சேனல்களில் இது இன்னும் பச்சையாக நடக்கிறது.

solvethellam-1பொதுவாக இந்த ரியாலிட்டி ஷோக்களில் சுற்றி உட்கார்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கிறார்களே… அவர்களை ரசிகர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அவர்கள் தினக்கூலி அடிப்படையில் ரசிகர்களாக நடிக்கிறார்கள். வியப்பதும், சிரிப்பதும், கை தட்டுவதும், பயப்படுவதும்தான் அவர்களின் வேலை. தமிழ் சேனல்களை பொருத்தவரை இந்த ரசிகர்களை பிடித்து வருவது அந்தந்த ரியாலிட்டி ஷோவின் புரடியூசரின் வேலை. வட இந்தியச் சேனல்களில் இத்தகைய பணி அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. அங்கு டி.வி. நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களை சப்ளை செய்வதற்கு என்றே தனிப்பட்ட ஏஜென்ஸிகள் செயல்படுகின்றன.

இத்தகைய ஆடியன்ஸ் சப்ளை சர்வீஸில் ஆறு ஆண்டு கால அனுபவம் பெற்ற ராஜீ கபூர், “ரசிகர்களாக வருபவர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்?” என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஓர் அறிவிப்பு வெளியிட்டால் கூட்டம் வரும்தான். ஆனால் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்பு நேரம் மிக, மிக அதிகம். சாதாரண பார்வையாளர்கள் அவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க மாட்டார்கள். எந்த நேரமும் எழுந்து சென்றுவிடுவார்கள். அதனால்தான் இப்படி பணம் கொடுத்து அழைத்து வருகிறோம். அது மிகக் குறைந்த தொகைதான் என்றபோதிலும், சிலிர்ப்புமிக்க ரசிகராக நடிப்பதற்கு அவர்களுக்கு அந்தத் பணம் கொடுக்கப்படுவதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்.

அதாவது நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் எந்த இடத்தில் அழ வேண்டும், எங்கு சிரிக்க வேண்டும், எப்போது கை தட்ட வேண்டும் என்ற அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. ஹிட்லர் காலத்தில் அவர் உரையாற்றும்போது, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அவரது ஆட்கள் குறிப்பிட்ட இடத்தில் கை தட்டுவார்களாம். அதைப் பார்த்து மற்றவர்களும்  தட்டவேண்டும்; தட்டுவார்கள். அதற்குப் பெயர் பாசிசம். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரமாம்!

– வளவன்
_______________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

 1. பணத்திற்காக எப்படியெல்லாம் கேவலமான வக்கிர ஆபாச நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என தி நகர் ஜீ டிவி அலுவலகம் இருக்கும் பகுதி மட்டுமல்ல ஒட்டுமொத்த உழைக்கும் மக்களிடமும் பிரச்சாரம் செய்து இவர்களை தோல் உரிக்க வேண்டும்.

  சீரியல்களை விட இந்த பிராடு நிகழ்ச்சியின் அடிமைகள் அதிகரித்து வருவது அவ்வளவு நல்லதல்ல.

 2. ” டி.வி.யை நிறுத்தியதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி தோற்றுவித்த உணர்வு மறைந்துவிடுவது இல்லை. மாறாக, அது உங்களை பயிற்றுவிக்கிறது. குரூரத்தை ரசிப்பதற்கு, வக்கிரத்தை விரும்புவதற்கு கற்றுத்தருகிறது. அது உருவாக்கும் உணர்வுதான் ஒரு போரை பொழுதுபோக்காக; போலீஸ் அராஜகத்தை ஹீரோயிசமாக புரிந்துகொள்ள இட்டுச் செல்கிறது.”

  முற்றிலும் உண்மை

 3. //சித்தரிக்கப்பட்ட டி.வி. சீரியல் பாத்திரங்களுக்காக பாவப்படும் மக்களின் மனம், அதை விட கூடுதலாக இந்த நிகழ்ச்சிகளோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. காரணம், சீரியல்களில் குடும்பத்தில் சண்டை நடக்கும். இதில் குடும்பமே நேரடியாக வந்து சண்டை போடுகிறது. தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றி பெறுவதற்கான அடிப்படை மக்களின் இந்த மனநிலைதான்.//

 4. நல்ல கட்டுரை.

  சேனல்களை மாற்றும் சமயம் எப்போதாவது இந்த நிகழ்ச்சி கண்ணில் படும். ஓரிரு நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியாது. அருவருப்பான நிகழ்ச்சி. ஏழைகளை மற்ற விதங்களில் சுரண்டியது போக, இதில் பொழுதுபோக்குக்காக சுரண்டுகிறார்கள். ஏழ்மை என்பதி மீறி ஜாதீய நோக்கும் இருப்பதாக நினைக்கிறேன். உதாரணமாக இதில் ஏழை பார்ப்பனர் யாரும் பங்கேற்றதாக தெரியவில்லை (என் கண்ணில் பட்டதில்லை).

  • ithey moon tv/angel tv paarunga… hindukalai(islamiya tv-la christhavargalaiyum viduvathillai) avamaana paduthi, naanga kalla kumbittu irunthom, aprom islatha ethukittom [or] Jesus vanthu engala kaapathunaaru, ippo naanga enga puthu mathatha kaapatha kelambittomnu oru group reality show pannuthu.

  • Do you know the caste of each and every participant in that show? What do you expect – some body dressed in Panchagacham and Madisar getup showup? It looks like people like you are the ones conscious about caste and look for caste in everything. It is time Vinavu write an article for the benefit of readers like you, the list of all TV anchors and their castes.

 5. /இன்னொரு பக்கம் இந்த மேட்டுக்குடி பாப்பாத்திகள் நடத்தும் பஞ்சாயத்தின் மூலமாக/

  என்னடா இன்னும் விஷ ஊசி பொடலியேன்னு பார்தேன்…குட்டி ராமதாஸ்யா நீ…

  • வினவு போடுற விஷ ஊசிக்கு முன்னாடி – ராமதாஸ் எல்லாம் வெறும் கம்பவுண்டர் தான்.

  • ஆமாம் ..இதை செய்வதெல்லாம் பாப்பாத்தி என்பது உண்மை தானே ..
   உண்மையை சொன்னால் விஷ ஊசியா ?
   எப்போது தீரும் உங்கள் திமிர் ..

   • நிகழ்ச்சி தயாரித்தவனை விட்டுட்டு, நிகழ்ச்சி நடத்தறவனை திட்டுற கேணைகளை என்னன்னு சொல்றது. ///////////

    எப்போது தீரும் உங்கள் திமிர் ..///////////

    உண்மையை பேசுபவனின்
    திமிரெல்லாம் தீராது. உரம் போட்டு வளர்ப்போம்.

   • எல்லா நிகழ்ச்சி விமர்சனங்களிலும் தொகுப்பாளர் ஜாதிய வெச்சு விமர்சனம் பண்ணலாமா? இது திமுரு இல்லை நாங்க சொல்றது திமிரா??? we all need soft targets rite??

    • ஏன் பாப்பன்,பாப்பாத்தி குடும்பங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் இல்லையா? அப்படி நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால் அவர்களை கூட்டி வந்து பேசசொல்லவேன்டியதுதானே? இதன் மூலம் நீங்கள் மறைமுகமாக சொல்லுவது , மேட்டுக்குடியினர் உயர்ந்தவர்கள்,நல்லவர்கள், அவர்கள் குடும்பங்கள் நாணயமானவை. ஆனால் உழைக்கும் வர்கத்தினர் மோசமானவர்கள். என்னே உங்கள் நேர்மை.

     • பார்ப்பனர்களைப் பற்றி இழிவாகப் படம் எடுக்கலாம், சீரியல் எடுக்கலாம்.. ஆனால் அவர்களை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதில் நிகழ்ச்சி தயாரிப்பவர்கள், நடத்துபவர்கள் போன்றோருக்கு சில பல பிரச்சினைகள் உண்டு..

      1. போதிய சுவாரசியம், திகில் இல்லாமல் தயிர்சாதம் போல நிகழ்ச்சி அமைந்துவிடலாம்..

      2. பாதிக்கப்பட்ட பார்ப்பனர்களின் இரு தரப்பினரும் தொலைக்காட்சியில் தங்கள் பிரச்சினைகள் வெளியாவது பிரச்சினையை விட மோசமானதாக நினைத்து உசாராக விலகிக் கொண்டிருக்கலாம்..

      3. அதற்கும் துணிந்து கலந்து கொள்வோர், படபிடிப்பு முடிந்ததும் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் நிகழ்ச்சி நடத்தியவரின் வீட்டுக்கு தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ வந்து, நீங்களே ஒரு வழி சொல்லுங்கோ மாமி என்று வீட்டுக் கூடத்தில் அமர்ந்து பஞ்சாயத்தைத் தொடரலாம்..

      விறுவிறுப்பால் சுலபமாக பெயர்,புகழ் (?) வரும் என்றால் எந்தச் சாதியைச் சார்ந்த நிகழ்ச்சி நடத்துபவரும், தயாரிப்பவரும் சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை.. ஏதேனும் ஒரு பாப்பாத்தி நடத்தும் நிகழ்சியில் என்ன கோளாறு இருக்கிறது என்று கண்டுபிடித்து அதை சர்வதேசப் பிரச்சினை ஆக்காவிட்டால் முற்போக்கு என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலைமை தமிழகத்தில் இன்று நிலவுகிறது..

     • irukkutho illayao,

      avunga irukkaruthu 1%,govt offiecula ellam ippo paarpaan ilathathai pola,tv prachanayilum illai,avlo thaan.

      romba aasaiyya iruntha,neenga oru 2C sponsor senju,oru kudumbatha kooti vaanga.

  • Mr. மாடுரை,

   தங்களை தாங்களே பெரிய புடுங்கி என்று நினைத்துக்கொள்வது, மற்றவர்களை விட உயர்வானவர்கள் என்று சொல்லிக்கொள்வது இப்படி பட்டவர்களை என்ன சொல்லலாம் தியாகிகள் என்றா? எதை வைத்து தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிகொள்கிறார்களோ அதை அம்பலப்படுத்தினால் தான் கொஞ்சமாவது சொரணையும், அறிவும் வரும்.

   • அடப்பாவி,

    இதுல வர்க(மேட்டுகுடி) திமிரு தான் இருக்கே தவிர ஜாதி எங்க இருந்து சார்வாள் வந்துச்சு??? அப்போ இதுக்கு முன்னே இதே நிகழ்ச்சிய நடத்துனது நிர்மலா பெரியசாமி…அவங்க பாப்பாத்தியா?? இல்ல இதே பொல நிகழ்ச்சி செய்யும் கோபிநாத் பார்பனரா?? போங்க boss…

   • aana,inga panchayattu thaana avunga seiraanga,sari munnoru kalathula irunthu naan thaan periya pudunginnu paarpan solran,illa illa unnai vida naanga thaan periya pudungi nnu ippo yaar ellamo solraanga,

    idhulla neenga modhalla irunthu arambam seiveengala,illa latestula orunthu start pannuveengala.

  • Vinavu would use the caste only when they are against that person but if Vinavu is in agreement with that person, they would not say anything. Read Vinanv’s article about KG Kannabiran – doyen of human rights movement, acknowledging his contribution. FYI – He comes from an Iyengar family, his initials K.G. standing for Kandhadai Govindasamy Iyengar. If you ask Vinanvu, they would say BS “We are not against Brahmins but only against Brahminism”. I really like artices in Vinanvu for taking a perspective different from the mainstream junk, but would be great if they could avoid references to “Caste” when they are not required. Caste would not go away just because you repeat it – in fact, it reiterates the caste consciousness even on people who do not think about it otherwise.

 6. தங்கள் சொந்தக் குடும்பப் பிரச்னையை பொதுவில் வைத்துப் பேசத் தயங்காத உழைக்கும் வர்க்கத்து ஆண்களும், பெண்களும்தான் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். போலி கவுரவத்தை காப்பாற்றுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இதன் பார்வையாளர்கள்……………
  ஏன்யா நடுத்தர வர்க்கத்தினர் யாரும் உழைக்கவில்லையா…. உழைக்கும் வர்க்கம்னு ஒரு எழவும் கிடையாது… வேலை செய்தா துட்டு.. இது எல்லா வர்கத்துக்கும் பொருந்தும்… இவனுங்க எதுக்கு நாக்க தொங்கப்போட்டுகிட்டு வரானுங்க… இருக்க வேண்டியது தானே வீட்டிலேயே??? இப்பாவாவது ஒத்துக்கோ இந்த வர்கத்துக்கு அறிவு இல்லைனு…. என் பாவாடை அவுந்தது தப்பில்லை ஆனா பக்கத்து வீட்டுக்காரி சிரிச்சது தப்புன்னா எப்படி??? இப்ப தென் தமிழகத்துல கலவரம் செய்து கொண்டிருக்கும் வர்க்கம் உழைக்கும் வர்க்கமா இல்லநடுத்தர வர்க்கமா???

 7. அடுத்தவர்களின் அந்தரங்கத்தை தெரிந்துகொள்ளத் துடிக்கும் மனித மனதின் வக்கிரத்தை வளர்த்தெடுப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். அரசல் புரசலாக தாங்கள் தவறிழைக்கிறோம் என்ற குற்றவுணர்வை மனத்தயக்கத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி விடுவிக்கிறது. கள்ள உறவுகள், விடலைகளின் காதல், குடும்ப சிக்கல்கள் ஆகியவற்றை தொடர்ந்து பார்க்கும் மக்களின் மனம் தான் மட்டும் அழுக்கு இல்லை, இந்த உலகமே சாக்கடைதான் என்ற மனநிலைக்கு போகிறார்கள்.
  நீண்ட நாளுக்கு பிறகு நல்ல உருப்படியான பதிவு. வாழ்த்துக்கள் ஆசிரியரே.

 8. பல பதிவுகளை படித்து வினவு ஆசிரியருடன் முரண்பட்ட கருத்து கொண்டாலும் எதிர் பின்னூட்டம் இடுமளவுக்கு பொறுமை இருப்பதில்லை. பிடிக்காத பதிவை விமர்சனம் செய்வதைவிட மனதுடன் ஒத்த பதிவை பாராட்டலாமே. என்ன சரிதானே ஆசிரியரே?

 9. ரியாலிட்டி சோஸ் எப்படி நடக்கின்றன என்பதை விரிவாக சொன்ன வினவு க்கு நன்றி. ஆடியன்ஸ் பத்தி புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.

 10. What is ur intention? 2 degrade brahmins? or Solvathellam unmai? Do u mean 2 say all the poor people r fools, Sorry. They come here to get some solutions.Some times they getit.By the by brahmins have also participated in these shows to get some solution/ result.Pl. don’t try 2 get mileage out of ur hatred towards Brahmins.U didn’t say anything when same programme was conducted by Mrs. Nirmala Periyasamy.

  • இது எப்படி இருக்கிறது என்றால், ஊருக்கு ஊர் மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிக்காதீர்கள், மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு என்று சொல்லுவது போல் உள்ளது.

 11. இந்த நிகழிச்சி இன்னும் பிரபலம் அடைய எனக்கு ஒரு எண்ணம். கூத்தாடிகளை அழைத்து வந்து அவர்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை பேசசொன்னால் நன்றாக இருக்கும். குறிப்பாக ரஜினி, கமல் போன்ற முன்னணி கூத்தாடிகளை அழைத்து வந்து பேசசொன்னால் நன்றாக கல்லா கட்டலாம். ஏழைகளிடம் இருக்கும் பிரச்சனைகளை விட கூத்தாடிகளிடம் இன்னும் அதிகமாக இருக்கும். மக்களுக்கும் இவர்களின் உண்மை முகம் தெரியும்.

 12. அருமையான பதிவு ! இன்று மனித உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போக செய்வதில் முதன்மையானவை இந்த ரியாலிட்டி ஷோக்கள். இதை போன்றே இன்று செய்தி ஊடகங்களும் அதிக அளவில் ஊரில் நடக்கும் கள்ளக்காதல் கொலைகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. இது இப்படியே தொடர்ந்தால் இவையெல்லாம் சாதாரணம் என்ற எண்ணமும் சக உறவுகளின் மேல் ஒரு அவநம்பிக்கையும் ஏற்ப்பட வாய்ப்புண்டு.

  • இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இதுவரை செய்யப்படவில்லை, நீங்களே செய்யலாம், நன்றி

 13. எல்லாம் சரி நண்பர்களே. தொலைக்காட்சிகள் காசு பார்ப்பதற்கு செய்யும் இவ்வாறான நிகழ்ச்சிகளில் மக்கள் ஏன் பங்குபற்றுகிறார்கள்? மாற்றம் வர வேண்டியது மக்களிடமே. தங்கள் அந்தரங்கத்தைக் தாங்களே அறிவிக்கும் தவறை மக்களே செய்யும் போது நீங்கள் தொலைக்காட்சி நிறுவனங்களை விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க