Wednesday, October 16, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விதடுமாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களா கம்யூனிஸ்டுகள் ?

தடுமாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களா கம்யூனிஸ்டுகள் ?

-

க்கள் கலை இலக்கிய கழகத்தின் பொருளாளர் தோழர் சீனிவாசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.

மக்கள் பணியில் கம்யூனிஸ்டுகளின் வாழ்க்கை, தடுமாற்றங்களுடனான போராட்டம், மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பு, இறப்பதற்கு முன்பு செய்து முடிக்க விளையும் பணிகள், அவர்களது மறைவுக்குப் பின் மக்கள் நினைவு கூர்தல் இவற்றைப் பற்றிய விரிவான இந்த உரை ஒரு மனிதனாக வாழ்வது எப்படி என்பதை விளக்குகிறது.

உரையின் ஒலிக் கோப்பை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்.

கோப்பு 60 MBக்கு மேல் உள்ளதால், டவுன்லோட் ஆக நேரம் ஆகலாம். கிளிக் செய்து காத்திருக்கவும்.

  1. ஒரு அஞ்சலிக்கூட்டத்தில் இத்தனை ஆழமாகவும் அருமையாகவும் கொஞ்சம்கூட அலங்காரங்கள் ஜோடிப்புகள் ஏதுமின்றி, செயற்கையான இரங்கல் மனநிலையின்றி மருதையன் ஆற்றியிருக்கும் உரை நேரடியாய் உள்ளத்தில் சென்று பதிவதாய் இருக்கிறது.

  2. ஒரு மனிதனின் அதுவும் ஒரு போராளியின் மரணம் குறித்து இவ்வளவு பொருள் பொதிந்த ஒரு உரையை இதுவரை நான் கேட்டதில்லை. வேறு யாரும் இப்படி உரையாற்றியிருக்கவும் முடியாது. உரையை நேரில் கேட்டிருந்தாலும் எழுத்து வடிவில் தேவை.

  3. UNABLE TO TYPE IN TAMIL. SO FORGIVE ME FOR COMMENTING IN ENGLISH.

    FIRST TIME I HEARD COMRADE MARUTHAIYAN’S SPEECH.ONE, SO WELL BALANCED,INFORMATIVE AND COUCHED IN BEST LITERARY FORM POSSIBLE. MY WHOLE-HEARTED APPRECIATION AND THANKS GOES TO HIM.
    HOWEVER, I CANNOT WITH HIS AND THE GENERALLY LEVELED ACCUSATIONS AGAINST MESSERS. VAI KO , NEDUMARAN AND FATHER JEGATH KASPAR FOR THE DECISION TAKEN BY THE LTTE ON THE PROPOSED CEASE FIRE. ONE ON TERMS OF SURRENDER AND NO PARDON TO PRAPAKARAN AND PODDU AMMAN. PEOPLE WHO KNOW OF THE PAST BEHAVIOUR OF THE LTTE WILL KNOW HOW ABSURD THESE ALLEGATIONS ARE IN REALITY.

    FIRTLY. PIRAPAKARAN IS ONE WHO TRUST NONE EXCEPT HIS OWN LOGIC OF REASONING AND INTUITIONS. THIS WAS FIRST SEEN WHEN HE TOOK ON THE IPKF IN 1987, AN ACTION SO FOOLHARDY IN THE THINKING OF ALL IN THE LTTE AND OUTSIDE WORLD. YET HE TRIED AND SURVIVED.

    CAN ANYONE IN THE RIGHT SENSES BELIEVE THAT PIRAPAKARAN WOULD HAVE ACCEPTED SUCH A HUMILIATING END TO HIS WAR AND LIFE BY ACCEPTING THE OFFER MADE BY THE VERY INDIAN GOVERNMENT THAT OCHESTRATED THE WAR?

    I WANTED THE WORLD AND THOSE CRITICS WHO BLAME THE LONG TIME SYMPATHEISERS AND WELWISHERS OF EELAM CAUSE TO FACE SUCH UNFAIR ACCUSATIONS.

    AS FAR AS JEYALALITHA IS CONCERNED, SHE HAS BEEN A LONG TIME CRITIC OF THE LTTE FOR REASONS BEST KNOWN TO HER. BUT DESPITE HER INBORN WEAKNESSES TYPICAL WITH ALL POLITICIANS, SHE HAS AND IS DOING WHAT IS BEST AND WITHIN HER POWERS NOW. IN TAMIL NADU POLITICS SHE IS DOING A TIGHT ROPE WALKING RESISTING ALL POLITICAL OPPOSITIONS.

    OF COURSE NO BODY CAN SAY WHAT MADAME JJ WOULD DO THE NEXT MOMENT. BUT SHE IS THE ONLY HOPE THE TAMILS OF TAMIL NADU, TAMIL EELAM AND WORLD DIASPORA TAMILS. THEIR EXPERIENCE WITH DMK AND KARUNANITHY HAS BEEN ONE OF NIGHTMARISH , UNFORSEEN AND UN-FORGIVEABLE.

    MY COMMENTS MAY SOUND ABSURD TO MANY , BUT HISTORY WOULD JUDGE IF I AM WRONG. THANKS TO ALL.

  4. புரட்சிகர வாழ்வின் நறுமணம் கமழும் நினைவுரை.மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,லெனின்,பகத்சிங்,ஜீசஸ்,அயின்ஸ்டீன்,திருவள்ளுவர்,சீனிவாசன் இன்ன பிற தோழர்களின் பொருள்பொதிந்த வாழ்க்கை…செவிகளில் நிறைந்திருக்கிறது.சிறந்த ஒலிப்பதிவு.வாழ்க்கை பற்றிய புரிதலுக்கான தடம்.

  5. இந்திய மதவாதத்தின் மறு பக்கம் இந்த உரை . இது இந்திய மதவாத சிந்தையில் மனித வாழ்வு எப்படி புரியப்பட்டுள்ளதோ- எப்படி பிரச்சாரப்படுத்தப்படுகிறதோ அவ்வாறே இவ்வுரையும் உள்ளது . ஒரே வித்தியாசம் இவர் இங்கு இடதுசாரியத்தின் பெயரால் உரை நிகழ்த்துகிறார் . வாழ்கையை , வறண்டு போன ஒன்றாக – வெறும் சமூதாயம் சார்ந்த – உணர்ச்சியற்ற விடயமாக “தியாகமாக ” வரையறுப்பது வெறும் வரட்டு வாதமாகவே இருக்கும் . வரட்டு வாதிகளையும் , அவர்களின் உணர்ச்சியற்ற – பொய்யான தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நியாயம் கற்பிக்கிறது மாருதயனின் இந்த உரை .

    இப்படியான உரை வேண்டுமானால் பொய் கொமுநிஸ்ட்ருகளையும், உணர்ச்சி வசப்படும் “அரசியற் குமுளிகளை ” மட்டுமே உருவாக்கும் .

    • இந்திய மதவாதமும் புரியல. மருதைஅன் உரைய்ம் புரியல பொலா .மிகவும் அருமையனா உரை.மனதீல் நெர்மைவென்டும்

    • உங்கள் மதம் எது? மனித வாழ்வை நீங்கள் என்னண்ணு புரிஞ்சிருக்கீங்க? வாழ்க்கையை வறட்சியின்றி சரக்கடித்த வெள்ளமென புரிந்திருக்கும் புதிரை கொஞ்சம் வெளியிடுவீர்களா? தியாகத்திற்கு உணர்ச்சி கிடையாது என்றால் நீங்கள் உள்ளே தள்ளும் பர்கர்-பிசாதான் உணர்ச்சியா? எங்களது ‘பொய்யான’ தனிப்பட்ட வாழ்க்கையை பரிசிலீக்கும் முன் உங்களது உண்மையான தனிப்பட்ட வாழ்க்கையை வெளியிட முடியுமா? அக்கார அடிசலில் இனிப்பு போதாது என்பதை மட்டும் கண்டு பிடிக்கத் தெரிந்த உங்களுக்கு கம்யூனிசமே தெரியாமல் பொய் கம்யூனிசத்தை பிரித்தறிவது எப்படி? எதிர்த்த வீட்டு ஏகாம்பரம் அவரது ஸ்கூட்டரை உங்கள் வீட்டுமுன் நிறுத்தியதற்கே ஒரு மாமாங்கம் அழுது அரற்றும் நீங்கள் அரசியல் அவியல் குமுளி சமுளி என்று எதுகை தத்துவம் விடுவது எதறத்கு?

    • .குமிளிக்கும்
      நெருப்புப் பொறிக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்கள் இருப்பதால்தானே ஏமாற்றுபவர்களால் எளிதாக ஏமாற்ற முடிகிறது.பாபுபகத்.

  6. உங்களுக்கு ஜெயமோகனை பிடிக்குமே ? ஏன் என்றால் உங்களைப் போலவே ஜெயமோகனுக்கும் இவை எல்லாம் பிடிப்பதில்லை. உங்களைப் போன்ற சாதாரண மொக்கைகளும் ஜெயமோகன் போன்ற இலக்கிய மொக்கைகளும் அரசியல் ரீதியில் ஒன்றுபடும் இடம் இதுதான்.

    அரசியலற்ற, கொள்கைகள் அற்ற, சமூக அக்கறை அற்றவர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற நடுத்தர வர்க்கத்தினர் தான் முதலாளித்துவத்தையும் அதன் பொருளாதார கொள்கையான உலகமயமாக்கலையும் ஆதரிக்கின்றனர். அது அரசியல் இல்லையா ? இந்துமதவெறி பாசிஸ்ட் மோடியை ஆதரிப்பது இசுலாமியர்களை எதிர்ப்பதாகாதா ? ஜனநாயகத்தை வெறுப்பது பாசிசத்தை ஆதரிப்பதாகாதா ?

    அரசியல் வேண்டாம் சமூக அக்கறை வேண்டாம் என்கிற நடுத்தர வர்க்கத்தின் பேச்செல்லாம் சுத்த பொய், அயோக்கியத்தனம். அவர்களுக்கு முற்போக்கு, இடதுசாரி அரசியல் தான் வேண்டாம் மற்றபடி பாசிச அரசியலை அவர்கள் எதிர்ப்பதில்லை. மென்மையான முறையில் பாசிசத்திற்கு சமூக அங்கீகாரம் வழங்கும் வக்கமாக நடுத்தர வர்க்கம் தான் இருக்கிறது.

    இந்த உரையை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் ? இதில் வலியுறுத்தப்படுவது சரியானது என்றாலும் அதை உங்களால் ஏற்க முடியவில்லை, இது உங்களுடைய மனதுக்கு (வர்க்கத்திற்கு) இசைவானதாக இல்லை எனவே தனக்குத்தானே சொறிந்துவிட்டுக்கொள்வது என்கிற முறையில் உங்களுடைய வாழ்க்கை இதை மறுக்கச் சொல்கிறது. இந்த உரையில் எப்படி வாழ வேண்டும் என்பதையும் அதற்காக முன்வைக்கப்படும் நியாயங்களையும் உங்களால் எதிர்க்க முடியவில்லை. இந்த உரை உங்களுக்குள் இருக்கும் எதையோ நன்றாக குத்தி பதம் பார்த்திருக்கிறது என்பதையும் உங்களுடைய பின்னூட்டத்தின் மூலம் அறிய முடிகிறது. எனவே உங்களுக்கு நீங்களே ஆறுதல் கூறிக்கொள்வதற்காகவே இந்தப் பின்னூட்டத்தை எழுதுகிறீர்கள்.

    வாழ்க்கையை பற்றியும், அதை எப்படி வாழ்வது என்பதைப் பற்றியும் பேசுவது உங்களுக்கு பிரச்சினைக்குரியது அல்ல பிடித்தமானதுங்கூட, ஆனால் அதை ஒரு கம்யூனிஸ்ட் பேசியிருக்கிறார் என்பது தான் உங்களுடைய பிரச்சினை. இதையே ஜக்கி வாசுதேவ் பேசியிருந்தால் நீங்கள் இப்படி தடுமாறி இருக்கமாட்டீர்கள், பின்னூட்டமும் இட்டிருக்க மாட்டீர்கள்.

    எனவே நடுத்தர வர்க்கத்தின் வாழ்கை தான் வறண்டு போன ஒன்றாக, முழுக்க முழுக்க பிழைப்புவாதமாக, சமூகத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமல் வாழ்க்கையை உணர்ச்சியற்ற விடயமாக ’பிழைப்புவாதமாக’ வரையறுத்து, நுகர்வது கழிப்பது, நுகர்வது கழிப்பது என்று வாழ்வின் அற்புதமான தருணங்களை எல்லாம் இவ்வாறு நுகர்ந்து கழித்துவிட்டு இறுதியில் அற்பத்தனத்தின் மொத்தமாக முடிகிறது.

    உங்களுக்காக இந்த உரையிலிருந்து சில அருமையான வரிகளை மீண்டும் இங்கே கொடுக்கிறேன். வாழ்க்கையை பயன் உள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்.


    இப்போது அவர் சொன்னார் இல்லையா ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒரு ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர், அவரை 80 வயதில் பார்ப்பதற்கு ஆள் இல்லை என்று. இன்றைக்கு மருத்துவ விஞ்ஞானத்தின் வளர்ச்சி, நடுத்தர வர்க்கத்தின் வசதி வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாக பல பேர் 80, 85 வயது வரை வாழ்கிறார்கள். ஆனால் 60 வயதிற்கு மேல் அவர்கள் அனேகமாக தேவையற்றவர்களாகி விடுகிறார்கள்.

    ஏறத்தாழ 25, 30 ஆண்டு காலத்தை அவர்கள் உயிரோடு நரக வேதனையோடு தள்ளுகிறார்கள். அவர்களை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள இந்த சமூகம் தயராக இல்லை. ஆனால் கெட்ட வாய்ப்பாக உயிரோடு இருக்கிறார்கள். அதை நினைத்து அவர்கள் நொந்து கொள்ளுகிறார்கள். இதை நான் புதிதாக சொல்ல வேண்டியது இல்லை. உங்களுடைய வீட்டில், அண்டை வீடுகளில் உறவினர்கள் மத்தியில் இதை பார்க்கலாம்.

    பல முதியவர்கள் எனக்கு சாவு வராதா, சாவு வராதா, சாவு வராதா என்று சொல்லிக் கொண்டிருக்கிற உறவினர்கள். அவர்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள் என்பதானால் அல்ல வாழ்வதில் அர்த்தமில்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாளை மற்றொரு நாளை என்பது போல, ஒவ்வொரு நாளும் எதுக்கு வாழ்கிறோம். மூணு வேளை சாப்பிடுவது, தூங்குவது, மூணு வேளை சாப்பிடுவது தூங்குவது என்பதற்கு மேல் அந்த வாழ்க்கை பொருளற்றதாக இருக்கிறது. மேன்மேலும் துன்பகரமாக மாறிக் கொண்டு இருக்கிறது.

    அதானால உயிரோடு இருத்தல் என்கிற அளவில் இந்த வாழ்க்கையை உனக்கு நீட்டித்து தருகிறேன் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. முதலாளித்துவ பொருளாதாரம் என்ன சொல்கிறது ? ஆயுளை சீக்கிரம் முடிச்சுக்கிட்டா தேவலாம்ன்னு சொல்லுது அது. இது அறிவியல் சொல்வது: மருத்துவம் முன்னேற்றம் வந்திருக்கிறது, நோயை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை நீங்கள் வாழலாம் என்று சொல்கிறது அறிவியல். ஆனால் முதலாளித்துவப் பொருளாதாரம், தேவை இல்லாதவர்கள் அதிகமாகி விட்டார்கள் அவர்கள் எல்லாம் விடை பெற்று கொண்டால் நல்லது என்று சொல்கிறது.

    ஆக வாழ்வது என்பது உயிரோடு இருத்தல் என்பதாக சுருக்கப்பட்டு, அப்படி உயிரோடிருப்பவர்களில் எவ்வளவு பேர் உயிரோடிருக்கலாம், எவ்வளவு பேர் தேவை இல்லை என்று அரசாங்கம் முடிவு செய்கிற, முதலாளி வர்க்கம் முடிவு செய்கின்ற ஒரு காலத்தில் நாம் இருக்கிறோம். இதை பெரும்பாலான மக்கள் உணர்வதில்லை. இதை புரிந்து கொள்ளாததன் காரணமாக அவர்கள் வாழ்வதற்காக போராடுவதாக எண்ணிக் கொண்டு, உயிரோடிருப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    தோழர் சீனிவாசனை எடுத்துக்கங்க, நான் கூட நினைப்பதுண்டு. தோழர்கள் மறைந்த பிறகு அவர்களுடைய சிறப்பை நாம் கூட்டம் போட்டு பேசுகிறோம். அவர்கள் இருக்கும் போது அதை நாம் பேசுவதில்லையே. அப்படி பேசுவது சரியாக இருக்குமா, ஒரு வேளை அப்படி செய்யலாமோ என்று யோசித்தது உண்டு. அப்படி அநேகமாக நடப்பதில்லை, நடக்க வேண்டியதும் இல்லை என்று நினைக்கிறேன்.

    ஏன்னா இப்போ நாம் தோழர் சீனிவாசனையோ வேறு எந்த தோழரையோ பற்றி நாம் பேசும்போது அல்லது நம்முடைய தோழர்கள் யாரைப் பற்றியும் பேசும்போது இந்த சமூகத்தில் ஒரு சமூக உணர்வுள்ள மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டார் என்பதற்காக நாம் பாராட்டுகிறோம். சமூகத்திலுள்ள பெருபான்மையானவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை என்பதானால் இது தனியாக தெரிகிறது.

    சுந்தரராமசாமி கவிதையை படித்த பிறகு வேறொரு சந்தர்ப்பதிலே ஐன்ஸ்டினுடைய ஒரு வாசகத்தை, மேற்கோளை படிக்க நேர்ந்தது. அவர் மரணத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

    ”நம்முடைய இளம் தலைமுறைக்குள்ளும் மக்களுக்குள்ளும் நாம் வாழ முடியும் என்றால் நம் மரணம் என்பது ஒரு முடிவு அல்ல. ஏனென்றால் அவர்கள் தான் நாம்”. இதைவிட கடைசி வரி ரொம்ப முக்கியமானது. ”நமது உடல்கள் எனப்படுபவை வாழ்க்கை எனும் மரத்திலிருந்து வாடி வீழ்ந்த இலைகள் மட்டுமே”.

    Life, வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய மரம். அந்த மரத்தினுடைய பிரிக்கவொண்ணாத ஒரு இலை. அது ஒரு குறிப்பிட்ட கட்டத்திலே பழுத்து உதிர்த்துவிடுகிறது. இப்போ இதை ஒரு முழுமையாக அவர் பார்க்கச் சொல்லுகிறார். இப்போ அந்த பழுத்து உதிர்ந்த இலையின் அனுபவங்களை அந்த மரம் பெற்றுக்கொள்ள வேண்டும், பெற்றுக்கொள்கிறது. அப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்திலே அவர் அந்த விளக்கத்தை சொல்லுகிறார். அதாவது ஒரு மனிதன் தன்னை இந்த சமுதாயம் என்ற மரத்திலிருந்து உயிராற்றலையும், அறிவையும் பருகுகின்ற ஒரு இலையாக கருதிக் கொள்ள வேண்டும். அப்படி கருதிக்கொண்டால் நம்முடைய வாழ்க்கை என்பது, நம்முடைய மரணம் என்பது மீண்டும் இந்த சமூகத்திற்கு பயன்படுவதாக அமையும்.

    சமூகம் என்பது பகத்சிங்கை போன்று, மார்க்சை போன்று தோழர்களைப் போன்று பல பேரால் பட்டை தீட்டப்படுகிறது. எல்லா தலைசிறந்த குணங்களையும் ஒரே மனிதன் பெற்றுவிடுவதில்லை. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

  7. ஒரு சிறு தகவல். தோழரின் உரையில் இயேசு சிலுவையில் மரித்ததால் தான் கிறிஸ்தவம் என்று வருகிறது. அவர் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த கதையில் தான் கிறிஸ்தவம் வாழ்கிறது. இயேசு காவியத்தை அவர் மரித்ததோடு முடித்திருந்தால் கொண்டாடுவதற்கு நமக்கு ஒரு புராதன கம்யூனிஸ்ட் கிடைத்திருப்பார்.

  8. தோழர் யூ.டியுப்பில் போட முயற்சி செய்யுங்கள். குறைவான எம்.பி யில் டவுண்லோட் செய்யவும், அழைபேசியில் வைத்துகொள்ள உதவிகரமாக இருக்கும் தோழர்

  9. களத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு ஒவ்வொரு நெருக்கடியான சமயத்திலும் ஏற்படுகிற தடுமாற்றம் பற்றிய ஆழமான பரிசீலனை இந்த உரை. இந்த உரையின் வீச்சு இன்னும் பல காலத்திற்கு மனதில் தங்கும். பயன்படும்.

  10. ஒலியில் இருந்து சில துளிகள் ஒளியாக……….

    பகத்சிங் எழுதுகிறார், தூக்கு தண்டனை முடிவாகிவிட்டது, தூக்குதண்டனை விதிக்கப்பட்ட கைதியாக சிறையில் இருக்கும்போது, அவர் நண்பர்களுக்கு கடிதம் எழுதுகிறார், 21 வயதில் என்னை தூக்கில் போடபோகிறார்கள். ஒருவேளை நான் 80 வயதுவரை உயிருடன் இருந்திருந்தால், எனது பலகீனம் இந்த உலகத்திற்கு தெரிந்திருக்கும். ஒருவேளை 80 வயதுவரை நான் வாழ்ந்து செயல்பட்டிருந்தால் எனது பலகினங்களை தெரிந்துகொள்வதர்க்கான வாய்ப்பு இந்த உலகத்திற்கு கிட்டியிருக்கும். மற்றவர்களுக்கு எல்லாம் அப்படித்தான் நடக்கபோகிறது. ஆனால் 21 வயதிலேயே நான் தூக்குமேடை ஏறுவதால் பலகினங்களுக்கு அப்பார்ப்பட்ட மனிதனாக என்னை பலரும் கருதிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

    எவ்வளவு ஒரு அறிவு சார்ந்த எவ்வளவு ஒரு நேர்மையான ஒரு சுய பரிசீலனை என்பதை நீங்கள் பார்க்கலாம். அப்பொழுது பலகினங்களுக்கு எதிரான போராட்டம் என்பதின் ஊடாகத்தான் தோழர்களுடைய மேன்மை சாதிக்கப்படுகிறது. ஆய்ந்து அவிந்து அடங்கிய சான்றோர் அப்படின்னு சொல்கிறோமே அவர்களுக்கு கூட இந்த 21 வயது பகத்சிங் என்ற இளைஞ்சனின் சான்றான்மை வராது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க