சென்னை ஆவடியில் இயங்கிவரும் முருகப்பா குழுமத்தின் ஓர் அங்கமான டியூப் புராடக்ட்ஸ் இந்தியா (TUBE PRODUCTS OF INDIA) நிறுவனத்தில் சனிக் கிழமை நடந்த (11.05.2013) தொழிற்சங்க தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அணி அமோக வெற்றி.
எதிர்த்து போட்டியிட்ட ஜாம்பவான்கள் மண்ணைக் கவ்வினார்கள், பாரதி அணி என்ற பெயரில் போட்டியிட்ட தி.மு.க,+ ம.தி.மு.க, சி.ஐ.டி.யு (CITU) இந்த மூவர் அணி வாங்கிய மொத்த ஓட்டுகள் 254, முதல் தடவையாக தலைவராக போட்டியிட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் பா. விஜயக்குமார் பெற்றது 272 ஓட்டுகள்.
தேர்தல் பிரச்சாரத்தில் முதலாளிகளிடம் பேரம் பேசுவதற்கு இணக்கமான தலைமை வேண்டுமா? போராட்டத் தலைமை வேண்டுமா?
எனக் கேட்ட சி.ஐ.டி.யு. (CITU) தலைவருக்கு , போராட்டத் தலைமைதான் வேண்டும் என்றும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு ஆப்பு அறைவது போராட்டத் தலைமையான பு .ஜ.தொ.மு- தான் என்றும் வாக்களித்த தொழிலாளர்களுக்கு நன்றி.
எண் | போட்டியிட்டவர் | அணி | பதவி | பெற்ற வாக்கு |
---|---|---|---|---|
1. | தோழர். பா விஜயக்குமார் | பு.ஜ.தொ.மு. | தலைவர் | 272 |
2. | வழக்குரைஞர். அந்திரி தாஸ் | பாரதி அணி | 124 | |
3. | காசிநாதன் | CITU | 130 | |
4. | மோகன் | பு.ஜ.தொ.மு | துணைத் தலைவர் | 217 |
5. | பாரதி அணி | 136 | ||
6. | CITU | 172 | ||
7. | சரவணன் (ஆவடி, அம்பத்தூர் பகுதி தலைவர்) | பு.ஜ.தொ.மு | பொதுச் செயலாளர் | 223 |
8. | பாரதி அணி | 115 | ||
9. | CITU | 188 | ||
10. | ரவி | பு.ஜ.தொ.மு | துணைச் செயலாளர் | 204 |
11. | பாரதி அணி | 127 | ||
12. | CITU | 203 | ||
13. | பு.ஜ.தொ.மு | இணைச் செயலாளர் | 175 | |
14. | பாரதி அணி | 195 | ||
15. | CITU | 154 | ||
16. | பு.ஜ.தொ.மு | துணைத் தலைவர் | 159 | |
17. | பாரதி அணி | 166 | ||
18. | CITU | 197 | ||
19. | பு.ஜ.தொ.மு | பொருளாளர் | 171 | |
20. | பாரதி அணி | 182 | ||
21. | CITU | 173 |
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என பு.ஜ.தொ.முவை எள்ளி நகையாடிய சி.ஐ.டி.யு.(CITU) காசிநாதனுக்கு இப்போது புரிந்திருக்கும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காளான் அல்ல! முதலாளித்துவத்திற்கு காலன் !!
செய்தி :-
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆவடி அம்பத்தூர் பகுதி
தொடர்பு : 9445368009