முகப்புகட்சிகள்இதர கட்சிகள்திமுக, மதிமுக, சிபிஎம்-ஐ தோற்கடித்த புஜதொமு !

திமுக, மதிமுக, சிபிஎம்-ஐ தோற்கடித்த புஜதொமு !

-

ndlfசென்னை ஆவடியில் இயங்கிவரும் முருகப்பா குழுமத்தின் ஓர் அங்கமான டியூப் புராடக்ட்ஸ் இந்தியா (TUBE PRODUCTS  OF INDIA)   நிறுவனத்தில் சனிக் கிழமை நடந்த  (11.05.2013) தொழிற்சங்க தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி  அணி அமோக வெற்றி.

எதிர்த்து  போட்டியிட்ட  ஜாம்பவான்கள்  மண்ணைக் கவ்வினார்கள்,  பாரதி அணி என்ற பெயரில் போட்டியிட்ட தி.மு.க,+ ம.தி.மு.க,  சி.ஐ.டி.யு (CITU)  இந்த மூவர்  அணி வாங்கிய மொத்த ஓட்டுகள்  254, முதல் தடவையாக   தலைவராக  போட்டியிட்ட புதிய ஜனநாயகத்  தொழிலாளர்  முன்னணியின்  மாநில  பொருளாளர்  தோழர்  பா. விஜயக்குமார்  பெற்றது 272 ஓட்டுகள்.

தேர்தல் பிரச்சாரத்தில்   முதலாளிகளிடம்  பேரம் பேசுவதற்கு இணக்கமான தலைமை வேண்டுமா?   போராட்டத் தலைமை  வேண்டுமா?
எனக் கேட்ட சி.ஐ.டி.யு. (CITU)   தலைவருக்கு , போராட்டத் தலைமைதான் வேண்டும்  என்றும் முதலாளித்துவ  பயங்கரவாதத்திற்கு  ஆப்பு அறைவது  போராட்டத் தலைமையான பு .ஜ.தொ.மு- தான் என்றும் வாக்களித்த  தொழிலாளர்களுக்கு  நன்றி.

எண் போட்டியிட்டவர் அணி பதவி பெற்ற வாக்கு
1. தோழர். பா விஜயக்குமார் பு.ஜ.தொ.மு. தலைவர் 272
2. வழக்குரைஞர். அந்திரி  தாஸ் பாரதி  அணி 124
3. காசிநாதன் CITU 130
4. மோகன் பு.ஜ.தொ.மு துணைத் தலைவர் 217
5. பாரதி  அணி 136
6. CITU 172
7. சரவணன் (ஆவடி, அம்பத்தூர் பகுதி தலைவர்)  பு.ஜ.தொ.மு பொதுச் செயலாளர் 223
8.  பாரதி அணி 115
9.  CITU 188
10.  ரவி  பு.ஜ.தொ.மு துணைச் செயலாளர் 204
11.  பாரதி அணி 127
12.  CITU 203
13. பு.ஜ.தொ.மு இணைச் செயலாளர் 175
14. பாரதி அணி 195
15. CITU 154
16. பு.ஜ.தொ.மு துணைத் தலைவர் 159
17. பாரதி அணி 166
18. CITU 197
19. பு.ஜ.தொ.மு பொருளாளர் 171
20. பாரதி அணி 182
21. CITU 173

நேற்று  பெய்த  மழையில்  முளைத்த  காளான் என  பு.ஜ.தொ.முவை எள்ளி நகையாடிய சி.ஐ.டி.யு.(CITU)  காசிநாதனுக்கு இப்போது புரிந்திருக்கும்,  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காளான் அல்ல! முதலாளித்துவத்திற்கு காலன் !!

செய்தி :-
புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆவடி  அம்பத்தூர்  பகுதி
தொடர்பு  :  9445368009

 1. னாங்கூட ஆட்சிய கைப்பற்றீவிட்டீர்களோ என பயந்து விட்டேன்…

  • ஆட்சியைக் கைக்குள் கொண்டுவருவதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கலாம். என்ன அப்போது ஊரை விட்டு ஓடிவிடுவீர்களா?

    • நல்லது,

     பாட்டாளி வர்க்கத்தின் துரோகிகளை களையெடுக்கும் முன் அவர்களே ஊரைவிட்டு ஓடிவிடுவது நல்லது.

     சரி இந்தியாவை விட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தான் புரட்சி ஏற்படும் விளிம்பில் உள்ளது. எப்படியும் எல்லா நாடுகளிலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி ஏற்படுவது உறுதி, எங்கத்தான போவீங்க?

     ஓ! அதற்குதான் சந்திரன், செவ்வாயில் தண்ணீர் இருக்கா, மனிதன் வாழ முடியுமா என்று தேடுராங்களோ!

     எப்படியோ, கழுதைகள் ஒழிந்துப்போனால் சரி.

 2. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காளான் அல்ல !
  _________________________________________________________________
  முதலாளித்துவத்திற்கு காலன்!!!!
  ____________________________________________
  வாழ்த்துக்கள் . வாக்களித்த தொழிளார்களுக்கு வழ்த்துக்கள்.

  வெற்றி பெற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணிக்கு வாழ்த்துக்கள்.

  பிழைப்புவாத தொழிற்சங்கம் ஒழிந்தது. வர்க்க ஒற்றுமை ஓங்கட்டும், பாட்டாளிவர்க்க சிந்தனை

  வளரட்டும். பையாக்கள் பயந்து ஓடட்டும்.

  பு.ஜ.தொ.மு ஆழ வேர்விட்டு அகல கிளை பரப்பட்டும்.

  நிழலுக்கு தவிக்கும் மக்கள் இளைப்பாறட்டும்.

 3. வாழ்த்துக்கள்…..சிறுதீப்பொறி காட்டையே எரிக்கும் சக்தி வாய்ந்தது. இந்த வெற்றியை எள்ளிநகை ஆடுபவர்கள் பின்னாளில் உணர்வார்கள்.

 4. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 5. வாழ்த்துகள்!

  பெருகி வரும் நெருக்கடிகள், அதிகரித்து வரும் தொழிற்சங்க பிழைப்பு வாதம் நிறைந்த இன்றைய சூழலில் சரியான தொழிற்சங்கத்தை நோக்கி தொழிலாளர்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது. நேற்று தேசிய பஞ்சாலை. இன்று டியூப் புராடக்ட்ஸ் இந்தியா. நாளை தமிழகமெங்கும்.

 6. புஜதொமு தொழிலாளர்களுக்கு செவ்வணக்கமும், வாழ்த்துக்களும்.

 7. முதலாளியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்க்கு ஏவல்நாய்கள் ஓட்டுக்கட்சிகள் தோற்று ஓடட்டும்.தொழிலாளி வர்க்கத்தின் அரன் புஜதொமு வளர்க வாழ்க…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க