Monday, May 5, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிருதை அரசுப் பள்ளி முற்றுகை : படங்கள் !

விருதை அரசுப் பள்ளி முற்றுகை : படங்கள் !

-

விருத்தாச்சலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி தேர்வில் 31% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

31% மாணவர் தேர்ச்சிக்கு 45000 மாதச் சம்பளம் ஏன்?
தேர்ச்சியின்மைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடு!
அரசுப் பள்ளிகளை கண்காணிக்கத் தவறிய மாவட்டக் கல்வி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்!

என்ற முழக்கத்துடன் கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை முற்றுகை இட்டனர்.

காவல் துறை அனுமதி வழங்காமலேயே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பெற்றோர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்தனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பின்மையையும், கல்வித் துறையின் அலட்சியத்தையும் கண்டித்து நடத்தப்பட்ட இத்தகைய போராட்டத்தை இதுவரை சந்தித்தில்லை என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறினார்கள்.

பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு கடலூர் மாவட்டத்தில் +2 மாணவர்கள் மிகக் குறைவான தேர்ச்சிக்கு உரிய நடவடிக்கை கோரும் மனுவும் கல்வித் துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.

இறுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம், கடலூர் மாவட்டம்.