முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிருதை அரசுப் பள்ளி முற்றுகை : படங்கள் !

விருதை அரசுப் பள்ளி முற்றுகை : படங்கள் !

-

விருத்தாச்சலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி தேர்வில் 31% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

31% மாணவர் தேர்ச்சிக்கு 45000 மாதச் சம்பளம் ஏன்?
தேர்ச்சியின்மைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடு!
அரசுப் பள்ளிகளை கண்காணிக்கத் தவறிய மாவட்டக் கல்வி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்!

என்ற முழக்கத்துடன் கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை முற்றுகை இட்டனர்.

காவல் துறை அனுமதி வழங்காமலேயே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பெற்றோர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்தனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பின்மையையும், கல்வித் துறையின் அலட்சியத்தையும் கண்டித்து நடத்தப்பட்ட இத்தகைய போராட்டத்தை இதுவரை சந்தித்தில்லை என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறினார்கள்.

பள்ளிக் கல்வித் துறை செயலாளருக்கு கடலூர் மாவட்டத்தில் +2 மாணவர்கள் மிகக் குறைவான தேர்ச்சிக்கு உரிய நடவடிக்கை கோரும் மனுவும் கல்வித் துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.

இறுதியில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம், கடலூர் மாவட்டம்.

 1. அரசுப் பள்ளி முற்றுகை.
  —————————–
  https://www.vinavu.com/2012/09/17/english-medium-in-govt-schools/
  அரசுப்பள்ளிகள்: ஆங்கிலவழிக் கல்வி வந்தது முன்னே!
  தனியார்மயம் நுழையும் பின்னே!!
  தமிழகத்தில் சுமார் 320 அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டில் இருந்து ஆங்கிலவழிக் கல்வி அமல்படுத்தப்படும் என அரசு அண்மையில் அறிவித்திருந்தது. ஏற்கெனவே ஆங்கிலவழிக் கல்வி ஒருசில அரசுப் பள்ளிகளில் மட்டுமே இருந்த நிலையில், மாவட்டந்தோறும் 10 பள்ளிகள் வீதம், 24 ஆயிரம் மாணவர்களைத் தமிழ்வழிக் கல்வியில் இருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றி, அரசு உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றின் தேவைக்காக என்றும், பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்றும் அரசு இதற்குக்

  ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு பிரிவுகள் என அறிமுகமாகியுள்ள ஆங்கிலவழிக் கல்வி, வெகுவிரைவில் தமிழ்வழிக் கல்வியை அரசுப் பள்ளிகளிலிருந்து ஒழித்துக்கட்டப் போகிறது. அரசின் நடவடிக்கை ஆங்கிலவழிக் கல்வியை வலிமைப்படுத்தி தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு இடமில்லாமல் செய்துவிடும் என்ற கோணத்தில் இருந்து குமரி அனந்தன், பொன்வைக்கோ போன்றவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  ஆங்கிலவழிக் கல்வி என்பது மொழிப் பிரச்சினை மட்டும் அல்ல. அரசுப் பள்ளிகளில் வீழ்ச்சியடைந்து வரும் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்திக் காட்டி, அப்பள்ளிகளைத் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் நயவஞ்சகத் திட்டத்தின் ஒருபகுதிதான் இது.

  ___________________________________________

  – புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

  _________________________________________________

 2. வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற மனப்பான்மை மிகுந்தவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள்.நாள் முழுக்க உடலாலும் குறைந்த மூலதனத்தில் அறிவாலும் வேலை செய்கிற எண்ணற்ற இந்திய குடிமக்கள் 12 மணி நேர உழைப்பில் 500 ரூபாய் வருமானம் கூட கிடைக்காமல் அலைகிறார்கள். ஆனால் சராசரியாக ஆண்டுக்கு 1000 மணிநேர உழைப்பில் 5.5 லட்சம் வருமானம் பார்க்கும் மேனிலை ஆசிரியர்களிடம் எண்ணம் மட்டும் மேலாக இல்லை. 12 மணிநேர உழைப்பில் இவர்கள் ஈட்டும் வருமானம் 6600/-. எளிய நிலையில் உள்ள சிறுநகர கிராமப்புற மாணவர்களின் எதிர்கால வாழ்வை பாழாக்கும் இவர்களின் பணியை ஆய்வு செய்பவர்களும் ” யார் வீட்டு எழவோ” எங்கிற நிலையில்தான் ஆய்வு செய்கிறார்கள். அதிக உழைப்பு கூடாது – வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்ய கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.நேர்மையையும் நியாயத்தையும் குழி தோண்டி புதைக்கும் இவர்கள் மனசாட்சியை மறந்துவிட கூடாது.அரசாஙக ஊழியர்களின் குழந்தைகளை கட்டாயமாக அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.அப்போதுதான் நியாயம் பிறக்கும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க