முகப்புகட்சிகள்அ.தி.மு.கஓ ரசிக்கும் சீமானே ! : கார்ட்டூன் !

ஓ ரசிக்கும் சீமானே ! : கார்ட்டூன் !

-

 

seeman-jayalalitha

 1. கார்டூன் நல்லா இருக்கு! வைகோ மூஞ்சி அருமை 🙂

  கலைஞர் சொல்ற “என்னா வரத்து வந்துருப்பாங்கப்பா” மட்டும் புரியல. “என்னை வறுத்திருப்பாங்கப்பா” அப்படின்னு இருக்கணுமோ? கார்டூன்ல இருக்கறது எந்த ஊர் சொலவடை?

 2. தினத்தந்தி சிவந்தி-க்கு நினைவுக்கூட்டம் சீமான் போட்டவுடன் தந்தி டிவியில் சீமானுக்கு மக்கள் முன்னால் என்ற நிகழ்ச்சி வழங்கப்படுகிறது.

  இதுபோல ஈழத்தாய்-க்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிவட்டம் போடும் சீமான் தனக்கு ’நல்ல’ கவனிப்பு கிடைக்கும் என்று நினைத்திருப்பார். ஆனால் பாசிச ஜெயாவிற்கு நாஞ்சில் சம்பத், ரபி பெர்ணாட் போன்ற அம்மா அம்மா என உருகும் அடிமைகள் தான் என்றுமே தேவையாக இருந்து வருகிறார்கள்.

  அம்மா என்பதை தாய் என மாற்றி சொன்னால் கூட ஒப்புக்கொள்ள முடியாத அவருக்கு ஈழத்தாய் என தொடர்ந்து ஒளிவட்டம் போட நினைக்கும் சீமானை ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்பதை இப்போது கூட சீமான் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏனெனில் சீமான் அடித்திருக்கும் ‘போதை’ அப்படி. அது இன்னும் ஓட்டுப்பொறுக்கி அரசியலில் டவுசர் கிழிந்து நேர்மையாக ஈழம் குறித்து மட்டுமல்ல ஆதிக்க சாதி குறித்து கூட பரிசீலிக்க தெரியாதவர் என நாறுவது நிச்சியம்.

  • ////தினத்தந்தி சிவந்தி-க்கு நினைவுக்கூட்டம் சீமான் போட்டவுடன் தந்தி டிவியில் சீமானுக்கு மக்கள் முன்னால் என்ற நிகழ்ச்சி வழங்கப்படுகிறது.////// உனலுகு வேற வேலை இளைய என்ன???? உங்கள் கண்டு பிடிப்புக்கு எல்லாம் மெடல் தான் தரணும்….
   ///இதுபோல ஈழத்தாய்-க்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிவட்டம் போடும் சீமான் ///////ஈழ தாய் என்று சொன்னதற்கு முதலில் ஆதாரம் காட்டுங்கள்… இல்லாவிட்டால் மூடிக்கிட்டு போங்கள்……..

 3. என்னமோ கருனானிதி ஒன்னும் பண்ணாத மாதிரி..சீமானை 5 முறை சிறையில போட்டத வசதியா மறந்துடிங்களா?

 4. மற்றொன்று..சீமான் ஜெயலலிதாவ ஈழத்து தாய்னு சொன்னத ஒரு ஆதரம் காண்பிங்க பார்ப்போம்?

  • அண்ணே, நான் ஒரு வெங்கடேசன் ஏற்கனவே இருக்கேன். நீங்க பெரிய மனசு பண்ணி வேற பேரு வெச்சுக்க கூடாதா!

 5. யோவ் வெங்கிட்டு, இவ்ளோ நாள் நீ உள்ள இருந்தியா, எத்தினி தபா சொல்லிகிறான் ஈழத் பே(தா)ய்னு.

  • முதலில் ஆதரத்தை சொல்லுங்கள், அண்ணன் சீமான் ஈழ தாய் என்று சொன்னதற்கு?????

 6. நினைக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் கார்ட்டூன். சன் டிவியில் சில வருடங்களுக்கு முன் அவர் ஒரு எண்டெர்டெயின்மென்ட் ஷோ வில் (அசத்த போவது யார்? என்பதாக நினைவு) பெரியார் படம் போட்ட டி ஷர்ட் அணிந்து வந்து பேசினார். மிக இயல்பாக ஆணித்தரமாக ஒரு லட்சியவாதியின் அலங்காரமற்ற மொழியில் பேசினார். பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி ராமகோபாலன் சினிமா சங்கத்தில் புகார் தொடுத்த போது சீமான் மீது மரியாதை கூடியது. 2008-ல் காந்தி பிறந்த நாளின் போது சிபிஐ கட்சி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரத கூட்டத்திற்கு அவர் உரையாற்ற வந்திருந்தார். அவரை சில விசிறிகள் வட்டமிட்ட நிலையில் நடந்து வந்தார். வைகோவின் செயற்கையான முகபாவனைகள் மற்றும் ஜோடனை பேச்சு சலிப்பை ஏற்படுத்தியது. இவரது உரை தனித்துவத்துடன் இருந்தது.

  ராமேசுவரத்தில் சினிமா டைரக்டர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை சன் டிவி நேரடி ஒலிபரப்பு செய்தது. இது அவரை தமிழக இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவியது. வைகோ, திருமாவளவன் போன்றோரால் வெறுப்புற்ற பலரும் சீமானை கொண்டாட தொடங்கினர். தனக்கு பெருகிய ஆதரவை மனதில் வைத்து புதிதாக கடை (கட்சி) ஓன்று தொடங்க அப்போதே அவருக்கு ஆசை வந்திருக்கக் கூடும். எனினும், சில காலம் திருமாவளவன், ராமதாஸ் போன்றோரின் கூட்டங்களுக்கு சென்று உரையாற்றி வந்தார். தமிழன் டிவி கலைக்கோட்டுதயம் வி.சியில் பணிபுரிந்தவர். கொள்கைக்கு குந்தகம் ஏற்படாமல் அப்படியே உறுப்பினர் அட்டையை மாற்றிக் கொண்டுள்ளார். பொடாவில் முன்பு கைதான ‘தமிழ் முழக்கம்’ ஷாகுல் ஹமீத் ‘நாம் தமிழரில்’ அடுத்த முக்கிய புள்ளி. புகழேந்தி தங்கராஜ் இன்னுமொரு முக்கிய தலைவர். சீமானுக்கு கனக்கும் போதெல்லாம் தமிழின சிலுவையை சற்றே சுமக்க உடன் பயணிப்பவர்கள்.

  மலையாள நடிகர் ஜெயராம் வீட்டை தாக்கிய போது சீமான் தன்னை தமிழகத்தின் ராஜ்தாக்கரே என்று அறிவிக்கவில்லை. எனினும் தமிழகத்தின் ஜனநாயக சக்திகள் அந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்த போது அவர் தான் புகழ் பெறுவதாக உணர்ந்திருக்கக் கூடும். புரசைவாக்கம் கூட்டத்தில், சிங்கள பெண்களை கற்பழிக்க வேண்டும்; குழந்தைகளையும் கொல்ல வேண்டும்; இனி எந்த அறத்திற்கும் இடம் கிடையாது என்று பேசிய போது தமிழ்த் தேசிய குஞ்சுகள் கரங்கள் தட்டியும், விசிலடித்தும் கரகோஷித்தார்கள்.

  அவர் வந்து சேர வேண்டிய இடத்திற்கு தவறாமல் வந்து விட்டார் என்று நினைத்து சற்று கண் அயர்ந்த வேளையில் புலி ஆதரவாளர் முத்திரையுடன், வலுவான சாதி முத்திரையையும் வேறு அணிந்து காட்சி அளிக்கிறார். யாசின் மாலிக் என்ற காஷ்மீரின் விடுதலை போராளியை அவர் அழைத்து வந்தது ‘தமிழகத்து ராஜ்தாக்கரே’ என்ற முத்திரையை கடப்பதற்காகக் கூட இருக்கலாம். இந்த வரிசையில் அவர் இன்னும் பல போலி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். சாதி முத்திரையை கடக்க அவர் முன்பு ராமதாஸ் செய்ததை போன்று அம்பேத்கருக்கு சிலை நிறுவ முன்வரலாம். கவர்ச்சிக்கு வீழும் சராசரி ஈழ ஆதரவு மனங்கள் ஏங்கி கிடப்பது பொய்மைகளை தான் என்பதை யார் சென்று உரைப்பது?

  • அய்யா சீமானுக்குப் பரவலான ஆதரவு இருக்கிறது எல்லா சாதிகளிலும்…சாதி முத்திரை ஆதாரத்தைத் தர முடியுமா?? எழில்

 7. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் நான் இருக்கப்போவது சிறையில்தான் என ஏற்கனவே சொல்லியவர் சீமான் … அப்போவும் வாய் திறக்க மாட்டோம் இப்போவும் வாய் திறக்க மாட்டோம் பேப்பரில் கம்மியுனிச புரட்சியை முப்பது வருசமா செஞ்சு வாரோம் நமக்கு ஒரு கார்ட்டூன் போடுங்க செவப்பு வினவு 🙂

 8. தமிழன் உருப்படாமல் போனதுக்கு காரணமே, எல்லொரையும் கெட்டவன் என்று விமெர்சித்து, தானும் ஒன்றும் செய்யாமல், ஏதொ செய்ய முயல்பவரையும் குற்றம் கண்டுபிடித்து குறை கூறிக்கொன்டே பொவதுதான்! இந்திய பார்ப்பன சக்தியைநம்பிய, இலஙகை தமிழனின் கதி அதொகதியானதில் வியப்பில்லை! இனிமேலாவது சும்மா இருக்க கூடாதா? கச்மீர் பிரிவினை வாதி வந்தால் என்ன? இஙகெத்தனை தமிழனுக்கு ரோசம் வந்து விடுதலை கேட்டு பொஙகப்போகிறீர்கள்? கருத்து பேதஙளை மறந்து, அஙகு மடிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஏதாவது உதவுஙகளேன்!

 9. //வலுவான சாதி முத்திரையையும் வேறு அணிந்து காட்சி அளிக்கிறார்//
  சீமான் என்ன‌ சாதியைச் சேர்ந்த‌வ‌ர்?

 10. eazha thamizhan azhivukku darvida katchiyum,tamizhinavadi peril olinthu irukkum bongu barotta mastergal thaan kaaranam.

  annaikke compromise aagi iruntha,inaikku pala uyir pozhaichu irukkum.

  idhula kashmir prachanaikku vera aadaharavu,peruila mattum thaan puli,nejthula verum sundeli thaan.

 11. ஒன்னும் தெரியாத பாப்பா அரிகுமார்! அன்னைக்கு , ராஜீவ் கட்டளைக்கு கட்டுபட்டதன் பலனாக 14 விடுதலை புலி தலைவர்கள் சிஙகளவரிடம் பிடித்து கொடுக்கப்பட்டனர்! இந்திய அரசும் ,ராணுவமும் தமிழர்களுக்கு யோக்கியமாக நடந்து கொள்ளவில்லை! உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட திலீபன் ஒரு ரத்த சாட்சி!

 12. மக்கள் முன்னால் நிகழ்ச்சியில் ஈழப்போராட்டாத்தை இந்தியா ஏன் ஆதரிக்க மாட்டேன் என்கிறது என தொடங்கி காங்கிரஸ், பாஜக கட்சி தலைவர்களிடம் அப்பாவியாக விளக்கம் கேட்கும் சீமான் சிறந்த நடிகர் என கண் கூடாக தெரிகிறது. இளியோர் , வரியோர் என நிகழ்ச்சி பில்டப் பாடல் தாங்கலை. கடையில் அம்மாவுக்கு இல்லை நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப்போடு என கேட்பதற்கு எத்தனை பாடு.

  வாஜ்பாய் காலத்தில் விடுதலைப்புலிகள் முற்றுகையினை வாபஸ் வாங்காவிடில் இந்திய ரானுவத்தை அனுப்புவோம் என்ற வெளிப்படையாக மிரட்டியது பாஜக அரசு, 2009-ல் போரை முன்னின்று நடத்தியது காங்கிரஸ் அரசு என பாஜகவும், காங்கிரஸும் அம்பலமாகிய பின்னரும் இந்திய அரசு வெளியறவு கொள்கை எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என ஏர்டெலும், எஸ் ஆர் எமும் இலங்கையில் காலூன்றிய பின்னரும் தெரியாதது போல ஜெயாவிற்கு ஒளிவட்டம் போடுவது அல்லது அடுத்த தேர்தலில் தானே ஓட்டுப்பொறுக்கி ஆதாயம் அடைய சீமான் கொடுக்கும் பில்டப் தாங்க முடியவில்லை.

  அம்மா எவ்வளவு அடிச்சாலும் நல்லவங்க என பேசும் சீமான் ஆதிக்க சாதிவெறி பிரச்சனை, தமிழக ஈழ அகதிகள் பிரச்சனை குறித்து அடங்கி வாசிக்கும் மர்மம் விரைவில் அம்பலமாவது உறுதி.

 13. ஓட்டுப்போடலைன்னா நமிதாவை வைத்து படம் எடுக்க போயிடுவேன் என இரண்டு மாதங்களுக்கு முன்னர் சீமான் பேசியுள்ளதை பாருங்கள்….

  http://www.youtube.com/watch?v=PVmWL3HzgY0

  ஜெயாவிற்கு ஓட்டுக்கேட்ட சீமான், பாராட்டு விழா நடத்திய சீமான் ஜெயா,கலைஞர் உடன் கூட்டணி போவோரை கேவலமாக பேசுவது வெட்கக்கேடு.

  அரசியல் முக்கியம் கூட்டம் தோறும் பேசும் சீமான் ஓட்டுப்பொறுக்கி அரசியல் ஏன் முக்கியம் என விளக்க மறுப்பது ஏனோ…?

  • ////ஓட்டுப்போடலைன்னா நமிதாவை வைத்து படம் எடுக்க போயிடுவேன் என இரண்டு மாதங்களுக்கு முன்னர் சீமான் பேசியுள்ளதை பாருங்கள்///////////// இது அண்ணன் சீமான் ஒரு நகை சுவைக்கு சொன்ன வார்த்தை… இதில் என்ன தவறு இருக்கிறது சொல்லுங்கள்?????…….
   /////ஜெயாவிற்கு ஓட்டுக்கேட்ட சீமான், பாராட்டு விழா நடத்திய சீமான் ஜெயா///// ஜெ கு ஒட்டு கேட்டது உண்மை,, காரணம் ஜெ ஒட்டு பிரசாரத்தின் போது சொன்ன வார்த்தை “” அந்த மக்களுக்கு ஈழத்தை தவிர என்ன வேற சரியான தீர்வாக இருக்க முடியும் என்று சொனதற்காக………….. பாராட்டு விழ எதற்கு என்றால் சட்ட மன்றத்தில் ஈழத்தின் அதரவாக குரல் கொடுத்து சட்டம் கொண்டு வந்ததற்கு”””………….
   //////அரசியல் முக்கியம் கூட்டம் தோறும் பேசும் சீமான் ஓட்டுப்பொறுக்கி அரசியல் ஏன் முக்கியம் என விளக்க மறுப்பது ஏனோ…?/////////////// காரணம் இருக்கிறது, “ எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்று அண்ணல் அம்பேத்கர் அவர்களில் பொன் மொழி படி அரசியலை முன் எடுக்க நாம் தமிழர் கட்சின் முழு காரணம் ஆகும்… இதை அண்ணன் சீமான் அவர்கள் பல தடவை பதிவு செய்து உள்ளார்கள்……

 14. ஒரு சிறந்த டைரக்டர் நடிகராகிவிட்டார்! அல்லது ஏற்கனவே உள்ள புரட்சி புயலிடம் அய்க்கியமாகியிருக்கலாம்! இனியும் பேசி தமிழனை தட்டி எழுப்பமுடியாது!

 15. “””வினவு”” முதலில் ஆதரத்தை சொல்லுங்கள், அண்ணன் சீமான் ஈழ தாய் என்று சொன்னதற்கு?????

 16. ஈழத்ாய் என்று என்ருமே சொன்னதில்லை. ஈழம் தான் தீர்வு என்று ஜயா கடந்த சட்ட மன்ற தேர்றிதல் வரை சொன்னதில்லை. இனப்படுகொலை என்று சொன்ன ஒரே முதல்வர் ஜயா மட்டுமே. ராஜபக்கஷே வை இனப்படுகொலை செய்தவன் என்றும் ஹிட்லர் ஐ போன்று மோசமானவன் என்று சொல்லும் துணிவு கோழை கருணாநிடிக்கு முதலமாய்சசராக இருந்த போதும் இல்லை இப்பொழுதும் இல்லை. ஈழ படுகொலைக்கு துணை போனார் அதன் பலனாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் மையா அரசும் கண்டும் காணதுபொழிருந்தத்ொடு மட்டுமல்லாமல் காப்பாற்றவும் செய்தது மௌக்கியமாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் பேர்ம்பான்மையாக பணம் ஸ்விஸ் வண்கையில் பரிமாறியது போர் நடக்கும் பொழுது தான் என்பதும் மக்களுக்கும் தெரியும். கொஞ்ச நஞ்ச மானமுள்ள திருமவலவனையும் உண்ணாவிரதம் இருக்க விதமாள் செய்து போர் தொடர செய்தும் போர் கிளிநோசியுடன் நின்று விடும் சூழலில் கோதபைய யோசித்து கொண்டிருந்த வேளையில் அவசர கூட்டம் இலங்கை மாளிகையில் கூட்ட பட்டது அன்று நீங்கள் போர் ஐ தோதுறுங்கள் தமிழகத்தில் உள்ள எழுச்சி அமைதி ஆகி விடும் என்று M.K. நாராயணன் உறுதி கொடுத்ததாக கோதபைய ராஜா பகஷே தன்னுடிய HOW GOTTA GOT IT எனும் நூலில் கொடுத்த வாக்குமூலத்தின் படி கருணாநிதி போட்ட உண்ணாவிரதா நாடகம் அவர்கள் போர் தொடராவும் கருணா உண்ணா வீரதததால் போர் முடிந்தது என்று நம்பி பதுங்கு குழியை விட்டு வெளிேறிய 20,000 பெண்கள் கர்ப்பிணிப்பெண்கள் சிறுவர்கள் ராணுவத்ால் கொலை செய்யப்பத்டாதையும் இங்கு மக்கள் எழுச்சி அடையாமல் பார்த்துக்கொள்ள கருணா உதவினார் என்று தெல்லா தெளிவாக உணரமுடியும். இருந்தும் சில முடவர்கள் அடி முட்டாள்காள் கருணாநிதி ஐ தூக்கி பிடிப்பதி லிருந்து விடுபடா மல் இருப்பது தமிழிநாத்ிற்கு சாபம் என்பது உண்மை.இது வரை சிங்காளற்களை பற்றி கோபப்பதாமல் பொய்ுரைக்கும் கதிர்காமர், மற்றும் அரசியல் தலைவர்கள் பற்றி மட்டுமே அறிந்திருந்த சர்வதேச சமூகம் இனப்படுகொலைக்கு பிறகு தான் விழித்து கொண்டது. ஜாயாவும் அப்பாடியே.
  இன்று வரை விடுதலை புலிகலைல்லவர்கள் நா என்று ஜயா சொன்னதில்லை ஆனால் ஈழ படுகொலைக்கு பின்பு ஈழம் தான் தீர்வு என்றிரு சொன்னது உண்மை.பிராபக்கரன் எனது தம்பி என்று சொல்லிவிட்டு அவரை கொல்வதில் கண்டும் காணாமல் இருப்பது போலித்தனம் அதை கருணாநிதி மட்டும் செய்ய முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க