ஐபிஎல் சூதாட்டம், ஸ்பாட் பிக்சிங் மோசடி தொடர்பாக பாலிவுட்டின் நடிகர் விண்டூ தாரா சிங் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய செல்பேசி அழைப்புகள் பதிவின் படி சூதாடி ரமேஷ் வியாஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்சின் முதன்மை நிர்வாகியான குருநாத் மெய்யப்பனோடும் அடிக்கடி பேசியிருக்கிறார். இந்த மெய்யப்பன் யார்? சென்னை அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் மருமகன்.
முதலில் விண்டூவின் ஜாதகத்தை பார்க்கலாம். இவர் மறைந்த நடிகர் தாராசிங்கின் மகன். அவரது பிரபலத்தை வைத்து நடிகரானவர். அந்த பிரபலத்தை வைத்து சூதாடிகளுடன் தொழிலையும் தோழமையையும் வளர்த்திருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் இவர் இந்த ஆண்டு ஐபிஎல்லில் மட்டும் சுமார் 17 இலட்சம் ரூபாய் சுருட்டியிருக்கிறார்.
மட்டுமல்ல இந்தியாவின் பிரபலமான எல்லா சூதாடிகளோடும் நெருக்கமான உறவைப் பேணியிருக்கிறார். தற்போதைய ஐபிஎல் மோசடிகள் வெளியான பிறகு சஞ்செய் ஜெய்ப்பூர், பவான் ஜெய்ப்பூர் எனும் இரண்டு சூதாடிகள் துபாய்க்கு தப்பி ஓடுவதற்கு இவர் உதவி செய்திருக்கிறார். இத்தகைய மோசடி ஆள் எதற்கு மெய்யப்பனோடு அடிக்கடி பேச வேண்டும்? நிச்சயம் அந்தப் பேச்சு மாதம் மும்மாரி மழை பொழிந்ததா என்றா இருக்கப் போகிறது?
இவரைப் போன்ற பிரபலங்கள் அணி முதலாளிகளுக்கும் சூதாடிகளுக்கும் பாலமாக பணியாற்றி இருக்கலாம். தற்போது சீனிவாசனது மருமகன் மெய்யப்பன் நேரடியாக சூதாடினாரா, இல்லை ஸ்பாட் பிக்சிங் செய்தாரா என்பெதெல்லாம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று போலீஸ் கூறினாலும் அதற்கான முகாந்திரம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
ஸ்ரீசாந்த் அண்ட் கோ மாட்டியது கூட ஏதோ உள் குத்து விவகாரம் என்பது மட்டும் நிச்சயம். ஏனெனில் எல்லா போட்டிகளிலும் பெட்டிங், ஸ்பாட் பிக்சிங் இருக்கும் போது அதில் எல்லா அணிகளும், வீரர்களும் சம்பந்தப்பட்டிருக்கும் போது ராஜஸ்தான் ராயல்சின் மூன்று வீரர்கள் மட்டும் எப்படி மாட்ட முடியும்?
அடுத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் சில பல ஆயிரங்கள் கோடி ரூபாய் வர்த்தகம் இருக்கும் போது இதை ஏன் சில சில்லறை சூதாடிகள் மட்டும் செய்ய வேண்டும்? தாவூத் இப்ராஹம்மின் டி கம்பெனிதான் இந்தியாவில் சூதாட்டத்தை பல ஆண்டுகளாக நடத்துகின்றது என்று ஊடகங்கள் இதற்கு மர்மக்கதை எழுதி விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இந்திய அரசால் தேடப்படும் ஒரு குற்றவாளி அவ்வளவு வெளிப்படையாக, விரிவாக இந்த மோசடி சாம்ராஜ்ஜியத்தை நடத்துவது கடினம். அல்லது அவருக்கு இந்திய தரகு முதலாளிகள், அரசியல்வாதிகள் ஆதரவும், கூட்டும் அவசியம் தேவைப்படும். எனில் பின்னதற்கு வாய்ப்பு நிறையவே இருக்கிறது.
ஒரு போட்டியில் ஒரு வீரர் எத்தனை நோபால், வைடு, போட வேண்டும், ஓவரில் எத்தனை ரன் கொடுக்க வேண்டும், எத்தனை ரன்னில் ஆட்டமிழக்க வேண்டும், அல்லது எப்படி ஆட்டமிழக்க வேண்டும் என்பெதல்லாம் ஒரு அணி நிர்வாகம் சொல்லி யாரும் செய்து விடக்கூடிய விசயங்கள்தான். இவையும் கூட ஆட்டத்தின் முடிவை பாதிக்காமலேயே செய்யலாம் எனும் போது இயல்பாகவே அணி முதலாளிகள் சூதாடிகளோடு தொடர்பு கொண்டு ஸ்பாட் பிக்சிங் செய்ய வாய்ப்பிருக்கிறது. தேவையும் இருக்கிறது.
ஒவ்வொரு அணியையும் பல நூறு கோடிக்கு வாங்கியிருக்கும் நிர்வாகங்கள் அதை எப்படி இரகசியமாக மர்மமாக வைத்திருக்கின்றனவோ, அப்படி மர்மமாகத்தான் வைத்திருக்க வேண்டும் என்று ஐபிஎல் விதிகள் கூறுகின்றனவோ அதன்படி ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு சுருட்டலாம் என்று ஏன் ஒரு இரகசிய விதி இருக்கக்கூடாது? சசிதரூர் தனது பினாமி மூலம் கொச்சி அணியை வாங்கியதும், ஐபிஎல்லின் முந்தைய சேர்மன் லலித் மோடி ராஜஸ்தான் அணியை அப்படி பினாமி பேரில் வாங்கியதும் இருவரது சண்டையால் வெளியானது. அப்போதுதான் இவர்கள் மொரிசியஸ் தீவு எனும் வரி இல்லா சொர்க்கத்தின் மூலம் பணம் வரவழைத்து அணிகளை வாங்கியது அம்பலமானது.
தற்போது ஐபிஎல்லில் ஆடும் ஒரு வீரரது உடையைப் பாருங்கள். ஒரு இன்ச் விடாமல் உடை முழுக்க நிறுவனங்களது முத்திரைகள். இது போக தலைக்கவசம், மட்டை, உறை என அனைத்திலும் நிறுவன விளம்பரங்கள். இதன்படி ஒரு வீரர் தனது முன்பாகத்தை அதிகம் கேமராவில் காட்டினால் அதிக பணம் என்று அந்த நிறுவனங்கள் ஒரு டீல் போட்டால் அதை யார் தடுக்க முடியும்? போட்டி நடக்கும் போது அவர் ஏன் பின்பகுதியை அடிக்கடி ஆட்டி ஆட்டிக் காண்பிக்கிறார் என்றா கேட்க முடியும்? அல்லது அவர் அடிக்கடி மட்டையை தூக்கி காக்காய் விரட்டுவது போல செய்கிறார் என்று கிண்டலா செய்ய முடியும்?
இவையெல்லாம் லீகல் என்றால் ஒரு ஓவரில் நான்கு 4குகளை கொடுப்பது மட்டும் சட்டவிரோதம் ஆகிவிடுமா? போட்டிகளின் விறுவிறுப்புக்கேற்பவே நேரடி ஒளிபரப்பின் போது வரும் விளம்பரங்களுக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றால் அந்த் விறுவிறுப்பை அணி முதலாளிகளும் வீரர்களும் பேசி வைத்துக் கொண்டு செய்தால் யார் தடுக்க முடியும்? ஆக ஐபிஎல்லும் சூதாட்டமும் ஸ்பாட் பிக்சிங்கும் யாரும் பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கிறது. ஒரு நேர்த்தியான சூதாட்ட அழகியலின் குழந்தைதான் ஐபிஎல்.
ஸ்ரீசாந்த் அண்ட் கோ மாட்டியதும் இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசன் சென்னையில் கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத்தை கூட்டி நாங்களும் கச்சேரி செய்கிறோம் என்று பாடினார். ஆனால் அதில் சுருதி ஒட்டவே இல்லை.
இந்த சூதாட்ட மோசடியை விசாரிக்க ஒரு நபர் விசாரணையைப் போட்டு விசாரிக்கிறோம் என்றார். ஆனால் அடுத்த நிமிடத்திலேயே “எங்களுடைய வரம்பு குறைவு, யாருடைய போனையும் ஒட்டுக் கேட்க முடியாது, கைது செய்ய முடியாது, சூதாட்டத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை, எல்லா வீரர்களையும் கண்காணிக்கும் அளவுக்கு எங்களுக்கு ஆள்பலம் இல்லை” என்றார்.
இதிலிருந்து தெரிவது என்ன? இவர்கள் விசாரணை என்பது ஒரு கண்துடைப்பு மோசடி! ஊடகங்களுக்கும் ஊருக்கும் நாங்களும் யோக்கியவான்கள் என்று காட்டிக்கொள்ள ஒரு நடிப்பு, அவ்வளவுதான். இந்தியாவில் பொதுத்தேர்தல் வருவதால் ஐபிஎல்லை இங்கு போலிஸ் பாதுகாப்புடன் நடத்த முடியாது என்றதும் லலித் மோடி ஆட்டத்தையே தென் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சென்று நடத்தினார். சர்வதேச கிரிக்கெட் வாரியமும், ஏனைய நாடுகளின் வாரியமும் கண்டு நடுங்குமளவு பணபலமும், வருமானமும் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சூதாட்ட மோசடியை கண்டுபிடிக்க துப்பில்லை என்பதை நாம் நம்ப வேண்டுமாம்.
அடுத்து ஆந்திரத்து ராஜசேகர ரெட்டியுடன் ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் சீனிவாசன் தமிழகத்தில் ஏனைய சிமெண்டு முதலாளிகளுடன் சிண்டிகேட் அமைத்து அநியாயமாக கொள்ளை அடித்து வரும் ஒரு முதலாளி. இதனால்தான் என்னவோ ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் வீரர்கள் சட்டத்தால் நிரூபிக்கப்படும் வரை அப்பாவிகள்தான் என்று நற்பத்திரம் வாசிக்கிறார். இதுதான் குற்ற உணர்வு குறுகுறுக்கும் என்பார்களோ?
சரி, ஐபிஎல்லின் அனைத்து இரகசியங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வெளியிடுங்களேன், அதன் மூலம் வெளிப்படைத்தன்மை மூலம் அதை திருத்தலாமே என்றால், நாங்கள் தனியார் அமைப்பு அந்த சட்டத்தின் கீழ் வரமாட்டோம் என்கிறார் சீனிவாசன். கூடவே அப்படி அந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தாலும் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என்கிறார். இதற்கு பொழிப்புரை என்ன? நாங்களும் திருட்டுத்தனமாகத்தான் செயல்படுவோம், வெளியே நடக்கும் திருட்டுத்தனங்களையும் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான்.
இத்தகைய பின்னணியில் இவரது மருமகன் மெய்யப்பன், நடிகர் விண்டூவுடன் என்ன பேசியிருப்பார்? ஸ்பாட் பிக்சிங்கில் அணிகளின் முதலாளிகளே இருப்பார்கள் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?
ஒரு சிலர் பெட்டிங்கை சட்டபூர்வமாக்கிவிடலாம் என்கிறார்கள். பாலியல் வன்முறையை குறைக்க விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கலாம் என்பதற்கு ஒப்பானது இது. இதன்படி குழந்தைகளையும் சட்டபூர்வமாக விபச்சாரம் செய்ய அனுமதித்தால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையையும் தடுத்து நிறுத்தலாமோ?
ஒரு விளையாட்டை, போட்டியை விளையாட்டு உணர்வோடு அணுகுவது, இரசிப்பதுதான் ஆரோக்கியம். சூதாட்டமும், ஸ்பாட் பிக்சிங்கும் அதை வர்த்தக உணர்வாக்குகிறது. அதன்படி விளையாட்டு என்பது உடலின் சாத்தியங்களை போட்டியுடன் இரசிக்கச் செய்யும் ஒரு கலை என்பது போய் அதன் விதிகளை பணத்தால் கட்டுப்படுத்தப்படும் தொழில் என்றாக்கிவிடும்.
பிறகு ஸ்ரீசாந்த் ஒரு ஓவரில் 13 ரன் கொடுக்கிறேன் என்று ஒப்பந்தம் போடத்தான் செய்வார், பரவாயில்லையா?
தமிழகத்தின் கோவில்கள் பார்ப்பன ஆதிக்கசாதியினரிடம் இருந்த வரை மக்கள் பணம் கேட்பாரின்றி கொள்ளையடிக்கப்பட்டது. இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணமே நீதிக்கட்சி காலத்தில் கோவில்கள் அரசுடமை ஆக்கப்பட்டன. அது போல கிரிக்கெட்டும் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். அளப்பரிய அதன் பணம் மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவழிக்கப்பட வேண்டும். கிரிக்கெட்டை அரசு எடுப்பதால் சீரழிந்து விடுமே என்று கவலைப்படுவர்களுக்கு இப்போதைய சீரழிவை விட அது மேல் என்பதை மட்டும் சுட்டிக்காட்டுகிறோம்.
வினவு …..இந்த கட்டுரைல கூட பார்பன் தான் எடுதூகட்டா? உன்னகு என்ன பிரஷனை?
எடுத்துக்காட்டாக பார்ப்பனனை சொன்னால் உங்களுக்கு என்ன பிரஷனை..ச்சி பிரச்சனை நடுநிலை
“” தமிழகத்தின் கோவில்கள் பார்ப்பன ஆதிக்கசாதியினரிடம் இருந்த வரை மக்கள் பணம் கேட்பாரின்றி கொள்ளையடிக்கப்பட்டது. இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணமே நீதிக்கட்சி காலத்தில் கோவில்கள் அரசுடமை ஆக்கப்பட்டன.”” வினவு அவர்களே- எதற்க்கு எடுத்தாலும் பார்ப்பன ஆதிக்கம்தானா?
அப்ப்டியென்ட்ரால் வஙகி அரசுடமை , சமீபத்து அண்ணாமலை பல்கலை அரசுடமை எந்த ஆதிக்கம் ?
அய்யா பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க் சாதி என்பதே கட்டுரை குறிப்பிட்டிருக்கும் வரியின் பொருள். அதன்படி செட்டியார், நாயுடு, ரெட்டியார், முதலியார், கவுண்டர் அனைவரும் அதில் வருவார்கள். ஆனால் பார்ப்பனர்கள் அளவுக்கு அவர்களுக்கு கோபம் வராமல் இருப்பதற்கு காரணம் ஆதிக்க சாதியினருக்கு சித்தாந்த தலைமை கொடுப்பது அவாள்தான்.
கட்டுரையில் பொருத்தம் கருதியே கோவில் உதாரணம் கூறப்பட்டுள்ளது. கட்டுரையின் மையப்பொருளிலிருந்து விலகாமல் விவாதிக்குமாறு பணிவுடன் கோருகிறோம்.
அய்யா வினவு அவர்களே – கட்டுரை அதன் கருத்து முக்யம் எனில் வீனாக எந்த ஜாதியையும் இழுக்க வேன்டாமே? அது சரி பிற ஆதிக்க் சாதி என எஙகே குறிப்புட்டு உள்ளீர்?
பிற ஆதிக்க் சாதி செட்டியார், நாயுடு, ரெட்டியார், முதலியார், கவுண்டர் அனைவரும் அதில் வருவார்கள் என்ட்ரால் மற்ற உண்மையான ஆதிக்க் சாதிகளை ஏன் குறிப்படவில்லை? ஏன் பயமா? அல்லது நீஙகள் அதில் ஒனறா? அவர்க்ளை குறிப்பிட்ட பின் அவர்களுக்கு கோபம் வருமா இல்லையா என்ட்ரூ பார்க்கவும்.
பார்ப்பன, பார்ப்பான் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு கட்டுரை வந்தால் அது ஒரு புரட்சிகர கட்டுரை அல்ல என்பது வினவின் புரட்சிகர கொள்கை..
கட்டுரையில் குறிப்பிடப்படும் எடுத்துக்காட்டு சரியல்ல என்று வாதிப்பது நேர்மை.
பின் குறிப்பு: கிரிக்கெட்டை விரும்பி ஆடும் பார்ப்பனர்கள் கபடி, கால்பந்து விளையாடுவதில்லை. இந்த விளையாட்டுகளில் உடம்பை வருத்துவது போல கிரிக்கெட்டில் “உழைக்க” வேண்டியதில்லை என்பது காரணமோ?
// பார்ப்பனர்கள் கபடி, கால்பந்து விளையாடுவதில்லை //
என்னா சாமி, புகுந்து வெளயாடச் சொன்னா தள்ளி நின்னு சூடம் காட்ற மாதிரி கையக்கால ஆட்டிக்கிட்டு இருக்கியே.. தெம்பா மோதணும்னா பச்சையா 4 முட்டைய அடிச்சுட்டு விளையாடிப் பாரு என்று ஆசை காட்டி மோசம் பண்ணிவிடுவார்களே ..
Brahmins have started eating non-veg long time back.
அப்படியானால் உடல் வலு தேவைப்படாத விளையாட்டு கிரிக்கெட் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள். சோம்பேறிகளின் இந்த விளையாட்டு நமக்கு தேவையா என்று இனி மக்கள் முடிவு செய்யட்டும்.
வேகப் பந்து வீச்சுக்கும், சிக்சரடிக்கவும், அங்குமிங்கும் வேகமாக ஓடவும் ஓரளவு உடல் வலு தேவை..
கபடி, கால்பந்தாட்டம் போல எதிரணியினருடன் வலுச்சோதனை (பலப்பரீட்சை) நடத்தாமல், இரத்த காயம், மூட்டுவிலக்கம் ஏற்படாமல், தனியாக ஒருபக்கமாக குதித்தும் ஓடியும் பல்டியடித்தும் ஆடும் ஆட்டங்களில் களைத்து மயக்கம் போடும்வரை ’உழைத்து’ ஆட எல்லா சாதிக்காரர்களையும் போல பார்ப்பனர்களும் தயாராயிருக்கலாம்..
அய்யா வினவு அவர்களே – அனைத்து அவுட்டோர் விளையாட்டுக்கும் உடம்பை வருத்து உழைக்க வேண்டூம்- ஏதாவது விளையாட்டு மைதானம் சென்று பாரூம்? யார் என்ன் விளையாடுகிறார்கள் என- – நீங்கள் குறிப்பிட்ட “ஐபிஎல் இல் ஆடுபவர்கல் அனைவரும் கிரிக்கெட்டில் உழைக்க வேண்டியதில்லை என என்னும் பார்ப்பனர்களா?
What to do? In all cheating and fraud cases you curd rice people are involved.
தங்களது சாதியைச் சொன்னால் உங்களவாக்களின் திருவிளையாடல்களை எண்ணிப் பார்த்து பெருமைப்பட உதவி செய்யமுடியும்..
//
ஒரு சிலர் பெட்டிங்கை சட்டபூர்வமாக்கிவிடலாம் என்கிறார்கள். பாலியல் வன்முறையை குறைக்க விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கலாம் என்பதற்கு ஒப்பானது இது.
//
விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதற்கு பாலியல் வன்முறையை குறைப்பதுதான் காரணம் எனில் அது தவறு. ஆனால் விபச்சாரம் சட்டம் அங்கீகரித்த தொழிலாக நடத்தப்பட வேண்டும். அதுதான் விபச்சாரத்தையும் சிறார் கடத்தலையும் குழந்தை சதை சந்தையும் ஒழித்துக் கட்டுவதன் முதல் படியாக இருக்கும்.
How come Vinavu forgets to mention that Gurunath Meiyappan is the son of AVM Balasubramanian?
he talks about N.Srnivasan’s cement price fixing but forgets to mention the involvement of the AVM family.
He also conveniently forgets who is the real owner of India Cements,is it really N Srinivasan?
Dont we all know that he is just a proxy for someone else?
No wealth was swindled before the government took over the temples,the temple wealth in Trivandrum is the example for it.
Appo Sivan sothu kula naasam,But now the dravidian party governments have swindled the temple wealth for 60 years,infact it is the non-paarpaans who have swindled the temple wealth bigtime.
Who knows whats there in the temple undiyal and how the expenditure is accounted for,by the Hindu aranilai thurai?
//தமிழகத்தின் கோவில்கள் பார்ப்பன ஆதிக்கசாதியினரிடம் இருந்த வரை மக்கள் பணம் கேட்பாரின்றி கொள்ளையடிக்கப்பட்டது. இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணமே நீதிக்கட்சி காலத்தில் கோவில்கள் அரசுடமை ஆக்கப்பட்டன.//
பாயின்ட்டுக்கு வந்தாச்சு… 😀
ஐபிஎல் என்பது நேரடியாக முதலாளிகளும், அரசியல் கட்சிகளும் கூட்டமைத்து அடிக்கும் பகல்கொள்ளை. இன்று அறியப்பட்ட ஒவ்வொரு தேர்தல் அரசியல்வாதியும் சூதாட்ட கிரிக்கெட்டின் பங்குதாரர்கள். பிஜெபி–யின் அருண் ஜெட்லி மற்றும் காங்கிரஸின் ராஜீவ் சுக்லா ( இவர் ஐபிஎல்லின் தலைவர்) ஆகியோருக்கும் சம்பந்தமிருப்பதாக தகவல்கள் வருகின்றன. பாஜகவின் வழக்கமான சவுண்டை இந்த பிரச்சினையில் காணவில்லை.
சிக்ஸர் அடிச்சா ரசிகனுக்கு போதை. சிக்ஸர் அடிச்சாத்தான் ரம்பைகள் ஆடுவாங்க. பிக்சிங் பண்ணாம எப்படி இத்தனை சிக்ஸர்கள் அடிப்பது? எப்ப்டி ரம்பைகளை ஆடவைப்பது?
\\ஆக ஐபிஎல்லும் சூதாட்டமும் ஸ்பாட் பிக்சிங்கும் யாரும் பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கிறது. ஒரு நேர்த்தியான சூதாட்ட அழகியலின் குழந்தைதான் ஐபிஎல்.//
ஐபிஎல் மட்டுமல்ல இந்த கிறுக்குப்பயல்களின் விளையாட்டே போட்டி வளைப்புடனும் [Match fixing] தருண வளைப்புடனும் [Spot fixing] யாரும் பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கிறது.விளையாடும் வீரர்கள் தாங்கள் விரும்பியவாறு முடிவை -விளையாடி அல்ல சோரம் போய்- கொண்டு வர இந்த விளையாட்டில்தான் வாய்ப்புகள் உள்ளன.ஏனென்றால் உண்மையில் இது ஒரு விளையாட்டே அல்ல.கழிப்பறை தவிர்த்து வேறு எங்கும் உடலை வளைக்காத மேட்டுக்குடி கோமான்கள் கை காலை அசைக்கவும் வெயிலில் காயவும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விளையாட்டை 40 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும் இந்தியாவில் விளையாடுவதை விட கிறுக்குத்தனம் வேறு எதுவும் உண்டா.
// கிறுக்குத்தனம் //
வெயிலே இல்லாமல் இருந்தாலும் இந்த விளையாட்டு ஒரு கிறுக்குத்தனம்தான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..
சு.சாமி,துக்ளக் ஸோ உள்ளிட்ட பாப்பார கும்பல் ஐ.பி.எல் சுருட்டல் பட்றி வாய் திறக்கவில்லயெ !அவாள் என்பதாலா?
குரு -அய்யா என்ன கும்பலோ? குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டாதீர்- காசு கொடுத்து பத்திரிகை,
வாஙகி (அ )டி.வி பாரூம்
I also feel their shut mouths are an issue.
அம்பி களத்தில் இறங்கிவிட்டதால்,நானும் களமிறஙுகிறேன்! கிரிக்கெட்டு ஒரு அற்புதமான விளையாட்டு , ஆடுபவர்களுக்கு மட்டும்! எப்பொது அது டிக்கெட் போட்டு வசூல் கொள்ளையும், காணொலி உரிமம் கொள்ளையும் ஆரம்பித்தனவோ அப்பொழுதே அது விலை மாதாகி விட்டது! மன்னிக்கவும், இதில் பார்ப்பனீயம் எஙகே வந்தது? இது என்ன கேள்வி? பணம் இருக்கும் இடம் எல்லாம் பகவானும் , பார்ப்பானும் இருப்பர்! என்ன அம்பி, சரிதானே!
பணம் இருக்கும் இடம் எல்லாம் பகவானும் , பார்ப்பானும் இருப்பர்! என்றால் திராவிட இயக்கஙகள
மற்ற இயக்கஙகள , கழகஙகள் இவர்கலில் இருப்பவர்கள் பார்ப்பனர்களே – அதன் தலைகள் பகவானே
இல்லை.. பகவானும், பார்ப்பானும் மட்டுமே உள்ள பணமில்லாத இடங்கள் உங்களது கருத்துப் பேழையை திறந்துவிட இயலாதவை..
//ஒரு சிலர் பெட்டிங்கை சட்டபூர்வமாக்கிவிடலாம் என்கிறார்கள். பாலியல் வன்முறையை குறைக்க விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கலாம் என்பதற்கு ஒப்பானது இது. இதன்படி குழந்தைகளையும் சட்டபூர்வமாக விபச்சாரம் செய்ய அனுமதித்தால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையையும் தடுத்து நிறுத்தலாமோ?//
சட்ட பூர்வமாக்கினால் என்ன தவறு? அந்த காலத்திலேயே தாசிகள் இல்லையா? ஒரு வயது வந்த கல்யாணம் ஆகாத வாலிபன் தனது உணர்வை/விருப்பத்தை எப்படி தீர்த்து கொள்வான்? இதெல்லாம் இயற்கை. ஒவ்வொருவருக்கும் இது வேறு படும். விபச்சாரத்தை சட்ட பூர்வாக கொண்டுள்ள சிங்கப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை அறவே கிடையாது. கள்ளச்சாராயம் பெருகி விடுகிறது என்று அரசே கள்ளு கடை நடத்தவில்லையா?