privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: பின்னணி என்ன ?

சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: பின்னணி என்ன ?

-

டாடா மற்றும் எஸ்ஸார் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் உள்ள தாதுப் பொருட்களை எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டிருக்கின்றன.

மாவோயிஸ்ட் vs MOUஸ்ட்
பெரும் போர் – மாவோயிஸ்ட் எதிர் MOUஸ்ட் (பழங்குடி மக்கள் எதிர் கார்ப்பொரேட்டுகள்+அரசு)

மலை இருக்கிறது, காடு இருக்கிறது, மலைக்கு கீழே, காட்டு நிலத்துக்கு அடியில், சந்தையில் பெரும் லாபம் ஈட்ட உதவும் தாதுக்கள் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளை சரிக்கட்டி, சட்டங்களை மாற்றி, உரிமங்களை விலைக்கு வாங்கி விட்டால், தாதுக்களை அகழ்ந்து, உலகச் சந்தையில் விற்று லாபம் பார்க்கலாம். இந்த சமன்பாட்டுக்கு இடைஞ்சலாக, குறுக்கீடாக அந்தப் பகுதியில் பழங்குடி மக்களும் இருக்கிறார்கள்.

பணம், மாற்று இடத்தில் நிலம், வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்ற மோசடி பொருளாதார மந்திரங்கள் அவர்களிடம் எடுபட மாட்டேன் என்கிறது. முதலாளிகள் பாணி ‘நாட்டுப் பற்று’ என்ற பசப்பு வார்த்தையும் அவர்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது. ஒரு கையில் துப்பாக்கி, மறு கையில் பைபிள் அல்லது கஞ்சா கொடுத்து வசப்படுத்தும் 19-ம் நூற்றாண்டு உத்திகளும் செல்லுபடியாகவில்லை. லீனா மணிமேகலை போன்ற படைப்பாளிகளின் “தேஜஸ்வினி” எனும் விஷூவல் வித்தைகளும் அம்மக்களிடத்தில் எடுபடவில்லை.

எங்கள் நிலம், எங்கள் வாழ்க்கை, எங்கள் உரிமை என்பதை டாடா அல்லது எஸ்ஸாரின் ஆதாயத்துக்காக அல்லது மன்மோகன் சிங்/ப சிதம்பரத்தின் ‘வளர்ச்சி’ பார்வைக்காக அந்த மக்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அவர்கள் கார்ப்பரேட்டுகளின் பண பலத்தையும் அரசின் ஆயுத பலத்தையும் எதிர்த்து நிற்க மாவோயிஸ்ட் அமைப்பின் கீழ் அணி திரள்கிறார்கள்.

ஒரு கட்டபொம்மன் பிறந்த அதே மண்ணில் ஒரு எட்டப்பன் பிறக்காமலா போய் விடுகிறான். ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து நின்ற திப்பு சுல்தானை காட்டிக் கொடுக்க மகாராஷ்டிராவின் பேஷ்வா கிடைக்காமலா போய் விட்டார். சாம, தான முறைகள் எடுபடாமல் போய் தண்டம் சாத்தியப்படாமல் இருக்க முதலாளிகள் பேதத்தில் இறங்குகிறார்கள்.

மகேந்திர கர்மா
மகேந்திர கர்மா

பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெருநில உடைமையாளர் குடும்பத்தில் பிறந்த மகேந்திர கர்மா 1990-களிலேயே நிலமற்ற பழங்குடி மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கும் மாவோயிஸ்டு இயக்கத்துக்கு எதிராக ஜன் ஜாக்ரன் அபியான் என்ற படையை உருவாக்க முயற்சித்தார். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு டாடாக்களும், எஸ்ஸார்களும் அவர்களது திட்டங்களுக்காக பழங்குடி பகுதிகளை கையகப்படுத்தும் முயற்சிகளுக்கு மாவோயிஸ்டுகள் என்ற தடையை எதிர் கொள்வது வரை அவரது முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

2005-ல் கார்ப்பரேட்டுகள் தேவையான நிதி உதவி வழங்க, மத்திய அரசு மற்றும் மாநில அரசு, ஆயுதங்கள் கொடுத்து பழங்குடி மக்களிடையே, முதலாளிகளின் பணம், இன்சொல்லில் மயங்கும் ஒரு சிறு பிரிவினரை அணி திரட்டுகிறார்கள். அதற்கு சல்வா ஜூடும் அல்லது சுத்திகரிக்கும் வேட்டை என்று பெயர் சூட்டுகிறார்கள்.

2011-ம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தால் கலைக்கப்படும் வரையிலான அடுத்த 5 ஆண்டுகளில் தமது எஜமான்களான கார்ப்பரேட்டுகளின் சார்பில் தமது மக்கள் மீதே ஒரு மிகப்பெரும் சுத்திகரிப்பு வேட்டையை நடத்தினர் சல்வா ஜூடும் படையினர். சல்வா ஜூடும் செயல்பட ஆரம்பித்த முதல் இரண்டு ஆண்டுகளில் சுமார் 644 கிராமங்களில் வீடுகளை எரித்து அங்கு வாழ்ந்த சுமார் 3 லட்சம் மக்களை வெளியில் துரத்தினர். சுமார் 1 லட்சம் பழங்குடி மக்கள் தென் சத்திஸ்கரில் உள்ள பல்வேறு முகாம்களில் குடியேற்றப்பட்டனர்.

‘மாவோயிஸ்டுகள் செயல்படுவதற்கு கிராமங்கள் இல்லாமல் செய்வதாகவும், மக்களை மாவோயிஸ்டுகள் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக முகாம்களில் குடியேற்றுவதாகவும்’ கூறி இந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் படு கொலை செய்யப்பட்டனர்; பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களுக்கு காவலாக சல்வா ஜூடும் படையினர் தம்மைத் தாமே நியமித்துக் கொண்டனர். இலங்கையில் முள்வேலி முகாம்களிலும், தமிழகத்தில் அகதி முகாம்களிலும் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களைப் போல சல்வா ஜூடும் குண்டர்களின் ஆதிக்கத்தில் அடைபட்டிருந்த பழங்குடி பெண்களும், குழந்தைகளும் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இவற்றை தடுக்க வேண்டிய காவல் துறையும், நீதி மன்றங்களும் கைகட்டி வேடிக்கை பார்த்தன. கொல்லப்படும் அரச படைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல லட்ச ரூபாய் இழப்பீடு, கண்ணீர் அஞ்சலி வழங்கும் அரசு, கார்ப்பரேட்டுகளின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கொலைவேட்டையை ஊக்குவித்தது.

பழங்குடி மக்கள் மத்தியில் பிரிவு ஏற்படுத்தி, அவர்களது கிராம வாழ்க்கையை அழித்து, பெரும் எண்ணிக்கையிலான மக்களை நாடோடிகளாக மாற்றிய சல்வா ஜூடும் கூலிப்படைக்கு எதிரான பழங்குடியினர் போராட்டங்களும் மாவோயிஸ்ட் தாக்குதல்களும் தீவிரமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களில் பலர் போராளிகளாக மாறினர். 2008-ம் ஆண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சல்வா ஜூடுமின் பயங்கரவாத பிடி பெருமளவு பலவீனமடைந்தது. மக்கள் தத்தமது கிராமங்களுக்கு மறு குடியேற ஆரம்பித்தனர்.

சல்வா ஜூடும் மக்கள் முகாம்
சல்வா ஜூடும் அடக்குமுறை முகாம்

கூலிப்படை உருவாக்கம், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் அழிப்பு இவற்றுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், திரைக்கதை ஓடி முடிந்த பிறகு, 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சல்வா ஜூடும் அமைப்பை அரசே நடத்துவது சட்ட விரோதமானது என்று நீதிமன்றம் சொன்னது. உடனடியாக சல்வா ஜூடுமை கலைத்து அது செய்த கிரிமினல் செயல்கள் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சத்திஸ்கர் அரசை பணித்தது. ஏற்கனவே பல் பிடுங்கப்பட்டிருந்த சல்வா ஜூடுமுக்கான பிணப்பெட்டியின் கதவுகள் இறுதியாக மூடப்பட்டன.

ஆனால், சல்வா ஜூடுமின் 3 ஆண்டுகள் பயங்கரவாத வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட பழங்குடி மக்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பழங்குடி பெண்கள், அழிக்கப்பட்ட கிராமங்கள் இவற்றுக்கு சத்திஸ்கர் அரசும், மத்திய அரசும் எந்த விதமான நியாயத்தையும் வழங்கவில்லை. அந்த குற்றங்களை இழைத்தவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டனை வழங்கவில்லை. அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. குற்றவாளிகள் தங்களைத் தாங்களே விசாரித்து தண்டித்துக் கொள்வார்களா என்ன?

மாறாக சல்வா ஜூடுமை உருவாக்கி, கட்டியமைத்து, இயக்கிய மகேந்திர கர்மா சத்திஸ்கர் காங்கிரசின் முக்கிய தலைவராக தொடர்ந்தார். அவருக்கு அரசின் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எந்திர துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் 24 மணி நேரமும் அவரை காத்து நின்றார்கள். ஆனால், பழங்குடி மக்களின் நியாயத் தராசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசின் நியாயங்களுடன் ஒத்து வருவதில்லை.

கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுமார் 200 தலைவர்கள் 25 கார்களில் சுக்மா மாவட்டத்தில் ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜக்தால்பூருக்கு அருகில் உள்ள கேஷ்லூர் என்ற இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இதை இந்த ஆண்டு வர இருக்கும் தேர்தலுக்கான பரிவர்த்தன் யாத்திரை என்று காங்கிரசு கட்சி அழைக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் வித்யா சரண் சுக்லா, முன்னாள் மாநில அமைச்சர் மகேந்திர கர்மா, மாநில காங்கிரஸ் தலைவர் நந்த் குமார் பட்டேல், ராஜ்நந்த்கான் சட்ட மன்ற உறுப்பினர் உதய் முதலியார், பூலோ தேவி நேத்தம் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் அந்த கார்கள் அணிவகுப்பில் இருந்தனர். அடர்ந்த வனப்பகுதியான தார்பா பள்ளத்தாக்கு பகுதியில் கார்களை தடுத்து நிறுத்திய பெண்கள் உள்ளிட்ட சுமார் 250 பழங்குடி மாவோயிஸ்ட் போராளிகள் காங்கிரஸ் தலைவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மகேந்திர கர்மாவை கொல்வது அந்த தாக்குதலின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி மக்களின் எதிரி மகேந்திரா கர்மா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடுமையாக கண்டனம் செய்திருக்கின்றனர். எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சி, காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களுக்கு எதிரான தனது நாடு தழுவிய போராட்டங்களை தள்ளி வைத்திருக்கிறது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ 5 லட்சம் உதவித் தொகை வழங்கியிருக்கின்றன. ஆனால் பழங்குடி மக்களை இந்திய துணை இராணுவப் படைகள் கொன்றதற்கெல்லாம் இத்தகைய நிவாரணங்கள் ஏதுமில்லை. சொல்லப் போனால் இவர்களின் கொலைகளுக்கு கணக்கே இல்லை.

எனினும் மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலை இந்திய அரசு மிருக பலத்துடன் ஒடுக்கவே முனையும். சம்பவம் நடந்த பிறகு கோப்ரா கமாண்டோ பிரிவு அடங்கிய சிஆர்பிஎஃப் படையினர் 600 பேர் சத்தீஸ்கருக்கு அனுப்பப்பட்டனர். பாஜகவைச் சார்ந்த சத்தீஸ்கரின் முதல்வர் ரமண் சிங்கிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பை உடன் வழங்கியிருக்கிறது இந்திய அரசு. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட் அமைப்பினரை ஒடுக்குவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் உறுதி பூண்டுள்ளார். வரும் நாட்களில் கணக்கு வழக்கு இல்லாமல் கொல்லப்படும் பழங்குடி மக்களை பார்க்க இருக்கிறோம்.

எனவே பழங்குடி மக்கள் மீது கடுமையான எதிர் நடவடிக்கைகளை அவிழ்த்து விடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தயாராகின்றன. அவற்றை எதிர் கொண்டு நமது நாட்டையும் இயற்கை வளங்களையும் கொள்ளை போவதை தடுக்கும் சுமை சத்தீஸ்கரின் பழங்குடி மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அந்த பழங்குடி மக்களை ஆதரிக்க வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.

– செழியன்

மேலும் படிக்க
Was Bastar tiger, Mahendra Kumar face of Salwa Judum the real target in Naxal attack

  1. மகேந்ர கர்மா கொல்லப்பட்டது சரியா? தவறா என்று சொல்ல வில்லை?

    • சிவகுமாரு, சல்வாஜுடுமை எதிர்க்கிறதா வினவு நிறைய முறை எழுதியிருக்கு, அப்டின்னா கர்மாவ முடிச்சது சரின்னு புரியலையா? டியூப்லைட்டு மாரி இருக்கக்கூடாது மாமு!

  2. 2011–ல் சல்வா ஜுடுமை உச்சநீதிமன்றம் சட்ட விரோதமானது; எனவே அதனை கலைக்க பரிந்துரை செய்தது வரையிலுமே பத்திரிகைகள் பதிவு செய்திருக்கின்றன. ஆனால், சட்டிஸ்கர் அரசு சல்வா ஜுடுமை கலைத்ததாக செய்திகள் இல்லை.

    • Sukdev!! Even the Supreme court has accept the existence of salwa judum. My honest questions is why you ppl are not protest against a government sponsored terrorism????

      • அண்ணே காட்டு வேட்டைக்கு எதிரா தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் பண்ணி சென்னையில பெரிய கூட்டமே போட்டாங்கன்னே, அது மாதிரி நீங்க என்ன செஞ்சீங்கண்ணு தெரிஞ்சிக்க ஆசைப்படறேன், நன்றிங்கண்ணா.

  3. Very unfortunate. I do believe that corporates are simply plundering the wealth from tribal people in the name of development. Lands that are worth in crores have been taken by government for just couple of lakhs. I believe that is the reason for these kind of incidents. This happened in orissa where Vedanta looted public in the name of bauxite factory and others. Mineral rich states have to face these kind of problems and I expect (may be dream) government to compensate properly to their people.

    • மாவோயிஸ்டு செய்றது சரியான்னு கொஸ்டின் எழுப்பறதுக்கு முன்னாடி மாவோயிஸ்டு ஏன் அதைச் செய்றான்னு கொஸ்டின் எழுப்பிப் பாருங்க. உள்ளொளி அடைய ஏதுவாகும்.

    • ரங்கா, மாவோயிஸ்டு செய்றது என்ன தவறுன்னு நீங்கதானே சொல்லணும்?

  4. ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை வேண்டுவோர் எல்லாம் ஏன் இப்படி இந்திய மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்கிறீர்கள். உங்களுக்காக அழவேண்டும்தான் இருந்தாலும் இப்போது எங்களுக்கு வேறு வேலை இருக்கிறது. எங்கள் இந்தியாவின் நாகரீக மக்கள் முதலாளித்துவத்தின் உச்சத்தை (சூதை) நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் எங்களது முதலாளிகள் உலகத் தரத்துடன் போட்டிபோடும் வல்லமை பெற்றுவிடுவார்கள். இந்தியாவும் வல்லரசாகிவிடும். அதுவரையினில் பொறுத்துக்கொள்ளுங்கள். உயிர்ப்பு பற்றியும், இழவு பற்றியும் கவலையை விடுங்கள். வளங்கள் பரிமாற்ற மதிப்பாக உருமாற்றமடைந்த பின் நம்புங்கள் நீங்கள் உரிமை கொண்டாடும் அதே இடத்திற்காக, உங்களது வாரிசுகளுக்காக இந்திய மக்களாகிய நாங்கள் முண்டா தட்டுவோம். அதுவரையினில் இந்திய மக்களாகிய எங்களின் எதிர்ப்பை சம்பாதியாதிருங்கள்.

  5. உழுது பயிரிடும் விவசாயிக்கு விளைனிலம் பட்ட செய்து தரப்படுகிறது. இதற்கான சட்டஙகள் மானிலத்திற்கு மானிலம், ஜமீனுக்கு ஜமீன் மாறுபடுகின்றன. எழுதப்படிக்க தெரிந்த, நகரிய மக்கள் தங்கள் நிலஙகளை பட்ட எனப்படும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர்! இத்தகைய ஆவணப்படுத்திய நிலஙகளைத்தான் விற்கவோ, மாற்றவோ முடியும்! மாறாக, நகரிய வாழ்க்கை அன்றி, கிராம மற்றும் காட்டுப்புற மக்கள் ஆண்டு அனுபவித்த நிலஙகள் அவர்கள் பெயரில் ஆவணபடுத்த முடியாததால், ஆதிக்கசக்திகள் ஊடுருவி புதிய அரசு அஙிகாரம் பெற்றும், பெறாமலும் , பழங்குடி மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரமாய் விளஙகும் காட்டு பகுதியிலிருந்து துரத்துகின்றனர்! இதன் எதிர்வினைதான் மாவொ தீவிரவாதமாய் பரிணமித்தது! பெரு முதலாளி களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலஙளை, ஏழை மக்களிடமிருந்து அடாவடி சட்டம் மூலம் பிடுஙகும் ஆதிக்க வர்க்கம் இந்த பாதிக்கபட்ட மக்களை பின்னர் கண்டுகொள்வதில்லை! இவ்வாறு பயங்கரவாத நிகழ்வு நடக்காவ்ட்டால் வெளியில் தெரிவதும் இல்லை! யார் குற்றம்? டாட்டா, வேதாந்தா பொன்ற நிலம்பிடுங்கும் மாபியாக்களா, பாதிக்கபட்டு உரிமக்கு போராடும் மக்களா ? தீர்வு என்ன? சம்பவாமி யுகே யுகே என்று சொல்லிவிட்டு போன ஆண்டவனா? அல்லது அரசா? யார் குற்றவாளி ?

    • The government certainly doesn’t help the tribal/forest people but this Maoism is not a response of the Tribal people,they are fooled both by the government and the Maoists.

      Tomorrow if/when the Maoists come to power,the Tribals will still not get any rights over their land.

      • The Scheduled tribe people also have some very good reservation in all govt employment/colleges but it is Maoism which doesn’t want them to progress and achieve that,instead they keep them stuck at their original levels.

  6. Chhattisgarh government have to follow the andhra police style. Once entire andhra pradhesh was under naxalite control. Today there is no naxalites. They have been mercilessly killed by police and rowdy’s. It is only solution to naxalites.

  7. பசுமை வேட்டை என்பது கோயபல்சை அதிர்ச்சி அடைய வைக்கும் பொய் என கலாநிதி தினகரனின் தலையங்கத்தை தீட்டு உள்ளது.

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=50774

    வினவு கூறியது போல மோடிக்கு வந்த அதே பயம் என்று தான் சொல்ல முடியும்.

    ” ஈராக் ஆக்கரமிப்பு குறித்த சன் நீயுஸ் சேனலில் ஈராக் தீவிரவாதிகள் தாக்கி அமெரிக்க பாதுகாப்பு படையினர் இரண்டு பேர் பலி என செய்தி ஒலிபரப்புகிறான். இவனுக்கு என்ன இவ்வளவு அக்கறை என” ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காகவே ஊடகங்கள் இருப்பதை மருதையன் தோழர் ஒரு உரையில் தோலுரித்து இருப்பார்.

    அந்த ஆளும் வர்க்க பாசம் தான், அந்த மோடியின் பயம் தான் சன் நீயூஸ் தினகரன் கண்ணிலும் தெரிகிறது என்றால் அது மிகையில்லை.

  8. There are people who dont like maoism/marxist-leninism how much ever you people try to convince,so they ll stand with the establishment as they see human greed as a normal behaviour compared to the impossible ideals of the maoists and how they willingly become pawns in the geo political game of China.

    So,nothing wrong in killing salwa judum founder,but they ll also take revenge just like ranvir sena,

    so,the worst is yet to come.

  9. Dear Vinavu,

    I request Vinavu should publish the details the crimes of Mahendra Karma. They are really heart breaking and gory. The press release summarizes how a new breed of counter revolutionaries like Karma come into existence in the era of liberalization.

    This will be a great service to let Tamil readers know them in details.

    http://bannedthought.net/India/CPI-Maoist-Docs/Statements-2013/130526-DK-OnMahendraKarmaAnnihilation-Eng.doc

    Regards,

    Kumaresan.

  10. Many people are pro-establishment and pro-salwa judum,

    And please dont blame salwa judum for dead tribal people,those are innocents caught in the crossfire.

    Maoists should take equal blame for the death if tribal people.

  11. பல இடங்களில் செல்போன் கோபுரம் குடிநீர் வசதி மின்வசதி சாலை வசதி போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர அரசும் அதிகாரிகளும் முன்வரும் போது அதை தடுப்பது யார்?அப்படி தடுத்து விட்டு மறுபுறம் எங்களை அரசு கவனிக்கவில்லை அதனால் நாங்கள் ஆயுதம் தூக்குறோம் என சொல்வது யார்?

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க