privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகுடித்துவிட்டு காரோட்டிய கொலைகார முதலாளிக்கு எதிராக HRPC !

குடித்துவிட்டு காரோட்டிய கொலைகார முதலாளிக்கு எதிராக HRPC !

-

புருஷோத்தமன்
EMPEE குழும முதலாளி புருஷோத்தமன் (புகைப்படம் நன்றி : இந்து நாளிதழ்)

சென்னையில் நள்ளிரவில் குடித்துக் கொண்டு கார் ஓட்டி 3 குழந்தைகள் உட்பட 5 பேரை படுகாயப்படுத்திய EMPEE குழு முதலாளி எம் பி  புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமனின் முன் பிணை மனுவை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலாளர் மில்ட்டன் எதிர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த விபத்தில் காயமடைந்த முனிராஜ் என்ற 13 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான். சம்பவ இடத்திலிருந்து ஷாஜி நண்பர்களுடன் தப்பி ஓடி விட்டிருக்கிறார்.  பின்னர் புருஷோத்தமன் குடும்பத்திற்கு சொந்தமான நெல்லூரில் உள்ள நாய்டுபேட்டையில் வளர்க்கப்படும் குதிரைகளை பராமரிக்கும் குமார் என்பவரை கார் ஓட்டியதாக போலீசில் சரணடைய செய்துள்ளனர் என்று இது தொடர்பாக இந்து நாளிதழ் நடத்திய புலனாய்வில் தெரிய வந்துள்ளது.

புதன் கிழமை அன்று ஷாஜியின் முன் பிணை மனு, உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலாளர் மில்ட்டனை  எதிர்மனுதாரராக இணைக்க மனு தாக்கல் அனுமதி கோரப்பட்டது. அதன் பேரில் வழக்கு வியாழக் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன் பிணை மனுவினை தள்ளுபடி செய்யக் கோரியும், எதிர் மனுதாரராக இணைக்கக் கோரியும்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.

 

egmore-poster
தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
சென்னை கிளை