சென்னையில் நள்ளிரவில் குடித்துக் கொண்டு கார் ஓட்டி 3 குழந்தைகள் உட்பட 5 பேரை படுகாயப்படுத்திய EMPEE குழு முதலாளி எம் பி புருஷோத்தமனின் மகன் ஷாஜி புருஷோத்தமனின் முன் பிணை மனுவை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலாளர் மில்ட்டன் எதிர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த விபத்தில் காயமடைந்த முனிராஜ் என்ற 13 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான். சம்பவ இடத்திலிருந்து ஷாஜி நண்பர்களுடன் தப்பி ஓடி விட்டிருக்கிறார். பின்னர் புருஷோத்தமன் குடும்பத்திற்கு சொந்தமான நெல்லூரில் உள்ள நாய்டுபேட்டையில் வளர்க்கப்படும் குதிரைகளை பராமரிக்கும் குமார் என்பவரை கார் ஓட்டியதாக போலீசில் சரணடைய செய்துள்ளனர் என்று இது தொடர்பாக இந்து நாளிதழ் நடத்திய புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
புதன் கிழமை அன்று ஷாஜியின் முன் பிணை மனு, உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலாளர் மில்ட்டனை எதிர்மனுதாரராக இணைக்க மனு தாக்கல் அனுமதி கோரப்பட்டது. அதன் பேரில் வழக்கு வியாழக் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன் பிணை மனுவினை தள்ளுபடி செய்யக் கோரியும், எதிர் மனுதாரராக இணைக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.
வழக்கில் நாம் ஜெயிக்க வாழ்த்துகள்.
Reason for half the problems in India, is lazy and corrupt Judiciary.
Lets see how many years it takes to get verdict on this case and whether the true criminal is even punished.
there was one mold movie in similar theme…. Question to Vinavu. What will you do , if you are in same position of rich influential person?
What will you do if your children died in such an incident Mr.kmv?
What will you do if you are a poor labour who sleeps with the family in platforms losts his children in such an incident?
Being a pity father of that family, would you wear that scoundrel’s shoe?
what will be the compensation if the same accident is because of a auto / taxi/ Govt bus.? will the compensation be on the financial capacity of the driver?
So you want to say that drunk and drive, & Impersonation and accident are same. By the way, if your child dies by the drunk and drive then you like to get some meager compensation after 10 are 20 years.
what if kumar is the person who drove the car during that accident.
being poor, he need to be pardoned as per the blog…
Its not an accident. Its an incident
The person who did this should be put away in jail and the family in the platform has to be taken care of for the rest of their life by Empee group. we should protest aginst empee group until this is done
this looks like blood money concept plus punishment…