Tuesday, February 18, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்மோடியின் குஜராத்தில் விவசாயி தற்கொலை !

மோடியின் குஜராத்தில் விவசாயி தற்கொலை !

-

farmersந்தியாவின் பூலோக சொர்க்கம் என்று ஆர்.எஸ்.எஸ் கோயாபல்ஸ்களால் ஊதிப் பெருக்கப்படும், சாட்சாத் ராமராஜ்யம் நடக்கும் குஜராத்தில் அப்பாவி விவசாயிகள் கடனுக்கு பயந்து தற்கொலை செய்வது அதிகமாகி வருகிறது. அதை “விவசாய தற்கொலை” என்று பதிவு செய்யாமல் போலீஸ் அலைக்கழிக்கிறது. உண்மையை பதிவு செய்வதே மக்களுக்கு பெரும் போராட்டமாக உள்ளது.

ஒரு வருடத்திற்கு முன் குஜராத்தில் உள்ள கிஜ்தாத் கிரமத்தை சேர்ந்த அனிருத் ஜடேஜா எனும் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் குஜராத் முதலவர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் “கிராமத்தில் போதுமான மழை இல்லை, விவசாயத்தில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை, 11,000 ரூபாய் கடன் கொடுத்த வங்கி தரப் போகும் அழுத்தத்தை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று தெளிவாக எழுதியிருந்தார்.

ஆனால் அதை விவசாய தற்கொலை என்று பதியாமல் குடும்ப தகராறு காரணமாக அனிருத் திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்தது போலீஸ். இதை எதிர்த்து அனிருத்தின் உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வழக்கு நடத்தினர். ஒரு ஆண்டுக்கு பின் அது விவசாய தற்கொலை தான் என ஜாம்நகரில் உள்ள நீதிமன்றம் உறுதிப் படுத்தியுள்ளது.

“சென்ற ஆண்டு மழை பொய்த்து போனதால் அவரது பயிர்கள் கருகி விட்டன. ஆனால், கடன் கொடுத்த வங்கி அவர் மீது கடும் அழுத்தம் கொடுத்தது. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை” என்கிறார் அனிருத்தின் மாமா லால்ஜிபாய் ஜடேஜா.

சவுராஷ்ட்ராவில் இந்த ஆண்டும் அதே நிலைமைதான். போதுமான மழையில்லை, விவசாயத்துக்கு பாசன வசதி இல்லை, வங்கிக் கடனுக்கு பயந்து பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால், உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் மூலமாக குஜராத்தை ஒளிர வைப்பதில் ஆழ்ந்திருக்கும் அரசு அவர்களது நெருக்கடியை கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான தற்கொலைகளை விவசாய தற்கொலை என்று அரசு பதிவு செய்து கொள்வதில்லை.

ஒரு வேளை பதிவு செய்தாலும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிவாரணத் தொகையும் வந்து சேருவதில்லை. கடந்த ஆண்டு சுமார் 62 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்று அதிகாரபூர்வமாக பதிவாகியுள்ளது. அவர்களில் ஒருவருக்கு கூட நிவாரணம் வழங்கப்படவில்லை. உண்மையில் தற்கொலைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மை தற்கொலைகள் விபத்து என்று போலீஸால் பதிவு செய்யபடுகின்றன.

இந்திய தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வால் பிடிப்பதுதான் காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசுகளின் முதன்மை கொள்கை. இதில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. விதர்பாவில் 1 லட்சம் விவசாயிகள் வரை தற்கொலை செய்துகொண்ட கால கட்டத்தில் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், பிஜேபி கூட்டணிகள் மாறி மாறி ஆண்டுக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

தரகு முதலாளிகளுக்கு வால் ஆட்டுவதை உச்சி முகர்ந்து ஆர் எஸ் எஸ் ரவுடிகளும், ஊடகத் துறை அம்பிகளும் மோடியை வளர்ச்சியின் நாயகனாகவும், குஜராத் பூலோக சொர்க்கம் என்றும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் குஜராத்தின் விவசாயமும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களும் புறக்கணிக்கப்படுகின்றன. விவசாயிகள் தற்கொலை பெருகி வருவதை மூடி மறைக்கும் கட்டாயத்தில் உள்ளது குஜராத் அரசு.

இந்த செய்தி வந்தபின், ஆர்.எஸ்.எஸ் தலைமையும், பிஜேபி தலைமையும் தம் டயப்பர் வாயை திறந்து, “விவசாய தற்கொலைகள் எல்லாம் இந்தியாவில் தான் நடக்கின்றன, பாரதத்தில் இல்லை” என சமாளிக்கலாம். வேறு வழி?

மேலும் படிக்க
A year after death, Gujarat court certifies it as farm suicide

  1. இந்த டவுசரு இந்திய பிரதமர் ஆயிட்டா நாளைக்கே இந்தியாவ தூக்கி நிறுத்தீருவாரு..
    அம்பானி காசு எல்லா பத்திரிக்கை,செய்தி சேனல்களில் விளையாடுது…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க