Wednesday, February 21, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசெருப்பை சுமக்க வைத்த தேவர் சாதி வெறி !

செருப்பை சுமக்க வைத்த தேவர் சாதி வெறி !

-

துரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள வடுகப்பட்டியைச் சேர்ந்த நிலமாலை என்பவருக்கு மூளை நிறைய சாதி வெறி நிரம்பியிருக்கிறது. உருப்படியாக ஏதாவது வேலை செய்து சாதிக்கும் திறன் இல்லாத அந்த காட்டுமிராண்டிக்கு அவர்கள் கிராமத்திலேயே வசிக்கும் 250 தாழ்த்தப்பட்ட சாதி மக்களை அவமானப்படுத்துவதிலும், ஒடுக்குவதிலும் மட்டுமே தன்னம்பிக்கையும் பெருமையும் இருந்திருக்கிறது.

தேவர் சாதி வெறிஅந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தனி கோயில், தனி கிணறு, தனி குடியிருப்பு என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் செருப்பு அணியக் கூடாது, ஆதிக்க சாதி பகுதிகளில் வண்டியில் போகக் கூடாது, என்று கொடூரமான பழக்கங்களை சுமத்தி வருகின்றனர் அந்த ஊரின் 650 பிறமலைக் கள்ளர் பிரிவைச் சேர்ந்த தேவர் சாதி மக்கள்.

சென்ற வாரம் திங்கள் கிழமை கள்ளர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வு முடிவுகளை பார்த்து விட்டு தன் இரண்டு நண்பர்களோடு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறான் அருண் குமார் என்ற 11 வயது சிறுவன். நிலமாலை, அந்த சிறுவர்களை பிடித்து நிறுத்தியிருக்கிறான். காலில் செருப்பு அணியாத மற்ற இருவரையும் போகச் சொல்லி விட்டு அருண்குமார் காலில் செருப்பு அணிந்திருந்ததால் அவனை மட்டும் பிடித்து வைத்திருக்கிறான் நிலமாலை.

தான் காவல் காக்கும் அந்த தெருவில் செருப்பு போட்டுக் கொண்டு வருவதற்கு என்ன தைரியம் உனக்கு என்று குரைத்திருக்கிறான் நிலமாலை. தன்னைப் போன்ற ஜந்துக்கள் உலாவும் பகுதிக்கு போகும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா என்று கேட்டு விட்டு அருண்குமாரை செருப்புகளை தலையில் வைத்து 60 அடி தொலைவில் இருந்த மேடை வரை நடக்கச் செய்திருக்கிறான் நிலமாலை.

பறையர் சமூகத்தைச் சேர்ந்த அருண்குமாரின் தந்தை பாண்டி அவன் கைக்குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டிருக்கிறார். அவன் தாய் நாகம்மாள் செங்கல் சூளையில் வேலை பார்த்து மகனை வளர்த்து வருகிறார்.

நிலமாலையால் பாய்ந்து பிடுங்கப்பட்ட அருண்குமார் அவமானத்தாலும் பயத்தாலும் யாரிடமும் அதைப் பற்றி சொல்லவில்லை. இரண்டு நாட்களாக சோகமாக, சரியாக சாப்பிடாமல் இருந்ததை பார்த்து அவன் அம்மா, அவனிடமிருந்து நடந்ததை அறிந்திருக்கிறார். நிலமாலையிடம் போய் தட்டிக் கேட்ட நாகம்மாளிடம், தான் செய்தது சரிதான் என்றும் போலீசில் புகார் கொடுத்தால் அவரை கொன்று விடுவதாக மிரட்டியிருக்கிறான்.

நாகம்மாள் வியாழக்கிழமை அன்று போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். நாகம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலமாலையின் அப்பா பதிவுராஜாவும், தம்பி அக்னியும் வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டனர். நிலமாலை பயந்து கொண்டு ஊரை விட்டே தப்பி ஓடி விட்டிருக்கிறான். பீதியில் வெளியில் சுற்றிக் கொண்டிருந்த நிலமாலை ஞாயிற்றுக் கிழமை மாலை திண்டுக்கல்லில் கைது ஆனான்.

அந்த சாதி வெறியர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட பரம்பரை என்று மீசை முறுக்கி, 11 வயது சிறுவனிடம் வீரம் காட்டிய ஜந்துக்கள் கொட்டடியில் அடைப்பட்டு எதை முறுக்கிக் கொண்டிருக்கின்றன என்று விசாரிக்க வேண்டும். ஒரு தலித் சிறுவன் செருப்பு போடுவதைக் கூட இந்த தேவர் சாதி வெறியர்கள் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றால் அதே தலித் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆதிக்க சாதி பெண்களை காதல் மணம் புரிந்தால் இவர்கள் எவ்வளவு கொலைவெறியில் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஜெயலலிதாவின் காலில் முறுக்கு மீசை கொண்ட தேவர் சாதி ‘சிங்கங்கள்’ அசிங்கமாய் வீழ்ந்து கிடக்கும் அடிமைத்தனம் குறித்தெல்லாம் வெட்கம் இல்லாத இந்த சாதிவெறியர்கள் எளிய தலித் மக்கள் மீது வன்மம் கொண்டிருப்பது ஏன்? தலித் மக்களின் சுயமரியாதையை அனைத்து சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஓரணியாய் சேர்ந்து மீட்க போராட வேண்டும். அப்போதுதான் இந்த ‘மறவர்களின்’ சாதி வெறி அடியோடு ஒழிக்கப்படும்.

மேலும் படிக்க

 1. நெல்லுக்கு பாய்வது புல்லுக்கும் பாய்வது போல, இத்தகைய வீணர்களுக்கு இடஒதுக்கீட்டின் மூலம் பயன் அடைவது வருந்ததக்கது
  இட ஒதுக்கீடு வழங்கப்படும் முன்னர் , அந்த கிராமத்தில்
  1) இரட்டை குவளை முறை இருக்கிறதா ,
  2) கோவிலில் அணைத்து சமூகத்தினரும் வணங்கும் உரிமை இருக்கிறதா( விரைவில் அர்ச்சகராகும் உரிமை ) ? என்று கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்கிய பின்னரே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்

  இது போன்ற சம்பங்கள் நடந்தால் ,அந்த கிராமத்து மக்களுக்கு பத்து வருடங்களுக்கு இட ஒதுக்கீடு பயன் பெரும் தகுதி இழப்பு செய்யப்பட வேண்டும்

  அடுத்து இட ஒதுக்கீட்டு பயனாளர் குடும்பம் , சாதி கொடுமைகள் புரிந்துள்ளனவா ? என்று சரி பார்க்கப்பட்டு இட ஒதுக்கீடு தகுதி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்

  ஆண்ட பரம்பரைகளுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும்

  • அதேபோல தலித்களுக்கு சலுகை கொடுக்கும் முன்பாக அவர்களின் உறவினர்கள் சலுகை வாங்கியுள்ளனரா? அவர்கள் யார் மீதாவது வன்கொடுமை பொய் வழக்குத் தொடுத்திருக்கிறார்களா என்று கண்காணித்து அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.

   • நிலம் , தொழில் மற்றும் கல்வி ஆகிய மூன்று செல்வங்களும் பல் ஆயிரம் ஆண்டுகள் மறுக்க பட்டவர்கள் தலித்கள்.

    இதில் நிலம் மட்டும் தொழில் செல்வம் பெற்று இருந்த , கல்வி தேவை இல்லை என்று படிக்காத சமூகத்திற்கு எதற்கு சலுகை ?

    கல்வி வழங்க படவில்லை மறுக்கப்பட்டது என்று கூறி சலுகை கேட்பவர்களே ,
    நிலம் மறுக்க பட்டவர்களுக்கு உங்கள் நிலத்தின் ஒரு பகுதியை தரலாமே ?

    • நிலம் யாரிடம் இருந்தது? யார் நிலத்தை பறித்தது? நாங்கள் வாங்கிய நிலமெல்லாம் எங்கள் உழைப்பால் வாங்கிய நிலம். எங்களுக்கும் சொந்த நிலம் கிடையாது. கல்வி தேவையில்லை என்று எவன் சொன்னான்?

     சும்மா கதை விடாதீர்கள்.

     • //கல்வி தேவையில்லை என்று எவன் சொன்னான்//
      2000 வருஷத்துக்கு மேலா படிகிறேங்க.. இப்பம் ஆண்ட பரம்பரை எல்லாரும் படிப்புல சிறந்து விளங்கிடீங்க போல இருக்கு…
      100 வருஷமா படிக்க தொடங்கிருக்கும் தலித்திற்கு சலுகை குடுபதற்கு எதிர்ப்பு., மேலும் இத்தனை சலுகை குடுத்த பிறகும் எல்லாரும் ஏன் முன்னேறவில்லை என்று நச்சரிப்பு வேறு..
      உங்களை போன்ற வெறியர்களால் பல இடங்களில் நங்கள் உழைத்து சேர்த்து வைத்திருக்கும் அனைத்தும் களவாட படுகிறது ., வீட்டை கொளுத்துவதும், வீட்டை உடைப்பதும், வாகனங்களை கொளுத்துவதும் இருந்தால் எப்படி…கழ்புனர்சியின் காரணமாக நிறைய செய்ய படுகின்றது…
      ஓரு இனம் மேலே வருவதற்கு எத்தனை முட்டு கட்டை போட நினைகின்றேர்கள்…
      இதில் தமிழ் இனத்தை இலங்கையில் அழிகிறார்கள் என்று முதலை கண்ணீர் வேறு.. உங்களால சொந்த ஊர்ல இருகிறவன் மேலே வர்றது போருக்க முடியல.. இதுல போலி தமிழ் தேசியம் வேற
      இதுல ஆண்ட பரம்பரை நு பெருமை வேற….

      //நிலம் யாரிடம் இருந்தது? யார் நிலத்தை பறித்தது? நாங்கள் வாங்கிய நிலமெல்லாம் எங்கள் உழைப்பால் வாங்கிய நிலம்//

      அப்பம் நீங்கள் எல்லாம் ஆண்ட பரம்பரை இல்லையா….
      உழைத்து வாங்கியது….யாரு கிட்ட டக்கால்டி… உங்களோட வலைதளத்துல உங்க பரம்பரை பத்தி எல்லாம் போடிருக்கேங்க… அதே மாதிரி உங்களோட சொத்து அந்த காலத்துல இருந்து எப்படி வந்தது நு போடீங்கநா ரொம்ப நல்லா இருக்கும்..
      (உங்க பரம்பரை / ஜாதி பேரு கள்ளன் தானே)எந்த மாதிரி உழைப்புல உங்க பரம்பரை / முன்னோர்கள் எல்லாம் சொத்து வாங்கினது கொஞ்சம் தெளிவா போடுங்க.. உங்களை மாதிரி உலக மகா அறிவளிகளோட உதாரணம் எல்லோருக்கும் வேணும்.. ப்ளீஸ் கண்டிப்பா செய்ங்க… இதையும் அந்த law புத்தகம் மாதிரி நேரம் வரும்போது செய்யறேன் என்று சொல்லதேங்க… (தயவு செய்து இதற்கு திருவள்ளுவர் எல்லாம் இழுக்கதேங்க)

      • //2000 வருஷத்துக்கு மேலா படிகிறேங்க.. இப்பம் ஆண்ட பரம்பரை எல்லாரும் படிப்புல சிறந்து விளங்கிடீங்க போல இருக்கு…//

       ஆமாமா, அடிமை பரம்பரை படிப்புல சிறந்து விளங்குறப்ப ஆண்ட பரம்பரை சிறந்த விளங்க முடியாது பாருங்க?

       //100 வருஷமா படிக்க தொடங்கிருக்கும் தலித்திற்கு சலுகை குடுபதற்கு எதிர்ப்பு., மேலும் இத்தனை சலுகை குடுத்த பிறகும் எல்லாரும் ஏன் முன்னேறவில்லை என்று நச்சரிப்பு வேறு..
       உங்களை போன்ற வெறியர்களால் பல இடங்களில் நங்கள் உழைத்து சேர்த்து வைத்திருக்கும் அனைத்தும் களவாட படுகிறது .,//

       அப்படியா? அப்போ உங்க சொத்தை திருடித்தான் பிழைக்கிறாங்கனு சொல்றீங்க.

       // வீட்டை கொளுத்துவதும், வீட்டை உடைப்பதும், வாகனங்களை கொளுத்துவதும் இருந்தால் எப்படி…கழ்புனர்சியின் காரணமாக நிறைய செய்ய படுகின்றது…
       ஓரு இனம் மேலே வருவதற்கு எத்தனை முட்டு கட்டை போட நினைகின்றேர்கள்…//

       அது எப்படிங்க, எல்லா சாதிகளுக்கும் தலித்களை பிடிக்க மாட்டேன்கிறது?

       //இதில் தமிழ் இனத்தை இலங்கையில் அழிகிறார்கள் என்று முதலை கண்ணீர் வேறு.. உங்களால சொந்த ஊர்ல இருகிறவன் மேலே வர்றது போருக்க முடியல.. இதுல போலி தமிழ் தேசியம் வேற இதுல ஆண்ட பரம்பரை நு பெருமை வேற….//

       நீங்க மேலே வர்றதுல எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. எல்லாரையும் அடக்கியாள நினைப்பதுதான் தலித்கள் செய்யும் தவறு.

       //அப்பம் நீங்கள் எல்லாம் ஆண்ட பரம்பரை இல்லையா….//
       நாங்கள் போர்ப்பரம்பரை, எங்கள் சாதியினர் ஆட்சியாளர்களாகவும் இருந்துள்ளனர்.

       //உழைத்து வாங்கியது….யாரு கிட்ட டக்கால்டி… உங்களோட வலைதளத்துல உங்க பரம்பரை பத்தி எல்லாம் போடிருக்கேங்க… அதே மாதிரி உங்களோட சொத்து அந்த காலத்துல இருந்து எப்படி வந்தது நு போடீங்கநா ரொம்ப நல்லா இருக்கும்..//

       எங்கள் சொத்தில் 3.5 ஏக்கர் எங்கள் முப்பாட்டன் மலைக்காடுகளை வெட்டிச் சேர்த்தது. மீதியெல்லாம் என் தந்தை சுய சம்பாத்தியத்தில் வாங்கியது.

       • //(உங்க பரம்பரை / ஜாதி பேரு கள்ளன் தானே)எந்த மாதிரி உழைப்புல உங்க பரம்பரை முன்னோர்கள் எல்லாம் சொத்து வாங்கினது கொஞ்சம் தெளிவா போடுங்க..//

        என் தந்தை முதலில் ஆடு மாடுகளைத்தான் வளர்த்தார். பின்னர் அவற்றை விற்று நிலங்களை வாங்கினார்.

        //உங்களை மாதிரி உலக மகா அறிவளிகளோட உதாரணம் எல்லோருக்கும் வேணும்.. ப்ளீஸ் கண்டிப்பா செய்ங்க… இதையும் அந்த law புத்தகம் மாதிரி நேரம் வரும்போது செய்யறேன் என்று சொல்லதேங்க… (தயவு செய்து இதற்கு திருவள்ளுவர் எல்லாம் இழுக்கதேங்க)//

        நீங்க சொன்னாலும் சொல்லாட்டிலும் நாங்க செய்றதை செய்துக்கிட்டேதான் இருப்போம். பொறுத்திருந்து பாருங்கள்.

 2. ஜாதிகளை ஒழிக்காமல் ஜாதி வன்கொடுமை மாறாது. ஜாதிகளை எப்படி ஒழிப்பது என்று வினவு சொல்லுங்களேன்.

  • சாதிகளை ஒழிக்க வேண்டுமானால், மதங்களையும், சாதியின் அடிப்படையில் சலுகை வழங்குவதையும் ஒழிக்க வேண்டும், முடியுமா?

   • ஆமாம் சலுகையை நிறுத்தி விட வேண்டும்.. தலித்திற்கு குடுக்கும் சலுகைகளை மட்டும் நிறுத்தி விட வேண்டும்.. பாவம் இந்த BC, MBC.. லிஸ்டில் உள்ளவர்கள் சலுகை வாங்கவில்லை….
    ஆண்ட பரம்பரைகளே உங்களுக்கு சலுகை வேண்டாம் என்று முன்உதாரனமாய் இருங்கள்..
    ஆண்ட பரம்பரைகள் நீங்கள் போருக்கு போகும் பொது (முன் உதாரனமாய்) முன்னாடி போவீங்களா இல்லை பின்னாடி இருக்கிறவனை முன்னாடி போய் சண்டை போடு என்று சொல்லி பின்னாடி உக்கார்ந்து பொரளி பேசுவீங்களா…
    முன்னுதாரணம் முக்கியம்……….
    ஆண்ட பரம்பரை என்று உளறி கொண்டு சலுகைக்கு போராடும் (என்ன பெருமாள் போராடினா தப்பு தானே உங்களோட அவதானிப்புகளின் படி “நல்லா போராடுங்க” : எங்கயோ கேட்ட மாதிரி இருக்கும்) அப்பாவிகளுக்கு சலுகை தப்பில்லை…

    • சலுகையும், சாதியும் வேணும் அதுதானே உங்கள் நிலை. உங்களால் வேறு என்ன செய்ய முடியும்? சாதியை முதுகில் குத்திக் கொண்டு சலுகையை வாங்கும் வரைக்கும், சாதியை ஒழிப்போம் என்று பேசாதீர்கள்.

     • சாதி பார்த்து ஒதுக்கீடு செஞ்ச அறிவாளிகளை வந்து சாதியை ஒழிக்கச் சொல்லணும்.

     • ஆண்ட பரம்பரைகளே உங்களுக்கு சலுகை வேண்டாம் என்று முன்உதாரனமாய் இருங்கள்..

 3. பள்ளி சிறுவனின் தலையில் செருப்பை வைத்த மிருகத்தனமான சாதி வெறி!!
  அந்த செருப்பில் ஒட்டியிருக்கும் அசிங்கத்திற்கு சமம் அந்த சாதி.

  • அந்த அசிங்கத்தைச் சொல்லி எதற்காக சலுகை வாங்குகிறீர்கள்?

 4. இந்த கொடுமைநடந்த ஊரில், தண்டவரி போட்டு, அஙகுள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களை அரசே படிக்கவைக்க வேண்டும்! அம்பேதகர், தி க இயக்கங்கள் மேற்பார்வை பொறுப்பேற்க வேண்டும்!

  • ஏற்கனவே சாதி மக்கள் செலுத்தும் வரியில்தானே இவர்கள் படிக்கிறார்கள்?

 5. குறிப்பிட்ட பகுதிகளை சாதி வெறி பகுதிகளாய் அறிவித்து வெளி மாநில காவல் துறை அதிகாரிகளை அமர்த்தவேண்டும்.சாதிய குற்றவாளிகளாய் அறிவித்து மிக மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.புதிய தலைமுறைtv சத்யம்tv பாலிமர்tv போன்ற துணிச்சலான ஊடகங்கள் இது போன்ற பகுதிகளில் நடக்கும் வெளிப்படையான வன்கொடுமைகளை பதிவு செய்து ஒளிபரப்பவேண்டும்.

  • அதாவது குற்றப் பரம்பரைச் சட்டத்தை திரும்ப கொண்டு வரவேண்டும் என்கிறீர்கள். அதற்கு வெள்ளையன் அல்லது வெள்ளையனுக்கு ஜால்ரா போட்ட தலித்கள் ஆட்சிக்கு வர வேண்டும். நீங்கள் சொன்ன டிவிகள் அனைத்தும் ஒரு சாதி சார்பு டிவிகள்தான்.

   • அப்பம் எந்த சார்பும் இல்லாத மக்கள் டிவி (மன்னிக்கவும் தொலைகாட்சி) உதவிக்கு அழைக்கலாமா

     • அந்த மாதிரி ஜாதிக்கு TV வசிக்கிற அளவுக்கு இருந்தா கண்டவனெல்லாம் வந்து புத்தி சொல்லற அளவுக்கு இருக்குமா என்ன.. இப்பம் தான் கொஞ்ச கொஞ்சமா முன்னேறிகிட்டு இருக்கிறோம், அதுக்கே எவ்வளவு போராட வேண்டி இருக்கு (போராடின சில பேரு நல்லா போராடுங்கனு ஏகதாளம் வேற), கஷ்டப்பட்டு சேர்த்து வச்சா எதாவது பிரச்சனைன்னு சொல்லி களவு பண்ணிக்கிட்டு போயிடறானுங்க… இட ஒதுக்க்கீடு பெற்று கொஞ்சம் முன்னாடி வந்துகிட்டு இருக்கும் போது அவனுங்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு நு கேட்டு கோஷம் போடரனுங்க … இன்னும் எத்தனை பேரு பல பின்தள்ள வைக்க பட்டிருக்காங்க என்று தெரிஞ்சிருந்தும் கூட….
      என்ன பெருமாள் அவர்களே இந்த நீங்க கூட சொல்லறேங்க

  • குறிப்பிட்ட பகுதிகளை தலித் பகுதிகளாக அறிவித்து தலித்களை அப்பகுதிகளில் குடியேற்றினால் வன்கொடுமை நிகழாது. அவர்களும் சுதந்திரமாக இருக்கலாம். செய்வார்களா?

 6. அய்யா தீர்வு சொல்லும் அறிவாளிகளே, அரசாங்கமே கை கட்டி வாய் பொத்தி நிற்கிறது என்று தெரிந்த பிறகும் அரசாங்கம் அதை செய்யவேண்டும் இதை செய்யவேண்டும் என்று கூறுவது சரியா?
  உருப்படியான திட்டம் ஒன்று செல்லுங்களேன். ஒன்று செய்வோமா? வினவு தலைமையில் அந்த ஊருக்குபோய் அந்த பையனின் வீட்டில ஓரு விருந்து உண்டுவிட்டு (நமது செலவில்)வருவோமா?

 7. பாண்டியராசு- விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

  ஒரு மனிதனை கீழ் தரமாக நடத்தவோ விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. அவனவன் ஜாதி அவனவனுக்கு பெரியது. அடுத்த ஜாதி கார மக்களை துச்சமாக நினைக்க எப்படி மனம் வருகிறது? விருப்பம் இல்லையென்றால் ஒதுங்கி செல். என்ன என்ன மைத்துக்கு கீழ்த்தரமாக நடத்துகிறாய்? தலித் மக்களை மாமன் மச்சானாக ஏற்க வேண்டி யாரும் போராட வில்லை. ஒரு சகோதரனாக ஏற்று சக மனிதனுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவன் மனிதனே அல்ல. இது அனைவருக்கும் பொருந்தும் என்னையும் சேர்த்து.

 8. இந்த சாதிவெறிகும்பல்களை தேவர் என்று இல்லாத சாதிக்கு கொடுக்கும் மரியாதையை ஏன் தலித் என கொச்சைப் படுத்துகின்றீர்கள், இந்த தமிழ்நாட்டில் சாதியை பற்றி வாய் கிழிய பேசும் நாம்அவர்களை கொச்சை படுத்துகிறோம், ஒருஅரச பயங்கரவாதம்தான்,அனைவரையும் தேவேந்திரகுலவேளாளர்,பறையர் என்றூம் ஆதிதிராவிடர் என்று அழைத்துக்கொள்கிறார்கள்ஆனால்தலித்என விளிப்பதுஏன்? மறவர் என இருக்க இல்லாத தேவர்சாதியை மட்டும் சாதிதேவர் என இட்டு அழைப்பது ஏன்?எல்லோரையும் பொதுப்படசிந்திக்கலாம்.

  • தலித் சாதிக்கு தலித் என்ற பேரையே பயன்படுத்தலாமே?

     • நீங்களும் தான் பிரமனுனுக்கு அடிமையாய் இருந்தீர்கள் அப்பம் நீங்கள் எல்லாம் ஆண்ட பரம்பரை இல்லை அடிமை பரம்பரை என்று வைதுகொள்ளலமா

 9. First of all all newspapers should abstain writing such as caste hindus. Who are caste hindus? All Backward castes are not willing to call themselves as caste hindus. Papers should write which backward caste is indulging in these type of atrocities. In our state konars ,nadars, chettiaars are not indulging in these type of atrocities. Hence all newspapers should mention the exact villains who do these type of atrocities in public domain.

 10. //வினவு தலைமையில் அந்த ஊருக்குபோய் அந்த பையனின் வீட்டில ஓரு விருந்து உண்டுவிட்டு (நமது செலவில்)வருவோமா?// நந்தன் யோசனை நல்ல யோசனைதான்! அஙகே ஒரு விழிப்புணர்வும், தன்மான எழுச்சியும் ஏற்படும்!

 11. தலித்கள் ஆட்சி செய்தார்கள் என்றால் எல்லாரும் தலையில் செருப்பைச் சுமக்க வேண்டி வரும்.

 12. சாதி வெறி என்பது அறிவாளிகளின் கண்டுபிடிப்பு

  • நம்ம “_______” புகழ் பெருமாள் அண்ணே வந்தாலே பின்னூட்டப் பெட்டி களைகட்டிவிடும். ம்…. கழிஞ்சு விடுங்கணணே..

   • …………… புகழ் வினவு ……………… புகழ் பகத் என்று என்னாலும் எழுத முடியும்.

  • அண்ணல் அம்பேத்காரையே “wasted his time in coping the laws from other countries” (பெருமாள் கருத்தின் சாராம்சம் மட்டுமே) சொன்ன மிக பெரிய அறிவாளி நீங்கள்.. நீங்கள் சொன்ன கரெக்டா தன் இருக்கும்…
   அம்மாம் நீங்க முன்னாடி சொன்ன மாதிரி (தக்க சமயத்தில்) அந்த சட்ட புத்தகத்துக்கான மறுமொழி “comments” புத்தகம் எப்பம் ஆரம்பிக்க போறீங்க.. மிகவும் ஆவலாய் இருக்கிறது பெருமாள்

   • அம்பேத்கர் காப்பி அடித்தார் என்பது ஒன்றும் ரகசியமல்ல, அது அரசியல் சட்ட மேதைகளுக்குத் தெரியும். ஆனா என்ன இப்ப ஒரு தலித் நினைத்தால் காப்பி அடித்துக் கூட அரசியல் சட்டத்தை எழுத முடியாது என்பதுதான் உண்மை.

    பொறுத்திருங்க. எழுதுவோம்.

      • ivanunnga ellaame odi vittaargal mammooty naditha ‘AMBEDKAR’ padathileye avargal enna kaaranam sollivittu odinaargal endru kaatchi varugirathu paarungal.

      • வினவு தளத்தை மட்டுமல்ல இங்கு தலித்களுக்கு ஆதரவாக அல்லது சாதிய வெறிக்கு எதிராக குரல் கொடுப்பவர் அனைவரையும் தலித்கள் என்றே இந்த பெருமாள் புரிந்துக்கொண்டு எரிச்சலூட்டும் விதமாக தொடர் பின்னூட்டங்கள் இடுகிறார்.நாமும் இவர் அளவிற்கு தான் இவர் சார்ந்த சாதியினர் அனைவருக்கும் அறிவிருக்கும் என்று புரிந்து கொண்டால் அது எவ்வளவு அபத்தம்?

       • ஐயா நாத முனி,

        நீங்கள் யாருனு சொல்லிட்டுப் பேசினால், பேச வசதியாக இருக்கும். உங்கள் பார்வையே அப்படித்தானே இருக்கு, தேவர் என்றாலே கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், சாதிவெறியர்கள்தானே? இதில் புதிதாக நீங்கள் இடம் கொடுக்கப் போகிறீர்கள்?

        எல்லாம் முற்போக்கு முகமூடிகளின் பகட்டுப் பேச்சு. உங்கள் சாதிச் சான்றிதழை, சான்றிதழை ஸ்கேன் பண்ணிப் போடுங்க என்று சொன்னால் ஒரு பய போடமாட்டான். வினவு போன்ற தளங்கள் உண்மையிலேயே சாதிவெறியை கண்டிப்பதாக இருந்தால், தங்கள் தளத்தில் பேசுபவர்கள் தாங்கள் சாதியை விட்டு வெளியேறியதை ஸ்கேன் பண்ணி அனுப்பினால் அதை வெளியிட்டு அவர்களை பாராட்டலாம். செய்யுமா வினவு?

    • ஒஹ் அப்படின உங்களை போன்ற abnormal Humans (நீங்களே உங்களை பெருமையாய் சொல்லிகொண்டது தான்) கு மனு தர்மத்தை கொண்டு சட்டம் இருக்கலாம் என்று ஆசை படுகிறீர்கள்..
     மனுஷனை மனுஷனாக பார்காத மனு சிறந்த சட்டம்.. சம உரிமை நிலை நாட்ட முயற்சிக்க பட்ட சட்டம் போலியானது….
     As per your knowledge taking reference from other existing laws from other countires is considered to be a copy..Great knowledge…good aanda parambarai…

     • இன்றும் மனுதர்மத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு அலையும் ஒரே சாதி தலித்களே அன்றி வேறு யாரும் கிடையாது. அது வேறு யாருக்கும் தெரியாது.

      மனுதர்மம் ஒரு ஒழுக்க நூலா, இந்து நூலா என்று தெரியாதவர் எல்லாம் அதைப் பற்றி பேசுவதுதான் வேடிக்கை.

      • நாங்க தூக்கி வச்சிருக்கிறதுகாக தான் உங்களோட சக ஆண்ட பரம்பரை பள்ளி செல்லும் சிறுவனின் தலையில் செருப்பை சும்மாக வைத்தார் என்று நினைகிறேன்…

       நாங்க தூக்கி வச்சிருக்கிறதுகாக தான் தலிதிருக்கு தனி பிறப்பிடம், வசிப்பிடம், புதைக்கும் இடம் எல்லாம் தனியாக (இந்த காலத்திலையும்) இருகின்றது என்று நினைகிறேன்

       நாங்க தூக்கி வச்சிருக்கிறதுகாக தான் தலித் பஞ்சய்த்து தலைவர் கூட தாக்க படுகிறார்கள் என்று நினைகிறேன்

       நாங்க தூக்கி வச்சிருக்கிறதுகாக தான் இன்னும் பல ஊர்களில் இரட்டை குவளை முறை உள்ளது என்று நினைகிறேன்…

       நாங்க தூக்கி வச்சிருக்கிறதுகாக தான் இன்னும் “மதுரையில் 13 கிராமங்கள் திண்டுகல்லில் 24 கிராமங்கள் சிவகங்கயையில் 15 கிராமங்கள் என 213 கிராமங்கலில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை எவிடன்ஸ் அமைப்பு ஆய்வு செய்ததுஇதில் 104 கிராமங்களில் இரட்டை குவளை இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.சில கிராமங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு கண்ணாடி குவளையும் தாழ்தப்பட்ட மக்களுக்குசில்வர் குவளையும், பிளாஸ்டிக் கப்பும் கொடுக்கபடுகிறது தென்தமிழகத்தில் 97 கிராமங்களில் பொது பாதையில் ஆதிதிராவிடர் சடலத்தை எடுத்து செல்ல முடியாது 153 கிராமங்களில் மாற்று சாதியினர் குடியிருப்பு வழியாக எடுத்து செல்ல முடியாதுஆதி திராவிடர் சுடுகாட்டில் தண்ணீர, மின்சாரம், கொட்டகை என எந்த அடிப்படை வசதியும் கிடையாது சலூன் கடைகளில் கூட பாகுபாடு பார்க்கபடுகிறது 142 கிராமங்களில் ஆதிதிராவிடர்களுக்குமுடி வெட்ட கூடாது என்று தடை உள்ளது சில கிராமங்களில் முடிவெட்டும் கருவி இரண்டு செட் வைத்துகொண்டு அதில் ஒன்றை ஆதிதிராவிடர்களுக்கு பயன்படுத்துகின்றனர்இது போல ரோசன் கடை மருத்துவமனை சாவடிகள் என அனைத்து இடங்களிலும் பாகுபாடு தொடர்கிறது 45 ஆதி திராவிட ஊராட்சி தலைவர்கள் வன்கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகி உள்ளனர்” இதை போன்ற அத்துமீறல் நடகின்றது..

       நாங்க தூக்கி வச்சிருக்கிறதுகாக தான் இன்னும் “தினமும் இரு தலித்துகள் வன்கொடுமையில் கொல்லப்படுகிறார்கள், ஒவ்வொரு தினமும் மூன்று தலித் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள், ஒவ்வொரு 18 நிமிடமும் ஒரு தலித்துக்கு எதிரான தாக்குதல் நடத்தப்படுகிறது, ஒவ்வொரு வாரமும் 5 தலித்துகளின் சொத்துகள் சேதப்படுத்தப்படுகிறது, வீடுகள் முற்றாக எரிக்கப் படுகின்றன. தலித்துகளில் 37% பேர் வறுமைக்கோட்டிற்குகீழ் தான் வாழ்கிறார்கள். 45% தலித்துகளுக்கு இன்று எழுதப் படிக்கத் தெரியாது. 33% தலித் கிராமங்களுக்கு, தலித்துகள் வாழும் காலனிகளுக்கு இன்றும் சுகாதாரப் பணியாளர்கள் போக மறுக்கிறார்கள். 26.7% கிராமங்களில் காவல் நிலையத்துள் நுழைய தலித்துகளுக்கு அனுமதி இல்லை. இன்றும் 37.8% அரசுப் பள்ளிகளில் தலித் மாணவர்கள் வகுப்பறையில் பிரித்துதான் அமர்த்தப் படுகிறார்கள். 23.5% கிராமங்களில் தலித்துகளுக்கு தபால் விநியோகிக்கப்படுவதில்லை. 48.4% கிராமங்களில் தலித்துகளுக்குப் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதியில்லை. இப்படியான ஒரு பெரும் பட்டியல் நீண்டு செல்கிறது. உபயம் : மத்திய அரசின் தேசிய கிரிமினல் ஆவணக் காப்பகம் வெளியிடும் விபரங்கள்”

       நாங்க தூக்கி வச்சிருக்கிறதுகாக தான் “பாரதி கண்ணம்மா படம் எடுத்ததற்காக தேவர் சமூக நண்பர்கள் சுவற்றில்,பேருந்தில் என்று ஒரு இடம் விடாமல் ஒட்டிய போஸ்டரில் இருந்த வாசகங்கள்: ” சேரனின் பொண்டாட்டி, தேவனின் வைப்பாட்டி”” என்று எழுதினார்கள்

       நாங்க தூக்கி வச்சிருக்கிறதுகாக தான்
       “பாடசாலையில் கோணிப் பையில் தனியாக அமர வைக்காவ்பட்டோம்,
       ஆடு மாடுகள் குடிக்கும் குளத்தில் தாகத்திற்காக தண்ணீர் குடித்த போது துரத்தியடிக்கப் பட்டோம்,
       ரோட்டோர வீட்டில் மழைக்கு ஒதுங்கியதற்காய் உதைத்து தள்ளப்பட்டோம்,
       மலத்தை வாயில் திணிக்கப்பட்ட மக்களுக்காக நீதிக் கேட்டு ‘துராத்மா’க்களால் ஒரு முறையாவது நீங்கள் அவமதிக்கப்பட்டு இருகின்றோம்”

       சக மனிதன் துன்ப படுகிறானே….அவனுக்கு நீதி கிடைக்க வேண்டுமே என்று துடி துடிக்கிற மனசுதான் மனித உரிமை.இது திறன் இல்லை.பண்பு. மனித உரிமைகளை ஐ.நா.வின் கட்டடத்தில் தேட முடியாது.புத்தகத்திலும் கண்டுபிடிக்க முடியாது.நம்மிடம்தான் இருக்கிறது.

       செய்யும் தொழிலின் அடிப்படையில் கீழ்நிலை சமூகமாக இருக்கும் (கற்ப்பிக்கப்பட்டிருக்கும் )தலித்துக்களை தவிர யாரும் இந்த நாட்டில் சாதிக்கொடுமையினை அனுபவிப்பவர்கள் ,பாதிக்கப்படுபவர்கள் யாரும் இருக்க வாய்ப்பே இல்லை

    • அந்த magnetic nose.. கடல் தண்ணீர் முழுக்க உறைய வைக்க கூடிய தொழிநுட்பம் போல யாருமே காப்பி அடிக்க முடியாத ரகசியம்…
     உலக அனுவிஞ்ஞானி / மேதைகளுக்கு தெரியாத அணுகுண்டை மடியில் கட்டி வைத்து கொண்டிருக்கும் தொழில்நுட்ப ரகசியம் உங்களை போன்ற அறிவு மிக்க மேதாவிகளுக்கு தெரியும் என்று நினைகிறேன்

    • //ஆனா என்ன இப்ப ஒரு தலித் நினைத்தால் காப்பி அடித்துக் கூட அரசியல் சட்டத்தை எழுத முடியாது என்பதுதான் உண்மை//
     இதற்கு என்ன அர்த்தம் என்று தயவு செய்து விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்… இதனால் நீங்கள் என்ன சொல்ல வர்றீங்க….

     • இப்போது ஒரு தலித்தால் அரசியல் சட்டத்தை எழுத முடியாது என்று சொல்கிறேன்.

    • //பொறுத்திருங்க. எழுதுவோம்.//
     ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி……………………

 13. //ஜெயலலிதாவின் காலில் முறுக்கு மீசை கொண்ட தேவர் சாதி ‘சிங்கங்கள்’ அசிங்கமாய் வீழ்ந்து கிடக்கும் அடிமைத்தனம் குறித்தெல்லாம் வெட்கம் இல்லாத இந்த சாதிவெறியர்கள்//

  ஐயா அறிவாளி, திருமாவளவனும் முறுக்கு மீசை வைத்துக் கொண்டு கருணாநிதியின் காலில் விழுந்து கிடக்கிறார். அவ்வளவு ஏன் ராஜபக்சேயுடன் கைகுலுக்கி பரிசு வாங்கி வந்தார். அதற்கு தேவர் சாதியினர் ஜெயலலிதாவின் காலில் விழுந்தது எவ்வளவோ மேல்.

  • கூடவே போன திரு பாலு வரை சொல்லவே இல்லை… இது பேரு தான் ஜாதி பாயசமோ……

   • பன்னியோட சேர்ந்த கன்றும் எதையோ தின்னுமாம். அதுதான் நீங்கள் சொல்வது.

 14. இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையிலும் சாதிவெறி இருக்கிறது. இவர்கள் சாதிவெறி பற்றி பேசுவதுதான் வேடிக்கை.

  • கொஞ்ச நாட்க்ளாக தலை மறைவாக இருந்த பெருமாள் இப்போது தைரியமாக பேசுகிறார் என்றால் அவர் அதிமுகவில் சேர்ந்திருக்க வேண்டும். அம்மா தைரியத்தில் வார்த்தைகள் எப்படி அணுகுண்டாக வெடிக்கின்றது பாருங்கள்! அம்மான்னா சும்மாவா, முறுக்கு மீசைகளை ஒட்டு மீசைகளாக மாற்றி……..

 15. வினவு, 18 வருஷமா மும்பையில இருந்த நான் இப்போ தமிழ் நாட்டுக்கு வந்துட்டேன். இடையில் இருந்த இடம்மாறுதல், நெட் மாறுதல் காரணமாக உங்க சாதிவெறி இணையம் பக்கம் வரல. இனித் தொடரும். அம்மாவா இருந்தாலும் ஆட்டுக்குட்டியா இருந்தாலும் சரி. எங்களோட ஆதரவு இல்லாம எதுவும் செய்ய முடியாது.

  • ஒரு மூணே மூணு மாவட்டத்தில் மூன்று சாதிகளை இணைத்துக்கொண்டு மூன்றுக்கும் சம்பந்தம் இல்லாத தேவர் என்று பெயர் வைத்துக்கொண்டு எங்களோட ஆதரவு இல்லாம யாரும் எதுவும் செய்ய முடியாது என்று பேசும் உன்னையெல்லாம்…………..

   • சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடச் சொல்லுங்க, யாரு எவ்வளவு இருக்கிறாங்கனு தெரிஞ்சு போகும்.

  • கபாலி கான் மும்பையில் இருந்து வாயில் வடை சுடுவதை நிறுத்தி விட்டு (கொஞ்ச காலம் ஓய்வு எடுத்து விட்டு) , தமிழ் நாட்டில் வந்து தனது வாயில் வடை சுடுவதை திரும்பவும் ஆரம்பித்து உள்ளார் என்பதை மிகவும் பெருமையோடும் (இது ஆண்ட பரம்பரை பெருமை போல) மகிழ்ச்சியோடும் (தீண்டாமை கொடுமை செய்யும் போது உங்களை போன்ற Abnormal Humans இற்கு ஏற்படும் உணர்வு) தெரிவித்து கொள்கிறேன்

   • வல்லவமாறன் நாங்க என்ன செய்றோம்னு பார்த்துக்கிட்டே இருங்க.

 16. ///நேரம் வரும்போது எங்க எதிர்ப்பைக் காட்டுவோம். அது ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி. எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி.

  நாங்கள் யாரையும் பார்க்க மாட்டோம். நாங்கள் செய்யும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ///

  என்று ஒரு நாளில் பேசுகிறீர்கள்

  ///அதற்கு தேவர் சாதியினர் ஜெயலலிதாவின் காலில் விழுந்தது எவ்வளவோ மேல்.///

  அப்ப காலில் விழுந்ததை ஏற்றுகொள்கிறீர்!! அது இருக்கட்டும்
  எப்படி இந்த அந்தர் பல்டி எல்லாம் அடிச்சிட்டு

  //நாங்கள் சேரசோழபாண்டிய..மருதிவர்..வேலுநாச்சி..ஈழவேந்தன் சங்கிலிதேவன்..சேதுபதிகள்..புலிதேவன்..வெள்ளையதேவன்..பரம்பரையினர்..நீங்கள் இஷ்டப்பட்டாலும் எங்கள் பாட்டணார்களை மாற்றமுடியாது.//

  யார் நீங்கள்?

  • தலித் அரசியல் செய்பவர்கள் ராஜபக்ஷேயிடம் பரிசு பெற்று வரும்போது தேவர்கள் ஜெயலலிதாவின் காலில் விழுவதில் தப்பே இல்லை.

   ஆனால் தமிழினத்தை அழித்தவர் கையில் பரிசு பெற்ற கறையை என்றும் மாற்ற முடியாது. இதையெல்லாம் தலித்கள் கவனத்தில் வைத்துப் பேசுவது நலம்.

   • ///இதையெல்லாம் தலித்கள் கவனத்தில் வைத்துப் பேசுவது நலம்.///

    திருமாவை பல தடவை விமர்சித்தாயிற்று

    https://www.vinavu.com/2009/09/07/thiruma/
    எனக்கு ஒரு சந்தேகம் தலித்துக்கு ஆதரவாக பேசினால் அவனும் தலித்தாக தான் இருக்க வேண்டுமா

    • தலித்களுக்கு ஆதரவாக பேசலாம், தப்பில்லை. ஆனால் நீதியைப் பேச வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாதிரித்தான் நினைக்க வேண்டியிருக்கும்.

     • செருப்பை தலையில் சுமக்க வைத்தவனின் சாதி வேறியை கண்டித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளனர் அதற்கு

      ///இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையிலும் சாதிவெறி இருக்கிறது. இவர்கள் சாதிவெறி பற்றி பேசுவதுதான் வேடிக்கை.///

      என்று பின்னுட்டம் இட்டு நீங்கள் எல்லாம் நீதியைபற்றி பேசுகிறீர்கள்

      • தலித் சாதிவெறியைப் பற்றி வினவு எத்தனை கட்டுரை எழுதியுள்ளது? தலித் சாதி வெறி என்று எத்தனை முறை எழுதியுள்ளது?

     • நீதி என்றல் இது வரை நீங்க பேசியது தானே… செருப்பை தலையில் சும்மாக வைத்து குற்றமாக தெரியாத நீதிமான் எல்லாம் நீதி பத்தி பேசுறது எல்லாம் கொடுமை.. இதில் இடை சொருகல் வேற ஆண்ட பரம்பரை மனு நீதி சோழன்….

      • செருப்பைச் சுமக்க வைத்தது கண்டிக்க வேண்டிய செயல்தான். அதற்காக தேவர் சாதி மக்கள் மீது நீங்கள் செருப்பை ஏற்ற முயற்சிக்கிறீர்கள் அல்லவா? அதைத்தான் நான் கண்டிக்கிறேன்.

       • செருப்பை தூக்க வைத்த சாதி வெறியை கண்டிக்க வேண்டிய செய்ல்தான் என்று இத்தனை நாட்களுக்குப்பிறகு சொன்னாலும் நீங்கள் இன்னும் கண்டிக்கவில்லை என்பதை நினைவுபடுத்துகிறோம்.

        • வினவு நீங்கதான் கண்டிக்கிறீங்களே? அப்புறம் நாங்க எதுக்கு கண்டிக்கணும்? நீங்களே ஒரு தீர்மானத்துக்கு வந்து அதை நிறைவேத்துங்க.

         • நீங்களே அதை கண்டிக்காத போது கண்டிக்க வேண்டிய செயல் என்று யாருக்கு உபதேசம் சொல்கிறீர்கள்?

          • உங்களிடம்தான் சட்டம், போலீஸ், அரசாங்கம் எல்லாம் இருக்கிறதே? நீங்களே நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?

     • உங்களோட facebook இல் ஓரு status இல் உனது சக ஆண்ட பரம்பரை நண்பரின் பொன்னான comment “இந்த பர ந__ய், வந்து கமெண்ட் பண்ணிருச்சு, அதனால் என்னோட laptop இற்கு தீட்டு பட்டு விட்டது”.
      இதுல நீதி பத்தி பேசுற பெரியமனுஷன் (நீங்க தான்) அதற்கு லைக் வேற… வெளங்கிரும்… நீதி எல்லாம் பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு தகுதி எல்லாம் கொஞ்சம் கூட இல்லை…..

      • அது மாதிரியான தலித்களின் கமெண்ட்களை நீங்கள் பார்க்க வில்லை போலும்.

   • சமயத்துக்கு ஏத்த மாதிரி பேசுறதுக்கு உங்களை மாதிரி போலி தமிழ் தேசியம் பேசுறவங்களுக்கு என்ன புதுசா…
    ஏன் ஊர் தெருவுக்குள் வர கூடாது என்றும் சொல்லும் போது, வாயில் மலத்தை திணிக்கும் போது, தேர்தலில் வெற்றிபெறும் தலித்திற்கு கொடுமை செயும் போது, இதை மாதிரி செருப்பை தலையில் சுமக்க சொல்லும் போது தலித் எல்லாம் வேற மொழி பேசுரவனா தெரியிரானா என்ன……..
    உங்களை மாதிரி ஆளுக்கு எல்லாம் தலதா பட்டவன் எல்லாம் கொஞ்சம் மேலே வர்றது கொஞ்சம் அசுகமாக இருகின்றது.. இல்லை என்றல் நீங்களும் இட ஒதுக்க்கீடு போராட்டம் பண்ணிக்கிட்டு.. இப்பம் இருக்கிற இட ஒதுக்கீடு (தலித்திற்கு மட்டும்) குடுக்க கூடாது என்று பேசுவீங்களா…
    உங்களோட சக ஆண்ட பரம்பரை வக்கீல், ஓரு தொலைகாட்சி நிகழ்ச்சயில் பேசும் போது.. இன்னும் கொஞ்ச நாளில் தலித்திற்கு குடுக்கும் இட ஒதுக்கீட்டை நிறுத்தி விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்…..(உங்களோட அந்த சக ஆண்ட பரம்பரையின் கட்சி, சங்கம் எல்லாம் இன்னும் நிறைய இட ஒதுக்கீடு கேட்டு போராடுபவர்கள் என்பது மேலும் ஓரு செய்தி)

    • //சமயத்துக்கு ஏத்த மாதிரி பேசுறதுக்கு உங்களை மாதிரி போலி தமிழ் தேசியம் பேசுறவங்களுக்கு என்ன புதுசா…//

     சமயத்துக்கு ஏற்ற மாதிரி பேசுபவர்கள் தலித்கள்தான். தங்களுக்கு வேண்டும் என்றால் சாதி வேண்டும் என்பார்கள். வேண்டாம் என்றால் சாதியை ஒழிப்போம் என்பார்கள்.

     //ஏன் ஊர் தெருவுக்குள் வர கூடாது என்றும் சொல்லும் போது, வாயில் மலத்தை திணிக்கும் போது, தேர்தலில் வெற்றிபெறும் தலித்திற்கு கொடுமை செயும் போது, இதை மாதிரி செருப்பை தலையில் சுமக்க சொல்லும் போது தலித் எல்லாம் வேற மொழி பேசுரவனா தெரியிரானா என்ன……..//

     இதற்கும் மொழிக்கும் என்ன தொடர்பு?

     //உங்களை மாதிரி ஆளுக்கு எல்லாம் தலதா பட்டவன் எல்லாம் கொஞ்சம் மேலே வர்றது கொஞ்சம் அசுகமாக இருகின்றது.. இல்லை என்றல் நீங்களும் இட ஒதுக்க்கீடு போராட்டம் பண்ணிக்கிட்டு.. இப்பம் இருக்கிற இட ஒதுக்கீடு (தலித்திற்கு மட்டும்) குடுக்க கூடாது என்று பேசுவீங்களா…//

     நாங்கள் கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை. சாதியை எதிர்ப்பதாக இருந்தால் சாதியின் அடிப்படையில் சலுகை வாங்கக் கூடாது என்கிறேன்.

     //உங்களோட சக ஆண்ட பரம்பரை வக்கீல், ஓரு தொலைகாட்சி நிகழ்ச்சயில் பேசும் போது.. இன்னும் கொஞ்ச நாளில் தலித்திற்கு குடுக்கும் இட ஒதுக்கீட்டை நிறுத்தி விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்…..(உங்களோட அந்த சக ஆண்ட பரம்பரையின் கட்சி, சங்கம் எல்லாம் இன்னும் நிறைய இட ஒதுக்கீடு கேட்டு போராடுபவர்கள் என்பது மேலும் ஓரு செய்தி)//

     அவர்கள் சாதியை நம்புகிறார்கள். அதனால் சாதியின் அடிப்படையில் சலுகை கேட்கிறார்கள். நீங்கள் சாதியை நம்பவில்லை என்றால் சாதியின் அடிப்படையில் ஏன் சலுகை கேட்கிறீர்கள்?

  • அவங்கள் எல்லாம் ஆண்ட பரமபரைகள்..
   தமிழ் நாட்டில் கிட்ட தட்ட 6 கோடி (1 கோடி வன்னியர் குடும்பம் அதாவது ஓரு குடும்பத்திற்கு 4 பேர் என்று வைத்துக்கொண்டால் 4 கோடி + 2 கோடி தேவர் + இதர ஆண்ட பரம்பரைகள் 1 கோடி) ஆண்ட பரம்பரை உள்ளனர்..
   அதாவது இபொழுது உள்ள விகிதசார படி பார்த்தல் 1:0.83.. அதே விகிதசார படி பார்த்தால் (some consideration for these king families) பல வருடத்திற்கு முன்பு 1:1 என்ற விகிதாசாரத்தில் ஆண்டு உள்ளார்கள்

   • சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டால் இந்தப் பிரச்சனை உடனே தீர்ந்து விடும்.

  • இதுல என்ன அந்தர் பல்டி இருக்கு? ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர்கள் எங்கே போகிறார்கள் என்று பாருங்கள்.

 17. நானும் பார்க்கிறேன், தலித்வெறி பற்றி எங்காவது வினவு எழுதுதானு.

  • இதே இதை நீங்க ஏன் உங்கள் சக ஆண்ட பரம்பரை (அப்படின்னு நீங்களா ச்ல்லிகிறது தான்) பசுமை தாயகம் (மரத்தை வெட்டும்) நண்பர்களின் சமூக அக்கறை கொண்ட ஜாதி வெறி அற்ற (போய் பார்த்தால் தெரியும்) வலை தலத்தில் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்க.. ப்ளீஸ் உங்களை மாதிரி உலக அறிவாளியின் சேவை இந்த நாட்டுக்கு தேவை.. ப்ளீஸ் கண்டிப்பா செயுங்க.. முக்கியமா அந்த ஜாதி வெறி பத்தி கொஞ்சம் அரிஉவ்ரை பத்தி கொஞ்சம் சொல்லுங்க.. (arulgreenblogspot.. something like that)
   முடிஞ்சா உங்களோட வலை தலத்தில் இந்த மாதிரி செருப்பை சும்மாக சொன்ன பெரியமனுஷன் அவரின் வீரத்தை பற்றி கொஞ்சம் எழுதுங்க.. அவரை பாராட்டி ஓரு கட்டுரை எழுதுங்க.. “ஆண்ட பரமபரையின் வீரம்”
   வழக்கம் போல ஓரு அவதானிப்பு போடுங்க “தலையில் செருப்பை சும்மாக சொன்னால் குற்றமா, செருப்பு தரையில் மட்டும் தான் இருக்கனுமா, தலையில் வைச்சு போக சொன்ன என்ன தப்பு – அவதானிப்பு”

   • அதேபோல தேவர் சாதியின் மீது செருப்பை ஏற்ற முயற்சிக்கும் வினவுவின் செயலை தலித்களின் வீரம் என்று பாராட்டிக் கொள்ளலாமா?

 18. லக்னோ: மகனை காதலித்த, 19 வயது பெண்ணை, காதலனின் தந்தை, தீவைத்து எரித்த கொடுமையான சம்பவம், உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. காராகோல் என்ற கிராமத்தில், அஞ்சு, 19, என்ற பெண்ணும், ரஞ்சித் என்ற இளைஞனும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஐதராபாத்தில் நல்ல வேலையில் இருக்கும் காதலன் ரஞ்சித்தை மணக்க விரும்புவதாக, அஞ்சு, தன் தாய் ஞானவதியிடம் கூறியுள்ளார். அஞ்சுவும், ரஞ்சித்தும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால், ரஞ்சித்தின் தந்தை, ஜெய்ஹிந்த் படேலை சந்தித்து, இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என, ஞானவதி நேற்று முன்தினம் கேட்டார்.
  இதனால் கோபம் அடைந்த படேல், அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கினார். இந்த விவகாரம், பஞ்சாயத்திற்கு சென்றது. பஞ்சாயத்திலும் கோபாவேசமாக பேசிய அந்த நபர், திடீரென அஞ்சுவின் வீட்டுக்குள் ஓடிச்சென்று, மண்ணெண்ணெயை, அஞ்சு மீது ஊற்றி தீவைத்து எரித்து விட்டான்; இதில், அந்தப் பெண் உயிரிழந்தார். தப்பி ஓடிய படேலை போலீசார் கைது செய்துள்ளனர்; இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 19. வா பெருமாளு மும்பையை காலி பண்ணிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துட்ட சந்தோசம்.அதுல பாரு பெருமாளு ஆண்ட பரம்பரையின்னு என்னதான் பீத்திக் கிட்டாலும் இப்படி பரதேசியா அலையுற நெலைமலதான் இருக்கற.படிச்சு கம்ப்யூட்டர்லாம் யூஸ் பண்றவனுக்கே இந்த நிலைமைன்னா உன் சாதில இருக்கற ஏழைகள் நிலைமை என்ன.அவன் கிட்ட போய் நாமள்லாம் ஆண்ட பரம்பரையின்னு பெருமை பேசுனா அது லூசுத்தனம்.

  நீங்க சொல்ற முக்குலத்தோர் ஆண்ட பரம்பரையின்னு பேச முன்னால அவுங்களுக்குள் நடக்கும் சண்டையை பத்தி பேசலாம்.

  தேர்தல்ல தேவனும் சேர்வையும் எதிர் எதிரா போட்டி போட்டா கட்சிகளை கடந்து சாதி பாத்துத்தான் அவுங்க ஓட்டு போடுறாங்க.

  மூணு பெரும் ஒண்ணுன்னு பேசுவீங்க,ஆனா பெண் எடுக்கவோ, கொடுக்கவோ மாட்டீங்க.அப்புறம் எப்படி நாங்கல்லாம் ஒரே ரத்தம்னு பேசுறீங்க.

  இன்னொரு நாய் சண்டை நான் நேரடியாக பார்த்தது.80களில் நான் சிவகங்கை மன்னர் கல்லூரியில் படித்த போது நேரில் பாத்தது.திருப்புவனம் திருப்பாச்சேத்தி பகுதியிலிருந்து சேர்வை சாதி மாணவர்கள கல்லூரி ஹாஸ்டலில் தங்கியும் ஆர்.எஸ் மங்கலம்,மறவமங்கலம் பகுதியிளுருந்து மறவர் சாதி மாணவர்கள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நடத்தும் இலவச விடுதியிலும் தங்கி படித்தார்கள்.மாணவர் சங்க தேர்தலில் மறவர் சாதி வென்றது. சாதி பாத்து ஓட்டு போடுவதுதான் வழக்கம்.அதை தொடர்ந்து சண்டையும் வந்தது.அப்போது சேர்வைகள் எப்படி திட்டி அடிக்க வந்தார்கள் தெரியுமா.

  ஓசி சோறு பெண்ணுறுப்பு மகன்களா இன்னும் எழுத் லாயக்கில்லாத வார்த்தைகளாலும் மற சாதியை ”வாழ்த்தினார்கள்”.அப்படி திட்டு வாங்கிய மறவ மாணவர்கள்ட்ட போய் முக்குலத்தோர் பெருமை பேசினா எப்படி இருக்கும்.

  பெருமாளு முதல்ல உங்களுக்குள் இருக்கும் சாதி வெறிய ஒழிக்க முயற்சி பண்ணு.அப்புறம் இங்கு வந்து தலித் சாதி பத்தி பேசு.

  • //வா பெருமாளு மும்பையை காலி பண்ணிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துட்ட சந்தோசம்.அதுல பாரு பெருமாளு ஆண்ட பரம்பரையின்னு என்னதான் பீத்திக் கிட்டாலும் இப்படி பரதேசியா அலையுற நெலைமலதான் இருக்கற.//

   நான் பரதேசியா அலைகிறேன் என்று யார் உங்ககிட்டே சொன்னது?

   //படிச்சு கம்ப்யூட்டர்லாம் யூஸ் பண்றவனுக்கே இந்த நிலைமைன்னா உன் சாதில இருக்கற ஏழைகள் நிலைமை என்ன.அவன் கிட்ட போய் நாமள்லாம் ஆண்ட பரம்பரையின்னு பெருமை பேசுனா அது லூசுத்தனம்.//

   அதே மாதிரி அடிமை பரம்பரை என்று பேசினாலும் லூஸூத்தனம் என்பதை ஒப்புக் கொள்வீர்களா?

   //நீங்க சொல்ற முக்குலத்தோர் ஆண்ட பரம்பரையின்னு பேச முன்னால அவுங்களுக்குள் நடக்கும் சண்டையை பத்தி பேசலாம்.//

   தாராளமாக பேசலாம். அதேவேளையில் தலித்கள் இடையேயுள்ள வேறுபாடுகளைப் பற்றியும் பேசலாமா?

   //தேர்தல்ல தேவனும் சேர்வையும் எதிர் எதிரா போட்டி போட்டா கட்சிகளை கடந்து சாதி பாத்துத்தான் அவுங்க ஓட்டு போடுறாங்க.//

   ஆமாம். எல்லாச் சாதிகளும் அப்படித்தான் செய்றாங்க. அதுதான் என் வாதமே.

   //மூணு பெரும் ஒண்ணுன்னு பேசுவீங்க,ஆனா பெண் எடுக்கவோ, கொடுக்கவோ மாட்டீங்க.அப்புறம் எப்படி நாங்கல்லாம் ஒரே ரத்தம்னு பேசுறீங்க.//

   300 சாதிகளா இருக்கிற தலித்கள் ஏதோ பெண் கொடுத்து எடுத்துக்கிற மாதிரி பேசுறீங்க?

   //இன்னொரு நாய் சண்டை நான் நேரடியாக பார்த்தது.80களில் நான் சிவகங்கை மன்னர் கல்லூரியில் படித்த போது நேரில் பாத்தது.திருப்புவனம் திருப்பாச்சேத்தி பகுதியிலிருந்து சேர்வை சாதி மாணவர்கள கல்லூரி ஹாஸ்டலில் தங்கியும் ஆர்.எஸ் மங்கலம்,மறவமங்கலம் பகுதியிளுருந்து மறவர் சாதி மாணவர்கள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நடத்தும் இலவச விடுதியிலும் தங்கி படித்தார்கள்.மாணவர் சங்க தேர்தலில் மறவர் சாதி வென்றது. சாதி பாத்து ஓட்டு போடுவதுதான் வழக்கம்.அதை தொடர்ந்து சண்டையும் வந்தது.அப்போது சேர்வைகள் எப்படி திட்டி அடிக்க வந்தார்கள் தெரியுமா.//

   இதுவும் தலித்களுக்குப் பொருந்தும்.

   //ஓசி சோறு பெண்ணுறுப்பு மகன்களா இன்னும் எழுத் லாயக்கில்லாத வார்த்தைகளாலும் மற சாதியை ”வாழ்த்தினார்கள்”.அப்படி திட்டு வாங்கிய மறவ மாணவர்கள்ட்ட போய் முக்குலத்தோர் பெருமை பேசினா எப்படி இருக்கும்.//

   அவர்களுக்குத் தெரிந்ததை அவர்கள் பேசுகிறார்கள்.

   //பெருமாளு முதல்ல உங்களுக்குள் இருக்கும் சாதி வெறிய ஒழிக்க முயற்சி பண்ணு.அப்புறம் இங்கு வந்து தலித் சாதி பத்தி பேசு.//

   அதையே தலித்களும் செய்தால் நன்றாக இருக்கும்.

 20. வல்லவமாறா, உங்க கேள்விகளுக்கு நாளை பதில் கிடைக்கும்.

  • நல்ல எழுதுங்க நீங்க என்ன எழுதுவீங்கன்னு தெரியாதா “நீங்க செய்ய வேண்டியது தானே, நீங்க செஞ்ச நாங்களும் செய்றோம், என் பட்டன் முப்ப்டன் பெருமை என்ன வென்று தெரியுமா, நாங்க மட்டுமா தீண்டாமை செய்றோம், மத்தவன கேக்க மாட்டேங்க நாங்க செஞ்ச மட்டும் தேவர் சாதி வெறி நு எழுதுவேங்க, எங்களோட ரத்தம் என்ன ரதம் தெரியுமா, மக்களே ஓன்னு சேருங்க நம்ம பட்டன் முப்பாட்டன், etc., etc., , இட ஒதுக்க்கீடு உங்களுக்கு எதுக்கு ( இட ஒதுக்க்கீடு தொடர்பான உங்களது பார்வை உங்களது மறு மொழிகள் அனைத்திலும் பார்த்தால் தெரியும்)
   நாங்க குடுக்கிற வரியில படிச்சிட்டு எங்களையே… (காலம் காலமாய் எங்களோட உழைப்பை சுரண்டி தின்னுகிட்டு இருந்த நீங்க எல்லாம் வரி குடுகிரேன் என்று பேச்சு வேறு). நாங்களும் இந்த நாட்டின் குடிமகன் தானே.. உங்களை போன்று எல்லா தலித்தும் வருமான வரி கட்டி கொண்டு தான் இருக்கிறோம்…. நீங்க என்ன ஸ்பெஷல் ஆண்ட பரம்பரை வரி என்று கட்டிக்கிட்டு இருக்கிறேன்களா என்ன… நீங்க என்ன ஸ்பெஷல் வரி கட்டுறேங்க…..
   Most of your reply in short cut “find and replace Dalith to Devar in vice versa whichever suits you”
   உங்களோட முப்பாட்டன் பாடன் எல்லாம் உங்களுக்கு பெருமை பேச சொல்லி குடுத்த மாதிரி எங்களோட பட்டன் பூடான் எல்லாம் உழைக்கனும்னு சொல்லி குடிதிருக்காங்க அதனால என்னோட வேலை எல்லாம் கொஞ்சம் பார்க்கணும் நானும் சம்பளம் எல்லாம் வாங்குறேன்……
   நீங்க கண்டிப்பா மறுமொழி போடுங்க ஓன்னும் பிரச்சனை இல்லை… முடிஞ்சா உங்க நட்பு வட்டாரம் (முகநூல்) அதில் இருக்கும் மிகவும் மரியாதை தெரிஞ்ச உங்க சக ஆண்ட பரம்பரை (மரியாதை என்றால் பெண் பிறப்புறுப்பு மவனே, வேசி மகனே… இன்னும் பல பல நற்சொர்களை பயன்படுத்தும்) நண்பர்கள் இடம் சொல்லி மறுமொழி போடுங்க…….

   வாழ்க வளமுடன்…………

 21. //நல்ல எழுதுங்க நீங்க என்ன எழுதுவீங்கன்னு தெரியாதா “நீங்க செய்ய வேண்டியது தானே, நீங்க செஞ்ச நாங்களும் செய்றோம், என் பட்டன் முப்ப்டன் பெருமை என்ன வென்று தெரியுமா, நாங்க மட்டுமா தீண்டாமை செய்றோம், மத்தவன கேக்க மாட்டேங்க நாங்க செஞ்ச மட்டும் தேவர் சாதி வெறி நு எழுதுவேங்க, எங்களோட ரத்தம் என்ன ரதம் தெரியுமா, மக்களே ஓன்னு சேருங்க நம்ம பட்டன் முப்பாட்டன், etc., etc.,//

  ஆமா, எங்கேயாவது செட்டியார் சாதிவெறி, பிள்ளைமார் சாதி வெறி என்று எழுதப்படுகிறதா?

  // இட ஒதுக்க்கீடு உங்களுக்கு எதுக்கு ( இட ஒதுக்க்கீடு தொடர்பான உங்களது பார்வை உங்களது மறு மொழிகள் அனைத்திலும் பார்த்தால் தெரியும்)//

  இட ஒதுக்கீடு வாங்காதீர்கள் என்று சொல்லவில்லை. சாதியின் அடிப்படையில் வாங்காதீர்கள் என்று சொல்கிறேன்.

  //நாங்க குடுக்கிற வரியில படிச்சிட்டு எங்களையே… (காலம் காலமாய் எங்களோட உழைப்பை சுரண்டி தின்னுகிட்டு இருந்த நீங்க எல்லாம் வரி குடுகிரேன் என்று பேச்சு வேறு). நாங்களும் இந்த நாட்டின் குடிமகன் தானே.. உங்களை போன்று எல்லா தலித்தும் வருமான வரி கட்டி கொண்டு தான் இருக்கிறோம்…. நீங்க என்ன ஸ்பெஷல் ஆண்ட பரம்பரை வரி என்று கட்டிக்கிட்டு இருக்கிறேன்களா என்ன… நீங்க என்ன ஸ்பெஷல் வரி கட்டுறேங்க…..//

  எத்தனை சதவீதம் தலித்கள் வரிக் கட்டுகிறார்கள் என்று எடுத்துப் போட்டால் நன்றாக இருக்கும்.

  //Most of your reply in short cut “find and replace Dalith to Devar in vice versa whichever suits you”//

  அப்படித்தானே நீங்களும