privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஒட்டுக் கேட்கும் அமெரிக்கா - அனிமேஷன் வீடியோ !

ஒட்டுக் கேட்கும் அமெரிக்கா – அனிமேஷன் வீடியோ !

-

ஒட்டு கேட்கும் அமெரிக்க அரசைப் பற்றிய அனிமேஷன் வீடியோ :

வீடியோவில் பேசப்படும் வாக்கியங்களின் தமிழாக்கம் :

பொம்மை குரலில் பாடல்  : நான் பயமுறுத்த மாட்டேன், நான் உங்களை பாதுகாக்கும் பத்திரமான கரடி

ஹாய் அமெரிக்கா, நான் திரும்ப வந்துட்டேன்!

சில வாரங்களுக்கு முன்னால் சில நூறு பத்திரிகையாளர்களை ஒட்டுக் கேட்பது பிரச்சனையில்லை என்று விளக்கினேன். இப்போ என்ன விளக்கப் போறேன் தெரியுமா, “ஒட்டுக் கேட்பதே தவறு இல்லை, உங்கள் எல்லோரையும் ஒட்டுக் கேட்பது தவறே இல்லை” என்று. ஹா! ஹா! ஹா!

என் எஜமான்கள் சொல்வதை நம்புங்க!. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை, பயங்கரவாதியாகவோ அல்லது அரசு ரகசியங்களை அம்பலப்படுத்தும் தேசத் துரோகியாகவோ அல்லது ஹா! ஹா! குடிமக்களின் உரிமைகளின் ஆவணத்தை போற்றுபவராகவோ இருந்தால் ஒழிய.

பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுபவர்களையும் அவர்களோடு பேசுபவர்களை மட்டும்தான் ஒட்டுக் கேட்கிறோம் என்று நாங்க சொல்லியிருந்தாலும், அதைச் செய்வதற்கு எல்லோரையுமே ஒட்டுக் கேட்க வேண்டியிருக்கிறது என்பது இப்போதுதான் தெரிகிறது.

ஆனால் கவலைப்படாதீங்க. நம்ம ஜனாதிபதி சொன்னது போல, இந்த ஒட்டுக் கேட்டலை அரசின் 3 பிரிவுகளும் கண்காணிக்கின்றன. ஒரு பிரிவு இன்னொரு பிரிவிடம் பொய் சொன்னதையும், மூன்றாவது பிரிவு முதல் பிரிவு வேண்டுவதை 99.97% ஏற்றுக் கொள்கிறது என்பதையும் கண்டுக்காதீங்க. உங்களை பத்திரமாகவும் , பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்றால், சில தியாகங்களை செய்யத்தான் வேண்டும்.

உங்க மெட்டா தகவல்களை மட்டும்தான் நாங்க சேகரிக்கிறோம். அதாவது, உங்க தொலைபேசி எண், யாரை அழைத்தீர்கள், எப்போது அழைத்தீர்கள், அழைக்கும் போது எங்கு நின்று கொண்டிருந்தீர்கள், எவ்வளவு நேரம் பேசினீர்கள், என்ன வகையான தொலைபேசியில் பேசினீர்கள், யாரை திரும்பவும் கூப்பிட்டீர்கள், யார் திரும்ப அழைத்தார்கள், இவ்வளவுதான்.

அதனால் கவலைப்படாதீங்க, நீங்க என்ன பேசினீங்க என்பதை நாங்க பதிவு செய்வதில்லை (ஹா! ஹா! ஹா!)

ஒருவேளை நீங்கள் இணையத்தை பயன்படுத்தினா, உங்க மின்னஞ்சல்கள், வீடியோக்கள், சாட் உரையாடல்கள், தேடல் சொற்கள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் சேகரிக்க தயாரா நாங்க அங்கேயும் இருப்போம். எல்லாமே உங்களை பத்திரமாகவும் பாதுகாப்பாவும் வைத்திருக்கத்தான்.

இது எல்லாமே சட்டபூர்வமானதுதான். காங்கிரசுக்கே பதில் சொல்லாத ரகசிய நீதிமன்றத்தை வேணும் என்றால் கேட்டுப் பாருங்க.

அல்லது தேசிய உளவுத் துறையின் இயக்குனரை கேளுங்க. முடிந்த அளவு பொய் சொல்லாத வகையில் வாக்குமூலம் அளிக்க முயற்சிப்பவர் அவர்.

“எனவே, எனக்கு மிகவும் உண்மையாக பட்ட, மிகக் குறைவான பொய்யாக பட்ட வகையில் பதில் சொல்ல முயற்சித்தேன். அதனால் ‘இல்லை’ என்று சொன்னேன்”  – ஜேம்ஸ் கிளாப்பர், தேசிய உளவுத் துறையின் இயக்குநர்

அல்லது இதைப் பற்றி எச்சரித்த ஜனாதிபதி ஒபாமாவை கேட்கலாம்

“நாம் போற்றும் சுதந்திரங்களுக்கும், நாம் வழங்கும் பாதுகாப்புக்கும் இடையேயான பொய் தேர்வு…” – ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா 2007

ஓஹோ, தப்பான மேற்கோள்,

“100% பாதுகாப்பும் வேண்டும் 100% அந்தரங்கமும் வேண்டும் என்பது சாத்தியமில்லை” – ஜனாதிபதி ஒபாமா 2013

அல்லது யாரையும் கேட்கவே செய்யாதீங்க, ஞாபகம் இருக்கட்டும்,
நாங்க உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம், உங்க எல்லோரையும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க