Saturday, December 5, 2020
முகப்பு அரசியல் ஊடகம் ஏசுவின் மகிமை கருணையிலா கடப்பாரையிலா ?

ஏசுவின் மகிமை கருணையிலா கடப்பாரையிலா ?

-

தினசரிகளின் வெள்ளிக்கிழமை மலர்கள் ஆன்மீகத்திற்கும், ஜோசியத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டிருப்பவை. நேரம் கிடைக்கும் போது இவற்றை கொஞ்சம் சிந்தனையுடன் புரட்டினால் உங்கள் இறை நம்பிக்கை தள்ளாடுவது உறுதி.

இத்தகைய ஆன்மீக மலர்களில் இந்து மதத்திற்கு 90 சதவீதமும், மீதியில் இஸ்லாம், கிறித்தவத்திற்கும் இட ஒதுக்கீடு செய்யப்படும். இதையே நாத்திகத்திற்கும் பின்பற்றினால், ஏன் இந்து மதத்தை மட்டும் அதிகம் விமரிசிக்கிறீர்கள் என்று கேட்பார்கள் நமது அம்பிகள். ஆனால் கடவுள் நம்பிக்கையை கேள்வி கேட்பதில் மத அடையாளங்களுக்கு முக்கியமில்லை. சாரத்தில் எல்லா மதங்களும் இறைவனின் பெயரால் மக்களை தவறாக வழிநடத்துகின்றன.

தினமணி, வெள்ளி மணியில் வி ரூஃபஸ் என்பவர் கடவுளின் சொல் என்ற பகுதியில் ஒரு கதையைச் சொல்கிறார்.

கடவுளின் கோபம்
கடவுளின் கோபம்

பாவங்கள் எப்படிப் பெருகுகின்றன? “தங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருப்பதால் மன்னர்கள் மக்களை வாட்டி வதைத்தும் கொடுமைகள் செய்தும் தங்கள் நெறிகளில் பிறழ்ந்தும் போகின்றபோது பாவங்கள் பெருகுகின்றன.” என்கிறார் ரூஃபஸ். ஒரு மன்னரின் கொடுமைகளுக்கு அவனிடம் மட்டும்தானே பாவம் பெருக வேண்டும், மக்களிடையே பாவங்கள் பெருக வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஏழை பாவம் செய்தால் அதன் விளைவு அவனோடு மட்டும் போகையில் ஒரு ராஜா செய்தால் மட்டும் அவன் பாவங்களை முழுச் சமூகமும் சுமப்பதில் என்ன அறம் உள்ளது?

பரவாயில்லை, இப்படி பாவங்கள் பெருகும் போது இறைவன் சும்மாயிருக்கவில்லை. உதவி செய்யவே விரும்புகிறான். அதன்படி இறையடியார்களை தேர்வு செய்து அவர்களை இறைவாக்கினர்களாக பதவி உயர்வு கொடுக்கிறான். இறையடியார்களை கடவுளின் ஏஜெண்டுகள் என்றால் இறைவாக்கினரை அந்த ஏஜெண்டுகளின் மெசேஜை சந்தைப்படுத்தும் விளம்பரக் கம்பெனிகளாக அழைக்கலாம். அல்லது இறையடியார்கள் ரிலீசாகப் போகும் திரைப்படம் என்றால் வாக்கினர்களை டீஸர் என்று புரிந்து கொள்ளலாம்.

சரி, இந்த இறைவாக்கினர்களின் பணி என்ன? அவர்கள் பாவம் செய்யும் மன்னனையும், மக்களையும் எச்சரிப்பார்களாம். வேலை வெட்டி இல்லாமல் அந்தப்புரத்தில் குடியிருக்கும் மன்னனையும், ஓடி உழைத்து தேய்ந்து திருவோடாக இருக்கும் மக்களையும் இந்த இறைவாக்கினர்கள் ஒரே மாதிரி எச்சரிப்பதை என்னவென்று சொல்வது? இவ்வளவிற்கும் எந்த நாட்டு மன்ன்னும் மக்களால் ஓட்டு போட்டு தேர்வு செய்யப்படுவதில்லை. அதனால்தான் மன்னராட்சிக்கும், ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சிக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இந்த அறிவு கூட இறைவனுக்கு இல்லை என்றால் என்ன செய்வது? மக்களின் விருப்பு-வெறுப்புக்கு அப்பாற்பட்டு ஆயுத வலிமையால் மன்னனாக இருப்பவன் செய்யும் பாவத்திற்கு அந்த பரிதாபத்திற்குரிய மக்கள் என்ன செய்வார்கள? இல்லை மன்னன் பாவம் செய்தால் மக்கள் அனைவரும் தற்கொலை செய்ய வேண்டுமா?

இயேசுவுக்கு டீஸர் வேலை பார்த்தவர்களில் எலியா என்பவர் முக்கியமானவராம். அவருக்கு என்ன முக்கியத்துவம் என்று தெரியவில்லை. ஒருவேளை ஏசு திரைப்படத்தின் டிரெய்லரை ஹெச் டி தொழில் நுட்பத்தில் ஒளிபரப்பியவராக இருக்குமோ? இஸ்ரயேல் மன்னனாக ஆகாபு ஆட்சி செய்த காலத்தில்தான் இந்த எலியா வாழ்ந்தாராம்.

எலியா
இறைவாக்கினர் எலியா

ஆகாபு தீமைகளோடு ஆட்சி செய்த படியால், சினம் கொண்ட எலியா, “நான் பணிபுரியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை. என் வாக்கினாலன்றி வரும் ஆண்டுகளில் பனியோ, மழையோ பெய்யாது” என்று சாபம் விடுகிறார். இந்த சாபத்தையும் கொஞ்சம் கட்டுடைத்துப் பார்ப்போம். நமது புராணங்களில் உள்ள பார்ப்பன முனிவர்களானாலும் சரி, இஸ்ரவேலின் இறைவாக்கினர்களாக இருந்தாலும் சரி இவர்கள் ஏன் மழை பெய்யக் கூடாது என்று மட்டும் சாபம் விடுகிறார்கள்? உங்கள் நாட்டில் இரண்டு மாதத்திற்கு வெயிலே அடிக்காது, வெறும் இருட்டுதான் என்று ஏன் சாபம் இடவில்லை?

இப்படி சாத்தியமில்லாதவற்றை சாபம் விட்டால் சடுதியில் கடவுளின் இடம் காலியாகி ஏஜெண்டுகளுக்கும் கமிஷன் வராது. எல்லா நாடுகளில் ஏதாவது சில காலங்களிலோ இல்லையோ தொடர்ச்சியாக சில ஆண்டுகளோ மழை பெய்யாமல் இருப்பதும், வறட்சி ஏற்படுவதும் வழக்கம். ஆக இயற்கையாக நடக்கும் இந்த மாற்றங்களைத்தான் ஏஜெண்டுகள் தமது அல்லது இறைவனின் பவர் போல காண்பித்து மக்களை மிரட்டுகிறார்கள்.

இயற்கைக்கு மாறானவற்றை ஏன் இவர்கள் கூறவில்லை? பசித்தவன் உண்பான், உண்டால் மலம் கழியும். இவர்களோ பசித்தவனிடம் அவனுக்கு எதுவும் கிடைக்காது என்பதை உறுதி செய்து விட்டு அவன் மலம் கழிக்க மாட்டான் என்று சாபம் விடுவார்கள். மாறாக இதே சாபத்தை மூன்று வேளை முக்குபவனிடம் விடுவார்களா? மாட்டார்கள். தென்னை மரத்திலிருந்து தேங்காய் கீழேதான் விழும், மேலே போகாது என்ற உண்மைகளை சாபமாக மடை மாற்றி விடுவதற்கெல்லாம் ஒரு ஆண்டிப் பண்டாரம் ஆக்ஸ்ஃபோர்டில் படிக்க வேண்டிய அவசியம் இல்லையே?

நாம் கதைக்கு திரும்புவோம். சாபத்தைக் கேட்ட ஆகாபு சினம் கொண்டு எலியாவைக் கொல்லத் திட்டம் தீட்டினான். இதற்கு திட்டமெல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. செக்யூரிட்டியிடம் சொன்னால் சடுதியில் சீவி விடுவார். சரி, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல கடவுள் கதைகளிலும் லாஜிக் பார்க்க கூடாது, விட்டுத் தொலைப்போம்.

ஆண்டவனின் கருணையினால் தப்பிய எலியா பயணம் செய்து யோர்தானுக்கு அப்பாலுள்ள கெரீத்து ஓடையருகே தங்கினாராம். அங்கே ஆண்டவன் காகங்களிடம் உணவு கொடுத்து எலியாவைப் பசியாற்றினாராம். கற்பனை செய்யும் புலவர்கள் கொஞ்சம் காஸ்ட்லியாக யோசிக்கக் கூடாதா? இறகு முளைத்த பெரிய யானை பறந்து வந்து பிரியாணியை சப்ளை செய்தது என்று எழுதினால் என்ன பிரச்சினை வந்து விடும்? ஒரு வேளை பாலைவன ஜோர்டானில் காகங்களைத் தவிர வேறு எதையும் இந்தக் கதை எழுதியவர் பார்க்காதிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பிறகு அந்த கெரீத்து ஓடை வற்றிப் போனதாம். எலியாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த ஓடை ஏன் வற்றிப் போகவேண்டும்? ஒருவேளை எலியா எதாவது சைடு கேப்பில் பாவம் செய்துவிட்டாரா? அப்படி இருக்காது. ஏற்கனவே எலியா விட்ட சாபத்தில் ஆகாபு ஆளும் பகுதிகளெல்லாம் பஞ்சத்தில் இருக்கும் போது அதில் ஏதோ ஒரு பகுதியாக இந்த ஓடை இருக்கலாம். பாருங்கள், இறையடியார்களுக்கு லாஜிக் மீறல் வந்தால் நாமும் உதவி செய்வோம் என்பதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வற்றிப் போன ஓடையில் கவலையுடன் இருந்த எலியாவிடம் ஆண்டவர், “நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்” என்று கூறினாராம். கைம்பெண் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது எனும் கொடிய வழக்கம் ஏசுவின் காலத்தில் இருந்திருப்பதால்தான் இங்கே கருணைப் பிச்சைக்குரியவராக ஒரு கைம்பெண் வருகிறார்.

கடவுளின் கருணை
கடவுளின் கருணை

எலியாவும் அங்கே போய் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்த அந்த ஏழைப் பெண்ணிடம் தண்ணீரும், அப்பமும் கேட்டிருக்கிறார். தண்ணீர் தருவதற்கு தயாராக இருந்த அந்தப் பெண், “உம் ஆண்டவர் மேல் ஆணை. என்னிடம் அப்பம் ஏதும் இல்லை. பானையில் சிறிதளவு மாவும், கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே உள்ளன. இதோ இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு நானும் என் மகளும் உண்போம். பிறகு உண்பதற்கு வழியில்லாததால் நாங்கள் சாகத்தான் வேண்டும் ” என்று நொந்து போய் சொன்னாராம்.

இங்கே ஒன்றைக் கவனியுங்கள். அந்த பெண் உம் ஆண்டவர் என்றுதான் சொல்லுகிறார், எம் அல்ல. இதிலிருந்தே ஏஜெண்டுகள் தொல்லை தாங்காமல்தான் பாமர மக்கள் கடவுளுக்கு வாழ்வு கொடுக்கிறார்களே அன்றி சொந்த முறையில் அல்ல.

எனினும் எலியா அந்தப் பெண்ணிடம் தனக்கு அப்பம் கொண்டு வந்தால் அவளது ஆப்பச்சட்டியில் மாவு தீரவே தீராது, எண்ணையும் குறையாது என்று ஆசை காட்டுகிறார். அந்தப் பெண்ணும் அப்படியே செய்தபடியால் அடுத்த மழை பெய்யும் வரை அப்பத்திற்கு குறைவில்லாமல் அவரது குடும்பம் உண்டு வாழ்ந்ததாம்.

சரி, அப்பச் சட்டிக்குள், அப்ப மாவுதான் இருக்க வேண்டுமா? பர்கரோ, இறால் பிரியாணியோ, இல்லை சிக்கன் செட்டி நாடோ வைப்பதில் கடவுளுக்கு என்ன செலவு? கொடுத்ததெல்லாம் கொடுத்தவன் கொஞ்சம் காஸ்ட்டிலியான செட்டி நாட்டு ஓட்டலிலிருந்து கொடுக்காமல் அம்மா உணவகத்திலிருந்தா பார்சல் வாங்கி வர வேண்டும்?

சரி, இந்தக் கதையில் இருந்து பெறும் நீதி என்ன?

“என் வார்த்தைக்கு அஞ்சி நடப்போரை நான் கண்ணோக்கிப் பார்ப்பேன் (எசா 66:2) என்ற உறுதிமொழியின்படி மனம் மாறிய அக்கைம்பெண்ணுக்கு ஆண்டவரின் ஆசீர்வாதம் எலியா வழியாகக் கிடைத்தது. அதனால் பஞ்சத்திலிருந்து தப்பித்தனர். ஆனால் எலியாவின் பேச்சை ஆண்டவரின் வாக்காக ஏற்க மறுத்து மனம் திருந்தாத ஆகாபு அரசனும் மக்களும் பஞ்சத்தில் வாடினர். கவலையில் மூழ்கினர்.”

இந்த கைம்பெண்ணைப் போன்றவர்கள்தானே ஆகாபு ஆட்சி செய்த நாட்டில் வாழ்ந்த மக்களும். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள், ரூஃபஸ் அவர்களே? ஒரு மன்னனோடு தனிப்பட்ட வாய்க்கால் வரப்பு, வட்டி, குட்டி பிரச்சினை இருந்தால் அதை வைத்து ஒரு சமூகத்தை தண்டிப்பது எப்படி சரியாகும்?

மேலும் எனக்கு ஒரு அப்பம் கொடுத்தால் உழைக்காமல் உங்கள் வீட்டுப் பானையில் அப்ப மாவு கிடைத்துக் கொண்டிருக்கும் என்று சொல்லுவதை எந்த உழைப்பாளி கேட்பான்? எலியா கேட்டால் பஞ்சை பராரிகள் கூட ஏதாவது தங்களால் இயன்ற தானம் கொடுப்பார்கள். ஆனால் அந்த தானத்தை வைத்து அவர்களை தனவந்தன் ஆக்குவேன் என்று எம்எல்எம் ஆட்கள் போல ஏமாற்றுவது பெரும் மோசடியில்லையா?

முக்கியமாக இந்தக் கதையின் நீதி என்னவென்றால் “என் வார்த்தைக்கு அஞ்சி நடப்போரை நான் கண்ணோக்கி பார்ப்பேன், இல்லையேல் காலால் மிதிப்பேன்” என்பதுதான். இதைத்தான் கடப்பாரை மகிமை என்கிறோம். கடவுள் தன்னிடமுள்ள கருணையினால் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கவில்லை. ஒரு தேர்ந்த பாசிஸ்டைப் போல கடப்பாரையைக் கொண்டு அச்சுறுத்தியே பக்தியை ஏற்கச் செய்கிறான். அப்படி தன் வார்த்தையைக் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்று பொய்யான வார்த்தைகள் சொல்லி ஊழல்படுத்தவும் செய்கிறான்.

ஆக ஊழல், பாசிசம் எனும் இரண்டு பக்கங்கள்தான் கடவுள் எனும் நாணயத்தின் ஒளியை பரவச் செய்கின்றன. கண்ணைக் குருடாக்கும் இந்த ஒளியினை மதியால் அழிப்பதுதான் வாழ்க்கைப் பிரச்சினைகளை புரிந்து கொண்டு போராடுவதற்கு வழி ஏற்படுத்தும். பக்தர்கள் யோசிப்பார்களா?

 1. \\சரி, அப்பச் சட்டிக்குள், அப்ப மாவுதான் இருக்க வேண்டுமா? பர்கரோ, இறால் பிரியாணியோ, இல்லை சிக்கன் செட்டி நாடோ வைப்பதில் கடவுளுக்கு என்ன செலவு?\\

  இந்தப் பதிவு தமிழில்தான் இருக்கவேண்டுமா? பிரெஞ்சிலோ,ஜெர்மனியிலோ,எகிப்திய பாஷையிலோ ஏன் இல்லை என்பதற்கு என்ன கான்செப்டோ அதே கான்செப்ட்தான் அங்கேயும்.

 2. Better understand the story and write the article, if you are not having any trust in GOD then leave it and don’t blame thru such kind of critics. You are not going to change anything.

  • Bro Duke Daniel,

   Let them continue their critics, they are not doing by their own rather they are driven by some spirit, when holy spirit prevails these spirits will budge and vanish

   • ஸ்பிரிட் ஸ்பிரிட் என்று அடிக்கடி சொல்லாதீங்க. டாஸ்மாக் ஞாபகம் தான் மக்களுக்கு வரும். வேறு ஏதாவுது பேர் வைங்க. நன்றி.

    • டீம் ஸ்பிரிட் என்றாலும் டாஸ்மாக் தான் நினைவுக்கு வருமா சார்.

 3. as the theme of the article is about criticizing the spreading of religion by means of rewards or threats of punishment, I like the article. Many pastors today say this. If we give them money, we will be blessed. If we say bad about their work, we will be cursed etc.

  This Elijah/Elisha incident is in Old Testament (probably not history, not even a philosophical allegory but pure myth and exaggerated fable). But your article miss some points.

  First, you are assuming Jesus and Elijah are contemporaries. The truth is they lived a lot far apart in history.

  Second, Jesus threatened evil doers with Hell (not those who follow other religions). The Old Testament has no concept of hell. OT has a concept of Hades which is not hell but kind of resting place for dead (no reference of punishment etc). Also there are only handful of reference to hell in entire Bible. Only later writers merged the hell concept from Greeks and threatened people that if they don’t accept Jesus, they will go to hell.

  Third, Jesus broke many social taboos like communing with other religions, touching menstruating woman, eating without ritual washing, breaking the Sabbath etc.

  Fourth, in OT times itself, there were practice of Widow remarriage. There are reference in the book of Ruth, who lived before the incident you have mentioned about this. There are some rules like a man should marry his brother’s widow. Also some laws about marrying widows here in there in OT. Although all these laws are irrelevant and inhuman in this modern world, I am in noway going to support them.

 4. தினமலம்,தினமுனி,செபகோபுரம்,இயேசு விடுப்பு,அழைப்பு,ஒளி,மணி,போன்ற பெரிய பெரிய கர்த்தாக்கள் காரியமாக [பொருள்] களவு செய்து தன்னை தன்னைச்சுற்றி இருப்பவர்களை வளமாக்கி வாழ்வதற்கான தற்போதைய சமூக நடைமுறை போல ஒரு பொய்யான தோற்றத்தினை தினசரி காகிதம்,வார,மாத இதழ்கள்,எல்லாருடைய வீடுகளிலும் உள்ள தொல்லைக்காட்சிகளால் பலபேர் வீட்டு மேசைகளில் இறைவன் இரையாகிய இரால் பிரியாணியை மிக மகிமையாக கொடுத்து வருகின்றார் இது எத்தனை நாளைக்கு நடக்கும்?இது மட்டும்மல்லாது சிறிய கிராமங்களில் கூட சிலபேர் திறமையாக வல்லமையுடன் கூடிய அவர்களால் முடிந்த அளவிற்க்கு தினமும் பிரியாணியோ,நெய்ச்சோறொ,சுடுகஞ்யோ,நன்றாக சப்பிடுகிறார்கள்.இது போன்ற அறிவற்றகதைகளும்,மதத்தில் உள்ளதோ இல்லையோ இவர்களாக கற்பனை செய்து காசு சம்பாதிக்கிறார்கள்.உண்மையானவர்களெ./உழைப்பவர்களே./திருந்துங்கள்.நன்றி.வினவு.

 5. கதைகள் பல கேட்டு புத்தி தேவையில்லாத பைபிள் வித்துவாங்களிடம் தன்னைத்தானே அடிமைகளாக்கி உள்ளது. கிறிசுது என்பதும்,கிறிசுனா என்பதும் ஒரே கிரெக்க ஆசிரியர்களால் ஆக்கம் செயப்பட்டது எனவும், சமய இலக்கியகாலத்தில் வெளிநாட்டவர்,வேற்று இனத்தவர்கள்,பெண் வழிபாட்டினை விரும்பாது ஆண் வழி தந்தையர் கடவுள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எம்மோடு கூட கருத்தியல்,பண்பாட்டு,படையெடுப்பு மற்றும் கட்டாய திணிப்புகளால் எங்களையும் உள்வாங்கி தனித்துவத்தினை அழித்துவிட்டனர்.ஆகையால் மரியாளை மட்டும் வணங்கும் பல கோடிமக்கள் இனியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மத ஊழல்களும்,திருட்டுத்தனமும், உலகமயமாக்கல்+தனிப்பெரும் முதல்ழாளி என்றனிலையில் வளர்ந்துவருவதால் குறிப்பாக தினகரன் குடும்பம்,பெருக்குமான்சு குடும்பம்,மோகன்சிலாசர்,சின்னதுரை,பெரியதுரை,செபத்துரை,அகசுட்டீன்செயக்குமார்,இவர்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.ஆனால் நம்முடன் அன்பாகபழகி நம்க்கு ஆறுதல், உதவிகள் செய்யும் நமது மறை குருக்களையும்,கன்னியர்களை மட்டும் நம்புவோம்.மற்றவர்கள் நம்மை நம்மை நமது கடவுள் கணிக்கையைவைத்து காலம்கழிப்பவர்கள்.

 6. இக்கட்டுரை நன்று. எனினும் இதில் சமூகவியல் கண்ணோட்டம் மிகக் குறைவாக உள்ளது. பழைய ஏற்பாட்டின் காலம் இனக்குழு சமூகம், மற்றும் ஆண்டான்–அடிமை முறை சமூகம் பற்றிய அறிவை நமக்கு வழங்குவதாக ஆ.சிவசுப்பிரமணியன் போன்ற ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இக்கட்டுரையில் வரும் வேதவாக்கினர் எலியா மற்றும் மோசஸ், சாமுவேலிலிருந்து ஜெரேமையா வரை அனைவரும் அறக் கோபம் கொண்ட இளைஞர்களாக இருந்துள்ளனர். அவர்களிடம் அடுத்து என்ன நடக்கும் என்ற காலக்கணிப்பு உள்ளது. அந்த இனக்குழு சமூகத்தை நெருங்கும் ஆபத்து குறித்த அறிவு நிரம்பியிருக்கிறது. கடவுள் குறித்த பயஉணர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மன்னனையும், மக்களையும் எச்சரிக்கிறார்கள். இவர்களை சுற்றிய கடவுள் புனைவுகளை சற்று தூர வைத்துக் கொண்டு பார்த்தால் மட்டுமே இந்த சித்திரம் கிடைக்கும். இதுவே நமக்கு முக்கியமானது.

  இந்த அடிப்படையிலேயே ‘கோபல்ல கிராமத்தை’ முக்கியமான படைப்பாக வானமாமலை கருதினார். அந்த நாவல் ஒரு அளவில் நாயக்கர் சாதியை கொண்டாடுவதாக புகார் தெரிவிக்க முடியும். அதிலும் அற்புதங்கள் பற்றிய புனைவுகள் உள்ளன. குறிப்பாக ஆந்திராவிலிருந்து முஸ்லிம் மன்னர்களின் பிடியிலிருந்து தப்பித்து நாயக்கர்கள் தமிழகம் வரும் போது ஒரு ஆறு வழிமறித்ததாகவும், அப்போது ஒரு தென்னை மரம் சாய்ந்ததால் அந்த மக்கள் அதில் ஏறி மறுகரைக்கு சென்றதாகவும் ஒரு பாட்டியின் அவதானிப்பில் குறிப்பிடுவார், கி.ரா. பைபிளிலும் மோசஸ் பெரோவோவின் பிடியிலிருந்து இஸ்ரேல் மக்களை தப்பிக்க வைத்து அழைத்து வரும் போது செங்கடல் குறுக்கிடடதாகவும் அப்போது அது பிளந்து இஸ்ரேலியருக்கு வழிவிட்டதாகவும் ஒரு கூற்று உள்ளது. இதனை எதிர் கொள்ளுமிடத்திலே கம்யூனிஸ்ட்களும் நாத்திகவாதிகளும் பிரிகிறார்கள். ஒரு வறட்டு நாத்திகவாதிக்கு இதற்கு மேல் இந்த கதையை தொடர ஏதும் இல்லாமல் போகிறது. கம்யூனிஸ்ட்களால் வரலாற்று பிரக்ஞையோடு இந்த சுவாரஸ்யத்தை கடந்து போக இயலும்.

  • // இக்கட்டுரையில் வரும் வேதவாக்கினர் எலியா மற்றும் மோசஸ், சாமுவேலிலிருந்து ஜெரேமையா வரை அனைவரும் அறக் கோபம் கொண்ட இளைஞர்களாக இருந்துள்ளனர். //

   அந்தக் கால புரட்சியாளர்கள் போல இருக்கிறது.. பைபிள் முழுக்க புரட்சியாளர்கள் நிறைந்திருக்கிறார்களோ..?!!!

   // அவர்களிடம் அடுத்து என்ன நடக்கும் என்ற காலக்கணிப்பு உள்ளது. அந்த இனக்குழு சமூகத்தை நெருங்கும் ஆபத்து குறித்த அறிவு நிரம்பியிருக்கிறது. கடவுள் குறித்த பயஉணர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மன்னனையும், மக்களையும் எச்சரிக்கிறார்கள். //

   தலைமுறைகளாக இஸ்ரவேலின் ’புரட்சியாளர்களால்’ எச்சரிக்கப்பட்ட அப்படிப்பட்ட ‘நெருங்கும் ஆபத்து’ என்ன ஆபத்தோ..? மன்னன்(கள்) யார்.. எகிப்திய பாரோ(க்கள்) / ரோமானிய கவர்னர்(கள்)..? தாவீது, சாலமோன் போன்ற இஸ்ரவேலின் மன்னர்கள் காலத்தில் வேறு புரட்சியாளர்கள் இருந்தார்களா..?! ஒரே புரட்சிகர மர்மமாக இருக்கிறதே..

   // இவர்களை சுற்றிய கடவுள் புனைவுகளை சற்று தூர வைத்துக் கொண்டு பார்த்தால் மட்டுமே இந்த சித்திரம் கிடைக்கும். இதுவே நமக்கு முக்கியமானது. //

   இன்னொரு முறை பைபிளைப் படித்தால் புரட்சிகர வரலாறு புலப்படும் என்று தோன்றுகிறது.. நேரம் கிடைக்கும் போது படிக்க வேண்டும்..

   // குறிப்பாக ஆந்திராவிலிருந்து முஸ்லிம் மன்னர்களின் பிடியிலிருந்து தப்பித்து நாயக்கர்கள் தமிழகம் வரும் போது ஒரு ஆறு வழிமறித்ததாகவும், அப்போது ஒரு தென்னை மரம் சாய்ந்ததால் அந்த மக்கள் அதில் ஏறி மறுகரைக்கு சென்றதாகவும் ஒரு பாட்டியின் அவதானிப்பில் குறிப்பிடுவார், கி.ரா. பைபிளிலும் மோசஸ் பெரோவோவின் பிடியிலிருந்து இஸ்ரேல் மக்களை தப்பிக்க வைத்து அழைத்து வரும் போது செங்கடல் குறுக்கிடடதாகவும் அப்போது அது பிளந்து இஸ்ரேலியருக்கு வழிவிட்டதாகவும் ஒரு கூற்று உள்ளது. இதனை எதிர் கொள்ளுமிடத்திலே கம்யூனிஸ்ட்களும் நாத்திகவாதிகளும் பிரிகிறார்கள். ஒரு வறட்டு நாத்திகவாதிக்கு இதற்கு மேல் இந்த கதையை தொடர ஏதும் இல்லாமல் போகிறது. கம்யூனிஸ்ட்களால் வரலாற்று பிரக்ஞையோடு இந்த சுவாரஸ்யத்தை கடந்து போக இயலும். //

   ஆற்றங்கரையில் தென்னைமரங்கள் இருக்கும்.. சில சமயம் ஆற்றின் குறுக்கே விழுவதும் உண்டு.. நாயக்கர்கள் அதில் ஏறி வந்திருக்கிறார்கள்.. அப்படி தென்னை மரம் ஏதும் விழாமல் இருந்தால் வெட்டியும் விழ வைக்கலாம்.. எல்லா நாயக்கர்களும் ஒரு தென்னைமரத்தில் ஏறி ஆற்றைக் கடந்து முஸ்லீம் படைகளிடமிருந்து தப்பினார்களா..? அல்லது அந்த பாட்டியின் மூதாதைகளின் குடும்பம் தப்பியதாக சொல்லப்பட்டதா..?! எது எப்படியோ, நாயக்கர்கள் ஆற்றை
   கடந்ததற்கும், புரட்சிக்காரர் மோசஸ் தலைமையில் பாரோவிடம் இருந்து தப்பிவரும் யூதர்களுக்கு கடல் பிளந்து வழிவிட்டதற்கும் ஏதோ புரட்சிகர வரலாற்றுக் காரணம் இருக்கிறது என்பது நிச்சயம்.. நிச்சயமாக, திராவிட அசுரனான கம்சனின் சிறையில் பிறந்த அவன் மருமகன் கிருஷ்ணனை ஆயர்பாடிக்கு எடுத்துக் கொண்டு தப்பும் போது ஆறு பிளந்து வழிவிட்டதாக கூறும் பார்ப்பன புரட்டைப் போல் அல்ல..!

   • எல்லா விலங்குகளின் மாமிசத்தையும் உண்டு கொண்டு சமூக விரோத கருத்துக்களை சொல்லி கொண்டிருந்த பார்பனர்கள் ஊருக்கு வெளியே சேரியில் தள்ளப்பட்டனர். பின்னர் போரில் நலிந்த ஊர் குடிகளுக்கு புற சமய ஒழிப்பு திட்டத்தில் மன்னர்களோடு சேர்ந்து கொண்டு சாதி தாண்டிய பக்தி புரட்சி செய்த பார்பன புரட்சியாளர்களை கலியுகம் உள்ள வரை திரவிட அசுரர்கள் மறக்க முடியுமா? அவர்களின் சேவையை ஆயுளுக்கும் நன்றியோடு நினைக்க கடவது என்று நாளங்காடி அல்லங்காடி பூதங்கள் சாட்சியாக கிருஷ்ண கோனார் கொடுத்த சாபத்தை மறக்க முடியுமா! சம்பவாமி உகே உகே. கிகே பிகே கெக்கே பிக்கே.

    • பரலோகம்,

     தாங்கள் சற்றே இகலோக பாசையில் பேசினால் மிகவும் நன்றாக இருக்குமே..

     // எல்லா விலங்குகளின் மாமிசத்தையும் உண்டு கொண்டு சமூக விரோத கருத்துக்களை சொல்லி கொண்டிருந்த பார்பனர்கள் ஊருக்கு வெளியே சேரியில் தள்ளப்பட்டனர். //

     பார்ப்பனர்களையே சேரியில் தள்ளிவிட்டார்களா..! யார்..?!

     • அப்பாடா! உங்களுக்கு தெரியாத வரை லாபம். தமிழ் தப்பித்தது.

     • ஹரி,

      நண்பர் பரலோகபாண்டியனின் பதில்கள் ஆர்வமூட்டுபவையாக இருக்கின்றன.. அவருடன் தொடர்ந்து விவாதிக்கவே விரும்புகிறேன்.. நன்றி..

   • மூளையினால் முடியாதது முழங்காலினால் முடியும் என்று ஒரு கூட்டம் மக்களை ஏய்த்துப் பிழைத்து வருவதற்கு எதிரான இந்த கட்டுரை மிகமுக்கியமானது. நான் கூறியவை இன்னொரு தளத்தில் அந்த பழம் பிரதிகளை அணுகுவது சம்பந்தமானது. வேதவாக்கினர் அனைவரும் அறக்கோபம் கொண்டவர்கள் என்றது தவறானது. அவசரகதியில் ஏற்பட்ட பிழை. சாமுவேல் சவுல் மற்றும் தாவீது மன்னர்களின் நிழலில் வாழ்ந்தவன்.

    இனக்குழு சமூகங்கள் தீராத சண்டைகளை கொண்டிருந்தது. மக்கள் போரினால் பகுதியளவிலோ, ஒட்டுமொத்தமாகவோ செத்துப் போயினர். சில தீர்க்கதரிசிகள் தமது ஆரூடங்களுக்காக கடுமையாக ஒடுக்கப்பட்டனர். எதிரி நாட்டு மன்னர்கள் போர் தொடுக்க இருப்பதை சில வேதவாக்கினர் முன்னறிந்து எச்சரிக்கை செய்தனர். ஜெரேமையா பாழ்கிணறு ஒன்றில் தள்ளிவிடப்படுவான். வேதவாக்கினருக்கு இந்த ஆரூடங்கள் தனிமையிலும், கனவிலும் வானத்திலிருந்து கண்ணைக்கூசும் வெளிச்சத்தை ஏற்படுத்தி கடவுள் கூறியதாக பிரச்சாரம் செய்வர். இந்த பகுதி பொருள்முதல்வாதிகளால் ஏற்றுக்கொள்ள இயலாது. நமக்கு வாய்த்திருக்கும் அறிவியல் கண்ணோட்டத்தை வைத்து இதனை புறந்தள்ளி உண்மையை பகுத்தறிய முடியும். இங்கு பைபிள் வகுப்பெடுக்கும் சில கிறித்தவ அடிப்படைவாதிகள் இந்த கட்டுரை குறித்து பயம் கொண்டு வினவை தாக்குவது புரிந்து கொள்ளக்கூடியதே. அவர்களுக்கு சர்ச்சுகளை தொங்கிக் கிடக்க மூடர் கூட்டம் அவசியாமாகிறது.

    இந்து புராணங்களையும் இவ்வாறு அணுக முடியும். அவை ஆரிய–திராவிட போர் என்று நேரு கூறியதை திமுக தலைவர் கருணாநிதி பலமுறை மேற்கோள் காட்டியுள்ளார். ஏ.கே.ராமானுஜத்தின் மகாபாரதம் பற்றிய மறுவாசிப்பு பிரதியை டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து இந்துமத வெறியர்களின் நெருக்குதலால் நீக்கப்பட்டது. ஏகலைவன், சம்புகன் போன்ற கதாப்பாத்திரங்கள் மீது புது வெளிச்சத்தை பாய்ச்சியது இந்திய இடதுசாரி தரப்பு. ராவணன் போன்ற பெயர்களை தோழர்கள் விரும்பி சூட்டிக் கொண்டுள்ளனர். எனவே இந்து மதம் என்றால் ஒரு அளவுகோல்; மற்ற மதங்கள் என்றால் இன்னொரு அளவுகோல் என்ற பார்வை வெளிப்படவில்லை. அனைத்து மதங்களும் அவற்றின் பயன்பாட்டு காலத்தை மீறி இந்த சமூகத்தில் மதவெறியாக நம்மை அழுத்துகின்றன. இந்த நச்சு சூழலை கோடரியால் தான் தாக்க வேண்டும்.

    • // அவை ஆரிய–திராவிட போர் என்று நேரு கூறியதை திமுக தலைவர் கருணாநிதி பலமுறை மேற்கோள் காட்டியுள்ளார். //

     நேரு எந்த பல்கலைக்கழகத்தில் சரித்திர ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார் என்று தெரியவில்லை..

     ஆரிய இனவாதம் பேசிய மேக்ஸ்முல்லரே ‘ஆரிய’ என்ற சொல் ஒரு அடைமொழி/பட்டம் என்று மாற்றிக் கூறிய பின்பும் கூட, நேரு காலத்தில் ஆரிய-திராவிட இனவாதம் மேலைநாட்டு அறிஞர்களின் அசைக்கமுடியாத கண்டுபிடிப்பாக தொடர்ந்து நிலவியதும் (ஆரிய-திராவிட இனவாதம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏதுவாயிருந்ததாலும்) காரணமாயிருக்கலாம்..

     ’ஆரிய புராணங்களும் இதிகாசங்களும்’ ஏன் ராவணன் போன்ற ‘திராவிட அசுரர்களை’ அழிக்கப்பட்ட இன எதிரிகளாகக் காட்டி தங்கள் இனவாத வெற்றிகளை போற்றாமல், தங்களுடைய ’ஆரிய வேதங்களின்’ வித்தகர்களாகவும், ’ஆரியச் சிவனின்’ பக்தர்களாகவும், ‘ஆரிய கலாசாரத்தில்’ ஊறியவர்களாகவும் காட்டவேண்டும் என்றும் தெரியவில்லை..

     • ஆரிய – திராவிட குழப்பத்தில் அம்பி மீன் பிடிக்கிரார்! ஆரிய இனம் என்று ஒரு கூட்டத்தார் புலம்பெய்ர்ந்து ஆப்கானிச்தான் வழியாக இந்தியா வந்தது, இஙகு ஏற்கெனவே உள்ள,நாகரீக மக்களுடன் போரிட்டது பின்னர் கலந்தது எல்லா சரித்திர அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளபட்ட உண்மை! மாக்ச்முல்லர் சம்சுக்ருத ஆராய்ச்சிக்கு இந்தியா வந்ததே ஜெர்மானியரும் ஆரிய இனம் என்ற ஈர்ப்பால்தான்! ஈசுவர-அல்லா புகழ் காந்தி-நேரு கூட்டணிக்கு போட்டியாக நேதாஜியும், செண்பகராமன் பிள்ளையும் ஜெர்மனிக்கு தூது சென்றதும் அந்த அடிப்படையில்தான்! இந்திய கடவுளான, மொகெஞசதாரோ, கரப்பா நாகரிக மக்களால் வழிபடபட்ட சிவன் வழிபாடு முதல் வேதத்தில் காணப்படாததையும், மாறாக சிவன் வேதியர்களால் வெறுக்கப்பட்டவன் என்ற புராண கதைகளையும் கொண்டே ஆரியர் எனப்படுவோர் பின்னாலில் வந்தவர்கள் என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர் !

      ஆரியர்களின் எல்லையே இல்லாத ஆரிய வர்ஷமும், இவர்கள் சென்ற இட்மெல்லாம் சென்றது! முதலில் சண்டையிட்ட ஆரியர்கள் பின்னர், அரசோச்சும் முறையும், ஆயுத சாத்திரமும் முக்கிமாக சூழ்ச்சிகள் பற்றி அறியாத திராவிட் மக்களுடன் கலந்து விட்டனர் என்றே கூறலாம்! ஆனாலும், புதிய பூசாரி வர்க்கம் மட்டும் தங்களின் ஆரிய கோட்பாட்டை விட மறுத்து, தாங்களே உயர்ந்தவர்கள் என்று இருமாப்பு கொள்கிறது!

      ராவணனன்,நேபாள ராஜாபோல, திராவிடர் எனப்படும் விவ்சாய,ஆயுத போர்முறை அறியாத பழங்குடி மக்களை, தற்பொதைய ஒடிசாவின் தென்பகுதியை ஆண்ட திராவிட மன்னனே! அவனை ஆரியனாக்கியது பிழை!

      • ராமன், ராவணன் இவெங்கெல்லாம் சரித்திர மனிதர்கள்னு சொல்றீயளா? நான் இந்த ராமாயணம் வால்மீகியின் சொந்த சரக்குன்னு நெனைச்சிட்டு இருந்தேன்!

      • // இந்திய கடவுளான, மொகெஞசதாரோ, கரப்பா நாகரிக மக்களால் வழிபடபட்ட சிவன் வழிபாடு முதல் வேதத்தில் காணப்படாததையும், மாறாக சிவன் வேதியர்களால் வெறுக்கப்பட்டவன் என்ற புராண கதைகளையும் கொண்டே ஆரியர் எனப்படுவோர் பின்னாலில் வந்தவர்கள் என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர் ! //

       ரிக் வேதத்தில் ருத்ரன் என்றும், யஜுர் வேதத்தின் ஸ்ரீ ருத்ரத்தில் நமசிவாய என்றும் , சிந்து சமவெளியில் பசுபதி என்றும், தமிழர்களால் சிவன் என்றும் போற்றப்பட்ட கடவுள் சிவபெருமானே என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துச் சொல்லவில்லையா..?! சிவன் வேதியர்களால் வெறுக்கப்பட்டவன் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தார்களா..?! அந்த வேதியர்கள் யார்..? உங்கள் தாருகாவனத்து ரிசிகளா..?! ’ஆரியர்களுக்கும்’, ‘திராவிடர்களுக்கும்’ கடவுளான சிவனின் பொதுமை ஆரிய-திராவிட இனவாதத்தின் பொய்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே..

       • அம்பி உன் ஆராச்சி கதைய திருநெல்வேலி சைவ வெள்ளாளன் கிட்ட போய் சொல்லு. எந்த ஆராய்சி விளக்கெண்ணெய் ருத்ரன் ,சிவன், பசுபதன் எல்லாம் ஒன்னு என்று கண்டுக்கிட்டான்? தோட கொலம்பஸ் வந்துட்டாரு.
        [செத்த பாசையில நானும் என்ன என்ன கன்னறாவியோ எழுதி பார்க்கிரேன். இந்த ஈனப்பயளுவ கேக்குறானா?
        ப்ரோஹிதம் பார்த்து பொளைப்ப ஓட்டலாமுன்னா அப்போமே இந்த தங்க ஆசாரி பயலுக அதுலயும் மண்ணள்ளி போட்டானுக. தோட்டி வேலை பார்க்க வச்ச சிதம்பரத்துல சபதம் போட்டு சாவிய புடிங்கிட்டோமுன்னு நிம்மதியா இருக்கவிட்டனாலே. கேசு போட்டீங்க. இன்னைக்கு மணியடிச்சான் சோறு கனவாயுரும் போல இருக்கு.]

        பாவம்டா உங்கட பொழப்பு. நாட்டுல நிசமாலுமே நசுக்கப்பட்டது பார்ப்பான்தான். பேசாம ஒரு கோட்டாவ கேளு.

        • பூலோகத்தில வந்திறங்குன இடம் எகிப்திய வனாந்தரமா, டாச்மாக்ன்னு தெரியல்லையே..

         // எந்த ஆராய்சி விளக்கெண்ணெய் ருத்ரன் ,சிவன், பசுபதன் எல்லாம் ஒன்னு என்று கண்டுக்கிட்டான்? //

         வேறுவேறு என்று சொன்ன மேதாவி யாரோ..?! விளக்கிவிடுங்க பாக்கலாம்..

         // தோட கொலம்பஸ் வந்துட்டாரு.//

         இந்தியாவுக்கு புது ரூட்டு கண்டுபிடிக்கிறேன்னு அமெரிக்காவில போய் முட்டிக்கிட்ட கொலம்பசையா சொல்லுதீரு.. உமக்கு பொருத்தமான பெரியாளுதான் ஓய்..

         // [செத்த பாசையில நானும் என்ன என்ன கன்னறாவியோ எழுதி பார்க்கிரேன். இந்த ஈனப்பயளுவ கேக்குறானா?
         ப்ரோஹிதம் பார்த்து பொளைப்ப ஓட்டலாமுன்னா அப்போமே இந்த தங்க ஆசாரி பயலுக அதுலயும் மண்ணள்ளி போட்டானுக. தோட்டி வேலை பார்க்க வச்ச சிதம்பரத்துல சபதம் போட்டு சாவிய புடிங்கிட்டோமுன்னு நிம்மதியா இருக்கவிட்டனாலே. கேசு போட்டீங்க. இன்னைக்கு மணியடிச்சான் சோறு கனவாயுரும் போல இருக்கு.] //

         பார்ப்பான் புலம்புறதா சொல்றீரு.. ஆனா பார்ப்பானுக்கு உம்ம புலம்பல் புரியணுமில்ல.. தங்க ஆசாரி, தோட்டி வேலை…? ஒண்ணுமே புரியல்லையே பூலோகம்..

      • // ராவணனன்,நேபாள ராஜாபோல, திராவிடர் எனப்படும் விவ்சாய,ஆயுத போர்முறை அறியாத பழங்குடி மக்களை, தற்பொதைய ஒடிசாவின் தென்பகுதியை ஆண்ட திராவிட மன்னனே! //

       இது உங்கள் தனிப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவா..?!

       • நீ சங்கம் வச்சி ஆராய்சி பண்ணுவியோ?

        ஏற்கனவே கண்டதையெல்லாம் இவன்தான் எழுதுனான் என்று சங்கரன் தலையில் போட்டு இன்னைக்கு சங்கரனை குப்புறப்போட்டு கும்மி அடிக்க வச்சுப்புட்டீங்க. தேவையா இதல்லாம்.அவசரப்படாத. எவனாவது நல்ல வடகலை அய்யங்கார கூட்டியாந்து விட்டுட்டு நீ ஒத்து. இந்த கம்முனிஸ்டு பயலுக ஒனக்கு வேணாம்.

        • // ஒடிசாவின் தென்பகுதியை ஆண்ட திராவிட மன்னனே //

         இதுவும் உன்னோட ஆராய்சிதானா.. நீயும், அஜாதசத்ருவும் கம்யூனிஸ்டு..?! இது பூலோகத்துக்கே அடுக்குமா..?!!

 7. நாவலில் கம்மவர் என்றிருக்கிறது. அது நாயக்கராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி குறிப்பிட்டேன். அது விவரப்பிழையாக இருக்கும் பட்சத்தில் அதனை சுட்டவும். நன்றி.

  • ஒரு சிறு கம்மவார் நாயக்கர் குழு பற்றிய வரலாற்று புனைவு அது. மக்கள் தொகை பெருக்கத்தால் பிழைப்பு தேடி நகரும் குழுக்கள் அக்காலத்தில் போகும் இடத்தில் அனுதாபத்தை பெற சொல்லிக்கொண்ட கதைகளில் ஒன்று தான் முஸ்லிம் மன்னர் கொடுமை.இந்த கதை எங்கு செல்லுபடியகுமோ அங்குதான் சொல்லப்பட்டது. மற்ற இடங்களில் புஜபலம் பேசியது.

   • தற்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒரு இந்திர சாதிவரலாற்றுப் புத்தகம்…கோபல்லபுரத்துக் கதைகளின் தாக்கத்தினால் வந்த விளைவாக இருக்குமோ ?

    • காரணம் அது அல்ல. மள்ளர்கள் தங்கள் வரலாறு சொல்கிறபோது எல்லா சாதிகளையும்[பறையர் அருந்ததியர்,முதற்கொண்டு] வந்தேறிகள் என்று சொல்லி தமிழ்நாட்டில் பிராமணர்களும் மள்ளர்களும் மட்டுமே பூர்வகுடிகள் என்று சொல்லுகின்றனர். மேலும் பிற சாதிகளை பற்றி வம்பான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளது. மேலும் மள்ளர்கள் உலகின் பூர்வகுடிகள் தாம்தான் என்று நிறுவ முயலும் செயலில் தரவுகள் ஒன்றுக்கொண்டு முரணாக உள்ளன. நாங்கள் ஆண்ட பரம்பரை தாழ்த்தப்பட்டவன் இல்லை என்று கூறுகையில் இவர்களது குழப்பத்தை மற்ற சாதிகள் தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் அவசரப்படாமல் இன்னும் பல தரவுகளை திரட்டி தங்களின் சமூக, அரசியல், கலாச்சார நிலைப்பாட்டை தெளிவாக நூல் வடிவில் கொண்டு வர முயலவேண்டும். மருத நிலத்தின் பூர்வகுடிகள் மள்ளர்கள் என்பது உண்மை. ஆனால் உலகின் மருத நிலம் முழுவதும் மள்ளர்களே பூர்வகுடிகள் என்று சொல்வது மிகைப்படுத்தல்-வாதத்தின் உண்மை தன்மையை சந்தேகிக்க வைத்துவிடும். அரசு தடை என்பது தேவையில்லை. ஆனால் நூலில் உள்ள சில கருத்துகள் பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளதா என்றால் இன்றைய சாதி அரசியல் சூழலில் கண்டிப்பாக ஆம் என்றே சொல்ல வேண்டும். கருத்து சுதந்திரம் முக்கியம். அதைவிட சமூக அமைதி முக்கியம் என்று அரசு முடிவெடுத்ததுபோல் தெரிகிறது. இந்த நூலில் உள்ள கருத்துகளை முதலில் வாய்மொழியாக பிற சாதிகளிடம் விவாதித்து பின்னர் நூல் வடிவாக கொண்டு வருவது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

 8. சொர்க்கம் குறித்த பேராசை நரகம் குறித்த பெரும் பயம் மற்றும் கடவுள் என்னும் கற்பனை இவற்றை எல்லாம் மிகச்சிறு வயதிலிருந்தே moral education என்ற பெயரில் மிஷனரி பள்ளிகள் குழந்தைகள் மனத்தில் விதைத்து விடுவதால் யாரும் மூளைச்சலவை செய்யப்பட்ட இத்தகைய கருத்துக்களை தாண்டி சிந்திப்பதில்லை.இதை மீறி ஏதாவது கூறினால் மத உணர்வை புண்படுத்துகிறார்கள் என்று கிளம்பி விடுவார்கள். கிறிஸ்தவம் இஸ்லாம் இந்து உள்ளிட்ட இம்மதங்கள் சமூகத்தை பீடித்துள்ள புற்று நோய்…

 9. Either above said story is real or man made that doesnt matter rather Faith.Ten fold of critics had been propagated even by the time of Eliya/Elisa’s. Really i thank for you for patiently spending some time to read out bible stories

 10. ‘அரை வேக்காடு” வினெவ் அவர்கGள ! யாரோ ஒரு” ரூபசச்” தினமனி இல் அரை பக்கம் எழுதின கட்டுரையில் யிருந்து அரைகுரையா புரிந்து கொன்டு

  “ஏசு” பதி வாந்தி எடுதிருக. முழுதும்” பைபிள்'” படிது வீட்டு அப்புரம் ஒலரு!

  நன்பன் ,,,னந்தா.

  • நான் பைபிள் படித்தவன் தான்… என்ன சொல்லுங்கள்???? பைபிள் எப்படி உருவானது என்று வரலாறு படித்து பாருங்கள் மிகவும் கேவலமாக இருக்கும்….. இது பைபிள் மட்டும் இல்லை எல்லா புத்தகங்களுக்கும், இஸ்லாம், பகவத் கீதை….. அனால் இந்த மதத்தினால் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது…… கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கை இல் அதிகமான மக்கள் தவறு செய்ய பய படுகிறார்கள் இது 100 % உண்மை… அனால் அதை மத வெறி ஆகுவது முட்டாள் தனம்… இதை வைத்து சில “குடும்பங்கள் வாழுகின்றது” இதுவும் மறுக்க முடியாத உண்மை………

    • பரவ இல்லை நான் கழுதையாக இருந்து விட்டு போகிறேன்… கடவுள்கள் மனிதனால் உருவாக பட்டன் இதை நான் சொல்ல வில்லை இதை வரலாறு தான் சொல்லுகிறது…

  • வாந்தி கசப்பாதான் இருக்கும். பைபிள் முழுசா படிச்சி நாங்க என்ன bachelor of divinity பட்டமா வாங்கப்போறோம்? நீங்க வேணா பைபிள் நல்லா படிச்சி தினகரன கிட்ட போய் சொல்லுங்க. வக்கத்தவனுக்கு இந்த உலகம் வாக்களிக்கப்பட்டதா பைபிள் சொன்னத நினைச்சி அவரு கொஞ்சம் கவலை பட்டதா சொன்னாக.

  • பெருமாள் நாங்கள் கேட்டறிந்த வரையில் கடப்பாரை என்பதுதான் சரி!

  • கடப்பாறைக்கு கடப்பாரை பற்றி ஐயமா? சும்மாதான். கோவிச்சுக்கிடாதீங்க அண்ணே.

 11. உண்மையான கடவுளைப் பற்றி அறியாதவர்கள் ஒருபுற்ம்..
  தவறான கடவுளை இல்லை இல்லை என்று கூறுபவர்கள் ஒருபுற்ம்…

 12. இந்து மதத்தையும் கிறிஸ்தவத்தையும் இவ்வளவு ஏளனம் செய்பவர்கள் அந்த இன்னொரு மதத்தை பற்றி மட்டும் வாயை திறக்க மாட்டார்கள். பைபிள் உருவான கதை கேவலமாக இருக்குமாம். மதத்தை எதிர்த்து நீங்க்கள் பரப்புவதும் ஒரு வகை வெறியைத்தான்.

 13. //இந்த கைம்பெண்ணைப் போன்றவர்கள்தானே ஆகாபு ஆட்சி செய்த நாட்டில் வாழ்ந்த மக்களும். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள், ரூஃபஸ் அவர்களே? ஒரு மன்னனோடு தனிப்பட்ட வாய்க்கால் வரப்பு, வட்டி, குட்டி பிரச்சினை இருந்தால் அதை வைத்து ஒரு சமூகத்தை தண்டிப்பது எப்படி சரியாகும்?//
  சோசலிச புரட்சி ஏற்பட்டு மன்னர்கள் மட்டுமா தண்டிக்கப்பட்டார்கள். எத்தனையோ அப்பாவிகளையும் தானே கொலை செய்தார்கள். 1917 ளில் ரஷ்ய ஜார் அரசரை மட்டும் புரட்சியாளர்கள் காலி செய்ததை விட்டு ஏன் அவரது பிள்ளைகளையும் கொலை செய்தார்கள்?

 14. //ஆக ஊழல், பாசிசம் எனும் இரண்டு பக்கங்கள்தான் கடவுள் எனும் நாணயத்தின் ஒளியை பரவச் செய்கின்றன. கண்ணைக் குருடாக்கும் இந்த ஒளியினை மதியால் அழிப்பதுதான் வாழ்க்கைப் பிரச்சினைகளை புரிந்து கொண்டு போராடுவதற்கு வழி ஏற்படுத்தும். பக்தர்கள் யோசிப்பார்களா?//

  உங்க மதியை வச்சு உலகத்தில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் விடை கண்டு பிடிச்சிட்டீங்க்களா?

  • ஐயா உலகம் இப்போதுதான் அழிகிறது என்று தப்புக் கணக்கு போடாதீர்கள், கட்டுரையின் கீழே தொடர்புடைய இடுகைகளைப் பாருங்கள், உலகம் முன்பேயே அழிந்து விட்டது.

 15. //கைம்பெண் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது எனும் கொடிய வழக்கம் ஏசுவின் காலத்தில் இருந்திருப்பதால்தான் இங்கே கருணைப் பிச்சைக்குரியவராக ஒரு கைம்பெண் வருகிறார்//

  என்னய்யா எழுதிறீங்க எலியா வாழ்ந்த காலத்துக்கும் இயேசு வாழ்ந்த காலத்துக்கும் சம்பந்தமே இல்லை. கைம்பெண் மறுமணம் செய்த சம்பவங்க்கள் பைபிளில் உண்டு. ஒருவேளை ஏதாவது பகடி செய்வது என்றால் ஒரு பைபிள் தெரிந்த கிறிஸ்தவனிடம் ஒன்றுக்கு நான்கு முறை சரிபார்த்து விட்டு இங்கு வந்து கொட்டுங்க்கள்.

 16. கடவுளை யாரும் பார்த்த்தில்லை! பார்க்கப்பொவதும் இல்லை! அதனால் தையிரியமாக கதை புனைந்தனர்! ஆரம்பத்தில் சமுதாய ஒழுங்குக்காக விதிகள் புனைந்து, கடவுளால் தீர்க்கதரிசிகளுக்கு மட்டும் சொல்லப்பட்டவை என்றனர்! பின்னால் வந்தவர்கள் தங்கள் சுயனலம் கருதியும், ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ளவுமே கடவுளை பயன்படுத்தினர்! அந்தக்காலத்திலேயே பெரியாரிடம் சிலர் கேள்வி கேட்டனர், கடவுள் என்ற கற்பிதம் இல்லையென்றால், உலகத்தில் ஒழுக்கம் இல்லாமல் போய்விடுமே என்று ! அவர்களுக்கு பெரியார் சொன்ன பதில், ஒரு வெஙகாயமும் ஆகாது, பூசாரிகள் ஆச்சாரியார்கள் என அயொகியர்களே பக்திமான் வேடத்தில் தவறிழைப்பதையும், கடவுள் பயம் அவர்களுக்கு இல்லாததையும், பாமரர்கள் இயற்கையாகவே நேர்மையாளர்களாயிருப்பதையும் சுட்டிகாட்டினார்!

 17. அன்புள்ள இசுரவேலருக்கு அண்ணாச்சி எழுதுவது
  ஆபிரகாமின் பிள்ளைகளுக்குத்தான்
  எத்தனை மேய்ப்பர்கள்?
  எத்தனை மீட்பர்கள்?
  அடியெடுத்து கொடுத்ததை மட்டும் படி எடுத்து வைத்து கொண்ட
  மார்கண்டேய மானிடர்களே
  ஓட்டுக்குள் உள்ளதை ஏட்டுக்கு இறக்கி கூட்டில் சுமப்பவர்களே
  பள்ளத்தில் படுத்து கொண்டே பார்ப்பதால் வெளியின் தத்துவம் தெரியாமல் போனதால்
  வாக்களிக்கப்பட்ட நிலத்தை பள்ளத்திலேயே தேடிகொண்டிருக்கிறீர்கள்
  பள்ளத்தை விட்டு எழுந்து வாருங்கள்
  மீட்ப்பும் மேய்ப்பும் ஒழிந்த மானிடத்தை படைக்க.

 18. இந்து மதத்தையும் கிறிஸ்தவத்தையும் இவ்வளவு ஏளனம் செய்பவர்கள் அந்த இன்னொரு மதத்தை பற்றி மட்டும் வாயை திறக்க மாட்டார்கள்.— பறையோசை மற்றும் செங்கொடி தளத்திலும் அந்த இன்னொரு மதத்தைப்பற்றி விரிவாகவே எழுதியிருப்பார்கள்.போய் படித்து பார்க்கவும் Joseph

  • ///ஏன் இந்து மதத்தை மட்டும் அதிகம் விமரிசிக்கிறீர்கள் என்று கேட்பார்கள் நமது அம்பிகள். ///
   இந்து மதத்தை மட்டும் இல்லை அவ்வப்போது எல்லா மதத்தைப் பத்தியும் தான் எளுதறிங்க .. ஆனா கேள்வியே.. அதிகமாக தாக்கப்படுறது பாப்பனீயம் மட்டும்தான் அதத்தான் அம்பி முதல் என்னைப் போல நான்-அம்பி வரை கேட்டுக் கொண்டிருக்கிறோம்…

   • //அதிகமாக தாக்கப்படுறது பாப்பனீயம் மட்டும்தான் அதத்தான் அம்பி முதல் என்னைப் போல நான்-அம்பி வரை கேட்டுக் கொண்டிருக்கிறோம்…//

    மெஜாரிட்டிக்கு முக்கியத்துவம் வேண்டாமா?

   • Because we are in India where the majority is Hindus. Maybe atheists in Turkey/Iran criticize Islam and US will make fun of Jesus.
    Hindus say Jesus and Allah are fake and Krishna is the only true God.
    Muslims say Jesus and Krishna are fake and Allah is the only true God.
    Christians say Allah and Krishna are fake and Jesus is the only true God.

    Atheists say “I am not sure of your latter comment but I concur with the former statements of everyone”. 🙂

 19. வெறுத்தலின் புதல்வனே!
  மறுத்தலின் புதல்வனின் வணக்கம்.
  நலம் நலமா?

  யோசிக்கலாமல் உன் வாகனத்திற்கு உபதேசம் செய்து விட்டு போய் விட்டாய்
  பல்கி பெருகி அவர்கள் ஆத்தும சரிர சுகமளித்ததில்
  நாங்கள் செவிடாகிப்போனோம்
  பாவிகளே என்ற ஊழி கூச்சலில் நாங்கள் குருடர்களாகிப்போனோம்
  விடுதலைக்கான சாவிகளை தொலைத்த குருடர்களாகிப்போனோம்.

  நிற்க.

  நேற்று பேருந்துநிலைய கழிவறை சுவர்களில் வாசித்தேன்
  நீ மீண்டும் வருகிறாயாமே?
  என்ன சோலியோ?
  யார் யாருக்கு பிறந்தார்கள் என்ற பஞ்சாயத்தோ?
  இல்லை மீண்டும் அதிகார மறுப்பை போதிக்கவோ?

  நீ இப்போது வராதே.
  சாத்தானின் பிள்ளைகள் சட்டைப்பையில் சுவிசேஷ ஆணிகளோடு திரிகிறார்கள்.
  எனக்கு வேறு வேலை உள்ளது.
  இப்போது உன்னோடு சிலுவை ஏற எனக்கு விருப்பம் இல்லை.

  அஹிம்சை என்பது தன்னையே சாட்டையால் அடித்துக்கொள்வது
  என்ற அபாயமான எண்ணத்தை வைத்திருக்கும்வரை
  நீ வராதே.
  எனக்கு வலி தாங்கமுடியல!

 20. கடவுளின் தூதர்கள் அவதாரங்கள் மகன்கள் எல்லாம் மன நலன் குன்றியவர்களே. பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள்…

 21. எலியாவுக்கு ‘காகங்கள் ‘அப்பமும் ,இறச்சியும் கொண்டு போய் கொடுத்தன
  என்று தான் ‘பைபிளிள்’ (I இராஜாக்கள்:17:6 காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.)

  என்று குறிபிட்டுயிறுக்கிறது ”.காகங்களுக்கும்,” காகத்திற்கும் ,
  ஒருமைக்கும், பன்மைக்கும் வித்தியாசம் தெரியாத” கால்” வேக்காடே !

  உம்முடைய மற்ற ”அதிமேதாவி”விளக்கங்களுக்கும் நேரடியாக ,பதில் சொல்ல முடியும் அதற்கான நேரத்தை தர உமக்கு தைரியமிருக்கா! ” நான்ரெடி ‘,நீ ரெடியா
  நண்பரே!

  உன் நண்பன் , நந்தா…

 22. பரலோக பாண்டியன், உங்கள் சோசலிச புரட்சியாளர்கள் அதிகார மறுப்பை தானே போதித்தார்கள். இயேசுவின் மீது உமக்கென்ன வெறுப்பு. லெனினும் மாவோவும் உலக மகா யோக்கியர்கள் என்றால் இயேசுவும் அவர்களுக்கு மேலானவர் தான். இயேசு திரும்ப வருவதில் உமக்கென்ன அவ்வளவு கோபம். நீங்க்களும் கூட சோசலிச வித்தகர்களின் ஆட்சி மலர வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள்.

  • ஜோசப் அண்ணா வணக்கமுங்கோ! எனக்கும் ஏசுவுக்கும் எந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இல்லைங்கன்னோ. எனக்கு அந்த ஆள ரொம்ப புடிக்குமுங்கோ. என்ன ஒரே ஒரு பிரச்சினைதாங்கோ. அவரோட அஹிம்சா தத்துவோம் நமக்கு உடம்பை புண்ணாக்குதுங்கோ. வன்முறை அடுத்தவன் உடலானாலும் நம் உடலானாலும் வலி ஒன்னுதானுங்கோ. மத்தபடி ஆணி விஷயம் உண்மைதானே அண்ணே?

 23. Kindly find answer to these questions.
  1) The Laws of thermodynamics had proved the increase of entropy concept. Entropy is a measure of disorderliness. If it continues to increase, it would have started at a point where it would have been perfect(you can’t deny this as it would violate the mathematical laws). Who is the author of this perfect point.
  2) Can the probabilities be so precise to make picture perfect DNAs and other genetic codes which makes up life( Even a chance of 0.99 has 0.01 as uncertainty)
  3) Evolution is just a fanciful hypothesis, it does not give any scientific explanations. Nobody can see things evolved from one form to the other.
  4) If I ask you to stand in a garage full of auto spare parts and tell that a tiny bolt assembled with a nut on its own, then it lived for sometime, then suddenly the axle formed the chassis formed, the engines formed on its own, it lived and died for sometime, then due to natural selection suddenly a beautiful ferrari was formed on its own, sounds to be idiotic right, this is how evolution cooks up its theory on a flask of primordial soup.
  5) If humans came from monkeys, so sad that they are still humans for the past few millenias, nothing has changed.
  6) Has science found solution to all mysteries, can any gynaecologist tell what is the chance of a baby being formed in a mothers womb. can anyone predict natural calamities precisely… Science… Why it is so limited?
  7) You can’t see electricity but you can still see its benefits and power (an old arguement only boss) similarly there are millions who don’t see God but understands and feels his power. It is absurd to deny the existence of God, he is very much there and thats why you who deny God think more about him than the people who believe

  • Sigh…
   I recommend you to read books of Richard Dawkins. Start with ‘God delusion’ or ‘The Blind watchmaker’.. your tone sounds as if you have thoroughly researched about evolution, holding a nobel in Physics and mastered genetics.

   You just have copy-pasted FAQs from some pro-creationism forums 😛

   P.S: Evolution may be a fancy idea but not as fancy as creationism 🙂 Praise the Lord

   • Send me your mail id I will give you scholarly articles against Dawkins rants supporting evolution, these articles are published in peer reviewed scientific journals. Dawkins refused to debate with biblical scholars.

   • Sir, I had been a teacher of thermodynamics and have a great affinity of that subject. I am neither a man with nobel (???) nor I am copying from creation forums. Of course I had read about and I am a believer of creation theory.

    • Fortunately since Descartes no body believed seriously in Bible.They devised ways to circumvent the power of church, then they challenged it and finally they ignored it. Now Popes are telling-Church accepts evolution-but we still see the hand of god in it!!! What a pity; what a pity!

      • இந்தியாவுல ராக்கெட் விட முன்னாடி தேங்கா உடைச்சிதான் விடுவான் நம்ம கூராளிகள். நீ சொன்ன கூராளிகள் ரொம்ப நல்ல மனுசங்க. பாரடே மின்சாரத்துக்கு காப்புரிமை வாங்க மறுத்தார். அது அவர் மத நம்பிக்கை சார்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும். பாண்டிப்பய அத சொல்லல. அறிவியலையும் ஆத்மாவையும் தனித்தனியா பிரிச்சி ஆத்மாவ சர்ச் பார்த்துக்க அறிவியல நாங்க பார்த்துக்கிறோம் என்று கோளாற தேச்கார்தேசு சொன்னத சொல்லுரான். மதத்தை பகைசுக்காம அறிவியல் வேலை பார்த்தாங்கன்னு சொல்லறான்.
       அது சரி 2013 இல வந்து கலிலியோவை காயடிச்ச பயலுக எல்லாம் பேசப்படாது. எதுக்கு பூமியத்தான் எல்லா கிரகமும் சுத்துது சொல்லனும்? உங்கட மாதிரி கூராளிகளைதான் சுத்துதுன்னு சொல்லிட்டு போ.

       • புரியுற மாதிரி எழுதுங்க சார். உலகம் தட்டையானதுன்னு பைபிளில் எங்கு இருக்கு. அதே மாதிரி உலகத்தைதான் எல்லாம் சுத்துதுன்னு எங்க பைபிளில் இருக்கு காமிங்க…

 24. உங்க சந்தேகம் ஒன்னாம் வகுப்பு பாடமுங்கோ. இது சரி அது தப்புன்னு நாங்க சொல்லல. நல்ல கண்ணை திறந்து நீங்களே பாருங்கன்னுதான் சொல்லுறோம். எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவன் சொல்லுறதையே நம்புவீங்கன்னா?

 25. இது ஒண்ணாம் வகுப்பு பாடம் இல்ல ராசா, இது சம்பந்தமா அறிவியல் அறிஞர்கள் எழுதின ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளது. வேணுமின்னா சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன். தேர்மோடைநமிக்ஸ் உங்க்களுக்கு ஒண்ணாம் வகுப்பு பாடமா? வெளங்கிடும்.

  • சட்டைப்பையில் ஆணிகளோடு திரிபவர்கள் இன்று நிறைய. எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும். அப்படியென்றால் regression analysis படி பின்னோக்கி சென்றால் ஒரு காலத்தில் ஆணியோடு யாரும் இல்லை என்று ஆகும். தேவன் காலத்தில் ஆணிகள் புழக்கத்தில் இருந்தன. அதற்கு முன்னால் பழைய ஏற்பாடு காலம் போனால் ஆணி இல்லையோ!!!

   1.Entropy என்பது ஒரு புள்ளி/வெற்றிடம் இருந்து தொடங்குகிறது என்பது Linear logic. ஜடம்/ஆற்றல் உறவை இயங்கியல் கோட்பாட்டில் புரிந்துகொள்ளவேண்டும். புள்ளியியல் சூத்திரங்கள் பயன்பாடு கட்டற்றது அல்ல. எல்லா சூழலிலும் எல்லா சூத்திரங்களையும் பயன்படுத்த இயலாது. Chaos என்பது order இல் இருந்து தொடங்கும் என்பதும் லினியர் logic வகைப்பட்டது. Chaos chaos இல் இருந்து தொடங்குகிறது என்பது இயங்கியல் முடிவு. Logical Positivism அறிவியல் ஆரம்ப காலங்களில் உபயோகமாக இருந்த ஒரு கோட்பாடு. தத்துவத்தின் எதிர்மறை அது. அறிவியல் வளர வளர அதான் பயன்பாடு அறிவியல் பூர்வமாக இல்லை என்பதால் விடப்பட்டது. நீங்கள் Logical positivism கண்ணாடியுடன் நவீன அறிவியல் கருத்துகளை பார்க்கிறீர்கள். உங்கள் கண்ணாடி வழி பார்த்தாலும் rear view mirror இல் கடவுள் தெரியவில்லை.

   2.Perfect DNA உங்கள் கற்பனை. அது மனிதனுக்கும் இல்லை கடவுளுக்கும் இல்லை.

   3.ஒரு செல் உயிரிகள் பரிணாம மாற்றங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து அவற்றை படியுங்கள்.

   4.பரிணாமம் என்பது உயிரியல் கோட்பாடு. ஜடப்பொருளுக்கு சிதைவு கோட்ப்பாடு. மாத்தி போட்டு குழப்பிகிடாதீங்க
   5.மனித பரிணாம வளர்ச்சியில் பல்வேறு கட்டங்கள் எலும்புகூடு ஆய்வுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது உங்களுக்கு தெரியாதா?
   6.In vitro fertilization என்பது விந்து அண்டம் இரண்டையும் எடுத்து கருவாக்கி பின்னர் கருப்பையில் வைத்து வளர்த்து பிரசவம் பார்த்து-பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய்ட்டாங்க-இப்போ போய் கேக்குறீங்க!
   7.புலன்களுக்கு புலப்பட வில்லை என்றாலும் நிறைய அறிவியல் நிகழ்வுகள் ஆராய்சிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கடவுளும் கசுமாலங்களும் ஒன்னு என்று நீங்கள் பரமார்த்த குரு ஸ்டைலில் பேசுவதை பார்த்தால் பேசாமல் சந்தையில் தாயத்து விற்க போகலாம்.
   கடுமையாக பேசியிருந்தால் மன்னிக்கவும். பரவலாக ஆழமாக படித்துவிட்டு விமர்சனம் செய்தால் நன்றியோடு ஏற்போம் அடுத்தவர் சொன்னது, நுனிப்புல் மேய்வது உரையாடலுக்கு நல்லதல்ல. ஒன்று அறிவியலை நன்றாக படியுங்கள் அல்லது பைபிள் நன்றாக படியுங்கள்.

   • In Invitro fertilization the success rate is only 28.2%, why don’t science account for the reminder.
    IVF l ஸ்கூலுக்கு பிள்ளைகளை அனுப்ப முடியாமல் இன்னும் ஆஸ்பத்திரி வாசலிலேயே காத்துக்கொண்டிருக்கும் எத்தனையோ தம்பதிகள் இருக்கிறார்கள் பிரதர்.

   • அது எப்படி சார் உங்க வசதிக்கு ஏற்றபடி கட்டற்றது கட்டில்லாததுன்னு சொல்றீங்க அந்த வெற்றிட புள்ளியில் இருந்து உலகம் இயங்க ஆரம்பித்தது எப்படி சார்? அந்த தொடக்க புள்ளியில் இருந்து உங்களுக்கு மேற்பட்ட சக்தி இயங்க வைத்தது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். அதை நீங்களும் பார்க்கவில்லை நானும் பார்க்கவில்லை, ஆனால் அப்படி ஒரு சக்தி இருந்தது என்பதை ஒத்துக்கொள்ள எப்படி உங்களுக்கு விருப்பமில்லையோ அதே போல் அது இருந்தது என்பதை ஒத்துக்கொள்ள எனக்கும் உரிமை இருக்கிறது. ஒழுங்கில்லாததில் இருந்து ஒழுங்கில்லாதது தொடங்கும் என்பது வாதத்திற்கு கூட ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று.

    • சூத்திரம் ஆகுமா ஆகாதா என்பது அறிவியல் முடிவு. என் வசதிக்கு சொல்லுவதில்லை. வெற்றிடம் என்று நான் எப்போ சொன்னேன்? மன்னிக்கவும். உங்கள் மனதில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய நீங்கள் மேலும் பல அறிவியல் புத்தகங்களை படிக்கவேண்டும். பொது இடத்தில் குடிகாரன் போல் வாந்தி எடுத்து அலம்பல் பண்ணுவது அநாகரிகம். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடம் இங்கு அல்ல. விவாதம் வெட்டியாக போகிறது. Bye.

     • A. C. McIntosh, “Information and Entropy—Top-Down or Bottom-Up Development in Living Systems?” International Journal of Design & Nature and Ecodynamics 4(4) (2009): 351-385

      கடவுள் மறுப்பாளர்களாகிய நீங்கள் கடவுளை நம்புபவர்களை ஏளனம் செய்வீர்கள் அது நாகரீகம், அதற்கு பதில் சொன்னால் அது அநாகரீகமா? நல்லா இருக்கு சார் உங்க நியாயம். அறிவியலாளர்களும் படைப்பு கொள்கையை நம்புகின்றனர் மேற்கண்ட அறிவியல் பேப்பர் தரவிறக்கம் செய்ய முடிந்தால் படித்து பாருங்க்கள்.

      • மன்னிக்கவும். மீண்டும் ஒன்றையே சொல்கிறோம். தயவு செய்து உங்களுக்கு பிடித்த தரவுகளை சேகரிப்பது போல மற்ற தரவுகளையும் படியுங்கள்.போப்பாண்டவர் பரிணாம கொள்கையை ஏற்றுக்கொண்டார் என்பதற்காக நாங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவியல் என்பது கதவடைக்கப்பட்ட அறையில்லை. புற குப்பைகளை கிளரும் வேலை தொடர்ந்து நடைபெறுகிறது. நீங்கள் கூறும் குப்பைகள் ஏற்கனவே கிளறியாகிவிட்டது. வெள்ளைத்தாளில் அச்சடித்தது எல்லாம் உண்மை என்று நம்புவது அக வளர்ச்சியில் ஒரு ஆரம்ப நிலை. நாங்கள் அதை சிறுவயதிலேயே தாண்டி வந்து விட்டோம். நீங்களும் வர வேண்டுகிறோம். Please come out of your anal fixation.

       நிற்க. நாங்கள் மக்களை ஏளனம் செய்வது இல்லை. நம்பிக்கைகளையே விமர்சனம் செய்கிறோம். அந்த நம்பிக்கைகளின் உருவகமாக உள்ள மனிதர்களை விமர்சனம் செய்கிறோம். அறிவியல் சுய விமர்சனம்/புற விமர்சனம் இரண்டையும் சம அளவில் கொண்டது.[இயங்கியல் தத்துவப்படி]

       • உங்களுக்கு மத சம்பந்தப்பட்ட காரியங்கள் குப்பையாக தெரியும் பொது எனக்கும் உங்க மார்க்ஸும் எங்கல்ஸும் சொல்லி, எழுதி வச்சதெல்லாம் குப்பையாக தான் தெரிகிறது என்ன செய்ய. Atheism propagates a sense of non accountability to any thing a man does. It hides under cover if the opponent is strong, Will Richard Dawkins have the guts to speak about islam in Teheran before Ayatollah? Atheism is a shattered visage which gives no hope for a human.
        நான் சொல்லியிருக்கும் scientific paper நீங்கள் படித்திருக்க வாய்ப்பே இல்லை. சும்மா பொத்தாம் பொதுவா அடிச்சு விடாதீங்க.நீங்கள் கொண்டுள்ள கடவுள் மறுப்பு கொள்கைகளை விமர்சனம் செய்யும் பொது மட்டும் கொந்தளிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மட்டும் மத நம்பிக்கை உள்ளவர்களை ஏளனம் செய்யலாம். நல்லா இருக்கு சார் உங்க நியாயம்.

         • பூலோகம் பரலோகத்தை கண்ணாடியில் பாத்து கம்யூனிகேட் பண்ணுதே.. ஜோசப்பு அண்ணே சட்டை பத்திரம்.. எஸ்கேப்பாயிருங்க..

  • பொதுஉடைமை என்பது ஏசு கிறிஸ்து இல்லை. அடிக்கடி வந்து போவதுக்கு. Communism என்பதுக்கும் ஏதேச்சிகார அரசுகளுக்கும் மன்னராட்சி கம்முனாட்டிகளுக்கும்[CUBA] வித்தியாசம் தெரியாமல் பேசுகிறீர்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முதலாளிகளை போட்டு துவைப்பது என்று அர்த்தமல்ல. நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் அதிகார ஆசையில் மக்களை திரட்டி ஏற்படுத்துவது பொது உடமை அரசல்ல. இந்த உலகம் எளியவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது என்று ஏசு சொன்னாரே-எப்படி நடக்கும்? எளியவர்களை நம்பியா இல்லை மொள்ளமாரிகளை நம்பியா? இரண்டாயிரம் வருடம் முன்பு ஏசு சொன்னதை இன்னும் செய்ய முடியவில்லை. நூறு வருடத்துக்கு முன் சொன்னதை நிறைவேற்ற திராணியில்லை என்று ஏளனம் செய்ய வெட்கமாக இல்லையா? இரண்டாயிரம் வருடங்கள் தாண்டியும் உலகம் எளியவர்க்கு வாய்க்கவில்லை என்பதால் பைபிள் எரித்துவிடலாமா? புரட்சி வேஷம் போடும் புரட்டர்கள் சமயத்தில் மட்டுமல்ல அரசியலிலும் உண்டு.சத்தியம் என்பது சோதனைகளின் வெற்றியிலிருந்து மட்டுமல்ல தோல்விகளில் இருந்தும் நிறுவப்படுகிறது. ஆயிரம் முறை தோற்றாலும் தோல்வி சோதனைக்குத்தான் சத்தியதுக்கில்லை.

   • உங்க மார்க்ஸும் எங்கல்ஸும் பொதுவுடைமை பற்றி பேசும் முன்பே இயேசு எளிமையையும் பொதுவுடைமையும் பற்றி சொல்லியிருக்கார். கொஞ்சம் திறந்த மனதுடன் ஏளனம் செய்யும் நோக்கம் இல்லாமல் பைபிளை படியுங்கள்.

    • இருக்கட்டும். ஆனால் அவர் சொல்லாதது எல்லாம் சேர்த்து பைபிள் உள்ளே எழுதிவைத்து மக்களை கெடுத்துவிட்டார்கள் என்று சொல்கிறீர்களா? பின் ஏனய்யா இரண்டாயிரம் வருசமாகியும் வக்கத்தவனுக்கு இந்த உலகம் வாய்க்கவில்லை?

     • வக்கத்தன்வனுக்கு உலகம் வாய்க்காவில்லை என்றால் இயேசுவையும் கிறிஸ்தவனையும் ஏன் குறை சொல்கிறீர்கள். நீங்கள் சொல்ல வரும் சோசலிசம் மட்டும் உலகம் முழுசுமா பரவியிருக்கு.

      • சோசியலிசம் உலகம் முழுதும் பரவி உள்ளது-சமீப காலத்தில். ஆனாலும் கிருத்துவம் போல் நீக்கமற பரவ வில்லைதான். வக்கத்தவனிடம் வாய்ச்சவடால் அடிக்கும் பாதிரிகளை போல் இடதுசாரிகள் சொர்க்கத்தை தாம்பாளத்தில் வைத்து கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றுவது இல்லை. நீங்களே போராடி எடுத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள். மீன் பிடிக்க கற்றுத்தருகிறோம். மீன்களை நாங்கள் விற்பதில்லை.
       //வக்கத்தன்வனுக்கு உலகம் வாய்க்காவில்லை என்றால் இயேசுவையும் கிறிஸ்தவனையும் ஏன் குறை சொல்கிறீர்கள்//
       சேம் சைடு கோல் போட்டீங்களே மக்கா?.

       • வக்கத்தவனிடம் வாசவடால் அடிக்கும் பாதிரிகள் என பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள். மத பிரசாரக்காரர்களில் நேர்மை அற்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்க சொல்லும் போலி கம்யூனிஸ்டுகள் மாதிரி.

       • //இடதுசாரிகள் சொர்க்கத்தை தாம்பாளத்தில் வைத்து கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றுவது இல்லை. நீங்களே போராடி எடுத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.//
        மத்த மதங்களை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை ஆனால் கிறிஸ்தவம் சொர்க்கத்தை தாம்பாள தட்டில் வைத்து கொடுப்பதில்லை. இடுக்கமான வாசல் வழியாக தான் ஒருவன் சொர்க்கத்தை அடைய முடியும். உங்களுக்கு இது வினோதமாக தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல, சொல்லவேண்டியதை சொல்வது எனது kadamai அவ்வளவுதான்

 26. இன்னைக்கு பலர், மார்க்ஸையும் மாவோவையும் நம்புறாங்க்கல்ல, அது மாதிரி தான் இதுவும். பொதுவுடமையும் சோசலிசமும் இன்னைக்கு எந்த நிலையில் இருக்கு. அடிமைப்பட்டு கிடந்த மாதிரி தானே அத்தனை கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இருந்தன, மூச்சு முட்டி சாகும் அளவுக்கு தானே அந்தந்த நாடுகளின் சர்வாதிகாரிகள் வைத்திருந்தார்கள்.

  • //பேசும் முன்பே இயேசு எளிமையையும் பொதுவுடைமையும் பற்றி சொல்லியிருக்கார்.//

   //பொதுவுடமையும் சோசலிசமும் இன்னைக்கு எந்த நிலையில் இருக்கு.//

   ஜோசப்பு,

   தெளிவா பேசனும். பொதுவுடைமை சரின்னு சொல்றீங்களா? தவறானதுன்னு ச்ல்ல வறீங்களா?

 27. கடவுள் மறுப்பாளர்களாகிய நீங்கள் மனிதனுக்கு அழிவற்ற இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். மனிதன் சாகும் போது அவனுக்குள் உள்ள ஏதோ ஒன்று அவனை விட்டு போகும்போது அவன் ஜடாப்பொருள் ஆகிறான். உயிரியல் இயக்கம் நிற்பதால் அழுகத்தொடங்குகிறான். ஆன்மாவற்ற உடல் தான் மனிதன் என்றால் மனிதனின் இயக்கம் திடீரென நிற்பது எப்படி. ஒரு மெஷினையோ ரோபோவையோ நிறுத்த ஒரு மனிதன் முடிவு செய்ய வேண்டும் அல்லது அந்த ரோபோ தானாக தனது செயல்பாட்டை நிறுத்தும் படி வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அது நிற்கும் கட்டளையையுடைய மென்பொருளை மனிதன் தான் தீர்மானம் செய்திருப்பான். ஆனால் மனிதனுக்கு மட்டும் மரணம் மூலமாக அவனது செயல்களை நிறுத்த அவனுக்கும் மேற்பட்ட சக்தி ஒன்று இல்லை என்பீர்கள். எப்படி என்று தான் தெரியவில்லை. ஒரு மனிதன் வெறும் உயிர் வேதியியல் மூலக்கூறுகளின் கலவை என்று வைத்துக்கொள்வோம். அவன் 10 வருஷத்துக்கு முன் ஒரு கொலை செய்திருந்தால் அவனை நியாயப்படி இப்போது கைது செய்ய முடியாது ஏனெனில் மனிதனின் உடல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் அடைகிறது. ஒரு பாறை ஒரு மனிதன் மீது தற்செயலாய் விழுந்து அவன் செத்துப்போனால் அந்த பாறையை எப்படி கைது செய்ய முடியாதோ அதேபோல தான் கொலை செய்த ஒரு மனிதனை கைது செய்ய முடியாது. சட்டங்களும் விதிகளும் ஒரு மனிதனின் உள்ளான ஆள்தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவனது அழிவற்ற ஆன்மாவை ஓத்துக்கொள்ளும்(ஏதோவொருவகையில்) காரணமே ஆகும். ஆன்மா அழிவற்றது என்றால் அப்புறம்….

  • ஒரு மனிதன் தான் யார் என்பதையும் புற அறிவையும் மூளையின் சில பகுதிகளில் நினைவாக பதிந்து வைத்துள்ளான். அது சாகும் வரை அல்லது நினைவு சிதறல் நோய் வரும் வரை அப்படியேதான் இருக்கும். அதை வைத்துதான் சுயம்/புறம் என்பதை வரையருக்கிறான். புறம் ஒரு மனிதனை தோற்றம் மற்றும் இன்னபிற அடையாளங்களை[DNA கூட] கொண்டு அடையாளம் காட்டும்.ஆனால் ஒரு மனிதனுக்கு தான் யார் என்ற புரிதல் தன் நினைவுகளில் உள்ளதை வைத்தே. இந்த நினைவுகள் இரு வழிகளில் மூலையில் பதியப்பட்டுள்ளது. பெரும்பகுதி மூளையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்களின் உள்ளே புதிய புரதமாக பதிகிறது. இந்த புரதங்கள் ஜட சுழற்சியில் வருவது இல்லை. அதன் கட்டமைப்பு மாறுவது இல்லை.மூலக்கூறுகள் மாறுவதில்லை. இரண்டாவது மூளையின் செல்களுக்கு இடையே புதிதாக உறவாகும் மின்/வேதி தொடர்புகள் மூலம் நினைவு பதியப்படுகிறது. இது முன்னதை போல் வலிமையானது அல்ல.

   அதனால்தான் அவனா நீ என்று யாரும் கேட்பதில்லை.ஏழு வருடம் கழித்து நான் அவனில்லை என்று சொல்லவும் வழியில்லை.

   வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், சிதைவு[aging] மரணம் என்பவை மரபணுக்களில் கட்டளையாக உள்ளது. கருவிலிருந்து கருமாதி வரை இந்த மரபணு கூறுகள் ஒன்றன் பின் ஒன்றாக செயல்பாட்டுக்கு வருகின்றன. இவை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் வருவதை செல்களின் உள்ளும் புறமும் உள்ள புரதங்கள் கட்டுப்படுத்துகின்றன.செல்களுக்கு இடையே உள்ள தகவல் பரிமாற்றம் இந்த புரதங்களின் வழியே நடக்கிறது.முறையாக போகும் போது மரணம் முதுமையிலே.தகவல் தொடர்பு அறுந்தால் ஏதேனும் ஒரு செல் தன்னிச்சையாக வளரும்-புற்றுநோயாக.கடவுள் இதில் எங்க உள்ளார்? ஆன்மா எங்கே குந்தியிருக்கிறது?

   • அதான் சாமி கட்டளை கட்டளை என்று ஆணியடித்த மாதிரி (உங்களுக்கு தான் ஆணின்னா பிடிக்குமே) சொல்றீங்களே, லாஜிக்கலா பாத்தாலே கட்டளை என்பதை நிறைவேற்ற கட்டளை கொடுப்பவன் இருக்கணும் அதே மாதிரி கட்டளையை நிறைவேற்ற ஒருத்தர் இருக்கணும் இல்லையா? கட்டளையை கொடுப்பது yaar சார்?

    • கம்ப்யூட்டருக்கு ரோபோவுக்கு மெஷினுக்கு ஒரு ஆக்கியோன் இருக்கிறதை ஒத்துக்கொள்ளும் இறை மறுப்பாளர்கள் இவற்றையெல்லாம் உருவாக்கிய மனிதனுக்கு ஒரு ஆக்கியோன், படைத்தோன் இருப்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்களாம்.

     • The Laws of Permutations and combinations cannot be on their own and you can’t have such a huge amount of probabilities to make them, if you agree on a probabilistic model then you are accounting for uncertainties. Above all the simple law of tossing a coin, Probability defines 0.5 for Heads and 0.5 for tails, but it needs a coin and a tosser to execute it. Apply the same analogy to creation.

     • //இவற்றையெல்லாம் உருவாக்கிய மனிதனுக்கு ஒரு ஆக்கியோன், படைத்தோன் இருப்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்களாம்///

      இது ஜீனியஸ் ஜெயதேவ் தாஸின் கொள்கையல்லவா. இப்படி ஏழுமலையான்ஸ், பாய்ஸெல்லாம் நெறைய பேசியாச்சு. புதுசா எதாவது ட்ரை பண்ணுங்க உபயோகமா இருக்கும்.

      • யாருடைய கொள்கையையும் பற்றி எனக்கு தெரியாது சந்தானம் சார். எனக்கு தெரிந்ததை நான் புரிந்துகொண்டதை சொல்கிறேன். நீங்க சொல்ற முறை கூட ரிச்சர்ட் டாக்கின்ஸ் சொல்ற மாதிரி இருக்கு என்ன செய்ய?

     • கம்ப்யூட்டருக்கு ரோபோவுக்கு மெஷினுக்கு ஒரு ஆக்கியோன் இருக்கிறதை ஒத்துக்கொள்ளும் இறை மறுப்பாளர்கள் இவற்றையெல்லாம் உருவாக்கிய மனிதனுக்கு ஒரு ஆக்கியோன், படைத்தோன் இருப்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்களாம்.
      மனிதனுக்கு ஆக்கியோன் கண்டிப்பாகத் தேவை என்று கேட்கும் கடவுளை நம்புபவர்கள், மனிதனை ஆக்கிய, கடவுளை ஆக்கியோன் யார் என்ற ஒரு கேள்வி தொக்கி நிற்பதை ஏன் மறந்தீர்கள்? கடவுளை ஆக்கியோன் யார் என்று கூறமுடியுமா?

    • பாண்டியா எங்கயோ இடிக்கிது. பார்த்து பிறவிக்கோளாறு.

   • // இந்த புரதங்களின் வழியே நடக்கிறது.முறையாக போகும் போது மரணம் முதுமையிலே.தகவல் தொடர்பு அறுந்தால் ஏதேனும் ஒரு செல் தன்னிச்சையாக வளரும்-புற்றுநோயாக.கடவுள் இதில் எங்க உள்ளார்? ஆன்மா எங்கே குந்தியிருக்கிறது?//
    ஏன் oru சிலருக்கு முதுமையில், ஒரு சிலருக்கு paathiyil.
    நீங்க சொல்லும் மின்வெதியியல் சாதா வேதியியல் கலவையான் மனித மெஷினில் எல்லாமே ஒரே மாதிரியா thaana சார் நடக்கணும். Why this uncertainty and variations. Who plans this variation?

    • அதுக்கு பேருதான் மரபணுக்கோளாறு. அப்புறம் அதுக்கு காரணம் யாருன்னு திருக்கோசு மாதிரி கேக்காத. ப்ரோபபிளிட்டி படி.
     பாண்டியா போற போக்க பார்த்த நீங்க உங்க கூட்டத்துக்கு ஒரு ஆளை தேத்திருவீங்கபோல!

     • கோளாறை ஒத்துக்கொள்ளும் நீங்கள் (மரியாதையாக தான் விளிக்கிறேன் இதே மரியாதையோடு பதிலளித்து பழகுங்கள்) பூரணத்துவத்தை ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். ஒரு தாத்தா 100 வயசில் இறந்தாலும் அது மரபணுக்கோளாறா? ஒரு மனிதன் தன்னை அறியாமலே தான் இயக்கத்தை நிறுத்திக்கொள்ள முடியும்? (இயற்கையாக மரணம் அடைபவர்)
      ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்தை நிறுத்த (நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ) ஒரு வெளிக்காரணி தேவைப்படும் பொது மனித இயந்திரத்தை நிறுத்த உள்ளே உள்ள மரபணுக்கோளாறு மட்டும் காரணமாகிவிட்ட முடியுமா? அப்படியானால் ,இயற்கை பேரிடரில் சிக்கி உயிர்விடுபவர் எந்த கணக்கில் சேர்வர். இது மரபணுக்கோளாறு கணக்கில வராது சார்.

      • மன்னிச்சுக்கப்பா. தவறு மன்னித்துகொள்ளுங்கள். கிராமத்துல இயல்பா பேசி பேசி அப்படியே வருது. நாங்க எல்லாம் அப்படித்தானே பேசிக்குவோம். போலி மருவாதி கிடையாது. வயசு வித்தியாசம் பார்கமாட்டோம்.ஆனா யாரும் விகல்பமா எடுத்துகிட்டது இல்ல. சாதிபழக்கம். பரவாயில்லை. நீங்க மேட்டுக்குடி மக்கள். அதனால கஷ்டப்பட்டு மருவாதியா பேசுறேன். ஆனா தூய தமிழ் பேசுன்னு சொல்லிப்புடாதிங்க. நமக்கு வராது. திரும்பவும் மன்னிப்பு கேட்கிறேன்.

       ஜோசப் அண்ணே மரபணு கோளாறு என்பது inbuilt. அதை கோளறு என்று கூட பார்கவேணாம். அதனுடைய ஆயுள் அவ்வளவுதான். கரு உருவாகும் போதும் பின்னரும் புற காரணிகளால் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு வயசுல இறந்தாலும் நூறு வயசுல இறந்தாலும் இயற்கை மரணம்/கோளாறு என்று நமக்கு புடிச்ச என்ன பேர் வைத்துக்கொண்டாலும் மரணம் என்பது செல்களின் மரணம்.இது மரபணு கூறுகள் உற்பத்தி செய்யும் புரதங்களை பொருத்தது. செல்கள் இறக்கும் போது செல்களின் கூட்டமைப்பான திசுக்கள், உறுப்புகள், மண்டலங்கள், உடல் என்று மரணம் நிகழ்கிறது. சாவி கொடுத்த கடிகாரம் போல என்று வைத்து கொள்ளவும். அண்ணே தமிழு முடியல. உங்கள் பாசை நமக்கு விறு விறுன்னு வரமாட்டிங்குது. என் பாசையில பேச கூடாதுன்னு நாட்டாமை சொல்லுறாக. பேசாம பீ அள்ளிட்டு நிம்மதியா இருக்கிறேன். வரமாட்டேன்.

       • சார், நீங்கள் புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இல்லை நான் விளக்கும் பக்குவத்திலும் இல்லை. மனித உடல் + உயிர் (உங்க கருத்துப்படி அதுவும் வேதிப்பொருள் தானே) இவற்றுக்கு யார் சார் சாவி கொடுத்தது. அந்த சாவி கொடுத்த கடிகாரம் இந்த நேரத்தில் நிற்கும் என யார் முடிவு செய்வது.
        நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களுக்கு மேல் ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது. அதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள (நீங்கள் மட்டும் அல்ல, கடவுள் மறுப்பாளர்கள் யார் சொல்வதையும்) ஏற்றுக்கொள்ளும் விருப்பம் எனக்கும் இல்லை. கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என நான் நம்புகிறேன் அவர் இயேசுவாக வந்தார் என்பதை ஒரு கிறிஸ்தவனாக நம்புகிறேன். கடவுள் மறுப்பாளர்களுக்கு டார்வினும் மார்க்ஸும் எங்கல்ஸும் எப்படி முக்கியமோ அதே போல எனக்கு இயேசு கிறிஸ்து முக்கியம். கடவுளை நிராகரிக்க உங்களுக்கு ஆயிரம் காரணம் இருந்தால் அவரை நம்புவதற்கு எனக்கு ஆயிரத்தொரு காரணம் இருக்கும். கடவுள் பேரில் நடக்கும் மோசடிகளை, ஏமாற்றுக்காரர்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள் ஆனால் கடவுளை நம்புபவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் பக்தியில் ஈடுபாட்டுடன் இருப்பதை விமர்சனம் செய்யாதீர்கள்.

        • சற்றே கோபமாகிவிட்டீர்கள் என்று நினைக்கிறன்.
         சாவி கொடுத்த கடிகாரத்த கீழ வச்சிருவோம்.
         //நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்-எனக்கு மேல ஒரு சக்தி இருக்கிறது.//
         பிரபஞ்ச உற்பத்தி பற்றி பேசும் போது ஜடம்/ஆற்றல் பற்றி பேசுவார்கள். ஜடம் ஆற்றலாக மாறுவதை- அணுசக்தி நமக்கு தெரியும். நீங்கள் ஒத்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆற்றல் ஜடமாக மாறுவதை தீர்மானமான பரிசோதனை மூலம் இன்னும் நிறுவவில்லை. ஒரு ஊகமாக வைத்துகொள்ளலாம்.
         பிரபஞ்சத்தின் ஆற்றல் என்பது அணுக்களின்/பரமாணுக்களின் சிதைவு என்று அறிவியல் கருதுகிறது. சூரியனில் அணு/பரமாணு ஜட fission/fusion கிரகங்களுக்கு ஆற்றலை ஒளி என்ற வடிவில் தருகிறது. அதைபோல் எங்கோ ஒரு இடத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் ஜடத்தின் fission/fusion நடவடிக்கைகளினால் தொடங்கி இன்று பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே போகிறது. ஒரு களத்தின் பின் பிரபஞ்சம் மீண்டும் தன்னுள்ளே சுருங்கிவிடும். எல்லாம் ஊகங்கள்-ஆனால் இயங்கியல் அடிப்படையில் ஆனவை.
         நீங்கள் சொல்லும் சக்தி/ஆற்றல் எங்கே உள்ளது? பிரபஞ்ச தோற்றத்தில் அதன் பணி என்ன? ஆற்றல் ஜடமாக எங்கனம் மாறியது? இல்லை இறைவன் இதற்கெல்லாம் புறம் நின்று இந்த அலகிலா விளையாட்டை செய்கிறாரா? அவ்வாறு புறமாக உள்ளார் என்றால் எதற்கு புறமாக? பிரபஞ்சதுக்கா? தயவு செய்து விளக்குங்கள்.
         பின் நவீனத்துவ கோட்பாட்டுகளின் படி உங்கள் நம்பிக்கையை இன்னொருவர் கேள்விக்குள்ளக்கா முடியாதுதான். டார்வின் சொன்ன வல்லவன் வகுத்ததே வழி எல்லா உயிர்களுக்கும் பொருந்தும் என்றாலும் மனிதன் அவ்வாறு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவ்வாறு இருக்க கூடாது என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ வாடிய பயிரை கண்டு வாடியது, சட்டையை எடுத்தவனுக்கு போர்வையை கொடு, வசுதேவ குடும்பகம்- கடவுள் மறுப்பாளர்கள் இதற்கு எதிராக ஏதேனும் சொல்லி இருக்கிறார்களா? மனதை தொட்டு சொல்லுங்கள். அவர்களும் உங்களை போல் எல்லோரும் இன்புற்றிருக்கவே சொல்கிறார்கள். உங்களிடம் இருந்து மாறுபடும் இடம்-கடவுள் நம்பிக்கை மற்றும் சமயம் சார்ந்த சில நம்பிக்கைகள். அவை சமத்துவ சமுதாய அமைப்புக்கு ஒவ்வாதவை என்று சொல்கிறார்கள். ஒரு சமத்துவ சமுதாய அமைப்புக்கு நீங்கள் உங்கள் கடவுளோடு தாரளமாக வரலாம். சமூக ஒழுங்கின் விதிகளை அனுசரித்து போகும் வரை உங்களை யாரும் கேள்வி கேக்கபோவதில்லை. உங்கள் மற்ற நம்பிக்கைகள் பொது ஒழுங்கை கெடுக்கும் போது விமர்சனம் வரும். டார்வின் கோட்பாடை அமுல்படுத்த மத நம்பிக்கை உள்ளவர்கள் முயலும் போதுதான் சிக்கல் வரும். Discourse-உரையாடல்-அதுவே சமூக ஒழுங்கின் உயிர்நாடி. பேசமாட்டேன் என்று சொல்வது அதிகார திணிப்பு.வேறுபாடுகள் உரையாடல் மூலமே தீர்கப்படவேண்டும். அதிகாரத்தினால் அல்ல.
         நன்றி.

         • //பிரபஞ்சத்தின் ஆற்றல் என்பது அணுக்களின்/பரமாணுக்களின் சிதைவு என்று அறிவியல் கருதுகிறது//

          On the contrary, the Laws of thermodynamics states that Energy can be neither created nor destroyed, it is from a human prespective. Thermodynamics is an axiomatic science whose postulates cannot be demonstrated.
          நீங்கள் சொல்லும் சிதைவு என்பது அணு அழிவதா அல்லது அணு மற்றொன்றாக மாறுவதா?

          இயங்கியல் விதிகளின் படியோ அல்லது அணுக்கள் ஒன்றோடொன்று சேராவோ அல்லது பிரியாவோ அணுக்கள் வேண்டும் இல்லையா? அந்த அணுக்கள் எங்கிருந்து வந்தன?

          //. ஆற்றல் ஜடமாக மாறுவதை தீர்மானமான பரிசோதனை மூலம் இன்னும் நிறுவவில்லை. ஒரு ஊகமாக வைத்துகொள்ளலாம்.//
          அதை நிறுவவும் முடியாது . அதில் தான் பிரபஞ்சம் உருவான புதிர் ஒளிந்திருக்கிறது. இந்த ஊகம் ஒன்றே போதும். தானாக எல்லாம் உருவானது என்பதை தகர்க்க.

          • Thats what they are trying to do in CERN on the Large hadron collider, even then there must be a start up is needed in the collider to cause the subatomic particles to clash, they would not have begun on their own. Apply this same logic to the universe. You simple can’t say that collisons happened on their own.

        • \\ கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என நான் நம்புகிறேன் அவர் இயேசுவாக வந்தார் என்பதை ஒரு கிறிஸ்தவனாக நம்புகிறேன். கடவுள் மறுப்பாளர்களுக்கு டார்வினும் மார்க்ஸும் எங்கல்ஸும் எப்படி முக்கியமோ அதே போல எனக்கு இயேசு கிறிஸ்து முக்கியம். கடவுளை நிராகரிக்க உங்களுக்கு ஆயிரம் காரணம் இருந்தால் அவரை நம்புவதற்கு எனக்கு ஆயிரத்தொரு காரணம் இருக்கும். \\
         நண்பரே.. இயேசுவை வழிபடுபவர்கள் மட்டுமே அவரை கிறித்து என்று நம்புகிறார்கள். இயேசுவோடு உடன் பழகி வாழ்ந்த இயூத மக்கள் யாரும் இயேசுவை கிறித்து என்று நம்பத் தயாராக இல்லை. கிறித்து என்று ஏற்கத்தக்கதான எதையுமே இயேசுவிடம் அந்த மக்கள் காணாததே அதற்குக் காரணம்! இயேசுவை கிறித்துவாக ஆக்க இடைச் சொருகியதே அவரது புதுமைகள் எல்லாம்! ஒன்று தெரியுமா? அக்காலத்தில் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களையே கடவுளை நம்பாத நாத்திகர்கள் என்றுதான் இயூத மக்கள் அழைத்தார்கள். அப்போசுதல்ர் நடபடிகளில் இதை நீங்கள் பார்க்கலாம். கடவுளை நம்பாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் உண்டு என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி! நம்புவதற்கு ஒரேயொரு காரணம்தான். மனிதனின் பயமே அது!

     • பூலோக பாண்டியன் விவாதிக்கும் போது நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். மற்றவர்கள் உங்களை பன்மையில் மரியாதையாக விளிக்கும் போது நீங்கள் ஒருமையில் பேசுவது வேண்டுமென்றே வெறுப்பை கொட்டுவது போல உள்ளது. கருத்துக்களை மற்றவர் ஏற்கச் செய்யும் வண்ணம் மரியாதையாக விவாதிக்கும் பொதுதான் விவாதம் அர்த்தம் உள்ளதாக இருக்கும். மாறாக வார்த்தைகளில் வெறுப்பை காட்டுவது ஒரு வகையில் விவாதிக்க சரக்கில்லை என்பதையே காட்டுகிறது. மாற்றிக் கொள்ளுங்கள். நன்றி

      • நாளைக்கு நரிக்குறவர் வந்து கூட பேசலாம். Slang சாதி ரீதியானது. Sensitive ஆக கையாளவும். இல்லை பிராமனாள் கபே என்று போர்டு மாட்டிவிடவும். இடதுசாரி என்று சொல்ல வெட்கப்படுகிறேன்.

       • என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை நேரடியாக எளிமையாக சொல்லுங்கள்! ஆங்கில வார்த்தை கலந்து பேசுதல், போலியாக அடித்தட்டு மக்களுக்கு பரிந்து பேசுதல்,இடது சாரிக்கு தன்னைத்தானே அத்தாரிட்டியாக அறிவித்தல் இதெல்லாம் நிச்சயமாக நரிக்குறவரில் வராது, பிராமணாள் கபேயில்தான் வரும்.

        • நன்றி வினவு.
         //என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை நேரடியாக எளிமையாக சொல்லுங்கள்//
         உங்களுக்கு புரியாமல் உள்ளதால் நான் மன்னிப்பு கேட்டு விடுகிறேன். புரிதல் சாதிரீதியானது என்ற கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.
         //ஆங்கில வார்த்தை கலந்து பேசுதல்//
         அது இடம் பொருள் ஏவல் சார்ந்தது. மன்னிப்பு கேட்க வேண்டியது இல்லை.
         //போலியாக அடித்தட்டு மக்களுக்கு பரிந்து பேசுதல்//
         ரெண்டு அர்த்தம் இருக்கிற விசயத்துல முதல் அர்த்தமே புரியவில்லை என்றால்- தப்பான இடத்துக்கு வந்துவிட்டேன்-கட்டாயம் மன்னிக்கவும்.
         //இடது சாரிக்கு தன்னைத்தானே அத்தாரிட்டியாக அறிவித்தல் //
         மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்தில் நான் தலையிடுவதில்லை. அப்படி யாரேனும் நினைத்திருந்தால் அது தவறு. நான் வெறும் பாதசாரி.[முன்னைய வரியை பார்க்கவும்]
         //இதெல்லாம் நிச்சயமாக நரிக்குறவரில் வராது, பிராமணாள் கபேயில்தான் வரும்.//
         நரிக்குறவர் நண்பர்கள் மன்னிக்கவும்.உங்களுக்கு அவ்வளவு அறிவு கிடையாது. வாருங்கள் பிராமணாள் கபேயில் டேபிள் துடைக்க போவோம்.

 28. //பரிணாமம் என்பது உயிரியல் கோட்பாடு. ஜடப்பொருளுக்கு சிதைவு கோட்ப்பாடு. மாத்தி போட்டு குழப்பிகிடாதீங்க//
  எப்படி சார் எல்லாமே வெறும் உயிரியல் மற்றும் வேதியியல் மூலக்கூறுகள் தானே உயிர் உள்ள பொருள் ஜடப்பொருள் என்பதை எப்படி வேறுபடுத்துகிறீர்கள். உயிர் என்ற ஒன்றின் மூலக்கூறு வாய்ப்பாடு தெரியுமா? அப்படி அறிவியலுக்கு தெரியும் என்றால் ஒருவன் இறந்த பின் அந்த மூலக்கூறுகளை செலுத்தி உயிரடைய செய்யலாமே.

 29. //சட்டைப்பையில் ஆணிகளோடு திரிபவர்கள் இன்று நிறைய. எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும். அப்படியென்றால் regression analysis படி பின்னோக்கி சென்றால் ஒரு காலத்தில் ஆணியோடு யாரும் இல்லை என்று ஆகும். தேவன் காலத்தில் ஆணிகள் புழக்கத்தில் இருந்தன. அதற்கு முன்னால் பழைய ஏற்பாடு காலம் போனால் ஆணி இல்லையோ!!!//

  இந்த விதண்டாவாதம் எல்லாம் வேணாம் என்ன.

 30. //இயற்கையின் நீட்சியாக நாம் என்றும் இருக்கிறோம். மனித வாழ்வு முடிந்த பிறகு நாம் மனிதன் எனப்படும் சிந்தனை அடங்கிய வாழ்வை மட்டுமே முடித்துக் கொள்கிறோமே அன்றி நமது உடல் சிதைவடைந்து வேறு ஒரு பொருளாக மாறுகிறது. அந்த பொருள் பிறிதொரு காலத்தில் வேறு தன்மை கொண்ட பொருளாக மாறும். ஆகவே இயற்கை அல்லது பருப்பொருள் என்ற அளவில் நாம் என்றும் மரணிப்பதில்லை. ஆனால் இந்த உண்மையை மனிதனாக இருக்கும் போது மட்டும் உணர்கிறோம். மற்ற பொருட்கள் அப்படி உணர முடியாது. அந்த வகையில் இயற்கை தன்னைத்தானே உணரும் உன்னத பொருள் என்று மனித மூளையைச் சொல்லலாம்.//

  இது உங்கள் தளத்தில் வேறொரு கேள்வி பதில் பகுதியில் வாசித்தது.
  மனித சிந்தனை அடங்கிய வாழ்வை முடித்து கொள்கிறோம் என்கிறீர்கள். முடித்துக்கொள்ள என்ற சொல் தவறானதாகும். முடித்துக்கொள்ள முடிவெடுக்க வேண்டும் அல்லவா? அப்படி எந்த மனுஷன் “தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் தவிர்த்து” முடித்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள் சொல்லுங்கள்?
  உடல் வேறு ஒரு பொருள் ஆக போவதில்லை வெறும் மண்ணோடு மண்ணாகிறது அல்லது சாம்பலாகி விடுகிறது. அது என்ன என்றும் மரணிப்பதில்லை என்று ஒரு மார்க்கண்டேய ஆசை?
  உன்னத பொருளான மூளையும் கூட மண்ணோடு மண்ணாகி தான் சார் போகும்.

 31. ஏசு விரைந்து வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு மேல் ஓடிப்போய்விட்டது. இன்னும் வந்துக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை பரலோகத்திலிருந்து மாட்டு வண்டியில் வருகிறாரோ என்னவோ. தன்னையே சிலுவயிலிருந்து காப்பாற்றி கொள்ள முடியாதவர் உலகை காக்க வருகிறாராம். சுத்த மடத்தனம்…

  • \\ஏசு விரைந்து வருவார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு மேல் ஓடிப்போய்விட்டது. இன்னும் வந்துக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை பரலோகத்திலிருந்து மாட்டு வண்டியில் வருகிறாரோ என்னவோ. தன்னையே சிலுவயிலிருந்து காப்பாற்றி கொள்ள முடியாதவர் உலகை காக்க வருகிறாராம். சுத்த மடத்தனம்…\\
   கொல்கொதா மலையில் இயேசு சிலுவையில் நிறுத்தப்பட்ட போதே இதே கேள்வி இயேசுவைப் பார்த்துக் கேட்கப்பட்டது! அந்தக் கேள்வி இன்று வரையும் தொடர்கிறது. பதில்தான் இதுவரை அவர்களிடமிருந்து வந்தபாடில்லை. இயேசு எளியோருக்காக மட்டுமே பேசியவர். முதன்மையாக கடவுளின் நியாயப் பிரமாணங்களை எதிர்த்து அதைச் செய்தும் காட்டியவர். கடவுளுக்கு எதிரானவர்.
   உங்கள் மோயீசன், எருசலேம் தேவாலயத்தை இடிக்க வேண்டும், உங்கள் நியாயப் பிரமாணங்கள் என்றே அடிக்கடி உச்சரித்தவர், பணக்காரர்களை வெறுத்தவர். இயேசுவே பொதுவுடமையாளரான ஆரம்ப நிலை கம்யூனிஸ்ட்! மட்டுமல்ல.. இயேசு ஒரு நாத்திகரும் கூட! அவர் கடவுளுக்கு எதிரானவர்! அந்த நேரத்தில் அவர் நினைத்திருக்க மாட்டார், நம்மை ஏற்றுக் கொண்டவர்களே பிற்காலத்தில் நம்மை பூசைப் பொருளான கையாலாகாதக் கடவுளாக மாற்றி நம்மைக் கேவலப்படுத்துவார்கள் என்று! ஆம். இயேசுவுக்கு முதல் எதிரிகளே… இப்போதுள்ள கிறித்தவர்கள்தான்! இவர்களே இயேசுவைக் கேவலப் படுத்தவும், அவரது கொள்கைக்கு எதிராக நடந்து அவரை மற்றவர்கள் தூற்றவும் இந்தக் கிறித்தவர்களே காரணம்!

 32. சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டு போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது. கோபித்து கொள்ளாதீர்கள், பைபிளிலேயே அப்படி தான் போட்டிருக்கிறது. நீங்க கிறிஸ்தவத்தை பற்றி துஷிக்கும் காரியங்க்களை விட இது ஒண்ணும் பெரிதல்ல. கிறிஸ்தவத்தை புரிந்து கொள்ளாமல் உளறுபவர்களுக்கு அது பைத்தியக்காரத்தனமாக தான் இருக்கும்.

 33. பரலோகத்திலிருக்கும் பிதாவே! இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமலிருக்கிரார்கள்! இவர்களை மன்னித்தருளும்- வேறு என்ன சொல்வது? பண்க்காரனுக்கும், பதவியிலுள்ளவனுக்கும் பரிவட்டம் கட்டவே இந்துமதம் உள்ளது! சீர்திருத்த மதங்களாக வந்தவையும், மூட கருகத்துக்களையே விதைக்கிறது! சுடும்நெருப்பா, கொதிக்கும் எண்ணையா எதில் விழலாம்? மதமான பேய் என்னை பிடியாதிருக்க வேண்டும் என்ற வள்ளலாரை பின்பற்றலாமே! மனிதனைநினை மற்றவை மற என்ற பெரியாரை பின்பற்றலாமே!

  • ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்கள்-மூடர்களின் சிறைச்சாலைகள். புதிதாக எழுத ஆண்மையற்றவர்கள்[மன்னிக்கவும்].
   பைபிள்,குரான், பகவத் கீதை: புது எடிசன் போடச் சொன்னா கீதைக்கு பார்ப்பான் போட்டுவிடுவான். மத்தவன் போடா மாட்டான்.வேதத்துக்கு உபநிடத நோட்ஸ் போட்டு பின்னர் அதுக்கும் ஒரு கோனார் நோட்ஸ்[கீதை] போட்டு-ஏமாற்றி பிழைக்க எத்தனை நோட்ஸ்/எடிசன் வேண்டுமானாலும் புதுசாக போடுவான்.
   வள்ளலாரின் அருட்பாவை மருட்பா என்று சண்டை கட்டிய ஆறுமுக வெள்ளாளன் தான் உண்மையான தமிழன். சிவனையும் சாதியையும் கண்டுபிடித்த உண்மையான தமிழன். சமரசம்-சுத்தம்-சன்மார்க்கம்-சைவம்: இதில் சைவம் தவிர மற்றதை உயிர் உள்ளவரை வெள்ளாளன் எதிர்ப்பான்.[இரண்டு நாள் முன்பு ஒரு டிவி பேட்டியில் சந்தடி சாக்கில் ஒரு நவீன சீரியல் நடிகை தான் ஒரு சைவ வெள்ளாளர் என்றும் சிவன் தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் சொன்ன போது அதிர்ச்சியாக இல்லை.] பாவம் பார்பான்.

 34. @Joseph

  ஒரு வேளை கடவுள் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். அவருக்குக் முக்காலமும் தெரியும் .

  அதாவது அடுத்து நான் என்ன செய்ய போகிறேன் என்பது முன் கூட்டியே இறைவனுக்கு தெரியும்.

  இப்போது நான் ஒரு குற்றம்(கர்பலிப்பு ) செய்ய போவதாக வைத்துக்கொள்வோம்.

  நான் குற்றம் செய்தாள் அது இறைவன் நினைத்தபடி செய்துள்ளதாக அர்த்தம். அப்படி இறைவன் விதித்த்தை செய்ததற்கு எனக்கு எப்படி தண்டனை தரலாம்.

  இல்லை நான் குற்றம் செய்வேனா
  இல்லையா என்பது இறைவனுக்கு தெரியாது என்றால் அது இறைவனே அல்ல சரிதானே

  • கடவுள் ஏன் நான் தவறு செய்வதை தடுக்க முன்வரவில்லை என கேட்பது சிறுபிள்ளைதானமாக உள்ளது. கடவுள் உங்களை தடுத்தால் நீங்கள் வெறும் சிந்தனையற்ற ரோபோவாக தான் இருப்பீர்கள், உங்களுக்கும் ஒரு கம்ப்யூட்டருக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனலாம். மனிதனின் உள்ளான ஆன்மா தனது முடிவுகளை தீர்மானிக்கும் வகையில் தான் கடவுளால் படைக்கப்பட்டது. கடவுளுக்கு அது தெரியுமா தெரியாதா என்பதெல்லாம் எனக்கு தெரியாது சார். எத்தனையோ மர்மங்களில் அதுவும் ஒன்று. எப்படி இந்த அண்ட சராசரங்களின் புதிர்கள் பல இன்னும் விடுபடாமல் உள்ளதோ அது போல இதுவும் ஒரு புதிர் தான்.

   • மர்மமான குகையில் மர்மமாக அமர்ந்திருக்கும் எங்கள் பரமபிதாவே உனக்குத் தெரியுமா தெரியாதா என்று தனக்குத் தெரியாது என உன் ஆற்றல் மீதான நம்பிக்கையிலிருந்து சற்று இடறி கூறிவிட்டார் இந்த யாகோபு சாரி ஜோசப்பு அவரை மன்னித்தருளும். ஆமென்.

    • அய்யோ ரொம்பத்தேன்…
     எனது அறிவின், புரிந்துகொள்ளுதலின் குறைவை தான் நான் சொன்னேன். கடவுளின் மேல் உள்ள நம்பிக்கையில் எனக்கு எந்த அவ நம்பிக்கையும் இல்லை. கடவுளின் எண்ணங்க்களை அறிந்தவன், உணர்ந்தவன் யார். இந்த அண்ட சராசரத்திலேயே புரிந்துகொள்ள முடியாத பல புதிர்கள் இருக்கும் பொது அவற்றை படைத்தவரின் காரியங்க்களை முழுவதுமாக எப்படி அறிந்து கொள்ள முடியும்.

     • //எனது அறிவின், புரிந்துகொள்ளுதலின் குறைவை தான் நான் சொன்னேன்.//

      கடவுள் நம்பிக்கைக்கு அறிவெல்லாம் வேலை செய்ய வேண்டுமா 🙂 அது அதையும் தாண்டி புனிதமானது.

      கடவுளுக்கு இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என முக்காலமும் தெரிந்தவன் என அடித்து கூறுவதுதான் ஆழ்ந்த, எஃகு போன்ற உறுதியான நம்பிக்கை. தெரியுமோ தெரியாதோ என மதில் மேல் பூனை போல் விழிப்பது அவநம்பிக்கைதான். எனவே எதற்கும் ஒரு பாவமன்னிப்பை கேட்டுக்கொள்ளுங்களேன். படைத்தல், காத்தல், அழித்தல், உட்கார்ந்திருத்தல், பறத்தல், பார்த்தல், விளித்தல், தண்டித்தல் என தனது காரியங்களை கடவுள்தான் விளக்கமாக எல்லா புஸ்தகத்திலேயும் கூறியிருக்கிறாரே.

 35. @Joseph
  என்னை படைக்கும் போதே இறைவனுக்கு நான் நல்லவனா கேட்டவணா என்பது தெரியாது. அது நான் இறக்கும் போதுதான் அவர் கண்டுபிட்கிறார் ஆகவே அவருக்கு எதிர்காலத்தில் நான் என்ன செய்யப்போகிறான் என்பது தெரியாது

  ஒரு ஆறுமாதத குழந்தை இறந்துவிட்டது என்றால் இறைவன் சொர்ககம் தருவானா இல்லை நரகம் தருவானா ? சொர்ககம் தருவான் என்றால் உங்கள் குழந்தையை வழி அனுப்பி வைப்பீரா ?

 36. கடவுள் மறுப்பாளர்கள் புதிது புதிதாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்களும் உங்கள் கருத்துகளை புதிதாக எழுதலாம். பைபிள் மீது உங்கள் வாசிப்பை பற்றி எழுதலாம். புதிய கோணத்தில் இருந்தால் உங்கள் கருத்துகள் வரவேற்கப்படும் தானே. அடுத்தவர் சொல்வதை விடுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உலகில் மக்கள் அனைவரும் சமம் என்று கருதுகிறீர்களா? ஒருத்தொருக்கொருத்தர் சமாதானமாக இருக்க வேண்டுமா? மனித உறவுகள் அன்பினால் அன்றி அதிகாரத்தால் கட்டப்படக்கூடாது என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஒரு கம்யுனிசவாதியே. வேறு பேர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
  குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளை பிடுங்குவது மனிதாபிமானமல்ல. எனவே நாங்கள் குழந்தைகளிடம் மதம் பற்றிய துர்போதனைகளை செய்வது இல்லை. வளர்ந்தவர்களிடம் மட்டுமே பேசுகிறோம். அதுவும் கூடாதென்றால் எங்களை வேறு கிரகத்துக்கு கடத்திவிடுங்கள் நண்பரே.

 37. @Joseph

  இறைவன் படைத்தான் என்றால் நல்லவர்களை மட்டும் உருவாக்கலாமே ? எங்காவது பழுதான கார்கலை உற்பத்தி செய்வார்களா ? ஊனமான குழந்தைகள் பிறப்பது ஏனோ ?

  ஒரு பூமியை படைக்க பதினாறு நாட்கள் தேவைப்பட்டால் ஒரு கேளாக்ஸியை உருவாக்க எத்துணை நாள் , கோடி கோடி கேளாக்ஸியை உருவாக்க எத்துணை நாள் ? இத்துணை கலாக்ஸிகள் படைத்தும் ஒரே ஒரு பூமியைத்தான் உறுப்படியாக படைத்திருப்பது ஏனோ ?

  பூமிக்கு வந்ததுதான் வந்தார் அதுவும் ஒரு suicide mission. அப்படிப்பட்ட ஒரு பூமி பயணத்தில் ஒரு புத்தகம் கூட எழுதவில்லையே. சரி பூலோக அறிவாவது தந்தாரா ? டைநோசர்களை படைத்துவிட்டு அழித்தது ஏன் ? ஹாபீ யா ?

  • கடவுளை அறிய ஊனம் ஒரு தடை அல்ல. அமெரிக்காவில் வாழ்ந்த Fanny crosby என்ற பெண்மணி 95 ஆண்டு காலம் உயிரோடு இருந்தார்கள் இதில் கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் பார்வையற்று இருந்தாலும் கடவுள் மேல் கொண்ட பற்றை விட்டுவிடவில்லை. கிட்டத்தட்ட 8000 பாடல்களை எழுதியுள்ளார்கள். இப்படி கடவுளை ஒற்றி வாழ்ந்த பல அடியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது கடவுள் மறுப்பாளர்களுக்கு ஏளனமாக தெரியலாம் ஆனால் இது நடந்த உண்மை. இறைபக்தி மற்றும் அதன் சாராம்ஸங்கள் ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட அனுபவம். அதை இல்லை அல்லது போலி என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மனிதன் கண்டுபிடித்த அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் வெடிக்க செய்தால் உலகம் ஒரு நொடியில் பஸ்பமாகி விடும் அழிப்பதற்கே ஒரு சில வினாடிகள் ஆகும் பொது ஆக்குவதற்கு மனிதனுக்கு மேல் உள்ள சக்திக்கு சில வினாடிகளே ஆகியிருக்கும்.

   • @Joseph

    கேள்வி புரிந்தாலும் புரியாத மாதிரி நடிப்பது ஏனோ ?
    கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் தெரியாது என்று சொல்லவும், அரை பக்கத்திற்கு மழுப்ப வேண்டாம் .

    படைக்கும் போதே நல்லவர்களை, ஊனம் அற்றவர்களை மட்டும் படைக்கலாமே?

    • //படைக்கும் போதே நல்லவர்களை, ஊனம் அற்றவர்களை மட்டும் படைக்கலாமே?//

     எல்லாம் கிடைத்துவிட்டால் கடவுளை மறந்துவிடுகிறார்கள் அதனால்தான் தெரிந்தேதான் கடவுள் குறையாக ஏற்றத்தாழ்வாக படைத்திருக்கிறார் இல்லையா ஜோசப்பு.

   • மனிதன் கண்டுபிடித்த அனுகுண்டு??? கடவுள் தானே மனிதனை படைத்தார். அப்போது அவரால் படைக்கப்பட்ட மனிதன் அனுகுண்டு கண்டுபிடித்து கோடிக்கணக்கான மக்களை ‘தன் குழந்தைகளை கொல்லாமல் கடவுள் தடுக்கலாமே. அந்த அளவுக்கு கூடவா ஆண்மையற்றவர் உங்கள் முட்டாள் கடவுள்??? பிரச்சனை என்னவென்றால் கடவுள்தான் படைப்பவர் என்று நம்புவதுதான். பிறகு தீமைக்கெல்லாம் சாத்தானை காரணமாக்குகிறீர்கள். உங்கள் முட்டாள்தனம் முடிவற்றது. why Iam not a christian என்ற நூலைப்படித்து தெளிவு பெறுங்கள்…

    • A Fool says in his heart that there is no God. Your science has not found answers to great mysteries in this universe, your science cannot stand against nature’s fury, your science cannot accurately predict destruction. Brother, I too can tell a lot of books exposing the follies and idiocies of atheists.
     Did your father prevent every mischief and wrong things you did. There are many times when man has to pay for his highhandedness. Why blame God?

     • ஒன்றுமே இல்லாத ஒன்றில் ! இருந்து ஆற்றல் உருவானது அதில் இருந்து இது உருவானது , இது உருவானது என்பதை பக்கத்தில் இருந்து பார்த்ததை (கடவுள் மட்டும் உலகத்தை படைத்ததை பார்த்தீர்களா என கேட்பதை போல தான்) போல் கூறும் நாத்திகமும் முட்டாள்தனம் தான்.
      Evolution is Just a hypothesis and no one can demonstrate evolution.

      • நான் வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தேன், திடீரென என் முன் ஒரு அழகான வீடு தோன்றியது என ஒருத்தன் சொன்னால் அது எப்படி பைத்தியக்காரத்தனமாக இருக்குமோ அதே போல் தான் தானாக எந்த ஆக்கியோனும் இல்லாமல் இந்த பறந்து விரிந்த அண்டம் தோன்றியது என்பதும் இருக்கும்.
       There cannot be so much of permutations and combinations that would have gone right to make so many symmetries and other wonders of this earth. A perfect system would have started from a perfect point and there is a supreme being to begin the genesis of the universe.

 38. தானே ‘புதிர்’ என்று சொல்லுவதை நம்புகிறேன் என்று சொல்லும் ஜோஸஃப் என்பதை (தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது,மரியாதையாகத் தான் குறிப்பிடுகிறேன் ) மனித ஜீவனாக எப்படிக் கருத முடியும்!

  • நீங்கள் மனிதனாக கருதவேண்டும் என யாரும் அழவில்லை. நீங்கள் தூக்கி பிடிக்கும் அறிவியலே பல புதிர்களுக்கு விடை காண முடியாமல் இருக்கும்போது உலகை இயங்க செய்யும் இறைவனை மட்டும் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியுமா?

 39. @Joseph
  பூமிக்கு வந்ததுதான் வந்தார் அதுவும் ஒரு suicide mission. அப்படிப்பட்ட ஒரு பூமி பயணத்தில் ஒரு புத்தகம் கூட எழுதவில்லையே.

 40. // இயங்கியல் விதிகளின் படியோ அல்லது அணுக்கள் ஒன்றோடொன்று சேராவோ அல்லது பிரியாவோ அணுக்கள் வேண்டும் இல்லையா? அந்த அணுக்கள் எங்கிருந்து வந்தன? //

  இறைவனின் கைகளில் இருந்து வந்து கொண்டு இருகின்றன.

  அது சரி ஏன் இறைவன் அணுக்களை உருவாக்கி , கோள்களை உருவாக்கி , உய்ரிகளை உருவாக்கி கொண்டு இருக்கிறான் . பேசாமல் தூங்க வேண்டியது தானே ? மனிதர்களை உருவாக்கி சுதந்திரம் கொடுத்த பிறகு , அப்படி செய்யாதே இப்படி செய்யாதே என்று கட்டளைகள். அதையும் சரியாக எழுதி வைக்காமல் போய்விட்டார்.

  அவர் படைத்த பூமிக்கு அவர் கர்ப்பப்பையின் வழியாகவே வர முடிகிறது. ஒரு வேளை Inter Galatic Highway அங்கு இருக்கிறதோ என்னவோ ? இதில் மக்களை ஒரு புதிரில் வைத்து என்ன மகிழ்ச்சி கொள்கிறாரோ ?

  இப்படி உய்ரிகளை படைத்தது ஒட்டு கேட்டு கொண்டு இருப்பதை விட வேற வேலை இல்லையா ?

  • ஏன் சார் மனிதன் மட்டும் தான் உருவாக்கும் கணிணிக்கு ஏகப்பட்ட கட்டளைகளை கொடுக்கிறான்?இவ்வளவு ஏன் நாம் பெறும் பிள்ளைகளை அப்படியே விட்டுவிடுக்கிறோமா? அதை செய் இதை செய் என சொல்லிக்கொண்டு தானே இருக்கிறோம்.

   • Humans have never given Freedom to think and act for a computer.
    Without commands computer is nothing. And you are comparing it with humans?

    Little use of logical side of the brain will be appreciated

 41. கடவுள் மனிதனுக்கு அவமரியாதை. கடவுளே முதல் பாவி. ஆறு நாட்களில் உலகை படைத்த கடவுள் ஏழாம் நாள் தூங்கப்போய் விட்டார். பிறகு ஒரு போதும் விழித்துக்கொள்ளவில்லை போலும். ஆகவேதான் மதங்கள் என்னும் வக்கிரங்கள் வேர் விட்டு கிளைப்பரப்பி வளர்ந்து விட்டன…