privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மோடியின் உத்தர்கண்ட் சாதனை ஒரு விளம்பரச் சதி !

மோடியின் உத்தர்கண்ட் சாதனை ஒரு விளம்பரச் சதி !

-

மோடியின் இமாலாய ஜாலம்.

த்தர்கண்டிலும், இமாச்சல் பிரதேசத்திலும் நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் நாடே அதிர்ந்து போயிருந்த நேரத்தில், ஜூன் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சில அதிகாரிகளுடன் டெஹ்ராடூனில் வந்து இறங்கினார். ஞாயிற்றுக் கிழமைக்குள் உத்தர்கண்ட் அழிவுகளில் சிக்கியிருந்த 15,000 குஜராத்திகளை மீட்டு அவரவர் வீடுகளுக்கு மோடி அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்பட்டது.

இமாலய ஜாலம்
மோடியின் இமாலய ஜாலம்

இந்த ஜாலம் ஊடங்களில் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது. இந்தியாவின் முழு ராணுவ அமைப்பும் 40,000 பேரை மீட்பதற்கு 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் இது எப்படி சாத்தியமானது?

மோடி 80 இன்னோவா கார்களை பயன்படுத்தி இந்த சாதனையை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன. அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் வழியாக, நிலச் சரிவுகளால் தடுக்கப்பட்ட இடங்களைத் தாண்டி இந்த கார்கள் எப்படி கேதார்நாத் போன்ற பகுதிகளை அடைந்தன?

மோடியின் இன்னோவாக்களுக்கு சிறகுகளும் ஹெலிகாப்டர் போல விசிறிகளும் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். ஓட்டுனரையும் சேர்த்து ஒரு இன்னோவாவில் 7 பேர் பயணம் செய்யலாம். நெருக்கடியான நிலைமையில் 9 பேர் வரை அதில் திணிக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 80 இன்னோவாக்கள் ஒரே நேரத்தில் 720 பேரை டெஹ்ராடூனுக்கு அழைத்து வர முடியும். 15,000 பேரை மீட்டு வருவதற்கு இந்த கார்களின் பேரணி 21 தடவை போய் வந்திருக்க வேண்டும்.

டெஹ்ராடூனுக்கும் கேதார்நாத்துக்கும் இடையிலான தூரம் 221 கிலோமீட்டர். 21 தடவை போய் வருவதற்கு ஒரு இன்னோவா கிட்டத்த 9300 கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்க வேண்டும். சமவெளியை விட மலைப்பகுதிகளில் மெதுவாகவே பயணிக்க முடியும். சராசரி வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர் என்று வைத்துக் கொண்டால், ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஓட்டியிருந்தால், ஆட்களை ஏற்றி இறக்குவதற்கான நேரத்தை சேர்க்காமல், பாதிக்கப்பட்ட மக்களை தேடுவதற்கான நேரத்தை சேர்க்காமல் இந்த சாதனையை செய்து முடிக்க 233 மணி நேரம் ஆகியிருக்கும்.

அதாவது, அப்படி உழைத்திருந்தால் 10 நாட்களில் இந்த சாதனையை முடித்திருக்கலாம். ஆனால், மோடி ஒரே நாளில் அதை சாதித்தார்.

உண்மையில் ஒரு நாளை விட குறைவான நேரத்தில் சாதித்தார். சனிக்கிழமை வாக்கில் 25 சொகுசு பேருந்துகளில் குஜராத்திகள் டெல்லி வந்து சேர்ந்ததாக ஊடகங்கள் மூச்சு விட மறந்து செய்தி வெளியிட்டன. வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக நான்கு போயிங் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனவாம்.

எப்போதுமே அடக்கமானவரான மோடி 15,000 குஜராத்திகளை இமாலய பேரழிவிலிருந்து ஒரே நாளில் மீட்டதாக தானே சொல்லவில்லை. தயாராக காத்திருந்த ஊடகங்களுக்கு இதை வீசி எறிந்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்கோ வேர்ல்ட்வைட் என்ற விளம்பர நிறுவனமாக இருக்கலாம். துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகளை ஊதிப் பெருக்குவதற்காக என்று மாதம் $25,000 (சுமார் ரூ 12 லட்சம்) செலவில் 2007-ம் ஆண்டு ஆப்கோ வேலைக்கமர்த்தப்பட்டது. ஆனால் நடைமுறையில் அது மோடியின் பிம்பத்திற்கு மெருகேற்றும் வேலையை செய்து வருகிறது.

கசகஸ்தானின் சர்வாதிகாரி நூர்சுல்தான் நசர்பேவ், மலேசிய மற்றும் இஸ்ரேல் அரசுகள், அமெரிக்க சிகரெட் லாபி என்று பல பிரசித்தி பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மோடிக்கு முன்பே ஆப்கோ சேவை செய்து வந்தது. அமெரிக்க சிகரெட் துறைக்காக, புகையிலை புற்றுநோயை உருவாக்குகிறது என்ற ஆதாரங்களை தாக்கும் அமைப்புகளை அது உருவாக்கியது. அஜர்பைஜான், துருக்மெனிஸ்தான் அரசுகள், நைஜீரிய சர்வாதிகாரி சானி அபாச்சா ஆகியோருக்கும் அப்கோ வேலை செய்து வந்தது.

அதன் சக்தி வாய்ந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு அதிகாரிகளான இடாமர் ராபினோவிச், ஷிமோன் ஸ்டெய்ன் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையில் மிக உயர் மட்டத்தில் இருக்கும் டோரோன் பெர்கர்பெஸ்ட்-ஐலோ ஆகியோர் உள்ளனர்.

மோடியின் புத்துருவாக்கத்துக்கும் ஒளிவட்ட பிரச்சாரங்களுக்கும் ஆப்கோதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆப்கோவிற்கு முன்பு துடிப்பான குஜராத் உச்சி மாநாடுகள் அவ்வளவு சூடு பிடிக்கவில்லை. முதல் மூன்று உச்சி மாநாடுகளில் $14 பில்லியன் முதல் $150 பில்லியன் முதலீட்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆப்கோவிற்கு பிறகு 2009-லும், 2011-லும் அது $253 பில்லியன், $450 பில்லியன் என்று உயர்ந்தது.

அமெரிக்காவின் முதலீட்டாளர்களை வளைத்துப் போட ஆப்கோ தீயாக வேலை செய்தது. மோடி அமெரிக்காவிற்கு போவதற்கு இருந்த தடையை நீக்கும்படி வாஷிங்டன் அரசியல்வாதிகளிடமும் அது பிரச்சாரம் செய்தது. 2002-ம் ஆண்டு அவரது நிர்வாகத்தின் கீழ் நடந்த முஸ்லீம்கள் படுகொலையை அடுத்து அந்த தடை செயல்படுத்தப்பட்டது. இதுவரை, மோடிக்கு அமெரிக்க விசா வாங்கித் தருவதில் ஆப்கோ வெற்றியடையவில்லை.

துடிப்பான குஜராத் புள்ளிவிபரங்கள் எல்லாம் வெத்து வேட்டுகள்தான். மோடியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிங்ஷூக் நாக் செய்த ஆய்வின்படி 2009-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 3.2% மட்டுமே வந்து சேர்ந்தது. 2011-ம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட தொகையில் 0.5% மட்டுமே உண்மை.

ராம்போ மோடி
ராம்போ மோடி

ஆனால், ஆப்கோ இருந்தால்தான் மோடி பொய் சொல்ல முடியும் என்பதில்லை. 2005-ம் ஆண்டு மாநில அரசுக்கு சொந்தமான ஜிஎஸ்பிசி இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பை நடத்தியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆந்திராவின் கடற்கரை பகுதியில் $5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதே பகுதியில் ரிலையன்சின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட இது 40% அதிகம். எகிப்து, ஏமன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அகழ்வு பணிகளை கைப்பற்றுமாறு மோடி ஜிஎஸ்பிசியை ஊக்குவித்தார்.

மோடியின் அறிவிப்பு வெத்து வேட்டு என்று பலர் சந்தேகித்தார்கள். ஆனால் போதுமான தடயங்கள் இல்லாமல் அப்படி சொல்ல முடியாமல் இருந்தது. 2012-ம் ஆண்டில் எரிசக்தி கண்டுபிடிப்புகளை சரி பார்த்து, உறுதி செய்யும் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன்களுக்கான இயக்குனரகம், மோடி அறிவித்ததில் 10% மட்டுமே உண்மை, அதாவது 2 லட்சம் கோடி கன மீட்டர் வாயு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அதுவும் அகழ்ந்து எடுப்பதற்கு சிரமமான பகுதியில் உள்ளது என்றும் முடிவு செய்தது.

இதற்கிடையில் மோடியின் உற்சாகமான தலைமையின் கீழ் ஜிஎஸ்பிசி அகழ்வு நடவடிக்கைகளுக்கு $200 கோடியை செலவிட்டது. அதில் பெருமளவு 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு உள்ளது என்ற அடிப்படையில் வாங்கிய கடன். வாயு மறைந்ததும் ஜிஎஸ்பிசியும் திவால் ஆனது.

அதை காப்பாற்றுவதற்கு, நகர எரிவாயு வினியோகம் போன்ற துறைகளில் நுழையும்படி அதனை மோடி ஊக்குவித்தார். இதிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, அவற்றில் ஒன்று பார்படோசில் உள்ள ஒரு நிழலான நிறுவனத்துடனான ஒப்பந்தம்.

ஒவ்வொரு துறையிலும் மோடியின் கதை முழுவதும் சவடால்களும் ஆரவாரமும் நிறைந்திருக்கிறது. ஆனால், அவரது சமீபத்திய இமாலய ஜாலம் அப்பட்டமான, கலப்படமற்ற பொய்.

நன்றி: – அபீக் பர்மன், டைம்ஸ் ஆஃப் இந்தியா

  1. ஒரு கூட்டம் மோடிக்கு ஆதரவு கொடுத்தாலும், இது போன்ற ஒரு கூட்டம் மோடி என்ன செய்தாலும் அதை பாராட்ட மனமில்லாமல், அவரின் மேல் கரி பூச நினைக்கின்றது…மோடி மத்த முதல்வர்கள் மாதிரி ஜாலியா வேடிக்கைப்பார்த்துக்கொண்டிராமல் ஏன் உத்ரகண்ட் செல்ல வேண்டும்…அங்கு போய் பெருவாரியான மக்களினைக்காப்பாற்ற வேண்டும்……ஏன் மன்மோகன், சோனியா போல வானத்தில் 10நிமிடம் பறந்து அனைத்து பாதிப்புகளையும் பார்வையிட்டிருக்கலாமே…அல்லது ராகூல் காந்தி போல வெளினாடு சுற்றுலா சென்றிருக்கலாமே….இந்த நாலு விசயம் நல்லது செய்கிறார்…அதை ஒன்னுமே செய்யாத பலர் விமர்சிக்கின்றார்….அதற்க்குக்காரணம் வேற ஒன்னும் இல்லை………………ப ய ம்….மோடி பாரதப்பிரதம்ர் ஆகிவிடுவாரோ என்ற பயம்..அதான் சேற்றினை வாறித்தூற்றத்துவங்கி விட்டனர்….

    • //…மோடி மத்த முதல்வர்கள் மாதிரி ஜாலியா வேடிக்கைப்பார்த்துக்கொண்டிராமல் ஏன் உத்ரகண்ட் செல்ல வேண்டும்//

      சொந்த மாநிலமக்கள் கொல்லப்பட்டபோது இவர் கோமாவில் இருந்தாரா, எல்லாம் அரசியல் பாஸ். ஆட்சியில் இருக்கும்போது மீண்டும் ஆட்சிக்கு வரணுமின்னா பயங்காட்டனும், ஆட்சியில இல்லாதபோது பதவிக்கு வரணுமின்னா இதுபோல சில போக்குமாக்குகள செய்யனும். இது பாசிஸ்டுகளின் உத்தி. ஹிட்லர் முதல் ராஜபக்சே வரை உதாரணங்கள் ஏராளம்

      • சொந்த நாட்டு மக்கள்[தமிழ் மீனவர்கள்] கொல்லப்படும் போது ,மன்மோகன், சோனியா & ராகூல் காந்தி என்ன செய்துகொண்டுஇருக்கிறார்கள்?கோமாவில் இருக்கிறார்களா?

        • ஆமா கோமாவில் தான் இருக்கிறார்கள். இல்லைன்னு யாரும் சொன்னாங்களா?

          மோடியை விமர்சிச்சா ஒடன வந்து சோனியா மட்டும் யோக்கியமான்னு கேக்கற கேணைத்தனத்தை எப்போ நிறுத்துவதா உத்தேசம்?

          எல்லாம் ஒரே மாதிரியான கோமா கேசுதான்.

    • U ppl are NOT uderstanding the impacts of his visit…What difference is his bunch of men and 80 Inniva vans are going to do when the armed forces themseleves are struggling to save people.. Now after his visit and the subsequent Hero proaganda has made the situation worse now every politician wants to travel there so tat they can also get their share of publicity.. just think if all chief ministers go to Uthhrakand with their aideies…. Iam not against anyone visiting or helping people but its the media hype which has created the chaos…

    • பயம்!!! யாருக்கு???… மோடிக்கு… / எப்படியாவது பிரதமர் ஆய்டனும்ங்கிற பயம்… இந்த தடவை பிரதமர் ஆகலைனா, எங்க நம்பளையும் அத்வானி மாதிரி ஓரமா உட்க்கார வச்சுருவாய்ங்களோ அப்டிங்கற பயம்… அடுத்த 5 வருஷத்துள்ள மோடிய விட பெரிய தில்லாலங்கடிய ஒருத்த வரமாட்டான்னு என்ன நிச்சயம்…

      • பயம் 1
        =======
        மோடியை தேர்தல் குழுப் பொறுப்பாளராக்கியவுடன், அத்வானிக்குக்கோபம் வந்தது ஏன் என்றால் பிரதம்ராக இதுதான் கடைசி வாய்ப்பு, அதில் மோடி வந்து விட்டால் என்னசெய்வது என்ற பயம்…(சரி விடுங்க அத்வானிஜீய ஜனாதிபதி ஆக்கிறலாம்)..

        பயம் 2-
        =======
        னிதீஸ் குமாருக்கு வந்ததே பாருங்க ஒரு பயம்…இந்த பயம் தான் காமிடி…அந்தாளெல்லாம் பிரதம்ர் கனவு காண்கிறார்..

        பயம் 3-
        =======

        னம்ம காங்கிரஸ்ல ஒரு ஓட்ட வாயன் இருக்கிறானே…அட அவம்பேரு மறந்து போச்சே …ஆங் திக்கு விசய் சிங்கு….திக்குத்தெரியாம பேசுவதில் இவர் தான்நம்பர் 1 ….திக்குக்கு வந்த பயம் தான் மரண காமிடி..

        திக்கு சொல்றான் மோடி தேர்தல் குழுப் பொறுப்பாளராக ஆனது பிஜேப்பியின் வளர்ச்சியினை பாதிக்குமாம்…அண்ணனுக்கு பிஜேப்பியின் மேல் எவ்வளவு பாசம் பாருங்கள்…இது பாசமா பயமா???

        பயம் 4, 5, 6, 7, 8, 9………-
        =======

        அப்புறம் தீவிரவாதிகளுக்கு…வினவுக்கு….இன்னும் பல கோஸ்டிகளுக்கு..

        • //மோடியை தேர்தல் குழுப் பொறுப்பாளராக்கியவுடன், அத்வானிக்குக்கோபம் வந்தது ஏன் என்றால் பிரதம்ராக இதுதான் கடைசி வாய்ப்பு, அதில் மோடி வந்து விட்டால் என்னசெய்வது என்ற பயம்//

          பாஜகவுல மோடிக்கு ஒரு கொள்கை அத்வானிக்கு ஒரு கொள்கையா என்னமா சீன் போடுறீங்கய்யா. வயசான காலத்துல அத்துவானி வந்துட்டுப் போறாருன்னு வுடறது. எல்லா மட்டையும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கதான். எல்லா கட்சிலயும் கோஷ்டிப் பூசல் உண்டு. இதுல பாஜகவும் விதிவிலக்கல்ல என்பதற்கு எடியூர்ப்பா , அத்வானிஜி நல்ல எடுத்துக்காட்டு

          • னான் பாஜகவுல கோஸ்டிப்பூசல் இல்லை என்று சொல்லவே இல்லையே….

        • //னிதீஸ் குமாருக்கு வந்ததே பாருங்க ஒரு பயம்…இந்த பயம் தான் காமிடி…அந்தாளெல்லாம் பிரதம்ர் கனவு காண்கிறார்//

          5000 பேரைக் கொன்ன கொலைகாரன் கனவுகாணலாம், போருன்னா மக்கள் சாகத்தான் செய்வாங்கன்னு சொன்ன தாயுள்ளம் கனவுகாணலாம் நிதிஷ்குமாரு காணக்கூடாதா?

          • கணவு யார் வேணுமென்றாலும் காணலாம்…ராஜ் கூட பாரதப் பிரதமராகவோ, அமேரிக்க ஜனாதிபதியாகவோ கணவுகாணலாம்….ஆனால் நிஜம்……..சுடும்…

            • நிஜம் சுட்டதுனாலதான் மோடியப் பாத்து இந்தியாவே சிரிப்பா சிரிக்குது

  2. மோடியுடன் இணைந்தார் நமீதா

    சோ டைரக்சனில் குருமூர்த்தி தயாரிப்பில் “மோடிகாத்த பாடி “படம் விரைவில் வெளிவருகிறது .

    மோடி உத்தரகாண்டில் பயணித்த குஜராத்திகளை காப்பற்றுவதற்காக ஹெலிகாப்டரில் செல்லுகிறார். ஹெலிகாப்ப்டரில் இருந்து கயிறில் தொங்கிக் கொண்டே இன்னொரு கையில் இருக்கும் வலையை வீசுகிறார். அந்த வலையில் 1000 குஜராத்திகள் சிக்குகிறார்கள் .அப்படியே ஒரு கையில் தூக்கிக் கொண்டும் ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டும் டெல்லி வருகிறார் .அவர்களை டெல்லியில் இறக்கிவிட்டு மீண்டும் மீண்டும் உத்தரகாண்ட் சென்று ,மொத்தம் 15 தடவை சென்று 15000 குஜராத்திகளை மோடி காப்பாற்றுகிறார் .அதில் தப்பித்தவறி நமிதாவும் சிக்கிவிட்டார் .மோடி ஒருகையில் ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டும் இன்னொரு கையில் 1000 குஜராத்திகளை 15 முறைகள் தூக்கி காப்பாற்றியதை கண்டு மோடியின் வீரத்தில் மயங்குகிறார். அவருக்கு நன்றி சொல்லும் சாக்கில் அவர் தாடியை தடவி பாக்கிறார் .அவர் நன்றி உணர்வை எண்ணி மோடி அவருடன் அன்பை ஒழுக செய்கிறார். அப்போது நமிதா நீங்கள் 15000 பேர்களை காப்பாற்றியதை பெருமை பட கூறி இருப்பினும் ஒரே ஒருபாடியை மட்டும் காப்பாற்ற வேண்டுகிறார் .அவரது உருக்கமான வேண்டுகோளில் மோடியின் உள்ளமெல்லாம் உருகி கண்ணீராய் பெருக்கெடுத்து உடம்பெல்லாம் வடிந்து அதனுடன் மோடியின் சிறுநீரும் கலந்து ஓடுகிறது .ஹீரோ வேடமும் காமெடியன் வேடமும் மோடியே ஏற்றுக் கொண்டதால் படம் இப்படி போகிறது .
    பின்னர் பாடியை காப்பாற்ற மோடி ஹெலிகாப்டரில் புறப்படுகிறார் .நமீதா பாடியை என்னால்தான் அடையாளம் காட்ட முடியும் என்று கூற நமீதாவையும் அழைத்து செல்கிறார் .உத்தரகாண்டில் இருவரும் இறங்கி டூயட் பாடி , பாடியை தேடுகிறார்கள் .பாடியை கண்டு பிடித்த மகிழ்ச்சியில் தனது அதீத சக்தியால் ஹெலிகாப்டரை படகு ஆக்கி மழை வெள்ளத்தில் மிதந்து டூயட் தொடர்கிறது..மோடி கண்டுபிடித்த பாடி எது ?நமீதாவின் பிரெசியரா? அல்லது நிலச்சரிவில் சிக்கி நமிதாவின் முன்னாள் காதலனின் பாடியா? என்பதை விரைவில் வெளிவர உள்ள திரையில் காணுங்கள் .

    • மிஸ்டர் அட்மின், உங்களுக்கு கமெண்ட் கவுண்ட் அதிகம் வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி ஆபாச கமெண்டெல்லாம் போடுவீங்களா! அடத்தூ!! உங்களுக்கும் ஸோ கால்ட் ‘கார்பரேட்’ புத்தி வந்துடுச்சா..

        • நாராயணா,நாராயணா நான் சொன்னதில் ஆபாசம்
          அப்படியெனில் 15000 பேர்களை காப்பாற்றியதாக ஊடகத்திற்கு செய்தி போட காசு கொடுத்தது அயோக்கியத்தனம் இல்லையா?
          குஜராத்தில் ரோடெல்லாம் தேன் வடிகிறது என்று கதை விடுகிறீர்கள் .அங்கு செல்லாத மக்கள் நம்புகிறார்கள் என்று 15000 கதைவிட்டீர்கள் .இன்னோவ கார் கணக்கை கேட்டதும் திக்கு முக்காடி உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும் ஆபாசமா?
          மக்கள் இன்னும் நம்பினால் இப்படி கூட கதைவிட மாட்டீர்கள் என்று சொன்னால் ஆபாசமா?
          கர்கரேயை சுட்டு கொன்றுவிட்டு அங்கு ஓடோடி சென்று கோடி வழங்குகிறீர்கள் .தீவிரவாத தாக்குதல் முறியடிக்கும் முன்பே இப்படி ஒரு அற்பத்தனம் .அதே போல மக்கள் ஆபத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கையில் 15000 பேர்களை காப்பாற்றிவிட்டதாக கதை அளப்பது ஆபாசமாக இல்லையா? இன்னும் சில ஊடகங்கள் மட்டும் வாய் மூடி இருந்தால் உங்கள் கதையை மக்கள் பலர் நம்பியும் இருப்பார்களே

  3. If one votes for BJP, can judge the direction of Govt and leadership. May be he spends more for Advt than implementation. Atleast he talks about issues, atleast he went to Uttarkhand.

    Look at tamilnadu, making 2000 crore building a dumping ground and library to marriage hall
    you know there a lot worse leaders in waiting for PM.

    You vote for congress, Sonia will elect a leader for you. And that is not democracy.
    You vote for third front, you are playing a lottery. you may get Jayalalitha. This is democrazy.
    You vote for BJP, you know the leader.

    Choice is yours.

      • If he were a murderer, he would have shown desperation in coming back to power by all means.

        He would have definetley promised free TV, power , mixie, grinder etc etc

        I dont see such an attitude

        • He can not afford to supply freebies to the whole of India.His ambition is to become PM.He is therefore indulging in cheap publicity through social network with the help of obliging Ambis.Since many corporate leaders including Mukesh Ambani did not attend his latest lecture at CII,he has chosen to say ” Ambani”s illness can be cured by ace doctors and who will come to the rescue of poor?”This is the man who refuses to give electricity connection to 11 lakh households in Gujarath and sells “surplus” power to other states with profit.Making poor village women to walk miles to get a pot of water.And calling malnourished poor women as “figure conscious”While army jawans are risking their lives in rescuing more than 80000 pilgrims,he has chosen to say that Indian Govt not bothered about the lives of army men in the border.As PM aspirant,has he bothered about the morale of army men?He has an ever obliging party chief urging Muslims to forget the past.

          • @Sooriyan

            //He can not afford to supply freebies to the whole of India//

            1. Dude! after the mass murder , he contested in 2 elections at Gujarat. If he were an evil man, would have definitely promised freebies . That shows his attitude

            2.What do you mean he cant afford? he is not paying out of his pocket, He just have to promise to spend tax payers money. Congress is already bribing voters with Rs140/day on 100 day job scheme

              • Sooriyan: Did he say Muslims need to be killed? Or do you say that his statement “Hum Paanch, Humara Pachees – Galath hai” (In Tamil: “Naam Aindhu paer, namakku aindhu paer endra muslim-galin kolgai thavaru”) is spreading hatred? In the last assembly election, he got close to 40% of Muslim votes. Are you saying the muslims who voted in large numbers for Modi are all idiots since they are doing it inspite of your suggestion that he spreads communal hatred? If he says, all terrorists need to be killed or AlQaeda need to be killed, why do you assume they are all “Indian Rightful Muslims”?

                • 007 இல் முஸ்லிம்கள் ஓட்டுக்களை 5% குறைவாக பெற்ற காலத்தில் 49.12 ஓட்டுக்களை பெற்றது பாஜக .
                  ஆனால் 2012 இல் முஸ்லிம்களின் ஓட்டுக்களை 40 % அளவில் பெற்றும் 47.9 ஓட்டுக்களை பெற்றதுடன் 2 சீட்களும் குறைவாக பாஜக பெற்றுள்ளது

                  அப்படியெனில் ,2007 ஐ விட 2012 இல் மோடிக்கு வாக்களித்த முஸ்லிம் அல்லாத மக்கள் பலர் 2012 இல் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்
                  குஜராத்தில் மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சியினால் கிடைத்த ஓட்டுக்களைவிட ,மோடியின் ஆட்சியினால் ஏற்பட்ட பயத்தினால் தான் மோடி கட்சி வெற்றி பெற்றுள்ளது
                  அதாவது மோடி பெற்ற 47.9% ஓட்டில் முஸ்லிம்களின் 40% ஓட்டுக்கள் ,அதாவது மொத்த குஜராத் ஓட்டில் 4% ஓட்டுக்கள் . இப்போது 47.9 இல் முஸ்லிம்களின் 4%ஓட்டுக்களை கழித்தால் 43.9% ஓட்டுக்களே மோடி பெற்றுள்ளார்.
                  இந்த 4% முஸ்லிம் ஓட்டுக்களை காங்கிரசு 38.9 % ஓட்டுக்களுடன் சேர்த்தால் 42.9 % ஆயிற்று .
                  மோடியின் மதவாத ஓட்டுக்கள் அலல்து பாஜகவின் மதவாத ஓட்டுக்களை கழித்து பார்த்தால் மோடியின் ஆட்சியில் வளர்ச்சிக்கு விழுந்த ஓட்டுக்களும் இல்லை .ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என்பது புரியும்

                • நாம் 5 பேர் நமக்கு 5 பேர் என்பது முஸ்லிம் கொள்கையாம் .அதில் நாம் கொல்ல வேண்டியது 5 பேர் என்பது மோடியின் கொள்கையா?

                • Even when no CM candidate was named in the last Gujarat Assembly elections by the Congress party,Modi told the election meetings that Ahmed Patel (He called him as Ahmed Miyan)would become CM of Gujarat if Congress wins.Muslims who voted for Modi did so out of fear.Please refer Tippu”s comment dated 28th June for further details.

    • வாங்க சார் வாங்க. போனா வராது பொழுது போனா கெடைக்காது… இப்ப பாத்தீங்கன்னா சார், இந்த வெளக்கெண்ண தைலத்த டெய்லி நாலு வாட்டி மூஞ்சியில தேய்ச்சீங்கன்னா அஞ்சே வருசத்துல வெள்ளவெளேர்னு ஆயிறலாம். மீசை கருவிழி எல்லாம் கூட வெள்ளையா ஆயிடும்னா பாத்துக்குங்க. ‘ஒரு கூட சன்லைட், ஒரு கூடை மூன்லைட்’ அப்டின்னு பாட்டு கூட பாடலாம் சார்… அப்புறம் பாத்தீங்கன்னா சார் டெய்லி சாப்டதுக்கு அப்புறம் ரெண்டு மடக்கு நம்ம தைலத்த குடிச்சீங்கன்னா சார், – இருமல், சளி, பல்வலி, மூலம், மலச்சிக்கல், சொறி, சிரங்கு, கேன்சர், எயிட்சு, பக்கவாதம், இதெல்லாம் பக்காவா குணமாயிரும் சார்.

      • @Paramesu

        நீங்கள் கூறியது ஒரு வகையில் சரிதான். மோடி மருந்து snake oil போன்று நம்பிக்றோம். தடவிய பின்னர் தான் தெரியும். உங்கள் பாணியில்

        காங்கிரஸ் கூடாரம்
        ———————————–
        வாங்க வாங்க உங்க பணத்தை குடுங்க . சோனியா வைத்தியச்சி என்ன ப்ரோபல்மா இருந்தாலும் காட்டுக்கு போய் சரியான மருந்த கண்டு புடுச்சு குடுப்பாங்க.

        போன தடவ குடுத்த மருந்து வேல செய்யலான்னு கவலைபடாதீங்க , நம்பிக்கியா பணத்தை கொடுங்க

        மூன்றாவது கூடாரம்
        ——————————–
        உங்களுக்கு யாரு கிட்ட வைத்தியம் பாக்க குடுத்து வைச்சிருக்கோ . பணத்தை குடுங்க நம்பிக்கை வையுங்க

        • கொலைகாரர்களுக்கு ஆதரவு
          திருடர்களுக்கு ஆதரவு
          மொள்ளமாரிங்களுக்கு ஆதரவு
          கேப்மாரிங்களுக்கு ஆதரவு
          வெளங்கிடும் இந்தியா

    • எங்கள் ஊரில் கூட கவுன்சிலருக்கு கொலைகாரனைத்தான் வேட்பாளராக அறிவிக்கிறார்கள் .அவரை எதிர்த்து போட்டியிட கூட ஆள் இல்லை .அதனால் கொலைகார வேட்பாளருக்கு ஓட்டு போட முடியுமா?

      • இபராஹீம் அவர்களே ! லாடனை தியாகி என்று கூறிய உங்கள் கண்களுகுமா மோடி கொலைகாரனாக தெரிகிறார் ?

        • சுபாஷ் சந்த்ரபோஸ் தியாகியாக கொள்ளலாம் .ஆனால் ஓட்டு பொறுக்குவதற்காக நாட்டிலுள்ள அனைவரின் கவனமெல்லாம் தாஜ் ஓட்டலில் இருந்து மக்களை காப்பாற்றுவதிலும் தீவிரவாதிகளை அப்புறப்படுத்துவதிலும் இருக்கையில் சத்திய சீலர் கர்கரே மனைவியிடம் கோடி கொடுத்து ஊடகங்களுக்கு செய்தி கொடுத்து ஓடியது போல பின்லாதின் அற்பன் அல்ல .மக்கள் ஆபத்தில் சிக்கி தவிககியில் நாடு முழுவதும் விளம்பரம் கிடைப்பதற்கு 15000 பேர்களை காப்பாற்றியதாக காசு கொடுத்து ஊடகத்தை பயன் படுத்தியது போல பின் லாதின் அற்பன் அல்ல

    • \\If one votes for BJP, can judge the direction of Govt and leadership.//

      ஏற்கனவே காங்கிரசு போய்க்கொண்டிருக்கும் திசையில்தானே விழுந்து கிடக்கிறார் மேற்படியான். மக்களின் எதிரிகளாக அம்பலப்பட்டு போன மண்ணு மோகன் செட்டிநாட்டு அப்பச்சியின் இடத்தில் உள்நாட்டு,பன்னாட்டு முதலாளிகளுக்கு புதியதொரு விசுவாச அடியாள் கிடைப்பான்..

      \\May be he spends more for Advt than implementation.//

      மக்களை ஏய்க்கும் கள்ளப்பரப்புரை அவர்களின் வரிப்பணத்தை கொண்டே நடத்தப்படுவதை நியாயப்படுத்த வெட்கப்படாத ராமன்கள்தான் கொலைகாரனுக்கும் வெட்கமின்றி வக்காலத்து வாங்க முடியும்.

      \\ Atleast he talks about issues//

      பிரச்னைகளை பேசினாலே இவருக்கு போதுமாம்.வாயாலேயே வடை சுடுவார் போலும்.சரி,அந்த கொலைகாரன் என்னதான் பிரச்னைகளை பேசுகிறார்.மோடி வாயை திறந்தாலே பொய்கள்தான் வரிசையாக அணிவகுக்கின்றன.ஆயிரக்கணக்கான கோடி அந்நிய முதலீடு குசராத்தில் வந்து குவிவதாக பொய்யுரைக்க மோடிக்கு வெட்கமில்லை.அந்த பொய்யனை ஆதரிக்க ராமன்களுக்கும் வெட்கமில்லை.

      கடந்த குசராத் சட்டமன்ற தேர்தலில் மோடி எப்படி வென்றார்.தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் காங்கிரசு வெல்லும் பட்சம் அகமது படேலை முதல்வராக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக எந்த ஆதாரமும் இல்லாமல் புளுகினார்.போதாதா இந்து மத வெறி போதை தலைக்கேறியிருக்கும் குசராத்துக்கு.கள் குடித்த குரங்கை தேள் கொட்டிய கதையாக ஒரு முசுலிம் நமக்கு முதல்வரா என்று மோடிக்கே வாக்குகளை போட்டு தள்ளினார்கள்.

      இந்த பொய்யை விட அநிநாய புரட்டு ஒன்றையும் அவிழ்த்து விட்டார் அந்த பொய்யன்.தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னால் சர் கிரீக் பகுதியை நடுவண் அரசு பாக்கிசுதானுக்கு கொடுக்க போவதாக புளுகினார்.எந்த கட்சி ஆண்டாலும் இந்தியா அப்படி கொடுக்குமா என்பதை நண்பர் அம்பியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.மோடியே அதற்கு டிசம்பர் 15,,2012 என நாளும் குறித்து கொடுத்தார்.அந்த நாள் கடந்து இப்போது ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டது.இன்று வரை சர் கிரீக் பகுதி இந்தியாவிடம்தான் உள்ளது.இந்த பொய்யன் பேசவாவது செய்கிறார் என்று ராமன்கள மதி மயங்குகிறார்கள்.இப்படி பேசுவதற்கு அந்த ஆள் ஊமையாக போய் விட்டால் அது நாட்டுக்கு நல்லது.

      \\Look at tamilnadu, making 2000 crore building a dumping ground and library to marriage hall
      you know there a lot worse leaders in waiting for PM.//

      முதன்மர் பதவிக்கு ஆசைப்படும் மற்றவர்களின் குறைகள் மோடிக்கு தகுதியை அளித்து விடாது.

      \\You vote for BJP, you know the leader.//

      முதன்மர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டாலே இந்தியாவின் பிரச்னைகளை தீர்க்க வல்லவர் மோடி என்று ஆகி விடுமா.

      \\Choice is yours.//

      நிச்சயமாக.மத வெறி போதையை மக்கள் உதறும்போது மோடியை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைப்பார்கள்.மோடியின் இடம் எப்போதுமே முதல்வர் நாற்காலி முதன்மர் நாற்காலி என்றே இருந்து விடாது.ஒரு நாள் அது கில்லட்டினாகவும் இருக்கலாம்.

      • very high hopes tipu,basically there are many other reason for Modi to be PM because he is simply good and a strong administrator,who has the right ideas for the country and lazy people are always unhappy,cant help that.

        • //PM because he is simply good and a strong administrator//

          தனது கட்சியைச் சேர்ந்த ஹரேன்பாண்டியாவை கொன்றதை வைத்து சொல்கிறீர்களா?

          • ///தனது கட்சியைச் சேர்ந்த ஹரேன்பாண்டியாவை கொன்றதை வைத்து சொல்கிறீர்களா?////

            அதைவைத்து மட்டும் பேசவில்லை .ஊடகங்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி 15000 பேர்களை காப்பாற்றியதாக செய்தி பரப்பி மக்களை ஏமாற்றும் திறமை .இதில் அவரை விஞ்ச பாஜகவில் யாருமில்லை

      • //ஏற்கனவே காங்கிரசு போய்க்கொண்டிருக்கும் திசையில்தானே விழுந்து கிடக்கிறார் மேற்படியான். மக்களின் எதிரிகளாக அம்பலப்பட்டு போன மண்ணு மோகன் செட்டிநாட்டு அப்பச்சியின் இடத்தில் உள்நாட்டு,பன்னாட்டு முதலாளிகளுக்கு புதியதொரு விசுவாச அடியாள் கிடைப்பான்..//

        It is called small Govt

        //தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் காங்கிரசு வெல்லும் பட்சம் அகமது படேலை முதல்வராக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக எந்த ஆதாரமும் இல்லாமல் புளுகினார்//

        Voters have the right to know who will lead their state/country. Why the congress keeps people in dark? you dont want to see the problem with Congress.

        //நிச்சயமாக.மத வெறி போதையை மக்கள் உதறும்போது மோடியை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைப்பார்கள்.//

        So you are saying Gujratis are voting to Modi to develop the religion

  4. இப்பொது மோடி 15000 பேர்களை காப்பாற்றியதாக சொல்லவில்லை என்று அறிக்கை விடும் ராஜ்நாத் சிங் ,செய்தி வந்த உடனே மறுப்பு தெரிவித்திருக்கலாமே , பலர் நாறடித்த பிறகு மறுப்பு அறிக்கை விட்டு மோடி மானத்தை மூடி வைக்கக் முடியாது

  5. இழவு வீட்டில் திருடும் இழிபிறவிகள், உத்ரகண்டில் சாமியார்கள் 1கோடிரூபாய்க்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்களிடம் திருடினார்களாம், அவர்களைவிட இழிந்த பிறவி இந்த ஜந்து

    • ஆனா, சோனியா, மோடி யார் வந்தாலும் பெருசா ஒன்னும் பெருசா நடந்துடாது. இதுக்கு மூணாவது அணி பெட்டர். நல்ல தமாஷா இருக்கும். யார் பிரதமர்னு அடிசுப்பாங்க. தேவே கவுடா, குஜ்ரால் மாதிரி தினுசு தினுசா பிரதமர் வருவாங்க. பொழுது போக்கா இருக்கும்.

      சோனியா, மோடி, மூணாவது அணி மூணு படமும் மோசம். ஆனா மூணாவது படுத்துல காமெடி நல்லா இருக்கும். அதனால என் ஓட்டு மூணாவது அணிக்கே. கைப்புள்ள காமெடிக்காக ‘வின்னர்’ படம் பாக்கறதில்லையா, அது மாதிரி.

      • @Venkatesan
        If there is no stable central Govt ,Investors will flee the country.
        Indian currency will be 1USD = 75INR that will shoot up oil price. And the real fun will begin…

        பொழப்பு சிரிப்பா சிரிச்சுரும்

        • இப்போ மட்டும் என்ன வாழுது? 45 ரூபா இருந்தது 60 ரூபா ஆயாச்சு. மோடி பிரதமர் ஆனாலும் மூணு மாசம்தான் தாங்குவாரு. அதுக்குள்ள சுஷ்மா ஸ்வராஜ் அம்மா ஆட்சிய கவுத்துடுவாங்க.

          என் கணிப்பு படி காங்கிரஸ் 100 சீட்டு தாண்டாது. பிஜேபி 150 தாண்டாது. ஜெ, மாயா, மம்தா, முலாயம், நிதிஷ், நவீன், கருணா எல்லாம் ஒன்னொன்னும் ஒரு கிரகம். எனெக்கென்னவோ ஒருத்தனும் ஆட்சி அமைக்க போறதில்லைன்னு தோணுது.

    • ஆமாமா!!!

      அவரு திருட மாட்டாரு கட்ட பிரம்ச்சாரி …
      ஆனா மத்தவங்க திருடுனா கண்டுக்க மாட்டாரு
      அதா தானே கல்லுளி மங்கணும் செய்யறான்

      அவரு கொல பண்ண மாட்டாரு
      ஆனா மத்தவங்க கொல பண்ணா தடுக்க மட்டாரு .

      அவரு கற்பழிக்க மாட்டரு
      ஆனா மத்தவங்க பண்ணா தடுக்க மாட்டரு ..

      நன்றி,
      செல்வகுமார்

        • பாரதமாதாவின் தவப் புதலவர்கள் ஆட்சியில் தான் கார்கில் பகுதியில் அந்நிய படைகள் புகுந்தன .அதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி தனது தயவில்தான் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று இந்தியாவிலே வந்து அறிவித்தார் .
          மோடி பிரம்மச்சாரியம் பணம் தேவை படாதாம் .வாக்களிக்க மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டாமா? அமெரிக்க விளம்பர ஏஜெண்டுகளுக்கு வெள்ளை பணத்தையா கொடுக்க முடியும்?

    • ஹய்யோ இப்படி வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு நம்புற வெள்ளங்கிரிங்க இருக்கற வரைக்கும் மோடிக்கு பயமில்லை.

  6. 10 நாட்கள் போராடி 40000 பேரை மீட்டுள்ளனர் ராணுவ வீரர்கள்.

    இந்நிலையில் வெறும் 2 நாளில் மோடி எங்கிருந்து 15000 பேரை மீட்டார்? மீட்கப்பட்டவர்கள் யார் யார்? என்ற எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. சனிக்கிழமை வரை குஜராத்திற்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2000க்கும் குறைவே!

    எழவு வீட்டிலும் ஆதாயம் தேடும் மோடி ஆதரவாளர்களின் ஒட்டு அரசியல் வெளிச்சத்திற்கு வந்தது.

  7. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய தொகுதிக்கு ரூ.8 கோடி செலவு செய்ததாகக் கூறிய பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மக்களவை பாஜக குழு துணைத் தலைவரும் மகாராஷ்டிரத்தின் பீட் தொகுதி எம்.பி.யுமான கோபிநாத் முண்டே தன்னுடைய நீண்ட கால அரசியல் அனுபவம், தேர்தலில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து குறிப்பிட்டார்.

    அப்போது அவர் “”1980-ஆம் ஆண்டு நான் முதல்முறையாக சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது ரூ.29,000 செலவழித்தேன். ஆனால் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது ரூ.8 கோடி செலவு செய்தேன். தேர்தலில் கருப்பு பணத்தை ஒழிக்க அரசே நிதியுதவி அளிக்க வேண்டும்.

    பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பிரதமரானால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியமே இருக்காது” என குறிப்பிட்டார் முண்டே. அந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

    முண்டேயின் பேச்சு குறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி மற்றும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் தெரிவித்ததாவது:

    தேர்தலின்போது ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் ரூ.25 லட்சம் வரைதான் செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் நெறிமுறைகளை வகுத்துள்ளது. ஆனால், தான் ரூ.8 கோடி செலவு செய்ததாக கோபிநாத் முண்டே வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

    மேலும் “”இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரும் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கிறது. என் மீது வழக்குப் பதிந்தாலும் பரவாயில்லை” என தேர்தல் ஆணையத்துக்குச் சவால் விடும் வகையில் பேசியிருக்கிறார்.

    தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறியுள்ள அவரை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமையும் கூட என தெரிவித்திருந்தனர்.

    இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து வி.எஸ்.சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது:

    கடந்த மக்களவைத் தேர்தலில் தன்னுடைய தொகுதிக்கு ரூ.8 கோடி செலவு செய்ததாக முண்டே கூறியது தேர்தல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது. அது தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

    முண்டே கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அவருடைய பேச்சு பதிவு செய்யப்பட்ட சி.டி. ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். மக்களவைத் தொகுதிக்கு வரையறுக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக செலவு செய்தது உறுதியானால் முண்டே மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வி.எஸ்.சம்பத்.

    தினமணி செய்தி
    கூடவே இருக்கும் முண்டை பிடிக்காதவன் வானம் ஏறி வானவில்லை பிடிக்கப் போறானா ?

  8. தலைப்பிலயே சாதனை என்று ஒத்துக்கிட்டீங்க.. அப்புறம் என்ன மோடிக்கு பின்னாடி ஆப்கோ, வினவுக்கு பின்னாடி விப்கோ-ன்னு பேத்தல் ?

  9. I read lot of informative articles in vinavu site earlier. This time, I am bit upset when vinavu article explains about innova capcity, round trip etc and questioning how its possible to rescue 15K in few days. No where in world the leader will do any such sort OF HIS OWN – rather its motivation, preparedness, power to his team that Modfi offered to his team does it. If you read the economic times article given as reference, it clearly indicates team is setup earlier, well planned, managed with direction of Modi and started working on even modi reaches the place. Also, the number is irrelevant, u have to see the aspiration of Modi here

    Don’t again and again repeat the 2002 incident – do you have any statistics, voice/speech of gujaratis (particularly muslims) how their living conditions in Gujart in last 10 yrs. How many lakhs of muslism has been evacuated by Modi after 2002? NONE…If he is so cruel as u folks are explaining here referring 2002, by this time no muslism will survive in Guajarat. Is it not? Again, don’t reply it again stating Basism, etc…just asking you folks..

    • ஒவ்வொரு துறையிலும் மோடியின் கதை
      நன்றி: – அபீக் பர்மன், டைம்ஸ் ஆஃப் இந்தியா

    • BJP itself has denied the “achievement”.But admirers continue their praising.For Gujarat riots,there are many proofs available.Haryana State has adopted 25 affected villages of Uttarakhant.Almost all other CMs are lending their help without publicity.Gujarat is the State which has given the least donation of 2.5 crores.Muslims are no doubt surviving in Gujarat.Not as rightful citizens.But as dumb citizens.Probably,Srinivas has not read yesterday”s Hindu to know about the happenings in the Muslim Youth meet organized by Modi on 27th June and today”s Hindu to know about suit filed by BJP leader in Uttarakhant against the Times Of India news reporter who broke the news about the rescue of 15000 Gujaratis.

      • Sooriyan: On one hand, vinavu is writing that Modi is taking credit for work not done. And you are writing that BJP never accepted credit regarding the achievement. Pls clarify, if you are saying Vinavu is wrong to write an article against Modi when BJP itself denied the achievement? Now, coming to the point on whether it was indeed an achievement and whether Modi or BJP claimed credit for it: It is a fact that Modi had early mover advantage while offering relief. He DID mobilise an effective team of experienced bureaucrats who helped in providing relief when the disaster struck. This is confirmed by the link i shared. Now, it is also a fact that he DID NOT utter a single word about this to media. The only thing he tweeted was thanking the army men who are involved in rescue operations. Now, Vinavu and anti-modi team have started talking about something that was NOT said by Modi and started blaming him, just because of bias and hatred. If ToI reporter wrote something that was mischievous, then he should be questioned. I am also seeing people asking why he kept quiet when the whole media was talking about that article. Now, tell me if he has to start responding to ALL such news items, his entire day will go only in giving clarifications. He has better things to do.

  10. Sooriyan: Please make up your mind. Are you accusing Modi or Modi’s followers? Like any other human being, Modi does not have control over his lakhs of followers…Some may go overboard in such kind of following. Simple example: Can Rahul Gandhi control what his followers are saying or writing? Please dont tell me you cant understand this small thing. Else there is no point in arguing with you. If you can see, all the news related to Modi is based on either assumptions or based on what a follower said. Modi never wastes time on interviews. He just WORKS. Even in this case, he has done so much which needs to be appreciated than criticised especially when Congress government was doing NOTHING. Dont tow vinavu’s line. They are biased. They deliberately suppress good works done by BJP and RSS. Whenever there is a calamity, it is the RSS who jump and work – be it latur earth quake or tsumani or Flood. Have you ever seen an article appreciating the good work done by them in Vinavu? What have the Muslim groups done during this troubled times – other than fishing in troubled times? Be Fair and Be human.

    • Good reasoning Mr Sridhar.Why Modi has not denied the “achievement”on the first day itself?You have not heard about his e-warriers and a dedicated Dot-com expert with 100 strong content writers.And I really admire your logic telling that if one does not appreciate RSS and BJP,he is not fair and human.Please spare sometime to read daily newspapers about fake encounters etc.

Leave a Reply to சந்தானம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க