privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பாமக தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய் ! ஆர்ப்பாட்டம் !!

பாமக தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய் ! ஆர்ப்பாட்டம் !!

-

இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்களே !

என்ற முழக்கத்துடன்

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

ஆகிய புரட்சிகர அமைப்புகள் இன்றும், நாளையும் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

ஆர்ப்பாட்டத்தின் மைய முழக்கங்கள் :

தமிழக அரசே,

  • ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்!
  • வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்!

உழைக்கும் மக்களே,

  • சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
  • சாதியை மறுத்து உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்!

தகவல் :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு.

ளவரசன் மரணத்தை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி. ராஜூ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5 ஜங்சன் ரோடு , விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
வழக்கறிஞர்.சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்

நாள் 5-7-13

பத்திரிக்கைச் செய்தி

ருமபுரியில் நிகழ்ந்த இளவரசனின் மரணம், அதன் பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போதும், இறந்த சூழ்நிலையை ஒப்பிட்டு பார்க்கும்போதும் அது திட்டமிட்ட படு கொலையாகவே தெரிகிறது. திவ்யா இளவரசன் காதல் திருமணத்தின் விளைவாக, திவ்யாவின் தந்தை படுகொலை, பிறகு நத்தம் காலனி சூறையாடல், தீவைப்பு, பிறகு மரக்காணம் கலவரம், அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாடக காதல் என பா.ம.க ஆதிக்க சாதியினரை ஒன்றிணைத்து தாழ்த்தபட்ட மக்களுக்கு எதிராக நடத்திய சாதி வெறி பிரச்சாரம், கடலூர் மாவட்டத்தில் நடந்த சாதிவெறிப் படுகொலைகள், இவற்றின் தொடர்ச்சியே திவ்யா-இளவரசன் நீதிமன்றப் பிரிவு, இறுதியில் இளவரசன் படுகொலை.

தன் தாய் விருப்பப்படி வாழப்போகிறேன். இனி இளவரசனுடன் சேர்ந்து வாழத்தயாரில்லை என்று திவ்யா நீதிமன்றத்தில் கூறியிருப்பது போலீசு காவலில் அச்சத்தால் கைதி கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தைப் போன்றது. அதனை நீதிமன்றம் அப்படியே எடுத்து கொண்டு தாயாருடன் திவ்யாவை அனுப்பியது சரியல்ல. திவ்யாவிற்கும் இளவரசனுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. சாதி வெறி அரசியல் எப்படி திவ்யாவின் தந்தையை தற்கொலைக்கு தள்ளியதோ, அதுபோல் இவர்களை பிரித்ததுடன், இளவரசனையும் பலி வாங்கி விட்டது.

திவ்யாவின் தாயார் தன் பெண்ணை கடத்திவிட்டார்கள் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். திவ்யா யாரும் என்னை கடத்த வில்லை, விரும்பித்தான் இளவரசனுடன் போனேன் என நீதிபதியிடம் கூறினார். பிறகு தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக தாயாருடன் செல்வதாக நேற்று முன்தினம் கூறினார். ஆரம்பம் முதலே திவ்யாவின் உறவினர்கள் மற்றும் தாயாரின் தனிப்பட்ட குடும்ப விவகாரமாக இந்த காதல் விவகாரம் இல்லை. மிகப்பெரும் சாதி வெறி அரசியலாக இப்பிரச்சனை மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இளவரசனின் மரணத்தின் பின்புலத்தில் உள்ள சதிகளை மறைக்கும் பொருட்டு திவ்யா கொல்லப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த வழக்கின் மிக முக்கியமான சாட்சியாகிய திவ்யாவை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இயற்கை காப்பாளர் என்ற முறையில் அவருடைய தாயாரிடம் விடுவதென்பது சாதிவெறி சக்திகளிடம் ஒப்படைப்பதாகவே இருக்கும். அதேபோல ஒருவேளை திவ்யாவின் சுய விருப்பத்தின் பேரில் ஆனாலும் கூட அவர் தன்னுடைய தாயாருடன் இருக்க அனுமதிப்பது ஆபத்தானது. புலன் விசாரணை முடியும் வரை அவர் அரசு அல்லது நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து இன்று எமது அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறோம்.

திவ்யாவை மிரட்டிய சதிகாரர்கள் தொடங்கி இளவரசன் படுகொலை வரை, முழுமையான விசாரணை நடத்தி அவர்கள் தீண்டாமை வன்கொடுமை குற்றத்தில் தண்டிக்கப்படுவதை அரசும் நீதிமன்றமும் உத்திரவாதப்படுத்த வேண்டும். வெளிப்படையாக சாதி வெறி அரசியல் நடத்தி வரும் வன்னியர் சங்கத்துக்கு தடை விதிக்க வேண்டும். நத்தம் காலனி, மாமல்லபுரம், கடலூர் மாவட்ட கவுரவக் கொலைகள் வரையிலான அனைத்திலும் சாதிவெறியைத் தூண்டிவிட்ட ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர்தான், இளவரசனின் சாவுக்கும் காரணம் என்பதால், இவர்கள் அனைவரும் வன்கொடுமைக் கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடும்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு

  1. வழக்கறிஞர் சி.ராஜு அவர்களே… உங்களால் ஒன்னும் செய்ய முடியாது…. இது முடிவல்ல… சும்மா எல்லோரும் ஒரு மூணு நாளைக்கு பேசுவானுங்க… மழை பெய்ய ஆரம்பத்திவுடன் இது மறந்து போயிடும்…நீங்க மெனக்கட்டு லெட்டர் பேட்ல கவிதை கணக்கா அறிக்கை குடுக்கறதெல்லாம் வேஸ்ட்….

  2. திருமா எப்போழுது போராட்டம் நடத்த போகிறார்? நீங்கள் தானே முதலில் போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.

  3. அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை சாத்தியமாகுமா ? வாக்கு எநிக்கைக்கு ஏற்பதான் நடவடிக்கை இருக்கும் .

    வன்னியர்கள் , பாவம் சாதிகொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று இடஒதுக்கீடு வேண்டுமானால் அதிகமாகலாம் .

  4. வினவு முழுமையாக வன்னியர் எதிர்ப்பை உமிழ்கிறது. இராமதாசு,பா.ம.க வை சாடுகிறீர்கள் சாதி வெறியை தூண்டுவதாக கூறி சரி. அவர்கள் கேட்கும் நியாயமான கோரிக்கையை வினவு ஆதரித்து எமுதினால் நடுநிலை என உங்களை (வினவை) நம்பலாம்.
    இராமதாசு,பா.ம.க வின் கோரிக்கையில் சில:
    1.எல்லா சாதி மக்களுக்கும் அவரவர் எண்ணிக்கை (மக்கள் தொகை) அடிப்படையில் இடஒதிகீடு.
    2.அனைவருக்கும் இலவச கல்வி (சாதி வேற்றுமையின்றி-பள்ளி கலவி முதல்,உயர்கல்வி வரை)

    இது நியாயமான கோரிக்கை தானே? இந்த அவரின் நியாயமான கோரிக்கையை நீங்கள் ஆதரித்திருந்தால் உங்களை நடுநிலை ஊடகம் என நம்பலாம். ஆனால் நீங்கள் ஒருநாளும் ஒருவரியிலும் ஆதரித்ததில்லை. இப்போது அவர்களை கைது செய் என்றால்,அவர்கள் உண்மையிலேயே குற்றம் இருக்கிறாத நம்ப முடியவில்லை.

    இடஒதுக்கீடு போன்ற எல்லா சலகையும் அனைத்து சாதிக்கும் சம்மாக கொடு: அல்லது தலித்களுக்கு கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடு,பல சலுகைகளை நீக்கு.

    • அவர்கள் (பா ம க )கோரிக்கையில் சிறிது நியாயம் இருக்கிறது தான் ஈழன் அவர்களே அனால் 2500 வருடங்களாக சிருமைபடுதப்பட்டு அடிமைபடுதப்பட்டு உரிமை மறுக்கப்பட்ட சாதியினர் மற்ற மேல் சாதியினர் போல் சமுக அந்தஸ்து அடையும் வரை இந்த கோரிக்கைகளை நடைமுறை படுத்துவது பெரும் அநீதியை அந்த மக்களுக்கு இளைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  5. In many places still minor marriages occur but when authorities take action, even some low class media condemns such action by the thashildar and collector.
    Population increases heavily on account of two factors:
    (1) Number of children per family
    (2) Early marriage
    It depends upon the geographical location and the custom of communities which influences the above factors.
    When reservation is made in employment and education, unless these factors are not taken into account and monitored , the communities which practice family planning will get affected and their voices will be subdued.Simple majority and their identity will rule others.
    Some group marry at 18-20 and an other group marry at 28-30. Number of generations of those who marry early outnumber the others who marry at 30.
    Teen age marriage is not favored by the civilized societies. Teen age marriage is where the age of husband and wife is 20 years and below.
    A demographic data must be published by the government on the teen age marriage as all the sections of our society are getting affected by reservation.
    According to our constitution one has every right to marry and have a family.
    For some enjoying sex starts as early as 18-19-20 and some others postpone to 28-30.
    Who leads a better life and who enjoys most must be decided by all the factors.
    Research points to a variety of social, family, health, and financial outcomes that are strongly correlated with early teen marriage.Poverty is associated with it.
    The thinking process and their social estimation are not always consistent and their decisions taken during their teens lack analysis. Parenting counselling are needed until they stand up wise.
    In our modern era circumstances and experience clearly convey that teen marriages will mostly fail.

  6. 3-4decades ago, (sample period used) , 23% of women who married in their teens gave birth to five or more children, versus 8% for those who married later in life.
    The ratio then may may be a fertility factor of 2: 4 or 5 .
    Even during the 1980’s the coimbatore and Erode districts before the industrial migration had a fertility rate of an amazing 1.2 which was far better than the fertility rate of Unites states (ref Economic and Political weekly) But who rewards them in India??
    Even in china where CAD (current account deficit) is not there, and where they have surplus in trillions of dollars they have become aware of the alarming proportions of population excess and they follow stringent population control measures.
    Data shows teen marriages not through arranged ones fail mostly and those marriages by love fail.

  7. பா.ம.க வின் வன்னிய சாதிவெறியர்…

    மகாபலிபுரம் பாமக கூட்டத்தில் ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர் சர்ச்சைக்குரிய பேச்சு…

    LINK;

    http://youtu.be/kbdhHQCISIw http://youtu.be/kbdhHQCISIw?t=12s

    ( Kaduvetti Guru’s Controversial speech at Mahabalipuram PMK meeting)

Leave a Reply to ஈழன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க