கொலையா? தற்கொலையா?
எதற்கடா ஆராய்ச்சி!
அவன் சாவுக்கு காரணம்
வன்னிய சாதிவெறி கவுச்சி!
அடுக்கடுக்காக
வாழ விட்டதா சாதிய வன்மம்!
திவ்யா தந்தையை ‘தற்கொலை’ செய்து
அவர் பிணத்தை வைத்தே காலனி எரித்து
சேர்ந்து வாழ்ந்த ஜோடியைப் பிரித்து,
குடும்பங்களை சின்னா பின்னமாக்கி
கடைசியில்,
சாதி தாண்டி சிந்தித்தவனை
மூளை சிதைய பிணமாக்கி…
இந்த கேவலங்களைச் செய்வதற்கு
சாதிப் பெருமை என்ன இருக்கு?
எல்லா சாதிக்கும் பசிக்கும்
எல்லா சாதிக்கும் வலிக்கும்
எல்லா சாதிக்கும் காதல் வரும்
எங்க சாதி தான் ஒசத்தியென்று…
எவர் ரத்தத்திலும் எழுதவில்லை…
இந்த ஆரம்ப அறிவே இல்லாதவனுக்கு
ஆண்ட பரம்பரை பெருமை எதுக்கு?
ஓ! சந்தேகமேயில்லை!
கொலையை மகிழவும்
பிணத்தை ரசிக்கவும் முடிந்த நீ
உண்மையிலேயே ‘ஆண்ட’ பரம்பரைதான்டா?
சந்தேகம் ஒன்று
சாதிப் புழுவாய் நெளிவதற்கு
மனிதப் பிறவி ஏன்டா?
என்ன குற்றம் செய்தான் இளவரசன்?
காதலித்தவளையே கரம்பிடிப்பதும்
கவுரவமாக இல்லறம் காண்பதும்
உன் சாதிக்கு ஒவ்வாது என்பதை விட
ஒழுக்கக்கேடு வேறு உண்டா?
எல்லோரையும் போல
அவனும் வாழ விருப்பமுள்ள, இளைஞன்,
விரும்பிய பெண்ணை மணமுடிக்க
அவனுக்கும் ஆசையுண்டு… உரிமையுண்டு,
குடும்பப் பாசமுண்டு
வேலைதேடும் குறிக்கோள் உண்டு,
நிறுத்தப்பட்ட அவன் இதயத்துடிப்பில்
திவ்யாவுடன் மட்டுமல்ல,
இந்தச் சமூகத்துடனும் பகிர்ந்துகொள்ள
நிறைய உணர்ச்சியுண்டு…
பிடித்த மனைவியை
பிரித்த போதும்
கண்ணியம் காத்த இளைஞனை
காவு வாங்கி விட்டு
வன்னியப் பெருமையென
பட்டாசு கொளுத்தி
கொண்டாடுபவனை விட
பயங்கரவாதி யாருண்டு?
சேர்ந்து வாழ்ந்தவன்
முகத்தைப் பார்க்கவும் முடியாமல்
வாழ்வின் காரணங்கள் நெருக்க
உயிரோடு அறுக்கப்படுகிறாள் திவ்யா,
சேர்ந்து வாழ்வோம் எனும் நம்பிக்கையில்
ஆவி ஆடங்கி,
சாவுக்கான காரணம் தேடி
பிணமாக அறுக்கப்படுகிறான் இளவரசன்.
குருத்துவிடும் வாழையை
குலைக்கும் எருமையை
எங்கள் வீட்டு பெருமை என்று
எவனும் இழுத்து வைத்து கொஞ்சுவதில்லை!
இளைய வாழ்வை
அவலமாக்கிய அயோக்கியர்களை
சொந்த சாதி என்று அணைக்க
உனக்கு வெட்கமாய் இல்லை?
வன்னியரை
மனித இனத்துக்கே
அன்னியராக்கும் சாதிவெறி!
வந்து அதை பற்ற வைப்பவன்
உன் வர்க்க எதிரி!
உன் அக்கினி குண்டத்தின் பெருமையை எடுத்து,
சொந்த சாதி அயோக்கியத்தனத்தை
சுட்டு எரி!
தாழ்த்தப்பட்டவர்
தான் ஜீன்ஸ் பேண்ட் போட்டதையும்,
கூலிங்கிளாஸ் அணிந்ததையும் கூட
தாங்க முடியாமல்,
ஊருக்கு ஊர்போய் ‘நாடகக் காதல்’
‘நாடகத் திருமணம்’ என உசுப்பிவிட்டு
ஊரையே கொலையில் இழுத்து விட்டு
இப்போது சொல்கிறார்கள்
இந்த யோக்கியர்கள் “காதல் தனிப்பட்ட பிரச்சனை”
பிணத்தைப் போட்டு தாண்டுவதில்
பா.ம.க.வுக்கு உலகில் எந்தப் பொய்யன்
ஈடு இணை!
இளைய சமூகமே!
பறிகொடுத்திருப்பது
யாரோ ஒரு பையனை அல்ல,
ஒரு புதிய தலைமுறையை!
சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கவோ
நாம் இத்தனைப் பேரும்…
புலரும் விடியல் அனைத்தையும்
சாதிவெறிக்கு பழியாக்கும்
ஆதிக்க சாதிவெறி கொடூரத்தை
தேசமே திரண்டெழுந்து ஒழிப்போம்!
– துரை.சண்முகம்
ஒரு மனிதன் இறந்ததை வைத்து பட்டாசு வெடிப்பதை நினைத்து பார்க்கும் பொழுது, சாதி வெறி எவ்வளவு கேவலமானது உணரமுடிகிறது. அரசியல் அரங்கில் பாமக சாதி வெறியர்களை தனிமைப்படுத்தவேண்டும்.
இதெல்லாம் சும்மா ஒரு மூணு நாளைக்கு இருக்கும்… அப்புறம் வேற வேலைய பார்க்க போயிடுவோம்…. இவ்வளவு விவரமா முடிவெடுத்த பையனும், பொண்ணும், அது மாதிரி கிராமத்துல ஜாதி விட்டு ஜாதி காதலிச்சா டரவுசர கழட்டாம விட மாட்டானுங்கன்னு தெரிய வேண்டாம்… யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செளக்யமே….. இந்த விசயம் எல்லா காதலருக்கும் நல்ல பாடமாக அமையட்டும்….
இளவரசன் தன் உயிரை பலி கொடுத்து காதலின் டவுசரைக் கழட்டமுடியாது என்று காட்டிவிட்டான்.. கழட்டமுடியாத டவுசரை காலம் காதலுக்காக வேகமாக தயாரித்துக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தால் சாதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் எண்ணம் மாறும்..
இன்னும் ஆயிரம் இளவரசன்கள் மீதமிருகிறோம் நண்பரே,
எங்களுகேற்ற தண்டவாளத்தின் ஓரங்கள் உங்களால் தயாரிக்க முடியாது,
பிளந்து போவதனால் பிரச்சினை ஏதுமில்லை,
எங்கள் சிந்தனை மண்டை ஓட்டிற்கு வெளியும் உள்ளது,
நீங்களும் இருக்க வேண்டிய இடம் விரைவில் வந்துவிடும்,
இப்போதே டவுசரை கழட்டி கையில் வைத்துக்கொள்ளுங்கள்.
பாவிகளுக்கு புரியவா போகுது
“ஓடும் உதிரத்தில், வடிந்து ஒழுகும் கண்ணீரில்;
தேடிப்பார்த்தாலும், சாதி தெரிவதுண்டோ அப்பா?
எவர் உடம்பிலும் இரத்தத்தின் நிறம் சிவப்பே அப்பா!
எவர் விழி நீரும் உவர்ப்பே இயற்கை குணமப்பா !”
– என்று கவிமணி பாடிய தமிழகத்தில்,
“சாதி இரண்டொழிய வேறில்லை” ,என்று சாற்றிய தமிழகத்தில்,
சாதியின் பெயரால் கலவரங்கள் நடக்கின்றன!
இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் “மனுதர்மம மனோபாவத்தை’
மாற்ற முன் வரவில்லை,
மாற்ற விரும்பவில்லை;
மாற்ற முடியவில்லை!
என்பது ஒப்புகொள்ள வேண்டிய உண்மையும் வேதனையும் ஆகும்!
கடந்த சில வாரங்களில் திவ்யா நீதிமனறத்திலும், ஊடகத்திலும் பேசிய விசியங்களை பற்றி :
அவர் இளவரசனுடன் மின்மடல் அல்லது செல் மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை.
‘நான் நீதிமன்றத்தில் மற்றும் ஊடகத்தில் சொல்வதை அப்படியே எடுத்து கொள்ள வேண்டாம். அது எமது உறவினர்கள் மற்றும் சாதி சங்கத்தவர்களின் அழுத்தத்தை சமாளிக்க அப்படி பேசுகிறேன். ஆனால் உண்மையில் உங்களை என்றும் பிரியமாட்டேன் / மறக்கமாட்டேன்” என்று மின்மடல் மூலம் தொடர்ந்து இளவரசிடம் பேசியிருந்திருதால் இந்த அநியாய சாவை தடுத்திருக்கலாம்.
மேலும் அவர் “ இன்னும் இரு இரண்டு ஆண்டுகள் நாம் சந்திக்காமல் இப்படியே பிரிந்து இருக்கலாம். படிப்பை தொடர்ந்து முடித்து, இருவரும் ஒரு பெரு நகரில் நல்ல வேலையில் சேர வேண்டும். இரண்டு வருடங்கள் கழித்து இந்த சிக்கல்கள், அழுத்தங்கள் அடங்கிவிடும். பிறகு சென்னை அல்லது பெங்களூரில் வேலையில் சேர்ந்த பின், நாம் மீண்டும் சேர்ந்து வாழ்வோம்” என்று தொடர்ந்து இளவரசனுக்கு ரகசியமாக செய்தி / மின் மடல் அனுப்பியிருக்கலாம். இருவருக்கு 19 வயது கூட முடியவில்லை. இன்னும் சில வருடங்கள் பொறுமையாக ஆனால் சாதுரியமாக சமாளிக்கும் அளவு வயதும், அனுபவ அறிவும் இல்லாதால் வந்த வினை இது.
The people who take the movie about subject love in movie only for money where are they , self advertising people are you people are there.
we should punish them not see their movie.
Where is bharathi raja, pakia raj, kamal, rejini, sasikumar.
All are other kind of robbers
கலப்புத் திருமணம் என்பதே ஒரு போராட்டக் களம்தான். இப்படி காதலிப்பவர்களுக்கு மிகுந்த துணிவும், மனத் தைரியமும் வேண்டும்தான். காதலித்தப் பிறகு செண்டிமெண்ட் பார்ப்பது உசிதமல்ல. செண்டிமெண்ட் பார்க்கும் கோழைகள் தயவு செய்து வ்ரம்புமீறி காதலிக்காதீர்கள்.
நான் இளவரசனை சந்தித்ததில்லை இருப்பினும், அவர் தன் காதலுக்காக போராடியதிலிருந்து, தனது மனைவியை மரியாதையாக விளித்ததிலிருந்து, காத்திருப்பேன் என்ற தன்னம்பிக்கையிலிருந்து, நிச்சயம் வருவாளென்ற மனைவி மீதான நம்பிக்கையிலிருந்து, பார்பனீயத்தை உதாசீனப்படுத்தியதிலிருந்து அவரது இழப்பு தாங்கவொன்னா அதிர்ச்சியளிக்கிறது.
இளவரசா! உன்னுடைய காதல் சாதீய வெறியர்களால் பிளக்கப்பட்டாலும் இலட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களில் மறக்கவொன்னா இளவரசனாகிவிட்டாய். குறித்துக் கொள்கிறோம் உன் சாவைப் பற்றிய விளக்கத்தை, எங்கள் சந்ததியினரிடம் தெரிவிப்பதற்காக.
The robbery PMk people celebrating elavarasan death by fire crackers. I am asking the PMK robberies whether you celebrate the death of Your mother, Fatehr, son, daughter and any of your family members.
May you will be celebrating for the death of your your family members also.because you people are not human beings all are animals, they do not have sense but they have kindness.
சேரிக்காரன் என்பதால்
தற்கொலைக்கு “கொலை” என பெயர்!
ஆதிக்கசாதி என்பதால் கொலைக்கு
“தற்கொலை” என பெயர் (தா.கி)
சேரிகாரன் என்றால் அநீதிகள்
நியாய தராசாகி நிற்கும்..நிற்கணும் அதுதான் புரட்சி! த்தூ
அடே! தமிழா..
எங்கேயடா உனது சமத்துவ தத்துவம்?
எங்கே போனது உனது சகோதரத்துவம்?
சாதி வெறியர்கள் மண்டிக்கிடக்கும்
இந்த மண்ணை, களையெடுக்க வேண்டாமா?
அனைவருக்கும் காணி நிலம் வேண்டுமென்றான்
என் பாரதி….. அவன் பிறந்த மண்ணடா இது..
அந்த கிழட்டு தாடிக்காரன் வாழ்ந்த பூமியடா இது..
கருப்பு சட்டைக்குள், பகுத்தறிவு பகலவனாய்
ஒளி வீசியவன் மாண்டுவிட்டானென்று
நீயும் உறங்கிவிட்டாயா?
பார்,, நீ உறங்கிவிட்டதனால்
சாதி எனும் மலம் தின்னும் பன்றிகள்
இந்த நாட்டை சாக்கடையாக்கி
அதையே உன்முகத்திலும் பூச பார்கின்றன…
எழடா.. தமிழனே…
இந்த சாதியெனும் மலம் தின்னும்
பன்றிகளை, துரத்தி,
இந்த நாட்டை தூய்மைபடுத்த எழடா…
//பார்,, நீ உறங்கிவிட்டதனால்
சாதி எனும் மலம் தின்னும் பன்றிகள்
இந்த நாட்டை சாக்கடையாக்கி
அதையே உன்முகத்திலும் பூச பார்கின்றன…//
இட ஒதுக்கீடு வேண்டுமெனில், சாதி பார்க்கலாம். அப்போது, தவரில்லை…அப்போது, “சாதி எனும் மலம் தின்னும் பன்றிகள்” யார்?
கவிதை அருமை..
என்னோட கவிதை…
திவ்யாவின் இளவரசன்
அப்பன் ஆத்தா வேணாம்னு சொல்ல
வம்படியா காதலிச்சா…
வீட்டை விட்டு ஓடி வந்து
அவன விரும்பி, வாழ்வை ஏத்துகிட்டா…
சாதிசனம் வம்புபண்ண,
“விட்டுத்தொலைஞ்சா எம்பொண்ணு;
அவளை நிம்மதியா வாழவிடுங்க”னு
கெஞ்சிப்பார்த்தான் அப்பன்காரன்…
சாதிப் பெருமை கூவிக்கூவிக்
கும்பல் ஒன்னு புறம் சூழ,
அவ அப்பன் வந்து திருப்பி கூப்டு,
வரமாட்டேன்னு சொல்லிபுட்டா
முகத்தாலே அறைஞ்சுபுட்டா…
திரும்பிப் போனான் அப்பன்காரன்
அவன் செத்த சேதி வந்து சேந்து ,
தற்கொலைனு ஜனங்க பேச
கொலைதான்னு அழுது புரண்டா…
இந்தப் புள்ள காதலிச்சு
அப்பங்காரன் செத்துப்புட்டான்..
இவனுங்க சாதியில குறையுண்டு;
ஆனா, கல்லூடு, வண்டினு
சொகுசா தாண்டா வழறானுங்க..
தலை அன்னிக்கே சொல்லுச்சுல,
ஜீன்ஸும் டிசர்ட்டும், நம்ம பொண்ணுகள மயக்கன்னு..
சீக்கிரம் வாங்கடா, வந்து
தலித் வூட்டைலாம் கொளுத்துங்கடா…
சாதிக் கொழுந்துவிட்டு எரிஞ்சானுங்க…
ஊரு எல்லாம் சாம்பலாச்சு..
எங்க ஊடெல்லாம் அழிஞ்சுபோச்சு…
தலைவரெல்லாம் வந்தாங்க…
ஆறுதல்லாம் சொன்னாங்க…
போட்டோலாம் எடுத்தாங்க..
பேட்டிலாம் கொடுத்தாங்க…
டாட்டாவும் சொன்னாங்க..
வவுத்துலா தான் நெருப்பைக் கட்டி,
நித்தமும் வாழ்ந்து வந்தோம்..
அவள கண்ணுக்குள்ள பொத்திவைச்சு
அழகு பாத்து வாழ்ந்துவந்தான்…
சொந்தம் பாக்க போனவதான்
திரும்பி எட்டிக்கூட பாக்கயில;
எம்பொண்ணக் காணோம்னு சொல்லிப்புட்டு
ஆத்தா போட்டா பாரு ஒரு கேசு..
ஆத்தா கூட இருக்கச் சொல்லி
பேஷா,
பாஷா வந்து சொல்லிபுட்டார்…
போன பொண்ணு திரும்புச்சு
மீடியாவுல வந்துச்சு…
அவ கண்ணு பூர கலங்குச்சு..
என் அப்பன் மூஞ்சு கண்ணுக்குள்ள;
அவன் மூஞ்சு என் நெஞ்சுக்குள்ள;
ஆத்தா சொல்வா வாழச்சொல்லி;
நிர்கதியா நிக்குறேன் இப்போனு…
நேரம் பாத்துகிட்டே இருந்தானுங்க
அந்த நாசகார சாதிப்பயல்க…
ரயிலடிச்சு செத்துபுட்டானு
டிவிப் பெட்டிகுள்ள போட்டானுக…
கூப்பாடு போட்டுச்சுக…
தலித் பையன் காதலிச்சு ஏமாத்தமாட்டான்
தன்னைத்தானே மாச்சுக்குவான்னு
புனிதத்துவம் பேசுச்சுக…
புல் பாட்டில் காமிச்சுதுக…
பைக்கோடு வந்த பயல்
லட்டர் எழுதி வைச்சுருக்கான்னு
கூப்பாடு போட்டுதுக..
அதுக புத்திய காமிச்சுதுக…
எங்க புள்ள
ரயிலடிச்சு செத்துபுட்டானோ..
இல்ல
ரயில்ல அடிச்சு செத்துபுட்டானோ..
இங்க
கண்ணீரும் வரல..
கஞ்சியும் இறங்கல..
பாவிபய ராமதாசு
பரதேசி அன்புமணி
பொறம்போக்கு காடுவெட்டி
உங்களுக்கு
குழிதோண்டி வைச்சுருக்கோம்..
சாதிச் சட்டைய புதைச்சுபுடு;
இல்லாகட்டி அங்கயே படுத்துபுடு…
மீண்டும் தலைவர்கள் வருவாங்க
வீரவணக்கம் சொல்லுவாங்க
போட்டோவும் எடுப்பாங்க
பேட்டியும் கொடுப்பாங்க
டாட்டாவும் சொல்லுவாங்க…
இனியும்,
கூலிங்கிளாஸ் போடுவோம்
ஜீன்ஸ் சட்டை போடுவோம்
பொண்ணுங்களை மடக்க இல்ல
உங்க சாதிவெறியை அடக்க தானே…
காதல்ல சாதி இல்லை
சாதிமேல காதல் இல்லை…
சாதி பாத்து காதல் வேணாம்..
காதலிச்சா சாதி இல்லை…
காதலிக்க அனுப்பி வைப்போம்..
எங்க
ஒத்த புள்ள செத்துப் போனா
இன்னும்
பத்துப் புள்ள அனுப்பி வைப்போம்….
இந்த நாட்டில் எதற்கு பொங்கி எழவேண்டும் எதற்கு ஏன் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே சாதி என்கிற குறிகிய பார்வை உடையவர்கள் மேல் சாதிக் காரர்கள் இல்லை. கீழ் சதி என்று தங்களையே தரம் தாள்திக்கொள்ளும் பாமர மக்கள் தான்.
இந்த உலகத்தில் யார் காதலிக்கவில்லை. ஏன் இந்த அமர்க்களம். ஏதோ இமாலய சாதனை நிகழ்த்தியது போல திவ்யா என்கிற அந்தப் பொண்ணும் இளவரசன் என்கிற பையனும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய சாதனை படைத்தவர்கள் போல சித்தரிக்கப் படுகிறார்கள். ஏன் இந்த அமர்க்களம். சாதி சாதி என்கிறீர்களே அந்தப் பயனுக்கு அவன் சாதியில் பெண் கிடைக்கவில்லையா? அந்தப் பொண்ணுக்கு அவள் சாதியில் மாப்பிளை கிடைக்க வில்லையா. ஏன் உணர்ச்சி வயப்படுகிரீர்கள். .
இல்லாத இந்த நாட்டுக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்த உணன்மையான இந்த நாட்டின் தேசப் பிதா நேதாஜி செய்ததை விடப் பெரிய ஒரு தியாகத்தையா இந்த இரண்டு ஓடிபோனவர்களும் செய்து விட்டார்கள். ஏன் இந்த ஆர்பாட்டம். ஓடுவதற்கு முன்னால் யோசனை இல்லை. தந்தை இறந்து விட்டார் எனக் கேட்டபிறகுதான் அந்தப் பொண்ணுக்கு எங்க இருக்கிறோம் என்று தெரிந்து இருக்கிறது. ஆசையாக பெற்று வளர்த்த மகளை அடுத்த ஒரு சாதிக்காரன் கையில் (மேல் சாதி கீழ் சாதி எந்த சாதியாவது இருக்கட்டும்) ஒப்படைக்க எந்த அப்பன் விரும்புவான்.
இதை வைத்து அரசியல் லாபம் தேட நினைப்பது உண்மையில் ஐயா ராமதாஸ் இல்லை. இன்று தமிழகத்தில் உள்ள விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில தமிழர் தலைவர்களில் ஐயா ராமதாசும் ஒருவர்.(நான் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவன் இல்லை) இதை வரிந்து கட்டிக்கொண்டு விமர்சிப்பவர்களுக்கும் ஒரு விடயம் சொல்லவேண்டும் என்றால் ஆவேசப் படுகிறவர்களுடைய பொண்ணை இன்னொரு சாதிக்காரன் இழுத்துக்கொண்டு ஓடினால் தான் தெரியும் அந்த வருத்தம். நீ சாகவேண்டாம் உன் அடுத்த வீட்டுக் காரனே/காரியே உன்னை வார்த்தையால் சாகடித்து விடுவார்கள் இந்த நிசாரமான உண்மை ஏன் இந்த சாதி பற்றிப் பேசுகிறவர்களுக்கு தெரியவில்லை
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சுலபமாக வெற்றிபெற தமிழர்களாக உள்ள இரண்டு சாதி களுக்குள் மோதல் பிரிவினையைத் தூண்டுவிட்டு அரசியில் லாபம் தேட நினைக்கும் ஆரிய பிரமாண சூழ்ச்சி ஏன் தமிழ் இன மக்களுக்கு இன்னும் விளங்க வில்லை. மீடியா என்கிற பெயரில் தனி மனித விமர்சனங்களை ஊக்குவிக்கிற எப்படியாவது வாழவேண்டும் என்று நினைக்கிரவர்களைப் பிடித்து தூக்கில் போடவேண்டும். அப்போதுதான் இது போன்ற பிரைச்சின களுக்குத் தீர்வு பிறக்கும். ஜனநாக ரீதியாக செயல்படுகிற ஒரு தமிழருடய கட்சியை முடக்கவேண்டும் என்று சொல்வதிலேயே இந்தப் பிரச்சினையை யார் கையாள்கிறார்கள் என்று விளங்கவேண்டும்.
தமிழ் நாட்டிலிருந்து சுமார் 25 மையில் தூரத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னாள் இதே தமிழின மக்கள் ஆண்களும் பெண்களும், எதும் அறியாக் குழந்தைகளும் 40,000 பேர் ஆடு மாடுகளைவிடக் கேவலாமாக கொல்லப் பட்டர்களே. உன் தமிழ் இன அக்கா, தங்கைகள் மானம் இழந்தார்களே அன்று உங்கள் ரெத்தம் ஏன் கொதிக்க வில்லை. இன்று தமிழைப் பற்றிப் பேசுகிறவர்கள் அன்று எங்கே காணாமல் போய் இருந்தார்கள்.
எவனாவது தன்னைத் தாழ்ந்த சாதிக்காரன் என்று நினைத்தால் அவனுடைய முதல் எதிரி ஊடகங்கள் அனைத்தையும் தன வசம் வைத்துள்ள மேல் ஜாதி என்று தங்களைக் கூறிகொள்ளும் ஆரியர்தானே அன்றி உன் அண்டைவீட்டுக் காரன் தமிழன் என்கிற உன் இனத்தான் இல்லை. மக்கள் கூட்டத்தைக் தன கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உங்களைப் பிரித்தாழ அரசுக்கு ஜாதி வேண்டும். மதம் வேண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் என்றும் ஜாதி ஜாதி என்று மக்கள் தம்முள் அடித்துக் கொண்டும் வெட்டிக் கொண்டும் மாள்கிறார்களே அரசு ஜாதியை எடுத்து விட வேண்டியதுதானே.
ஜாதியால ஒரு பயனும் இல்லை. நாமே எல்லோரும் இந்த நாட்டு மன்னர்கள் பிறகு எதற்கு ஜாதி. நீங்க ஜாதி என்கிற பேராலும் மதம் என்கிற பேராலும் உங்களுக்குள்ளாக அடித்துக்கொண்டு வெட்டிக் கொண்டு மாண்டால்தான் புத்தகம் பேப்பர், டிவி, ரேடியோ போன்ற எல்லா மீடியாக் களும் நடக்கும். அப்போதுதான் 3 விழுக்காடு உள்ள ஆரியார்கள் 97 விழுக்காடு உள்ள மற்ற மாக்களை எளிதாக ஆட்சி செய்ய முடியும்.
ஒரு நாளுக்கு இந்த உலகத்தில் லட்சக்கணக்கான பேர் பிறப்பதும் லட்சக்கணக்கானபேர் சாவதும் இயற்க்கை. வாழ்கிறது கொஞ்சநாள் ஏன் ஒருத்தனை ஒருத்தன் அடக்கியாள ஆசைப் படுகிறீர்கள். மனிதர்களாகப் பிறந்தோம். மனிதர்களாய் வாழ்வோம். மனிதர்களை மடிவோம் வரும் சந்ததிக்கு வழி விட்டு. உன் அண்டை வீட்டுக் காரன் உனைப் போன்ற தமிழனாக இருந்தால் உன் எதிரி இல்லை
Very well said Sebatin…
தர்மபுரி- இளவரசன் முதலாமாண்டு நினைவு தினத்தில் உறுதியேற்போம்..!
———————————————————————
*.சாதிமறுப்பு திருமணங்களை முன்னெடுப்போம்.!
*.சாதியை ஒழிக்க உழைக்கும் வர்க்கம் என்று ஒன்றிணைவோம்..!
*.சாதிகளற்ற சமத்துவத்தை படைக்க புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரல்வோம்..!