முகப்புகட்சிகள்இதர கட்சிகள்இளவரசன் தற்கொலைக்கு பாமகதான் குற்றவாளி !

இளவரசன் தற்கொலைக்கு பாமகதான் குற்றவாளி !

-

ரணமடைவதற்கு முன் இளவரசன் எழுதிய கடிதம் கிடைத்திருப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கும், திவ்யாவுக்கும் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல என்று அவர் எழுதியிருப்பதாக தருமபுரி காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க் தெரிவித்திருக்கிறார். அக்கடிதம் இளவரசன் எழுதியதுதான என்பதை உறுதிப்படுத்தும் பணியும் நடைபெற்று வருவதாக அவர் கூறியிருக்கிறார்.

இளவரசன் கிடந்த இடத்தில் போலீசுக்கு முன்பாகவே சென்றவர்கள் அக்கடிதத்தை எடுத்திருப்பதாகவும், பின்னர் விசாரணையில் கடிதம் கிடைத்திருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இளவரசன் உடல்
ரயில்வே தண்டவாளத்துக்கு அருகில் கொல்லப்பட்ட இளவரசனின் உடல்.

சரி, இதன்படி இளவரசன் தற்கொலையே செய்திருப்பதாக முடிவு செய்வோம். இதனால் இளவரசன் மரணத்திற்கு காரணம் பாமக சாதிவெறியர்கள்தான் என்ற முடிவில் மாற்றமில்லை. மாறாக நமது குற்றச்சாட்டு உண்மை என்பதையே இளவரசனது முடிவும், கடிதமும் நிரூபிக்கின்றன. இளவரசன் கொலை செய்யப்பட்டோ இறந்திருந்தாலோ இல்லை தற்கொலையோ செய்திருந்தாலும் அதற்கு காரணம் பாமகவினர்தான் என்று இதற்கு முன்னர் எழுதிய பதிவுகளில் தெரிவித்திருக்கிறோம்.

இளவரசன் திவ்யா திருமணம் முடிந்த பிறகு பாமக சாதிவெறியர்கள் திவ்யாவின் தந்தையை மனம் குறுகும் வண்ணம் கேலி செய்து, விமரிசனம் செய்து, குத்திக் காட்டி, சாதி கௌரவம் இவரால் போனது என்றெல்லாம் பலவாறாக பேசுகிறார்கள். இதை முந்தைய மாதங்களில் திவ்யாவே சில பத்திரிகை பேட்டிகளில் கூறியிருக்கிறார். அவர் கூறவில்லை என்றாலும் அதுதான் உண்மை. அந்த கேலி, கிண்டல், அவதூறு பொறுக்க முடியாமல் திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்கிறார்.

மேலும் இந்த தற்கொலை எப்போது நிகழும், அதற்கு பின்னர் தலித் மக்களின் ஊர்களில் ஆள் சேதமில்லாமல் குடியிருப்பு, பொருட்களை எப்படி அழிக்கலாம் என்று வன்னிய சாதிவெறியர்கள் பாமகவின் தலைமையில் திட்டத்தோடு காத்திருந்தனர். அதன்படி நாகராஜன் மரணம் நடந்த சில மணிநேரங்களில் நத்தம் காலனி மற்றும் அருகாமை தலித் ஊர்கள் சூறையாடப்படுகின்றன.

பிறகு ராமதாஸ் ஏனைய ஆதிக்க சாதிவெறி தலைவர்களோடு ஊர் ஊராக சென்று “நாடகக் காதல்” எதிர்ப்பு என்ற பெயரில் தலித் மக்கள் மீதான துவேசத்தையும், வெறுப்பையும் கிளப்புகிறார். இந்த பின்னணியில் திவ்யா மட்டும் இளவரசனோடு வாழ்ந்தால் தமது வன்னிய கௌரவம், சாதிவெறி, மற்றும் பாமகவின் இமேஜ் பாதிக்கும் என்று இந்த சாதிவெறியர்கள் கொலைவெறியில் இருக்கிறார்கள்.

அதன்படி இந்த கிரிமினல்கள் திட்டமிட்டு திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரிக்கிறார்கள். அதன் பிறகு திவ்யாவின் தாய் தேன்மொழி போட்டிருந்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது பாமக சாதிவெறியர்கள் புடை சூழ திவ்யா கைது செய்யப்பட்டது போல நீதிமன்றம் வருகிறார். பிறகு அவரை அழுது கொண்டே “நான் இளவரசனோடு இனி எப்போதும் சேர்ந்து வாழ முடியாது” என்று பேசவைக்கிறார்கள். அவர் கூற்றில் முக்கியமானது தனது தாய், தம்பி இருவருக்கும் ஏதாவது ஆகிவிடக்கூடாது என்பதுதான். அதன்படி இந்த சாதிவெறியர்கள் எப்படியெல்லாம் மிரட்டியிருப்பார்கள் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.

பிறகு திவ்யாவை இப்படி வலுக்கட்டாயமாக பிரிப்பதற்கு தேன்மொழி சார்பில் வக்கீலாக பாமகவின் பாலுதான் ஆஜராகியிருக்கிறார். அடுத்து திவ்யா இப்படி பிரிந்து விட்டார் என்று எச்சில் ஊற வன்னிய சாதிவெறியுடன் பாமகவின் இணைய கோயாபல்சு அருள் தொடர்ந்து பதிவுகள் போடுகிறார். அதில் பார், நாங்கள் திவ்யாவை பிரித்து விட்டோம், திவ்யா வாயாலேயே பேசவைத்துவிட்டோம் என்ற காட்டுமிராண்டித்தனம் அப்பட்டமாக நெளிகிறது. இது போல திவ்யாவைச் சுற்றி தீவட்டி தடியர்களாக பல பாமகவினர் நின்றார்கள்.

உயர்நீதிமன்றத்தில் திவ்யா
உயர்நீதிமன்றத்தில் திவ்யா

திவ்யா சென்னையில் பாமக ஏற்பாட்டில், பாமக குண்டர்கள் புடைசூழத்தான் தங்க வைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறார். இதிலெல்லாம் பாமக சம்பந்தப்படவில்லை என்று யாராவது சொன்னால் அது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை விட பயங்கரமானது. அடுத்து பாமக வழக்கறிஞர் பாலு ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் யார் கூப்பிட்டாலும் வாதாட போவார், அதை வைத்து இது பாமக சதி என்று கூறக்கூடாது என்று சிலர் லா பாயிண்ட் கேட்கிறார்கள். சரி, ஒரு பறையர் இளைஞன், ஒரு வன்னிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வழக்கில் தனக்காக வாதாடுமாறு இந்த பாலுவை கூப்பிட்டால் வருவாரா? இல்லை இதுவரை எந்த காதல் கதைகளில் இவர் தலித் இளைஞர்களுக்காக வாதாடியிருக்கிறார்?

ஆனால் இணைய கோயாபல்ஸ் அருளே இவர் பாமக வழக்கறிஞர் என்பதால்தான் வாதாடினார் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆக நாகராஜின் தற்கொலை முதல் திவ்யாவின் நீதிமன்ற வாக்குமூலம் வரை பாமகவின் சதிக்குற்றத்தினை ஆதாரத்தோடு பார்த்து விட்டோம்.

அடுத்த நாள் தினத்தந்தியில் திவ்யாவின் வாக்குமூலத்தை பார்த்து இளவரசன் மனம் உடைகிறார். அவரது கடைசி நம்பிக்கையும் பொய்த்துப் போனதாக சோர்ந்து போயிருக்கிறார். பாமக எனும் கட்சி, வன்னியர் சங்கம் எனும் கூட்டம், இவர்களை ஒரு எளிய தலித் இளைஞன் எதிர் கொண்டு வாழ முடியாது என்று அவருக்கு தோன்றியிருக்கலாம்.

தன்னை ஆழமாக நேசித்து காதலித்து மணம் முடித்த தனது மனைவியையே இப்படி மிரட்டி பேசவைத்துவிட்டார்களே என்ற ஆதங்கம் அவரை அலைக்கழித்திருக்கிறது. இனி எந்நாளும் சேர முடியாது என்று அவர் முடிவு செய்கிறார். இந்தப் போக்கில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஆக, தான் வாழ முடியாது, திவ்யாவுடன் சேர முடியாது, திவ்யாவை பாமக சாதிவெறியர்கள் இருக்கும் வரையிலும் திரும்பப் பெற முடியாது என்ற உண்மைதான் இளவரசனை தற்கொலை செய்ய வைத்திருக்கிறதே அன்றி வேறு எதுவும் அல்ல. ஒரு இளைஞன் தான் இந்த சமூகத்தில் வாழமுடியாது எனும் நிலை எடுக்க வேண்டுமென்றால் அது பாரதூரமான காரணங்களாலேயே இருக்க முடியும்.

ஏனெனில் தற்கொலை செய்து கொள்ளும் நபர் அந்தக் கணத்தில் தனது உயிரினைத் துறக்கும அதீத தைரியத்தை பெறுகிறார். அதாவது தனது உயிரை ஒருவன் துறக்கிறான் என்றால் அவனுக்கு இந்த வாழ்க்கையில் கிஞ்சித்தும் வழியில்லை என்ற யதார்த்தமே அப்படி தள்ளுகிறது.

அந்த வகையில் பாமக சாதிவெறியர்கள்தான் இளவரசனை தற்கொலை செய்ய வைத்த முதன்மையான குற்றவாளிகள். அந்த வகையில் தற்கொலையை நிறைவேற்றியவர்கள் என்ற வகையில் இவர்கள் கைது செய்யப்பட்டு உரிய பிரிவுகளில் வழக்கு தொடுக்க வேண்டும். அதன்படி இளவரசனது தந்தை கொடுத்திருக்கும் புகாரின் படி ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு, டாக்டர் செந்தில், வழக்கறிஞர் பாலு அனைவரும் கைது செய்யப்படவேண்டும். மேலும் தருமபுரி உள்ளூர் அளவில் உள்ள பாமக தலைவர்களும் கைது செய்யப்பட வேண்டும்.

திவ்யாவின் தாயார் தேன்மொழியை சந்தித்து குறுக்கு விசாரணை செய்யும் எவரும் மேற்கண்ட உண்மைகளை சுலபமாக வெளியே கொண்டு வரலாம். தனது தந்தை, மற்றும் கணவனைக் கொன்றுவிட்டவர்கள் யார் என்பதை அறிந்த திவ்யாவும் உண்மைகளை பேசினால் வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை.

ஆனால் இளவரசனது மரணத்திற்கு காரணமான பாமக சாதிவெறியர்களை தப்புவிக்கும் முகமாகவே அரசு செயல்பட்டு வருகிறது. தன்னை எதிர்த்துப் பேசியதால் பாமக தலை முதல் வால் வரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கும் ஜெயா அரசு, இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் வாயே திறக்கவில்லை. அவர் நியமித்திருக்கும் நீதிபதி விசாரணை கூட இளவரசன் குடும்பத்திற்கு ஏதாவது நிவாரணம் என்று மட்டுமே முடியும்.

தருமபுரி வந்து விசாரித்து சென்றிருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கூட அதைத்தான் சொல்லியிருக்கிறது. மேலும் அனைத்து ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும், தலைவர்களும் கூட “நடந்தது நடந்து விட்டது, இனி சமாதானமாகவே வாழ்வோம்” என்று நடந்த குற்றத்தை மறைக்கவே செய்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் விடுதலை என்று அரசியல் செய்யும் விடுதலைச் சிறுத்தைகளும் இளவரசன் மரணத்துக்குக் காரணமான பாமக குற்றவாளிகளை கைது செய் என்று கோரவில்லை. ஏனெனில் பாமகவுடன் சுமுக உறவு வைத்திருந்தால்தான் விடுதலைச் சிறுத்தைகளும் அரசியலில் காலம் தள்ள முடியும். மாறாக, வட தமிழகத்தில் பல்வேறு வன்னியர் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வன்னியர்களைத் திரட்டியிருக்கும் எமது மகஇக மற்றும் தோழமை அமைப்புகள்தான் பாமக சாதி வெறியர்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்து வருகிறோம்.

எனவே, தமிழகம் சாதி வேறுபாடுகளின்றி சமத்துவ உரிமையுடன் மக்கள் வாழவேண்டுமென்றால் பாமக சாதி வெறியர்கள் ஈவிரக்கமின்றி தண்டிக்கப்படவேண்டும்.

ஒரு தலித் இளைஞன் காதலித்தால் அவன் வாழ முடியாது என்று இந்த சாதிவெறியர்கள் விதித்திருக்கும் பத்வாவை ஒழிக்காமல் அப்படி பத்வாவை விதித்திருக்கும் இந்த காட்டுமிராண்டிகளை தண்டிக்காமல் நாம் நாகரீக உலகில் வாழ்கிறோம் என்று யாரும் சொல்ல முடியாது.

எனவே இளவரசனது கொலையை விட தற்கொலை என்பது பாரிய அளவில் பார்க்கப்பட வேண்டும். அதற்கு காரணமாக பாமக சாதிவெறியர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

 1. அய்யோ… அம்மா.. கீழ விழுந்துட்டேனே…

  நல்ல வேளை யாரும் பாக்கல…

  மீசைலயும் மண் ஒட்டல.

  • HERE IN CHENNAI WHILE CLEANING THE HOTEL TABLE AS SERVERS, THESE BOTH CASTE PEOPLE NOT MURMOURING ABOUT THEIR CASTE SUPERIORITY……..EVEN CALLING AMONG THEMSELF “MAMAN …..MACHAAN”……….AFTER PASSING OUT VILLUPURAM WHY THEY ARE FIGHTING EACH OTHER ……………GRACY YAR

   • True,i have seen worse.PMK chairman of a village was a vanniyar woman,her husband was the real boss and he was dalit and i have seen vanniyars drunk and practically begging for money/contracts to this guy.

 2. this is not suicide definitely……

  plz see all the photos…..if this boy hitted by train while committing suicide…..he cant fall after train engine hitted him, exactly where he was sitting just before minites and exactly nearby his belongings such as bag/liquor/matchbox/cigar/bannana kept on the culvert where he was sitting……it is an arrangement the culprits made after killing………..

  • ஹா ஹா ஹா…… நல்ல கற்பனை.
   நீங்கள் தான் 007 சீனா தானாவா? உங்க மயிர் மீடியா, பத்திரிகை, அரசு, காவல்துறை எது மேலயும் நம்பிக்கை இல்லையா திரு.குமார் அவர்களே?

 3. உங்களின் அலசல்,ஆய்வு சில முரண்பாடுகள் இருந்தாலும் விவாதிக்க கூடியதே!
  21-ஆண்டுகள்,பொருளாதார நெருக்கடியில் வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களைவிட காதல் ஒன்றும் பெரிதல்ல என்பதை முற்போக்குவாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

  காதலர்களும் புரிந்து கொண்டு தாய்,தந்தையரை நேசியுங்கள்.தயவுசெய்து வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள்.வழியப்போய் வம்பு தேடி,சுகமான வாழ்க்கையை சுட்டெரிக்கும் தீயில் சுட்டுவிடாதீர்கள்!ஒரு முறை சுட்டுவிட்டால் அது தொடர்ந்து வாழ்க்கை முழுவதையும் எரித்துவிடும்! முடிவில் சாம்பல்கூட மிஞ்சாது.எச்சரிக்கையுடன் காதலை தொடுங்கள்.ஒரு காதல் வழியில் இரண்டு உயிர்கள் மரணித்து,இரண்டு குடும்பங்கள் நடுத்தெருவில்… நினைக்கவே நெஞ்சு எரிகிறது….

  இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தமிழநாடு தீரன்சின்னமலைபாசறை,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம்.

  • மேலவளவு பஞ்சாயத்து தலைவர் சாதிவெறியால் படுகொலை செய்யப்பட்ட போது பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆசைப்பட கூடாது.சாதி தொழிலை செய்து அமைதியாக வாழுங்கள் என்று கூறுவீர்களா

   ராணுவ வீரர்கள்,காவல்துறையினர் கொடூரமான முறையில் உயிர் இழந்த நிகழ்வுகளின் போது ,இனி யாரும் இந்த வேலைகளை பற்றி யோசிக்காதீர்கள் .அரசு திட்டமான கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் கிடைக்கும் வேலையை பார்த்து கொண்டு இருங்கள்.அது நல்லது என்று உங்கள் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும் சொல்வீர்களா

   தீயணைப்பு துறை பணியில் மாட்டி கொண்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் காயமடைந்த பெண்ணை பார்த்து உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம் .ஒழுங்க வீட்டில வேலைக்கு போவாம இருந்தா இப்படி காயம் பட்டு இருக்குமா என்று பேசுவதை போல தானே நீங்கள் பேசுவது.

   காதலர்களுக்கு மட்டும் ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற மிரட்டல் அறிவுரை என்ற பெயரில் எங்கிருந்து குதிக்கிறது.

  • இங்கேயும் உங்கள் விளம்பரமா?… காதல் ஒன்றும் தவறில்லை… தீ…. சுட்டுவிடாதீர்கள்… சாம்பல் கூட மிஞ்சாது… விளங்கும்படி சொல்லுங்கள்.

 4. இந்த தற்கொலையை எல்லாம் நியாயப்படுத்துவதில் அபத்தம்தான் உள்ளது.20வயது கூட நிரம்பாத,சுயசம்பாத்யம் இல்லாத ஒருவன் தன் மகளை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்றால் அப்பனுக்கு வருத்தம் வராதா என்ன…தனக்கு பொறுமை இல்லை மெச்சூரிட்டி இல்லை என்பதையும் நிரூபிக்கிறது இந்த தற்கொலை(தற்கொலை என்னும் பட்சத்தில்). எளிதில் அடுத்தவர் கருத்துக்கு,செவி சாய்க்கிறவள் அந்த பெண் என்ற நிலைமையில் இன்னும் காத்திருந்தால் குடியா முழுகிவிடப்போகிறது…

  இதே உணர்ச்சிவசப்பட்டுத்தான் அந்த அப்பனும் தற்கொலை செய்துகொண்டான்…பாமகவின் பங்கு என்னைப் பொறுத்தவரை இரண்டாம் பாகத்தில்தான். மெச்சூரிட்டியே இல்லாதவனாகவே இளவரசனை பார்க்கிறேன்…பாவம் அந்தப் பெண்…ஜாதி வெறியில் மாட்டிக்கொண்டுவிட்டாள்…

  போய் கேளுங்க தமிழ்நாட்டில் எந்த பெற்றோராவது 19வயது ஆணுக்கு(அப்பாவின் கையை நம்பி இருப்பவனுக்கு) தன் மகளை திருமணம் செய்துகுடுக்க உளப்பூர்வமாக ஒத்துக்கொள்வார்களா என்று. அவன் நல்ல நிலைமையில் இருந்தால் பிரச்னை சுமூகமாக முடிய நிறைய வாய்ப்புக்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்…

  முதலில் இருந்தே கோணல்தான்…பாமகவின் ஜாதிவெறி, அந்த பையன் செய்தது சரிதான்(தற்கொலை வரை)னு யோசிக்கிற குருட்டுத்தன சிந்தனைக்கு வழிவகுத்துவிட்டது…

  • ஒரு விஷயத்தை ஒழுங்காக தெரிந்துகொள்ளாமல் வந்து கருத்து சொல்லும் இன்னொரு கந்தசாமியா நீங்க?

   இளவரசன் போலீஸ் வேலைக்கு தேர்வாகி இன்னும் சில மாதங்களில் சேரவிருந்தவர். திவ்யாவுக்கு கட்டாயத் திருமணம் நடத்தப்படப் போகிறது என்றும் தன்னை அழைத்துச் செல்லுமாறும் திவ்யா சொன்னதால்தான் இவர்கள் அவசரத் திருமணம் செய்து கொண்டார்கள்.

 5. I don’t find any hard action from P.M.K after Ramadas arrest, whereas media like you make more conflict and irritate the parties. Government have to take action against organisation like yours and might have limitation in freedom of media’s.

  There were already two death due to P.M.K, V.C.K and other politicians but you people will not stop till that girl meet suicide / death.

  vazhga Jananayagam.

  • //There were already two death due to P.M.K, V.C.K and other politicians //
   அதற்கு என்ன தண்டனை?? இந்த காந்தியின் குரங்குபொம்மைகளை உங்கள பாத்து தான் செஞ்சாகளா?

   • தாழ்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக இளவரசனின் செயல் சரி என ஒத்துகொள்ளும் மனநிலை எனக்கு இல்லை.

    சட்ட பூர்வமான திருமண வயது வரும் முன் ஒரு பெண்ணை வீட்டுக்கு கூட்டி வந்த பிள்ளையை கண்டிக்காமல் அதற்கு ஆதரவு தெரிவித்து, பெண்ணின் தகப்பன் தற்கொலை செய்தபோது கூட கலங்காமல் இருந்த இளவரசனின் பெற்றோர் இன்றும் சமுதாயத்தில் உள்ள ஒரு தரப்பை மட்டுமே குற்றவாளிகள் என பழி சொல்வது எந்த விதத்தில் நியாயமாகும். முறையாக அனைத்து அரசியல் கட்சிகளையும் அல்லவா சாடி இருக்க வேண்டும்.

    பா.ம.க சாதியை வைத்து அரசியல் செய்கிறது, சரி தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சி சாதியை தொடாமல் அரசியல் செய்கிறது?

    இந்து திருமண சட்டபடி ஆனுக்கு 21வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும் என்றால், அது திருமணதிற்கு தான் காதலிக்க இல்லை என்பது வீண் விவாதமே. ஒருவேளை உங்கள் குழந்தை 16 வயதில் காதலிக்கிறேன் என்றாலும் ஏற்றுக்கொண்டு பின் திருமண வாழ்கை பிடிக்கவில்லை என்று வந்தால் மீண்டும் மற்றொரு திருமணம் நடத்தி வைபீர்களே ஆனால் நீங்கள் முற்போக்குவாதி என உங்களை சுற்றி உள்ள கூட்டம் பாராட்டலாம் ஆனால் பெரும்பான்மை சமூகத்தால் இகழ்சியாகவே நடத்த படுவீர்கள்.

    Note:
    எழுத்தில் நாகரீகத்தை கடைபிடிக்க சொல்லி வாசகர்களிடம் கேட்கும் வினவு தன் எழுத்தாளர்களிடம் இது பற்றி எதுவும் கேட்பதில்லையா?

 6. இந்த மாதம் மட்டும் 250 தர்கொலைகள் நடந்துள்ளன.இது ஒன்ரு மட்டும்தான் பெரிய விஷயமாக்கப் படுகிரது.அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இந்தநெருப்பில் குளிர் காய்கிறார்கள்.தெ.கு.தீரன்சாமி சொல்வதைநான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்,

  • தெ.கு.தீரன்சாமி மாதிரியான சாதிக்கட்சி ஆட்கள் இருப்பதால் தான் 250 தற்கொலைகள் நடந்திருக்கின்றன.

 7. பையனுக்கு 19 வயதுதான் அதனால் மெசூரிட்டி இல்லை என திரும்ப திரும்ப ஓதப்படுகிறது. இருவரும் காதலிக்கின்றனர் மனப்பூர்வமாக. அவர்கள் ஏதேனும் ஒரு வேலையில் சேரும்வரையில் காத்திருப்பார்கள்தான். ஆனால், காதல் விஷயம் தெரிந்த உடனே மெசூரிட்டிகள் பெண்ணை மிரட்டுவது, மாப்பிள்ளை பார்க்க துவங்குவதுதான் அவர்கள் ஓடிப்போக காரணமாக அமைகிறது.

  • 19 வயது. (MATURITY) பக்குவம் வந்தாலும்,வரவில்லை என்றாலும். இந்திய இந்து திருமண சட்டபடி ஆண்களுக்கு 21,பெண்னுக்கு 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.

   ஓ… இது தலித்களுக்கு பொருந்தாதோ? இல்லை வன்னியர்களுக்கு எதிராக பயன்படுத்தும் போது இது தகுதியிழக்கிறதா?

   • ஒருவேளை இங்கும் SC/ST க்கு வயது வரம்பில் சட்டத்தில் சலுகை அருவித்திருப்பார்களோ?

    • பெண்ணை கட்டாயத் திருமணம் செய்விப்பதும் தான் குற்றம். இளவரசிக்கு விருப்பமில்லாமல் மணம் செய்விக்க ஏற்பாடு செய்ததால் தானே அவர்கள் அவசரமாக திருமணம் செய்ய நேரிட்டது.

     • அப்போ விரும்பிய பெண் கிடைக்க திருமண வயது நிரைவடையவில்லை என்றாலும் 13,14 வயசுல கூட திருமணம் செய்துகொல்லாம். எப்போது இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது?
      இல்லை தலித்களுக்கு மட்டும் இதிலும் சலுகையா?

      21 வயதுக்கு முன்பு வருவது காதல் இல்லை.வெரும் இனக்கவர்ச்சி.

   • அவங்களுக்கு கோட்டா இருக்குண்ணே…

    சட்டத்துக்கு முன்னால நாம தான் கூனி நிக்கனும்.

    அவனுங்களுக்கு சட்டமும் கெடையாது. ஒரு மயிரும் கெடையாது.

 8. கருத்து சொல்பவர்கள் இளவரசன் – திவ்யா போன்ற காதல் தம்பதிகள் பா.ம.க தலைமை போன்ற கிரிமினல்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக் கொண்டு வாழ்வது என்கிற வகையில் கருத்து சொல்லாமல்,காதல் ஒன்றும் பெரிதல்ல,சுயசம்பாத்யம் இல்லாத,மெச்சூரிட்டியே இல்லாதவன், அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் என்கிற வகையில் கருத்து சொல்வது ,இது ஒருவகையில் சம்பவத்தின் மையத்தினை விட்டு விலகி மற்ற எல்லோரையும் ஏமாற்றும் செயலே!இதற்கு யாரும் பலியாகிட வேண்டாம்.

 9. Harmon levels are rising. Don’t go that too far to make PMK alone guily , accountable ,liable for all these happenings. It can happen in any family but media has dragged the issue to huge extent.Let all the caste outfits take apart and dissolve their parties and then we make a request to Dr Ramadoss to dissipate the PMK.

 10. தமிழகத்தில் எந்த சாதியும் எந்த குடும்பமும் இந்தவகை காதலை ஏர்கும்நிலையில் இல்லை என்பதே இன்ரையநிலவரம்.வினவின் எழுத்துக்கல் அதைநீட்டிக்கவே உதவும்.மேலும் ப ம க வலரவே உதவும்

  • //வினவின் எழுத்துக்கல் அதைநீட்டிக்கவே உதவும்.மேலும் ப ம க வலரவே உதவும்//
   எப்படி??

 11. , வட தமிழகத்தில் பல்வேறு வன்னியர் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வன்னியர்களைத் திரட்டியிருக்கும் எமது மகஇக மற்றும் தோழமை அமைப்புகள்தான் பாமக சாதி வெறியர்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்து வருகிறோம்.// நல்ல நக சுவை போரட்டத்துக்கு அவன்த அவன் ஜாதி இல்லை என்று சொல்லி வரவில்லை எல்லாம், ஒரு புரட்சி புகழுக்கே

 12. யாரு அந்த வக்கீல் ரஜினிகாந்த் அவர் எதுக்கு இலவரசன்க்க்கு வாதடனும் எந்த வன்னியன் வழக்கில் வாத்டியது உண்டா இந்த ரஜினி அப்பா இவனின் தூண்டுதல் தானே அந்த பையன் பெண்ணை கூபிடுகிடு போக காரணம்

 13. சட்டப்படி செல்லாத திருமணத்திற்கு, அப்பன் கையை எதிர்பார்த்து வாழும் ஒரு சிறுவனுக்கு, இன்றும் கூட ஒரு பிரச்சினையை சமாளிக்க தெரியாமல் இறந்த கோழைக்கு அறிவுரை சொல்ல துப்பில்லை. வெறும் சாதினால காதலர்கள் பிரியிராங்கனு சொல்வதெல்லாம் ஒரு மிகப் பெரிய கட்டுக்கதை. பொருளாதாரம், வாழ்வதற்கான பக்குவம் போன்ற பல்வேறு காரணிகள் உள்ளன. எதோ எந்த மயிரவையாவது எழுதி கலகமூட்டி குளிர் காயும் ஓநாய்தான நீங்களெல்லாம். தலித்னா அவன் ஒன்னும் வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. சும்மா வன்னியனை குற்றம் சொல்ல உங்களுக்கு ஒரு காரணம் வேணும் இல்ல. இதே ரஜினிகாந்த் மாதிரி தலித் வழக்குரைஞர் அவனுக்கு வாதாடலாம். இந்த பெண்ணுக்காக ஒரு வன்னியர் வாதாடினால் அது தேசத்துரோகமா? உண்மையை பேசுங்கடா

  • illavarasan irranthuvittathaall mattum vannia pengal thalithgalai kaathalikkamal poga povathu illai…….ipothu koda enn vooril ithu poola silar kathalithu koduthan irrukirrarrgal……

 14. தன் மகன் வளர, தமிழகத்தை பிளவுபடுத்தி, தமிழரை தலைகுனிய வைத்து , மரணத்தையும் கேவலப்படுத்த நினைக்கும் மனநோயாளிகளை உருவாக்கி ,……ஹூம்ம்ம் வேறென்ன சாதித்துவிட்டீர்கள் டாக்டர் !!??? புற்றுநோய் போல சாதி வெறி மறுபடியும் வளர்ந்து வருகிறது !!

 15. “எனக்கு இளம்பருவத்துல காதலே வந்ததில்ல, நம்புங்க பாஸ்” அப்படீனு எவனாவது சொன்னா நீங்க “எனக்கு இளம் பருவத்தில் யூரினே வந்ததில்ல நம்புங்க பாஸ”அப்படீனு நீங்க சொல்லுங்கள்.

  //ஜனகிரமன்

 16. அரசியல் நாடக மனநோயாளி தன் சுயநலத்துக்காக தன் மகனின் அரசியலுக்காகவும் செய்த அருவருப்பு நாடகம் தான் இந்த சாதி வெறி அவலம் !!
  ஒரு காதல் ஜோடியை பிரித்து , தந்தையை கொன்று , காதலனை மரணிக்க வைத்து செய்த கோர தாண்டவம் தான் இது !! இளவரசன் செய்த தவறு என்ன ??!!
  நாசமாக போகட்டும் சாதி வெறி சனியன்கள் !!

 17. திஸ் இஸ் கால்டு அந்தர் பல்டி.

  சரி! இதை பத்தி ஒன்னுமே நீங்க சொல்லல்லியே!! ஏன்? உங்க லிஸ்ட்ல இத ‘ஒதுக்கிட்டீங்களா’?

  /////
  //ரஜனி சார், அம்மா இளவரசன ஏத்துகிட்டா நான் சேர்ந்து வாழத்தயாரா இருக்கிறதா தவறான ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டதனால,//

  வக்கீல் ரஜினி செய்த பொய்க்காரியம் திவ்யாவை ஒரு பேட்டிக் கொடுக்க வைத்து..ஒரு உயிரை காவு வாங்கிவிட்டது… இந்த _______ தூக்குல போட்டாவே இன்னும் நிறைய உயிர்களை காப்பாத்தலாம்…
  /////

  • illavarasan irranthuvittathaall mattum vannia pengal thalithgalai kaathalikkamal poga povathu illai…….ipothu koda enn vooril ithu poola silar kathalithu koduthan irrukirrarrgal…………innum 100, 1000, 1000000 thivyakkal kaathal saithukonduthan irruppargal…….THALITH PAIYYANGALLAI…..

 18. தமிழனாவது, மசிராவது சாதி தாண்டா எல்லாம்!!

  Print
  Email

  Details
  Published on Saturday, 06 July 2013 15:53
  Written by ndpfront
  Hits: 289

  படம்: நன்றி வினவு

  படம்: நன்றி வினவு

  அவன் மனிதன் இல்லை, தமிழன் இல்லை. அவன் பறையன், ஏழை. அவனிற்கு காதல் வர வேண்டுமென்றால் இன்னொரு பறைச்சி மீது தான் காதல் வர வேண்டும். அவள் வன்னியப்பெண். அவளிற்கு மனதில் காதல் அரும்பும் போது அவள் தனது காதலனின் சாதிச்சான்றிதழை வாங்கிப் பார்க்க வேண்டும். அவன் வன்னியனாக இருக்க வேண்டும். வேறு உயர்சாதி என்றாலும் காதலிக்கலாம். ஆனால் தப்பித்தவறியும் தாழ்த்தப்பட்டவனாக இருக்கக் கூடாது. மீறி இளவரசன், திவ்யா போல திருமணம் செய்து கொண்டால் தந்தை தற்கொலைக்கு தள்ளப்படுவார். தாய் மன உளைச்சலில் நோயாளி ஆக்கப்படுவார். மணப்பெண் தந்தையின்றி தவிக்கும் தன் பெற்றெடுத்த தாயிற்காக காதலை, கண் நிறைந்த கணவனை துறப்பாள். இறுதியில் அவன் தன் உயிர் துறப்பான்.

  ஜந்தறிவு கொண்டவை என்று மனிதனால் சொல்லப்படும் மிருகங்கள் பருவகாலங்களில் உறவு கொள்ளும் போது, அந்த ஜோடியின் உறவிற்குள் அடுத்த மிருகங்கள் மூக்கை நுழைப்பதில்லை. பிராமணச்சிங்கம், வன்னியச்சிங்கம், பறைச்சிங்கம் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. சிங்கமும், புலியும் உறவு கொண்டு லைகர் (LIGER) என்ற புதிய இனத்தையே உருவாக்கி இருக்கின்றன. ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்தகுடிக் கூட்டத்திற்கு காதலிக்க வேண்டுமாயின் சாதிவெறி நாய்களின் சங்கத்தில் அனுமதி பெற வேண்டும்.

  காதலிப்பதற்கு, மணம் செய்வதற்கு இரு மனங்கள் தான் தேவை என்ற அடிப்படை உயிரியல் இந்த சாதிவெறி நாய்களின் தலைவனான மெத்தப் படித்த மேதாவி மருத்துவனிற்கு தெரியவில்லை. கறுப்புக்கண்ணாடியும், காற்சட்டையும் போட்டுக் கொண்டு தன் சாதி பெண்களை பள்ளனும், பறையனும் மயக்குகிறார்கள் என்று பெண்களை அது கேவலப்படுத்துகிறது. குச்சிமிட்டாயும், குருவிரொட்டியும் குடுத்து குழந்தைப்பிள்ளைகளை கூட்டிப் போகிறார்கள் என்று அது கூக்குரல் இடுகிறது.

  இந்த லட்சணத்தில் இந்த பன்னாடைகள் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று இனத்திற்காகவும், மொழிக்காகவும், நாட்டிற்காகவும் உயிரையும் கொடுப்போம் என்று வீரவசனம் பேசுகின்றன. பல்லாயிரம் போராளிகள் பாடுபட்டு கொண்டு வந்த பகுத்தறிவும் சமுகநீதியும் தான் தங்களின் கொள்கையும் என்று பல்லைக் காட்டுகின்றன. இது பத்தாது என்று கார்ல் மார்க்சின் படத்தை வேறு மேடைகளில் வைத்து நாங்களும் பாட்டாளிகள் தான் என்று பம்முகின்றன. பெரியார் இருந்திருந்தால் செருப்பாலேயே இந்த வெங்காயங்களை வெளுத்திருப்பார். தமிழ்நாட்டு தமிழர்கள் இருவரை வாழவிடாமல் கொலை செய்த இந்த சாதிச்சாக்கடை பன்னிகள் தான் ஈழத்தமிழர்களின் தோழர்களாம். இலண்டன் வரை கூப்பிட்டு மாநாடு நடத்துகிறார்கள் இளிச்சவாய் ஈழத்தமிழர்கள். எஞ்சி இருக்கும் ஈழத்தமிழரில் எவராவது சாதி மாறி மணம் செய்தால் அங்கு வந்தும் கொலை செய்யக் கூடிய கொடியவர்கள் தான் இவர்கள். மகிந்து இனப்படுகொலையாளி என்றால் இவர்கள் சாதிப்படுகொலையாளிகள்.

  சவுதியின் மதச்சட்டங்கள் பணக்கார வெள்ளை நாடுகளை சேர்ந்தவர்கள் குற்றம் செய்தால் தொட்டுக் கூட பார்ப்பதில்லை. ஏழைத்தொழிலாளர்கள் என்றால் ஏன் என்று கூட கேட்காமல் தலையை வெட்டும். அது போல இவர்களின் சாதிச்சட்டங்களும் இவர்களின் சாதிப்பெண்கள் வேறு உயர்சாதி ஆண்களை கலியாணம் கட்டும் போது சத்தம் போடாமல் வாயையும், மற்றதையும் பொத்திக் கொள்ளும்.

  கொப்புக்கு கொப்பு பாயும் கொரில்லா போல தமிழ்குடிதாங்கி மருத்துவர் அய்யா தேர்தலிற்கு தேர்தல் கட்சி தாவி அரசியல் கூட்டுக்கலவி செய்யும் போது சாதியோ, இனமோ பார்ப்பதில்லை. அது நான் பார்ப்பனத்தி தான், என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று பார்ப்பனியத்தின் நச்சுவேர்களை அறுத்தெறிந்த தமிழ் மண்ணிலேயே நின்று தம்பட்டம் அடிக்கும் ஜெயலலிதா என்றாலும் சரிதான், ஈழத்தமிழரின் இரத்தம் குடிக்கும் சோனியாவின் காங்கிரசு என்றாலும் சரிதான். மகனிற்கு மந்திரிப்பதவி கொடுத்தால் போதும்.

  இளவரசனின் இரத்தம் குடித்த பின்னும் இவர்களின் சாதிவெறி சற்றும் குறையவில்லை. வேலை இல்லாதவனிற்கு காதல் எதற்கு, அறியாப் பருவத்தில் ஆசைப்பட்டால் இப்படித்தான், வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்ற அக்கறையில் தான் அய்யா அட்வைசுகளை அள்ளி விட்டார் என்று அகிம்சை பேசுகின்றன. நாய்களே, அவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? வேலையில்லாத வன்னியர்கள் எவரும் காதலிக்கவில்லையா? இளவயதில் மணம் செய்து கொண்டதில்லையா? அப்போதெல்லாம் உங்களின் ஊத்தை வாய்கள் ஏன் ஊளையிடவில்லை.

  அவன் மனிதன் இல்லை, தமிழன் இல்லை. அவன் பறையன், ஏழை. அவன் வன்னியப் பெண்ணை காதலிக்க கூடாது. அவர்கள் வன்னியர்கள். உயர்ந்த சாதி. வன்னிய குல சத்திரியர்கள். ஏனெனில் அவர்களின் ஆண்குறிகளில் சாதி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுக்கொரு சாதி, சாதிக்கொரு சங்கம், சங்கத்தை வைத்து கட்சி, கட்சியை வைத்து மக்களை கொள்ளயடிப்பது, சாதிப்பெருமை பேசி கொலை செய்வது தான் ஆயிரம், ஆயிரம் மனிதர்கள் தம் உழைப்பையும், உயிரையும் கொடுத்து போரிட்ட தமிழ்மண்ணின் கையறுநிலையா? பகுத்தறிவும், சமத்துவமும் சேர்ந்து இவர்களிற்கு பாடை கட்ட வேண்டும்.

 19. காலமானவர்களை பற்றி தவறாக பேசகூடாது. அவர்களின் சிறப்பை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்பது மரபு. ஆனா இங்கே கமெண்ட் என்கிற பேரில் வாந்தி எடுக்கும் அரவேக்கடுகளினால் இந்த மரபை பலர் மீறுகிறார்கள்.

  அறைவேக்காடுகளே, சமூக பொறுப்போடு பேசுங்கள்.

  • //காலமானவர்களை பற்றி தவறாக பேசகூடாது. அவர்களின் சிறப்பை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்பது மரபு.//

   தவறு. காலமானவர்களைப் பற்றி ஆதாரம் இல்லாமல் அவதூராக தான் பேசக்கூடாது…ஏனெனில், அவர்களால் தங்கள் பக்க நியாயத்தை நிரூபிக்க முடியாது…!!

   வி.பி.சிங் போன்ற அயோக்கியனைப் பற்றி சிறப்பாகத் தான் பேச வேண்டும் என்றால், என்னால் முடியாது…அதே போன்று, மோடியின் இறப்புக்குப் பின், வினவு தான் அவரைப் போற்றப் போகிறதா?

 20. கள்ளக்காதலில் பாமக பிரமுகர் ஆணுறுப்பு நசுக்கி கொலை !

  ஆத்தூர் அருகே கல்பகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ஆறுமுகம்,அந்தப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கியவர் ???????????????

  ஆறுமுகம் செல்வி எனும் பெண்ணால் , கள்ளக் காதலியால் ,ஆணுறுப்பு நசுக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார் !!!!!!!!!!!!!!!!!!!!!

  ஷத்திரிய குலத்தின் மானமும், மர்மமும், கொலையும் பாரத நாட்டின் புகழ்பெற்ற வசிஷ்ட நதிக்கரையில்தான் நடந்திருக்கிறது என்பது முக்கியம்.

  அனைத்து சாதிவெறியர்களையும் அவர்களது சாதித்திமிர் எனும் ஆண்குறியையும் தமிழக மக்கள் நசுக்கி ஒழிக்கும் காலம் வராமல் போகாது…………………..

 21. இப்போது புரிந்து விட்டது இளவரசனின் காதல் ஆழம்.

  சப்ப மேட்டருக்கே செத்துப் போயிட்டானே….

  இவனுக்கு சப்போர்ட் பண்ண வினவும், வி னா சி னா வும் நடு ரோட்ல தூக்கு மாட்டி தொங்குங்க.

  தலித் அராஜகத்துக்கு முடிவு வெகு விரைவில்..

  • ராச இந்த சப்ப மேட்டர கூட இந்த தமிழ்நாட்டுல சேர்த்து வைக்காம அரசியல் பண்ணி பிரிச்சது நீதான

   • அவன் செத்ததுக்கு காரணம் நீங்க தான். அவன் பேர சொல்லி நீங்க பண்ணுன அரசியல் நாடகம் கல்நெஞ்சம். அதான் செத்தான். கோழைப்பயல். இப்பவாது தெரிஞ்சுக்கங்க, வீரமும் கவுரவமும் பரம்பரைல வரனும். சமூக நீதிய கேட்டு வாங்கி பக்கத்துல உக்காரணும்னு நெனச்சா இப்டிதான்.

    • கள்ளக்காதலில் பாமக பிரமுகர் ஆணுறுப்பு நசுக்கி கொலை !

     ஆத்தூர் அருகே கல்பகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ஆறுமுகம்,அந்தப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கியவர் ???????????????

     ஆறுமுகம் செல்வி எனும் பெண்ணால் , கள்ளக் காதலியால் ,ஆணுறுப்பு நசுக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார் !!!!!!!!!!!!!!!!!!!!!

     SO KALLAKAATHALL THAAN VEERAMAAA……PARAMBARAI KOURAVAMAA?????????

    • சமூக நீதிய தட்டி கேட்டு வாங்குவது மட்டும் அல்ல , பக்கத்தில் உட்காருவது மட்டும் அல்ல….பக்கத்தில் வேலைஉம் செய்வோம் பக்கத்தில் அமர்து உண்போம்

    • ராசா.. உங்க பரம்பரை வீரம் இன்னானு எல்லாருக்கும் தெரியும்… அதை நியாபகபடுத்தினா… எல்ல்லாரும் சூ** சிரிப்பாஙக… புரியுதா?

  • அனைத்து சாதிவெறியர்களையும் அவர்களது சாதித்திமிர் எனும் ஆண்குறியையும் தமிழக மக்கள் நசுக்கி ஒழிக்கும் காலம் வராமல் போகாது…………………..

 22. தயவு செய்து போலீஸ் அதிகாரிகள் கவனிக்கவும் காடுவெட்டி குரு இளவரசனை கடத்தி கொண்டுவர அன்புமணி ராமதாஸ் அவர்கள் ரயில் பாதை ஓரமாக அவர் இரண்டு கைகளையும் பிடித்துக்கொள்ள டாக்டர் ராமதாஸ் ஒரு இரும்பு தடியால் இளவரசனை தலையில் அடிக்க அவர் மண்டை பிளந்து முளை சிதறி உயிர் இழந்தார் அப்படின்னு சொல்லிட்டு இவனுங்க வாய முடுங்கடா சாமி இவவுங்களால நிம்மதியா ஒரு செய்தி கூட படிக்க முடில இவனுங்கல்லாம் ஒரு தமிழ் ல்ல ஒரு படம் பண்ணா நூறு நாள் தாண்டி ஓடும்

 23. வினவு போன்ற வலைதலங்களால் ஜாதியை உசிப்புவிடதான் தெரியும். ஜாதியை ஒழிக்க முடியாது. ஜாதியை ஒழிக்க முயற்சி எடுக்க மாட்டார்கள். ஜாதி மறுப்பு தெரிவிப்பவர்கள் முதலில் தங்கள் வீடுகளில் ஜாதியை ஒழிக்கவேண்டும். பள்ளி சான்றதல்களில் மதம் மற்றும் ஜாதி என்ற இடத்திற்கு
  ” மதம்” “ஜாதி” இல்லை என்று குறிப்பிட வேட்ன்டும். அப்போதுதான் யார் என்ன ஜாதி மதம் என்று தெரியாது. ஜாதி மறுப்பு வீரர்கள் மற்றும் “புரட்சியாளர்கள்” இதனை செய்வார்களா?

  கண்டிப்பாக செய்ய மாட்டார்கள்!!!! இதனை வைத்துதான் இவர்கள் பிழைப்பு ஓடுகிறது!!!!

 24. ஹைதராபாத்: பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரான அஸ்வினி நாயர் ஹைதராபாத்தில் தான் பணியாற்றிய நிறுவனத்தின் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

  இவர் சாவுக்கும் பாமக தான் காரணம்..வினவு சொல்லும் முன் நாங்களே சொல்லிவிட்டோம்..

 25. தலைப்பை “இளவரசனின் தற்கொலைக்கு டாஸ்மாக் தான் காரணம்”என்று மாற்றலாம்.

  தர்மபுரி: ரயில் முன் பாய்ந்து தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மது அருந்தியது, அவரது உறுப்புகளை சோதனை செய்ததில் நிரூபணம் ஆகியுள்ளதாக இளவரசன் வழக்கை விசாரணை செய்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  காதல் திருமணம் செய்து கொண்டதன் மூலம், தர்மபுரியில் பெரும் கலவரம் உருவாக காரணமாக இருந்த திவ்யா-இளவரசன் ஜோடி இம்மாத தொடக்கத்தில் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜூலை 5ம் தேதி, தர்மபுரியில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டார் இளவரசன்.

  அவரது உடலுக்கு அருகே, சில மதுபாட்டில்கள் கிடந்தன. மேலும், அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட கடித்ததில் இருப்பது அவரது கையெழுத்துத் தான் என்பது உறுதியான நிலையில் அவரது மரணம் தற்கொலை தான் என நிரூபணமானது.

  இந்நிலையில், தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை, என சந்தேகம் தெரிவித்தார் இளவரசனின் அப்பா. இது குறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், நண்பர்களோடு இணைந்து மது அருந்தும் பழக்கம் இளவரசனுக்கு இருந்தது உறுதியானது.

  மேலும், இளவரசனது உடல் உறுப்புக்களை ஆய்வு செய்த நிபுணர்கள் அளித்துள்ள அறிக்கையில் மரணமடைவதற்கு முன் இளவரசன் மது அருந்தியிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க