நான் சின்ன வயசா இருக்கும் போது, ஒரு நாள், தாளம் தட்டிப் பாட்டு பாடிக்கிட்டே ஒருவர் வீடு வீடா பிச்சை எடுத்துகிட்டு வந்தார். அவர் பின்னாலேயே பாட்டை கேட்டுக்கிட்டே நெறையா பசங்க போனாங்க. நானும் போனேன். ஒரு வீட்டில் அவர் பாடிக்கிட்டு இருக்கும் போது, பக்கத்து வீட்டுக்காரர் வந்து தென்னை அடி மட்டையை எடுத்துக்கிட்டு அடி அடின்னு அடிச்சாரு, அடி தாங்காமல் ஓடி ஒரு மரத்தடியில் உக்கார்ந்து அழுதுகிட்டே இருந்தாரு. பிறகு பக்கத்துத் தெருவுல போய் பாட ஆரம்பித்தார்.
அடித்தவர் காங்கிரசுகாரர், மூப்பனாருக்கு கூட்டாளி. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரைச் சேர்ந்தவர். முக்குலத்தோர் என வகைபிரிக்கப்பட்டுள்ள கள்ளர் சாதியைச் சேர்ந்தவர். சாதி வெறிபிடித்தவர்.
அந்த அப்பாவியை அடித்துவிட்டு, திண்ணையில் ஒக்காந்து கொண்டு, வெத்தல பாக்கு போட்டுகிட்டே, அக்கம் பக்கம் கேக்குறமாதிரி பேச ஆரம்பித்தார்.
”அம்மா, தாயேன்னு பிச்சையெடுத்தவனுவ இப்ப பாட்டு பாடிகிட்டு வாரான். வீட்டுல உள்ள பொம்பளைங்க இளிச்சுகிட்டு வந்து கேக்குறாளுங்க, இவன சொல்லி குத்தமில்ல, இசையமைக்கிறேன்னு சொல்லிக்கிட்டு, இளையராஜான்னு வந்துருக்கானே அவன ஒதைக்கனும் மொதல்ல. பிச்சையெடுக்கப் பாட்டுப் பாட்றாப்போல ”ஆத்தா ஆத்தோரமா வர்ரியா”ன்னு பொம்பளைய கூப்புட்றான்.
ஊருக்குள்ள டீக்கடைக்குப் போனா அவம்பாட்டுதான் போட்றாய்ங்க, பஸ்லப் போனா அவம்பாட்டத்தான் போட்றாய்ங்க, கல்யாண வீடு, கோயிலு திருவிழா, எங்க பாத்தாலும் அவம்பாட்டத்தான் கேக்குறாய்ங்க. பறப்பய பாட்டு போட்றானாம், இவங்க ரசிக்கிறாய்ங்கலாம். தப்புகொட்ற பயலுக்கு தாளத்த பத்தி என்னா தெரியும், செத்த மாட்ட உரிச்சு தப்புக் கட்டி எடுத்துட்டு வந்துட்டான் தாளம் போட்றதுக்கு.
பறப்பயலப் பெரியாளா ஆக்குறோமேன்னு, நம்ம ஆளுங்களுக்கு வெக்கமே கெடையாது. எப்புடியோ இளையராஜாவ வளத்துட்டாய்ங்க, இன்னம் பறப்பயல தப்படிக்க கூப்புட்டா தாளத்தப்பத்தி பேசப்போறானுவ, நம்ம ஆளு பெரிய இடத்துல இருக்கான், இவனுவளயெல்லாம் நாம மதிக்க வேண்டியது இல்ல, நம்ம லெவலே மாறப்போவுதுன்னு தலக்கனம் புடிச்சு திரிய போறானுவ. இதுதான் நடக்கப் போவுது.
ஏற்கனவே நம்ம பறப்பயலுவ சொல்ற பேச்ச கேக்க மாட்டேங்குறானுவ. வேலைக்கு வாடான்னா வேற வேல இருக்குதுங்குறானுவ, தெருவுக்குள்ள வந்தா துண்ட தோள்ள போட்டுகிட்டே வர்றானுவ, ஆளு நடமாட்டம் இல்லாத நேரமா பாத்து கோயிலு கொளத்துல குளிக்குறானுவ, நம்ம ஆளுவள பாத்து சைக்கிள்ள வர்றீங்களாய்யான்னு ஏத்திக்கிட்டு வர்றானுவ, இவனுவளும் வெக்கமே இல்லாம ஏறிகிட்டு வர்றானுவ, இப்படியே போனா பொண்ணு கொடுங்க நீங்களும் நாங்களும் ஒன்னுன்னு சொன்னாலும் சொல்லப் போறானுவ, ஆச்சர்யப்பட்றதுக்கு ஒன்னுமில்ல” என்றார்.
கிராமத்துல வாழ்ந்த எனக்கு அந்த வயசுல இளையராஜான்னா யாருன்னே தெரியல. ஆனா இளையராஜாவ பறப்பயன்னு சொன்னது மட்டும் ஞாபகம் இருந்தது. அந்த சாதி குறித்து அவர் திட்டியது எனக்கு ஞாபகம் இருந்தது. அந்த வயசுலயும் தாழ்த்தப்பட்டவங்கன்னா எப்படியெல்லாம் நடத்துவாங்கன்னு தெளிவா தெரிஞ்சுருந்துச்சு. அந்த அளவுக்கு ஆதிக்க சாதி வெறியரான அந்த ஆளு, பச்சபுள்ளை மனசுலயும் பதியிற மாதிரி சாதி வெறியோட நடந்து கிட்டான் என்பதுதான் உண்மை.
இது நடந்து இருவத்தஞ்சு வருசத்துக்கு மேல ஆச்சு. ஆனால் இன்னைக்கும் கிராமங்களில் ஆதிக்க சாதி வெறியர்களிடம் இருந்து, தலித்துக்கள் நிலை அப்படி ஒன்னும் மாறிடல. வெளிப்படையா சாதி வெறியை காட்ட முடியலன்னாலும் சம்பிரதாயத்தை விட்டுட கூடாது என்ற அடிப்படையில் சாதி வெறி இருந்துகிட்டுதான் இருக்கு. சாதி தீண்டாமை கொடுமையை உருவாக்கி அவற்றை நியாயப்படுத்தும் ஆதிக்க சாதி வெறியர்கள் கூறும் வார்த்தைதான் சம்பிரதாயம்.
சாதிக் கொடுமைக்கு எதிராக பேசுபவர்கள், தீண்டாமை, தனிக் குடியிருப்பு, தனிச் சுடுகாடு தனிக் குவளை, என்ற அடிமை நிலையைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். அதைத் தாண்டி அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள், சுய மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது.
ஒரு ஆதிக்க சாதி குடும்பத்துக்கு தலித்து அடிமையாய் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்பதை வகை வாரியாக பிரித்து வைச்சிருக்காங்க. அப்படி பிரிக்கப்பட்ட குடும்பத்துக்கு கல்யாணம் முதல் கருமாதி வரைக்கும் அடிமை வேலை செய்யணும்.
இருவது முப்பது குடும்பம் கொண்ட வகையறாவுக்கு நாலு அஞ்சு தலித் குடும்பம் அடிமையா இருக்கணும். இப்படி வகை பிரிக்கப்பட்ட ஆதிக்க சாதியின் முப்பது குடும்பங்களில் நாலு அல்லது அஞ்சு பணக்காரங்க இருப்பாங்க. மீதமுள்ள அனைவரும் சாதாரண விவசாயி அல்லது கூலி விவசாயியாகத்தான் இருப்பாங்க. தலித் குடும்பத்தை வருச பண்ணையாளா பணக்காரன்தான் வச்சுக்குவான். உழைப்பின் தேவையும் அவனுக்குதான் இருக்கும். ஆதிக்க சாதியில் சாதாரண விவசாயிக்கு ஆள் வச்சு செய்ற அளவுக்கு வேலை இருக்காது. ஆனால் இவர்களுக்கும் மேல் சாதிக்கு உரிய அடிமை சம்பிரதாய வேலையை செய்ய வேண்டும்.
ஆதிக்க சாதியின் வீட்டு பண்ணையாளா இருக்குறவங்க, விவசாய வேலைக்கி கூலி வாங்கக் கூடாது. வருசத்துக்கும் வேலை பாத்துட்டு கடைசியா கொஞ்சம் நெல்லு கொடுப்பாங்க. அதுதான் வருசக் கூலி. அது அவங்க உழைப்புக்கு ஏத்த ஊதியமா இருக்காது. பண்ணைக்கு இருக்குறவங்க, முதலாளி வீட்டு வேலை இல்லாத அன்னைக்கு வேற யாருக்காவது கூலிக்கு வேலைக்குப் போகலாம்.
வகை பிரிக்கப்பட்ட அத்தனை தலித்துக் குடும்பமும், பணக்கார ஆதிக்க சாதி வயல் வேலைக்கு வருசம் பூராவும் வந்தாகணும். அதுக்கும் கூலி கிடையாது, கலம் பொடைக்கிறது மட்டும் தான். கதிரறுத்து அடிக்குற நெல்ல அள்ளுனது போக கீழ சிந்திக் கொடக்குற நெல்லையும், கருக்காவுல ஒதுங்குன நெல்லையும் சுத்தம் செஞ்சு பங்கு போட்டு எடுத்துக்கணும். கூலி இல்லாம வேல செஞ்சுட்டு, சிந்துனது செதறுனத எடுத்துக்கறதுக்கு பேருதான் கலம் பொடைக்குறது.
அப்படிப் பண்ணைக்கு இருக்கும் போது அவங்களுக்கு சாப்பாடு மாட்டுக் கொட்டைகையிலதான் போடுவாங்க. இல்லன்னா திண்ணையில ஒரு மூலையில ஓரமா ஒக்கார வச்சு போடுவாங்க. சாப்பிடும் பாத்திரம் அவங்களே வச்சுக்கணும். அதையும் மாட்டுக் கொட்டகையில ஒரு ஓரமா சொருகி வைக்கணும். தொட்டுக்க வாங்க பாத்திரம் வச்சுக்கலன்னா பூவரச இலையில கொடுப்பாங்க, இல்லன்னா கொட்டாங்குச்சியில (தேங்கா சிரட்டை) கொடுப்பாங்க. மீறி ஏதாவது தண்ணி கொடுக்குற மாதிரி வந்தா, தலித்துக்குன்னு ஒரு பாத்திரம் இருக்கும் அதுல தண்ணி குடுப்பாங்க குடிச்சுட்டு பாத்திரத்த குப்பற கவுத்து வைக்கனும். பாத்திரத்து மேல தண்ணிய ஊத்தி தீட்டு கழிச்சுட்டு எடுத்துப்பாங்க. ஊருக்குள்ள வரும் போது தண்ணி தாகம் வந்து யாரிடமாவது தண்ணி கேட்டா பாத்திரத்துல கொடுக்க மாட்டாங்க, கைய குவிக்கச் சொல்லி கையில ஊத்துவாங்க குடிச்சுக்கணும்.
வயல்களில் வேலை செய்யும் போது தலித்துகளுக்கு சாப்பாடு, பாத்திரத்துல போட மாட்டாங்க. வயல்ல இருக்கும் பணங்குட்டி மட்டைய வெட்டி ஓலையில் தொண்ணை செஞ்சு அதுல ஊத்துவாங்க. கொழம்பு வச்ச சாப்பாடே கிடையாது. கஞ்சி சாப்பாடு மட்டும் தான். தொட்டுக்க உப்பு போட்ட மாங்காகீத்து அத கடிச்சுக்கணும். இதுதான் அவங்களுக்கு ஒதுக்குன சாப்பாடு.
ஆதிக்க சாதி கல்யாணம், காதுகுத்து, வளைகாப்பு, பூப்பு நீராட்டு, நிச்சயதார்த்தம்னு எல்லா நல்லது கெட்டதுக்கும் வெறகு ஒடைக்கணும், பந்தல் போடணும், வாழைமரம் கட்டணும். பொம்பளைங்க வீட்டுக்கு வெளிய உள்ள தட்டு முட்டு வேலை பாக்கணும், எச்சி இலை எடுக்கணும், அண்டா குண்டா கழுவணும். விசேசம் முடிச்சதும் இதுக்கு எல்லாம் கூலியா கூட சோறு வாங்கிக்கணும்.
விசேசம் நடக்கும் பந்தல்லயே தலித்துகள் தப்பு மேளத்தோடு, தட்டு வருசை, சாமானோடு ஆடு புடிச்சு கட்டணும். இது எதுக்குன்னா ஊருக்குள்ள பள்ளன், பறையன வச்சு வேலவாங்கற பரம்பர சாதிக்காரன்தான் நானு, ஆளா சங்கதியா இருக்கென்னு கெத்து காண்பிக்க. வந்தார் குடின்னு சொல்ற ஆட்களுக்கு வகை பிரிச்சு ஒதுக்குற தலித் முறை இருக்காது. தலித்து ஒதுக்கப்படலன்னா அவங்கள அந்த ஊர் ஆதிக்க சாதியில் சமமா பாக்க மாட்டாங்க. பொண்ணு கொடுக்குறவனும் எடுக்குறவனும் சம்பந்தம் பண்ண தயங்குவாங்க.
ஆதிக்க சாதிக்காரன் வீட்டுல மனுசன் செத்தாலும், மாடு செத்தாலும் மொதல்ல தலித்துக்குதான் சொல்லுவாங்க. அவங்க வந்துதான் பந்தல் போடணும், தப்பு கொட்டணும், கொம்பூதணும், பாட கட்டணும், பொணத்த எரிக்க மரம் வெட்டணும், ஊரு ஊரா சொந்தக்காரனுக்கெல்லாம் எழவு சொல்லி போகணும், பொணத்த தூக்கிட்டு சுடுகாடு போறதுக்குள்ள பந்தல் பிரிக்கணும், பொணத்த எரிக்கணும் இதுக்கெல்லாம் எந்த கூலியும் கெடையாது.
துக்கத்துக்கு வர்ர ஒரமரக்காரன் (சம்மந்தி) மொறையுள்ள எல்லாரும் எளவு பணம்னு அஞ்சு பத்து மொய் போடுவாங்க. சம்பந்தி கொட்டுன்னு நெல்லு கொஞ்சம் கொண்டுட்டு வருவாங்க. இந்த நெல்ல வித்துட்டு அதுல வர்ர பணத்தையும், எளவு பணத்தையும் சேத்து, தப்பு அடிச்சவங்க மொதக்கொண்டு, பொணம் எரிச்சவங்க, பந்தப் போட்டவங்க வரைக்கும் சாவுக்கு வேலபாத்த எல்லா தலித்தும் பிரிச்சு எடுத்துக்கணும். அந்த பணம் அவங்களுக்கு ஒரு நாள் சாப்பாட்டுச் செலவுக்கே வராது.
வெளியூருக்கு துக்கம் சொல்லி போறவங்களுக்கு சைக்கிள் மட்டும்தான் கொடுப்பாங்க, துக்கம் சொல்லப்போன வீட்டுல ஒருபடி நெல்லு கொடுப்பாங்க ஒரு ஊருபூராச் சொன்னாலும் ரெண்டு – மூணு கிலோ நெல்லு தேறாது. அத வித்துத்தான் அவர் வழிச்செலவு, சாப்பாடு, டீ, எல்லாத்துக்கும் வச்சுக்கணும். அஞ்சாறு ஊருக்கு ஒரு ஆளுன்னு கணக்கு வச்சு, பத்து பேருக்கு மேல துக்கம் சொல்லி போவணும்.
இது தவிர பொங்கல், தீபாவளின்னா ஆதிக்க சாதிக்காரங்க வீட்டுக்கு சாப்பாடு வாங்க தலித்துகள் வரணும். பொங்கல்னா கரும்பு, வாழப்பழம், பச்சரிசி, கொடுப்பாங்க. வாழப்பழன்னா இருக்குறதுலயே சின்னதான காயா இருக்கும் அது பழுக்கவே பழுக்காது. தலித்துக்களுக்கு கொடுக்றதுக்குன்னே மார்க்கெட்டுல மலிவா விப்பாங்க. கரும்பும் அப்படிதான் வெளையாததா பாத்து கொடுப்பாங்க, வீட்டுல உள்ளவங்களுக்கு எல்லா காயும் போட்ட கூட்டு, தலித்துக்கு மட்டும் பரங்கிக்காவுல பண்ணுன கூட்டு.
தீபாவளின்னா பலகாரம் வாங்க வரணும். அதுவும் இதுபோலதான் முறுக்கு, அதிரசம், லட்டு, பாதுசா, நெய்யுருண்டைன்னு, வகவகயா செஞ்சு வச்சுகிட்டு, இவங்களுக்கு மட்டும் இட்லியும், அரிசில நாலு உளுந்தப் போட்டு வடையின்னு பேருவச்சு சுட்டுப்போடுவாங்க, வருசத்துக்கு ஒரு நாள் வர்ரதுக்கே இப்படி பாகுபாடு பாத்து, இழிவு படுத்தி சாப்பாடு போடுவாங்க. முன்னமாதிரி எல்லாம் இப்ப யாரும் சாப்பாடு வாங்க வர்றதே இல்ல பறப்பயலுவொ கொழுத்து போயி திரியரானுவன்னு அதிகாரம் வேற தூள் பறக்கும்.
இப்படி வகைப்படுத்தப்பட்ட தலித்துக்கள் வீட்டு திருமணம் என்றால் அவர்களை அடிமைகளாக கொண்ட ஆதிக்க சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தாலியும், பொண்ணு – மாப்பிள்ளைக்கு புதுத்துணியும் எடுத்துக்கொடுக்கனும். ஆதிக்க சாதி மனிதர்கள் தலித்து திருமணத்துக்கு போக மாட்டாங்க. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் மணக்கோலத்திலேயே ஆதிக்க சாதி வீட்டுக்கு வந்து ஆசிர்வாதம் வாங்கணும். மணக்கோலத்திலயே தம்பதிகள் ஊர் பார்க்க நடந்து வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு எந்த அளவு கூசிப்போவார்கள் என்பதை ஒரு முறை யோசித்து பாருங்கள்.
எப்படி எல்லாம் தலித்துக்களை தன்மான உணர்வு இல்லாமல் தன் அடிமையாக வைத்துக்கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் சாதகமாக சம்பர்தாயத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள். இப்படியெல்லாம் தலித்துக்களை அடிமைபடுத்தும் நிலை மாறிவிட்டது. இப்பல்லாம் யாருங்க சாதிப்பாக்குறா என்ற பேச்சுப் பரவலாக இருந்துகிட்டு இருக்கு.
காரணம் தாழ்த்தப்பட்டவர்களில் படித்தவர்கள், இளைஞர்கள், இதுபோல கீழ்த்தரமான சம்பர்தாய வேலைகளுக்கு வர மறுக்கிறார்கள். பெற்றொர்களையும் தடுக்கிறார்கள். உள்ளூரில் வேலை செய்வதை தவிர்த்து வெளியில் நகரத்துக்கு வேலைக்கு போகிறார்கள். இவர்களிடம் கூனி குறுகி வேலை செய்வதைவிட வெளி வேலைக்கு செல்வதை கௌரவமாக நினைக்கிறார்கள்.
ஆனால் பெற்றோரோ, வெளியில் வேலைக்கு செல்லும் நீங்க வேண்டுமென்றால் போகாமல் இருக்கலாம் நாங்க இவங்க்கிட்டதானே வேலைக்கு போகணும் அவர்களை எதிர்க்க முடியாது அனுசரித்துதான் போக வேண்டும் என்கிறார்கள். என்ன நல்லது கெட்டதுன்னா போயி சாப்பாடு வாங்கணும். செத்தா சாவுல நிக்கணும். பேருக்கு நாலு வீடு எளவு சொல்லி போவணும். முன்ன மாதிரி இப்பெல்லாம் ரொம்ப கொடுமப்படுத்துறது இல்ல. சம்பர்தாயத்துக்கு செஞ்சாகணுன்னு சொல்றாங்க. அத செஞ்சுட்டா ஒன்னும் பிரச்சினை இல்லை என்கிறார்கள்.
முன்பு ஒருவர் இறந்துவிட்டால் எல்லா ஊருக்கும் தலித்துத்தான் சாவு சொல்லி போகவேண்டும். ஆனால் இப்போது செல்போன் இருக்கு முக்கியமானவங்களுக்கு உடனே தகவல் போயிடுது மத்தவங்களுக்கு காருல ஆரண் கட்டி அனௌன்ஸ் பண்றாங்க துக்கத்துக்கு எல்லாரும் வந்து சேர்ந்தர்றாங்க. ஆனாலும் சம்பர்தாயத்துக்கு துக்கம் சொல்லி அனுப்புறாங்க. இதுபோலத்தான் ஒவ்வொரு ஒடுக்குமுறை நிகழ்வுகளையும், சாதிய சடங்குகளிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை சம்பர்தாயம் என்ற நிலையில் கட்டுமானத்தில் வைத்துள்ளனர்.
ஒருவர் சாதி சம்பர்தாய சடங்குமுறையை தவிர்த்து திருமணம் செய்து கொண்டார். அனைவருக்கும் மேலான சாதியாக கருதப்படும் பார்ப்பனர் வீட்டுக்கு வந்தார். ”ஒரு வார்த்த வாங்கன்னு கல்யானத்துக்கு கூப்பிடல, கல்யாணம் நடந்த முறையை கேள்விப் பட்டேன். எப்படியெல்லாம் நடக்க வேண்டிய கல்யாணம். புதுசு புதுசா பழக்கம் இல்லாத்தையெல்லாம் பசங்க செய்றாங்க, பெரியவங்க நீங்களும் கேக்க மாட்டேங்குறிங்க. இதெல்லாம் நல்லதுக்கில்ல. எப்படியோ நல்ல காரியம் நடந்துருச்சு, நல்லாருக்கட்டும். சரி, சம்பர்தாயன்னு ஒன்னு இருக்குல்ல கொடுக்க வேண்டிய தட்சணைய கொடுங்க நான் கிளம்பணும்” என்றார்.அந்த வீட்டம்மாவும் பயபக்தியுடன் 500 ரூபா பணம், தேங்கா – பழம், வெத்தல – பாக்கு என்று மரியாதையுடன் எடுத்து வந்து கொடுத்தார்.
சம்பர்தாயம் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் இன்னமும் சாதிய கட்டுமானங்களைக் கடைபிடித்துக் கொண்டுள்ளார்கள் என்பதை நாம் நடைமுறையில் இருந்தே பார்க்கலாம். காலப்போக்கில் சில பழக்க வழக்கங்கள் மேலோட்டமாக விட்டுக்கொடுக்கப்பட்டு சம்பர்தாயத்தைச் சொல்லி ஆதிக்க சாதி வெறி வேரூன்றி இருப்பது தான் உண்மை. உழைக்காமல், அதிகாரத்துடன் ஒரு பாப்பான் வந்து கேட்டா பயபக்தியுடன் கொடுப்பவர்கள். உடல் நோக உழைத்தாலும் தலித்துக்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள் என்பதே இதற்கு சாட்சி.
அதே தஞ்சாவூரில் மாவட்டத்திலேதான் இந்த ஆண்டு நடந்த நிகழ்வு. பெண் பார்த்து பிடித்துவிட்டது. ஜாதகமும் பொருத்தமாக உள்ளது. மற்ற சீர்வரிசை, நகை, திருமண செலவு போன்ற விசயங்களுக்கு பெண்வீட்டார்கள் சம்மதித்து விட்டார்கள். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் என்ன சொல்கிறார்கள் என்றால், ஊருக்குள் நுழையும் இரண்டு வழியிலேயும் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்பு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை முதலில் வைத்து ஊர் அமைவது நல்லதுக்கல்ல என்று கூறி பெண்ணை வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். இன்றளவும் நடைமுறையில் சாதி வெறி உள்ளதற்கு இந்த நிகழ்வே சாட்சி.
இப்படியெல்லாம் காலங்காலமாக ஆதிக்க சாதியினருக்கு அல்லும் பகலும் உழைக்கும் தலித் மக்களது துன்பங்களை உணராம அவங்களையும் ஆதிக்க சாதிக்கு இணையா பாத்து பேசுற மவரசாங்கள என்ன செய்யலாம்? ஒண்ணு செய்யலாம், பேசாம இவங்களை தலித் மக்களுக்கு ஒதுக்கி விட்டு ஒரு நூறு வருசம் மேல பாத்த வேலைங்களை செய்யச் சொன்னா என்ன?
– சரசம்மா
Vinavu Sir., Please avoid this types of Caste related topics. I read all your other topics related to Social welfare. All of us come to Vinavu for social ethics.
You call him sir what he knows
Hi Vijay,
May I ask, how you come to a conclusion that Caste Domination is not related to Social Welfare…
Good to see people eager for Social Ethics, fine. May I know your view of Social Ethics excluding the major parameter of our society, Caste Domination.
Many Thanks…
ஊருக்குள் நுழையும் இரண்டு வழியிலேயும் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்பு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை முதலில் வைத்து ஊர் அமைவது நல்லதுக்கல்ல என்று கூறி பெண்ணை வேண்டாம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். இன்றளவும் நடைமுறையில் சாதி வெறி உள்ளதற்கு இந்த நிகழ்வே சாட்சி.— நல்ல கதை வசனம் எந்த கிராமத்தில் காலணி இல்ல அபப்டி பார்த்த கிராமத்தில் எவனும் கல்யாணம் பண்ணவே முடியாது சும்மா கதி அளந்து மீண்டும் மீண்டும் தலித்து தலித்து என்திரு எழுதி உங்க விளம்பரத்துக்கு தலித்துகளை கோச்சை படுத்தி அவர்களின் நிமதிய கெடுக்காமல் இருங்கள் எல்லாம் ஜாதி பிரட்சனையும் தானாக மாறும் கடந்த இருபது வருடம் முன் உள்ளது போல இப்ப இல்லை என்பதி நினைவில் கொள்க நாளடைவில் தானாகவே மாறும் நீங்கள் நினப்பது போல புரட்சி பேசுவதால் குரியது மக்களே தனக்க ஒவ்வொரு விசயத்தை விட்டுகிட்டு யுர்கிரார்கள் நீங்கள் வீனா வெட்டி பிரட்சனைய ஊர்வக்கி மீண்டும இரு ஜாதி மக்களிடம் பகை உருவாக்குவது இன்னும் பழைய காலத்துக்கு இட்டு செல்லும் இது நெத புர்த்சியாலர்க்கும் புரியவிலல்லை என்பது வேட்க்க கேடு
//எல்லாம் ஜாதி பிரட்சனையும் தானாக மாறும் கடந்த இருபது வருடம் முன் உள்ளது போல இப்ப இல்லை என்பதி நினைவில் கொள்க நாளடைவில் தானாகவே மாறும்//
மரக்காணம் கலவரம் ?
தருமபுரி கலவரம் ?
இளவரசன் மரணம் ?
– இவையெல்லாம் எந்த மயிருக்கான உதாரணங்கள்…
இதற்கு காரணம் : தலித்களே முன்னேறுங்கள் என சகோதர உணர்வுடன் பிற சாதிகாறர்கள் கைகோடுத்தாள். உன் வீட்டு பெண்னைக்குடு சம்மந்தியாகலாம் என்றால் என்ன நியாயம்.
ஈழன் வண்க்கம்
உங்கவிட்டு பெண்கள் ஏன் அவர்களை காதலிக்கிறார்கள்?
Excellent article. Please translate in English. Than it can reach more people.
முழுவதும் கற்பனை செய்து ஏதோ கீழ் சாதியை அப்பிடியே அலேக்கா தூக்கி மலேக்காவுக்கு பக்கத்துல வைக்கப்போற மாதிரி ஒரு புரட்டான கட்டுரை… இளையராஜா பறையன் கிடையாது, அவர் நாடார் சமூகத்தில் பிறந்தவர்… சும்மா ஏதாவது திரி கிள்ளிப்போடாதே…. இதுலேர்ந்தே தெரியல நீயும் ராமதாஸும் ஒண்ணுன்னு…..
இந்த தலைப்பை வைத்த – வினவின் மீது வன்கொடுமை சட்டம் பாயாதோ?
வண்க்கம்
இது நல்ல இருக்கு அவர் பறையன் இலையா?
Padikkum podhe kan kalanguthu yeppothan thirunthuvangalo…!
வீட்டுமனைகள் விற்பவர்கள் முதலில் வீட்டுமனையை வாங்குபவர்கள் எந்த சாதி என்று தெரிந்த்துதான் வீட்டுமனையை விற்கிறார்கள். ஒரு தலித்திற்கு மறந்தும் கூட மனையை விற்பதில்லை, நல்ல கட்டுரை, நன்றி தோழர்…
I am also from delta belt. These kind of habits was there so many years back( I heard about it and not seen. Now all these formalities are no where found all over the three districts i know very well and am also living in the district. I live in village area and also involved in agriculture. One fact that i heard so many times that the elders use to say such habits were there. May be before 25 years in very few villages the said incident might be happened.
These habits were vanished because of life standard of both dhaliths and other caste hindus. Their life standard is improved nowdays. automatically habits also changed. Such articles of Vinavu has the motive to create a permenant enimity and to keep a particular community on fire. Dont worry sir, it will definitly help u out for what u want to achieve.
தஞ்சை மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் – பண்ணை முறை அதிகமாக இல்லாத திருவண்ணாமலை மாவட்டம் உட்பட – இதுதான் நிலைமை. இவை எல்லாம் பழங்கதைகள் அல்ல. சமூக எதார்த்தம்.
தலித்துகள் என்கிற சொற்பிரயோகம் பறையர்கள் என்கிற சொல்லின் ஆழத்தை – அதன் அவலத்தை வெளிப்படுத்துவதாக இல்லை. மேலும் பள்ளர் – பறையர் – அருந்ததியர் என்கிற சொற்களை தலித் என்கிற சொல்லுக்குள் முடக்குவது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை.
பள்ளர் – பறையர் – அருந்ததியர் எப்படி வேறு வேறு சாதிகளோ அதே போல அவர்கள் மீதான வன் கொடுமைகளும் அளவிலும் தன்மையிலும் வேறுபடுகின்றன. இந்த நிலையில் பள்ளர் – பறையர் – அருந்ததியர் சாதி உள்ளிட்ட மக்களை தலித் என்கிற சொல்லுக்குள் அடக்குவது தீண்டாமையின் அளவையும் தன்மையையும் முழுமையாக வெளிப்படுத்துவதில்லை என்றே கருதுகிறேன்.
எனவே தலித் என்கிற சொற் பிரயோகத்தை தவிர்க்கலாம் என்பதே எனது கருத்து. இனி நானும் அவ்வாறே செய்யலாம் என இருக்கிறேன்.
Pallar/Parayarnnu sonna PCR potruvaanga sir.
Dear Uraan
nowadays I dont think any of these things are happenings…in tamilnadu people are nowadays occupied with this cell phone always operating some songs or games while mobile is compartively scarce even in US — one has to pay both incoming and outgoing in weekdays
i remember this type of bicycle incident, someone offered me a ride in his bicycle when i went to my native village some 2 years back as I was walking very fast with my heavy bags.
i am a brahmin. I did not know that person. I politely refused his offer in tamil and added that he has to bear my weight in his pedal and not to think otherwise. The guy was really helpful, he immediately called out his friend who was passing by in a bike and commanded him to take me in his two wheeler. I had no problem taking a lift from him.
His colour was dark so what? He nicely explained the village their lifestyle etc.
The world is as we see it.
தமிழகம் முழுதும் நடைமுறையில் உள்ளதை இல்லவே இல்லை என்று எழுதுபவர்கள் எண்ணம் என்னவாய் இருக்கும்? இப்பொழுது குறைத்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம் இன்றளவும் வெட்டியான், செப்டிக் டாங்க் சுத்தம் செய்பவர்,சாவுக்கு மேளம் அடிப்பவர்,போஸ்ட் மார்ட்டம் செய்பவர் இறந்த மாட்டை எடுப்பவரெல்லாம் யார்?
// போஸ்ட் மார்ட்டம் செய்பவர்
போஸ்ட் மார்ட்டம் செய்பவர் anatomy அல்லது forensic medicine துறையில் மேல் படிப்பு படித்த மருத்துவர்கள் என நினைத்திருந்தேன். அப்படி இல்லையா? (தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்).
அவங்க எல்லாம் பாடிய ஒரு பத்தடி தூரத்திலிருந்து பார்ப்பதோடு சரி செய்றத பார்த்து ஒரு பார்மசிஸ்ட் சொல்லிக்கொண்டே குறிப்பெடுப்பார் நீங்கள் சொன்னவர்கள் கையெழுத்து போட்டுவிட்டு போய் கொண்டே இருப்பார்கள்.
ஆம்! உண்மை! மதுரை மார்ச்சுவரில பார்த்திருக்கிறேன். பிணங்கள் க்யூவில் “நிற்கும்”. அவசர அவசரமா முடிக்கறதாத்தான் இருக்கும். டாக்டர்ஸ் அந்த ஏரியாவிலேயே இருக்க மாட்டாங்க. போஸ்ட் மார்ட்டம்னா.. பாடிய அறுத்து உள்ளுறுப்புகளை எடுத்துட்டு மறுபடியும் தைக்கிறதுதான்!!
Today electrical cremation facilities are available in many cities. For making pandal,as it is a highly profitable job other than dalits also have opted for the job. It is like non barbers running Black and White saloons. It is also similar to bleaching factories run by people who are not washermen by birth. Every activity fetches a good price in this economy and those who are willing to sell food ,fruit etc in push vehciles earn Rs 3000 to Rs 5000 every day in cities. Economy has changed where the worker is getting more value. Dont write such articles and many may discard vinavu.
இந்த கட்டுரையில் சொல்வது போல் இந்த பகுதியில் இதுபோல் இழிநிலை நடப்பதில்லை என்றால் உங்கள் பகுதியில் சாவு செத்தா பொனத்தை நீங்களே தூக்கிட்டுப் போய் அடக்கம் செய்றீங்களா? நானும் உங்க பக்கத்தூரூக்காரத்தான்.
நானும் இந்த பகுதிக்காரன்தான். இந்தக் கொடுமைகளை அறிஞ்ச ஒரு ஆதிக்க சாதிக்காரன்தான். இன்னைக்கும் இந்தக் கொடுமைங்க முழுசா அழிஞ்சிருச்சின்னு சொல்ல முடியாது. பல விசயங்கள் பல மாதிரி தொடரத்தான் செய்யுது. சரசம்மா இந்த பகுதி அழுக்கை ஒரு படம் போல காட்டியிருக்காங்க, இதுல சொல்லப்பட்ட எதுவும் பொய் கிடையாது. இன்னைக்கும் இங்க வந்து ஒரு வாரம் தங்கிப் பாத்தீங்கன்னா யாரும் புரிஞ்சிக்கலாம். குற்ற உணர்வோட இத பதிவு செய்யுறேன்.
எனக்கு தெரிஞ்ச எந்த ஒரத்தநாட்டு கள்ளனும் இப்படி குற்ற உணர்வு கொண்டதில்லை.. மந்திரி க்ரூப்ல இருந்து ஒதுக்கி வச்சிட்டான்களோ… இல்லை வந்தேறியோ ?
100% true.
Many useless people in my village used to get respect(by force ) only because of caste system. otherwise not even a dog will care to bark at them.
One guy told me that I went to foreign country which he would have never done even if somebody offered him a crore rupees.because going out of country is sin.
But the reality is he is not even worth a penny. These people wants to maintain caste system and feel superior other wise they will be nobody
நகரங்களில் தீண்டாமை இல்லை என்பதும் பொய்.அது வேறு வேறு வடிவங்களில் தொடரவே செய்கிறது.உதாரணத்துக்கு மூட்டை தூக்கி பிழைக்கும் தாழ்த்தப்பட்ட இளைஞன் திருமணத்துக்கு அவன் கடை முதலாளி வருவதில்லை.அதே கடையில் குமாஸ்தா வேலை செய்யும் மேல்சாதிகாரர் வீட்டு கல்யாணம் என்றால் குடும்பத்தோடு போய் சாப்பிடுகிறார்கள்.அப்படியே ஓரிரு முதலாளிகள் தாழ்த்தப்பட்ட இளைஞன் திருமணத்துக்கு வந்தாலும் சாப்பிடுவதில்லை.அது அந்த தலித் மக்களுக்கே பழகிப்போய் அடித்து பிடித்து ஓடிப்போய் முதலாளிக்கு கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்து கொடுக்கிறார்கள்.அப்படி அங்கு செலவழிக்கும் ஓரிரு நிமிடங்களில் கூட மணமக்களின் பெற்றோர் தனக்கு சமமாக உட்காருவதை முதலாளிகள் விரும்புவதில்லை.இதெல்லாம் தீண்டாமை இல்லையா.
பிராமின்ஸ் ஒன்லி என்று வீட்டு வாடகை விளம்பரம் வருவது தீண்டாமை இல்லையா.
வயதில் மூத்தவராக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதி கடைநிலை ஊழியரை பேர் சொல்லி கூப்பிடுவதும் வாய்யா போய்யா என்பதும் மேல்சாதி திமிர் இல்லையா.அது தீண்டாமை இல்லையா.
அதே கடைநிலை ஊழியர் மேல்சாதி அல்லது இடைநிலை சாதி என்றால் ”அண்ணே” போட்டு கூப்பிடுவது என்ன வகை சமூக நீதி. \கடைநிலை ஊழியரை சார் போட்டு கூப்பிட்டா மேலதிகாரிகளுக்கு கூழை கும்பிடு போட்டு பிழைக்கும் இவுங்க தகுதிக்கு ஏற்புடையது இல்லையாம்./
உண்மை. Arrogance வேறு வேறு வடிவமெடுக்கிறது.
I have never called anyone elder than me by name,it is always vaanga/sollunga.Only when someone is younger by atleast 3 years,it ll be vaa/po and if clsoe vada/poda,regardless of whatever caste.
உங்களைச் சொல்லலைங்க. அப்படி செய்றவங்கள சொல்றாங்க.
உண்மை
வினவு தோழர்களே. எல்லாம் சரி. இதில் இளையராஜா எங்கு பொருந்தி வருகிறார் என்று தெரிய வில்லை.
ஒரு புது பிராமணன் என்பதற்கான இலக்கணம் அனைத்தும் இவருக்கு ஒத்து வருகின்றது. அவரது பேச்சு, நடை, உடை, பாவனை, நம்பிக்கை அனைத்தும் தன்னை ஒரு பார்ப்பானாக கருதிக்கொள்ளும் ஒரு இழிசாதி வகுப்பானுக்குரிய அனைத்தும் இவருக்கு பொருந்தும். அவரது இசை அனைத்தும் பார்ப்பனர்களின் இசை. “அவாள், இவாள்” என்று பார்ப்பன பேச்சு. அவரது இன்னிசை நிகழ்ச்சிகள் எதிலும் கவனித்திருந்தீர்கள் என்றால் தெரியும். தான் பறையன் அல்லன் என்று உள்ளுறையாகவும் வெளிப்படையாகவும் விளக்கிக் கொள்வார். கூடுதலாக இந்த பிறவியில் தன்னை ஒரு பூணூல் அணியா பார்ப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்வார். கோயில்களுக்கு கூரை விரிக்க பணமளிப்பார். தனது சொந்த சாதிக்காரனுக்கு இதுவரை ஒரு வார்த்தையையும் உதிர்த்ததில்லை. “போற்றிப்பாடடி பொண்ணே” என்று பாடி தனது அடிமைநிலையை ஊரெல்லாம் பறையடித்தவர்.
பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தவர். காரணமாக இறைமறுப்பாளன் படத்துக்கு இசையமைக்க முடியாது என்றவர். தான் இன்று வாழும் வாழ்க்கை இறைவன் அல்ல, பெரியார் இட்ட பிச்சை என்பது கூட தெரியாத நன்றி கெட்ட ஜன்மம் இவர்.
சங்கராச்சாரியின் பொற்பாதம் பணிந்து விழும் பாக்கியதை பெற்றவர். அப்துல் கலாம் முசுலிம் பார்ப்பு என்றால் இவர் பறை பார்ப்பு.
இவ்வளவு கூறுகிறீர்களே. நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் நிலை, கடமை, நோக்கம் எல்லாம் எடுத்துச் சொல்லி இவரிடம் ஆதரவு கேட்டுப்பாருங்களேன். வீட்டு வாசல் படியை கூட மிதிக்க விட மாட்டார். இவரை இயங்கியலின் மூத்த தலைவராக இருத்திக் கொள்ளுதல் துரதிர்ஷ்டவசமானது.
மெத்த அறிவாளி, இசைப்பெருங்கடல் என்றெல்லாம் வேண்டுமானால் கொஞ்சிக் கொள்ளுங்கள், உச்சி மோர்ந்து கொள்ளுங்கள். இயக்கத்தில் இவர் குடும்பத்தைக் கூட கூட்டு சேர்த்துக்கொள்ளதீர்கள்.
இந்த பெரியாளுங்க தொல்ல தாங்கள சாமி!
இளையராஜாவை, ‘பெரியார்’ படத்துக்கு இசையமைத்தே ஆக வேண்டும் என்று சொல்வதில், இளையராஜாவை மட்டுமல்ல எல்லா தலித்துகளையும் கேவலப்படுத்துவதுதான் வெளிப்படுகிறது,
இதுக்கூடவா தெரியல பெரியவரே?
இன்று எவ்வளவோ தாழ்த்தப்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ‘இளையராஜா’ என்று பெயர்வைத்து மகிழ்கிறார்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள இசை போன்றவையெல்லாம் அறியாத முட்டாள்கள் என்று சொன்ன பொறம்போக்குகளுக்கு இளையராஜா நல்லா செருப்படி கொடுத்திருக்காரு.
தீண்டாமை தவறு என்று தலித்துகளிடம் பிரச்சாரம் செய்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் உமது பேச்சில்.
கொஞ்சம் யோசி பெருசு!
//
தாழ்த்தப்பட்டவர்கள இசை போன்றவையெல்லாம் அறியாத முட்டாள்கள் என்று சொன்ன பொறம்போக்குகளுக்கு இளையராஜா நல்லா செருப்படி கொடுத்திருக்காரு.
தாழ்த்தப்பட்டோருக்கு இசை தெரியாது என்று நான் கூறவில்லை. இசை அனைவருக்குள்ளும் உள்ளது. இளையராசாவின் இசை மேதைமையைப் பற்றியும் இங்கு கேள்வியெழுப்ப வில்லை நண்பரே. ஆனால் இவர் புதுபார்ப்பான் என்பதற்கு இலக்கண சுத்தமாக பொருந்தி வருகிறார். அப்துல் கலாமை கழுவி கழுவி ஊற்றும் வினவு தோழர்கள் இவரை மட்டும் பூ வைத்து பொட்டு வைத்து அலங்காரம் பண்ணி அழகு பார்ப்பது ஏன் என்பதுதான் என் கேள்வி.
வினவு தோழர்கள் இவரை தங்கள் சொந்தமாக கருதலாம். ஆனால் இவர் அவர்களை எப்படி கருதுவார் என்பது எண்ணிப் பார்க்க தகுந்தது.
உங்கள் முதலில் சொன்ன கருத்துக்கு நானும் ஒத்துப்போகிறேன். பறையனுக்கு இசையைப் பற்றி என்ன தெரியும் என்பதற்கு வேண்டுமானால் இவர் தகுந்த பதில் அளித்திருக்கலாம். ஆனால் தனது நடவடிக்கைகளால் தனது இனத்தையும் பிறப்பையும் இவர் இழிவு படுத்தவே செய்கிறார். தான் பறையனாக பிறந்ததற்கு இவர் நிச்சயம் வருந்தியிருப்பார்.
// பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்தவர். காரணமாக இறைமறுப்பாளன் படத்துக்கு இசையமைக்க முடியாது என்றவர். தான் இன்று வாழும் வாழ்க்கை இறைவன் அல்ல, பெரியார் இட்ட பிச்சை என்பது கூட தெரியாத நன்றி கெட்ட ஜன்மம் இவர். //
பெரியாரிடம் பிச்சை வாங்கினால் வசைஞானியாக வேண்டுமானால் ஆகலாம், இசைஞானியாக ஆக முடியாது.. இளையராஜாவின் கடின உழைப்பும், இசைஞானமும் தான் அவரது உயர்வுக்குக் காரணம்..
இசைஞானம் இசையருவியாக ஊற்றெடுப்பதற்கு கூட பெரியாரின் வசையினால் மாற்றமடைந்த சில நிகழ்வுகளும் காரணம்தான்
//தான் பறையனாக பிறந்ததற்கு இவர் நிச்சயம் வருந்தியிருப்பார்.//
நிச்சயமாக. கேள்வி பதில் பகுதியில் அப்படி இளையராஜா கூறியதாக படித்த நினைவு. இவர்களைப் போன்றோரைத்தான் கருப்பு பார்ப்பனர்கள் என்றழைக்கின்றனரோ!
தன்னை பெருமையுடன் போற்றிக் கொண்டாடவேண்டியவர்களே அதைச் செய்யாமல் தூற்றிக் கொண்டிருந்தால் வருத்தம் வராமல் சந்தோசமா வரும்..?!
//தூற்றிக் கொண்டிருந்தால் //
உயரத்திற்கு வந்த பிறகு பெருமைக்கான இலக்கணத்தை அவர்கள் மாற்றிக் கொள்வதினால்….
he was taught by Dhanraj master and that guy was not a parayar,so did anyone stop him from becoming a musical genius?
அவர் இலக்கணத்தை மாற்றிக் கொள்வதனால் அவரது திறமையும், சாதனைகளும், உயர்வும் செல்லாதாக்கும்..?! சரி போகட்டும், அதற்கு ஏன் அவரை தூற்ற வேண்டும்..?! உங்கள் உதவியால், உங்கள் இலக்கணப்படி, முன்னுக்கு வந்து பின் உங்களை ஏமாற்றி துரோகம் செய்தாரா அல்லது தன் சொந்த முயற்சியால், திறமையால் முன்னுக்கு வந்து சுதந்திரமாக தன் வழியைத் தேர்ந்தெடுத்தாரா..? முதலாவது சொன்னது உண்மை என்றால் தூற்றிக் கொள்ளுங்கள், இரண்டாவது என்றால் அவரது சாதனைகளையும், திறமையையும் முடிந்தால் பாராட்டிவிட்டு அவரது நிலைப்பாடுடன் உடன்பாடு இல்லை என்பதோடு விட்டுவிடுங்கள்.. அவரது திறமையையும் கருத்துக்களையும் உங்கள் இலக்கணப்படி ஒருங்கிணைக்க முயலாதீர்கள்..
மன்னிக்கவும் தூற்றவில்லை விமர்சனம்தான். கருத்துவாக்கத்திற்கெல்லாம் தன் இசைஞான ஒளியால் வாசகம் படைக்க முடிந்தவரால் தன் சொந்த சமூகத்தின் நிலை பற்றி பிரதிபலிக்க முடியாமல் போனது பற்றிய விமர்சனம்தான். ராசாவின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை, அது ஒரு இனிய மாலைநேர மயக்கத்திற்காக மட்டும் பயன்போனதே என்பதான ஆதங்கம்தான். அவரை டிரேஸி சாப்மேனாக உருவகப்படுத்திக்கொண்ட கோளாரால் உருவான ஆதங்கம். உண்மைதான் அதற்கென்ன செய்வார் அவர். இருந்தாலும், அம்பிகளும் ராசாவை பாராட்டுவது கொஞ்சம் மனதுக்கு சந்தோசமாகத்தான் இருக்கிறது.
மற்றபடி, இளையராஜாவின் பிரவேச காலங்களில் தூற்றியதெல்லாம் யார் என்பது அம்பி பெயர் தாங்கிய தங்களுக்கு தெரியாததா!
My only question is,
Just because he was born a parayan,what is he supposed to do,what culture is he supposed to follow?
Should he be a Thiest/Athiest?
What else should he do or not do?
மிக அருமையான உண்மைகளை கூறி உள்ளீர்கள்.நன்றி.
// போஸ்ட் மார்ட்டம் செய்பவர்
போஸ்ட் மார்ட்டம் செய்பவர் அனடொம்ய் அல்லது fஒரென்சிச் மெடிசினெ துறையில் மேல் படிப்பு படித்த மருத்துவர்கள் என நினைத்திருந்தேன். அப்படி இல்லையா? (தெரிந்து கொள்ளவே கேட்கிறேன்).
வெங்கடேஸ் ,
உண்மையாக மருத்துவர்கள் தான் போஸ்ட் மார்டம் செய்ய வேண்டும். ஆனால் நடைமுறை இல் அவாறு இல்லை . மருத்துவர்கள் தேவையான உறுப்புகளை வெட்டி எடுக்க மட்டுமே அந்த அறைக்கு வருவார்கள். அவர்களுக்கு நுரையீரல் குடல் மற்றும் மூளை இவற்றில் சிறு பகுதிகள் பரிசோதனைக்கு தேவை. இறப்பின் காரணங்களை அறிய சோதனை கூடங்களுக்கு இவைகள் வேண்டும் . அதற்கு உடலை வெட்டி தலையை உடைத்து , நெஞ்சு கூட்டை பிளந்து வைத்து இருக்க வேண்டும் . அதனை செய்வது பெரும்பாலும் தலித்.
VIJAYANANDH, கருப்பு, ரிஷி,
உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.
இழி சாதி வகுப்பான் என்கிற வார்த்தையை உபயோகிக்கும் அல்லது அப்படி ஒன்று இருப்பதாக நம்பும் நீ எப்படி பெரியவன் என்று உனக்கு நீயே பெயர் வைத்து கொண்டாய்.
ஸ்வீப்பர் என்று அலுவலகங்கள் பள்ளிகல்லூரிகள் மருத்துவமனைகள் அனைத்திலும் ஒரு பதவி இருக்கிறதே அறிவீர்களா? அனைத்து நகராட்சிகளிலும் நகரசுத்தி தொழிலாளர்கள் ஆண்களும் பெண்களுமாய் குப்பை கூட்டி அள்ளுவதை பார்த்திருக்கிறீர்களா?பாதாள சாக்கடையை manhole ல் இறங்கி அடைப்பை சரி செய்துவிட்டு முகமெல்லாம் மனித மலம் வழிய(கண்ணீர் வருகிறது) எழும் மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா? இவர்கள் அனைவரும் தலித்.
வறுமையில் ஊட்டசத்து இல்லாமல் வளரும் சேரிக்குழந்தைகள் பெரும்பாலும் அதிக உயர அகலமின்றி கருப்பாய் செம்பட்டை மயிருடன் பார்த்தாலே மற்றவரிடம் இருந்து வித்யாசமாய் தெரிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு தலைமுறை படித்து அரசு வேலையில் இருப்பவர் குழந்தைகள் வாட்டசாட்டமாய் வளர்வதை பார்க்கிறோம் .ஆக மனிதவளத்தையே அமுக்கி வைத்திருக்கிறது சாதியம் என்பது கண்கூடு.
It was happened very long year back. Now a days SC also are in Panchayat president. Actual circumstance are changed.
இப்போதைய காலத்தில் நீங்கள் சொல்வது போல ஒன்றுமே நடப்பதில்லை. இன்றைக்கு தலித் மக்களை பிற சாதி மக்கள் வேலை எதுவும் வாங்குவது இல்லை. தலித் மக்கள் பெரும்பாலும் விவசாய வேலைக்கு வருவதேயில்லை. பிற சாதியை சேர்ந்த ஒருவர் எதிரில் வந்தால் தலித் தீண்டாமையால் ஒதுக்கப்பட்டது அந்தகாலம். தலித் ஒருவர் எதிரில் வந்தால் பிற சாதியினர் எதற்கு அவரோடு(தலித்) வம்பு என்று ஒதுங்கி போவதுதான் இந்த காலம் **வன்கொடுமை சட்டமும் ஒரு காரணம்*.
முரளி ஓந்திரியர் எங்கப்பா போனிங்க, நீங்க அந்த ஊர்க்காரர்தான, உண்மைய சொல்லனும் அந்த பக்கம் தலித்துக்களுக்கு இந்த கொடுமை நடக்குதா இல்லையா? அவ்வளவு ஏன் நீங்க அப்படிதானே நடத்துறிங்க.
காசு வாங்காமல் இவ்வளவு இழிதொழில்களையும் செய்து விட்டு,கண்டவுடன் ஐய்யா என்று கும்பிடவும் செய்கிறவன் வளர்வதுதான் ஆதிக்க சாதியினருக்கு பிடிக்கவில்லை.இப்பதான் புரிகிறது ஏண்டா இன்னும் இவர்களுக்கு ரிசர்வேஷன் என்று குதிக்கிறார்கள் என்று, அதுவும் ரிசர்வேஷன் வாங்கிக்கொண்டே.
very great atricals, continiou… your social revolution.