Saturday, April 19, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்மே 17 இயக்கம் : சாதி வெறியை கண்டிப்போம் ! ஆனா கண்டிக்க மாட்டோம் !!

மே 17 இயக்கம் : சாதி வெறியை கண்டிப்போம் ! ஆனா கண்டிக்க மாட்டோம் !!

-

பாமகவின் வன்னிய சாதிவெறிக்கு பலியான இளவரசன் மரணம் குறித்து மே 17 இயக்கம் வெளியிட்டிருக்கும் சுவரொட்டியை பார்த்தோம். இது இணையத்திற்காகவோ இல்லை வெளியே ஒட்டுவதற்காகவோ தயாரிக்கப்பட்டிருக்கலாம். அதில் இடம்பெற்றிருக்கும் முழக்கங்களை கீழே படிக்கலாம்.
_________________________

posterசாதீய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட இளவரசன் சொல்லிச் சென்றது என்ன?
இளவரசன் – சாதி பெயர் சொல்லி கட்சி வளர்ப்பவன் தமிழின துரோகி என புரிய வைத்து சென்றவன்.
இளவரசன் – சாதி வெறியர்களை தனிமைப்படுத்துங்கள் என்று சொல்லிச் சென்றவன்.
இளவரசன் – சாதிய பயங்கரவாதத்தை உணர்த்தியவன், தமிழ் சமூக மௌனத்தால் மரணித்தவன்.
இளவரசன் – நம் சமூகத்தின் பாராமுகத்தை வெளிப்படுத்தியவன்.
இளவரசன் – அரசியல் அமைப்புச் சட்டம் தோல்வி அடைந்தது என்று உணர்த்தியவன்.
இளவரசன் – தன் காதல் நாடக காதல் அல்ல, தூய்மையானது என்று நிரூபித்தவன்.
இளவரசன் – சாதி, ஒடுக்கும் அரசின் பங்காளி என புரிய வைத்தவன்
இளவரசன் – சாதி ஒழிக்கப்பட வேண்டியது, உரிமை மீட்கப்பட வேண்டியது என்று சொல்லிச் சென்றவன்.

“சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்”. உயர்வு தாழ்வு போதிக்கும் சாதி அடையாளத்தை மறுப்போம், தமிழராய் ஒன்றிணைவோம்.

மே பதினேழு இயக்கம்.
________________________________
இனி நமது விமரிசனம்.

சீமானுக்கு சொன்ன விளக்கம் பெரும்பாலும் இங்கேயும் பொருந்தும் என்றாலும் சிலவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.

சாதீய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட இளவரசன் எனும் தலைப்பே பாமக சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்து கொண்ட இளவரசன் என்ற உண்மையை மறைப்பதோடு திசை திருப்புகிறது. இளவரசன் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தில் கூட அடுத்த ஜென்மத்திலாவது ஒரே சாதியில் பிறந்து திருமணம் செய்வோம் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த அளவு நிகழ்கால பாமகவின் ஆதிக்க சாதிவெறி அவரை அச்சுறுத்தியிருக்கிறது. இளவரசன் எதற்கு அஞ்சினாரோ, எந்த சாதி வெறியர்களை வெல்ல முடியாது என்று விரக்தியடைந்தாரோ அதே சாதிவெறியை பெயரிட்டு கண்டிப்பதற்கு மே 17-ம் அஞ்சுகிறது.

ஈழத்தமிழ் மக்களின் இனப்படுகொலை, பேரினவாதம்தான் கொன்றது என்ற உண்மையை சொல்லிச் சென்றது, பேரினவாதிகளை தனிமைப்படுத்துங்கள் என்றது, பேரினவாதத்தின் பயங்கரவாதத்தை உணர்த்தியது, பேரினவாதத்தை ஒழிக்கப்பட வேண்டியது என்பதை உலகிற்கு உணர்த்தியது என்று எழுதுவதற்கும் இங்கே மே 17 சாதீய பயங்கரவாதம் குறித்து எழுதியதற்கும் வேறுபாடு உண்டா?

இதையே குஜராத் முசுலீம் மக்களின் இனப்படுகொலை, மதவெறிதான் கொன்றது என்ற உண்மையை சொல்லிச் சென்றது, மதவெறியை தனிமைப்படுத்துங்கள் என்றது, மதவெறி ஒழிக்கப்படவேண்டியது என்பதை உணர்த்தியது என்றும் சொல்லலாம்.

ஆக இந்துமதவெறி, சிங்கள இனவெறி என்று குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாக சொல்வது மட்டும் எப்படி ஒரு ஏமாற்றோ அது போலத்தான் வன்னிய சாதிவெறி என்று சொல்லாமல் சாதியம் என்று மட்டும் பேசுவது. இதனால் சாதியம் குறித்து பொதுவாகவே சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு பிரச்சினையின் குறிப்பான காரணத்தை சொல்லிவிட்டே பொதுவான அடிப்படைகளை பேசவேண்டும்.

சாதிப்பெயர் சொல்லி கட்சி வளர்ப்பவன் தமிழின துரோகி என்று சொல்லும் மே 17 இயக்கம் சாதிவெறி கொண்ட கட்சியை சொல்ல மறுப்பதுதான் தமிழின உணர்வு என்கிறதா ? இங்கே இளவரசன், திவ்யாவை பிரிப்பதற்காக பல மாதங்களாக பல்வேறு சதி வேலைகளை செய்து வந்த பாமகவின் வன்னிய சாதி வெறியர்கள்தான் இளவரசனது மரணத்திற்கு முதற் காரணம். அப்பேற்பட்ட பாமவை கண்டிக்க மே 17 பயப்படுகிறது என்பதுதான் பாமகவின் பலம். இங்கே மே 17 அவர்களை பெயரிட்டு சொல்ல அஞ்சுகிறது. இளவரசன் இவர்களை நேரிட்டு எதிர் கொண்டு வாழ முடியாது என்று சோர்ந்து ‘தற்கொலை’ செய்து கொண்டார்.

அந்த வகையில் இளவரசன் இந்த சமூகத்தைப் பார்த்து நம்பிக்கை கொள்ளாமல் இருந்ததற்கும் மே 17 போன்றவர்களும் ஒரு காரணமில்லையா? வன்னிய சாதிவெறியை வெளிப்படையாக கண்டிக்க முன் வராத இவர்கள் சமூகத்தின் பாராமுகத்தால் இளவரசன் இறந்து போனதாக சொல்லுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. தமிழ் மக்களின் மவுனத்தால்தான் இளவரசன் மரணமடைந்தார் என்றால் அந்த மவுனத்தில் மே 17-ம் இருக்கிறது என்கிறோம். மக்களுக்கு உபதேசிக்கும் முன் இவர்கள் தங்களுடைய நடவடிக்கை அதற்கு முரண்பாடாக இருப்பதை ஏன் பார்க்கவில்லை?

இளவரசன் மரணம் என்றில்லை, தேவர் சாதிவெறி என்று கண்டிக்காமல் பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டிக்க முடியுமா, இல்லை கொடியங்குளம் ‘கலவரத்தைதான்’ கண்டிப்பதாக சொல்ல முடியுமா? முருகேசன் கொலையை தேவர் சாதிவெறி செய்தது என்று சொல்வதற்கும் சாதீய பயங்கரவாதம்தான் என்று சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா? எது சரி என்பது இவர்களுக்கு பிரச்சினை இல்லை. எது பாதுகாப்பானது, எது பிரச்சினையற்றது என்பதே இவர்களுக்கு முக்கியம்.

சீமானோ, மே 17 இயக்கமோ இப்படி தேவர் சாதிவெறி, வன்னிய சாதிவெறி என்று குறிப்பிட்டு கண்டிக்க முடியாததற்கு என்ன காரணம்? அப்படிக் கண்டித்தால் இவர்கள் திரட்டும் தமிழின உணர்வு கலைந்து விடும் என்று பயப்படுகிறார்கள். வன்னிய சாதி வெறி என்று கண்டித்தால் இவர்கள் நடத்தும் ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வன்னியர்கள் வராமல் புறக்கணித்துவிட்டால் என்ன செய்வது என்று மே 17 யோசிக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சினைக்காக குரல் கொடுத்த ராமதாஸின் பங்களிப்பு முக்கியமானது என்று இவர்கள் கருதுவதால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான இவர்களது சாதிய வெறிக்கு மறைமுகமாக சலுகை காண்பிக்கிறார்கள்.

சரி, தலித் மக்களை ஒடுக்கும் வன்னிய சாதிவெறியை யாரும் கேட்க கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் ஈழத்திற்கோ, தமிழினத்திற்கோ பாமகவினர் குரல் கொடுப்பார்கள். அந்த பெரிய பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் தமிழினவாதிகள் இந்த சிறிய பாதகத்தை மன்னித்து அருளுகிறார்கள். தமிழகத்தில் நாடகக்காதல் என்று சொல்லி, அறிமுகப்படுத்தி, ஊர் ஊராக எல்லா ஆதிக்க சாதிகளையும் அழைத்துக் கொண்டு கூட்டம் போட்ட்து யார்? அந்த ராமதாஸை பெயர் போட்டு கண்டித்து ஒரு சுவரொட்டி கூட ஒட்டுவதற்கு முன்வராத நீங்கள் ஈழத்திற்கு என்ன சாதிப்பீர்கள் என்று கேட்கலாமா, கூடாதா?

ஒரு மனிதனின் அடிப்படை அற விழுமியங்கள் வேறு வேறு பிரச்சினைகளுக்கு வேறு மாதிரி இருக்காது என்ற உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை. நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி வெறியையே தனது சாதி உணர்வாக கொண்டிருக்கும் ஒரு நபர் முள்ளிவாய்க்கால் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக அழுகிறார் என்றால் அது ஏமாற்று இல்லையா?

இளவரசன் மரணம் என்பது ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனது அவலமான மரணம் அல்ல. அது இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை மறுப்பதின் ஒரு வெளிப்பாடு. அந்த உரிமைகளை மறுத்து அவர்களை ஒடுக்குவது ஆதிக்க சாதிவெறி. அத்தகைய ஆதிக்க சாதிவெறிகளை குறிப்பான சம்பவத்திற்கேற்ப குறிப்பான பெயரோடு அடையாளம் காட்டி கண்டிக்க வேண்டும்.

சாதிய பயங்கரவாதத்தை கண்டிப்பதாக மட்டும் பொதுவாகப் போட்டால் எந்த சாதிக்காரனுக்கும் பிரச்சினை இல்லை. அதை படித்து விட்டு அவர்கள் மே 17-ன் ஏனைய கொள்கைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் வன்னிய சாதிவெறி, தேவர் சாதிவெறி, முதலியார் சாதிவெறி என்று குறிப்பாக பேசினால் அவர்கள் மே 17-க்கு குட்பை சொல்லிவிட்டு போய்விடுவார்கள். இதுதான் மே 17-ன் பயம்.

எனில் மே 17 தனக்கு திரட்டி வைத்திருக்கும் சமூக அடிப்படையே இத்தகையதுதான் என்றால் அந்த செல்வாக்கை வைத்து எதையும் செய்ய முடியாது. ஏனெனில் சாதிவெறி கண்டிஸன்ஸ் அப்ளைக்கு உட்பட்டதல்ல விடுதலை உணர்வு.

இந்தப் பிரச்சினை எங்களுக்கில்லையா? நாங்கள் தலித் மக்களிடத்தில் மட்டும் அரசியல் வேலை செய்யவில்லை. நாங்கள் பேசும் வர்க்க அரசியலின் அடிப்படையில் எல்லா பிரிவு உழைக்கும் மக்களிடத்திலும் வேலை செய்கிறோம். அந்த வகையில் வன்னிய மக்களிடத்திலும் வேலை செய்கிறோம். வர்க்க விடுதலைக்கான அணி சேர்க்கையும் சாதிய வெறியை ஒழிப்பதும் வேறு வேறு அல்ல என்ற வகையில் நாங்கள் வேலை செய்கிறோம்.

இந்துக்களிடம் இந்து மதவெறியையும், இஸ்லாமியர்களிடத்தில் இசுலாமிய மதவெறியையும், வன்னியர்களிடத்தில் வன்னிய சாதிய வெறியையும், தலித் மக்களிடம் பிழைப்புவாத தலித் அரசியல் கட்சிகளையும் கண்டித்து பேசுகிறோம். இதில் எங்களுக்கு அச்சமில்லை என்பதோடு அந்த பிரிவு மக்களை மெல்ல மெல்ல உணர வைத்து இறுதியில் வர்க்க உணர்வுக்கு கொண்டு வருகிறோம். மேலும் மத உணர்வு, சாதி உணர்வு அனைத்தும் அந்தந்த பிரிவு மக்களுக்கும் சேர்ந்தே பாதிப்பை தருகிறது என்பதை தொடர் போராட்டத்தில் புரிய வைக்கிறோம். இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம்.

தமிழக மக்களை சாதிய ஒடுக்குமுறை இல்லாத சமூகமாக மாற்ற வேண்டுமென்று விருப்பப் படுவோர் இத்தகைய சாதிய ஒடுக்கு முறைகளை குறிப்பாகவும் எதிர்க்க வேண்டும். நத்தம் காலனியில் உடமைகளை இழந்த தலித் மக்களுக்கும், இளவரசனது மரணத்திற்கும் போராட விரும்புவோர் பாமக மற்றும் வன்னிய சாதிவெறியை கண்டிப்பதற்கு முன் வரவேண்டும். அதுவும் வன்னிய மக்களிடத்தில், வன்னிய மக்கள் வாழும் ஊர்களில் செய்ய வேண்டும். இதன்றி ஆதிக்க சாதிவெறியை அகற்றுவதற்கு வேறு வழிகளில்லை.

  1. நத்தம் காலனியில் உடமைகளை இழந்த தலித் மக்களுக்கும், இளவரசனது மரணத்திற்கும் போராட விரும்புவோர் பாமக மற்றும் வன்னிய சாதிவெறியை கண்டிப்பதற்கு முன் வரவேண்டும். அதுவும் வன்னிய மக்களிடத்தில், வன்னிய மக்கள் வாழும் ஊர்களில் செய்ய வேண்டும். இதன்றி ஆதிக்க சாதிவெறியை அகற்றுவதற்கு வேறு வழிகளில்லை.—வக்கு இல்லையென்றால் நரகலில் நல்லரிசி பொறுக்கி கொண்டு இருக்க வேண்டும்.

  2. சூப்பர் அப்பு … மே 17 போன்ற புது இயக்கங்கள் , தங்களுக்கு ஆள் சேர வில்லை, போராட்டங்களுக்கு கூட்டம் வரவில்லை என்று , கொள்கையின் உறுதியை இழக்கின்றனர்..இது ஓட்டு கட்சிகளின் வழிமுறை..

    இதனால்தான் சாதிவெறி என்று மேம்போக்காக எழுதி , பேசி கூட்டத்தை தக்க வைக்க முயற்சி செய்கின்றனர் ..இது தலைவர் பிரபாகரன், உலக அரசியல் மாறுதல் தெரியாமல் , நீக்கு போக்காக நடக்காமல் புலிகள் இயக்கத்தை அழித்து விட்டார் என்ற அரசியல் வியாதிகளின் கருத்துக்கு ஒத்தே உள்ளது..

    கொள்கையில் உறுதி என்பது மிகவும் கடினமான விடயம் ..அது பேஸ் புக் போஸ்டில் லோ ,சும்மா டைம் பாசுக்கு ப்ளாக் எழுதுவதிலோ , தொலைக்காட்சி பேட்டியிலோ வந்து விடாது..மக்களை சந்தித்து , மக்களை தொடர்ந்து பார்த்து பேசி , அவர்களை உண்மைகளை அறிய செய்வதில் உள்ளது …

  3. Agree with the contents of this article. Definitely the blame goes to PMK for today’s outcome. Love followed by marriage is a private affair which is time and again used by PMK and created lot of fuss and social unrest and ends with loss of two lives one Mr NAGRARAJ and another Mr Ilavarasan. Tamilians should follow Periyar and Ambedkar to come out of Casteism.

  4. சீமானோ அல்லது மே 17 இயக்கமோ – இவர்கள் சாதியற்ற அரசியல் நடத்தினால் கூடாரம் காலியாகி விடும். தெரிந்துதான் தமிழன் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

  5. சாதீய பயங்கரவாதத்தை பாமாக என்னும் குறுகிய வட்டத்தில் அடைக்க நீங்கள் விரும்புகிறீர்கள். இளவரசன் மரணம், பாமாக என்னும் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்ட ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த தனி மனிதனின் மரணமாகப் பார்க்கப்படவில்லை. இளவரசனின் மரணம் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு நிகழ்த்தப்பட்ட அநீதி. அது பாமாக என்னும் கட்சியோ வன்னியர் என்ற ஆதிக்க சாதியோ காரணம் என்றால் அது தான் சாதீய பயங்கரவாதம். சாதீய பயங்கரவாதத்தில் பாமாக மட்டுமில்லை, சாதியைக் கொண்டு பிழைப்பு நடத்தும் அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் அதில் அடங்கும். இங்கு தாழ்த்தப்பட்ட சாதி என்பது வெறும் பறையர் மட்டுமல்ல, பள்ளரும், சக்கிலியரும் இன்ன பிற பழங்குடி வகுப்பினரும் அடங்கும். இதை இளவரசன் பாமாக பிரச்சனை என்று பார்க்காமல், ஆதிக்க சாதி மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி இடையேயான பிரச்சனையாகப் பாருங்கள். சாதி இல்லாத தமிழ்ச் சமூகம் உருவாக வேண்டும் என்பது தான் தமிழ்த் தேசியத்தின் கொள்கை. மே 17 இயக்கத்தின் கொள்கையும் அதுவே. சாதிப் பிரச்னையை பெரிதாக்கி அதில் குளிர் காயும் மற்ற இயக்கங்களைப் போல் இல்லாமல், சாதீயப் பயங்கரவாதத்தால் எந்த ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் பாதிக்கப்படும் போது அதற்கு எதிராக மே 17 குரல் கொடுத்து வருகிறது. இளவரசன் மரணம் ஒரு அடையாளம். சாதீயப் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அழைப்பு மணி. பாமாக மட்டுமல்ல, சாதியைக் கொண்டு பிழைப்பு நடத்தும் அனைவரையும் வேரறுப்போம். சாதிகளற்ற தமிழ்ச் சமுதாயம் காண்பதே இலட்சியம்.

    • அப்படி என்றால் இனப்பிரச்சினையை மட்டும் ஏன் குறுகிய வட்டத்தில் வைத்து சிங்கள இன வெறி என்கிறீர்கள் ? அதையும் பரந்த விரிவான வட்டத்தில் வைத்து பொதுவாக இனவெறி எதிர்ப்பு என்று பேசலாமே, ஏன் அப்படி பேசுவதில்லை.

      தமிழ் இனம் என்று வரும் போது மட்டும் குறிப்பாக சிங்களம், ராஜபக்சே என்று பேசும் உங்களுடைய வாய்கள் சாதி என்று வரும் போது வாயை மூடிக்கொள்வது ஏன் ? சிங்களர்கள் யாரும் உங்களுடைய கட்சிகளில் சேரமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் தான் சிங்கள இனவெறி, ராஜபக்சே என்று ஆவேச முழக்கமிடுகிறீர்களா ?

      • இனப்பிரச்சனை என்பது குறுகிய வட்டம் கிடையாது. ஈழப் பிரச்சனையில், கிழக்கில் வாழும் தமிழர்களை விட வடக்கில் வாழும் தமிழர்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளானார்கள். இந்நிலையில் வடக்கில் வாழும் தமிழர்களுக்காக மட்டும் குரல் கொடுத்தால் அது தான் குறுகிய வட்டம். சிங்களவர்கள் என்று சொல்லாமல் இராஜபக்ச அரசு என்று சொன்னால் அது தான் குறுகிய வட்டம். சிங்களமும் தமிழினமும் தான் இந்த இனப்பிரச்னனையின் உச்ச நிலை. இதற்கு மேல் இந்த வட்டத்தை விரிக்க இயலாது. ஆனால் இளவரசன் மரணம் அப்படி அல்ல. பாமாக-வை மட்டும் இதில் குற்றம் சொல்வதற்கு இது ஒரு தனி மனிதன் பிரச்சனை இல்லை. சாதீய சமூகமும், இதை தடுத்து நிறுத்த இயலாத நீங்களும் நானும் கூட ஒரு வகையில் காரணம். பாமாக-வை மட்டும் வசைபாடி பிரச்சனையின் தீவிரத்தை திசை திருப்ப வேண்டாம். தலித்துகளுக்கு எதிரான கூட்டமைப்பு என்பது பாமாக-வை மட்டும் உள்ளடக்கியது இல்லை. இளவரசன் மரணத்திற்கு காரணமான ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டும். அது இளவரசனின் சொந்தமாக இருந்தால் கூட. இச்செயல் அரசியல் மட்டுமல்ல. காலங்காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுஞ்செயல்களின் உச்சக்கட்டம். அதனால் தான் சொல்கிறேன், இது வெறும் பாமாக இளவரசன் குடும்ப பிரச்சனை இல்லை. பாமாக உட்பட ஒட்டுமொத்த சாதீய பயங்கரவாதத்தையும் ஒடுக்கவேண்டிய தருணம் இது.

        • இனப்பிரச்சினை என்பது குறுகிய வட்டம் கிடையாது என்கிறீர்கள் சரி நானும் அப்படி நினைக்கவில்லை ஆனால் சாதிப் பிரச்சினை எப்படிப்பட்டது ? இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சினையான சாதிப் பிரசினை குறுகியதா பெரியதா ?

          • தமிழ்த் தேசிய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, தமிழ்த் தேசியத்தின் முதல் தடையான சாதி மிகப்பெரிய வட்டம். இதை தருமபுரி செயலை வைத்து குறுகி விடக் கூடாது என்பது என் வாதம். இதில் இந்தியாவில் உள்ள சாதிப் பிரச்சனைகளையெல்லாம் நீங்கள் இணைத்தால், இந்த வட்டம் இன்னும் மிகப்பெரியதாக செல்லும். ஒரு சாதியற்ற சமூகத்தை நம்மை சுற்றி நாம் உருவாக்க முனையும் போது, நமக்கு தடையாக இருக்கும் எந்த ஒரு செயலையும் தகர்த்தெறிய முற்பட வேண்டும். அது இந்திய அளவில் உருவாகும் சாதிப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, அமெரிக்காவில் உண்டாகும் சாதிப் பிரச்சனையானாலும் சரி. சாதீய பயங்கரவாதத்திற்கு இடம் பொருள் கிடையாது. அது எந்த ரூபத்தில் வந்தாலும் ஒடுக்க வேண்டும். இங்கு யாரும் பாமாக-வை சாதீயப் பயங்கரவாதத்திலிருந்து விளக்கு அளிக்கவில்லை. பாமாக மட்டும் சாதீய பயங்கரவாதம் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகள் பற்றின வரலாறை படித்தால் உங்களுக்கு இது நன்றாகப் புரியும். பாமாக-வின் பெயர் போஸ்டரில் இல்லை என்பதால் பாமாக-வை ஆதரிப்பதாக அர்த்தமில்லை. மே 17 இயக்கத்தின் செயல்பாடுகளை கவனித்து வந்திருந்தால் இப்படிப்பட்ட ஐயம் எழுந்திருக்காது. வாதத்தில் நேரத்தை வீணடிப்பதை விட அதை செயற்களத்தில் செலவழிக்கவே விரும்புகிறேன். நன்றி.

            • பொதுவாக சாதி பயங்கரவாதம் என்றெல்லாம் பேசுவது அனைவருக்கும் வசதியான, பொருத்தமான இடையூறு இல்லாத வார்த்தை அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம், நான் கேட்பது குறிபான சாதிவெறியர்களைப் பற்றி.

              உங்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அரிகரனிடம் முன்வைத்த அதே கேள்வியை உங்களிடமும் முன்வைக்கிறேன் பதிலளியுங்கள்.

              ஒன்று, நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனியில் உள்ள தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து கொழுத்தி அந்த மக்களின் உடைமைகளை சூறையாடி, சொத்துக்களை திருடிக்கொண்டு சாதிவெறியாட்டம் போட்டது யார் ?

              இரண்டு, அந்த சாதிவெறித் தாக்குதலுக்கு பிறகு திருமணமான திவ்யாவை அவருடைய விருப்பத்திற்கு மாறாக கணவர் இளவரசனிடமிருந்து பிரித்து வைத்தது யார் ?

              • //உங்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அரிகரனிடம் முன்வைத்த அதே கேள்வியை உங்களிடமும் முன்வைக்கிறேன் பதிலளியுங்கள்.// இதிலேயே தெரிகிறது, உங்களின் புரிதல் என்பது எப்பொழுதுமே அரைவேக்காடாக இருக்கும் என்று,

                மே 17 இயக்கம் கட்சி அல்ல முதலில்
                அடுத்து அதில் தலைவர்கள் என்று யாரும் இல்லை, அப்படி யாரையும் தலைவராக யாரையும் அடையாளப்படுத்தியதில்லை இதுவரை..

                மேலும் என் சொந்த வேலையை பார்க்க மே 17 இயக்கத்தை விட்டு நான் வெளி வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் பார்க்கிற அரசியல் வேலையை தெளிவுடன் பாருங்கப்பா..

                • அரிகரன்

                  மெழுகுவர்த்தி போராட்டம் நடத்தும் மே 17 அமைப்பைப் பற்றி தெரியாததால் அப்படி கூறவில்லை, தெரிந்ததால் தான் கூறினேன். பொதுவாக தமிழ்தேசிய அமைப்புகளில் அனைவரும் தலைவர்களாக தானே இருக்கிறார்கள், அந்த வகையில் தான் உங்களையும் தலைவர் என்றேன், உங்களைப் போல அசோக் குமார் தவமணியும் கூட தலைவர் தான். அந்த வகையில் நான் கூறியது சரி தானே அரிகரன்.

                  சரி அதைவிடுங்கள் கேள்விகளுக்கு பதில் எங்கே ?

                  • மே 17 மெழுகுவர்த்தி வைத்து நடத்துவது போராட்டம் இல்லை. அது இனப்படுகொலையில் உயிர் இழந்தோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருடா வருடம் நடத்தும் நினைவேந்தல். நினைவேந்தலுக்கு மெழுகுவர்த்தி தான் கொழுத்த வேண்டுமே தவிர ஊரை கொழுத்தக் கூடாது. இனப்படுகொலையை 2009 ஆண்டோடு மறந்துவிட்ட மற்ற அமைப்புகளுக்கு மத்தியில், நாம் அதை மறக்காமல் தலைமுறைகள் தாண்டி எடுத்து செல்வது இதன் நோக்கம்.

                    தமிழ்த் தேசிய அமைப்புகளை குறை கூறுவதினால் எந்த ஒரு செயலுக்கும் நீதி கிடைத்துவிடப் போவதில்லை. பாமாக-வை திட்டுவதால் இளவரசனுக்கும் நீதி கிடைக்கப் போவதில்லை. தன்னுடைய மரணத்திற்கு நீதி கிடைத்தால் போதும் என்பதை இளவரசன் கூட ஏற்றுக் கொள்ள மாட்டான். மாறாக மீண்டும் இது போன்ற ஒரு செயல் நடக்காவண்ணம் நாம் நம் சமூகத்தை மாற்ற முற்பட வேண்டும். அதுவே இளவரசன் மரணத்திற்கு நாம் செலுத்தும் மரியாதை. அதைவிடுத்து சாதிகளுக்கிடையே பகைமை உணர்வைத் தூண்டி, சாதீயை மூட்டுவதன் செய்வதன் மூலம் சாதியை ஒழிக்க இயலாது.

                    பிற தமிழ்த் தேசிய அமைப்புகள் எப்படியோ, ஆனால் மே 17 இயக்கத்தில் யாரும் யாருக்கும் தலைவர்கள் இல்லை. நான் பார்த்ததில் யாரும் தலைவர்கள் போல் அதிகாரமிக்கவர்களாக நடந்துகொண்டதுமில்லை. தனிப்பட்ட மனிதரைக் கொண்டு அமைப்பின் கொள்கை செயல் வடிவம் பெற முடியாது. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. ஒத்த கருத்துடைய தோழர்களின் செயற்பாட்டில் தான் இயக்கம் செயல்படுகிறது. சாதி எண்ணமுடையோருக்கு இங்கு இடமில்லை.

    • அசோக்குமார் தவமணி,
      இப்போது இளவரசன் மரணமடைந்து விட்ட பிறகு அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் யார் மீதெல்லாம் அரசும், போலிசு நடவடிக்கை எடுக்க வேண்டும்? உங்கள் வாதப்படி யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றல்லவா இருக்கிறது?

      • இளவரசன் மரணத்திற்கு காரணம், காதலை ஏற்கும் சூழலில் இல்லாத பெற்றோர், அச்சூழலை உருவாக்கிய அவர்களது உறவினர்கள், அவர்களது மனநிலையை மாற்றிய அவர்கள் சமுதாயம், அச்சமுதாயத்தை உருவாக்கிய சாதி வெறி கொண்ட மக்கள், அம்மக்களை மாற்றிய பாமாக, அவர்களை மாற்றத் தூண்டிய சமூகம், அந்த சமூகத்தை மாற்றத்தை தூண்டிய ஆட்சி அதிகாரம், அதற்கு காரணமான மக்களின் சுயநலம் என இதன் பட்டியல் நீளம். அதற்கு தான் இதை குறுகிய வட்டத்தில் அடைக்க வேண்டாம் என்று கூறுகிறேன். இன்று பாமாக இடத்தில் நாளை வேறு ஒரு கட்சி வரும். இதன் தீர்வு பாமாக-விடம் இல்லை. பாமாக-வும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

        • அதென்ன பா.ம.க.வும் தண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் இவ்வாறு கூறுவதன் மூலம் பா.ம.க தான் முதல் குற்றவாளி என்பதை மறைத்து அந்த சாதிவெறியர்களை பத்தோடு பதினொன்றாக்குகிறீர்கள்.

          தருமபுரியில் வெறியாட்டம் போட்டது யார், மாமல்லபுரத்தில் கூட்டம் போட்டு சாதிவெறியூட்டியது யார், இறுதியில் திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்தது யார் ?
          இதை எல்லோரும் செய்தார்களா பா.ம.க, வன்னியர் சங்க குண்டர்கள் செய்தார்களா ?

          இப்படி உண்மையை மறைத்து அரசு, சமூகம், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பான வன்னிய சாதிவெறியை பொதுவாக சாதிவெறி என்று பொதுமைப்படுத்துவதன் மூலம் இளவரசனின் மரணத்திற்கு காரணமான கொலைக்குற்றவாளை நீங்களும் உங்களுடைய மே 17 இயக்கமும் மறைக்கிறீர்கள் காப்பாற்றுகிறீர்கள், இளவரசனுக்கும் தலித் மக்களுக்கும் துரோகம் செய்கிறீர்கள்.

        • அசோக்குமாரு தவமணி, தன்னோட வீட்டுல திருடுன திருடன காட்டிக் கொடுக்கமாட்டாருபோல

  6. தேவர் சாதிவெறி என்று கண்டிக்காமல் பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டிக்க முடியுமா // துப்பாக்கி சூடுன்னா கள்ள துப்பாக்கியா வினவு :p

  7. The way love letter written raises suspicious.I think some has convinced this guy to write and die in this way to strengthen anti caste movement.He might have been also killed by anti caste activities.If someone got hit by train,injuries would have been completely different.

  8. மே 17 இயக்கம் ஒட்டிய சுவரொட்டியில் சாதிய வெறியை மட்டும் குறை சொல்லி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறீர்கள், இளவரசன் மரணத்திற்கு யார் என்று ஒருவரை குறிப்பிட வில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். மே 17 இயக்கம் சுவரொட்டியில் தமிழ் சமூகத்தில் இருக்கும் சாதிய வெறி என்பது ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் சாபக்கேடு என்பதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இளவரசன் என்று ஒரு அடையாளத்தை வைத்து ஒட்டுமொத்த சமூகத்திலும் தெற்கு வடக்கு மேற்கு கிழக்கு என்று எல்லா பகுதியிலும் நடைபெறும் ஒட்டுமொத்த சாதிய அடக்குமுறையை சொல்ல விழைந்திருக்கிறார்கள், ஆனால் நீங்கள் தமிழகத்தின் ஒரு பகுதி மக்கள் அனுபவிக்கும் சாதீய வெறிக்கு மட்டும் பதில் சொல்ல சொல்கிறீர்கள். ஒரு இயக்கமாக செயல்பட வேண்டியவர்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்காக செயல்பட வேண்டும் என்று உங்கள் வர்க்கப்போரட்ட வாதம் சொல்லி தரவில்லையா..

    தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்து மூளை முடுக்கெல்லாம் அனைத்து ஆதிக்க வெறி கொண்ட சாதிகளின் முகமூடியாக இளவரசனின் மரணத்தை சித்தரிப்பதே மே 17 இயக்க சுவரொட்டியின் நோக்கமாக இருக்கிறது, இதில் ஒரு பக்கமான ஒரு ஆதிக்க சாதியை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு ஒட்டுமொத்த ஆதிக்க சாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறீர்களா.

    அதாவது உங்கள் வர்க்கப்போராட்ட தர்கத்தின் படி ஒரு முதலாளியை மட்டும் குற்றம் சாட்டி மற்ற முதலாளிகளை காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள் அது தானே உங்கள் வர்க்க கோட்பாடு

    • பதில் கட்டுரையிலேயே இருக்கிறது நண்பரே..

      //ஆக இந்துமதவெறி, சிங்கள இனவெறி என்று குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாக சொல்வது மட்டும் எப்படி ஒரு ஏமாற்றோ அது போலத்தான் வன்னிய சாதிவெறி என்று சொல்லாமல் சாதியம் என்று மட்டும் பேசுவது. //

    • அரிகரன் எப்படி எல்லாம் பேசி நம்மை பதில்கூற முடியாதபடி திக்குமுக்காடவைத்துவிடுகிறார். அரிகரன் அண்ணன் நீங்க இப்ப TVS லூகாஸ் கம்பெனியில வேலை பார்க்கிறீங்கன்னு வச்சுக்குவோம், TVS முதலாளியால நீங்க பல வகைகளில் பாதிக்கப்படுறீங்க ஒரு கட்டத்தில் உங்களோட கையே எந்திரத்தில் மாட்டி நைந்து விடுகிறது, அப்போது உங்களுடைய தமிழ்தேசிய கண்ணோட்டத்தின்படியோ அல்லது எங்களுடைய மார்க்சிய வர்க்க கண்ணோட்டத்தின்படியோ நீங்கள் யாரை எதிர்த்துப் போராடுவீர்கள், யாரிடம் இழப்பீடு கேட்பீர்கள் ? குறிப்பாக TVS முதலாளியிடம் கேட்பீர்களா அல்லது எல்லா முதலாளிகளும் ஒன்னுதான்னு பொதுவாக முதலாளி வர்க்கத்திடம் கேட்பீர்களா ?

      இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், புரிஞ்சிடுச்சுன்னா இப்ப சொல்லுங்க இளவரசன் மரணத்திற்கு இந்தியாவிலிருக்கிற எல்லா சாதிகளும் காரணமா அல்லது குறிப்பாக வன்னிய சாதிவெறி காரணமா ?

      • புத்திசாலிதன்ம் தேவை தான் அதற்காக இப்படியா? டி.வி.ஸ் கம்பெனியில் ஒரு கை போகிறது என்றால் டி.வி.ஸ் முதலாளியுடன் தான் போராடவேண்டும். இளவரசன் காதலித்ததால் இளவரசினின் குடும்பம் மட்டும் பாதிக்க படவில்லை. நாயக்கன் கொட்டாய், அண்ணா நகர், நத்தம் காலனி என்று 3 காலனியை அழித்ததை வெறும் சட்ட ஒழுங்காக பார்ப்பதா? சாதிய பயங்கரவாதமாக பார்ப்பதா? எரித்து அழிக்கப்பட்ட கிராமங்கலிள் இருந்து வெறும் 16கி.மீ தொலைவில் தான் தருமபுரி மாவட்ட தலைநகரம் உள்ளது.இதில் அரசு வன்கொடுமை சட்டத்தின் கீழ் இந்த எரிப்பு சம்பவத்தில் ஒருவரையும் கைது செய்யவில்லை. இதில் பா.ம.க தான் ஈடுபட்டிருந்தாலும் அரசின் இந்த கள்ள மொளனத்தை என்ன வென்று குறிப்பது. சாதி பயங்கரவாதம் என்பது பா.ம.க வையும் குறிக்கும் அவர்களுடன் கூட நின்ற அனைத்து சாதி இயக்கங்களையும்,அரசையும், அரசு சார்ந்த வர்க்கத்தையும் சாரும்.சாதி வெறியாட்ட வரலாறு இளவரசனில் ஆரம்பிக்கவில்லை.

        சரவணன் தங்கப்பா.

        • டி.வி.எஸ் முதலாளியுடன் தான் போராட வேண்டும் என்று நீங்கள் புத்திசாலித்தனமாக சொல்லிவிட்டீர்கள். அப்படியானால் திருமணமான திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்தவர்களைப் பற்றி குறிப்பாக (அதாவது டி.வி.எஸ் முதலாளி என்று குறிப்பாக கூறியதைப் போல) கூற வேண்டுமா அல்லது பொதுவாக கூற வேண்டுமா ? வன்னிய சாதிவெறியர்கள் என்று குறிப்பாக தானே பேச வேண்டும், ஆனால் இவர்கள் அப்படி பேசவில்லை, இவர்களுடைய சுவரொட்டியிலும் அப்படிப்பட்ட வாசகங்கள் இல்லை, அதன் பிறகும் அப்படி எங்கேயும் எழுதவில்லை என்பதோடு அதை நியாயப்படுத்தி பேசி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

    • ஹரிகரன், இளவரசன் மரணத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் போராடுகிறீர்களா? எனில் அவரது மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் என்று யாரை குற்றம் சாட்டுகிறீர்கள்? உங்கள் விளக்கப்படி தமிழகத்தின் கடைக்கோடி வரை இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வருகிறது. இப்படி இளவரசன் மரணத்திற்கு காரணமான பாமக, வன்னிய சாதிவெறி குற்றவாளிகளை தப்பவிட உதவி செய்கிறீர்களே? இதுதான் உங்களது தமிழ் உணர்வா?

    • தருமபுரி நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனியில் உள்ள தலித் மக்களின் வீடுகளை சூறையாடி கொள்ளையடித்ததற்காக மே 17 திருமுருகன் யார் மீது குற்றஞ்சாட்டுகிறார், யார் மீது நடவடிக்கை எடுக்கக் கோருகிறார் ?

      இந்த கேள்விக்கு நேரிமையாக பதிலளிக்க வேண்டும்.

      அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு நத்தம் காலனி மக்கள், வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்தது, அதை கண்டித்து மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதைப் பற்றி தனது முகநூலில் மே 17 என்கிற தலைவர்களே இல்லாத அமைப்பின் உறுப்பினர் அல்லது உறுப்பினர்களே இல்லாத அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி ”நீதி கேட்டு நடக்கும் போராட்டங்களை அரசு முடக்க நினைக்கிறது. போராட்டங்களை பரவலாக்குவோம். நீதியை வென்றெடுப்போம்.” என்று எழுதியுள்ளார்.

      நீதி கேட்டு நடக்கும் போராட்டம் என்றால் யாரால் யாருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, போராட்டங்களை அரசு முடக்க நினைக்கிறது என்றால் யாருடைய நலனுக்காக முடக்க நினைக்கிறது, போராட்டங்களை பரவலாக்குவோம் என்றால் யாருக்கு எதிரான போராட்டங்களை பரவலாக்க வேண்டும் என்று தெளிவாக் கூற வேண்டும்.

      கூறுங்கள்.

      • அரிகரன் அசோக்குமார் தவமணி உங்களுக்கு தான் இந்த கேள்விகள். திருமுருகனும் சொல்லலாம்.

  9. இப்படி நமக்குள்ளேயே சட்டையை பிய்த்துக்கொள்வோம், சமூக அக்கறையுள்ள அமப்புகளை தொடர்புகொண்டு அவர்களின் மீதான விமர்சனத்தை(மீது) ஒருமுறயேனும் தெரியப்படுத்தி அதற்கான அவர்களின் நிலையை தெரியப்பெற்ரதுண்டா.. பேச்சுக்களை ஏற்படுத்தி உங்கள் விமர்சனங்களிண் அவசியத்தை அவர்களிடம் எடுத்துச்சென்ரதுண்டா?நாம் யாரை தனிமைப்படுத்துகிரொம்! அல்லது நாம் தனியாக அடுத்த நகர்வை செயப்போகின்ரோமா..
    உடநே நான் அவனுக்கோ இவனுக்கோ ஆதரவு என்ரு எண்ண வேண்டாம்.. இளவரசன் எனக்கும் அண்ணண்தான்

    • இது சட்டையைப் பிய்த்துக்கொள்ளும் தெருச்சண்டை அல்ல, மே 17 க்கு அவர்களுடைய தவறை தெரியப்படுத்தும் அரசியல் விமர்சனம் தான். இந்த கட்டுரையில் அரசியல் ரீதியிலான விமர்சனத்தை தாண்டி தனிப்பட்ட முறையில் அந்த அமைப்பைப் பற்றி எந்த கருத்துக்களும் இடம்பெறவில்லை. இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு தவறை உணர்ந்து சுய விமர்சனம் செய்து கொள்வதோ அல்லது தவறை மூடிமறைக்க முயல்வதோ, அவதூறு செய்வதோ எதுவாயினும் அது அவர்களுடைய விருப்பம் மற்றும் கொள்கை நேர்மையைப் பொருத்தது.

    • அரசியல் என்பது திரைமறைவில் பேசிக்கொள்ளும் இரகசிய வியாபாரம் அல்ல. இளவரசன் மரணமும் குற்றவாளி யாரென்று தெரியாத மர்ம மரணமல்ல. ஆதிக்க சாதிவெறி குறித்தும் அதை எதிர்த்து போராட வேண்டிய முறைகள், புரிதல் குறித்தும் இப்படித்தான் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

  10. வினாவுக்கும் மற்ற சன் டிவி நியூஸ் வகையறாக்களுக்கும் வித்தியாசமில்லை ………… அங்கு இழவு வீட்டின் முன் உட்கார்ந்து அரசியல் செய்கிறார்கள் …….. இங்கு தெருவில் திரியும் வெறி நாய் போல் போகிற வருபவனைஎல்லாம் கடித்து குதறுகிறார்கள் ………… இவர்களுக் கெல்லாம் ஹிட்ஸ் மட்டுமே முக்கியம் …….. எவன் குடி அழிந்தால் இவர்களுக்கென்ன …………? அதன் மூலம் விளம்பரம் மட்டுமே முக்கியம்….. கம்யூனிஸ்ட் என்று சொல்லி திரிபவர்களுக்கு என்ன அடிப்படையான உளவியல் பிரச்சினை என்றால் தாங்கள் மட்டுமே அறிவாளிகள் என்று நினைப்பதுதான் . இம்மாதிரி மனிதர்கள் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட அடிப்படையன் கரணம் அடுத்தவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுத்து ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலைதான்…………. மாற்றுக்கருத்து என்ற பெயரில் இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் வெறிபிடித்த நாய்க்கு ஒப்ப மாறி இருக்கிறது………

    • அய்யா, எங்களை என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள், ஆனால் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள், இளவரசன் மரணத்திற்கு யார் காரணம்? யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்? இதில் ஒருவர் குற்றவளிகளை மறைத்து விட்டு பொதுவாக அட்வைசு செய்தால் உங்களுக்கு கோபம் வராதா? வரவில்லை என்றால் இளவரசன் மரணம் குறித்து உண்மையில் நீங்கள் மகிழ்பவராக கூட இருக்கலாம். எனில் அதை வெளிப்படையாக சொல்லுங்கள்

      • நீங்கள் நடுநிலையோடு செயல்படுபவராக இருந்தால் இளவரசன் மரணத்திற்கு உங்கள் மனம் எவ்வளவு மனம் குமுருகிறீர்களோ அதே அளவு மரக்காணத்தில் மூன்று வன்னியர்கள் கொல்லப்பட்டபோதும் தலித்திய சாதி வெறியாளர்களையும் கண்டித்திருக்க வேண்டும்…………. காவல்துறை மூன்றுபேரின் சாவுக்கு சாலைவிபத்துதான் காரனம் என்று வழக்கு பதிவு செய்தபோது நீங்கள் எங்கு அவர்களின் சாவுக்கு ஒரு சிறிய எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறீர்கள்………….? நாகராஜன் சாவுக்கு காவல்துறையின் கட்ட பஞ்சாயத்துதான் காரணம் என்றகருத்தை இப்பொழுது டெக்கான் கிரானிக்கிள் கூறுகிறது……..
        http://www.deccanchronicle.com/130712/news-current-affairs/article/dc-special-here-love-gets-fixed%E2%80%99?page=show இதற்கு உங்கள் பதில் என்ன …………?

  11. பொதுவாகவோ அல்லது குறிப்பிட்டோ சாதி வெறியை கண்டிப்பது இருக்கட்டும்………… நீங்கள் எந்த கம்யூனிஸ்ட்………… வலதா, இடதா , சீனா mad ஆ , ருஷ்யனா ,கியுபனா, போலி கம்யூனிஸ்ட்டா ,…….. எந்த வகையறா என்று எங்களுக்கு விளக்கி சொல்லுங்கள் . நீங்கள் எந்த வகையற என்றே புரியவில்லை .
    //வன்னிய மக்களிடத்திலும் வேலை செய்கிறோம். வர்க்க விடுதலைக்கான அணி சேர்க்கையும் சாதிய வெறியை ஒழிப்பதும் வேறு வேறு அல்ல என்ற வகையில் நாங்கள் வேலை செய்கிறோம்//.
    அப்பப்பா………… கொசு தொல்ல தாங்கமுடியல ……… நாகராஜன் இறந்த போதும் , மரக்காணத்தில் மூன்று வன்னியர்களை கொலை செய்தபோதும் வன்னியர்களுக்காக எங்கு வேலை செய்தீர்கள்………… ரஷ்யாவில் தானே………….? எனக்கு ஒரு உண்மை தெரிசாகனும் சாமி……… நீங்க விளம்பர தலித் கம்யூனிஸ்டா …….. அல்லது தலித் விளம்பர கம்னிஸ்ட் டா ………..? சொல்லுங்கள் வி(புனை)வு .

    • சாதி வெறியை கண்டிப்பது இருக்கட்டும்//
      ஏன், அதற்கு நீங்கள்தான் குத்தகை எடுத்திருக்கிறீர்களா?

      நீங்கள் எந்த வகையற என்றே புரியவில்லை//
      வினவு தளம் தமிழில் தான் இயங்குகிறது. எடுத்தவுடன் நேரே மறுமொழிகள் பக்கத்திற்கு செல்லாமல் கட்டுரையைப் படித்தால் புரிவதற்கு வாய்ப்புண்டு.

      ரஷ்யாவில் தானே………….? நீங்க விளம்பர தலித் கம்யூனிஸ்டா …….. அல்லது தலித் விளம்பர கம்னிஸ்ட் டா ………..? //
      முன்முடிவின்றி உங்களால் எதையுமே அணுகமுடியாதா?

  12. Vinavu, Why you are not touch the Bomb Blast in Budha Gaya? I know. Because, Muslims only done it and Mujahudin take responsibilites. You are critises Hindus and other castes only. Please change this very bad habit.

  13. பா.ம.க வையோ அதன் சாதிய அரசியலையோ மே17 இயக்கம் கண்டிக்கவில்லை என்று எதன் அடிப்படையில் சொல்லுகிறீர்கள், மே17 இயக்கத்தின் தோழர் திருமுருகன் வன்னிய சாதி வெறியை கண்டித்து அதன் காரணமாக அவர் மீது தொடர்ச்சியாக செய்த வண்மமான வசவுகளையெல்லாம் அறியாமல் போகிற போக்கில் தூற்றிவிட்டு போக கூடாது. தான் செய்யிறது தான் சரி, மத்தவன் செய்யிரது அனைத்தும் தவறு என்ற உங்கள் நிலைப்பாட்டை மாற்றுங்கள் உண்மை புரட்சியாளர்களே!!

    • இங்க பாருங்கண்ணே! திட்டு வாங்கினதுக்காகல்லாம் திருமுருகன் வார்த்தைய வாபசு வாங்க மாட்டாரு. வெள்ளாடாதீங்க!

    • இளவரசன் மரணத்திற்கு எந்த சாதிவெறி காரணம் என்று மே 17 கருதுகிறது என்று சொல்லுங்கள்.

    • இளவரசன் மரணத்திற்கு காரணமான வன்னிய சாதிவெறி, பாமக சாதிவெறியர்களே குற்றவாளிகள் என்று மே 17 அல்லது திருமுருகன் எங்கே என்ன எழுதியிருக்கிறார்கள்? அதன் காரணமாக அவர் மீது என்ன வசவு வந்தது? இணைப்பு கொடுங்கள் அல்லது எடுத்துப்போடுங்கள், பார்த்து விட்டு சொல்கிறோம்.

      • Thirumurugan Gandhi
        July 6
        தலித்துகள் பிற சாதிப் பெண்களை போலிக்காதலில் ஏமாற்றுகிறார்கள் என்பதுவும் , இசுலாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதுவும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக நடக்கிறது. அரசுக்கு எதிராக மக்கள் திரும்பும் போது அவர்களுக்குள்ளாகவே அவர்களை எதிரிகளாக மாற்றுவது நடக்கிறது இந்தியாவில்..

        தலித்துகள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால் 1000 வீடுகளை எரிக்கலாம், பொருட்களை எடுக்கலாம் என்று சொல்லி ஒட்டுமொத்த தலித்துகளை எதிரிகளாக அறிவிக்கலாம் என்றால்.. இதே போன்றதொரு அறிவிப்பினை , கந்து வட்டி செய்து பலக்குடும்பங்களை அழிப்பவர்களை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் சொல்லி அவர்களையும் ஒட்டுமொத்த சமூகத்தின் எதிரிகளாக அறிவிக்கலாமா?.. நாடகக் காதல் என்பதை விட அதிகம் பாதிக்கப்பட்ட்து கந்துவட்டியில் தானே?…. கொங்கு மண்டலப்பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக அடிக்கடி கேள்விப்படும் நிதி மோசடிகளை செய்வது என்ன சாதி என்று அறிந்து அவர்களையும் “ஒட்டுமொத்த தமிழர்களின் விரோதிகளாக அறிவிக்கலாமா”..

        வெள்ளைக்காரன் ஒரு சில சாதிகளை “குற்றப்பரம்பரையாக” அறிவித்ததற்கும் இன்று தலித்துகளை குற்றவாளிகளாக அறிவிப்பதற்கும் என்ன வித்தியாசம்?… இது சரியென்றால் அதுவும் சரியா?…

        ஒருசிலர் (தலித்களாக இருப்பதற்காகவே) மீது இருக்கும் விமர்சனத்திற்கு ஒட்டு மொத்த தலித்தினையும் பழிவாங்கலாம் அல்லது தாக்கலாம் என்றால், இதே அளவுகோளினை தமிழரை காட்டிக்கொடுத்த தலித் அல்லாத பல்வேறு கட்சிகளினை சார்ந்தவர்களின் சாதியையும் அவ்வாறான ஒட்டுமொத்த குற்றச்சாட்டிற்கு நாம் ஏன் உட்படுத்தவில்லை…

        நாமக்கல்லில் கல்வியினை பிராய்லர்கோழிப் பண்ணையாக மாற்றி குழந்தைகளின் எதிர்காலத்தினை கெடுப்பவர்களையும், கிராணைட் கல் எடுத்து சூழலை அழித்தவர்களின் சாதியையும், ஆற்றில் மண் எடுத்து தண்ணீர் ஆதாரத்தினை அழித்தவர்கள் சார்ந்திருந்த சாதியையும், திருப்பூர்-ஈரோட்டில் பவானி, நொய்யலினை சாயப்பட்டரை சாக்கடையாக மாற்றியவர்களின் சாதிகளையும் ஆராய்ந்து அவர்களை தமிழரின் எதிரியாக அறிவிக்கலாம் இல்லையா?…. இவர்களை விடவா நாடகக் காதல் என்று நீங்கள் சொல்வது இன்று ஆகப்பெரும் ஆபத்தாக வந்து நின்றது?…

        தண்ணீரை தனியார் மயப்படுத்தும் மசோதா வந்திருக்கிறது…. இது அனைத்து சாதிக்கும் எதிரானதுதான்.. ஏன் இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் எதிரானதாக இந்த பாமக உள்ளிட்ட தலித்துகளுக்கு எதிரான கூட்டமைப்பினால் அறிவிக்கப்படவில்லை.?….
        மின்சாரத்தினை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கவும், தனியார் நிறுவனங்களுக்கு மின் உற்பத்திக்கான அனுமதியை வழங்கி இன்னும் 3 வருடங்களில் 5 மடங்கு மின்கட்டனம் அதிகரித்து ஒட்டுமொத்த சாதிகளும் மிக அதிகமான கட்டணத்தினை கட்டவேண்டும் என்பது நடக்கிறது… இதில் எதாவது தலித்துகளுக்கு சலுகையாக கிடைக்கிறது என்பதற்காக போராட்டம் நட்த்துகிறீர்களா?.. அல்லது அனைத்து தலித் அல்லாத சமூகத்திற்கு இந்த கட்சிகள் ஒன்றாக கூடி சலுகைகள் வாங்கி தரப்போகிறீர்களா?…

        விதைச் சட்டம் வருகிறது , மரபணு விதைச் சட்டம் வருகிறது. இதைப்பற்றியெல்லாம் பாமக பேசி இருக்கிறது, ஆனால் ஏன் இதற்கு எதிராக மக்களை அணி திரட்டவில்லை?… ஏன் இது தமிழ்ச் சமூகத்தின் ஆகப்பெரும் ஆபத்து என்று அறிவித்து கூட்டமைப்பினை உருவாக்கவில்லை?….

        வன்னியச்சமூகம் ஆகப்பெரும் விவசாயச் சமூகம் இது இந்த தண்ணீர்-மின்சாரம்-விதை மசோதாக்களால் பாதிக்கப்பட போகிறது. இதை விடவா “ நாடகக் காதல்” முன்ன்னிப் பிரச்சனை உங்களுக்கு?… சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை சமூகப் பிரச்சனையாக மாற்றுகிறீர்கள். சமூக-பொருளாதாரப் பிரச்சனையை என்னவாக கையாண்டு இருக்கிறீர்கள்.. இந்த மசோதாக்கள் நீங்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தபோது வந்த்து தானே?.. எங்களைவிட உங்களுக்கு தெரியாதா என்ன?

        ”தானே புயல்” சீரழிவிற்கு மத்திய அரசு உதவித் தொகை வழங்கவில்லை… இந்த அணி திரட்டல் மற்றும் அனைத்து இயக்கங்களுக்கு தலைமை வழங்கி இந்திய அரசிற்கு எதிராக போராட்டம் நடத்த , (இப்பொழுது அழைப்பது போல) ஏன் யாருக்கும் அழைப்பு விடப்படவில்லை?…

        இன்று நீங்கள் ஒட்டுமொத்த தலித்திற்கு எதிராக திரட்டப்படும் மக்கள் திரட்டல், கருத்து பிரச்சாரத்தினை இவற்றிற்கு எதிராக அறிவித்து எங்கள் அனைவரையும் திரட்டி இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உங்கள் பின் நின்று இருக்குமே?… அப்படி திரட்டி இருந்தால் ”நீங்கள் சொல்லும் நாடகக் காதல்” உட்பட அனைத்து சமூக பிரச்சனையையும் அனைவரும் சேர்ந்தே எதிர்கொண்டு இருக்கலாமே… ஒட்டுமொத்த சமூகத்தினையும் ஒன்றாக்கி அதற்கான போராட்டத் தலைமையை தர மறுத்தது யார்?…. இச்சமூகத்தினை யார் இன்று உடைத்திருக்கிறார்கள்…

        நீங்கள் நாடக காதல் பிரச்சனையை வைத்த காலங்களில் தான் இதற்கான மசோதாக்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.

        தலித்துகள் இன்று அதிகாரத்தில் பெரும்பங்கெடுத்த சமூகம் இல்லை. அதிகாரவர்க்கத்திலும் பெரும்பான்மை சமூகமாகவும் இல்லை. ஆகப்பெரும் பொருளாதார பலம், நிலவளம் பெற்றவர்களாக இல்லை என்கிற போது , இம்மசோதாக்களில் இவர்களின் பங்கு என்பது இல்லாமல் இருக்கும் போது , இந்த ஆபத்துகளை வன்னியர் உட்பட அனைத்து உழைக்கும் மக்களுக்கு தூக்கு கயிராக கொண்டு வந்த தலித் அல்லாத பிற சமூகங்கள் உங்களுக்கு ”நண்பர்கள்”, தலித்துகள் ”எதிரிகள்” என்றால் நீங்கள் யாருடன் நிற்கிறீர்கள் என்பது புரியாமல் இல்லை….

        ஒரு சமயத்தில் வன்னியர் மட்டுமல்லாமல் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஏன் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள், இசுலாமியர் என அனைத்து விளிம்பு நிலை மக்களும் உங்களுடன் நிற்க தயாராக இருந்ததை இன்று நீங்களே உடைத்து இவர்களை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக மாற்றி இருக்கிறீர்கள்… பின் நவினத்துவவாதிகள் ஏகாதிபத்தியத்திற்கும் , இந்தியத்திற்கும் எடுபிடி அரசியல் கருத்தாங்களை அரசியல் செயல்பாட்டு தளத்தில் விதைத்து இச்சமூகத்தினை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு நகர்த்தி ஏகாதிபத்தியமும், உலக வங்கியும் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் என்று நிரூபித்திருக்கிறீர்கள்.

        நீங்கள் வன்னியர்கள் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் வந்திருக்கின்ற அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்சனைகளில் இருந்து அனைவரையும் திசை திருப்பி இன்று இந்திய அரசிற்கு உதவி செய்திருக்கிறீர்கள் என்பது தான் துயரமான உண்மை.

        உழைக்கும் பாட்டாளிச் சமூகத்தினை இரண்டு கூறுகளாக பிரித்திருக்கிறீர்கள். இது யாருக்கு லாபம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்று நடக்கும் அணி திரட்டல் இவர்களை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக அல்ல.. இருவரையும் ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத்திற்கும் , அது நடத்தும் போலி சனநாயகத்தின் மூலமாக இவர்கள் நிலங்களும், சூழலும், வாழ்வாதரங்களும் பலியிடப்படுவதற்கே…

        ஒரு சமயத்தில் எங்களுக்கு ஆதரவாய் களத்தில் நின்ற கட்சிகள் இந்திய தேர்தலுக்காக இன்று எங்களுக்கு எதிராக நிற்பதுவே எங்களின் ஆகப்பெரும் துயரம்.

        2011 மூவர் தூக்கிற்காக செங்கொடி தியாகத்திற்கு ஒரே மேடையில் திரண்ட தமிழர் தலைவர்கள் – பரமகுடி துப்பாக்கி சூட்டில் அரசு உடைத்தது.

        2012 நவம்பர்- லண்டனில் தமிழீழ படுகொலைக்கான அனைத்து கட்சி மாநாடு – ஒரே மேசையில் ‘டி.ராஜா, தா.பா, திருமா, ஜிகே மணி, கிருஸ்ணசாமி, அய்ய நாதன், விடுதலை ராஜேந்திரன், உள்ளிட்டவர்கள்” நின்ற காலத்தில் – தர்மபுரி நாயக்கன் கொட்டாய்.

        2013 ஐ. நா விவாதம், காவேரி பிரச்சனை, விவசாயிகள் மரணம், – சாதிப் பிர்ச்சனையின் இரண்டாம் கட்டம் மதுரையில், பரமகுடியில்.

        2013 ஜூலை , நெய்வேலி என் எல் சி பிரச்சனை அனைத்து சமூக மக்களும், ஊர் கிராம மக்களும் திரண்டு போராட்டம் நடத்தும் அதே தினத்தில் இளவரசன் கொலை..

        ஒன்றாய் திரள திரள நாம் மேலும் மேலும் உடைக்கப்படுகிறோம்… சாதியாய் தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்பட முடியாது. சுயசாதி விமர்சனமற்று சமூக நீதியை பேச முடியாது.

        திருமுருகன் facebook ல் எழுதியது…

        https://www.facebook.com/thirumurugan.gandhi?hc_location=timeline

        • இவ்வளவு நீளமாக எழுதத் தெரிந்த மே 17 தலைவருக்கு ”வன்னியர் மக்களிடம் சாதிவெறியை தூண்டி விடும் ராமதாசை கைது செய், ஆதிக்க சாதிக் கொழுப்புடன் பேசும் காடுவெட்டி குருவை குண்டர் சட்டத்தில் கைது செய், வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்கள் அனைத்தையும் தடை செய்” என்று ஏன் எழுதத்தெரியவில்லை ? எழுதத் தெரியவில்லையா அல்லது விருப்பம் இல்லையா ?

  14. வினவு தேவர் சாதி வெறி வன்னியர் சாதி வெறி சரி தான் ஆனால் தமிழ் நாட்டுல தலித் சாதி வெறினு ஒன்னு இல்லவே இல்லனு சொல்ரிங்களா?

    • தலித் மக்களுக்கு கீழே யாரும் ஒடுக்கப்படுவதற்கு இல்லை, அதனால் தலித் சாதிவெறி என்று யார் மீது காட்ட முடியும்? ஆனால் தலித் மக்களை மட்டும் சாதிய ரீதியாக அணி திரட்டும் தலித் அரசியல் மற்றும் கட்சிகளின் அரசியல் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. இதனால் தலித் மக்கள் மீது ஏவப்படும் சாதிவெறியை எதிர்த்து நிற்க முடியாது என்பதுதான் எமது நிலைப்பாடு.

  15. மச்சு பிச்சு

    வர்க்கப்போராட்டத்திற்கும் வர்ணபோராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதால் வந்த குறைபாடு. எப்பொழுதும் எங்கும் சொல்வேன் இந்தியாவில் பொதுவுடமை கொள்கை சாதிக்க இயலாமல் போனதற்கான காரணம் இந்த பேதத்தை உணராதது தான். ஏன் மார்க்ஸும் சொல்லி சென்றிருக்கிறார், மனிதனை அவன் செய்யும் வேலையின் கீழாக பிரித்து வைத்திருக்கும் இந்தியாவில் புரட்சி என்பதற்கு சாத்தியமே இல்லை என்று. அதே தான் உங்கள் நிலை,

    இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் மிகவும் முக்கிய தேவை வர்ணத்திற்கு எதிரான போராட்டம் தான். தன்னுடைய சாதியும் ஒடுக்கப்பட்டுள்ளதை உணராமல், தனக்கு மேலும் ஒரு வர்ணத்தார் இருக்கிறார் என்பதை கவனிக்க மறந்து, தனக்கு கீழும் ஒரு வர்ணம் இருக்கிறது என்று எண்ணி சந்தோசப்படும் மனநிலையில் இங்கு சாதியம் வளர்க்கப்பட்டுள்ளது இதை ஒடைத்து எறியாமல் இங்கு எந்த வர்க்க போராட்ட புரட்சியும் நீங்கள் செய்துவிட இயலாது.

    ஒட்டுமொத்தமாக சாதியத்தை வளர்த்து எடுக்கும் அனைத்து கட்சிகளும் என்று குறிப்பிட்டு இருப்பதின் கீழ் பாமக வராது என்று நினைத்துவிட்டீர்களா இல்லை மூவேந்தர் முன்னேற்ற கழகம் வராதா?? சாதியத்தை வளர்த்து எடுக்கும் அனைத்து கட்சிகளையும் புறக்கணிப்பது என்பது இனி அடுத்த மாதம் நாம் போய் மதுரையில் மூமுக எதிராக அடுத்து ஒரு சுவரொட்டி ஒட்டாமல் இருப்பதற்கு.

    //இளவரசன் – சாதி பெயர் சொல்லி கட்சி வளர்ப்பவன் தமிழின துரோகி என புரிய வைத்து சென்றவன்.
    இளவரசன் – சாதி வெறியர்களை தனிமைப்படுத்துங்கள் என்று சொல்லிச் சென்றவன்.//

    • அப்போ இந்தியாவுக்கு தேவை வர்ணமா வர்க்கமா அப்படிங்கிறத சொல்லிடுங்க. வர்ணத்த ஒடைக்காம வர்க்கப்போராட்ட புரட்சி முடியாதுங்கிறது எப்படின்னு சொல்லணும். நீங்க வேல பாக்குற இடத்துல முதலாளி உங்கள ஒடுக்கினா ஹரிகரனாகிய நீங்க உங்களுக்குள்ள இப்படி சொல்லிக்குவீங்க..அடங்கு..அடங்கு..இன்னும் வர்ணப் புரட்சி முடியல. அப்புறம் தமிழ்தேசிய புரட்சிய ப்ரியாரிட்டி 2 ஆ வச்சுக்குவீங்களா..சரிதான்.
      சரிங்க சாதியத்த வளர்த்தெடுக்கும் கட்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்களது விடுதலைக்காக போராடும் கட்சிகளையும் சேர்க்கத்தான் நீங்க இந்த பாடு படுவதாக சொல்றாங்களே.. மெய்யாலுமா..இல்லன்னா ஏன் இல்லன்னு சொல்லணும்?
      பாமக சாதியத்தை வளர்த்தெடுக்கும் கட்சில ஒன்னு என நீங்க குறிப்பிட்டு சொன்னப்புறம்தான் புரிந்த்து. இப்போ தமிழ்தேசியம் பேசுற நீங்க, இந்திய தேசிய ஒடுக்குமுறை, முத்துமாலை சுற்றிவளைப்பு என்றெல்லாம் உலக அரசியல் பேசும் நீங்கள், இந்திய தேசிய ஒடுக்குமுறைன்னு சொல்லும்போது காசுமீர், வடகிழக்கு பிரச்சினைக்காக எத்தன வாட்டி போராடுனீங்க. அட்லீஸ்ட் அறிக்கையாவது கொடுத்தீங்க.

      மார்க்சு சொன்னதா நீங்க சொன்னத நான் கட்டாயம் தேடிப் பார்த்துட்டு வந்து சொல்றேன்.

    • வர்க்கப் போராட்டம் வர்ணப் போராட்டம் பற்றி எல்லாம் நீங்கள் வகுப்பு எடுப்பது நல்ல விசயம் தான் அரிகரன் ஆனால் அதை இன்னொரு முறை உங்களிடம் கேட்டறிந்துகொள்கிறேன், இப்போதைக்கு நாம் அதை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு குறிப்பான சாதிவெறி பிரச்சினைக்கு வருவோம்.

      நான் உங்களிடம் இரண்டு கேள்விகளை கேட்கிறேன் அவற்றுக்கு மட்டும் பதிலளியுங்கள். ஒன்று, நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனியில் உள்ள தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து கொழுத்தி அந்த மக்களின் உடைமைகளை சூறையாடி, சொத்துக்களை திருடிக்கொண்டு சாதிவெறியாட்டம் போட்டது யார் ?

      இரண்டு, அந்த சாதிவெறித் தாக்குதலுக்கு பிறகு திருமணமான திவ்யாவை அவருடைய விருப்பத்திற்கு மாறாக கணவர் இளவரசனிடமிருந்து பிரித்து வைத்தது யார் ?

    • ஹரிகரன், இப்படியெல்லாம் வர்ணம், பூரணம் என்று சம்பந்தம் இல்லாமல் ஏதாவது பேசினால் பாமவிற்கோ இல்லை தேவர் சாதிவெறியர்களுக்கோ எந்தப்பிரச்சினையும் இல்லை. அவர்கள் கூட்டத்தில் கூட உங்களைப் பேச அழைப்பார்கள். வன்னிய சாதி வெறியை எதிர்ப்பதற்கு எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று நீங்கள் நேர்மையாக ஒத்துக் கொள்ளலாம். அதனால் உங்களை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த பயத்தை எப்படி வெல்லலாம் என்ற வழியை நீங்கள் விரும்பினால் அறிந்து கொள்ளலாம். சாதி பெயர் சொல்லி கட்சி வளர்ப்பவன் தமிழின துரோகி என்றால் சாதி வெறியர்களின் பெயரை மறைப்பவன் மட்டும் தமிழ் உணர்வாளனா?

  16. 10 பேர் கொண்ட போஸ்டர் அடிக்கும் மே17 இயக்கம் என்றைக்கு தைரியமாக அடுத்துள்ளார்கள்? மின் தடைக்கு மத்திய அரசுக்கு எதிராக போஸ்டர் அடித்தார்கள்… பரமக்குடி கலவரத்துக்காக அடித்த போஸ்டரை பாருங்கள்… சோப்ளாங்கிப் பயலுங்க…

  17. இளவரசன் மரணமும், தலித் அமைப்புகளின் தொடர்புகளின் ஆழம், வெறி, வீச்சு, அட்டகாசம், ஆணவம் எதைக் காட்டுகிறது

    1. இரயில்வே போலிஸ் விசாரனை சரியில்லை

    2. தமிழக அரசின் மாநில காவல் துறை விசாரனை சரியில்லை

    3.போஸ்ட் மார்டம் செய்த அரசு மருத்துவர்கள் தகுதியில்லை, சரியில்லை

    4. உயர் நீதி மன்றத்தில் திவ்யா- இளவரசன் வழக்கை விசாரித்தே தவறு விசாரனையும் சரியில்லை

    5. திவ்யா-இளவரசன் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீது சந்தேகம் அவர்களை விசாரனை செய்து நடிவடிக்கை எடுக்க வேண்டும். ஆக அவர்கள் சரியில்லை

    6. பிரேத பரிசோதனை செய்தது சரியா தவறா உறுதி செய்ய தமிழ்நாட்டில் அரசு மருத்துவ நிறுவனங்களில் உள்ள ஒருவர் கூட சரியில்லை, (தணியார் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் தான் சரி)

    7. மரு பிரேத பரி சோதனை செய்ய தமிழ்நாட்டில் எந்த மருத்துவரும் சரியில்லை ( டெல்லியில் இருந்து வர வேண்டும்)

    8.தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி சரியில்லை

    9. இனி தலித்துகள் யாராவது, எப்படி இறந்தாலும் சரி பிரேத பரிசோதனை செய்யும் அறையில் தலித் கட்சிக்காரங்க, தலித் அமைப்பு காரங்க பார்க்கலாம், படம் புடிக்கலாம் மற்றவங்களுக்கு அனுமதியில்லை

    10. தலித் ஒருவர் இறந்து விட்டால் பத்து இலட்சம் பணமும், அரசு வேலையும் கொடுக்காத அரசு எதுவானாலும் சரியில்லை

    11. தற்கொலை செய்து கொண்டவனின் கடிதத்தை திருடி வைத்துக் கொண்டு யாரை வேனும்னாலும் கைது செய்ய போராட்டம், மறியல் செய்யலாம். கைது செய்ய சொல்லி அரசையே மிரட்ட முடியும்
    பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களையே கைது செய்யச் சொல்லி மிரட்டும் இவர்களிடம்

    சாமானியர்கள் மாட்டினால் கதி என்னாகும்

    இளவரசனுக்கு தகுந்த காவல் போட்டு உயிரை காக்க முடியாமல் முதலைமைச்சராக இருக்கும் ஜெயலலிதா தான் தற்கொலைக்கு காரணம் என கூறி ஜெயலலிதாவை கைது செய்ய வேண்டும் என்று கறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை

    ஆக மத்திய அரசும், மாநில அரசும் அவர்கள் காலுக்கு கீழ

    தலித் அதிகாரிகளும், தலித் அரசியல் வாதிகளும் தனி அரசாங்கம் நடத்துறாங்க

    அதுக்கும் மேல தலித் அரசாங்கம்னு ஒன்னு தனியா நடக்குது

    அதனால அடக்கம், ஒடுக்கமா நடந்துக்க பாருங்க

    இலங்கையில் தமிழன சிங்கவன் அடிச்சா தமிழ்நாட்டுக்கு அகதியா வர்றான்

    இந்தியாவில் தலித்துகள் அனைத்து சாதி மக்களையும் அடிச்சு துரத்தினா எந்த நாட்டுக்கு அகதியா பொகப்போற

    • இதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள் …………
      நாகராஜன் மரணத்திற்கு யார் காரணம் …….. இது தொடர்பாக நாகராஜை விசாரித்த காவல்துறை அதிகாரி யார்?………… மூன்று லட்சம் கேட்டது யார் …………..? (http://www.deccanchronicle.com/130712/news-current-affairs/article/dc-special-here-love-gets-fixed%E2%80%99?page=show) ………… மரக்காணம் மூன்று பேர் சவுக்கு யார் காரணம் ……………..?

      • இதற்கு வினவின் பதில் என்னாவாவென்று நினைக்கீறீர்கள்???1. பதிலே வராது 2.யாரவது ஒரு அள்ளக்கைய விட்டு பதில்” டெக்கான் க்றோக்கினக்கல் ஆதிக்க சக்தியின் பதிப்பகம் ,பாமக விடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த கட்டுறையை எழதியுள்ளது” என்று ஒரு பதிவு வரும்.பி.கு: DC பற்றி சம்பந்தமே இல்லாத ஒரு தலையங்க பதிப்பு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.

  18. மாலைக்கண் கொண்டு பார்க்காதீர்கள், உஙகள் நுட்பமான பார்வை கொண்டு பார்க்க தெரிந்த உங்களுக்கு நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனி, அண்ணாநகர் தீயிட்டு அழித்தது வன்னிய சாதி வெறியால் மட்டும் சாத்தியமா இதில் அரசு என்கின்ற (இந்திய/தமிழக) நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமலா? அந்த சுவரொட்டி இந்திய அரசிலமைப்பின் தோல்வியையும், சாதி ஒடுக்கும் அரசின் பங்காளி எனவும் பரந்த அளவில் கருத்தை உட்கிடையாக கொண்டுள்ளது. பா.ம.க சாதி வெறி கட்சி என்பது சரி.அது நீங்கள் சொன்னது போல் இந்த சாதி வெறி என்பது இளவரசனிடம் இருந்து தொடங்கியதும் இல்லை, இளவரசனோடு முடியப்போவதும் இல்லை. ஆகவே சாதிய பயங்கரவாதம் என்ற குறிப்பு (தேவர், கள்ளர், முதலியார்,செட்டியார் என்ற சாதி வெறிகளையும் உள்ளடக்கியதாக காண்கிறேன். குறிப்பான சூழ்நிலையுலும் பேரியியயல் அரசியல் அர்த்ததில் களம் காண்பது ஒன்றும் பெரும் குற்றமல்ல. ஒரு கனவான்களைப்போல போகிற போக்கில் நீங்கள் விமர்சனம் வைத்ததாக நம்புகிறேன்.இளவரசனின் இறுதி ஊர்வலத்தோடு வன்னிய சாதி வெறியோ, சாதிய பயங்கரவாதமோ முடிந்துவிட போவதில்லை.இன்று நிலை கொண்டிருக்கும் அரசு, அவ்வாறு விரைவில் சாதியை ஒழித்துவிட பொவதுமில்லை.சாதிய ரீதியில் அணித்திரட்சி செய்யும் இயக்கங்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இந்திய பாசிச அரசின் கூட்டாளிகலே.ஆகவே நீங்கள் குறிப்பிட்ட சுவரொட்டியில் பெரும் அரசியல் தடுமாற்றம் இருப்பதாக தெரியவில்லை.
    கொலையா? தற்கொலையா? இதை கொலை என்றே பதிவு செய்யவேண்டிய அரசியல் வலுக்கட்டாயம் நம் அனைவருக்கும் இருக்கிறது.இளவரசன் இறந்து இன்றோடு 8 நாட்களாகியும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஒரு முடிவான மவுனத்தோடு இருக்கின்றன. பா ம க எப்படி எதிரியோ அப்படியே இந்த அரசும். இந்த கொதிப்பான சூழ்நிலையும் சாதிய பயங்கரவாதமும் ஒடுக்கும் அரசின் கருவியே (இதை தேவர் என்றோ,பிள்ளை என்றோ, வன்னியர் என்றோ எங்கே இருக்கிறது)
    பா.ம கவின் தலைவர் ராமதாஸையோ அல்லது குருவையோ அல்லது அவரது கட்சியை சார்ந்தவர்களையோ தண்டிக்கவேண்டும் என்பதில் எள் அளவும் மாற்று கருத்து இல்லை.நான் சுவரொட்டியில் கண்டது வெறுமனே பா ம கவின் தண்டனையோடு முடிக்க அது விரும்பவில்லை. அது சமூகத்தின் மீதான எதிர்வினை, சாதி ஒழிப்பு அரசியல் போராட்டத்தை கோரி நிற்கின்றது.நான் நக்சல் பாரி இயக்கத்தை மதிக்கிறேன் அதில் நீங்களும் அடங்குவீர்.பரந்த பொருளில் புரிந்து கொள்வோம், போராடுவோம்.
    குறிப்பு – அரசு மரக்காணத்திற்கு பிறகு அல்லது அதற்கு முந்திய சம்பவத்திற்கு முன் பா ம க வினர் யாரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை. சாதிய ஒடுக்குதலை மறந்துவிட்டு குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் இத்யாதி.. இத்யாதி.. போன்றவற்றில் கைது செய்து வன்னிய உழைக்கும் மக்களுக்கு முன்னால் பா ம க வினரை ஹீரோவாக்கி கொண்டிருக்கிறது

    • சரி அரசு தான் காரணம் என்றால் அரசையும் முழக்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டியது தானே ? அரசுக்கு தெரியாமல் தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன என்று ம.க.இ.க தோழர்கள் எங்காவது கூறியிருக்கிறார்களா ?

      நாயக்கன் கொட்டாய் வன்னிய சாதிவெறியை எதிர்த்து ம.க.இ.க தோழர்கள் நடத்திய அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் போலீசு, உளவுத்துறை,மாவட்ட நிர்வாகம் என்று நாயக்கன்கொட்டாய் சாதிவெறியாட்டத்தில் அரசின் பங்களிப்பை அம்பலப்படுத்தி தான் பேசியிருக்கிறார்கள், பத்திரிகைகளிலும், வினவு தளத்திலும் எழுயிருக்கிறார்கள்.

      அரசுக்கு இதில் பங்கு இருப்பினும் அது வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்த்த குற்றவாளி என்கிற பங்கு தான், அதே அளவுக்கு தான் மற்ற ஆதிக்கசாதிகள் மற்றும் வேடிக்கை பார்த்த சமூகத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு இவர்கள் அனைவரும் தான் காரணம், இவர்கள் அனைவரும் தான் குற்றவாளிகள் என்று கூறுவது அயோக்கியத்தனம் உண்மையான குற்றவாளிகளின் பங்கை மறைத்து அவர்களை காப்பாற்ற முயல்வதாகும். எனவே நேரடியாக களத்தில் இறங்கி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தான் முதன்மையாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய குற்றவாளிகள். அவர்கள் யார் என்பது தான் இப்போது கேள்வி.

      இப்படி ஒரு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டது யார், அதற்காக திவ்யாவின் அப்பாவை தினமும் அவமானப்படுத்தியது யார், அதன் பிறகு அவரை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று சித்தரித்தது யார், பிறகு அந்த கொலையையே காரணமாக்கி தலித் மக்களின் வீடுகளை சூறையாடி கொள்ளையிட்டது யார், அதன் பிறகு மகாபலிபுரத்தில் கூட்டம் போட்டு சாதிவெறியூட்டியது யார், அதைத் தொடர்ந்து மரக்காணத்தில் வெறியாட்டம் போட்டது யார், தற்போது திவ்யாவை கணவனிடமிருந்து பிரித்ததன் மூலம் இளவரசனின் கொலைக்கு (கொலையோ தற்கொலையோ) காரணமாணவர்கள் யார் ?

      யார் ? அது தான் மே 17 போஸ்டரில் இல்லை, குற்றவாளிகளை மறைத்துக்கொண்டு அந்த சுவரொட்டி ஆத்திச்சூடி மாதிரி நல்லொழுக்கம் போதித்துக் கொண்டிருக்கிறது. அது போஸ்டரில் மட்டுமல்ல திருமுருகன் அய்யா எழுதியுள்ள அந்த நீண்ட வழ வழா கொழ கொழா பதிவிலும் கூட இல்லை.

    • சரி அரசு தான் காரணம் என்றால் அரசையும் முழக்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டியது தானே ? அரசுக்கு தெரியாமல் தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன என்று ம.க.இ.க தோழர்கள் எங்காவது கூறியிருக்கிறார்களா ?

      நாயக்கன் கொட்டாய் வன்னிய சாதிவெறியை எதிர்த்து ம.க.இ.க தோழர்கள் நடத்திய அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் போலீசு, உளவுத்துறை,மாவட்ட நிர்வாகம் என்று நாயக்கன்கொட்டாய் சாதிவெறியாட்டத்தில் அரசின் பங்களிப்பை அம்பலப்படுத்தி தான் பேசியிருக்கிறார்கள், பத்திரிகைகளிலும், வினவு தளத்திலும் எழுயிருக்கிறார்கள்.

      அரசுக்கு இதில் பங்கு இருப்பினும் அது வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்த்த குற்றவாளி என்கிற பங்கு தான், அதே அளவுக்கு தான் மற்ற ஆதிக்கசாதிகள் மற்றும் வேடிக்கை பார்த்த சமூகத்திற்கும் இதில் பங்கு இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு இவர்கள் அனைவரும் தான் காரணம், இவர்கள் அனைவரும் தான் குற்றவாளிகள் என்று கூறுவது அயோக்கியத்தனம் உண்மையான குற்றவாளிகளின் பங்கை மறைத்து அவர்களை காப்பாற்ற முயல்வதாகும். எனவே நேரடியாக களத்தில் இறங்கி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தான் முதன்மையாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய குற்றவாளிகள். அவர்கள் யார் என்பது தான் இப்போது கேள்வி.

      இப்படி ஒரு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டது யார், அதற்காக திவ்யாவின் அப்பாவை தினமும் அவமானப்படுத்தியது யார், அதன் பிறகு அவரை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று சித்தரித்தது யார், பிறகு அந்த கொலையையே காரணமாக்கி தலித் மக்களின் வீடுகளை சூறையாடி கொள்ளையிட்டது யார், அதன் பிறகு மகாபலிபுரத்தில் கூட்டம் போட்டு சாதிவெறியூட்டியது யார், அதைத் தொடர்ந்து மரக்காணத்தில் வெறியாட்டம் போட்டது யார், தற்போது திவ்யாவை கணவனிடமிருந்து பிரித்ததன் மூலம் இளவரசன் கொலைக்கு (கொலையோ தற்கொலையோ) காரணமாணவர்கள் யார் ?

      யார் ? அது தான் மே 17 போஸ்டரில் இல்லை, குற்றவாளிகளை மறைத்துக்கொண்டு அந்த சுவரொட்டி ஆத்திச்சூடி மாதிரி நல்லொழுக்கம் போதித்துக் கொண்டிருக்கிறது. அது போஸ்டரில் மட்டுமல்ல திருமுருகன் அய்யா எழுதியுள்ள அந்த நீண்ட வழ வழா கொழ கொழா பதிவிலும் இல்லை.

  19. ‘மே 17’, ‘நாம் தமிழர்’ போன்ற மொக்கைகளுக்கு மத்தியில் ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ பாமக நிர்வாகிகளை கைது செய்! வன்னிய சாதி சங்கம் உள்ளிட்ட சாதி சங்கங்களை தடை செய்! போன்ற முழக்கங்களை எழுப்புகிறது. இந்த தகவலை கட்டுரையில் எங்கேனும் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தால் நல்லது.

    ஏனெனில் இப்படி குறிப்பாக பேசுபவர்கள் காணர்க்கரியர்கள். தமது அணிகளிடமும், ஆதரவாளர்களிடமும் கூட வன்னிய சாதிவெறி என்று பேச முடியாதவன் மனிதனே இல்லை.

  20. மே 17 இயக்கம் பா.ம.க வை விம்ர்சிக்கவில்லை என்று சொல்லுபவர்களூக்கு.

    பா.ம.க வின் துணை அமைப்பான பசுமை தாயகத்தின் அருள், அவரது வலைப்பக்கத்தில் எழுதியது

    http://arulgreen.blogspot.com/2012/04/17.html

    http://arulgreen.blogspot.com/2012/04/17_21.html

    அமைப்பின் உறுதிமொழிக்கு எதிராக சுயசாதி பற்றுடன் செயல்பட்டதால் சூரியபிரகாசு தங்கசாமியும், அவருடன் சேர்ந்த மற்றவர்களும் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

    மே 17 இயக்கத்தினர் தொடர்ந்து சாதிய வெறிக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறோம்.

    • பா.ம.க அருள் உங்களைப் பற்றி எழுதும் போது மே 17 ஏன் பா.ம.க வைப் பற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கிறது என்பது தான் கேள்வி.

      • பன்னி பீ திண்கிறது என்பதற்காக மே 17 இயக்க நண்பர்களும் பீ திங்க வேண்டுமா???

        அப்புறம் விமர்சிப்பது மே 17 இயக்க வேலை அல்ல அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து செல்வதே தன் வேலையாக கொண்டுள்ளது.. ஒட்டுமொத்த ஆதிக்க சாதிகளையும் அது தேவரோ, வன்னியரோ, கவுண்டரோ இன்னும் பிற சாதிகள் செய்யும் ஆதிக்க சாதி ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக எதிர்த்து இருப்பது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையோ…

        • அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து செல்வதே தன் வேலையாக கொண்டுள்ளது//
          அனைத்து இயக்கங்களையும் என்றால் பாமகவையும் சேர்த்தா? ஆமெனில் ஐயா ராமதாசை எந்த பொறுப்பில் அமர்த்துவதாகத் திட்டம்? இந்த சங்கதி ஐயாவுக்கு தெரியுமா?

        • ////பன்னி பீ திண்கிறது என்பதற்காக மே 17 இயக்க நண்பர்களும் பீ திங்க வேண்டுமா???////

          அப்படி என்றால் வன்னிய சாதிவெறியன் என்று ராமதாசையும் பிற சாதிவெறியர்களையும் குறிப்பாக பெயர் சொல்லி விமர்சிக்கின்ற பெரியார் இயக்கங்களும், சில தமிழ்தேசிய இயக்கங்களும், இவ்வாறு குறிப்பாக விமர்சிக்கின்ற பிற அமைப்புகளும் ம.க.இ.க வும் பீயை தின்பவர்கள் மே 17 நண்பர்கள் மட்டும் தான் சோற்றை தின்பவர்கள் என்கிறீர்களா ? அப்படியானால் சோற்றுக்கும் பீயிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி மே 17 இயக்க மேதாவிகள் ஒரு கட்டுரை எழுதலாமே.

          • ////அப்புறம் விமர்சிப்பது மே 17 இயக்க வேலை அல்ல////

            சரி தான் சுயவிமர்சனம் இருக்கின்ற இடத்திலிருந்து தான் விமர்சனமும் வரும்.

  21. நமது விமர்சனம் ..
    சாதீய பயங்கரவாதம் என்பது .. 3 லட்ஷம் கொடு உன் பெண்ணை உன்னிடம் திரும்ப ஒப்படைக்கின்றேன் என்று பேரம் பேசிய இளவரசனின் அப்பா ,வி சி .கட்சியினர் , பகுஜன் சமாஜ் கட்சியினர் கூட்டணி + அப்பகுதி காவல் அதிகாரி (அனைத்து பத்திரிக்கையில் வந்த செய்தி )என்ற உண்மையை த்தான் சீமான் சாதீய பயங்கரவாதம் எந்று சொன்னதாக ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றீர் ,
    சாதீய பயங்கரவாதம் என்பது .. நாடு சுதந்திரமடைந்து 66 ஆண்டுகளாக சாதியின் பெயரால் கல்வி , வேலைவாய்ப்பு , பொருளாதாரம் என்று அனைத்து துறைகளிலும் சலுகையில் பெறுவதும் , இந்தநாட்டின் மிக உயர்ந்த பதவிகளான ஜனாதிபதி , பிரதமர் , உயர்நீதிமன்ற , உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இப்படிநாட்டின் பல உயர்ந்த பதவிகளை வகித்துக்கொண்டிருக்கும்போதும் இன்னும் ஜாதீயை சொல்லியே பிழைப்புநடத்துவது சாதீய பயங்கரவாதமில்லையா ?
    சாதீய பயங்கரவாதம் என்பது .. அரசியல் சாசனத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்லிவிட்டு பின்னாடியே ஒரு குறிப்பிட்டச்சாதிக்கு மட்டும் ( தான்சார்ந்த )இட ஒதுகீடு என்று இந்திய தலித் சாசனம் எழுதியது சாதீய பயங்கரவாதமில்லையா?
    சாதீய பயங்கரவாதம் என்பது .. தன்னோட நாடகக்காதல் மூலம் அவளையும் அவள் மூலம் அவளின் குடும்பத்தாரையும் ஏமாற்றி மூன்று லட்சம் பணம் பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம்னுநெனைத்த தன்னோட நினைப்பில் மண்ணை அள்ளி ( புரிந்துகொண்டு ) போட்டுவிட்டாளே என்ற ஏமாற்றம் , அவமாணம் தற்கொலைக்கு தூண்டியது .அவனின் அந்த நெனைப்பு சாதீயபயங்கரவாதமில்லையா ?
    அவன் சாவதற்கு தண்டவாளத்தில் தலைவைக்கவில்லை சாகச்சென்றவனென்றால் தண்டவாளத்தி குறுக்காக படுத்திருப்பான் . ரயிலில் லேசாக அடிபட வேண்டும் மருத்துவமனை சென்று பிழைத்துக்கொள்ள வேண்டும் , தான் எழுதி வைத்திருக்கும் கடிதத்தை அனைவரும் அறிய படிப்பார்கள் ,ஊடக விபசாரிகளும் அதைநன்றாக விளம்பரப்படுத்துவார்கள் அதன் மூலம் உண்மையாக காதலிப்பதாக காட்டிக்கொண்டு அவள் கழுத்தருக்கவேண்டும் என்றுநினைத்து ரயிலின் அருகில் சென்றவனை ரயிலின் ஏதோ ஒரு பாகம் அவனது பொட்டில் பொட்டென தட்ட தூக்கியெரியப்பட்டவன் .
    ”அரசன் அன்று கொல்வான் – தெய்வம்நின்று கொல்லும் ” என்பது பழமொழி -அரசன் குற்றவாளிகளுக்கு துணை போனது – தெய்வம்நின்று கொன்றது ,

    • //சாதீய பயங்கரவாதம் என்பது .. 3 லட்ஷம் கொடு உன் பெண்ணை உன்னிடம் திரும்ப ஒப்படைக்கின்றேன் என்று பேரம் பேசிய இளவரசனின் அப்பா ,வி சி .கட்சியினர்// சென்ற வருடம் நவம்பர் 6ம் தேதி கூட்டத்தை கூட்டியது விசிக கட்சிய்னரா இல்லையே.. சாதி வன்மம் பிடித்தவர்கள் தானே அதில் ஆதிமுக, திமுக, மதிமுக உட்பட அனைவரும் இருந்தனரே..

      நான் காசு கொடுக்க தயார் என்று ஒரு பகுதியினர் கூப்பிட்டு சொன்னதால் தானே பேரம் ஆரம்பித்தது.. Where there is demand supplier will be their… whether its a poison also…

  22. அனைத்து சாதி, மொழி, மதத்திலும் ஒரு சில வெறி பிடித்த மன நிலையில் இருப்போர் இருப்பர். அதனால் அந்த ஒட்டு மொத்த சமூகததையும் வெறுப்பது அல்லது புறக்காணிப்பது பகுத்தறிவு ஆகாது… முதலில் சாதி என்பதே இல்லை..

    சிங்கள இன வெறி = எல்லா சிங்காளற்களும் அவ்வாறு இருப்பார் என எண்ணுவது தவறு.

    வன்னிய சாதி வெறி = 100% வன்னியர்களும் அப்படி அல்ல…

    தேவர் சாதி வெறி , இதுவும் அப்படித்தான்….

    ஒரு தலித் பால் ஊற்றினார் என்பதற்காக என் தந்தை அன்று வீட்டில் தேநீர் அருந்தவில்லை. அதே தலித் பொருள் வாங்க கடைக்கு வந்தால் காசு வாங்க மாட்டீங்களா? எனக் கேட்டவன் நான்…

    இந்த அனைத்தும் தனி மனித அல்லது சிறு கூட்டத்தின் மனநிலை சார்ந்த பிரச்னை.

    ஆக பிரச்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள தனி மனிதர்களுக்கு உள்ளே நிகழ்வது… எப்போ பஞ்சாதாயத்து பண்ண இரு தரப்பு கட்சிகளும் வருகிறதோ அப்போ தான் இது பிரச்னை….

  23. வணக்கம் தோழரே
    தமிழ் ஈழம் தொடர்பான கட்டுரையை புதிய ஜனநாயக ஜூலை இதழிலும் அதற்க்கு முந்தய இதழ்களிலும் படித்திருக்கிறேன். அதில் அதில் திம்பு பேச்சு வார்த்தையின் போதோ சந்திரிகா உடனும் மற்ற பேச்சு வார்த்தைகளின் போதும் புலிகள் தமிழ் ஈழத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். என்னுடைய ஐயம்
    1) புலிகள் தமிழ் ஈழத்தை ஒதுகொள்ளாததால்தான் நீங்களும் (ம.க.இ.க ) ஒதுகொள்ளவில்லையா?? ஒருவேளை அவர்கள் ஒதுகொண்டிருந்தால் நீங்களும் ஒத்து கொள்வீர்களா ??
    2) தமிழ் ஈழம்தான் தீர்வு என்று இங்கு உள்ள தமிழ் தேசிய அமைப்புகளும் மற்றும் ஒருசில ஒட்டு கட்சிகளும் கூறுவது ஏற்று கொள்ள இயலாது எனில் தமிழ் மக்களை சிங்களவனோடுதான் இருக்க வேண்டும் என்று நாம் கூற உரிமை உள்ளதா?
    3) மாறாக பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படி அதை (ம.க.இ.க இயக்கம்) ஏற்று கொள்வதுதானே முறையாக இருக்க கூடும்.
    4) 1973-இல் தந்தை செல்வா தமிழ் ஈழ கோரிக்கையை முன்வைக்கவில்லையா??
    5) பேச்சு வார்த்தைகள் மூலம் எல்லா இன,அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட முடியும் என்று கருதுவோமேயானால் உலகில் எந்த நாடுகளுமே பிரிந்திருக்க வேண்டாமே.
    6) ஈழம் அமைந்தால் புலிகள் பாசிச ஆட்சி அமைப்பார்கள் அதனாலும் (ம.க.இ.க இயக்கம்) ஈழத்தை ஆதரிக்க வில்லை என்கிறார்கள் எதிர்காலத்தில் இப்படிதான் இருக்கும் என்று நம்மால் சரியாக கணிக்க முடியும் என்றால் அந்த கணிப்பு நேபாள பிரசண்ட விசயத்தில் தோற்று போய் விட்டதே ஏன்??
    7) மேலும் ஒரு இன மக்களின் விடுதலை போராட்டத்தை ஆதரிக்கும் போது அவர்கள் யாரால் வழிநடத்த படுகிறார்கள் என்று மட்டும் பார்த்து அவர்களை ஆதரிக்க வேண்டுமா ?? அல்லது பெரும்பான்மையான மக்கள் மற்றும் அரசுகளால் அவர்கள் (சிறுபான்மை மக்கள்) எந்த அளவுக்கு பாதிக்க படுகிறார்கள் என்பதை பொறுத்து அந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமா??

    • ////புலிகள் தமிழ் ஈழத்தை ஒதுகொள்ளாததால்தான் நீங்களும் (ம.க.இ.க ) ஒதுகொள்ளவில்லையா?? ஒருவேளை அவர்கள் ஒதுகொண்டிருந்தால் நீங்களும் ஒத்து கொள்வீர்களா??////

      தனி ஈழம் பற்றிய ம.க.இ.க வின் நிலைப்பாடு ஜீலை புதிய ஜனநாயகம் இதழில் தெளிவாக உள்ளது.

      ////தமிழ் ஈழம்தான் தீர்வு என்று இங்கு உள்ள தமிழ் தேசிய அமைப்புகளும் மற்றும் ஒருசில ஒட்டு கட்சிகளும் கூறுவது ஏற்று கொள்ள இயலாது எனில் தமிழ் மக்களை சிங்களவனோடுதான் இருக்க வேண்டும் என்று நாம் கூற உரிமை உள்ளதா?////

      சிங்கள இனவெறியர்களோடு இருக்க வேண்டும் என்று யார் சொன்னது ?

      ////மாறாக பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படி அதை (ம.க.இ.க இயக்கம்) ஏற்று கொள்வதுதானே முறையாக இருக்க கூடும்.////

      அதை தானே அந்த கட்டுரையும் கூறுகிறது.

      ////1973-இல் தந்தை செல்வா தமிழ் ஈழ கோரிக்கையை முன்வைக்கவில்லையா??////

      செல்வாவின் ஈழம் எப்படி சந்தர்ப்பவாதமானது என்பதையும், யாழ்ப்பாணத்து வெள்ளாள சாதி அடிப்படையிலானது என்பதையும் கட்டுரை விரிவாக விளக்கியுள்ளது. அதைப் பற்றி ஒன்றும் கூரவில்லையே ?

      ////பேச்சு வார்த்தைகள் மூலம் எல்லா இன,அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட முடியும் என்று கருதுவோமேயானால் உலகில் எந்த நாடுகளுமே பிரிந்திருக்க வேண்டாமே.////

      அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்த கட்டுரையில் எங்கே கூறப்பட்டுள்ளது ?

      ////ஈழம் அமைந்தால் புலிகள் பாசிச ஆட்சி அமைப்பார்கள் அதனாலும் (ம.க.இ.க இயக்கம்) ஈழத்தை ஆதரிக்க வில்லை என்கிறார்கள் எதிர்காலத்தில் இப்படிதான் இருக்கும் என்று நம்மால் சரியாக கணிக்க முடியும் என்றால் அந்த கணிப்பு நேபாள பிரசண்ட விசயத்தில் தோற்று போய் விட்டதே ஏன்??/////

      பிரசண்டா திரிபுவாதியாகிவிட்டாலும் அவர் இருந்த கட்சியும் தற்போது இருக்கின்ற கட்சியும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை கொண்ட கட்சிகள், ஆனால் புலிகள் அமைப்போ ஜனநாயகத் தன்மையற்ற பாசிச அமைப்பு, பிரபாகரனோ அமைப்பிற்குள் ஜனநாயகத்தை முற்றிலுமால ஒழித்துக்கட்டிய பாசிஸ்ட்.

      ////மேலும் ஒரு இன மக்களின் விடுதலை போராட்டத்தை ஆதரிக்கும் போது அவர்கள் யாரால் வழிநடத்த படுகிறார்கள் என்று மட்டும் பார்த்து அவர்களை ஆதரிக்க வேண்டுமா ?? அல்லது பெரும்பான்மையான மக்கள் மற்றும் அரசுகளால் அவர்கள் (சிறுபான்மை மக்கள்) எந்த அளவுக்கு பாதிக்க படுகிறார்கள் என்பதை பொறுத்து அந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமா??////

      ஈழ மக்களை புலிகள் மட்டும் வழிநடத்தியதைப் போல இங்கிருக்கும் தமிழ்தேசியவாதிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அது முதலில் பொய் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மேலும் வழிநடத்துபவர்கள் தவறானவர்களாக இருந்தால் அவர்களை விமர்சிக்காமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா ?

      • survival of the fittest அதை நடத்தி காட்டி கொண்டிருப்பவர்கள் புலிகள் மட்டும் தான்.. மற்றவன் ராஜ பக்சேவுக்கு கோமணம் துவைத்து கொடுத்துக் கொண்டு இருக்கிறான்.. அவனை எல்லாம் கணக்கில் எடுக்க நான் உம்மை போன்றவன் அல்ல…

        • கோவணமாக ராஜபக்சேவுக்கு புலிகளின் அரசியல்தான் பயன்பட்டிருக்கிறது. அதை துவைக்கும் வேலையை யார் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கீழே ஒரு கட்டுரை விளக்குகிறது..படியுங்கள்.

          https://www.vinavu.com/2013/07/26/eelam-answer-to-criticisms/

  24. நடத்திக்கொண்டிருக்கிறார்களா ? 2009 வரை நடத்திக்கொண்டிருந்தார்கள் என்று என்று திருத்திச் சொல்லுங்கள், அதுவும் கூட எல்லோரையும் இராணுவ பலத்தால் ஒழித்துக்கட்டியதால் நடத்த முடிந்ததே தவிர அரசியல் பலத்தால் ஓரங்கட்டியதால் நடத்தப்படவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க