privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்உத்தரகாண்ட் : ஆன்மீக சுற்றுலாக்களால் கொல்லப்பட்ட பக்தர்கள் !

உத்தரகாண்ட் : ஆன்மீக சுற்றுலாக்களால் கொல்லப்பட்ட பக்தர்கள் !

-

சென்ற மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு இவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான மீட்புப் பணிகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மோசமாகும் வானிலையும், தொடரும் மழையும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.

உத்தரகாண்ட் வெள்ளம்எத்தனை ஆயிரம் பேர் இறந்திருப்பார்கள் என்று இன்னமும் மதிப்பிடப்படாத நிலையே நீடித்து வருகிறது. இந்திய விமானப்படையும் இராணுவமும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மீட்புப்பணியின் போது ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

மேக வெடிப்பு காரணமாக கடல் மட்டத்திலிருந்து 14,200 அடி உயரத்தில் உள்ள வசுகிடால் பனிப்பாறை ஏரியில் நிரம்பிய நீர் 11,755 அடி உயரத்தில் உள்ள கேதார்நாத்தை அடைந்து மொத்த ஊரையும், கோவிலையும் துவம்சம் செய்தது. கோயில் சுடுகாடு போல காட்சியளித்தது. ருத்ர ப்ராயக், உத்திரகாசி, சமேலி, பிதோராகர் மாவட்டங்கள் என 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பேரழிவு ஏற்பட்டிருந்தது. கேதார்நாத் கோவிலின் பிரதான மேற்குச் சுவரே காணாமல் போய் விட்டது. வெள்ளத்தின் கோர தாண்டவத்தை பார்த்த பக்தர்கள், அதனை ருத்ர தாண்டவம் போல இருந்ததாகத்தான் சொல்கிறார்கள். உத்தரகாண்ட் மாநிலம் முழுவதிலும் கிட்டத்தட்ட 233 கிராமங்கள் அழிந்துள்ளன. 1307 சாலைகளும் 147 பாலங்களும் காணாமல் போயிருக்கின்றன.

பெருமளவு உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது பத்ரிநாத்திலும், கேதார்நாத்திலும்தான். ரிஷிகேஷிலிருந்து 223 கிலோமீட்டர் தூரத்தில் மந்தாகினி ஆற்றின் முகத்துவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 11,700 அடி உயரத்தில் கேதார்நாத் அமைந்துள்ளது. 2001 கணக்கெடுப்பின்படி இங்கு 479 பேர் வசிக்கின்றனர். சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத்தில் 841 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். ஆனால், இந்த இடத்துக்கு வரும் புனித யாத்திரிகர்களின் எண்ணிக்கை 2006 சீசனில் மட்டுமே 6 லட்சமாக இருந்தது.

பக்தி சுற்றுலா என்ற பெயரில் சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் பட்டி தொட்டிகள் எல்லாம் பரவியுள்ள ஏஜெண்டுகள் தலா ஒருவருக்கு 6 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ரயில் போக்குவரத்து, வீட்டு உணவு, தங்குமிடம் போன்றவற்றை கூட்டாக ஏற்பாடு செய்து தருவதாக அழைத்துச் செல்கின்றனர். கூடுதல் விருப்பமும், வசதியும் உடையவர்கள் இன்னும் அதிகம் செலவழித்து சொகுசான ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு சிறப்பு உணவுகளை வாங்கிக் கொள்ளலாம்.

புனித யாத்திரை போவதற்கான பொருளாதார வலு இருக்கும் லட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை இந்த ஆன்மீக சுற்றுலாத் துறை குறி வைக்கிறது. கி.பி. 9-ம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் போன இடம், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் போய் வரும் இடம் என்று அதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியையும் கட்டமைக்கிறார்கள். உண்மையில், நவீன போக்குவரத்து வசதிகள் வந்த 19-ம் நூற்றாண்டுக்கு முன்பாக, பெரும்பான்மை மக்கள் இத்தகைய யாத்திரைகள் போயிருக்க வாய்ப்பே இல்லை. ஆதி சங்கரர் போன்ற ஒரு சில பார்ப்பன சாமியார்கள், கனவில் கூட இங்கெல்லாம் சென்றிருக்க வாய்ப்பில்லை.

uttarakhand_floods_rains20-ம் நூற்றாண்டின் அறிவியலும், தொழில் வளர்ச்சியும் உருவாக்கிய கட்டமைப்பு வசதிகளும், நடுத்தர வர்க்கத்திடம் சேர்ந்திருக்கும் செல்வச் செழிப்பும் புனித சுற்றுலா போகும் கணிசமான எண்ணிக்கையினரை சாத்தியப்படுத்தியுள்ளன. அவர்களை முன் வைத்து சந்தைப்படுத்தப்படும் ஆன்மீக சுற்றுலாக்கள் இந்த பேரழிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததோடு, சுற்றுலா சென்ற ஆயிரக்கணக்கான மக்களை உயிர்ப்பலி வாங்குவதில் முடிந்திருக்கின்றன.

இப்போது உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை சோட்டா சார் தாம் (நான்கு புனிதத் தலங்கள் – சிறியவை) என்று அழைக்கப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் உள்ள பத்ரிநாத்தின் முக்கியத்துவத்துக்கு தேவ பிரயாகை, ருத்ர பிரயாகை, கர்ண பிரயாகை, நந்த பிரயாகை, விஷ்ணு பிரயாகை என்று பெயர் சூட்டப்பட்ட நதித் துறைகளும், மகாபாரதத்தில் பாண்டுவும் மாத்ரியும் தவம் புரிந்த பாண்டு கேஷ்வர், பாண்டவர்கள் சொர்க்கத்துக்குப் போகும் வழியில் தங்கிய இடம், பீமனும் ஹனுமானும் சந்தித்த இடம் என்று பல புராண, இதிகாச புரட்டு கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் விஷ்ணு தவம் புரிந்த போது மகாலட்சுமி பாதாரி மரமாக மாறி அவருக்கு காவல் புரிந்ததாகவும் அதனால் விஷ்ணு பதாரி நாத் என்று அழைக்கப்படுகிறார் என்று நாக்கூசாமல் அளந்து விடுகிறார்கள். விஷ்ணு நர, நாராயண வடிவங்களை நாரதருக்கு காட்டியதும் இங்குதானாம். சாலிகிராமத்தால் செய்யப்பட்ட பத்ரி நாராயணன் பதாரி மரத்தின் கீழ் குபேரனும், கருடனும் சூழ வீற்றிருக்க, மகாலட்சுமி சந்நிதி வெளியில் உள்ளது. இத்தனை கடவுள்கள் இருந்தும் வெள்ளத்தில் மூழ்கிச் செத்த பக்தர்களை காப்பாற்ற வக்கில்லை.

வனப் பிரஸ்தம் என்று பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையில் செய்யும் சில அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த புனிதத் தலங்களுக்கு போய் வருவதை நடுத்தர வர்க்க மக்கள் கருதுகிறார்கள். அதன் மூலம் தமது பாவங்களை சுத்தப்படுத்தி, பரலோக வாழ்க்கைக்கு தயார் செய்வதாக நம்புகிறார்கள்.

ஆனால், யாத்திரை போகும் போது நிஜ உலகம் அவர்களை எதிர் கொள்கிறது. தாம் நினைத்தது போல ஆன்மீக பரவசமோ, இறை அனுபவமோ வேறு எந்த புண்ணாக்குமோ கிடைக்கவில்லை என்பதை உணர்கிறார்கள். ஆனால், உண்மையை வெளியில் சொல்வதை அவர்களுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைகளும் சரி, அவர்களது சமூகச் சூழலும் சரி அனுமதிப்பதில்லை. இறுதியில் தாங்கள் பார்த்து பரவசப்பட்டதாக கருதிய தருணங்களை, புனிதத் தலங்களைப் பற்றி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் இட்டுக் கட்டி பேசுவதற்கு உதவும் ஒரு நிகழ்வாக இத்தகைய பயணங்கள் சுருங்கி விடுகின்றன. அப்படி பேசுவதை கேட்கும் உறவினர்களும் நண்பர்களும் அடுத்த சுற்றுப் பயணத்துக்கு புறப்படத் தயாரிக்கப்படுகிறார்கள்.

Uttarakhandமிகவும் பலவீனமான மலைப்பகுதியான இப்பகுதியில் உள்ள பாறைகள் நடந்து செல்லும் போதே பல இடங்களில் உடைந்து உதிரும் தன்மையை உடையவை. மேற்குத் தொடர்ச்சி மலையை போல இவை கடின வகைப் பாறைகள் அல்ல. இங்கு சுமார் 18 பெரிய மற்றும் சிறிய நதிகள் உற்பத்தியாகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் 9 முறை வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இத்தகைய மலைப்பகுதியில் வாகனங்களை செல்வதற்கு அனுமதிப்பது என்பதே தற்கொலைக்கு சமமானதுதான். இங்குதான் சிவன் இருந்தான் என்று சொல்லி கோவிலை நிர்மாணித்ததற்கும் சாலைகளை அமைத்து பெரும் வாகன எண்ணிக்கைகளை அனுமதித்தற்கும் பக்தி என்ற பெயரில் நடக்கும் வியாபாரம்தான் முழுமுதல் காரணம்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகையே ஒரு கோடியாக இருக்கும் போது, வரும் யாத்ரிகர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3 கோடி. ஆண்டுதோறும் சுற்றுலாத்துறையில் ஏறக்குறைய 140% வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் இம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட பத்து மடங்கு உயர்ந்துள்ளது.

வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து தங்கும் விடுதிகள், சிறு கடைகள், உணவகங்கள் சக்கை போடு போட ஆரம்பித்தன. 32 புண்ணிய தலங்கள் உள்ள உத்தர்காண்டின் சுற்றுலாத் துறை வருமானம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.12,000 கோடியாகும்.

இப்போது நடந்துள்ள இயற்கை பேரழிவில் பெரிய உணவகங்கள் மட்டும் 100 வரை காணாமல் போயிருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது. கங்கை, பகீரதி, அலக் நந்தா, மந்தாகினி போன்ற நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குதான் இதற்கு காரணம். ஏற்கெனவே கடந்த பிப்ரவரி 26-ம் தேதி உச்சநீதி மன்றம் கங்கை நதியின் கரையிலிருந்து 200 மீ தூரத்துக்குள் இருக்கும் கட்டிடங்களை இடிக்க உத்திரவிட்டுள்ளது.

நொறுங்கும் பாறைகளைக் கொண்ட இமயமலையில் சாலை அமைத்து, ஆற்றங்கரையில் விடுதிகள் கட்ட அனுமதி தந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் அலட்சியம் செய்தது அரசு. இவை அனைத்தையும் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி அனுமதித்த அரசு இப்போது மீட்புப் பணிகளில் விமானப் படையை ஈடுபடுத்துவதன் மூலம் மீட்பு பணியின் பெயரால் தேச ஒற்றுமையை கட்டுவதாக பிரச்சாரம் செய்கிறது.

ஒரு மேக வெடிப்புக்கே தன் மேல வாசலை இழந்து விட்ட சிவனோ கேதார்நாத்தில் மலைப்பிரதேசத்தில் குளிருக்கு நடுங்கியபடி அம்மணமாக நிற்கிறான். கம்பளி கொடுக்கத்தான் ஆளில்லை. பார்ப்பன இந்து மதத்தின் மூடநம்பிக்கைதான் உத்தரகாண்டில் மக்கள் சாவதற்கு காரணம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். ஆன்மீக சுற்றுலாக்கள் இப்பகுதியில் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் வருடா வருடம் வெள்ளத்தில் கொல்லப்படும் மக்களை சிவனால் மட்டுமல்ல இந்திய அரசாலும் காப்பற்ற முடியாது.

மேலும் படிக்க

  1. நீங்கள் எழுதிய புள்ளி விவரங்கள் பற்றி குறை இல்லை…
    ஆனால் பெரும்பாலானவர்கள் வழிபடும் கடவுளையும், அம்மக்களின் மத உணர்வுகளையும் அவமானம் செய்யும் விதமாக எழுத பட்டிருக்கும் கட்டுரை…

    அதிலும்,

    //ஒரு மேக வெடிப்புக்கே தன் மேல வாசலை இழந்து விட்ட சிவனோ கேதார்நாத்தில் மலைப்பிரதேசத்தில் குளிருக்கு நடுங்கியபடி அம்மணமாக நிற்கிறான். கம்பளி கொடுக்கத்தான் ஆளில்லை. பார்ப்பன இந்து மதத்தின் மூடநம்பிக்கைதான் உத்தரகாண்டில் மக்கள் சாவதற்கு காரணம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். ஆன்மீக சுற்றுலாக்கள் இப்பகுதியில் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் வருடா வருடம் வெள்ளத்தில் கொல்லப்படும் மக்களை சிவனால் மட்டுமல்ல இந்திய அரசாலும் காப்பற்ற முடியாது.//

    அது ஏன் இந்து கடவுள்களை மட்டும் கேவலமாக சித்தரிப்பது….
    ஏன் ஹஜ் பயணத்தின் போது மக்கள் இறப்பதில்லையா??? 2006இல் கூட இறந்தார்கள்…
    இதனால் இஸ்லாமியத்தை சேர்ந்தவர்கள் மூட நம்பிகையுடயவர்கள் என்றும், அங்கு செல்வது கட்டு கதை, வீண் என்றும் உங்களால் தையரியமாக கூற/கட்டுரை எழத முடியுமா???
    இஸ்லாமிய இறையை நிந்தனை செய்து கேவலமாக எழத முடியுமா??

    முடியாது…உங்களக்கு இந்துக்களும் அவரது புராணங்களும்/வரலாறுகளும்தான் கிள்ளுகீரை ஆயிற்றே????

    • கருத்தமிழன்: I have been reading their blogs for nearly three months now and i used to regularly add my comments in the hope they would change.

      But they have an AGENDA to mock Hinduism, create a rift between communities and spread hatred. So they wont change.

      I have realised that we should stop arguing with them. There is a saying: “Never argue with an Idiot. He will drag you down to his level and defeat you with his experience”.

      Enough said. This is my last post in Vinavu. This site is not worth my precious time.

      • Sridhar,

        There is no place for emotions here. This is a place to hear the openions of the opposite side. Neither they will accept you nor you will accept them.

        This kind of arguments will help you discover more points for your ideas and when you really happen to speak with your friends/collegues/relatives you can blast them with your argument.

        You can also learn more more new usefull things (both good and bad).

        So don’t try to teach anyone here, here no one is a student all or masters!!!

      • Ayya Sridhar, அப்படி வேற என்ன வேலை செய்ய போறீங்களோ உங்க விலைமதிப்பில்லா நேரத்தில்?

    • இஸ்லாமியர்களை யாரும் நிந்தனை செய்ய முடியாது ஏனெனில் அவர்கள் கூட்டாக சேர்ந்து குண்டு வைத்து விடுவார்கள். இந்துக்கள் என்னில் கூட்டமாக கூடி கத்திவிட்டு சென்று விடுவார்கள் அவ்வளவுதான் . அந்த குருட்டு தைரியம் தான்.

    • நிச்சயமாக இஸ்மியர்கள் செல்லும் மத பயணமும் மூடநம்பிக்கையே, அங்கு அந்த பயணத்தில் இறப்பவர்களை அல்லா காப்பாற்றுவதில்லை என்பதே உண்மை.

      பார்ப்பன இந்து மத புராணங்கள் அனைத்தும் பொய் என்பது மட்டுமல்ல, அயோக்கியதனம், மோசடி.

      சென்ற ஆண்டு 2012 மே மாதம் நேபாளம் முக்திநாத் எனும் நாமகாரர்களின் புனித தலம் என சொல்லபடும் எனும் இடத்திற்கு சென்று, விமான விபத்தில் இறந்த பெண்ணின் குழைந்தைகளுக்கு, அதே பெண்ணின் கணவர் ஒரு ஆண்டுக்கு மேலாக கோமாவில் இருந்து மீண்டு வர எந்த மயிறு கடவுளும் வரவில்லை என்பதை பார்க்கும் போது, இந்த ஆண்டு உத்தர்காண்டில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ எந்த பார்ப்பன இந்து கடவுளும் வர போவதில்லை.

    • அப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. இங்கிருந்து கடல்கடந்து, பாலைவனம் தாண்டி சேரமான் பெருமாள் கூட மெக்காவுக்குப் போனாராம். இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் கேதார்நாத்துக்கு யாரும் போயிருக்க மாட்டார்களாம். பல நூற்றாண்டுக்கு முன்பே மக்கள் இந்தப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குளிற்காலத்தில் இல்லாது விட்டாலும் வசந்த அல்லது கோடைகாலத்தில் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் இங்கு யாத்திரை போவதற்கான சாத்தியக்கூறுகள், மக்காவுக்குப் போவதை விட நிச்சயமாக இலகுவாக இருந்திருக்கும். ஆனால் அதை நக்கலடித்து அண்ணன் வினவு எழுதத் துணைய மாட்டார், ஏனென்றால் (வாலை) ஓட்ட அறுத்து விடுவார்கள் என்ற பயம். 🙂

      • இஸ்லாமியர்கள் என்றால் வினவுக்கு பயம், இப்படி கொஞ்ச நாளாவே சிலர் கமெண்ட் அடிக்கிறார்கள். வினவு பயப்படுகிறது என்பதைக் கூறி முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதுதான் இவர்களின் நோக்கம். இணையத்துல எழுதுவதற்கே பயப்படுனும்னா கொலைகார மோடி ஏன் இன்னும் உசுரோட இருக்கார்?

        முன்பெல்லாம் வெள்ளிக்கிழமைனா வினவில் இஸ்லாமிய பதிவு வரும் என கிண்டலடிப்பார்கள். போங்கப்பா வினவுல எழுதப்பட்டுள்ள இஸ்லாமிய கட்டுரைகளையும் படிச்சுட்டு வந்து புன்னூட்டம் எழுதுங்க

    • நானும் ரொம்ப நாளாத்தான் பார்க்குறேன் , இந்த கருத்த தமிழன் மாதரியே தான் நிறைய பேரு பேசுறாங்க. இப்ப வினவு ஹிந்து மதத்த பத்தி எதையாவது பேசினால் உடனே வினவை பார்த்து நீங்கள் தைரியம் இருந்தாம் இஸ்லாத்தை பத்தி பேசுங்க பார்ப்போம் , ஹிந்து மதம்னா உங்களுக்கு இளக்காரமா போச்சுன்னு ஒப்பாரி வைக்கிறது. வினவு கேட்பதற்கு ஹிந்து மதத்திலிருந்து பதில் சொல்லி வினவு வாய அடைக்க நினைப்பதுதான் புத்திசாலித்தனமான பேச்சாக இருக்க முடியும் . அதை விட்டுவிட்டு நான் நோஞ்சான இருக்கிறதால என்ன அடிக்கிறீங்க தைரியம் இருந்தால் எங்க அண்ணன் அடிங்க பார்ப்போம் அப்டின்னு சொல்ற மாதரியே இருக்கு . முஸ்லிம்களை பத்தி நிறைய கட்டுரைகள் வந்தாச்சு அதை லாம் போய் படிங்க ….சும்மா கிணத்து தவளை மாதரி இருக்காதிங்க

  2. ஏன் ஹஜ் யாத்திரை பற்றியும், மற்ற எல்லா முஸ்லீம் மூடநம்பிக்கைகள் பற்றியும் வினவு எழுதியது உன் கருப்பு கண்ணுக்கு தெரியலையா ? அல்லது தெரியாது மாதிரி நடிக்கிறியா ?

  3. enkhada vinavu inkha nayanatha innum oothaliyenu parthene…thappu anmeka payanathula irukatum.. nee uthavi yetachum chenchiya.. vadiyara rathathula thane nakkuara madiri nakkura

  4. வினவை செருப்பால் அடித்தால் கூட அது போதுமானதாக இருக்காது…
    வினவிற்கு இந்து மதத்தின் மேல் நம்பிக்கை இல்லை எனில் நம்பிக்கை இல்லை என்று கூறி ஒதுங்க வேண்டியது தானே..!! மற்றவர்களின் மத உணர்வுகளை மதிக்காமல் எழுதுவது அயோக்கியத்தனம்.
    இஸ்லாமியர்களைப் பற்றி எழுதாமல், எப்பொழுதுமே இந்துக்களைப் பற்றி மட்டுமே அவதூராக எழுதுவதைப் பார்த்தால், இஸ்லாமியரிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுவதைப் போல் உள்ளது…
    ஈராக், பாலஸ்தீன் முதலிய நாட்டில் இஸ்லாமியர்கள் பன்றியைப் போன்று சுட்டுத் தள்ளப் படுகிறார்கள்…அதனால், அல்லா இல்லை என்றாகி விடுமா?
    வினவு ஒரு விஷக்கிருமி. இதை நாம் போலீசில் புகார் கொடுத்தே ஆக வேண்டும்…

    • /வினவை செருப்பால் அடித்தால் கூட அது போதுமானதாக இருக்காது…/

      யோவ் காமெடி பீஸு!

      போய் சிவன், அவனோட பொன்டாட்டி, வைப்பாட்டி, ஓடுகாலி பையன் (மாம்பழத்துக்கு கோபித்துக்கொண்டு ஓடி போன தெண்டாயதபானி), இன்னும் எல்லா சாமிகளையும் செருப்பால, வெளக்கமாத்தால அடி!

      ”உங்களை நம்பி, பார்க்க வந்த மக்களை ஏன்டா காப்பாத்தல” என்று.

    • //ஈராக், பாலஸ்தீன் முதலிய நாட்டில் இஸ்லாமியர்கள் பன்றியைப் போன்று சுட்டுத் தள்ளப் படுகிறார்கள்…அதனால், அல்லா இல்லை என்றாகி விடுமா?//

      சிறீதர், அப்போ அல்லா இருக்காருன்னு ஒத்துக்கொள்கிறீர்களா 🙂

      • அதுதான் இந்துகளோட பெருந்தன்மை,,,
        “அல்லா” அல்லவே அல்ல…என்று எப்போதும் கூறியதில்லை…

        இந்துக்கள் முஸ்லிம்களை திட்டினாலும், (எந்த மதத்தை சேர்ந்த)கடவுளையும் திட்ட மனம் வருவதில்லை…

        ஆனா முஸ்லிம்கள் ஆகிய நீங்கள்தான்….இந்து கடவுள்களின் உறவு முறை சாரம்சத்தை புரியாமல்….”பொன்டாட்டி, வைப்பாட்டி, ஓடுகாலி பையன்”, “இன்னும் எல்லா சாமிகளையும் செருப்பால, வெளக்கமாத்தால அடி”
        அப்படின்னு சொல்லிக்கிட்டு திரியுறீங்க….

        “தன் கடவுள்,மதம் மட்டும் உயர்ந்தது, மற்ற மத கடவுள் எல்லாம் கேவலமான விஷயங்கள்” என்கிற உங்களுக்கு மத வெறி இல்லை. அப்படிதானே…நல்ல இருங்குங்க உங்க நியாயம்…!!!

        இஸ்லாமியகளுக்கு ஒன்றே கடவுள்!!

        இந்து பாரம்பரியதிருக்கு, அனைத்தும் கடவுள்!!!

        1 அறிவு முதல் 6 அறிவு உயிர் வரை, தூசு, துரும்பு, கல் மண், மரம், மலை, விலங்கு, நீர் வாழ் உயிரினங்கள்,ஊர்வன, பறப்பன, நிற்பன, நடப்பன, பஞ்ச பூதம், கோள்கள், , நீ, நான், அன்பு என அனைத்திலும் கடவுளை காண வேண்டும் என்றுதான் உருவ வழிபாடு முறை இருந்த வருகிறது…

        இப்படி இருப்பதால்தான் எந்த கடவுளையும் இல்லை என இந்துக்கள் வாதாடுவதில்லை…

        முஸ்லிம்கள் ஒன்று மட்டும்தான் கடவுள் என்று மற்ற மத கடவுளை நிந்தனை செய்கிறிர்கள்…கூட இந்த வினவு கட்டுரையாளரின் தூபம் வேறு உங்களுக்கு ஆதரவு,,,

        மதங்கள் மற்றும் அதன் கருத்துகள்/போதனைகள்/வசனங்கள் எப்போதும் அழிவதில்லை,,,அதனை சார்ந்த மனிதர்களின் செய்கைகள்தாம் அவர்களை அழிக்கின்றன…

        வீணாக அழிந்து போகாதீர்கள்!!!

  5. #வெள்ளத்தின் கோர தாண்டவத்தை பார்த்த பக்தர்கள், அதனை ருத்ர தாண்டவம் போல இருந்ததாகத்தான் சொல்கிறார்கள்# அடப்பாவிகளா இன்னுமாடா உங்களுக்கு புத்தி வரல …………..

    இது போன்ற இயற்கை பேரழிவுகளிலோ அல்லது நமது அன்றாட வாழ்வின் நடைமுறை பிரச்சனைகளிலோ சிவாசாமி, அல்லா சாமி, கிஸ்டின் சாமி ன்னு எந்த ( கையாலாகாத ) சாமியும் நமக்கு உதவ போவது கிடையாது. வெள்ளத்தில் மூழ்கும் சிவன் சிலை இதற்கு ஒரு lively யான உதாரணம்.

    But இந்தியாவை பொருத்தவரைக்கும் இந்து மத புனித யாத்திரைகள் தான் economically best and affordable for (shameless) middle class .
    இதுவே கிஸ்டின் மற்றும் அல்லா மதத்தில் passport எடுத்து international pilgrimage perform பண்ணவேண்டி வரும்.
    (அல்லா – சவூதி அரேபியா ; கிஸ்டின் – ரோம் and ஜெருசேலம் )
    கிருஸ்தவ புனித யாத்திரைகள் தற்போது பிரபலமாகிக்கொண்டு வருகின்றன. இதற்கு ஏஜெண்டுகளாக செயல்படுபவர்கள் உள்ளூர் சர்ச்சின் பாதிரியார்கள். ( பத்து பேரை புடிச்சா ஒருத்தருக்கு free ……..
    அந்த பதினொன்னாவது இலவச இணைப்பா பாதிரியார்கள் சேர்ந்து கொள்கிறார்கள். திருச்சி வரைக்கும் இது வந்து விட்டது )

    Final touch :
    இத்தனை கடவுள்கள் இருந்தும் வெள்ளத்தில் மூழ்கிச் செத்த பக்தர்களை காப்பாற்ற வக்கில்லை.

  6. இது குறித்த பதிவு ஒன்றை எழுதலாம் என சில விவரவங்களை சேகரித்தேன். அது தேவையில்லாமல் போய்விட்டது. பேரழிவின் பின்னணி மிகச் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.

    மலைகளுக்கிடையே வெள்ளம் பாய்ந்தோடுவதால் ஏற்படுபவைதான் பள்ளத்தாக்குகள். அத்தகைய பள்ளத்தாக்குகளின் நடுவில்தான் கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது வெள்ளப் பெருக்கின் போது அம்பலமாகியது.

    பள்ளத்தாக்கின் நடுவில் கோவிலை அமைத்தவன், கட்டுக் கதைகள் மூலம் கோவில்கள் மீது மவுசை உருவாக்கியவன், ஆற்றுப் படுகைகளில் ஓட்டல்களையும் தங்கும் விடுதிகளையும் கட்டியவன், இத்தகைய கட்டுமானப் பணிகளை அனுமதித்து அவைகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை உருவாக்கி கொடுத்த அரசாங்கம், ஆசை காட்டி மக்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகள் இவர்களே இப்பேரழிவில் மனித உயிர்ப் பலிக்கு காரணமான குற்றவாளிகள். இமய மலை மட்டுமல்ல நாடெங்கிலும் உள்ள மலைகள், ஆறுகள், காடுகள், பாறைகள் என எதையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. இக்குற்ற கும்பல் கொள்ளையடிப்பதற்காக அப்பாவி மக்கள் பலியாவதா?

    “ஆண்டவன் தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!” என சொல்லி விட்டு, கடவுளைக் காண கேதர்நாத்துக்கும் பத்ரிநாத்துக்கும் அமர்நாத்துக்கும் மக்களை அழைப்பது மோசடி இல்லையா? அங்கு மட்டுமல்ல நாடெங்கிலும் இப்படித்தான் மக்களை காடுகளுக்கும் மலைகளுக்கும் அழைக்கிறார்கள். ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட பிழைப்புவாதிகள் தங்களின் அறுவடைக்காக மக்களை பலிகடாவாக்குகிறார்கள்.

    எனவே! இமய மலை மட்டுமல்ல; நாடெங்கிலும் ஆன்மீகச் சுற்றுலாக்களை தடை செய்ய வேண்டும்.

    கிருத்துவப் பாதிரிகளும் இப்போது மலைகளை வளைத்துப் போட்டு வருகிறார்கள்.

    ஆன்மீகத்தின் பேரால் இனி மக்கள் மடிய வேண்டாம் என நீ கருதினால் உத்ரகாண்ட் பேரழிவைக் கண்டு ஆத்திரப் படு! அனுதாபப்படாதே!

  7. உன்னை எழுத வைத்ததும் சிவனே…
    அங்கு சாக வைத்ததும் அவனே….
    கங்கை தலையில் இருந்தால் சிவன்…
    அந்த கங்கையே இங்கு சிவனுக்கு எமன்…
    இறைவனின் திருவிளையாடல்களை புரிந்து கொள்ள
    இந்த ஜென்மம் ஒன்று போதாது…

    -கம் ஆன் – கண்டபடி திட்டுங்கள் பார்க்கலாம்…

  8. பெரியாரிசம் , விளம்பர வினவு கம்யுனிசம் மற்றும் போலி கம்யுனிசம் பெரும்பான்மை மக்களிடம் எடுபடாமல் போக காரணம் ஆதி மனிதன் முதல் நவீன மனிதன் வரை நம்பிவரும் நம்பிக்கையை பொய் என கூறுவதோடு அல்லாமல் அதனை கேவலப்படுத்துவதும் ஆகும் …………. வாழ்வில் நிலையாமை இருக்கும் வரை நமக்கு வழித்துணையாக ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது……. அதனை மக்கள் பல்வேறு மதக்கடவுளாக கடைபிடிக்கிறார்கள் ….. இந்த நம்பிக்கையை தந்தால் மட்டுமே உங்களின் புரட்சிக்கருத்துக்கள் மக்களிடம் எடுபடும் …… அதற்க்கு முதலில் வழியை கண்டுபிடுயுங்கள் ………….. அப்புறம் பார்க்கலாம் உங்கள் புர்ச்சி வெற்றிபெறுமா என்று ……..

  9. வெள்ளத்தில் மூழ்கிச் செத்த பக்தர்களை காப்பாற்ற வக்கில்லாத கடவுள்கள். அடுத்து, இந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோவில் போகும் ஆட்டு மந்தை கூட்டம்……

  10. When the River Colarado passed through two mountains,Americans thought it fit to construct a massive Hoover Dam that too during the Great Depression of 1930s(Height-726.4 ft-Length-1244 ft).This river is the vital source of water for agricultural and urban areas in the south western desert lands of North America.This river furnish irrigation and municipal water supply for almost 40 million people The electric power generated here is being used by many states of USA..Natural resources should be harnessed and used for the betterment of the masses.We,Indians are worshipping the rivers and wasting the water after polluting it.

  11. இறைவனால் அளிக்கப்பட்ட இயற்கையை அழித்துவிட்டு அதனால் வரும் பின்விளைவுகளுக்கு கடவுள் காரணம், கடவுள் ஏன் காப்பற்றவில்லை என கேட்பது முட்டாள்தனம். இவ்வளவுதான் வினவின் பகுத்தறிவா….

  12. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது “கருடா சவுக்கியமா?”
    “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே”, கருடன் சொன்னது.
    இதில் அர்த்தம் உள்ளது.

    • தமிழ் ///பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது “கருடா சவுக்கியமா?”
      “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே”, கருடன் சொன்னது.
      இதில் அர்த்தம் உள்ளது.///

      இங்கு பாம்பு யார்?கருடன் யார்?பரமசிவன் யார்?

  13. காப்பதும் அவனே, அழிப்பதும் அவனே…
    இறந்தவனுக்கு உடனே மோட்சம் – அதை
    மறந்தவனுக்கு இல்லவே இல்லை விடி மோட்சம்….

    இறைவனை பழிப்பது நாத்திகம்..
    அதையும் சகிப்பது ஆத்திகம்…

    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு..
    நாத்திகவாதிக்கு அறிவும் கெட்டு…

  14. // பார்ப்பன இந்து மதத்தின் மூடநம்பிக்கைதான் உத்தரகாண்டில் மக்கள் சாவதற்கு காரணம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். //

    அங்கே சிவலோகம் போனவர்கள் எல்லாம் மேற்படி மதத்தை பின்பற்றும் இந்துக்கள்தான், கிறித்தவர்களோ முஸ்லீம்களோ அல்ல.. இது எல்லோருக்கும் தெரியும்.. ஆகவே, உலகறியச் செய்து சாதிக்கப் போவது ஒன்றுமில்லை.. இந்திய முற்போக்காளர்கள் மாநாடு உத்தரகாண்டில் அப்போது நடைபெற்றிருந்தாலும் அவர்களும் சிவலோகம்தான் போயிருப்பார்கள்… ஓம் சாந்தி…

    • \\அங்கே சிவலோகம் போனவர்கள் எல்லாம் மேற்படி மதத்தை பின்பற்றும் இந்துக்கள்தான், கிறித்தவர்களோ முஸ்லீம்களோ அல்ல.. இது எல்லோருக்கும் தெரியும்..//

      என் வீட்டு மனுஷாள நான் அடிப்பேன் மிதிப்ப்பேன் நீ யார்யா கேக்குறதுங்கிறார் அம்பி. அபிஷ்டு,வீட்டுக்குள்ளார கொலை நடந்தா போலீஸ் உள்ள வரத்தான் செய்யும்.

      \\உலகறியச் செய்து சாதிக்கப் போவது ஒன்றுமில்லை..//

      அதானே அவ்வளவு சுளுவா எங்க ஏமாத்து வேலையிலிருந்து ஜனங்கள வெளியே விடுவோமா ங்குறார் அம்பி. அபிஷ்டு,எறும்பு ஊர கல்லும் தேயும்.தெரியாதோ நோக்கு.

      \\இந்திய முற்போக்காளர்கள் மாநாடு உத்தரகாண்டில் அப்போது நடைபெற்றிருந்தாலும் அவர்களும் சிவலோகம்தான் போயிருப்பார்கள்//

      கொள்ளைல போவானுங்க இவனுகளுக்கு சாவு வர மாட்டேங்குதேன்னு ஏங்குகிறார் போல.

      • // அபிஷ்டு,வீட்டுக்குள்ளார கொலை நடந்தா போலீஸ் உள்ள வரத்தான் செய்யும். //

        விபத்தை கொலைன்னு பொய்ப் புகார் கொடுத்த பிரம்மஹத்தியை இப்ப போலீஸ் தேடிக்கிட்டு இருக்காம்..

        // அபிஷ்டு,எறும்பு ஊர கல்லும் தேயும்.தெரியாதோ நோக்கு. //

        எறும்புங்க அதுங்கபாட்டுக்கு இரையைத் தேடி வரிசையா போய்கிட்டு இருக்குனுல்ல நம்பிக்கிட்டிருந்தேன்.. கல்லைத் தேய்கிறதுதான் அதுங்க லட்சியமா.. அட கஷ்ட காலமே..

        இதை கண்டுபிடிச்ச உங்க ஆராய்ச்சியும், அறிவும் வீணாப் போகப்படாது.. “கல் தோன்றி, மண் தோன்றுவதற்கு முன்னால் எறும்புகள் தோன்றி, கல்லைத் தேய்ச்சதாலதான் மண் தோன்றியது” அப்படின்னு ஒரு ஆராய்சிக் கட்டுரை எழுதி, முனைவர் பட்டம் வாங்கி, “டாக்டர் எரிமலை, ஆண்ட்தேய்ப்பாலஜிஸ்டு” ன்னு போர்டு போட்டுக்க வேண்டியதுதானே..

        • அபிஷ்டுன்னு மணிக்கொருமுறை காட்டிக்கனும்னு வேண்டுதலா.தொடர்ந்த ஒரு செயலுக்கு பலன் உண்டுன்னு எறும்பு ஊர கல்லும் தேயும் பழமொழி சொல்கிறது.எறும்புகளின் லட்சியம் பத்தி ஒண்ணுமே சொல்லலையே.

          • டாக்டர் பட்டம் வேணாம்னா, கிரானைட் டைல்ஸ் பாலிஷ் பண்ற பேக்டரி ஆரம்பிக்கலாம்.. ஒரு மூட்டை எறும்புதான் முதலீடு.. ஒரு வாரம் எறும்புங்கள தொடர்ந்து 24 மணி நேரமும் டைல்ஸ் மேல ஊர விட்டா பலன் பளிச்சுன்னு தெரியுமே.. அதை எப்படி பண்றதுங்கற தொழில்நுட்பமெல்லாம் உங்களுக்குத்தான் தெரியும்.. அபிஷ்டுவின் வாழ்த்துக்கள்..

  15. இளவரசன் சாவிற்கு கூட பார்ப்பன இந்துமதம்தான் காரணம்.

    • உன்னுடைய கழிவு நாற்றமடிப்பது கூட பார்ப்பன இந்துமதம்தான் காரணம்.

      • ஆம். என் கழிவு உனக்கு நாற்றமடிக்கத்தான் செய்யும். அது கழிவை அப்புறப்படுத்துவதிலும் கூட வேலைப்பிரிவினையை உருவாக்கிய பார்ப்பன இந்துமதத்தினால்தானே.

        • இல்லை.. அய்ரோப்பியர்கள் கொண்டு வந்து இங்கே புழக்கத்தில் விட்ட எடுப்புக் கக்கூஸ்.. பல அய்ரோப்பிய இறக்குமதிப் பொருட்களால் ஏற்கனவே வேலைவாய்பிழந்திருந்த தோல்வினைத் தொழிலாளர்களை அவர்களது பொருளாதார அடிமட்ட நிலையை பயன்படுத்தி கக்கூஸ் கழுவ வைத்தது மேனாட்டு நாகரீகம், இந்து மதம் அல்ல..

          அதற்கு முன் நம் மூதாதைகள் கையில் சொம்போடு காட்டுப்பக்கம் கருக்கல் வேளைகளில் ஒதுங்கி மண்ணுக்கு உரமூட்டிக் கொண்டிருந்தார்கள்..

          • பிறகு, இப்போது பாதாள சாக்கடையில் பார்ப்பனர் இறங்குகிறாரோ?

            • // பிறகு, இப்போது பாதாள சாக்கடையில் பார்ப்பனர் இறங்குகிறாரோ?//

              ஏன் பாதாளச் சாக்கடையில் பார்ப்பனரோ, தலித்தோதான் இறங்க வேண்டுமா.. மற்றவர்களெல்லாம் சுற்றி நின்று கைதட்டுவீர்களா..?!

  16. ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்பதே பகுத்தறிவு, அந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தும் போது மட்டுமே கற்பனையான கடவுள்களை நம் அறிவு விரட்டியடிக்கும்! அந்த நிலையே நாத்திக நிலை! இந்த நாத்திகம் பகுத்தறிவின், சிந்திக்கும் திறனின் அடையாளம்! இந்த நிலையை கிண்டலடிக்கும் மனிதன் கண்டிப்பாக கேள்வி கேட்கத் தூண்டும் பகுத்தறிவை இழந்தவனே! அவன் நிச்சயமாக கற்பனைக் கடவுளை நம்பும் ஒரு முட்டாள், தந்தை பெரியாரின் கூற்றுப்படி! கடவுளைத் துணையாக எண்ணித் தேடி ஓடும் பக்தர்கள் என அழைக்கப்படும் மடையர்கள், அந்தத் துணை தேடலிலேயே சாவைத் தழுவுவதும் உண்டு! சுனாமி என அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் போது வேளாங்கண்ணியில்தான் அதிக உயிர்ப்பலி ஏற்பட்டது! தன்னுடைய கூடுதல் வாழ்நாளுக்காகவும், நோயற்ற வாழ்வுக்காகவுமே மேரி அன்னையைத் தேடிப் போனவர்கள் அந்த மேரியன்னையாலேயே காப்பாற்ற வக்கற்று மோட்சமோ, மேலோகமோ, கீழ்லோகமோ… எதில் போய் சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை! மேரியன்னை தன்னை நாடி வந்தவர்களை காப்பாற்றாமல் தன் மகன் இயேசுவுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாளா? அல்லது தனது கணவன் சூசையப்பருக்கு பணிவிடையில் இருந்தாளா?
    பல ஆண்டுகள் மெக்காவில் நெரிசலிலும், தீ விபத்திலும் பலர் கொல்லப்பட்ட போது அல்லா தூங்கிக் கொண்டிருந்தானா? கடவுளை நம்பும் எந்த மடையனுக்கும் இப்படி தோன்றவில்லை!
    இந்துவோ, கிறித்தவனோ, இசுலாமியனோ… யார் நம்பினாலும் கடவுள் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமே! அதற்குப் போய் இமாலய ஆற்றல்களை கற்பித்து, பொல்லாத, நல்ல குணங்களை அதன் தலையில் சுமத்தி, சுமத்தப்பட்ட அந்த பொல்லாத குணத்துக்கு அவனே பயந்து… என்ன பயித்தியக்காரத்தனம்? கோமாளித்தனம்? கடவுளை நம்புப்வனை கோமாளிகள் என்று கூட அழைக்கலாம். அவ்வளவு அழிச்சாட்டியம் கடவுள் பெயரால் இந்த முட்டாள்கள் செய்வது!
    இதில் ஆதிகாலம் தொட்டே வரும் நம்பிக்கை என்பதால், மனிதனின் ஒரு புலனுக்கும் எட்டாத இந்தக் கடவுள் கருமாந்திரத்தை விமர்சிக்கக் கூடாதாம்! இவ்வளவு அடிமுட்டாள்களா கடவுளை நம்புபவன்?
    இந்தியாவில் பார்ப்பனர்களால் இறக்குமதி செய்து நம்மிடம் திணிக்கப்பட்ட இந்துமதம், பிறகு வந்த கிறித்தவம், இசுலாம் எல்லாமே கடவுள் என்ற கற்பனைக் கருத்தின்மீதே கட்டப்பட்டிருப்பதால் அவைள் முற்றாகவே பகுத்தறிவின் முன்பு காணாமல் போய்விட்டன!
    கடவுளை திட்டுவது என்பது செத்தபாம்பை அடிப்பது போன்று! ஆனாலும் பாம்புக்கு உயிர் இருக்கு என்று சாதிப்பவனை திருத்தும் பொருட்டாகவாவது அதை மீண்டும் ஒரு முறை அடிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

  17. #கடவுளை திட்டுவது என்பது செத்தபாம்பை அடிப்பது போன்று! ஆனாலும் பாம்புக்கு உயிர் இருக்கு என்று சாதிப்பவனை திருத்தும் பொருட்டாகவாவது அதை மீண்டும் ஒரு முறை அடிக்கத்தான் வேண்டியிருக்கிறது.#

    சூப்பர் மன்னாரு !

  18. கடவுளை திட்டுபவர்கள் செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள் என்று தெரிந்திருப்பினும் அவர்களை திருத்தும் பொருட்டு அந்த கோழைத்தனமான வீரத்தையும் மெச்சவே செய்கிறோம்…

    • நன்றி மனிதன் !

      கடைசியில் கடவுளை ஒரு செத்த பாம்பு தான் என்று ஒத்துக்கொண்டதற்கு.

      அடுத்ததா, நாங்க உயிருடன் இருக்கும் சாதீய விசப்பாம்புகளை அடித்துக் கொண்டிருப்பதையும் நீங்கள் மெச்ச வேண்டியிருக்கும்.

  19. MR/MS. village vaasi,

    \\கடைசியில் கடவுளை ஒரு செத்த பாம்பு தான் என்று ஒத்துக்கொண்டதற்கு.\\
    நாத்திகத்தை பொறுத்த மட்டில் ‘செத்த பாம்பு’ என்ற ஒப்புமையே தவறு…. ஏனெனில் செத்த எந்த உயிரும் சவாதற்கு முன் உயிரோடு தான் இருந்திருக்க முடியும்..

    \\நன்றி மனிதன் !\\
    உங்களோடு ஒத்து தோற்றமளிக்கும் ஒரு கருத்தை குறிப்பிட்டால் பரவசத்தோடு ‘நன்றி’ என்று கூறும் உங்கள் வெகுளித்தனம் எனக்கு பிடித்திருக்கிறது….

    \\உயிருடன் இருக்கும் சாதீய விசப்பாம்புகளை அடித்துக் கொண்டிருப்பதையும் நீங்கள் மெச்ச வேண்டியிருக்கும்.\\
    உங்களுக்குள் அடித்து கொண்டிருப்பதை வாக்கு மூலமாக்கி என்னிடம் பதில் ‘நன்றி’ எதிர்பார்க்கிறீர்களோ?

  20. சமீபத்தில் மும்பையில் பெய்த கன மழையில் , ஒர் கட்டிடம் இடிந்து ஏராளமான இஸ்லாமிய சகோதர சகோதரிகள் பலியானார்கள்- கட்டிடம் கட்டியவரும் இஸ்லாமில் உள்ள ஆதிக்க வர்கமே-
    இது வினவின் பார்வைக்கு வரவில்லையா? வினவின் பருப்பு இங்கேயெல்லாம் வேகாது

  21. இறைவன் காட்டி தந்த குர்ஆன் ஹதிதுகளை முழுமையாக ,நேர்மையாக பின்பற்றி நடந்தால் எவ்வித ஆபத்திலும் அல்லாஹ் காப்பாற்றுவான் .அல்லது அதுபோன்ற ஆபத்துகள் ,விபத்துகள் வராமலே தடுத்துவிடுவான்

    • என் பதிவு நம் இடையே சின்டு மூட்டூம் வினவுக்குத்தான் நண்பரே- பலியான சகோதர சகோதரிகள் இஸ்லாமிய குரான் ஹதிதுகளை நேர்மையாக பின்பற்றவில்லையா? கட்டிடம் கட்டியவர தப்பித்து விட்டார் – என்ன சொல்லவருகிரீர்

  22. கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும்.

    hmm so வசைச்சொற்கள், அநாகரீக மொழிகள் only exclusively reserved for Vinavu pa.

  23. இந்த கட்டுரைக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாமல் ஏன் இஸ்லாமையும் முஸ்லீம்களையும் சிலர் இழுக்கிறார்கள் என்று புரியவில்லை. சம்மந்தமே இல்லாமல் சிலருக்கு முஸ்லீம்கள் மேலும் இஸ்லாம் மேலும் காழ்ப்புணர்ச்சி உள்ளது. முஸ்லீம்களுக்கு எதிராக சில மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பது உண்மை.

Leave a Reply to r.k.seethapathi naidu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க