privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்நத்தம் காலனியில் போலீஸ் அடக்குமுறை ஆரம்பம் - வீடியோ !

நத்தம் காலனியில் போலீஸ் அடக்குமுறை ஆரம்பம் – வீடியோ !

-

ளவரசன் மரணம் தொடர்பான உண்மைகள் வெளிவர வேண்டும் என்று போராடி வரும் வழக்கறிஞர்கள் மீதும், இளவரசனின் பெற்றோர்கள் மீதும், ஊர்மக்கள் மீதும் தருமபுரி போலீஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. வழக்கறிஞர்கள் தமயந்தி, செங்கொடி, ரஜினிகாந்த் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு காவல் துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து தட்டிக் கேட்க காவல் நிலையத்துக்குச் சென்ற இளவரசனின் பெற்றோரை 20 போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று நத்தம் கிராமத்துக்குள் விட்டிருக்கின்றனர்.

வழக்கறிஞர்களையும், மக்களையும் விடுதலை செய்யும் வரை இளவரசனின் உடலை வாங்கப் போவதில்லை என்று இளவரசனின் தந்தை இளங்கோ உறுதியாக கூறியிருக்கிறார். மகனை இழந்த துயரத்திலிருக்கும் இளவரசனின் தாய் கிருஷ்ணவேணி தன்னை 10 போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் இழுத்துச் சென்று தள்ளியதை விவரிக்கிறார். 3 பெண்கள் உட்பட்ட அவர்களது உறவினர்களையும் ஊர் மக்களையும் விடுவிப்பது வரை போராடப் போவதாகவும் அதிகார அடக்குமுறைக்கு பணிந்து விடப் போவதில்லை என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

போலீஸ் அடக்குமுறையைக் கண்டித்தும் வழக்கறிஞர்களை விடுவிக்கக் கோரியும் நத்தம் காலனியைச் சேர்ந்தமக்கள் நேற்று இரவிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே “திவ்யாவை கடத்த சதியா?” என்று உளவுத் துறை பத்திரிகைகளில் வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறது. தினத்தந்தி, தமிழ் முரசு போன்ற பத்திரிகைகளில், நக்சலைட்டு அபாயத்திலிருந்து திவ்யாவை பாதுகாக்க திவ்யாவுக்கு 80 போலீசார் கொண்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியிருக்கிறது. இளவரசன் மரணத்திற்கு காரணமான பாமக சாதி வெறியர்களை கைது செய்யாத போலீசும் அரசும் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுக்காக நிற்கும் ஜனநாயக, புரட்சிகர சக்திகள் மீது அடக்குமுறையை ஏவிவிடுகிறது.  இந்தப் பிரச்சினையை அடக்குமுறை மூலம் தணித்து விடலாம் என்று அரசும், போலீசும் திட்டமிட்டு செயல்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளவரசன் மரணத்துக்குக் காரணமான ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற வாசகங்களுடன் ஒட்டப் பட்டிருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்த சூளகிரி போலீசார் விவசாயிகள் விடுதலை முன்னணி, மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். (செய்தி : தமிழ் முரசு)

வன்னிய சாதிவெறி உள்ளிட்ட எல்லா ஆதிக்க சாதி வெறியர்களுக்கும், அரசும் போலீசும் எப்படி சேவகம் செய்கின்றன என்பதை இளவரசன் மரணம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுப்போம், போராடுவோம் !

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]