privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்நத்தம் காலனியில் போலீஸ் அடக்குமுறை ஆரம்பம் - வீடியோ !

நத்தம் காலனியில் போலீஸ் அடக்குமுறை ஆரம்பம் – வீடியோ !

-

ளவரசன் மரணம் தொடர்பான உண்மைகள் வெளிவர வேண்டும் என்று போராடி வரும் வழக்கறிஞர்கள் மீதும், இளவரசனின் பெற்றோர்கள் மீதும், ஊர்மக்கள் மீதும் தருமபுரி போலீஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. வழக்கறிஞர்கள் தமயந்தி, செங்கொடி, ரஜினிகாந்த் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு காவல் துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து தட்டிக் கேட்க காவல் நிலையத்துக்குச் சென்ற இளவரசனின் பெற்றோரை 20 போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று நத்தம் கிராமத்துக்குள் விட்டிருக்கின்றனர்.

வழக்கறிஞர்களையும், மக்களையும் விடுதலை செய்யும் வரை இளவரசனின் உடலை வாங்கப் போவதில்லை என்று இளவரசனின் தந்தை இளங்கோ உறுதியாக கூறியிருக்கிறார். மகனை இழந்த துயரத்திலிருக்கும் இளவரசனின் தாய் கிருஷ்ணவேணி தன்னை 10 போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் இழுத்துச் சென்று தள்ளியதை விவரிக்கிறார். 3 பெண்கள் உட்பட்ட அவர்களது உறவினர்களையும் ஊர் மக்களையும் விடுவிப்பது வரை போராடப் போவதாகவும் அதிகார அடக்குமுறைக்கு பணிந்து விடப் போவதில்லை என்றும் அவர்கள் சொல்கின்றனர்.

போலீஸ் அடக்குமுறையைக் கண்டித்தும் வழக்கறிஞர்களை விடுவிக்கக் கோரியும் நத்தம் காலனியைச் சேர்ந்தமக்கள் நேற்று இரவிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே “திவ்யாவை கடத்த சதியா?” என்று உளவுத் துறை பத்திரிகைகளில் வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறது. தினத்தந்தி, தமிழ் முரசு போன்ற பத்திரிகைகளில், நக்சலைட்டு அபாயத்திலிருந்து திவ்யாவை பாதுகாக்க திவ்யாவுக்கு 80 போலீசார் கொண்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியிருக்கிறது. இளவரசன் மரணத்திற்கு காரணமான பாமக சாதி வெறியர்களை கைது செய்யாத போலீசும் அரசும் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுக்காக நிற்கும் ஜனநாயக, புரட்சிகர சக்திகள் மீது அடக்குமுறையை ஏவிவிடுகிறது.  இந்தப் பிரச்சினையை அடக்குமுறை மூலம் தணித்து விடலாம் என்று அரசும், போலீசும் திட்டமிட்டு செயல்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளவரசன் மரணத்துக்குக் காரணமான ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற வாசகங்களுடன் ஒட்டப் பட்டிருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்த சூளகிரி போலீசார் விவசாயிகள் விடுதலை முன்னணி, மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். (செய்தி : தமிழ் முரசு)

வன்னிய சாதிவெறி உள்ளிட்ட எல்லா ஆதிக்க சாதி வெறியர்களுக்கும், அரசும் போலீசும் எப்படி சேவகம் செய்கின்றன என்பதை இளவரசன் மரணம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுப்போம், போராடுவோம் !

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

 1. இணையத்தில் அரசுக்கு கோரிக்கை கொடுக்க வேண்டும் என்று நான் முன்பே கேட்ருந்தேன்.
  தமிழ்லும் ஆங்கிலத்திலும் , கோரிக்கையுடன், அனுப்புவரின் இமெயில் ஐடி, பெயர் போன்.
  போன்றவற்றை கொடுத்து சரியான நடவடிக்கை எடுக்குமாறு எழுத்தப்பட்ட கடிதம் கிளிக் செய்யப்ப்பட்டவுடன், அனுப்பியவருக்கும், உங்களுக்கும் அரசுக்குக்கும் செல்வதுபோல் எற்பாடு செய்யவும்…

  அதை பேஸ்புக் டிவீட்டரில் பரப்ப சுலபமாக இருக்கும். மக்களின் கருத்தும், அதை எத்தனை பேர் ஏற்கிரார்கள், அனுப்புகிறார்கள் என்பதும் தெரியும்..

  எண்ணிக்கை கூடும்போது அரசு பணிந்தே ஆக வேண்டும்.
  அதற்கு எற்பாடு செய்யுங்கள்.

  நன்றி,
  வினொத்

 2. அண்ணன் வினோத் அவர்களுக்கு ஒரு செய்து. அந்த வசதியை அரசு எற்கனவே ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதை நீங்கள் கூகுள் செய்து பாருங்கள் தெரியும். ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை. கண்மூடுத்தனமாக ஒரு குறுப்பிட்ட எண்ணிக்கையில் வினவோ அல்லது மற்றவர்களோ குறிப்பிடுபவர்களை கய்து செய்ய அரசுக்கே உரிமையில்லை. இங்கு அரசு சிலரை போல் சில்லரை தனமாக நடக்க முடியாது. பெரும்பான்மை ஆதரிக்கும் நபர்தான் பிரதிநிதி என சட்ட புத்தகத்தை எழுதிய கூட்டத்தில் ஒரு நபர் அம்பேத்கர். இன்று பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கும் ஜாதி மறுப்பு திருமணத்தை ஏன் வினவு போன்றோர் எதிர்கின்றீர். ஐம்பது நபர்கள் உள்ள இடத்தில் தான் சார்ந்த சமுதாய மக்களிடம் கதாநாயகனாக சீன் போடும் விதத்தில் தனியே சென்று வம்பிழுப்பது உடல் நலத்திற்கு கேடு. இது தெரிந்தும் செய்கிறார்கள் என்றால் ஜாதி வெறியை தூண்டுவது யார் என்று வினவு பதில் சொல்ல வேன்டும்.

  • @முரளி ஒந்திரியர்

   //..அந்த வசதியை அரசு எற்கனவே ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதை நீங்கள் கூகுள் செய்து பாருங்கள் தெரியும்…//

   அப்படி என்ன வசதி எங்கே கொடுக்கப்பட்டு இருக்கு ? நான் கேட்பது வினவின் அல்லது மற்ற எதவது ஒரு பதிவில் மக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்ய , அதை அரசுக்கு அனுப்ப ஒரு பக்கம்..

   இன்டர்னேட் தணிக்கை செய்யப்படும் சட்டம் தாக்கல் செய்யபட்டபோது அதற்கெதிரக பதியப்பட்ட வலை பக்கம்.
   http://forcechange.com/9591/save-the-internet-from-government-and-corporate-censorship/
   http://www.google.com/intl/en/takeaction/
   http://www.whatistheitu.org/

   எதிர்ப்பை தெரிவிக்க உங்கள் பெயர் , இமெயில் முகவரியை கொடுத்தால் போதும். இதில் தமிழ் நாடு அரசுக்கும் அனுப்புபவருக்கும், வினவுக்கும் ஈமெயில் வருவது போல் அமைத்தால் போதும்..
   இப்படி ஒரு வசதி எங்கே உள்ளது ??????
   ========================================================================================

   //..ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை…//
   அப்ப நடவடிக்கை எடுக்கபடாத விஷயங்களில் எல்லாம் ஆதாரம் இல்லையா? இல்லை ஆதாரம் என்பது கவரில் அல்லது சூட்கேஸில் வைத்து ரொம்ப பெரிசுன்னா சுவிஸ் வங்கி கணக்கில் நேராக செலுத்தபட வேண்டியது என்று பொருளா?
   ========================================================================================
   //கண்மூடுத்தனமாக ஒரு குறுப்பிட்ட எண்ணிக்கையில் வினவோ அல்லது மற்றவர்களோ குறிப்பிடுபவர்களை கய்து செய்ய அரசுக்கே உரிமையில்லை..//

   நான் வினவோ அல்லாது நானொ குறிப்பிடுபவர்களை கைது செய், தூக்கில் போடுன்னு கேட்கவில்லை. நியாயமான விசாரனை நடத்துன்னு தான் கேட்கிறாங்க, இந்த விஷ்யத்தில் அதை யாரும் காதில் போட்டுகொண்ட மாதிரியே தெரியவில்லையே….

   ரயிலில் விழுந்தாராம், ரயில் தலை மட்டும் லேசா சிதைத்து கொண்ணு.. ஓராமா தூக்கி படுக்க வைச்சுட்டு போய் இருக்கு… இப்படி ஒரு ரயில் செய்து இது வரை யாரும் கேட்டதில்ல்லை…

   சில ஆண்டுகளுக்கு முன் ஆட்டோவில் ஆள் ஏற்றி ரயிலில் அடி பட்டபோது ஆட்டோ என்சின் 1 கிலோ மீட்டர் அப்ப்ரம் விழுந்துள்ளது.

   இது எப்படி இந்த குர்லா எக்ஸ்பிரஸ் மட்டும் இவ்வளவு சாதுவாக துல்லியமாக கொன்னு ஓரம படுக்க வைக்கும்னு யாரும் கேட்கவில்லையே. ஏன்?

   தற்கொலை கடிதம் எப்படி 4 நாள் கழித்து அதுவும் மன அழுத்ததுடன் தற்கொலை செய்துகொள்ளூம் யாரும் செய்தி சொல்லாமல் சாக மாட்டர்கள் என்று பலர் கேட்டபின் திடீரென்று வானத்தில் இருந்து குதித்துள்லதே.. அது எப்படி ?

   அதில் பலரால் மனம் வெறுத்து தற்கொலை செய்யுமளவுக்கு போன ஒருவன், தற்கொலைக்கு காரனமானவர்களை கைகாட்டமல் யாரும் காரணம் அல்ல என்று கூறியுளது எப்படி ?

   சம்பவம் நடந்த போது 2 கிலோ மீட்டர் சுற்றளவில் பதிவான மொபைல் எண்களை, அவர்களை தொடர்பு கொண்டவர்கள கணக்கெடுத்தாலே பல கதைகள் வெளிவருமே.. அதேல்லாம் ஏன் செய்யவில்லை?

   எப்படி டஜன் கேள்விகள் கேட்கலாம்…ஆதாரம் இன்றி கைது செய்ய முடியாது சரி… ஆதரம் கிடைக்க சரியாக விசாரிக்க வேண்டாம? ஏன் விசாரிக்வில்லை?

   வீரப்பன் வேட்டையில் கொத்து கொத்தாக கைது செய்து விசாரனை என்ற பெயரில் ஆண்டு கணக்கில் சிறை வைத்தார்களே… அப்போதும் இதே சட்டம் தான் அமலில் இருந்ததா?
   ========================================================================================
   //..இங்கு அரசு சிலரை போல் சில்லரை தனமாக நடக்க முடியாது.//

   அரசு சில்லரை தனமாக நடக்க முடியாது சரி , நடக்கவாவது முடியுமா என்பது தான் கேள்வி…
   அரசு என்றால் ஆள்வது , பெரும்பான்மை மக்களுக்கு எது பல காலத்துக்கும் நன்மையாக இருக்குமோ அதை செய்ய வேண்டும்.. இபோபோது அப்படியா நடக்குது ?========================================================================================
   // பெரும்பான்மை ஆதரிக்கும் நபர்தான் பிரதிநிதி என சட்ட புத்தகத்தை எழுதிய கூட்டத்தில் ஒரு நபர் அம்பேத்கர்…//

   அடேங்கபப்பா உங்களூக்கு தேவை படும் இடத்தில் மட்டும் அம்பேத்கார் நின்று காவல் காக்க வேண்டுமா? அதே அம்பேத்கார் அதே அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவில் இன மத, சாதி, பாலியல் உட்பட வேறு எந்த வகை வேறுபடுகளாலும் யாருக்கும் பாரபட்சம் காட்ட கூடாதுன்னு சொல்லி இருக்கரே.. அதை எப்படி வசதியா மறந்தீங்க?
   ?========================================================================================
   இன்று பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கும் ஜாதி மறுப்பு திருமணத்தை ஏன் வினவு போன்றோர் எதிர்கின்றீர்.
   பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பதாக எப்படி கூறுகின்றீகள் .. நான் கூறுகிறேன்.. பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கின்றனர்,

   கலைஞரின் மனேகரா படத்தில் வரும் வைத்தியர் ” எம தர்மன் புண்ணியத்தில் உங்க நேய் நீடித்து என் பிழைப்பு நீடிக்கனும்னு வேண்டிக்கறென்” என்பது போல்.. சாதி நீடித்து நம் வோட்டு வாங்கி பிழைக்கும் பிழைப்பு நீடிக்கவேண்டும் என்று சொல்லும் சாதி கட்சி தலைவர்கலை தவிர… மக்கள் சாதி மறுப்பு திருமணத்தை எதிர்க்கவில்லை.

   பெரும்பான்மை மக்கள் சிந்திக்கவில்லை என்பது தானே பிரச்சனையே… கண்முன் தலைவர்கள் சுயநலமாக நடந்தாலும் வாக்கு வங்கியாக இருப்பதல் , நம் பிழைப்பு இப்படி இருக்கு, இதை அதே மக்களீடம் தானே எடுத்து செல்ல வெண்டும் ?

   ?========================================================================================
   //ஐம்பது நபர்கள் உள்ள இடத்தில் தான் சார்ந்த சமுதாய மக்களிடம் கதாநாயகனாக சீன் போடும் விதத்தில் தனியே சென்று வம்பிழுப்பது உடல் நலத்திற்கு கேடு. ..//

   இப்ப என்ன கொலை பண்ணிடுவீங்களா? எனக்கு ஏதாவது என்றால் இதயே கூட ஆதரமாக காட்டினால் நீங்களும் களி திங்க உள்ளே போகவேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்..இப்படி யெல்லாம் எழுதாமலும் பேசாலும் இருந்தாலும் சாவு வரத்தான் செய்யும்…

   ஆனால் நமக்கு பின் வரும் தலை முறை நம்மை பார்த்து, கண்முன் கொலை நடந்தும், பிழைப்பு வாததை மட்டும் பார்த்தற்காக நவதுவாரத்திலும் சிரிப்பார்களே.. அப்போது என்ன செய்ய போகிறீர்… ஓந்தியாரே.. வரலாறு முக்கியம் இல்லையா?
   ?========================================================================================
   //. இது தெரிந்தும் செய்கிறார்கள் என்றால் ஜாதி வெறியை தூண்டுவது யார் என்று வினவு பதில் சொல்ல வேன்டும்.//

   பிழைப்பு வாததால் நம் தலைமுறை அனுபவிக்கும் துன்பம் என்னனு தெரிஞ்ச்ம், அதை நீர் ஏன் தொடர்கிறீர் என்பதற்கான காரணத்தை, அது சுய நலமாம் என்றாலும் சரி.. அதை நீர் தான் சொல்லவேண்டும்..

   • அண்ணன் வினோத் கவனிக்க. உங்களுக்கு எப்படி இவ்வளவு மேலோட்டமாக கவனம் போகிறது. சாதி மறுப்பு திருமணங்களை ஆதரித்தவர்கள்தான் பிழைப்பு வாதிகள். தன்னை நடுநிலை வாதி என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்களை ஏன் நீங்கள் ஏற்க வில்லை.
    //இப்ப என்ன கொலை பண்ணிடுவீங்களா? எனக்கு ஏதாவது என்றால் இதயே கூட ஆதரமாக காட்டினால் நீங்களும் களி திங்க உள்ளே போகவேண்டி இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்..இப்படி யெல்லாம் எழுதாமலும் பேசாலும் இருந்தாலும் சாவு வரத்தான் செய்யும்…// சட்டம் பேச நீங்கள் நீதிமன்றம் போக வேண்டும். உங்களுடைய மிரட்டலுக்கு ஓநாய்கள்தான் செவிசாய்க்கும். ஆதாரம்… தலைவர் என சொல்லிக்கொள்ள ஆதாரம் தானே நீங்கள் நடத்தும் களியாட்டம்… ஜாதி மறுப்பெல்லாம் வெறும் நாடகம்(ராமதாஸ் சொல்வதைபோல்).

    அரசிடம் வினவ வேண்டிய நிறைய வினாவை என்னிடம் கேட்க முயற்சி செய்துள்ளீர்கள். சட்டம் நிறைய தெரிந்து வைத்துள்ளீர்களே!. அண்ணன் அரசுக்கு எதிராக பொதுநல வழக்கை தங்கள் பெயரிலேயே தொடுக்க வேண்டும். அதை நான் பத்திரிகைகள் மூலம் அறிய வேண்டும்.

   • நண்பரே அரசியல் சாசனம் 17 -வது பிரிவில் சாதி ,மத பாலியல் ,போன்ற எந்த காரணங்களாலும் யாருக்கும் பாரபட்சம் காட்டக்கூடாதுனு சொல்லிட்டு பின்னாடியே என்சாதி மக்களுக்கு 18 சதவிகித இட ஒதுக்கீடு-னு எழுதினது சுத்த கயவாளித்தனமில்லையா ? வேணுமின்னா பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடுன்னு எழுதியிருந்தால் அவரை சிறந்த தேசியவாதின்னு ஒத்துக்கலாம் , ஏன்னா சுதந்திர காலத்தில் அனைத்து சாதியிலும் கல்வி , சமூக , பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் இருந்தார்கள் . அப்படி எழுதியிருந்தால் இன்னேரம் நாடும் ச் அம அளவில் முன்னேறியிருக்கும் .

 3. அரசின் சலுகை மூலம் வசதி படைக்கப் பெற்றவர்கள். தங்களுடைய ஆதி வாழ்க்கையும் அதே நிலையில் இருப்பவர்களை முன்னேற்ற முன்வருவதில்லை. மாறாக அவர்களை தங்களின் கை பாவைகளாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதன் விளைவுதான் இந்த கலவரங்களுக்கு அடிப்படை. மற்றபடி வினவு முனவுவதுபோல் ஆதிக்க ஜாதி வெறியோ, ஜாதி வக்கிரமோ இல்லை. அவர்கள் உதவுகிறார்கள் என்று வினவு வாதிடுமானால் அம்பேத்கரின் கனிப்பு எப்படி தவரானது(ஐம்பது ஆண்டுகள் மட்டும் நடைமுறை படுத்த பரிந்துரை செய்திருந்தார்.). இதைதான் தான் முதுகின் அழுக்கை அகற்ற தெரியாதவனின் ஆனவ பேச்சு என்பர்.

  • Your comment is awaiting moderation.

   //..அரசின் சலுகை மூலம் வசதி படைக்கப் பெற்றவர்கள். தங்களுடைய ஆதி வாழ்க்கையும் அதே நிலையில் இருப்பவர்களை முன்னேற்ற முன்வருவதில்லை. மாறாக அவர்களை தங்களின் கை பாவைகளாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதன் விளைவுதான் இந்த கலவரங்களுக்கு அடிப்படை. ..//

   அதாவது உங்க வாதப்படி, மாநிலத்தில் கட்சி, எம் எல் ஏக்கள், மத்திய சுகாரதத்துறை அமைச்சராக இருந்து அதன் மூலம் வசதி வாய்பு படைக்க பெற்றவர்கள்..

   ராமதாஸ், அன்புமணிய பற்றி சொல்லனும்னா நேரா சொல்ல வேண்டியது தானே..?

   தங்களுடைய ஆதி வாழ்க்கையும் அதே நிலையில் இருப்பவர்களை முன்னேற்ற முன்வருவதில்லை. மாறாக அவர்களை தங்களின் கை பாவைகளாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதன் விளைவுதான் இந்த கலவரங்களுக்கு அடிப்படை.

   இத தாங்க வினவும் சொல்லுறாங்க.. மற்றும் பலரும் சொல்லுறாஙக்…அதையே நீங்களும் ஏன் ரெண்டு தரவை சொல்லுறீங்க?

   //அம்பேத்கரின் கனிப்பு எப்படி தவரானது(ஐம்பது ஆண்டுகள் மட்டும் நடைமுறை படுத்த பரிந்துரை செய்திருந்தார்.). இதைதான் தான் முதுகின் அழுக்கை அகற்ற தெரியாதவனின் ஆனவ பேச்சு என்பர்…//

   உண்மை தான் அம்பேத்கார் 50 ஆண்டு தான் சொன்னார் அந்த 50 ஆண்டு எப்ப ஆரம்பிக்குதுன்னு சொன்னாரா? அம்பேத்கார் சொன்ன மற்ற எல்லாவற்றியும் கேட்டுடீங்களா? கட்டாய இலவச கல்வி, அனைவருக்கும் கொடுககனூம்னார்,, கொடுத்தீடீங்களா ? அம்பேத்கார், இந்தியா முழுவதையும் கணக்கில் எடுத்து சொன்னார்.

   இன்னம் நல்லா தேடுங்க.. வேறுபாட்டை ஒழிக்க முடியலைன்ன எல்லாரயும் நாடுகடத்திடாம்னு அம்பேத்காரோ, காந்தியோ,.. யாரவது எங்காவது சொல்லி இருப்பங்க , அப்படி இருந்தா அதையும் செய்யலாமா?

   இன்றைய நடைமுறைம்க்கு எது சாத்தியபடுமே அதை தான் செய்யவேண்டும். அதை விடுத்து அம்பேத்காரை , காந்தியை , ஏன் இன்னம் யாரை துணைக்கழைத்தாலும் ஒன்றும் வேலைக்காகது..

 4. சாதீக்கோரங்கள் ஏன் இன்னமும் இங்கே மாறவில்லை என்ற தேடலுக்குரிய எளிமையான கோனார் நோட்ஸ்

  அரசின் சலுகை மூலம் வசதி படைக்கப் பெற்றவர்கள். தங்களுடைய ஆதி வாழ்க்கையும் அதே நிலையில் இருப்பவர்களை முன்னேற்ற முன்வருவதில்லை. மாறாக அவர்களை தங்களின் கை பாவைகளாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

 5. //..அரசின் சலுகை மூலம் வசதி படைக்கப் பெற்றவர்கள். தங்களுடைய ஆதி வாழ்க்கையும் அதே நிலையில் இருப்பவர்களை முன்னேற்ற முன்வருவதில்லை. மாறாக அவர்களை தங்களின் கை பாவைகளாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதன் விளைவுதான் இந்த கலவரங்களுக்கு அடிப்படை. ..//

  அதாவது உங்க வாதப்படி, மாநிலத்தில் கட்சி, எம் எல் ஏக்கள், மத்திய சுகாரதத்துறை அமைச்சராக இருந்து அதன் மூலம் வசதி வாய்பு படைக்க பெற்றவர்கள்..

  ராமதாஸ், அன்புமணிய பற்றி சொல்லனும்னா நேரா சொல்ல வேண்டியது தானே..?

  தங்களுடைய ஆதி வாழ்க்கையும் அதே நிலையில் இருப்பவர்களை முன்னேற்ற முன்வருவதில்லை. மாறாக அவர்களை தங்களின் கை பாவைகளாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதன் விளைவுதான் இந்த கலவரங்களுக்கு அடிப்படை.

  இத தாங்க வினவும் சொல்லுறாங்க.. மற்றும் பலரும் சொல்லுறாஙக்…அதையே நீங்களும் ஏன் ரெண்டு தரவை சொல்லுறீங்க?

  //அம்பேத்கரின் கனிப்பு எப்படி தவரானது(ஐம்பது ஆண்டுகள் மட்டும் நடைமுறை படுத்த பரிந்துரை செய்திருந்தார்.). இதைதான் தான் முதுகின் அழுக்கை அகற்ற தெரியாதவனின் ஆனவ பேச்சு என்பர்…//

  உண்மை தான் அம்பேத்கார் 50 ஆண்டு தான் சொன்னார் அந்த 50 ஆண்டு எப்ப ஆரம்பிக்குதுன்னு சொன்னாரா? அம்பேத்கார் சொன்ன மற்ற எல்லாவற்றியும் கேட்டுடீங்களா? கட்டாய இலவச கல்வி, அனைவருக்கும் கொடுககனூம்னார்,, கொடுத்தீடீங்களா ? அம்பேத்கார், இந்தியா முழுவதையும் கணக்கில் எடுத்து சொன்னார்.

  இன்னம் நல்லா தேடுங்க.. வேறுபாட்டை ஒழிக்க முடியலைன்ன எல்லாரயும் நாடுகடத்திடாம்னு அம்பேத்காரோ, காந்தியோ,.. யாரவது எங்காவது சொல்லி இருப்பங்க , அப்படி இருந்தா அதையும் செய்யலாமா?

  இன்றைய நடைமுறைம்க்கு எது சாத்தியபடுமே அதை தான் செய்யவேண்டும். அதை விடுத்து அம்பேத்காரை , காந்தியை , ஏன் இன்னம் யாரை துணைக்கழைத்தாலும் ஒன்றும் வேலைக்காகது..

 6. வினவு மாதிரியும், பு.ஜ.க. மாதிரியும் அரசாங்கத்துக்கு வெற வேலையில்லையா என்ன??? இன்னும் ஒரு வருசத்துல அந்த பொண்ணு வேற ஒருத்தன கல்யாணம் செய்தாலும், உனக்கு செய்தி கிடைத்தா ஜாலித்தான்!!!! உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்,தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கனும், அது தான் சரி…… உன் வீட்டு பொண்ண ஒரு வேலையில்லா வெட்டி —–பய இழுத்துகிட்டு ஓடினா சும்மா இருப்பியா???? இவ்வளவு எழுதிரியே சும்மா இருந்த அந்த பயலுக்கு வினவு ஆபிஸ்லேயே ஒரு வேலை போட்டு குடுத்க வேண்டியதுதானே?????

 7. இனிமேலாவது காலனி எதுலேயும் கலக்காம இருக்கட்டும்… சிறு மீனை பெரு மீன் தின்னுவது இயற்கை தான்… படிக்காதவர்களுக்கு படித்தவர்கள் எடுத்து சொன்னால் நல்லது…

 8. பிணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் வினவு கூடாரத்திற்கு யார் கூற்றும் ஏறப்போவதில்லை .அன்புமணியையும் இராமதாசையும் வசவு செய்வது என்பது, இந்த சாதிய சமூகத்தில் அவர்களுக்கு ஆதரவு நிலையைத்தான் ஏற்படுத்தும்.எல்லோர் மனதலும் சாதி இருப்பதால்தான் இருகூராக பிரிந்திரிக்கிறோம்.

 9. //அதாவது உங்க வாதப்படி, மாநிலத்தில் கட்சி, எம் எல் ஏக்கள், மத்திய சுகாரதத்துறை அமைச்சராக இருந்து அதன் மூலம் வசதி வாய்பு படைக்க பெற்றவர்கள்..
  ராமதாஸ், அன்புமணிய பற்றி சொல்லனும்னா நேரா சொல்ல வேண்டியது தானே..?//
  அண்ணன் வாயில் வருவதெல்லாம் வார்த்தை என எண்ணிக்கொண்டு வாந்தியெடுப்பது போல் பேச கூடாது.

  சட்டன்ற உறுப்பினர் அரசின் சலுகைக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர் என்ற உங்கள் பார்வையை மாற்ற வேண்டும். ஒரு குறுப்பிட்ட சமுதாயத்தில் சலுகையில் முன்னேறியவர்களை பற்றி கூறியிருக்கிறேன்.

  தனது ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்று தந்துள்ளார் ராமதாஸ். உங்களால் ஆனது என்ன?. அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீட்டை மறுத்தவர்கள் தானே நீங்கள்.

  மற்ற சமுதாய பெண்கள் நமது இளைஞர்களுடன் படுக்க வேண்டும் என மேடை போட்டு பேசினால், வேடிக்கை மட்டும் பார்ப்பவர் யாரும் இல்லை. கௌரவம் கருதி சும்மயிருந்த்தது தப்பாய் போச்சு. சட்டம் உங்களை போன்றோரிடம் பேசும் பேச்சை இனி நீங்கள் கேட்கத்தானே போகிறீர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க