அணுகுண்டு வெடிப்பினும் கரப்பான்கள் அழிவதில்லை! | கவிதை

நாங்கள் மண்டியிட மாட்டோம்! நாங்கள் சரணடைய மாட்டோம்! நாங்கள் பின்வாங்க மாட்டோம்! அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகும் வாழும் கரப்பான்களைப் போல நாங்கள் அழியவும் மாட்டோம்!

டியடிகள் விழுந்தன
கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன
தண்ணீர் பீரங்கிகள் பாய்ந்தன
பெல்லட் குண்டுகள் உடல்களை துளைத்தன
எனினும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்!

மண்டைகள் உடைக்கப்பட்டன
சதைகள் கிழிக்கப்பட்டன
எலும்புகள் நொறுக்கப்பட்டன
பெண்கள் அவமதிக்கப்பட்டனர்…
ஆயினும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்!

ஏனென்றால் அந்நாளில்
சாதிகள் தோற்றன!
மதங்கள் மறைந்தன!
எல்லைகள் மங்கிப்போயின!
ஆதலால் நாங்கள் பின்வாங்க மாட்டோம்!

உணவு எங்கிருந்தோ வந்தது
மருந்து அறிமுகமில்லாதவர்களிடமிருந்து வந்தது
ஆனால் அடக்குமுறை மட்டும் சொந்த அரசிடமிருந்து வந்தது!

தடியடிகள் எங்கள் உடலை காயப்படுத்தலாம்!
தோட்டாக்கள் எங்கள் சதையை துளைக்கலாம்!
கண்ணீர் புகை எங்கள் கண்களை மூடலாம்!
ஆனால் இவை எவையாலும் எங்கள் கனவுகளை தகர்க்க முடியாது!

எனவே
நாங்கள் மண்டியிட மாட்டோம்!
நாங்கள் சரணடைய மாட்டோம்!
நாங்கள் பின்வாங்க மாட்டோம்!
அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகும் வாழும் கரப்பான்களைப் போல
நாங்கள் அழியவும் மாட்டோம்!
நாங்கள் பின்வாங்கவும் மாட்டோம்!


ஆண்ட்ரே

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க