என் பார்வையில் வினவு – 1 : குமரன்
ஆறாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நாட்டில் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ரவுடி, மக்கள் பணத்தை தின்று தீர்ப்பவன் என எல்லோரும் கோடிக்கணக்கில் செலவழித்து பிறந்தநாள் கொண்டாடும்பொழுது, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் ஒளியில் உலக விசயங்களை சமரசமில்லாமல் எழுதும் வினவு-க்கு பிறந்த நாள் தாராளமாய் கொண்டாடலாம்.
பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்குப் பிறகு பல பதிவர்கள் எழுதியதை படித்த பொழுது, பெரும்பாலும் மொக்கையாக இருந்தது. பொறுத்து, பொறுத்து ஒரு சமயத்தில் வெறுத்துப் போய் தான் “வலையுலகமும் நொந்தகுமாரனும்” என்ற பெயரில் வலைத் தளமே தொடங்கினேன். பல மொக்கைப் பதிவர்களை, பதிவுகளை கலாய்த்தும் பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டிருந்தேன். எழுதிப் பழக்கமில்லையென்றாலும், நானே சொந்தமாய் சமூக விசயங்கள் குறித்து எழுதத் துவங்கினேன்.
இந்த நாட்களில் தான் ‘வினவு’ அறிமுகமானது. துவக்க கட்டுரைகளைப் படித்த பொழுது, வலைத்தளம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேலை நிலைமைகள் என்னதான் வாட்டியெடுத்தாலும், வினவு தளத்தை தவறாமல் வாசித்து வருகிறேன். பின்னூட்டங்களும் இடுகிறேன். என்ன ஒரு வருத்தம்! நேரமின்மையால் விவாதங்களில் பங்கு கொள்ள முடியவில்லை.
என் வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். என்னோட விக்கிபீடியா வினவு தான். ஏதாவது சந்தேகம் வந்தால், வினவில் தான் தேடிப்படிக்கிறேன். ஒருவேளை இல்லையென்றால் தான் வேறு தளத்திற்கு நகர்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வினவின் குழுவில் சில புதியவர்கள் இணைந்துள்ளதை கவனிக்கிறேன். பருண்மையாகவும், ரசனையாகவும் எழுதுகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
புதியவர்களை மனதில் கொண்டு, கேள்வி பதில், மார்க்சிய லெனினிய கல்வி குறித்தும் எழுதுங்கள். முன்பெல்லாம் சனிக்கிழமைகளில் கவிதைகள் வெளியிடுவீர்கள். பிறகு நிறுத்திவிட்டீர்கள். அதை மீண்டும் துவங்கி, இளம் கவிஞர்களை எழுத உற்சாகப்படுத்தவேண்டும். முக்கிய கட்டுரைகளுக்கு கார்ட்டூன் இணைக்க வேண்டும். அதை முகப்பில் தெரியும் படி செய்யலாம்.
ம.க.இ.க வெளியீடான ஒலிப்பேழையில் நிறைய பாடல்களை கேட்டிருக்கிறேன். அதிலிருந்து பெற்ற உணர்வுகள் அதிகம். புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த அதில் உள்ள முக்கிய பாடல்களை மாதம் இரண்டு பாடல்கள் என இணைக்கலாம்.
தோழர் மருதையன் எழுதிய கட்டுரைகளை அவ்வப்பொழுது இணைப்பது போல அவருடைய உரைகளை அவ்வப்பொழுது இணைக்கலாம்.
பல பத்திரிக்கைகள் இளைஞர் மலர், சிறுவர் மலர், பெண்கள் மலர், அறிவியல் மலர் என நடத்துவது போல வினவும் பல்வேறு பிரிவினருக்காக கவனம் கொண்டு கட்டுரைகள் வெளியிடவேண்டும். அதற்காக வினவு குழுவே கட்டுரைகள் எழுதவேண்டும் என்பதில்லை. இணையத்தில் பல்வேறு துறை சார்ந்த நபர்கள் நிறைய எழுதுகிறார்கள். அதிலிருந்து தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
வருங்காலத்தில் வினவு குழுவில் நானும் இணைவதற்காகத் தான் தப்போ, சரியோ, எத்தனை சொந்த வேலைகள் இருந்தாலும், சமூக ரீதியான விசயங்களை வாரம் ஒரு கட்டுரை என்ற அடிப்படையில் எழுதி வருகிறேன்.
இப்பொழுது கூட சின்ன சின்ன அசைன்மென்ட் ஏதாவது இருந்தால் தாருங்கள். சந்தோசமாய் செய்கிறேன்.
சமூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.
மீண்டும் வாழ்த்துக்களுடன்,
(சந்தோஷ) குமரன்
http://nondhakumar.blogspot.in/
வாழ்த்து தெரிவிப்பதற்காக தான் எழுதினேன். அதை தனியாகவே வெளியிட்டிருக்கிறீர்கள். வினவைப் பற்றி பலர் எழுதப்போகும் கட்டுரைகளை படிக்க ஆவலாக இருக்கிறேன். நன்றி.
குமரன், நீங்கள் குறிப்பிட்டது போல் எவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் தினமும் வினவுக்கு வருகிறேன்… வாழ்த்துக்கள் வினவு..
Dear Vinavu
Please accept my warmest congratulations ! I am a vivid reader of all leading political and democratic blogs and websites around the world .Due to my inability to write Tamil I am writing this in English . I can read Tamil but cannot write without errors due to practical issues . so i am sorry for that.
I have never seen so depth and wealth of knowledge in Tamil websites like this .
Vinavu is truly in International class blog for the most advanced readers and knowledge hunters . The following is the best i can summarize .
1, Honest to the core and no compromise !
2, Truly in depth analysis of the current affairs and the political,cultural,economic affairs past and present .
3, Truly democratic by allowing all the comments .
4, Leading light for the democratic loving people .
5, A birds eye view of all the subjects with neutral view.
I have a dream to contribute to Vinavu by altleast doing tiny things. I will try my best to full fill my dream.
Congrats for the six year.
Let the light reach to all corners.
regards
Raghavan
Dear Vinavu,
Many more happy returns of the day,….
However I want to place following …
1.Please do not put the blame on Parpana parpana …. for things which are not justifiable by you.
2.Please do not think that The so called communism will heal all the problems,..
3.Please educate the common man by street plays about the negative effects of ALCOHOL…
4.Pl enact street plays for eliminating casteism in TN (Athough very tough in TN in present scenario!)
5.Please eduacte people about the slow poison of family values by the TV and cinema.
6.Please do see SAVUKKU.NET ; He runs a reasonably well designed and very decent web portal than vinavu.Pl do enact the same values in your articles…
Once again birthday wishes,..
Punjab Ravi
//6.Please do see SAVUKKU.NET ; He runs a reasonably well designed and very decent web portal than vinavu.Pl do enact the same values in your articles…//
Like an ADMK supporter????!!!!
நிச்சயம் குறிப்பிட்ட விசயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள எப்போதும் வினவு தளத்தை வந்து பார்த்து விட்டு கூகுள் தளத்தில் தேடுகின்றேன். பெரும்பாலும் நான் எதிர்பார்க்கும் கருத்துக்கள் இங்கேயே கிடைத்து விடும்.
இந்த தளத்தில் பொதுவாக, எந்த ஒரு விஷயத்தையும் ஜாதிய சாயம் பூசி ஒரு பரபரப்பை எற்படுத்துவதை தவிர வேறு எதுவும் இல்லை.