கடந்த 16.08.2013 அன்று வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணிக்கு அகமதாபாத் நகரில் அமைந்துள்ள அம்தவாத் நீ குபா என்ற கலைக் காட்சியகம் மீது விசுவ இந்து பரிஷத்தைச் (விஎச்பி) சேர்ந்த குண்டர்கள் 20 பேர் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த சுவர்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 30 ஓவியங்களை கீழே பிடித்து இழுத்து உடைத்ததால் அவை அனைத்தும் சேதமடைந்தன. அவற்றை வரைந்தவர்களில் 11 ஓவியர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள், ஆறு பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஓவியக் கண்காட்சியின் அமைப்பாளர் ரவீந்திர மராடியா புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வன்முறையில் ஈடுபட்ட இந்துமத வெறியர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஓவியர்களின் கூட்டு முயற்சியால் கடந்த ஆகஸ்டு 13 முதல் இங்கு நடைபெற்று வரும் இக்கண்காட்சியினை முதலில் இருந்தே குஜராத்தின் இந்து மதவெறி அமைப்புகள் எதிர்த்து வந்தன. குறிப்பாக பஜ்ரங் தள் மற்றும் விஎச்பி வானரங்கள் இணைந்து ஓவிய கண்காட்சியை சீர்குலைக்க முடிவு செய்து, அதனடிப்படையில் இந்த சூறையாடலை நிகழ்த்தியுள்ளனர். சேதமடைந்த ஓவியங்களின் மதிப்பு சுமார் ரூ 10 லட்சம் இருக்கும் எனத் தெரிகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 20) அதிகாலை 2.30 மணிக்கு விஎச்பியின் நகர இணைச் செயலாளர் ஜுவாலித் மேத்தா உள்ளிட்ட 9 பேரை ஓவிய காட்சியகத்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக காவல்துறை கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அவர்களது கைதை கண்டித்துள்ள விசுவ இந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் பிரவீண் தொக்காடியா, ”எல்லைப்புறத்தில் நமது வீர்ர்களை பாகிஸ்தான் கொன்று குவித்துக் கொண்டிருக்கையில் இங்கே நடைபெறும் பாகிஸ்தானிய ஓவியர்களது கண்காட்சியை எதிர்ப்பது குற்றமா? வாக்கு வங்கி அரசியலுக்காக எங்களது தொண்டர்களை கைது செய்துள்ளார்கள்” எனச் சொல்லி, மறைமுகமாக குஜராத் முதல்வர் மோடியை சாடியிருக்கிறார்.
இந்த சாடலை பாஜக-வின் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு ட்விட்டரில் போட்டும் விட்டிருக்கிறார். விஎச்பி யின் செயலாளர் ரஞ்சோத் பர்வத், ”நாங்கள் கைதையெல்லாம் எதிர்க்கவில்லை. இந்துக்களின் பண்டிகையான ரக்ஷா பந்தனை கொண்டாட விடாமல் கைது செய்து விட்டார்களே!” என்று தனது கவலையை வெளியிட்டிருந்தார்.
மேலும், நமது வீரர்கள் காசுமீரத்திலும், எல்லைப்புறங்களிலும் பாகிஸ்தானிய படைகளால் சுட்டுக் கொல்லப்படும்போது இதெல்லாம் தேவையா என்றும், பாகிஸ்தானிய ஓவியர்களின் ஓவியங்களை கண்காட்சிக்கு வைக்கவும், விற்பனை செய்யவும் ஏன் அனுமதிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானில் ரசிகர்களின் பெருத்த ஆதரவோடு இந்தி திரைப்படமான சென்னை எக்ஸ்பிரஸ் ஓடுவதும், இந்துமத வெறியர்கள் இங்கு பாகிஸ்தானிய ஓவியர்களின் படைப்புகளை நுழைய விடாமல் தடுப்பதும் இந்துமத வெறியர்களின் பாசிச நடத்தைக்கு நல்ல சான்று.
கண்காட்சி நடக்கும் அம்தவாத் நீ குபா கலையரங்கு, புகழ்பெற்ற ஓவியர் எம்.எஃப். உசேன் மற்றும் கட்டிடக்கலை நிபுணர் பிவி தோஷி ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவானது. உசேனுக்கு நிகராக பாகிஸ்தானில் மதிக்கப்படும் மன்சூர் ராஹி என்ற ஓவியரின் படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கண்காட்சி மீதான தாக்குதலால் கவலையடைந்தாலும், இதுபோன்ற சம்பவங்களெல்லாம் இரு நாடுகளுக்கிடையிலான கலைஞர்களது பகிர்தலை தடை செய்ய முடியாது என ராஹி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்னொருவர் இர்ஃபான் குல் தாஹ்ரி, இந்த பாகிஸ்தான் ஓவியரது படைப்புகள் தற்போது அழிக்கப்பட்டுள்ளன. இது போன்ற தாக்குதல்கள் முன்னரும் நடந்துள்ளன, வருங்காலத்திலும் நடக்கும் என்றும், என்னைப் போலவே அனைத்து ஓவியர்களும் கலாச்சார பரிமாற்றத்துக்காக இக்கண்காட்சியில் இதற்கு பின்னரும் கலந்து கொள்வோம் என்றும், இதுவெல்லாம் சிறு பிரச்சினை தான் என்றும் கூறியுள்ளார். மதவெறி அமைப்புகளை எதிர்த்து போராடுவதில் இரு நாட்டு கலைஞர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவர்களால் இப்படி பேச முடிகிறது.
கண்காட்சி அமைப்பாளரான ரவீந்திர மராடியா சம்பவம் பற்றி குறிப்பிடுகையில், ”சில பேர் வந்து கண்காட்சியை சூறையாடினார்கள், அவற்றில் இந்திய ஓவியர்களின் ஓவியங்களும் கூட இருந்தன, அவர்கள் பஜ்ரங் தள் ஆ அல்லது விஎச்பியா எனத் தெரியாது, ஆனால் அவர்கள் சமூகவிரோத சக்திகள்” என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான், இந்துமதவெறியர்கள் இப்படித்தான் இயங்க முடியும் என்பதை அவர்களே நிரூபித்து இருக்கிறார்கள்.
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை மாலை நகர போலீசு கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விஎச்பி அமைப்பினர், தங்களது அமைப்பினரை சட்டவிரோதமாக கைது செய்திருப்பதாக கோஷமிட்டுக் கொண்டே அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தள்ளுமுள்ளு நிகழவே சிறிய அளவில் தடியடிக்கு உத்திரவிடப்பட்டது. 5 விஎச்பி அமைப்பினர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலையே காலையில் கைதான 9 பேரும் பிணையில் வெளி வந்து விட்டனர். இந்துமத வெறியின் கோட்டையான குஜராத்தில் அப்படித்தான் நடக்கும். இரு நாட்டு நட்புறவை வளர்ப்பதற்காக இரு நாட்டின் கலைஞர்களும் இணைந்து நடத்தும் ஒரு ஓவியக் கண்காட்சிக்கு போதிய போலீசு பாதுகாப்பை வழங்காமல் வேண்டுமென்றே வேடிக்கை பார்த்திருக்கிறது மோடியின் குஜராத் மாநில அரசு. கூடவே ரவுடித்தனம் செய்த இந்து மதவெறிக் காலிகளை தண்டிப்பதாக நாடகமும் ஆடுகிறது.
பாகிஸ்தான் மற்றும் இசுலாமியர் மீதான வெறுப்பை அடிப்படையாக வைத்து இந்துமதவெறியையும், தேசபக்தியையும் கிளப்ப சங்க பரிவாரங்கள் எப்போதும் முயன்று வருகின்றன. ஆகவே நரேந்திர மோடியின் குஜராத்திலேயே இதுதான் கதி என்றால் அவர் பிரதமரானால் என்ன நடக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.
எங்கயோ அகமதாபாத்ல நடந்தத போட்டிருக்கீங்க. சரி! இங்க சென்னையில நடக்கவிருந்த ஒரு கண்காட்சிய ஒரு முஸ்லீம் அமைப்பு அடித்து நொறுக்கி நடக்க விடாம செஞ்சுச்சே, அப்ப அங்க வெளியூர் போயிருந்தீங்களா?
ஓ! சென்னையில நடந்த விசயத்துக்கு பதிலாத்தான், இந்து மத குரங்குகள் அங்கே ஆட்டம் போடுகிறதா? இது தெரியாம போச்சே!
வினவு, பேசாமல் நீ பாகிஸ்தான் சென்று விடலாம். முஸ்லிம் மக்களுக்கு நல்ல சப்போர்ட் பண்ணுர. இங்கே உள்ள பெறுன்பான்மையான மக்களை உனக்கபிடிக்க வில்லை. ஒரு உண்மை தெரியுமா? இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் விளையாடினால் கூட, பாகிஸ்தான் தான் வெல்ல வேண்டுமென்று இங்குள்ள முஸ்லிம்கள் ஆசைபடுகிறார்கள். பாகிஸ்தானில் இந்த படம் நன்கு ஓடினால் அதை மட்டும் சொல்லு. அதில் ஏன் இந்துக்களை விமர்சிக்கிற
பாகிச்தான் ஜெயிக்கனும்னு நெஙிரான்கலா உன் அரிவ கன்டுநான் வியக்கென்
ஏன்? எல்லாரும் பாகிஸ்தான் சென்று விட்டால் மிச்ச மீதி இந்தியாவையும் விக்கிறதுக்கு எளிதா இருக்கும்னா? சரி…இந்தியா ஜெயிக்கணும்னு நினைக்கிற கோடானுகோடி மக்கள் வாழ்க்கை ஏன் நாசமாப்போகுது? நீங்கள் எல்லாரும் இந்தியாதான்னு ஏமாத்துறதுனாலதான?
நீர் சொல்வது முற்றிலும் தவறான் ஒன்னு. எந்த ஒரு இந்திய முஸ்லீமும் அப்படி நினைப்பது இல்லை. இன்னும் சொல்ல போனால் உன்னைவிட இந்தியாவிற்க்கு சப்போர்ட் செய்பவன் இந்திய முஸ்லீம் தான்.
வானர சேனை..
வாலருந்த சேனை…
தமிழன் 1,50,000 பேர் தலையை சிங்களவன் சீவியபோது..சூ……..யும்….வ….யும் பொத்திக்கொண்டு இருஞ்த பொதி முண்டங்கள்……
இவனுங்க எல்லார் கையிலும் ஒரு துப்பாக்கிய கொடுத்து போங்கடா எல்லைக்கு ,,,அங்க பாக்கிஸ்தான் காரனை சுட்டு உங்க தேச பகதிய காட்டுன்னு சொல்லி பாருங்க ..ஒரு பய போ மாட்டான்
முதல்ல நீ போவியா………….
கீழே உள்ள செய்தியை படியுங்கள்.
சகோதரனாக நினைத்து ராக்கி கட்ட வந்த ஸாகிதாவை அடித்து விரட்டுவதா? அல்லது ராக்கியைக் கட்டிக்கொண்ட பங்கஜ் பாப்னாவின் கையை வெட்டுவதா? தேசபக்தியை மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் வீரர்களே என்ன செய்யலாம்?
Harda: Pakistani national Shahida Khaleel’s happiness knew no bounds when she finally got an opportunity to travel to India from Karachi to tie rakhi to a Hindu man in Harda, whom she considers her brother.
After five years of efforts, the 45-year-old Shahida finally got a visa to visit India, and came to Harda on Tuesday to tie rakhi to Pankaj Bafna, who is her cousin’s friend.
“I had been trying to obtain a visa to India for the past five years. Finally, I got the visa three days back,” Shahida told PTI on Wednesday. She said her family had moved to Pakistan about thirty years back, though her uncle had settled in Harda.
“During my childhood I would visit Harda. However, I could not come to India for a long time. Pankaj, who is my cousin Dilip Khan’s friend, had been inviting me to celebrate Raksha Bandhan. This year I finally got a chance and tied him a rakhi,” she said. 46-year-old Pankaj, who is as happy on Shahida’s coming, said besides tying rakhi, Shahida gifted him an idol of Lord Ganesh.
Pankaj’s mother Indubala said that the love between her son and Shahida was an example for everyone. “I pray that relations between India and Pakistan also remain cordial always,” she said.
இந்திய வீரர்களின் தலையை வேட்டிச்செல்கிறார்கள் , நம் நாட்டுக்குள்ளே புகுந்து நம் வீரர்களை சுட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் நாட்டு ஓவியத்தை உடைத்ததால் வினவுக்கு கோபம் வந்து விட்டதோ,
யார் வீரர்கள்? அமைதியாக மக்கள் போராடினாலும் கையில் ஆயுதம் கொண்டு மிரட்டி நடுங்க வைப்பதும், சொந்த மக்களை கொல்பவர்களும் வீரர்களா. அதைக் கண்டு உங்களுக்கு கோபம் வருவதில்லையா?
The Jawans on the LOC are warriors and they are there to fight for India and to protect our borders.If you dont want to live in India,you can surrender your passport and go wherever you want.
They dont have to waste time and effort protecting imbeciles like you.
I have no mercy on the Kashmiris who eat under India and end up killing their own brethren.
நம் இந்திய எல்லையில் நடப்பது உலக அரசியலின் சூழ்ச்சியால் நடக்கும் சந்தர்ப்பவாத சண்டை. இதற்கும் பாக்கிஸ்தான் வெகுஜன மக்களுக்கும் எவ்வித சம்மதமுமில்லை. நான் மத விசயங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருந்தாலும், ஒரு இந்து என்கிற அடையாளத்தில்தான் காணப்படுகிறேன். நான் பணிபுரியும் அலுவலகத்தில் பெரும்பான்மையானவர்கள் பாகிஸ்தானியர்கள். அதற்கடுத்து தமிழர்கள்.. இதில் அதிகமானோர் தமிழ் முஸ்லிம்கள். ஆளாலும் எனக்கு மொழி பிரச்சினை இருந்தம்கூட என்னுடன் நல்லவிதமாகத்தான் பாகிஸ்தானியர்கள் நடந்துக் கொள்கிறார்கள். இன்னும் இவர்கள் நமது இந்தியப் பொருட்களைத்தான் விரும்பி வாங்குகிறார்கள். அப்படியிருந்தும் கூட என்னுடன் தங்கியிருக்கும் தமிழ் முஸ்லிம் நண்பர்கள் இந்த பாகிஸ்தானியர்களிடமிருந்து சற்று விலகியே இருக்கிறார்கள். ஏனெனில், நாட்டில் எந்த பிரச்சினை எழுந்தாலும் அதை பாகிஸ்தானுடன் சம்மந்தப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுடன் நமது தமிழ் முஸ்லிம்களுடன் இணைத்து கதைவிடும் இந்திய மீடியாக்களின் பாதிப்புதான் காரணம். இது குறித்து ஒரு முஸ்லிம் நண்பர் தனக்கு ஏற்பட்ட ஒரு கொடுமையான அனுபவத்தை என்னுடன் பகிர்ந்தபோது என் உள்ளம் பதறியது. அவர் விரும்பவில்லை என்பதினால், அவருக்கு நிகழ்ந்த அந்த சோதனையான தருணத்தை இங்கு என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
நீங்கள் சொல்லுவது 100% உண்மையே.
Then why do we see vishwaroopam portets,pazhani baba,Al Umma etc etc.
And dont teach people about Pakistanis,we identify them from the actions of their government and the success of their Army.
கரி, உன்போன்ற முதுகெலும்பற்ற ஆனால் நாவில் விஷம் நிரம்பிய மனித உருவினர்தான் தான் இந்திய ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தானவர்கள்.
முதுகெலும்பு அற்றவர்கள் யாரெனில் எத்தனையோ “மக்கள் பிரச்னை” களை பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம் கழிவறைக்கு சென்று உட்கார்ந்து கொண்டு முஸ்லிம்கள் என்றால் மற்றும் போலி தேசபக்த அவதாரம் எடுத்துக்கொண்டு கருத்து கூறும் கயவர்கள்.
This is a real problem as much as other problems.i am not interested in impressing you all the time and I have enough backbone to have independent views unlike you.
//முதுகெலும்பு அற்றவர்கள் யாரெனில் எத்தனையோ “மக்கள் பிரச்னை” களை பற்றி விவாதிக்கப்படும் போதெல்லாம் கழிவறைக்கு சென்று உட்கார்ந்து கொண்டு முஸ்லிம்கள் என்றால் மற்றும் போலி தேசபக்த அவதாரம் எடுத்துக்கொண்டு கருத்து கூறும் கயவர்கள்.//
கரியை சொல் நெருப்பில் வாட்டினாலும் உறைக்காது. ஏனேனில் அது அல்ரெடி கரிதான்.
Try to argue seriously on facts,dont do timepass.