Friday, November 22, 2019
முகப்பு சமூகம் சாதி – மதம் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !

-

ராட்டிய மாநிலத்தை சேர்ந்த பகுத்தறிவாளரும், மூட நம்பிக்கை எதிர்ப்பாளருமான நரேந்திர தபோல்கர் செவ்வாய்க் கிழமை காலை 7.20 க்கு புனே நகரத்தில் ஓம்கரேஸ்வரர் மேம்பாலத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலையின் பின்பகுதியில் இரு குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே தபோல்கர் மரணமடைந்தார்.

தபோல்கர்
நரேந்திர தபோல்கர்

மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி, தொடர்ந்து நடத்தி வந்த தபோல்கர் அந்த இயக்கத்தின் மூலமாக பல போலி சாமியார்களை, பாபாக்களை, மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி உள்ளார். தற்போது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சணல் இடமருகுவின் உற்ற நண்பரும் கூட.

மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர். சமூகத்தை அறிவியல் மனப்பான்மையுடன் வளர்ப்பதில் அவரது நிர்மூலன் சமிதி முன்னணியில் நின்றது. சிவசேனா, பிஜேபி போன்ற கட்சிகள் வீறு கொண்டு எழத் துவங்கிய 90-களில், மராட்டிய மாநிலத்திலேயே இந்து மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பேசுவது அப்படி ஒன்றும் எளிதல்ல. தபோல்கர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் மன்றத்தில் சாமியார்களை, மோசடிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார்.

தற்போது மராட்டிய மாநில அரசு, மூடநம்பிக்கைகள் மற்றும் போலி சாமியார்களுக்கெதிராக ஒரு சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய உள்ளது. அந்த சட்டத்தை அறிமுகம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தை மாநில அரசுக்கு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு போராட்டங்களை இவர் தொடரந்து நடத்தி வந்தார். சாதனா என்ற முற்போக்கு பத்திரிகையையும் நடத்தி வந்தார். சட்டம் வரும் என்ற நம்பிக்கையை முதல்வர் குலைத்து வருவதாக சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார்.

தெய்வங்களுக்கு காணிக்கை என்ற பெயரில் செல்வத்தை நாசமாக்குவது மற்றும் தெய்வங்களை நீரில் கரைத்து பொதுப் பயன்பாட்டிற்கான தண்ணீரை மாசுபடுத்துவது போன்றவற்றுக்கு எதிராகவும் பல இயக்கங்களை எடுத்திருக்கிறார். எனவே இவருக்கு எதிரிகள் போலி சாமியார்கள் மட்டுமின்றி இந்துமத வெறியர்களும்தான்.

நரேந்திரசார்யாஜி மகாராஜ்
தபோல்கருக்கு எதிரிகள் போலி சாமியார்கள் மட்டுமின்றி இந்துமத வெறியர்களும்தான். (மூட நம்பிக்கை எதிர்ப்பு மசோதா தொடர்பாக டாக்டர் நரேந்திர தபோல்கரை எதிர்த்து எச்சரிக்கை விடுத்திருந்த சங்கராச்சாரியார் நரேந்திராச்சார்யாஜி மகராஜ்)

மேலும் நாசிக் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் ஆதிக்க சாதி பஞ்சாயத்துக்களின் அநியாய தீர்ப்புகளையும், அவர்கள் நடத்தும் கௌரவக் கொலைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தார். அந்த வகையில் சாதி வெறியர்களின் கோபத்துக்கும் தொடர்ந்து ஆளாகி வந்தார். பரிவர்த்தன் என்ற பெயரில் போதை அடிமைகளை மீட்டு எடுக்கும் மையம் ஒன்றை தனது சொந்த ஊரான சதாராவில் நடத்தி வருகிறார். சதாரா நகரின் மக்கள் மத்தியில் தபோல்கருக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

சதாராவில் இன்று மக்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர். அவரது வீட்டுக்கு வந்த மக்கள் மிகுந்த கோபத்துடன் ஆங்காங்கு சேர்ந்து மௌன ஊர்வலம் செல்கின்றனர். அறுபது வயதை தாண்டிய பிறகும் ஓய்வெடுக்காது, ஏதேனும் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவராக உட்கார்ந்து கொண்டு சம்பாதிப்பதை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல், சமூகத்தின் நல்வாழ்விற்காக, சமூகத்தின் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்த தபோல்கருக்கு நாம் அஞ்சலி செலுத்துவது என்பது, அவர் போராடிய பாதையில் தொடர்ந்து போராடுவதிலும், அதில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறுவதிலும் தான் இருக்கிறது.

இவரை கொல்வதற்கு பார்ப்பனிய இந்துமதவெறியர்களும், ஆதிக்க சாதிவெறியர்களும்தான் காரணம் என்பதை உலகமே அறியும். இந்து மத வெறியர்களை முறியடிப்பதன் மூலம்தான் உழைக்கும் மக்கள் நிம்மதியையும், விடுதலையையும், மகிழ்ச்சியையும் பெற முடியும்.

 1. தபோல்கரை சந்தித்ததில்லை. அவர் யாரென்றும் தெரியாது. தபோல்கரோடு எனக்கு இருக்கும் உறவு பகுத்தறிவு ஒன்றுதான். அந்த உறவுதான் இன்று காலை இந்து நாளேட்டில் செய்தியைப் படித்த போது என்னை கலங்க வைத்தது. பிற்போக்குவாதிகளின் கொலை வெறி அவர்களை சவக் குழிக்குள் நிச்சயம் அனுப்பும்.

  • //பிற்போக்குவாதிகளின் கொலை வெறி அவர்களை சவக் குழிக்குள் நிச்சயம் அனுப்பும்//
   ஐயா, இதற்கு என்ன rationale?

   பகுத்தறிவுவாதியான நீங்கள் விளக்கவும்…

   • நோக்கம் திரு.தபோல்கரை இழிவுபடுத்துவதில்லை…அவர் சமூகப்போராளி…

    என் கேள்வி ஏன் பகுத்தறிவிண்மைநிலவக்கூடும் என்பதுக்கான தேடல் சார்ந்த்து..

   • //பிற்போக்குவாதிகளின் கொலை வெறி அவர்களை சவக் குழிக்குள் நிச்சயம் அனுப்பும்//

    இது சாபமல்ல. பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல நியாயத்தையும் ஜனநாயகத்தையும் விரும்புவோர் பிற்போக்குவாதிகளின் கொலை வெறிக்கு எதிராக அவர்களை வீழ்த்த அணிதிரள்வார்கள் என்கிற எளிமையான பாடம்கூட உங்களுக்குப் புரியவில்லை என்பதிலேயே உங்கள் கேள்வியின் உள்நோக்கம் புரிகிறதே.

    • //உங்கள் கேள்வியின் உள்நோக்கம் புரிகிறதே.//
     மடாதிபதி போல் இல்லாததையும் பொல்லாததையும் தேடுகிறீர்கள்….

     சாபம் போல் பின்னூட்டமிட்டு, அதில் implication வேறு உள்ளதைப்போல் கூறுகிறீர்கள்…

     சாமி கண்ணைக்குத்தும் என்பது எவ்வளவு மூடத்தனமான கூற்றோ அதற்க்கு சற்றும் குறையாத கூற்று உங்கள் சாபம்…

 2. உண்மையில் பேரிழப்பு. மூடநம்பிக்கை கொள்கைகளுக்கு எதிராக போராடிய போராளி. எனது வணக்கங்களை பதிவு செய்கிறேன். வினவில் கட்டுரை எதிர்பார்த்தேன். இரங்கல் தெரிவிக்கும் நேரத்தில் கூட வினவின் இருப்பை நியாயபடுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்கள் இந்த தேசத்தில் அதிகம் நடந்து கொண்டுள்ளது என்பதையும் மறுக்க முடியாத நிகழ்வு இது. அதையும் பதிவிடுகிறேன்.

 3. //தபோல்கர் அந்த இயக்கத்தின் மூலமாக பல போலி சாமியார்களை, பாபாக்களை, மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி உள்ளார்//அப்படியானால் சாமியார்களில் நல்லவர்கள் உண்டு என்பதை வினவு ஒத்துக்கொள்கிறதா?

 4. மத வெறியர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில் இப்படி பட்ட ஒருவர் இருந்து போராடியது மிகப் பெரிய விஷயம். இப்படி பட்ட போராட்டங்களுக்கு முடிவு மோசமாக அமைவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு பதிலடியாக மேலும் பல புரட்சியாளர்கள் பிறந்து முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வார்கள் என உறுதியாய்நம்புவோம். என் மனமார்நத் இரங்கலை திரு.தபோல்கருக்கு காணிக்கையாக்குறேன்

 5. Nobody who protested against Hindu practices or rituals has been killed starting from Buddha to periyar.

  Like the ilavarasan death assuming the obvious won’t help here.like it was proved that the ilavarasan death was a suicide,we ll find the truth about this also.

 6. //இந்து மத வெறியர்களை முறியடிப்பதன் மூலம்தான் உழைக்கும் மக்கள் நிம்மதியையும், விடுதலையையும், மகிழ்ச்சியையும் பெற முடியும்.//

  Correction. (Included all religions )

  மத வெறியர்களை முறியடிப்பதன் மூலம்தான் உழைக்கும் மக்கள் நிம்மதியையும், விடுதலையையும், மகிழ்ச்சியையும் பெற முடியும்.

 7. திரு. ராமன் அவர்களே நீங்கள் சுட்டிக்காட்டியது பொதுவாக மிகச் சரி. குறிப்பிட்டு சொல்வதென்றால் கட்டுரையில் சொன்னது போல் இந்தியாவில் இந்துமத வெறியர்களை ஒழித்துக்கட்டுவதும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஒரே வழி.

 8. அனைத்தும் தழுவிய உண்மைத் தன்மைகளுக்கு மட்டும்தான் ஒரு போலி இருக்க முடியும். உதாரணத்திற்கு மருத்துவம்- போலி மருத்துவம். சோசலிசம்- போலி சோசலிசம். இந்தப் பட்டியலில் சாமியார்- போலி சாமியார் எப்படி வரும்? அதாவது போலி சாமியார் என்ற பதமே ஆளும் வர்க்க மோசடி மொழி. அதை நாம் பயன்படுத்துவது நமது கண்ணோட்டத்திற்கு எதிரானதாக பொருள்படுவதாகவே நான் உணர்கிறேன். உதாரணத்திற்கு போலி சட்டம், போலி முதலாளித்துவம் என்பது போல். தோழர்கள் உரிய விளக்கம் அளிக்க விரும்புகிறேன்

 9. தேடிச்சோறு நிதம்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித்துன்பமிக உழன்று பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து நரை கூடிக்கிழப்பருவமெய்தி கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப்போலே நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?…..!

 10. இந்து மதவெறி தலைவிரித்து ஆட்டம் போடும் மராட்டிய மண்ணில், மூடத்தனத்தின் ஊற்றுக்கண்ணும், முட்டாள்தனத்தை விதைப்பதும், கிறித்தவ, இசுலாம் மதங்களை இந்து மதத்தின் கிளை மதங்களாக்கி, மூடநம்பிக்கை சாக்கடையில் கிறித்தவர்களை தள்ளி சீரழித்த இந்துமதம் கொலைவெறியோடு ஆட்டம் போடும் மராட்டிய மண்ணிலே, மூடத்தனத்திலிருந்து மக்களை வெளியே கொண்டு வரப் பாடுபட்ட பகுத்தறிவுவாளர், இந்து மதத்தின் மூடத்தனத்திற்கு எதிராக சட்டம் ஒன்றை இயற்ற மராட்டிய அரசைத் தூண்டியவர்…! பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார், ஆந்திரத்தின் பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர், கேரளத்தின் பகுத்தறிவாளர் ஜோசப் இடமருகு இவர்கள் வரிசையில் மராட்டியத்தில் தோழர் டாக்டர். நரேந்திர தபோல்கர்!
  கடவுள் போதையில் வெறிபிடித்துத் திரிபவர்களின் துப்பாக்கிக் குண்டு அவரது உடலைத் துளைத்தாலும், மதவெறியர்களுக்கு எதிராக பூனா நகரில் உருவான மக்களின் தன்எழுச்சியான போராட்டங்கள்.. ஊர்வலங்கள்.. இவை மதவெறியர்களின் மூஞ்சியில் காறி உமிழ்வதான ஒரு அடையாளமே! மத வெறிபிடித்த மூடர்கள் மீண்டும் மக்களிடம் அம்பலப்பட்டுப் போனார்கள்!
  தன்மக்களுக்காக அல்லாமல், பொது மக்களுக்காக, மக்களை மூடத்தனத்திலிருந்து விடுக்கப் போராடிக் களப்பலியான தோழர் டாக்டர். நரேந்திர தபோல்கர் அவர்களுக்கு, தந்தைப் பெரியாரின் தொண்டர்கள் சார்பாக, பகுத்தறிவாளர்கள் சார்பாக வீரவணக்கம் செலுத்துகிறோம்.

  மதங்களே, கடவுள்களே…
  உங்களது ஒரே வேலை மனிதனைக் கொல்வதுதானா?
  மக்களை முட்டாள்களாக்குவதுதானா?

 11. டாக்டர். நரேந்திர தபோல்கர் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்! பெரியார் போல!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க