Tuesday, April 13, 2021
முகப்பு அரசியல் ஊடகம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல !

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல !

-

சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி பா.ஜ.க.வின் மாநிலப் பொதுச் செயலாளரான ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி, இக்கொலைக்கு முஸ்லிம் தீவிரவாதிகளே காரணம் என்று இந்துவெறியைக் கிளறிவிட்டுப் பெருங்கூச்சல் போடுகின்றன இந்துத்துவ பரிவாரங்கள். ரமேஷ் கொலை மட்டுமின்றி, கடந்த ஈராண்டுகளாகத் தங்களது தலைவர்களையும் பிரமுகர்களையும் இசுலாமிய கூலிப்படையினர் குறிவைத்துக் கொன்று வருவதாகப் பட்டியலிடும் இக்கும்பலின் கோயபல்சு பிரச்சாரத்துக்குப் பக்கமேளம் வாசித்து, மரண பீதியில் இந்து தலைவர்கள் தவிப்பதாக கிசுகிசு பத்திரிகைகள் பீதியூட்டுகின்றன.

ஆடிட்டர் ரமேஷ்.
பிணத்தைக் காட்டி தூண்டப்படும் இந்துவெறி : மர்ம நபர்களால் கொல்லப்பட்ட பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ்.

வீட்டுமனை, கந்துவட்டி, சினிமா, சாராயம், காண்டிராக்ட், கட்டப் பஞ்சாயத்து போன்ற பணம் கொழிக்கும் தொழில்களை நாடெங்கும் அனைத்து ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களும் நடத்தி வருகின்றனர். இவை தவிர கிரானைட், மணற்கொள்ளை போன்ற பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதிலிருந்து, தனிநபர்களின் நிலங்களையும் சொத்துக்களையும் அபகரிப்பது வரை புதிய பொருளாதாரக் கொள்கையால் கொழுத்துவரும் தரகு முதலாளிகள் – நிலப்பிரபுகளின் கூட்டாளிகளாக இருந்து பொறுக்கித் தின்னும் கும்பல்களாக ஓட்டுக்கட்சிப் பிரமுகர்களும் தலைவர்களும் சீரழிந்துள்ளனர். இந்துத்துவ பரிவாரங்கள் ஆளும் குஜராத்திலே 49 எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல்களாக அம்பலப்பட்டுள்ளனர். நாடெங்கும் மாஃபியாக்களும் கூலிப் படைகளும் வளர்ந்துள்ளதோடு, பல்லாயிரம் கோடிகள் புழங்கும் இத்தொழில்களில் ஏற்படும் மோதல்கள் படுகொலைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு இரகசிய உலகமும் ஓட்டுக்கட்சி அரசியலும் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளில் பல்வேறு ஓட்டுக்கட்சிகளைச் சேர்ந்த 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு சில கொலைகளைத் தவிர பிற அனைத்துக்கும் அரசியல் காரணங்களோ, மதரீதியான காரணங்களோ இல்லை என்பதும் போலீசு விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,மக்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ள முஸ்லிம் எதிர்ப்பைக் கிளறிவிட்டு, இக்கொலைகளை வைத்து இந்துவெறி பரிவாரங்கள் ஆதாயமடையத் துடிக்கின்றன. இதன்படியே, ரமேஷ் கொலையையொட்டி நடத்தப்பட்ட கடையடைப்புப் போராட்டத்தின் போது பேருந்துகள் மீதான தாக்குதலும், வேலூரில் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் சுவரொட்டிப் பிரச்சாரமும்,கோவை துடியலூரில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதலும் இந்துவெறியர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன.

பா.ஜ.க. மாநில மருத்துவ அணிச் செயலாளரான டாக்டர் அரவிந்த் ரெட்டியின் கொலைக்குக் காரணம் பணம் – பெண் விவகாரம். நாகப்பட்டினம் புகழேந்தி கட்டப்பஞ்சாயத்து அடாவடிகளில் ஈடுபட்டு வந்த ஒரு ரவுடி. பரமக்குடி பா.ஜ.க. கவுன்சிலர் முருகன், பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காகடை முருகன் ஆகியோரின் கொலைகளுக்குக் காரணம் நிலத்தகராறு. சென்னை கோயம்பேட்டில் கந்து வட்டித் தொழில் நடத்தி வந்த விட்டல் என்ற பா.ஜ.க. பிரமுகர், கடன் வாங்கியவரது வீட்டிலுள்ள பெண்களை ஆபாசமாகத் திட்டியதாலேயே கடந்த ஆண்டு ஏப்ரலில் கொல்லப்பட்டார். இக்கொலைகளையொட்டி, கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே இந்துக்கள்தான். ஆடிட்டர் ரமேஷ் யாரால், எதற்காகக் கொல்லப்பட்டார் என்பதற்கான தடயமும், அவரது தீவிர ஆதரவாளராகச் சித்தரிக்கப்படும் பா.ஜ.க. மாநிலத் தலைமைச் செயற்குழு உறுப்பினரான ராஜராஜேஸ்வரி மறுநாள் தீக்குளித்து மாண்டதற்கான காரணமும் இன்னும் தெரியவில்லை.

நொறுக்கப்பட்ட பேருந்து.
இந்துவெறிக் கும்பல் ஆற்றியுள்ள ‘ஜனநாயகக் கடமை’ : ரமேஷ் கொலையையொட்டி நடத்தப்பட்ட கடையடைப்புப் போராட்டத்தின் போது நொறுக்கப்பட்ட பேருந்து.

ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று ஒருபுறம் கூறும் போலீசு, மறுபுறம் அத்வானி மதுரைக்கு வந்த போது பைப் வெடிகுண்டு வைக்க முயன்றதாகச் சொல்லப்படும் தலைமறைவு முஸ்லிம் குற்றவாளிகளைத் தேடுவதாகவும், அவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இக்கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு முக்கியத்துவமளிக்கிறார். விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே மொத்த சந்தேகத்தையும் முஸ்லிம்கள் மீது திருப்பிவிட்டு, திட்டமிட்டே முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக்கருத்தை அரசும் ஊடகங்களும் உருவாக்கி வருகின்றன.

தமிழகத் தேர்தல் அரசியல் கூட்டணிகளில் இடம்பெற வழியில்லாமல் உள்ள இந்துவெறி பா.ஜ.க., மக்களிடையே இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு தமிழகத்தில் காலூன்றும் நோக்கத்துடனேயே இத்தகைய கொலைகளைக் காட்டி, கொல்லப்பட்டவர்களை இந்துக்களின் தலைவர்களாகவும் தேசத்துக்காக உழைத்த மாபெரும் தியாகிகளாகவும் சித்தரித்து, மற்ற ஓட்டுக் கட்சிகளுக்கு இல்லாத தனிச் சிறப்பான அடையாளமாகவும், தங்களை இந்துக்களின் பிரதிநிதிகளாகவும் காட்டிக் கொள்கிறது. இந்துவெறி கும்பலின் இச்சதியை அம்பலப்படுத்த முன்வராமல், தமிழகத்தில் கொலைகள் பெருகி வருவதாக ஓட்டுக்கட்சிகள் அறிக்கை வாசிக்கின்றன. இந்துவெறி பாசிசப் பரிவாரங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு வன்னிய சாதிவெறிக் கட்சியான பா.ம.க. ஆதரவு தெரிவித்து, சாதி-மதவெறி அணிதிரட்டலை முன்தள்ளுகிறது. பெரியார் பிறந்த மண்ணில் காலூன்றத் துடிக்கும் இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளின், சாதிவெறியர்களின் சூழ்ச்சிகள்- சதிகளை விழிப்புடனிருந்து அம்பலப்படுத்தி முறியடிப்பதே இன்றைய அவசர அவசியக் கடமையாகியுள்ளது.

– மனோகரன்

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

 1. ரொம்ப முக்கியமான கட்டுரை போங்க. இந்து மத எதிர்ப்பு தான் உங்கள் கொள்கை என்றால், நீங்கள் எல்லாம் போராளி கிடையாது. போராளி வேஷம் கட்டி நடிப்பவர்கள்.

 2. I have been reading your articles for the past 1 year, the articles have communist flavor to it. Most of your articles are targeting Hindus, BJP, RSS and their religious thought. But when i comes in the case of Christianity & Muslims, your have tight lipped mouth. We welcome the articles about the corrupt politicians, religious gurus, social articles but please avoid the specific religion flavor, its something unrealistic that you also know…

  As far as my research i past 10-15 years Christian people are making more conversions in all parts of the India, in the way of providing money, education, job etc… Now the new trend is they are target the young girls for a Hindu family through her friends or lovers and making them convert to Christianity, so that they can easily target the girls entire family to follow their god. I have never heard that, missioners are able to covert any Muslim to follow their religion they only target Hindus. In India Hindus being the majority they are treated as second class citizens. There are certain people (SC & ST) who converts to Christianity (for money, education, job, socail upliftment) and avail the benefits of the needed people (SC & ST). I would suggest you make and research on this and you understand the same. Am not a believer in god & religion but when your posts always shows Hindus as Anti Social People it hurts.

  • //..As far as my research i past 10-15 years Christian people are making more conversions in all parts of the India, in the way of providing money, education, job etc…//

   அப்பன்னா பணம் கல்வி வேலைவாய்ப்பு இல்லாத பல லட்சம் பேர் இந்து மதத்தில் இருக்காங்கன்னு ஒத்துக்கிறிங்க தானே..இது மட்டும் காரனம் இல்லை. சாதிய பெயரில் நடத்தப்படும் சமூக அவமதிப்பு , சுரண்டலும் காரணம் தான். அவங்களுக்கு இதேல்லாம் கிடைக்க இதுவரை 15 வருடத்தில் என்ன செஞ்சீங்க… குறைந்து சாதிய பெயரில் நடக்கும் அவமரியாதை சுரணடலை நிறுத்த என்ன செய்திர்கள் கிரிஸ் அவர்களே?

   நானும் சுரண்டுவெண், நல்லது எதுவும் செய்ய மாட்டேன். வேறூ யார் செய்தாலும் அதை தடுப்பது எப்படின்னு 15 வருசம் ஆராய்ச்சி செய்வேன் என்பதற்கு என்ன பெயர் வைக்கலாம் கிரிஸ் ? 15 வருடம் இல்லை 150 வருடம் ஆராயிச்சி நீங்க மட்டும் இல்லை , உங்க குடும்பம் குலம் கோத்திரம் சாதி ஏன் சானதான மதமே உட்கார்ந்து செய்தாலும் ஒண்ணூம் பண்ன முடியாது .. என்னா இது எந்த தனிப்பட்ட நபரும் செய்வதில்லை.. கோடிக்கணக்கான மக்களின் ஆயிரம் வருட வேதனைக்கு வடிகால்.

   //..Now the new trend is they are target the young girls for a Hindu family through her friends or lovers and making them convert to Christianity, so that they can easily target the girls entire family to follow their god.. //

   ஜிஞ்சு பேண்டு ராமதாஸ் உட்பட அனைத்து சாதி, மத அடிப்படை வாதிகளின் கருத்தும் இலக்கும் பெண் உடலே.. இதில் தன் சொந்த இன மத பெண்ணை கேவலப்படுத்துவதை பற்றி மயிரிழையளவுக்கும் யாருக்கும் கவலை இல்லை.

   மனிதனின் இயல்பை மாற்றுவது உலகின் கடினமான பணிகாளில் ஒன்று, எனவே தான் மனிதர்களின் இயல்புக்கு தகுந்தபடி பொருட்களை தயார் செய்து விற்க பன்னாட்டு நிறுவனங்கள் கோடிகளில் முதலீடு செய்கின்றனர்.

   அதிலும் பெண்களின் இயல்பு தமஸ் தத்வம் மாற்றுவது மிக கடினம். நிஜத்தில் பார்த்தாலும், இன மத மொழி எதுவாக இருந்தாலும் ஆண் பெண் இருவரும் வேறு பட்டிருக்கும்பொது குழந்தகள், குடும்பம் மிக பெரும்பால பெண் வழியிலேயே இருக்கும் அதனால் தான் மொழி தாய் மொழி என்கின்றனர்.

   நீங்கள் சொல்வது போல் வயசு பெண்ணை கூட்டுகிட்டு போய் திருமணம் செய்து மதம் மாற்றினால்.. அடுத்த தலை முறையும் குடும்பமும் இந்துவாக தான் இருக்கும் கிருத்துவராக இருக்காது..

   நீங்கள் சொல்வது நடக்க நடைமுறை தலை கீழாக் இருக்க வேண்டும் அதாவது கிருத்துவ பெண்கள், இந்து ஆண்களை திருமணம் செய்தால் மட்டுமே குடும்பம் கிருத்துவம் ஆகும்.

   இப்படி உண்மை ஒருபுரம் இருக்கட்டும்..

   இப்படி இந்து பெண்களை பிற மத ஆண்கள் கூட்டி செல்கிறார்கள் என்று குற்றம் சொல்வது மதம் என்ற வார்த்தையை சாதி என்று மாற்றினால் ஜிஞ்சு பேண்டு ராமதாசின் குரல் ஆகவில்லைய..

   தெரியாமல் தான் கேட்கிறேன்..

   உமது ஆராயிச்சி படி…

   அது எப்படி திருமண வயதில் இருக்கும் பெண்கள் எல்லாம் பிற மத சாதி ஆண் யார் கிடைப்பர் என்று அரிப்பெடுத்து அலைகின்றனரா?

   உமது தாயும் , வயசில் அப்படி தான் அலைந்தார் என்று சொல்கிறீரா?? உமது சகோதரிகளும் மகளும் அப்படி தான் என்கிறீரா?

   உமக்கும் உம்மை போன்ற ஜிஞ்சு பேண்டுகளுக்கும் பெண்கள் தான் துடைப்பம் மூலம் புத்தி புகட்ட வேண்டும்.

   அதை செய்யாமல் இப்படி ஆய்வு செய்ய விட்டு இருக்கும் பெண்களிடம் தான் வினவு உள்ளீட்ட சமூக அமைப்புகள் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவெண்டும்

   • அப்பன்னா பணம் கல்வி வேலைவாய்ப்பு இல்லாத பல லட்சம் பேர் இந்து மதத்தில் இருக்காங்கன்னு ஒத்துக்கிறிங்க தானே.

    => Am accepting you valuable point, still lakhs of people are searching for job in the country.

    இது மட்டும் காரனம் இல்லை. சாதிய பெயரில் நடத்தப்படும் சமூக அவமதிப்பு , சுரண்டலும் காரணம் தான். அவங்களுக்கு இதேல்லாம் கிடைக்க இதுவரை 15 வருடத்தில் என்ன செஞ்சீங்க… குறைந்து சாதிய பெயரில் நடக்கும் அவமரியாதை சுரணடலை நிறுத்த என்ன செய்திர்கள் கிரிஸ் அவர்களே?

    ==> Read my article completely first, i have specified “There are certain people (SC & ST) who converts to Christianity (for money, education, job, socail upliftment) and avail the benefits of the needed people (SC & ST)”.

    1. what do you say about it???
    2. The problem is within there itself, the person who is getting reservation for studies, job and has a stable financial background should help for others upliftment. The Govt should have enacted the reservation law based on monetary and their social background,then the needed would have got the benefits.

    நானும் சுரண்டுவெண், நல்லது எதுவும் செய்ய மாட்டேன். வேறூ யார் செய்தாலும் அதை தடுப்பது எப்படின்னு 15 வருசம் ஆராய்ச்சி செய்வேன் என்பதற்கு என்ன பெயர் வைக்கலாம் கிரிஸ் ? 15 வருடம் இல்லை 150 வருடம் ஆராயிச்சி நீங்க மட்டும் இல்லை , உங்க குடும்பம் குலம் கோத்திரம் சாதி ஏன் சானதான மதமே உட்கார்ந்து செய்தாலும் ஒண்ணூம் பண்ன முடியாது .. என்னா இது எந்த தனிப்பட்ட நபரும் செய்வதில்லை.. கோடிக்கணக்கான மக்களின் ஆயிரம் வருட வேதனைக்கு வடிகால்.

    The Solution for the problem is with you itself, you don’t have a social unity among yourself. Govt has reserved assembly seats for your community people, but still those are getting elected are not representing your voices they are filling only their money bags.If it goes like this no body can do anything on this…

    ஜிஞ்சு பேண்டு ராமதாஸ் உட்பட அனைத்து சாதி, மத அடிப்படை வாதிகளின் கருத்தும் இலக்கும் பெண் உடலே.. இதில் தன் சொந்த இன மத பெண்ணை கேவலப்படுத்துவதை பற்றி மயிரிழையளவுக்கும் யாருக்கும் கவலை இல்லை.

    ==> I don’t care about Ram-doss B_st_rd and his ideology…

    மனிதனின் இயல்பை மாற்றுவது உலகின் கடினமான பணிகாளில் ஒன்று, எனவே தான் மனிதர்களின் இயல்புக்கு தகுந்தபடி பொருட்களை தயார் செய்து விற்க பன்னாட்டு நிறுவனங்கள் கோடிகளில் முதலீடு செய்கின்றனர்.

    அதிலும் பெண்களின் இயல்பு தமஸ் தத்வம் மாற்றுவது மிக கடினம். நிஜத்தில் பார்த்தாலும், இன மத மொழி எதுவாக இருந்தாலும் ஆண் பெண் இருவரும் வேறு பட்டிருக்கும்பொது குழந்தகள், குடும்பம் மிக பெரும்பால பெண் வழியிலேயே இருக்கும் அதனால் தான் மொழி தாய் மொழி என்கின்றனர்.

    நீங்கள் சொல்வது போல் வயசு பெண்ணை கூட்டுகிட்டு போய் திருமணம் செய்து மதம் மாற்றினால்.. அடுத்த தலை முறையும் குடும்பமும் இந்துவாக தான் இருக்கும் கிருத்துவராக இருக்காது..

    நீங்கள் சொல்வது நடக்க நடைமுறை தலை கீழாக் இருக்க வேண்டும் அதாவது கிருத்துவ பெண்கள், இந்து ஆண்களை திருமணம் செய்தால் மட்டுமே குடும்பம் கிருத்துவம் ஆகும்.

    ==> That’s what i said “கிருத்துவ பெண்கள், இந்து ஆண்களை திருமணம் செய்தால் மட்டுமே குடும்பம் கிருத்துவம் ஆகும்”. When a Hindu Women is converted to christian and she marries a Hindu guy, the next generation will be Christianity..

    இப்படி உண்மை ஒருபுரம் இருக்கட்டும்..

    இப்படி இந்து பெண்களை பிற மத ஆண்கள் கூட்டி செல்கிறார்கள் என்று குற்றம் சொல்வது மதம் என்ற வார்த்தையை சாதி என்று மாற்றினால் ஜிஞ்சு பேண்டு ராமதாசின் குரல் ஆகவில்லைய..

    ==> Am speaking only about religious missionery activities not about any caste issues..

    தெரியாமல் தான் கேட்கிறேன்..

    உமது ஆராயிச்சி படி…

    அது எப்படி திருமண வயதில் இருக்கும் பெண்கள் எல்லாம் பிற மத சாதி ஆண் யார் கிடைப்பர் என்று அரிப்பெடுத்து அலைகின்றனரா?

    உமது தாயும் , வயசில் அப்படி தான் அலைந்தார் என்று சொல்கிறீரா?? உமது சகோதரிகளும் மகளும் அப்படி தான் என்கிறீரா?

    ==> I have shared my opinion of things i have come across, I didn’t mean to hurt you vinoth, I can understand your feelings since you have been brought from the family/ community where the above said truths are common and you are used to it.

    உமக்கும் உம்மை போன்ற ஜிஞ்சு பேண்டுகளுக்கும் பெண்கள் தான் துடைப்பம் மூலம் புத்தி புகட்ட வேண்டும்.

    அதை செய்யாமல் இப்படி ஆய்வு செய்ய விட்டு இருக்கும் பெண்களிடம் தான் வினவு உள்ளீட்ட சமூக அமைப்புகள் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவெண்டும்

    ==> Don’t you thing the people who are converted are enjoying the benefits which are meant to the people who are really needing it.
    1. what have you done for it?
    2. your community people are only making it worse for your own people, and there are some worst leaders like ramdoss, karunanidhi are supporting it directly & indirectly?
    3. What happened to you representative of your community, what are they doing?
    4. casteism is not what am taking about, first understand what i said and reply accordingly. Don’t put your anger or inferior complexity over the issues we are taking about..

  • அய்யோ அப்பா ஆராய்ச்சி திலகம்யா இந்த கிரீஸ்.என்ன ஆராய்ச்சி,என்ன ஆராய்ச்சி.கிறிஸ்டின்ஸ் உங்க இந்துக்களை மதம் மாத்துராங்கன்னா மாறுபவர்களிடம் போய் சொல்லுங்கய்யா நம்ம இந்து மதம் எப்படி உன்னதமானதுன்னு,அதுனால மதம் மாராதீங்கன்னு..அப்படி சொல்ல ஒன்னும் இல்லையா வாயையும் பலானதையும் மூடிக்கிட்டு இருங்கய்யா.

   • Venkaiyan, Hinduism is not a religion, it consists of many diverse traditions, cultures and has no single founder. http://en.wikipedia.org/wiki/Hinduism
    People has their right to chose any religion as they like, but why missionaries are converting people by providing cash, education, job. Don’t you thing the people who are converted are enjoying the benefits which are meant to the people who are really needing it.
    http://www.truthbeknown.com/victims.htm
    http://www.thethinkingatheist.com/forum/Thread-List-of-Christian-Atrocities
    http://en.wikipedia.org/wiki/Christian_terrorism

    please answer to these else shut your holes and keep quiet.

    • ஆராய்ச்சி அறிஞர் கிரீஸ் அவர்களே.ஏதோ உங்க தயவுல நானும் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி பார்க்கிறேன்.

     \\Hinduism is not a religion it consists of many diverse traditions, cultures and has no single founder.//
     எங்களுக்கும் தெரியும் அது ஒரு மதமே இல்லைன்னு.அரசியல் சட்டத்துல இந்துவை எப்படி டிபைன் பண்ணிருக்கு.யாரெல்லாம் முஸ்லிம் இல்லையோ,யாரெல்லாம் கிறிஸ்டின் இல்லையோ யாரெல்லாம் பார்சி இல்லையோ இப்படி பல இல்லையோ போட்டுதானே அவனெல்லாம் இந்து என்கிறீங்க.இவன் இவன் எல்லாம் இந்துன்னு குறிப்பிட்டு சொல்ல துப்பு இல்லாத வெட்கங் கெட்டு போய் அதையே பெருமையாவும் சொல்லிக்கிறீங்க.மனுசனுக்கு மனுஷன் உயர்வு தாழ்வு கற்பிக்கும் உங்களுக்கும் வெட்கம் என்ற நல்ல உணர்வுக்கும் காத தூரம்னு எங்களுக்கும் தெரியும்.

     \\People has their right to chose any religion as they like, but why missionaries are converting people by providing cash, education//

     பணத்துக்காக மதம் மாறுறாங்க எனபது உண்மையானால் இந்த கேள்விக்கு பதில் சொல்லு.
     தமிழ்நாட்டுல பல கோயில்களில் வவ்வால் மட்டுமே வந்து போகுமாம்.வருமானமே இல்லாம அந்த கோயில் பாப்ஸ் எல்லாம் கஷ்டப்படுராங்கலாம்.உங்க ஆளுகளே வினவில் பல இடங்களில் அழுது வச்சுருக்காங்க.அந்த அய்யரு பத்து லட்சம் கொடுத்தா கிரிஸ்டியாநிட்டிக்கு மாறுவாரா.மாட்டார்.மாருரவங்க யார்னு பாத்தால் சாதியின் பெயரால் இழிவு படுத்தப்படும் மக்கள்தான்.சாதி கொடுமையை நீங்க நிப்பாட்டாத வரைக்கும் மதம் மாறுவதும் நிக்காது.உங்க கஷ்டமும் புரிது.சாதி ஒழிந்தால் இந்து மதமும் ஒழிந்து விடும்.

    • \\he people who are converted are enjoying the benefits which are meant to the people who are really needing it.//
     ஒரு ஆராய்ச்சி அறிஞர் இப்படி மொட்டையா சொல்லலாமா. மதம் மாறுனா என்னென்ன benefits கிடைக்குது மாறலன்னா அந்த benefits யாருக்கு போய் சேரும்னு கொஞ்சம் விளக்குறேளா அப்புறம் வந்து பதில் சொல்றேன்.

 3. என்ன____ மனோகரா? ஒடுக்கப்படும் அனைவருக்காகவும் குரல் கொடுப்போம்னு வார்த்தைல மட்டும் பேசுறீங்க ஆனா பறையனும் முஸ்லிமும் தப்புபன்னி செத்தாகூட அது புரட்சின்னு எழுதுற மத்த சாதி இல்ல மதத்த சேர்ந்தவன் கொலைசெய்யபட்டு செத்தாகூட செத்தவன் எல்லாம் உத்தமன் இல்லன்னு எழுதுற இதுதான் லெனினும் மார்க்சும் சொன்ன உண்மையான கம்யுனிசமோ?

  • என்ன சொல்ல வந்தாலும் மரியாதையா சொல்லு இப்ப எதுக்காக பறையன்னு எழுதுன.செத்துபோனானே ரமேஷ் அவனும் இந்து தலித்களும் இந்து அப்படின்னுதானே ஊரை ஏய்க்கிரீங்க.அப்படின்னா உங்க இந்துவையே எப்படி பறையன்னு கேவலமா சொல்ற .இதுலேர்ந்தே தெரியுதே தலித்களை உங்க ஆர் எஸ்.எஸ்.கூட்டம் இந்துவா நேனைக்கலன்னு.உனக்கு தைரியம் இருந்தா எங்காவது பத்து பேர் முன்னால பறையன்னு சொல்லிப் பாரு.செருப்பு பிஞ்சு போகும்.

   • Vengayyan

    Calling someone badly by his acste name is wrong but please understand something,the word parayan is not a bad word,but people use it to hate the people of that community.

    As such using the word parayar just refers to the community and not necessarily in a bad way.

   • ////பறையன்னு சொல்லிப் பாரு.செருப்பு பிஞ்சு போகும்/////

    அரசாங்க ஆணைகளில் எல்லாம் “பறையன்” என்ற ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டுத்தான் உள்ளது. தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும் இந்த வார்த்தை எழுதப்பட்டு உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில் கூட இந்த ஜாதியின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இங்கெல்லாம் இந்த பெயரை எடுக்க சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தாலாமே!!

    அரசியல் சட்டத்தில் இந்த ஜாதி பெயரை குறிப்பிட்டு எழுதியவர்கள் நல்ல நோக்கத்தில்தான் எழுதியுள்ளார்கள்.

    முதலில் இந்த வார்த்தைக்கு பொருள் என்ன என்று தெரியுமா?

    இந்த ஜாதி பெயரை குறிப்பிட்டு ஜாதி சங்கம் இருப்பது தெரியமா? ஊர்வலங்களில் தங்ககளது ஜாதி பெயரை குறிப்பிட்டுத்தான் கோஷங்கள் போடுகிறார்கள் என்பது தெரியமா? முதலில் இதனை தடை செய்யுங்கள்!!

   • தேவரை தேவர் என்கிறோம்..வன்னியரை வன்னியர் என்கிறோம்..பள்ளனை பள்ளன் என்கிறோம்.. பறையனை எப்படி அழைப்பது??? நீங்கள் தானே போட்டு கொள்கிறீர்கள் பறையனார் என்று.. என்னடா இது???

   • சாதிப் பட்டியலில் parayas என்ற சாதி உண்டுன்னு யாருக்குத்தான் தெரியாது.நடைமுறையில் அது இழிவு படுத்தும் அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது.அதனால்தான் எந்த சாதின்னே தெரியாத பத்து பேர் முன்னால கூட பறையன்னு சொல்ல எவனுக்கும் தைரியம் இருக்காது.இங்க இன்டர்நெட்ல தைரியமா பறையன்னு சொல்ற _______ தைரியம் இருந்தால் பொது இடத்தில் சொல்லிப் பாருங்கடா.

    வினவு ஆசிரியர் இதை மாடெரட் பண்ணாம போடுங்க.இந்த தடித்தோல் எருமைகளுக்கு இதை விட காட்டமாக கூட சொல்லலாம்.என்னா தெனாவெட்டு இவனுகளுக்கு.அரசியல் சட்டத்துல இருக்கு ஆத்தங்கரையில இருக்குன்னுட்டு.

     • இப்ப என்னவோ அப்பாசாமி அபார்ட்மெண்ட்ல ஹரி சொரி பார்ப்ஸ் படையாட்சி தேவர் எல்லாம் அக்கம்பக்கமா குடியிருந்து ஒன்னுமன்னுமா பழகுற மாதிரியும்,அதை நான் இப்படி பேசி கெடுக்குற மாதிரியும் பீலா உடுது.

      யோவ் பூனை,நீ கண்ணை மூடிட்டா உலகம் இருண்டுராது.ஏற்கனவே ஊரும் சேரியும் தனித்தனியாத்தா இருக்கு.அடையாறு அண்ணாநகர் வேளச்சேரியும் வியாசர்பாடி புளியந்தோப்பும் தனித்தனியாத்தா இருக்கு.இரட்டை குவளையும் கோயில் தீண்டாமையும் அப்படியேதா இருக்கு.

      pcr அமுலில் இருக்கும்போதுதான் நத்தம் காலனி எரிக்கப்பட்டு உள்ளது.pcr வந்த பின்னும் தினசரி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் பாலியல் வல்லுறவுகள் நடைபெறுகின்றன.ஆகவே முட்டாளே புரிந்து கொள்.சட்டங்கள் நாக்கு வழிக்க கூட உதவாது.உன்னை போன்ற சாதிவெறி மிருகங்கள் தமிழ்நாட்டில் பொதுவெளியில் சாதிப் பேர் சொல்லி திமிர் காட்டாமல் இருப்பதற்கு காரணம் சட்டம் இல்லை.மான உணர்வும் விழிப்புணர்வும் பெற்று விட்ட அந்த மக்கள் எலும்பை எண்ணி விடுவார்கள் என்ற பயம்தான் காரணம்.இணையத்தில் யார்ன்னு அடையாளம் தெரியாமல் இருக்கும் தைரியத்தில்தா பறையன்னு எழுதுதுங்க பன்னாடைங்க.நேருக்கு நேர் பேச துப்பு கெட்ட கோழைப் பயல்கள்.

      • ஹா ஹா.. உண்மையை சொன்னால் உனக்கு ஏன் இப்படி கோபம் வருது??? தம்பி உடம்புக்கு நல்லது இல்லை..

       • அந்த சாதிக்கு புது பெயர் என்ன வைக்கலாம் ? பாவமாக இருக்கிரது! புலம்பல் தாஙக முடியவில்லை!

      • I explained clearly that just because someone calls you by the name,it doesn’t make it offensive.

       Pallar people also dislike the derogatory tone of the word,so they call themselves devendra kula vellalar.my request is why don’t you too ask the government to edit the gazette.

       I think parayar people call themselves valluvar,not sure if they are the same,but the name ll change only if u change it in the govt records,otherwise no amount of pcr abuse can change it.

       Finally, if u abuse pcr it ll turn very dangerous for you.so many people are affected by that.

       Meanwhile,parayar or other sc kids who do well in college go live in apartment,not slum.

       Don’t waste time abusing me,try to get something useful out of the discussion.

 4. அட என்னங்க நீங்க.. சரி இந்தக் கொலய பத்தி ஏதோ ஒங்களுக்கு துப்பு கெடச்சுருச்சு அததான் வெளியிட்டிருக்கிங்கன்னு ஆர்வமா படிச்சா.. சே… சரி இப்ப என்ன சொல்ல வர்றிங்க.. பல கொலைகளுக்கு நீங்க சொன்ன காரணம் சரிதான்.. ரமேஷ் கொலை ஏன்னு சொல்லாமல் பூசி மழுப்பற மாதிரில்ல எழுதிறிங்க.. என்னன்னுதான் தெளிவா சொல்லுங்களேன்….

 5. அய்யா
  களம் இறங்கித்தான் இந்த கட்டுரையை எழுதி உள்ளீர்களா? ரமேஷ்ஜி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்களது சமூகத்தை உயர்த்திப் பிடிப்பது தவறு என்று சொன்னால் சிறுபான்மை சமூகத்தினர் செய்வதும் தவறுதான்.சேலம் பக்கம் வந்து விசாரியுங்கள் ரமேஷ்ஜி யைப் பற்றி.அன்று அவருடைய சவ ஊர்வலத்திற்கு தன்னிச்சையாக வந்த மக்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியது.அந்த ரிப்போர்ட் போனதும்தான் முதலமைச்சர் அது வரையில் வாய் மூடி இருந்தவர் தனி சிறப்புப்படைக்கு உத்தரவு இடுகிறார். மேடைகளில் இந்து மதத்தை உயர்த்திப் பிடித்தார் என்ற காரணத்திற்காக நேரில் விவாதித்து ஜெயிக்கத் துப்பிலாத கோழைகள்தான் இந்த படுகொலையை செய்துள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.நீங்கள் தூக்கி வைத்து கொண்டாடும் சிறுபான்மை மதத்தினரின் வண்டவாளங்களை நான் கீழே கொடுத்துள்ள ப்ளாக்கில் போய்ப் பார்க்கவும்
  http://iraiyillaislam.blogspot.in
  இனிமேல் கட்டுரை எழுதுவதற்கு முன்னால் யோசித்து எழுதுங்கள்
  அன்புடன் என்றும்,பிரபாகர்

 6. ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் மும்மூர்த்திகள்களும் ஹிந்துத்துவ அரசியலும்!

  கடந்த, சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர். ரமேஷ் சேலத்தில் சில மர்ம நபர்களால், அவரது அலுவலக வளாகத்திலேய சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவெறி தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை, முஸ்லிம் சமூகத்துடன் இணைத்து பத்திரிகைகளும், ஊடகங்கலும் செய்தி வெளிஇடுவது சமுகத்தில் இருக்கும் நல்லிணக்கத்திற்கு இழுக்காகும்.

  மும்மூர்த்திகள் பார்த்த விதம்

  தமிழகத்தில் பத்திரிகை புரட்சி நடத்தி வரும் நக்கீரன், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய பத்திரிகைகள், சிறிதும் நாகரிகம் இல்லாமல் இந்த கொலையை தங்களுடைய அட்டைபடத்தில், மக்களை பயத்தில் ஆழ்த்தும் தலைப்பிட்டு எழுதி இருந்தனர்.

  1. ஜூனியர் விகடன் எழுதியிருந்த விதம்-மரண பீதியில் இந்து தலைவர்கள், தேதி குறி தீர்த்து கட்டு…., கொலை பட்டியலில் 80 பேர்.

  இது போன்று தலைப்பிட்டு, கட்டுரையில் அனைத்தும் முஸ்லிம் விரோத போக்குடன் எழுதி இருந்தார் எஸ். முத்துகிருஷ்ணன் அவர்கள்.

  கட்டுரையில், அணைத்து தகவல்களும் முஸ்லிம்களுக்கு எதிராகவும், நிச்சயமாக இந்த கொலையை முஸ்லிம்கள் செய்திருப்பார்கள் என்ற ஒரு தொனியிலும் இருந்தது அக்கட்டுரை. அதுமட்டுமின்றி, இந்து மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் பேட்டிகளை வெளியிட்டு இருந்த ஜூனியர் விகடன் முஸ்லிம்களின் சார்பில் எந்த ஒரு பேட்டியையும் வெளியடவில்லை. இது ஒரு தலைபட்சமான ஒன்றாகும்.

  2. நக்கீரன் எழுதியிருந்த விதம்-இன்று ஆடிட்டர் ரமேஷ்! நாளை?, வெடி குண்டுகளுடன் திரியும் மத வெறியர்கள்! அதிர்ச்சி தகவல்கள்.

  நக்கீரன் கொஞ்சமும் நடுநிலை இல்லாமல், அதே ஜூனியர் விகடனுக்கு நான் சளைத்தவன் அல்ல என்பதை நிருபிக்கும் விதமாக எழுதி இருந்தனர். அதில், அனைத்தும் முஸ்லிம்களின் அமைதியை குலைக்கும் விதமாகத்தான் இருந்தது.

  அதில், ஒன்று பிஜேபி தலைவர் ஒருவர் கூறியதாக, தேசவிரோத ஜிகதின் இது போன்ற தீவிரவாத செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று எழுதி இருந்தனர். ஏன் நக்கீரனுக்கு காவி தீவரவாதம் பற்றி எழுத தெரியாதோ? அல்லது எழுத தெரியாத மாதிரி நடிகின்றதோ. இது நக்கீரன் முஸ்லிம்களுக்கு மேல் உள்ள கால்புனர்ச்சியை எடுத்து காட்டுகிறது.

  3. குமுதம் ரிப்போர்டர் எழுதியிருந்த விதம் – தொடரும் அரசியல் கொலைகள்… யாருக்கு எச்சரிக்கை?

  குமுதம் ரிப்போர்டர் தங்களுக்கு வந்த அனைத்தையும் மித மிஞ்சிய வகையில் எழுதி இருந்தது. அதில், பிஜேபி முக்கிய தலைவர் கூறியதாக, குறிப்பாக, மோடிக்காக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை பயமுறுத்தவே இது போன்று கொலைகள் நடந்து வருகிறது என்று கருதுகிறோம். இவை தொடருமானால் நாங்களும் பதிலடி கொடுக்க வேண்டியது வரும் என்று இருந்தது.

  கடைசியாக, முடிக்கும் போது அரசியல் கொலைகளை தடுத்து நிறுத்தாவிட்டால், நாடாளமன்ற தேர்தலின் பொது மீண்டும் ஒரு கோவை குண்டுவெடிப்பு போன்ற சம்பவம் நடந்தாலும் நடக்கலாம் என்று முடிகிறது. இது போன்று மத வெறிகளை தூண்டக்கூடிய பேட்டிகளை வெளியிடுவது சமூகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  எது, எப்படியோ இது போன்ற கொலைகளை வைத்து பிஜேபி தமிழகத்தில் தாமரையை வளர்த்து விடலாம் என்று நினைக்கிறது. ஆனால், கொஞ்சம் இருக்கின்ற தாமரையை இல்லாமல் ஆக்கி விடுமோ என்று சமுக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாகும். – அன்புடன் நெல்லை சலீம்.

 7. இங்கே உண்மைகள் என்ற பெயரில் கமெண்ட் இட்டது வாஞ்சூர் என்ற பிரபல மத வெறி ………….

  (இது அநாகரிக கமெண்ட் அல்ல வினவு )

 8. The murder of Ramesh belonging to BJP was done with malice aforethought and it is an unlawful homicide.Article 19 says all citizens shall have the right to freedom of speech and expression. Freedom of expression is not only important in its own right but is also essential if other human rights are to be achieved.It should be condemned and must not be approved and vinavu which expresses sound thoughts in every sphere must restrain itself from publishing such articles

 9. திண்டுக்கல் வானரத்தின் வெடிகுண்டு சேட்டை…Date: 29/08/2013 மாலைமலர்

  http://epaper.maalaimalar.com/showtext.aspx?parentid=31521&boxid=1653193&issuedate=coimbatore/2982013

  இன்று (31/08/2013)மாலைமலர் கீழ்காணும் செய்தியை தவிர்த்து விட்டது because of yasin bhatkal news.

  http://tamil.oneindia.in/news/2013/08/31/tamilnadu-dindigul-bjp-functionary-arrest-bomb-hurled-his-own-house-182455.html

  குரங்கு சேட்டை கொஞ்சம் ஓவர்தான் போய்கிட்டிருக்கு…:-)

 10. கற்றது கையளவு,

  [1]வாங்கள் கற்றது கையளவு இங்கு ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல பற்றி விவாதிக்கலாம் !

  [2]என்ன செய்வது கற்றது கையளவு? என் பள்ளி ஆசிரியர்கள் எனக்கு சொல்லி கொடுத்த முறை [1],[2], [3] என்று கருத்துகளை வரிசை படுத்தும் முறை !

  //“ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல ! ” என்ற கட்டுரையில் ஒரு கொலையை மறைமுகமாக ஆதரித்தபோதே வினவின் போக்கு எனக்கு வருத்தத்தை அளித்தது. என் கருத்தை நான் வெளிப்படையாக சொல்வது நண்பர் சரவணனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. உடனே [1],[2], [3] என்று அடுக்க ஆரம்பித்து விடுகிறார். //

 11. நீங்கள் கவனித்தீர்களா வினவு?அவா பத்தி ஒரு பதிவ போட்டுட்டா போதும்!உடனே அவா பாசத்தில் பலபேரு இங்க வந்து கும்மியடிப்பார்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க