Friday, May 20, 2022
முகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !

அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !

-

நிகழ்வு 1 : கடந்த மாதம் 25-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சவுராசி பரிக்ரமா யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது விசுவ இந்து பரிசத் அமைப்பு. சரயு நதிக்கரையில் துவங்கி அயோத்தி நகரைச் சுற்றி 250 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவிருந்த இந்த யாத்திரை, இந்துக்களை தட்டியெழுப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வி.எச்.பி அறிவித்திருந்தது. சுமார் 40,000 பேர் கலந்து கொள்ளக்கூடும் என்று அதிகார மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்த யாத்திரைக்காக சுமார் 200 பேர்கள் வரையே கூடியிருந்தனர். அவர்களைக் கைது செய்ததோடு யாத்திரைக்கு தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது காவல்துறை. 144 தடையுத்தரவைத் தொடர்ந்து வி.எச்.பி அறிவித்திருந்த ஆர்பாட்டங்களும் பிசுபிசுத்துப் போயுள்ளன.

திண்டுக்கல் பிரவீன் குமார்
திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன்குமார் வீட்டில் ’மர்ம ஆசாமிகள்’ பெட்ரோல் குண்டு ஒன்றை வீசுகிறார்கள்.

நிகழ்வு 2 : திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன்குமார் அந்நகர பாஜக-வின் 10-வது வார்டு தலைவர். சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் இவரது வீட்டில் ’மர்ம ஆசாமிகள்’ பெட்ரோல் குண்டு ஒன்றை வீசுகிறார்கள். ஏற்கனவே மதக் கலவர அபாயத்தில் உள்ள திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்திக்கு சற்று முன்பாக இப்படி ஒன்று குண்டு வெடித்ததை காவல்துறை எதிர்பார்க்கவில்லை. விசாரணையில் இறங்கிய காவல்துறை குற்றவாளியை சுலபத்தில் கண்டு பிடிக்கிறார்கள். குற்றவாளி வேறு யாருமல்ல, பிரவீன்குமாரே தான். பிரபலமாக வேண்டும் என்கிற ஆசையில் தனது வீட்டில் தானே குண்டு வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் பிரவீன்குமார். குண்டு வீசப்பட்ட சமயத்தில் வீட்டிலிருந்த பிரவீன்குமாரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி.

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் நடந்த இருவேறு சம்பவங்கள் இவை. படைப்பூக்கத்தோடு விளம்பரங்கள் செய்வதில் பாரதிய ஜனதா கட்சியினர் கைதேர்ந்தவர்கள் என்பதை நாம் அறிந்ததே. அது ஒளிரும் இந்தியாவாக இருக்கட்டும் ‘சோட்டா பீம்’ மோடியாக இருக்கட்டும், நரியைப் பரியாக மட்டுமில்லை டைனோசராகவே பிரச்சாரம் செய்வதில் கில்லாடிகள். காந்தியை சுட்டுக் கொல்லச் செல்லும் முன் நாதுராம் விநாயக் கோட்சே தனது கையில் முசுலீம் பெயரைப் பச்சை குத்திக் கொண்டதில் இருந்து, சீனாவின் பேருந்து நிலையத்தின் புகைப்படத்தை மார்பிங் கூட செய்யாமல் அப்படியே சுட்டுக் கொண்டு வந்து ”இது எங்காளு அகமதாபாதில் கட்டிய பஸ் ஸ்டேண்டாக்கும்” என்று பீத்திக் கொள்வது வரை வெளிப்படும் வாய் கூசாமல் புளுகும் திறமையில் இருந்தே அவர்களின் பிரச்சார உத்தியை நாம் புரிந்து கொள்ள முடியும்.

மோடி
நரவேட்டை மோடியை சீவி சிங்காரித்து உட்கார வைத்திருக்கிறார்கள்.

எதிர்வரும் தேர்தலில் வென்று எப்படியும் ஆட்சியைப் பிடித்தே தீர்வது என்கிற வெறியோடு அலைகிறது இந்துத்துவ பயங்கரவாத கும்பல். இதற்காக பன்னாட்டு முதலாளிகள்,  உள்நாட்டு தரகு முதலாளிகள் மற்றும் உயர் நடுத்தர வர்க்க இந்தியர்களின் கவனத்தைக் கவர நரவேட்டை மோடியை சீவி சிங்காரித்து உட்கார வைத்திருக்கிறார்கள். மோடிக்கு ஆதரவான புளுகு மூட்டைகளை உற்பத்தி செய்யும் பணிக்கு மில்லியன் கணக்கான டாலர்களில் சம்பளம் கொடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த “விதேசி” நிறுவனம் ஒன்றையும் சமூகவலைத் தளங்களில் கருத்துருவாக்க உள்ளூர் “சுதேசிகள்” சிலரையும் பணிக்கமர்த்தியுள்ளது பாரதிய ஜனதா.

இவை ஒருபக்கமிருக்க சமூகத்தின் கீழ்தட்டில் இருக்கும் பெருவாரியான மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி தொய்ந்து போன நிலையில் இருக்கும் இந்து ஓட்டு வங்கியை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சிகளுக்கான உதாரணங்கள் தான் மேலே விவரிக்கப்பட்டிருக்கும் இரண்டு நிகழ்வுகள்.

அயோத்தியில் வருடா வருடம் பரிக்ரமா யாத்திரையை ஒழுங்கமைக்கும் கமிட்டித் தலைவராக உள்ள மகந்த் ஞான்தாஸ், இந்த யாத்திரை, மரபுகளின் படி சைத்ர பௌர்ணிமாவுக்கும் பைசாகி நவமிக்கும் இடைப்பட்ட நாட்களில் நடத்தப்படுவது என்றும், இவ்வருடம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி யாத்திரை நடந்து முடிந்து விட்டது என்றும் அறிவித்துள்ளார். மேலும் இந்துக்களின் ஓட்டுக்களை குறி வைத்து அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் என்று இந்துத்துவ கும்பலை எச்சரித்துள்ள ஞானதாஸ், இவர்கள் ஏற்கனவே மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட்தாலேயே இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இராமர் கோயில் விவகாரத்தில் இதற்கு மேலும் அரசியலாக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

அசோக் சிங்கால்
சும்மா வெறும் யாத்திரை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன் என்று அறிவித்துள்ளார் சிங்கால்.

ஞான்தாஸின் அறிவிப்பைத் தொடர்ந்து “பாடலின் பொருளில் என்ன குற்றம் உள்ளதோ அதற்கான தொகையை பரிசிலில் இருந்து கழித்துக் கொண்டு மிச்சத்தைப் பார்த்து போட்டுக் கொடுக்கும் படி” கேட்டுள்ளார் அசோக் சிங்கால். இது பரிக்ரமா யாத்திரை என்று நாங்கள் சொல்லவில்லை, சும்மா வெறும் யாத்திரை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன் என்று அறிவித்துள்ளார் சிங்கால். மேலும் தாங்கள் அறிவித்த யாத்திரை அரசியல் ரீதியிலானதல்ல என்றும் சாதுக்களால் நடத்தப்படுவதே என்றும் விளக்க முற்பட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஞானதாஸ், யாத்திரை திட்டமிடலுக்கான ஆலோசனைக் கூட்டங்களில் உள்ளூர் இந்துத்துவ அரசியல்வாதிகள் கலந்து கொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, அதற்காக அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கைகளில் “பரிக்ரமா” யாத்திரை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளார்.

யாத்திரைக்கு முன்பு உத்திரபிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்களைச் சந்தித்து அனுமதி கேட்டிருக்கிறார் சிங்கால். அனுமதி மறுக்கப்படும் என்று முளையிலேயே கிள்ளி விடாமல் கடைசி நேரம் வரை காத்திருந்து விட்டு பின்னர் கைது நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது மாநில அரசு. மாநில அரசின் இந்த நடவடிக்கைகளை விமரிசித்துள்ள மாயாவதி, பாரதிய ஜனதாவும் சமாஜ்வாதியும் இரகசிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தடைவிதிக்கப்பட்டதை குறித்து கருத்து தெரிவித்துள்ள அசோக் சிங்கால் தடையானது ”வெற்றி அல்லது வெற்றி” (Its a win-win situation) தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தடை விதிக்கப்படாமல் இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கான யாத்திரை என்பதை முகாந்திரமாக கொண்டு இந்துக்களை தூண்டி விட்டிருக்கலாம்; தடைவிதிக்கப்பட்டதால் இந்துக்களுக்கு உரிமை இல்லை என்பதைச் சொல்லி தூண்டி விடலாம் என்பதே அவரது பதிலின் பொருள். இதிலிருந்தே இந்துக்களை தூண்டி விட்டு மதக்கலவரங்கள் உண்டாக்குவதே இவர்களின் நோக்கம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

தேசிய அளவில் ராமர் கோயில் போன்ற பெரிய கலவரத் திட்டங்களை வைத்திருக்கும் வி.எச்.பி அதை மட்டும் நம்பிக் கொண்டிருக்கவில்லை. உள்ளூர் அளவில் மதக்கலவர அபாயங்களை ஊதிப் பெருக்கி குளிர்காய திட்டமிட்டு வருகிறது. கடந்த ஓரிரு வார காலகட்டத்தில் மட்டும் பீகார் மாநிலம் நாவாடா, ஜம்முவின் கிஸ்த்வார், உத்திரபிரதேசத்தின் முசாபர்நகர் போன்ற பகுதிகளில் சிறிதும் பெரிதுமாக வகுப்புவாத அடிப்படையிலான கலவரங்கள் நடந்துள்ளது. ஹரியானாவில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி, கள்ளத் தொடர்பு உள்ளிட்ட சொந்தக் காரணங்களுக்காக  பாரதிய ஜனதாவின் உள்ளூர் தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு இசுலாமியர்களைப் பொறுப்பாக்கி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பாரதிய ஜனதா பிரமுகர் பிரவீன் ஆடிய குண்டு வீச்சு நாடகத்தைப் போலவே கோவையைச் சேர்ந்த அனுமன் சேனா பிரமுகர் கடத்தல் நாடகம் ஒன்றை நடத்தி சமீபத்தில் தான் அம்பலமானார்.

சமூகத்தைப் பிளவுபடுத்த துடிக்கும் மதவாத பேரபாயத்தை மக்கள் புரிந்து கொள்வதோடு நச்சுப் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் அதை எதிர்த்து முறியடிக்க முன்வர வேண்டும். “நல்லாட்சி” மோடி பிரச்சாரங்களும் – இசுலாமிய வெறுப்புப் பிரச்சாரங்களும் வேறு வேறு அல்ல என்பதைப் புரிந்து கொள்வதோடு இவர்கள் ‘இந்துக்களுக்கே’ எதிரானவர்கள் தான் என்பதையும் நாம் புரிந்து கொள்வது அவசியம். மிகப் பெரிய விலையைக் கொடுத்த பின் அயோத்தி நகர இந்துக்கள் இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டுள்ளனர். அதனால் நாம் பட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை – பார்த்துக் கூட தெரிந்து கொள்ள முடியும்.

– தமிழரசன்.

 1. ////தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி, கள்ளத் தொடர்பு உள்ளிட்ட சொந்தக் காரணங்களுக்காக பாரதிய ஜனதாவின் உள்ளூர் தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு இசுலாமியர்களைப் பொறுப்பாக்கி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.//////////// இந்த விமர்சனத்திற்கும் /////நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் , பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை நக்சல்பாரி இயக்கங்களும் அதன் கொள்கையும்தான் காரணம்/////////// என்று கூறும் அரசின் கருத்துக்கும் வேறுபாடு இல்லை….. காமாலை கண்ணோடு பார்த்தல் எல்லாம் கள்ளக்காதல் கொலை என்றுதான் தெரியும்………… என்ன செய்வது…? சால்வாஜுடும் அமைப்பால் கொல்லப்படும் மக்களின் கொலைகளை நியாயப்படுத்த பழங்குடி மக்களை, நக்சல்பாரிஅமைப்பை சேர்ந்தவர்கள் என்று அரசு கூறுவது போல் இக்கொலைகளுக்கு நீங்கள் கூறும் காரணமும் உளளது…………

 2. காவிகளின் கோர முகத்தை தோலுரித்து காட்டியுள்ளீர்கள்.இஸ்லாமியர்களை பொது எதிரியாக காட்ட எவ்வளவு தரம் தாழ்ந்து நடந்துக்கொள்கிறார்கள் என்பதை இவர்களின் செயல்களிலிருந்து புரிந்துக்கொள்ள முடிகிறது. இப்படி அவர்களை பொது எதிரியாக காட்டுவதன் மூலம் தான் (பார்பனர்கள்) செய்கிற வருணாசிரம ஜாதிய அயோக்கியத்தனங்களை மறைத்து நாம் எல்லாம் ஹிந்துக்கள், ஹிந்துக்களின் எதிரி முஸ்லீம்கள் என்று மக்களை (ஏமாற்றி) எளிதாக திரட்ட முடிகிறது. அப்படித்திரட்டப்பட்ட மக்களின் ஓட்டுக்களை பொருக்கி நாட்டின் அதிகார கேந்திரங்களை கைப்பற்ற முடிகிறது. இதுதான் அவர்களின் முஸ்லீம் எதிர்ப்பின் தந்திரம். பார்பனர்கள் காலம் காலமாக அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு (அரசர்களுக்கு) ராஜகுருவாகவோ, கடவுளின் தரகர்களாகவோ, இல்லை அவர்களுக்கு(வெள்ளையர்களுக்கு) சொம்பு தூக்கியோ அதிகாரத்தையும், பதவி பவிசுகளையும் அனுபவித்தே பழக்கப்பட்டவர்கள். இதுதான் நாம் பார்க்கும் வரலாறு.அப்படி அனுபவித்தவர்களுக்கு சுதந்திரத்திற்குபிறகு அதிகாரங்கள் பார்பனர்களை விட்டு நழுவ தொடங்குகிறது. அதை மீட்டெடுக்கத்தான் இப்படிப்பட்ட பிரித்தாழும் சூழ்ச்சிகள். இந்துக்களின் மீது இவர்களுக்கு பற்றிருந்தால் 5 லட்சம் இந்துக்களை கருவறுத்தானே சிங்களன் .. அப்பொழுது ஒரு ம….ரையாவது அவர்களுக்கு எதிராக புடுங்கி இருக்குமா இந்த கூட்டம் ? ஏன் அவர்கள் இந்துக்கள் கிடையாதா ? இந்துக்களின் பெரும்பான்மையினராகிய தலித்துக்களுக்காக என்னத்தை கிழித்திருக்கிறார்கள் என்பதையாவது கூற முடியுமா ? தங்களின் மீடியாக்களின் பலத்தை கொண்டு மக்களை திட்டமிட்டு ஏமாற்றிவருகிரார்கள். மடையர்களாக்குகிரார்கள்.

  • துறையூரில் முதல் உலகிலேயே முதல்முதலாக ஈழதமிழகளுக்கென உண்டு உறைவிடப்பள்ளி rss ன் தோழமை அமைப்பான சேவாபாரதி மூலமாக விரைவில் ஆரம்பிக்கப்பட உளளது.

 3. Madagapatti shanmughiavel,

  The Srilanka issue was hijacked by your great Dravidian parties.the mismanagement of Srilanka relationships and the consequent problems are exclusively due to your own incompetence.

  You sit and complain all the time,I can imagine you are one of the obcs who blame Brahmins for all your incompetency.

  Bjp is dominated by obc people,leadership and cadre.

  Most Brahmins in India are with congress,I only pity your ignorance in these matters.

  And common people hate Muslims,they know the real nature of Muslims and their agenda.

  Nobody has to show it,only morons like oh cant see it.

   • No Common people hate Muslims as they see the behavior of Muslims when they get freedom and their excessive behavior and lack of respect for women is sickening.

    You are not so common,common man.

    • Yes I know very well and I know who screw this riots. Two family fight was made as Religious Fight in order to get vote bank.

     what lack of respect did you found for women and excessive behavior, Would you please explain?

     • One Muslim guy molested a jat girl and her brother went with her to school and he passed lewd comments again,so the brother went and beat him up,in return the Muslims killed the jat guy and his friend,

      So who started the riot now,these guys jats,they also vote for samajwadi party and not bjp,after all this the police file a case against the girls family,so tha jats make a panchayat and the Muslim starts using guns and kill the jats as they are coming back.

      Now the jats ll take their revenge,this is the story.

      I am sure,this is not what you know of.

 4. மலத்தை எடுத்து தமக்கு தாமே பூசிக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியின் அடிவருடிகளின் ஈனபுத்தியை மக்கள் புரிந்துக்கொண்டு செயல்பட்டாலே போதும் இவர்கள் விரிக்கும் கடைக்கு வியாபாரம் இல்லாமல் போகும்

   • தமிழில் பதிவு செய்ய வாய்ப்பு கொடுத்தாலும் அங்கிலத்தில் தான் பதில் கொடுப்பேன் என்று எழுதும் உன்னை போன்ற கோமாளி பார்ப்பனுக்கு , உண்மையினை என்னதான் எடுத்து இயம்பியானலும் மூளைக்குள் செலுத்த மாட்டாய் ஏனெனில் உன்னை போன்ற மாக்கள் மக்களை மாக்களாத்தன் முயற்சிக்குமே ஒழிய சுய மரியாதை கிடைக்க விட மாட்டீர்கள் ,

    அப்படி இல்லை யெனில் கண்ணுக்கு தெரிந்த்து நடந்த திண்டுக்கல் சம்வத்திற்க்கு உண்ணுடைய பதிலை எங்கே அழகாக விளக்கு பார்போம் ? நீ கொடுக்கும் பதில் எப்படி இருக்க போகிறது என்பதை என் போன்ற வினவு வாசகர்க்கு ஆர்வமாக உள்ளது. அல்லது இதும் அப்பகுதி முஸ்லீமகளின் சதி என்று நாக்கூசாமல் கூறினாலும் கூறுவாய் ?

    • Regarding Dindukkal,i do not support such false stuff by any member of the BJP or any associate,because we are not a party like silly DMK/ADMK and other parties.

     I hate when these guys do it because it ll become a case of puli varudhu next.

     Regarding not allowing people to think,it is you guys who confuse people with ideologies instead of helping their survival.

     You have silly ego and nothing more and you indulge in politics as much as all parties to survive.

     Finally,who are you to give anyone a right to type in thamizh.
     .

   • “””” yet another tuluk,

    traitors have no right to open their mouth “””””

    பொருள் :

    “”” மற்றொரு துலுக்கன்

    துரோகிகள், அவர்களது வாயை திறக்க எந்த உரிமையும் இல்லை “”””

    நான் கேட்திரேன் சுதந்திர இந்தியா முன்பு உன் பாட்டன்மார்கள் ஆங்கிலேயர்களிடம் ……….. செய்து கொண்டு இருந்த போது முதன் முதலில் சிப்பாய் கழகம் ஆரம்பிக்க பட்டது வேலூரில் இருந்து தானமே அது பெருவாரியான மக்கள் அங்கிருந்த முஸ்லீமகள் என்று கூருகின்றது வரலாறு , எது உண்மை துரோகிகள் அவர்களா அல்லது உம்முடைய வம்சமா ? கூறும் என்னுடைய சிண்டு முடியும் அழகு பார்பணரே ?

    • சரித்திரம் தெரிந்து பேசு. வடநாட்டில், ஆரம்பித்தது ! ஆமாம் துரோகத்தை, நீ பேசுவது காமடி!

     • சிப்பாய் புரட்சியில் :

      ஆனால் மே 10 ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமையாக இறங்கினர்.

      இத்தகைய ஒரு பின்னணியில் தான் கிழக்கிந்தியக் கம்பெனியின் பெரும்பாலான மேல்ஜாதி இந்துச் சிப்பாய்கள் முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் தலைமையை வேண்டி டெல்லி நோக்கிக் கிளம்பினார்கள்.

      டெல்லியை அடைந்த இந்தியச் சிப்பாய்களும் டெல்லியில் இருந்த இஸ்லாமியச் சிப்பாய்களும் இந்த எழுச்சிக்கு ஜாபர் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

      அந்நிய ஆட்சி வீழ்க!
      பேரரசர் பகதுர்ஷா வாழ்க!

      என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.

      இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார்.

      நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.

      கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.

      நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.

      பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர்.

      புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது.

      அதில் கைதான – கொல்லப்பட்ட – தூக்கிலேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.

      1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ”எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்” என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர்.

      இதுதான் ”சிப்பாய் கலகம்” என ஆங்கிலேயர்களாலும், ”முதல் இந்திய சுதந்திரப் போர்” என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது.

      இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.

      1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.

      டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டு வெள்யேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர்.

      1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப்படவில்லை.

      முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.

    • ஹிட்லேரின் வெற்றிகளை பார்த்த்து ஜெர்மன் கத்துக்க ஆரம்பிச்ச கும்பல் தான் பார்ப்பன கும்பல்.

      • முதலில் பெர்சியன்….உருது…பின்பு ஆங்கிலம்…அந்நிய ஆட்சியாளர்ளுக்கு நாட்டைக் காட்டி கொடுத்த கூட்டம்…இரண்டாம் உலகப் போரின் ஜெர்மன் கத்துக்க ஆரம்பிச்ச கும்பல்…

       இனி…மாண்டரின் மொழி கற்பார்கள்…..

   • ஐய்யோ….கமெடி தாங்கலையப்பா,இப்ப சந்திக்கு சந்தி…சந்தி சிரிக்கிறது காவியின் முகம் என்பதை மறந்துவிடகூடாது ,அதனால பொத்திக்கொண்டு இருப்பது நலம்

   • யார__ துரோகி வந்தேறி பார்ப்பன ______.நீதாண் துரோகி.வெள்ளைக்கார கிட்ட மன்னாப்பு கடுதாசி குடத்து ஜெயிலில் இருந்து தப்பிச்ச ஆளுங்க பாரதி சாவர்க்கர் வாஜ்பாய் எல்லாம் ஒங்க கூட்டம்.வெள்ளை நாயை விரட்டி அடிக்க வீரப்போர் புரிந்தவர்கள் நாங்கள்.

    ஆடு மாடு ஒட்டிக்கிட்டு பொழைக்க வந்த வந்தேறி _____நாக்கை அடக்கி பேசு.

   • நாட்டையே கூறு போட்டு விக்கும் bjp காங்கிரஸ் இரண்டுமே பார்ப்பன கூட்டம்தான்.

 5. வெறும் 200 பேர் தானே கூடிருக்கா…. அதுக்கு ஏன் இவ்ளோ பெரிய கட்டுரை. உழைக்கும் மக்கள் உம்ம பின்னாடி தான இருக்கா. கவலைப்படாதேள்… உமக்கு தான் ஓட்டூ. டோண்ட் ஒர்ரிரிரி..

 6. முஸ்லீம்கள் மீது பலிப்போடுவதர்காகவே பல குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி தன் மக்களையே கொன்ற காவி தீவிரவாதிகள் மிக கொடூரமானவர்கள். அவர்களை ஒரு மீடியாவும் அம்பலப்படுத்த துணியவில்லை. கூச்சமே இல்லாமல் மறுபடியும் முஸ்லீம்களின் மீது குற்றம் சுமத்துகின்றனர். இதற்கு நல்ல உதாரணம் சமீபத்திய புத்தகயா குண்டு வெடிப்பு. மறுநாளே தினமணி இஸ்லாமிய மதவெறி என்று தலையங்கம் எழுதியது. குற்றவாளி ஒரு காவி தீவிரவாதி என்ற உண்மை வெளிவந்தவுடன் அந்த செய்தி ஒரு ஸ்டாம்ப் சைஸ் பெட்டி செய்தியாக வெளியிட்டது. நியாயங்கள் மத வெறியால் புதைக்கபடுகிறது.

 7. முதலில் ஆங்கிலத்தில் மறுமொழியிடுவதை தடுக்கவேண்டும்,அனுமதிக்கக்கூடாது.தமிழையும்,

  தமிழர்களையும் இழிவுபடுத்துவது ஏற்க இயலாது.

  • ஆங்கிலதில் எழுதினால், அது எப்படி தமிழையோ தமிழரையோ இழிவு செய்வதாகும்? நீங்கள் தொட்டாசிணுங்கி ஆக இருந்து கொண்டு மற்றவரை குறை கூற வேண்டாம்.

  • Mr. Newmoon (I can understand what your name means only after translating to English), What is your problem if I write comment in English? I can read Tamil well. But writing, is somewhat bad. Also I have am trained to type in English keyboard (can reach 70 to 80 WPM). Why I have to type in Tamil with a transliteration box (that is at times buggy)? English typing is easy and I will type in English. If you are offended stop reading my comments. Else uninstall English fonts from your computer (oh! that is not possible?)

   One doubt. Did you type the URL in Tamil? Silly!

    • மிக்க நன்றி ஹரிகுமார்.உங்களது சிபாரிசு http://www.quillpad.in/index.html#.Ui77UD8cUVA

     ஐயும் பார்த்தேன்.மேலும் நான் nhm writer பயன்படுத்துகிறேன்.நமது மொழியை பயன்படுத்தும்

     பொழுது நம்மிடையே ஒரு நெருக்கம் ஏற்படும்.நன்றி.

 8. //காந்தியை சுட்டுக் கொல்லச் செல்லும் முன் நாதுராம் விநாயக் கோட்சே தனது கையில் முசுலீம் பெயரைப் பச்சை குத்திக் கொண்டதில் இருந்து,….//

  இதெல்லாம் ஆதாரமில்லாத கட்டுக்கதை என்கிறார்கள். வினவு ஆதாரம் தர முடியுமா?

 9. 60 வருடங்களிலேயே ஆதாரமில்லாத கட்டுக்கதை என்கிறீர்களே… அடப்பாவிகளா இன்னும் 30 வருடங்கள் போனால் இஸ்லாமிய தீவிரவாதிதான் காந்திய சுட்டுக்கொன்றான்னு சொல்லுவீங்க போலிருக்கே….

 10. கொட்சே தெளிவாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்,காந்தியை ஏன் கொன்றேன் என்று,அதை வெளியிட காங்கிரஸ் மருகிரது.அவர் காந்தியை சுட்டுவிட்டு தற்கொலை செய்துருக்கலாம்,ஆனால் சரண் அடைந்து நீதிமன்றம் சென்றார். பொய் சொல்லும் அவசியம் எங்களுக்கு இல்லை.

  தடை செய்யப்பட்ட RSS, 1964 இல் குடியரசு தின விழாவில் பங்கேற்க நேரு அனுமதித்தார்.

  அதற்கு என்ன காரணம்?

 11. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டப்பாக்கு கிலோ என்ன விலைன்னு கேட்குது அரை டவுசர் அறி. கோட்சே கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி இருந்ததை பற்றிதான் கேள்வி. அது உண்மையா? இல்லையா ? “இல்லை என்று சொன்னால்” நீ வரலாற்றை, உண்மையை தரம் தாழ்ந்து வலிந்து மறுக்கிறாய். உண்மை என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய நயவஞ்சகம், அதன் விளைவு எவ்வளவு கொடூரமானது என்பதை ஒப்புக்கொள். உன் கும்பல் தொடர்ந்து இப்படி ஈன செயலில் ஈடுபடுவது தவறு என்று கண்டித்து எழுது உனக்கு மனசாட்சி இருந்தால்!!!!!!

 12. So hard typing from ipad,pardon me for today alone,ll resume in tamizh tomorrow,

  Adhanaala today puliyan biryani please.

  Godse did not tattoo Ismail on his arm,I explained clearly that he surrendered and gave a speech giving reasons of killing Gandhi,he has no need to misguidedly anyone.

  Please don’t try to teach me what ll happen if I say yes or no, u don’t have the courage to admit it when you are wrong.

  You choose any version of history that suits your propaganda regardless of whether it is true or not.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க