privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஉயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!

-

யர்நீதிமன்றத்தில் தமிழ்! தமிழக வழக்கறிஞர்களின் போராட்டம் வெல்லட்டும்!!

லகெங்கும் அனைத்து நாடுகளிலும் அவரவர் தாய்மொழியிலேயே நீதிமன்றங்கள் நடக்கின்றன!
மக்களுக்குத் தெரிந்த மொழியில் – அவரவர் தாய்மொழியில் நீதிமன்றம் நடைபெறுவதே ஜனநாயகம்!

நீதிமன்றங்கள் மக்களுக்கானது! மக்களுக்கு நீதி வழங்குவதற்கானது!
நீதிபதிகள்-வழக்கறிஞர்களுக்கு வேலை அளிப்பதற்கு உருவாக்கப்பட்டதல்ல!

வழக்காடியும் தமிழன்! வக்கீலும் தமிழன்! நீதிபதியும் தமிழன்!
இடையில் எதற்கு ஆங்கிலம்? யார் நலனுக்கு ஆங்கிலம்?

ம.பி. – உ.பி, ராஜஸ்தான் – பீகாரில் 1961-லிருந்து இந்தி உயர்நீதிமன்ற மொழி!
தமிழகம், மேற்கு வங்கம், குஜராத் மக்களின் கோரிக்கைகள் மட்டும் கிடப்பில்!

ஏன் இந்தப் பாரபட்சம்?

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களும்
தங்கள் தாய்மொழியில் உயர்நீதிமன்றங்களில் வழக்காட அனுமதிக்கப்பட வேண்டும்!

ஆங்கிலேயன் போய் 65 ஆண்டுகள் ஆன பின்பும்
தமிழில் வாதிட போராட்டம் நடத்த வேண்டியிருப்பது அவமானம்! அவமானம்!!

அய்ந்து முறை முதல்வராயிருந்து-நடுவண் அரசில்
தொடர்ந்து அங்கம் வகித்த அய்யாவும்!
2010ல் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது எதிர்கட்சித் தலைவராயிருந்து – நான் ஆட்சிக்கு வந்தால் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவேன்- என உறுதிமொழியளித்த அம்மாவும்!

என்ன செய்யப் போகிறார்கள் தமிழுக்காக?

தங்கள் கட்சியின் கோடான,கோடித் தொண்டர்களை வீதியில் இறங்கி போராடச் செய்வார்களா?
குறைந்தபட்சம் அரசு வழக்கறிஞர்கள் தமிழில் வாதிட அம்மா உத்தரவிடுவாரா?

சாகும் வரை உண்ணாவிரதம்,
ஊர்வலம், ஆர்ப்பாட்டம்,மறியல், முற்றுகை, கருத்தரங்கம், பொதுக்கூட்டம்,
நீதிமன்றப் புறக்கணிப்பு, சிறை சென்று போராட்டம், டெல்லி சென்று ஆர்ப்பாட்டம்

என்ற தொடர் போராட்டத்தில்……………

இன்று மதுரை முதல் சென்னை வரை …..வாகனப் பேரணி………. வெற்றியடைந்து……தமிழ் உயர்நீதிமன்ற மொழியாக அறிவிக்கப்படும் வரை…………..

தொடர்ந்த பயணத்தில்……….

high-court-tamil-notice-2

high-court-tamil-notice-1

—————————————————–
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்புக்கு :
வழக்கறிஞர் மில்டன், சென்னை உயர்நீதிமன்றம்.(9842812062)
வழக்கறிஞர் வாஞ்சி நாதன், மதுரை உயர்நீதிமன்றம்.(9865348163)