Saturday, August 20, 2022
முகப்பு உலகம் ஆசியா தாலிபான்களை எதிர்த்து உயிர் துறந்த வங்கப் பெண் !

தாலிபான்களை எதிர்த்து உயிர் துறந்த வங்கப் பெண் !

-

ப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி (வயது 49) கடந்த புதன்கிழமை இரவு தலிபான் மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். கொல்கத்தாவை சேர்ந்த இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஜான்பஸ் கான் என்ற தொழிலதிபரைக் காதலித்து 1989-ல் திருமணம் செய்து கொண்டார்.

சுஷ்மிதா பானர்ஜி
சுஷ்மிதா பானர்ஜி

ஆப்கானிஸ்தானில் தனது கணவருடன் குடியேறிய அவருக்கு அங்கு சென்ற பிறகுதான் ஜான்பஸ் கானுக்கு ஏற்கெனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. மருத்துவரான சுஷ்மிதா பெண்களுக்கென தனியாக ஒரு டிஸ்பன்சரி-ஐ தனது வீட்டிலேயே தொடங்கி நடத்தி வந்தார். 1993-ல் தலிபான்கள் வரும்வரை வாழ்க்கை பிரச்சினைகள் ஏதுமில்லாமல் தான் போய்க் கொண்டிருந்ததாக பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட சுஷ்மிதா பானர்ஜி, ஆப்கன் சென்ற பிறகு தனது பெயரை சயீத் கமலா என்று மாற்றிக் கொள்கிறார்.

1993-ல் தலிபான்கள் அவரது டிஸ்பன்சரியை மூடும்படி உத்திரவிடுகின்றனர். மேலும் அவரை ஒழுக்கம் கெட்டவள் என்றும் முத்திரை குத்துகின்றனர். 1994-ல் அங்கிருந்து வெளியேறி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக முயற்சித்த சுஷ்மிதாவை அவரது கணவரின் சகோதரர் நேரில் வந்து கூட்டிக் கொண்டு போய் தலிபான்கள் வசம் கொடுக்கிறார். அவரை விடுவித்து விடுவதாக முதலில் வாக்களித்த தலிபான்கள் பின்னர் அவரை வீட்டுச் சிறையில் வைத்ததுடன், தினமும் பலவாறாக துன்புறுத்துகின்றனர்.

1995-ல் வீட்டை விட்டு வெளியேறிய அவர் காபூலுக்கருகில் மீண்டும் தலிபான்களிடன் சிக்கிக் கொள்ளவே, தான் ஒரு இந்தியக் குடியுரிமை பெற்ற பெண் என்றும், வீட்டை விட்டு ஓடும் குற்றத்தின் கீழ் தன்னை கைது செய்யவோ, தூக்கிலிடவோ இயலாதென்றும் அவர்களிடம் வாதிட்டு பின் விடுதலையாகிறார். நாடு திரும்பிய அவர் பின்னர் கொல்கத்தாவில் தனது கணவருடன் வந்து இணைகிறார்.

1995-ல் இவர் எழுதிய ‘ஒரு காபூல்வாசியின் வங்காள மனைவி’ என்ற நாவல் தலிபான்களின் அடக்குமுறைகளைப் பற்றிப் பேசியதால் தலிபான்களின் எதிர்ப்பை மிகுதியாகவே சம்பாதித்துக் கொண்டார். தலிபான்களிடமிருந்து அவர் தப்பியது பற்றிய இந்நூல் பிறகு மணிஷா கொய்ராலா நடித்த இந்தி திரைப்படமாகவும் பாலிவுட்டில் 2003-ல் வெளியானது. இசுலாத்திற்கும் மதம் மாற அவர் மறுத்து விடவே தலிபான்கள் அவர் மீது மேலும் ஆத்திரமடைந்தனர்.

வடக்கு கொல்கத்தாவில் வசித்து வந்த அவர் இந்த ஆண்டு ஜனவரியில் தான் தனது கணவருடன் ஆப்கானிஸ்தானின் பாக்திகா பகுதியில் உள்ள கரானா என்ற இடத்திற்கு குடியேறினார். இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றுவதுடன் எழுதவும், அப்பகுதி பெண்களின் வாழ்க்கையை படமாக்கவும் முயன்று கொண்டிருந்தார். தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை துவங்கவும் திட்டமிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் பெண்களது வாழ்நிலைமையை முன்னேற்ற உறுதி பூண்ட அவருக்கு மட்டுமின்றி, அவரது கணவரின் குடும்பத்தாருக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே 1998-ல் அவுட்லுக் பத்திரிகையில் அவர் எழுதிய போது, தலிபான்கள் பெண்களை கடைக்கு கூட போக அனுமதிக்காததை, புர்கா அணிவதை கட்டாயமாக்கியதை, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பாடல்கள் கேட்பதை தடைசெய்து ஆணை வெளியிட்டதை எல்லாம் அம்பலப்படுத்தியிருந்தார். சுஷ்மிதா பானர்ஜி உண்மையில் மிகவும் தைரியமாகவே இசுலாமிய அடிப்படைவாதிகளை ஆப்கனில் எதிர்கொண்டிருக்கிறார். அவர் வாழ்ந்த கிராமத்தில் எப்படி ஆயுதம் ஏந்திய வலதுசாரிக் கும்பலானது மக்களை தீவிரவாதிகளாக மாற்றிக் கொண்டிருந்தன என்பது பற்றியும் அவுட்லுக்கில் எழுதியிருந்தார்.

அவரது பால்ய கால நண்பரான தமல் பாசு கூறுகையில், சுஷ்மிதா உற்சாகமும், தைரியமும் உடைய பெண் என்றும், தங்களோடு நெருக்கமாக பழகியதாகவும், தனக்கு ஆயுதமேந்திய அடிப்படைவாத குழுக்களினால் விடுக்கப்படும் கொலை மிரட்டல்களைப் பற்றி அவ்வப்போது குறிப்பட்டதாகவும் கூறியுள்ளார். தலிபான்களைப் பற்றி மேலும் இரண்டு புத்தகங்களை சுஷ்மிதா எழுதியுள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு 1.30 மணிக்கு அவரது வீட்டை முற்றுகையிட்ட தலிபான்கள் அவரது குடும்பத்தினரை ஒரு கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு, சுஷ்மிதாவை மட்டும் தனியாகப் பிரித்துக் கொண்டு போய் சுட்டுக் கொன்றனர். பிணத்தை அருகில் இருந்த இசுலாமிய கல்விக்கூடத்தின் அருகில் போட்டுவிட்டு சென்றனர்.

எனினும் தாலிபான்கள் இந்தக் கொலையை செய்யவில்லை என்று மறுத்திருக்கிறார்கள். வேறு அமைப்புகளும் இக்கொலைக்கு பொறுப்பேற்கவில்லை. பொதுவில் இத்தகைய கொலைகள் ஊடகங்கள் மூலம் ஏற்படுத்தும் எதிர்மறைக் கருத்தை தவிர்ப்பதற்காகவே தாலிபான்கள் இதை மறுப்பதை வழமையாக வைத்திருக்கிறார்கள்.

கண்டனம்
சுஷ்மிதா கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வங்க மொழி எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் தங்களது அதிர்ச்சியையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர். ஒரு எழுத்தாளருக்கு 21-ம் நூற்றாண்டிலும் இப்படி நேர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார் மகாஸ்வேதா தேவி.  எழுத்தாளர் நபனீத சென் கூறுகையில், இச்செய்தியைக் கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், நடந்த சம்பவத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

“அவர் எழுதிய பல விசயங்கள் தலிபான்களுக்கு உவப்பில்லாதவை. எனவே தான் அவர் இந்தியா திரும்ப நேரிட்டது. ஆனால் அவர் மீண்டும் ஆப்கன் திரும்ப முடிவு செய்தது அவரது தைரியத்தை காட்டினாலும், புத்திசாலித்தனமானதல்ல” என்று கூறிய சென், வேறு ஒரு கலாச்சாரத்தில் வாழ்ந்து அது பற்றி தனது கருத்துக்களை சுஷ்மிதா பானர்ஜி பதிவு செய்தமைக்காக ஒரு இந்தியப் பெண் என்ற முறையில் தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற வங்க மொழி எழுத்தாளர் சிருசேந்து முகோபாத்யாய கூறுகையில், “இரண்டாம்தர குடிமக்களாக, வீட்டு விலங்குகளாக ஆப்கானிஸ்தான் சட்டத்தின்படி நடத்தப்படும் பெண்கள், அப்படி இனி அவர்கள் வாழ முடியாது என்பதை விளக்கும் வகையில் சுஷ்மிதா எழுதியுள்ளார். அவர் ஒரு தைரியமான பெண்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“என்னைப் போலவே ஒவ்வொரு பெண்ணும் தலிபான்களை எதிர்த்து போராட வேண்டும்” என இருபது ஆண்டுகளுக்கு முன் சுஷ்மிதா பானர்ஜி கூறியுள்ளார். பெண்களால் வாழ முடியாத நிலைமையை இசுலாமிய அடிப்படைவாத குழுக்கள் பலவும் ஆப்கானிஸ்தானில் நடைமுறைப்படுத்துகின்றன. தற்போதைய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பாக வாழ முடியவில்லை என்ற சூழலை இந்த ஆயுதக் குழுக்கள் கட்டியமைக்கின்றன. இந்த அடிப்படைவாத செயல்கள் அமெரிக்க ராணுவத்தின் செயல்களுக்கு ஒரு அடிப்படையை வழங்குகிறது. இசுலாமிய அடிப்படைவாதம் ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது சுஷ்மிதா பானர்ஜியின் படுகொலை. எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தும் சேர்ந்து இப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

இசுலாமிய மதவெறியர்களை தனிமைப்படுத்தி வீழ்த்துவதன் முக்கியத்துவம், அமெரிக்காவை வீழ்த்துவதற்கான முக்கியத்துவத்துக்கு குறைந்த ஒன்றல்ல !

 1. சுமிதாவின் இறப்புக்கு இரங்கலை முதலில் தெரிவிக்கின்றேன்.

  சுமிதா ஆப்கான் திரும்ப முடிவு எடுத்தமை முட்டாள் தனமான தீர்மானமாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.
  ஏற்கனவே தலிபான்களின் மிருகத்தனத்தை நேரில் பார்த்தவர் மீண்டும் அங்கு செல்ல முடிவு எடுத்தமை எவ்வளவு மோசமான தீர்மானம்

 2. நீங்க என்ன சொல்ல வர்றிங்க.. தாலிபான்களை எதிர்த்தா உயிர் துறக்கணும்னு சொல்றிங்க.. சரி பயமா இருக்கு.. எதுக்கு வம்பு…

 3. She got killed because she was about to marry another man from facebook because her husband was having illegal relationship with his widow sister in law.

  Moreover their family didn’t like sumita because she couldn’t bear children.

 4. “இசுலாமிய மதவெறியர்களை தனிமைப்படுத்தி வீழ்த்துவதன் முக்கியத்துவம், அமெரிக்காவை வீழ்த்துவதற்கான முக்கியத்துவத்துக்கு குறைந்த ஒன்றல்ல !”

 5. “இசுலாமிய மதவெறியர்களை தனிமைப்படுத்தி வீழ்த்துவதன் முக்கியத்துவம், அமெரிக்காவை வீழ்த்துவதற்கான முக்கியத்துவத்துக்கு குறைந்த ஒன்றல்ல”

  சரியான வரிகள். இதே மதவெறியர்களை இந்தியாவில் மட்டும் ஆதரிக்க காரனம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துங்கள் Vinavu groups.

  • இந்தியாவிலும் மத வெறியர்களை வினவில் எப்போதும் ஆதரித்தது இல்லை… உதாரணமாக நீங்கள் வினவில் தேடிப்பாருங்கள் “ரிசானநபீக்”, “ஷக்கீல- ஆடையில்லாமல் இருப்பது சுதந்திரமா பர்தா கண்ணியமா” “தவுஹீத் ஜமாத் பொருக்கி தளபதி” போன்ற கட்டுரைகளை
   மேலும் சாதாரணம் முஸ்லீம்கள் மீதான காவிகளின் அவதூறூகளுக்கு எதிராகவும் செயல்திட்டத்துகு எதிராகவுமே வினவு இருக்கிறது மேலும் மதம் அது எந்த வடிவத்தில் வர்ணத்தில் வந்தாலும் மக்களுக்கு எதிரானதே என்பதிலும் மாற்று கருத்துக்கு இடமில்லை “ராகூல்”

 6. இப்போதுதான் தலிபான்களின் மதவெறி உங்களுக்கு தெரிகிறது போலும். இதில் கூட மிகவும் எச்சரிக்கையாக முஸ்லீம் மதவெறி என்பதை தவிர்த்து உள்ளீர்கள். இஸ்லாமிய மதவெறி எப்படியெல்லாம் தலைவிரித்து ஆடுகிறது என்பது தெரிகிறது. தங்களது மக்கள் மீதே சிரியாவில் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை கொன்றுள்ளார்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்கள். “இந்து மத வெறியர்கள்தான்” இந்த கொலையை செய்தார்கள் என்று குறிப்பிடுவது உங்களது பழக்கம். அதனை விட்டு விட்டிர்கள. அதுதான் ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை எப்போதாவது இதுபோல் ஒன்றை கூறி தங்களை “மதச்சார்பற்றவர்” என்ற முத்திரை குத்திக்கொள்ள விருபுகிரிர்கள் போலும். என்ன இருந்தாலும் யானை யானை யானைதான் கழுதை கழுதை கழுதைதான். மாற்ற முடியாது. விரைவில் இந்துக்களைப் பற்றி கடுமையாக விமர்த்சிக்க இது உங்களுக்கு உதவும். அவசர கோலத்தில் “போலி மதசார்பின்மைக்கு” வக்காலத்து வாங்குகிறீர்கள்.

   • ஏம்ப்பா ஆரியன். ( அப்பாவி)
    அப்போ இங்கவுள்ள மதவாத கும்பலை என்ன செய்யலாம்?என்ன செய்யவேண்டும்.?

   • தாலிபான்களை அடியோடு நசுக்க ஸ்வயம் சேவக்குகளை இந்தியா அனுப்பிவைக்க வேண்டும்

  • வினவை பொருத்தவரை, ஒரு நபர் இந்து என்றால் அவர் இந்து மதத்தையும் சேர்த்து திட்டுவார். செஞ்சது இஸ்லாமியர் என்றால், அவர்களை மட்டும் ‘பாசத்தோடு’ திட்டுவார். அவங்க மதம் தான் செய்யச்சொல்லுதுங்கிறதை ‘செலக்டிவ் அம்ம்னீஷியா’வில் விட்டுடுவார். இது அவிங்களுக்கு சகஜம் தானே 😀

  • ஏம்பா மு நாட்ராயன் !! பெரோஸ் இட்ட மறுமொழியை படிக்கவில்லையா ?

   //இந்தியாவிலும் மத வெறியர்களை வினவில் எப்போதும் ஆதரித்தது இல்லை… உதாரணமாக நீங்கள் வினவில் தேடிப்பாருங்கள் “ரிசானநபீக்”, “ஷக்கீல- ஆடையில்லாமல் இருப்பது சுதந்திரமா பர்தா கண்ணியமா” “தவுஹீத் ஜமாத் பொருக்கி தளபதி” போன்ற கட்டுரைகளை
   மேலும் சாதாரணம் முஸ்லீம்கள் மீதான காவிகளின் அவதூறூகளுக்கு எதிராகவும் செயல்திட்டத்துகு எதிராகவுமே வினவு இருக்கிறது மேலும் மதம் அது எந்த வடிவத்தில் வர்ணத்தில் வந்தாலும் மக்களுக்கு எதிரானதே என்பதிலும் மாற்று கருத்துக்கு இடமில்லை “ராகூல்”//

   ஒரே சமயத்தில் இந்து மதவெறியர்களிடமிருந்தும், முஸ்லீம் மத வெறியர்களிடம் இருந்தும் வினவு வெறுப்பினை சம்பாதிபதிலிருந்து வினவு சரியான வழியில் செல்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

 7. தாலிபான்கள்தான் இதனை செய்தனரா? அல்லது வழமை போல் தாலிபான்களின் பெயரை கெடுக்க அமெரிக்கா செய்த சூழ்ச்சியா? உண்மையான விசாரணையில் தெரிய வரும்.

  • நேற்று சு-பிரியன் அருந்திய காப்பியில் ஈ கிடந்தது… விசரித்ததில் அது அமெரிக்காவின் சதி என்று தெரிகிறது.நாசா அனுப்பிய ஒரு வின்கலம் எரிபொருள் பற்றாமல் தடுமாறியுள்ளது. அல்லாவின் அருளை வேண்டாமல் அந்த நாசா கம்பூட்டரிடம் விடை தேடியுள்ளது. அதில் ஏற்பட்ட பிழையில் அது போப் 45ஆம் ஜான்பால் வீட்டில் விழ இருந்தது. இது தெர்ந்தால் ரஷ்யா பொன்ற நாடுகள் தன்னைக் கேலி செய்யும் என்று பயந்து சு-பிரியன் காப்பியில் விழச்செய்தது. இதை ஈ என்று இந்து மத வெறிக் கும்பல் ஒன்று சொல்லி வருகிறது. இப்படி முசுலீம்கள் காப்பிகூட குடிக்க முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது!

 8. இந்தப் படுகொலை பற்றி ஒரு இந்திய இஸ்லாமிய நண்க்பர்களும் தஙகள் திருவாய்களைத் திறந்து
  அவர்களது ____ இஸ்லாமிய மதவெறியயும் சொல்லவில்லையே ! சுஷ்மிதா ஒரு தைரியமிக்க பெண் தான் ! அதில் சந்தேகமே இல்லை ! ஆனால் அவர் ஒரு முட்டாள் !ஒரு மெத்தப் படித்த மருத்துவர் போயும் போயும் ஒரு ஆப்கானியரைப் போய் காதலித்து திருமணம் செய்தும் விட்டு அந்தக் காட்டுமிராண்டி தேசத்தில் எப்படித்தான் வசிக்க முடிவு செய்து இப்படி மடத்தனமாக தன் உயிரையும் விட்டு விட்டாரோ

 9. இஸ்லாத்தில் இல்லாத தீவிரவாதத்தை வளர்ப்பதும் பிறகு அதை காரணம் காட்டி அந்நாட்டை ஆக்கிரமிப்பதும் அமெரிக்காவிவுக்கு உரித்தான கலையும் வேலையும் .
  அல்காய்தாவை பாக்கிஸ்தானிலும் இராக்கிலும் ஒலிப்பதாக கூறிக்கொள்ளும் அமெரிக்கா சிரியாவில் அல்காய்தாவுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கி வருகிறது .ரசாயன ஆயுதங்களை பிரோயோகித்தது கிளர்ச்சியாளர்கள் தான் என்பதற்கு தங்களிடம் வலுவான ஆதாரங்கள் இருப்பதாக ரசியா கூறியதாலே அமெரிக்க தனது நடவடிக்கையை தள்ளி போட்டுவருகிறது

  • who killed 900 jews in one night? who tortured their cheif? who married the chief’s wife and slept with her on the same day? what do you call such actions? if you say, that is the practice of old days, then acknowledge that example of your prophet is invalid today. if you say it is valid today, then that itself makes you a terrorist!

 10. அவனுடைய பாதம் ///who killed 900 jews in one night? who tortured their cheif? who married the chief’s wife and slept with her on the same day? what do you call such actions?

  முஹம்மது நபிசல் அவர்களே 900 யூதர்களை கொன்றார்கள் .அடிக்கடி முஸ்லிம்களுக்கு தொல்லைகள் கொடுத்தும் முஸ்லிம் எதிரிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியும் ஒற்று வேலை செய்து வந்ததாலும் இனி அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று போடப்பட்ட உடன்படிக்கையை மீறியதாலும் போர் நடத்தி கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப் பட்டனர் .அதே சமயத்தில் ஒரு யூத பெண் முகம்மது நபிசல் அவர்களை விருந்துக்கு அழைத்து விஷத்தை உணவில் கலந்து கொடுத்து கொல்ல முயற்சித்ததையும் பின்னர் மன்னித்து விடுதலை செய்ததையும் இங்கே கவனத்திற் கொள்ள வேண்டும் .யூத பெண் இப்படிபட்ட பயங்கரவாதிகளாக இருந்தால் யூதர்கள் எப்படி இருப்பார்கள் .அந்த 900 பேர்களை போரில் வென்று மரணதண்டனை வழங்காவிட்டால்ஒரு கனனத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை சித்ரவதை செய்து கொன்றவர்கள் முகம்மது நபி ஸல் அவர்களை சும்மா விடுவார்களா?..அவரது தலைமையை கப்பம் கொடுக்க மறுத்ததால் கொல்லபப்ட்டார் .போரில் தோற்றால் பெண்கள் கைது செய்யப்பட்டு அடிமைகளாக்கப் பட்டதும் கசக்கிய மலர்களாக பிய்த்து எறியப் படுவதும் அன்றைய காலத்து பழக்கம் .ஆனால் நபி ஸல் அவர்கள் அந்த அத்தலைவரின் மனைவியை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து மணந்து கொண்டார்கள் .ஒருமாத துக்க அனுஸ்டிப்புக்கு பிறகே அந்த பெண்ணுடன் தாம்பத்திய வாழ்க்கையை துவங்கினார்கள் .போர் நடந்த அதே நாள் என்பது உச்சகட்ட பொய்.
  if you say, that is the practice of old days, then acknowledge that example of your prophet is invalid today.///
  அன்றைய அப்படியான போர் முறைகளை அடிமைத்தனத்தை முதன்முதலாக விடுதலி செய்து திருமணம் செய்து மனைவி அந்தஸ்து கொடுத்து அடிமைத்தனத்தை ஒழித்ததும் இஸ்லாமே .ஆதாலால் இப்போதும் நபிசல் செலவக்குள்ள முன்மாதிரியாகாவே திகழ்கிறார்.
  if you say it is valid today, then that itself makes you a terrorist!
  இப்போதும் இஸ்லாம் உலகத்திற்கு அமைதியான வாழ்க்கைகு வழிகாட்டுகிறது .இயேசுவை கொன்றவர் தீவிரவாதி காந்தியை கொன்றவர்கள் பயங்கரவாதிகள் ஓட்டுகளுக்காக உபியில் கலவரத்தை உண்டுபண்ணுபவர்கள் பயங்கரவாதிகள் .நசியப்போகும் பொருளாதரத்தை பேரழிவு ஆயுதம் என்று உலக ம்கா பொய்யை சொல்லி லட்சகணக்கான மக்களை கொன்று எண்ணை திருடியவர்கள் பயங்கரவாதிகள் .ஜப்பானில் கோடிக்கணக்கான மக்களை கொன்று இன்று வரை அதன் பாதிப்பை விளைவித்தவர்கள் பயங்கரவாதிகள் .கோத்ரா ரயிலை எரித்து அதன் மூலம் ஹிந்து முஸ்லிகளை பிரித்து ஓட்டுக்களை தக்கவைத்து கொண்டவர்கள் பயங்கரவாதிகள் .முஸ்லிம் பொறுக்கிகளை விலைகொடுத்து வாங்கி அவர்கள் மூலம் அப்பாவி முஸ்லிகளுக்கு தீவிரவாத போதனை வழங்கி ஆயுதம் வழங்கி பயங்கரவாதிகளை உருவாக்குபவர்களே மெகா பயங்கரவாதிகள்

  • அந்த காலத்து மூடபழக்கங்களை மாற்றுவதுதானே இறைதூதரின் பணி ?
   அதை விடுத்து அதே சம்பிரததாயங்களை செய்வதற்கு அல்லது சற்றே மாற்றி ( அதே நாளில் கர்பலிப்பு என்பதற்கு பதிலாக ஒரு மாதம் கழித்து …)
   செய்வதற்கு எதற்கு இறை தூதர் ?
   மருமகளை மணந்து கொண்டார் . மிரு மகள் என்பதே இன்னொரு மகள் என்று பொருள் தெரியுமோ ?
   வாழ்கி கொடுத்தார் வாழ்க்கை கொடுத்தார் என்று உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள்

  • Ibrahim,

   Your lies and deception make my blood boil.

   //அடிக்கடி முஸ்லிம்களுக்கு தொல்லைகள் கொடுத்தும் முஸ்லிம் எதிரிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியும் ஒற்று வேலை செய்து வந்ததாலும் இனி அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று போடப்பட்ட

   உடன்படிக்கையை மீறியதாலும் போர் நடத்தி கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப் பட்டனர்//

   so many lies in one sentence? Let’s debate them in coming days.

   //விருந்துக்கு அழைத்து//

   விருந்துக்கு அழைததார்களாம்! வெட்கமாக இல்லை? She was ordered to cook for the invaders. Could she have refused?

   //மன்னித்து விடுதலை செய்ததையும் இங்கே கவனத்திற் கொள்ள வேண்டும்//

   killing women was not valour among those tribes. So women were left alive. Still at least one lady is known to have refused

   to be left alive and was beheaded with the men. After killing all the men, they enslaved all the women for sex and labour.

   Leaving one old lady alive for failed attempt is not mercy. சாணியில் கிடைத்த தானியம்.

   //யூத பெண் இப்படிபட்ட பயங்கரவாதிகளாக இருந்தால்//

   This lady tried to take revenge by poisoning the murderer of her whole tribe and you call her terrorist?

   //அந்த 900 பேர்களை போரில் வென்று//

   What war? there is no limits to your decption. Jewish tribe of Banu quraiza was walled town and it was seiged and their acces

   to water and food was cut. After around two weeks, jews had to surrender, for want of water and food, particulary for their

   children. You cannot imagine their plight with not even water to give their children. So no combat took place. You call it a

   war?

   //கப்பம் கொடுக்க மறுத்ததால்//

   என்ன மயி**கு? மாமனா மச்சானா? ……..

   //கசக்கிய மலர்களாக பிய்த்து எறியப் படுவதும்//

   What exactly do you mean? were they killed out right? or enslaved for sex and labour? or enslaved for labour alone?

   //அத்தலைவரின் மனைவியை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து மணந்து//

   Why did Muhamadans first enslaved those women? Muhamadan gang killed all the men who surrendered without fight hoping for

   some peace agreement and these Muhamadans call those jewish women slaves. What a cruel mentality?

   // ஒருமாத துக்க அனுஸ்டிப்புக்கு பிறகே அந்த பெண்ணுடன் தாம்பத்திய வாழ்க்கை//

   Muhamad raped her on the same day. I will bring the proof later, jingchaallaa.

   //அடிமைத்தனத்தை முதன்முதலாக விடுதலி செய்து திருமணம் செய்து மனைவி அந்தஸ்து கொடுத்து அடிமைத்தனத்தை ஒழித்ததும் இஸ்லாமே//

   Did all the women were made wives? or atleast most of them? Barring one woman, they all were just used as sex toys among

   jihadis and surplus women were sold to other muhamadans. The children born of those enslaved women were also considered as

   enslaveds. No abolition of slavery is possible when Muhamadism has upperhand.

   Ibrahim,

   Let me see how long you will continue with this debate.

 11. Dear Vinavu,

  I made a comment this morning in this article. You did not publish it. Later in the after-noon, i made another one with reduced content and effect. You still did not publish it.

  • Univerbuddy நீங்கள் பொய்கள், அவதூறுகள், மற்றும் வெறுப்புக்கள், துவேசங்களை முன்வைக்க்கும் மறுமொழிகளை வெளியிட இயலாது. கருத்து வேறுபடலாம். ஆனால் கண்ணியமான முறையில் பேச வேண்டும். இது உங்களுக்கு மட்டுமுள்ள விதியல்ல, எல்லோருக்கும்தான். நன்றி

   • Dear Vinavu,

    Muhamadans here are allowed to make comments of பொய்கள், அவதூறுகள், வெறுப்புக்கள், மற்றும் துவேசங்கள் on Americans, Jews, etc all the time.

    I said this lady was a victim of love jihad. It is based on the article itself. Where is the ground for பொய்கள், அவதூறுகள், வெறுப்புக்கள், மற்றும் துவேசங்கள்? The muhamadan husband was already married, he has hidden his marriage and cheated a non-muhamadan girl acting to love her. As a muhamadan he has no legal hurdles too. This is what i said. இதில் கண்ணியத்திற்கு என்ன குறை?

    I hope you would at least publish this comment.

 12. கம்யூனிச கட்சி வெறியர்களை குறிப்பாகக வினவு வகையறாக்களை தனிமைப்படுத்தி வீழ்த்துவதன் முக்கியத்துவம், அமெரிக்காவை வீழ்த்துவதற்கான முக்கியத்துவத்துக்கு குறைந்த ஒன்றல்ல !

  • கம்யூனிசத்தையும் வீழ்த்தனும்கிறீங்க, அமெரிக்காவையும் வீழ்த்தனும்கிறீங்க. ஒன்னுமே புரியலையே

 13. தமிழ் பாய், இத தாண்டி உங்க உலகம் இருட்டு என்பது எங்களுக்கு நல்லாவே தெரியும்.

  • சூரியனுக்குக் கீழ் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் அடி ஆழத்தில் இருப்பதும், இமயமலையின் உச்சியில் இருப்பதும், அதில் புதைந்து கிடப்பதும் எல்லாம் அறிந்த அதிபுத்திசாலி நீங்கள் என்பது எனக்குத் தெரியும். நானெல்லாம் ஒன்றும் அறியாதவன் என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் வெட்கப்படுவதே இல்லை. ஆனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. உங்களைப் போல் கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்வது தான் சரி என்று வாதிடும் யோக்கியன் இல்லை நாங்கள். நாங்கள் விக்கி பீடியா லிங்க் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் விக்கி பீடியாவில் எழுத முடியும் என்பீர்கள். 1 + 1 என்று நாங்கள் சொன்னால் இல்லை அது மூன்று தான் என்று ஒப்பாரி வைப்பீர்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். விவாதம் திசை மாறிவிடும் என்பதால், நாங்கள் முட்டாளாகவே இருந்து விட்டுப் போகிறோம். நீங்கள் அதி அதி அதி புத்திசாலியாகவே இருங்கள்.

 14. ஹா! ஹா! ஹா!. முஹமது நபியின் மேல் எவ்வளவுதான் அவதூறை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தாலும் இன்னிய தேதிக்கு வளரும் மதம் இஸ்லாம் ஒன்றுதான். இறுதியாக தோன்றிய மதமான இஸ்லாத்தில் மற்ற மதங்களை விட சில முற்போக்கு கருத்துகள் இருப்பதே அதற்கு காரணம். என்ன கைய புடிச்சு இழுத்தியா என்ற வடிவேலு பாணியில் என்னதான கூப்பாடு போட்டாலும் ஒன்னும் தேறாது. முதலாளித்துவம் நீடித்திருக்கும் வரையில் இஸ்லாம் வளர்ந்துகொண்டேதானிருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க