Monday, July 26, 2021
முகப்பு அரசியல் ஊடகம் ஒருவருக்கு 5 நாற்காலி - பாஜக பொன் ராதாகிருஷ்ணனின் புரட்சித் திட்டம் !

ஒருவருக்கு 5 நாற்காலி – பாஜக பொன் ராதாகிருஷ்ணனின் புரட்சித் திட்டம் !

-

ரும் 26.9.2013 திருச்சியில் நடைபெற இருக்கும் கிரிமினல் மோடியின் தலைமையிலான இளந்தாமரை மாநாட்டிற்காக பாஜக எல்லா சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ஏகோபித்த ஜால்ராவையும் போட்டு வருகிறார்கள். மகஇக பொதுக்கூட்டத்தை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த ஊடகங்கள் மோடியின் கூட்டச் செய்திகளை அவற்றில் செய்தி என்று எதுவும் இல்லையென்றாலும் அடித்து விடுகிறார்கள்.

தினமலர் உள்ளிட்ட பார்ப்பனிய ஊடகங்கள் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள 1 இலட்சம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள், நேரடியாக வருபவர்கள் ஒரு இலட்சம் ஆக இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் அணி திரள்கிறார்கள் என்று பில்டப் கொடுத்து வருகிறார்கள்.

சென்னையில் இருந்து மகஇக கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது பேருந்திலிருந்து பொன்மலை இரயில்வே திடலைப் பார்த்தோம். இதில்தான் மோடி பேசுகிறார். என்னடா இவ்வளவு சின்ன இடமாக இருக்கிறதே, இதில் எப்படி லட்சம் பேர் இருக்க முடியும் என்று யோசித்தோம். இடையில் எமது தோழர்கள் ரயில்வே துறையில் விசாரித்து விட்டு சேகரித்த தகவல்கள் மற்றும் கள ஆய்வு மூலம் அதன் உண்மை நிலையை அறியத் தந்த போது நமது சந்தேகம் சரிதான் என்பதோடு இவர்களது புள்ளி விவரம் இங்கேயும் பெரிய மோசடி என்பதை உங்களுக்கு அறியத் தருகிறோம்.

பொன்மலை ரயில்வே திடல்
20,000 இருக்கைகளைக் கூட போட முடியாத பொன்மலை ரயில்வே திடல்

பொன்மலை ரயில்வே திடலில்தான் சென்ற தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் ஜெயலலிதா கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் நெருக்கியடித்துக் கொண்டே நின்றார்கள். பத்திரிகையாளர்கள் மற்றும் போலிசு தகவல் படி அதன் எண்ணிக்கை 40,000 ஆகும். நெருக்கியடித்துக் கொண்டு நின்றாலே இவ்வளவுதான் என்றால் நாற்காலி போட்டு உட்கார்ந்தால் எவ்வளவு வரும்?

பொன்மலை ரயில்வே திடலில் மோடி பேசும் மேடையைச் சுற்றி 60 அடி தூரம் பாதுகாப்பிற்காக வெற்றிடமாக விடப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி மைதானத்தை 25 சதுரங்களாக பிரித்திருக்கிறார்கள். ஒரு சதுரத்தில் 750 நாற்காலிகள் போட முடியும், அவர்களது திட்டமும் அதுதான். அதன்படி 25 X 750 = 18,750 இருக்கைகள் மட்டுமே வருகிறது. மேடைக்கு இடது புறமாக பத்திரிகையாளர்களுக்கு 250 இருக்கைகள் போடப்பட்டுள்ளது. அதையும் கூட்டினால் மொத்தம் 19,000 இருக்கைகள் மட்டுமே போட முடியும். மேடையின் பின்புறம் உள்ள திறந்த மைதானத்தை கார் பார்க்கிங்கிற்காக ஒதுக்கியிருக்கிறார்கள்.

ஆக பாஜகவின் மோடி கலந்து கொள்ளும் இளந்தாமரை மாநாட்டில் பார்வையாளர்கள் அதிக பட்சம் 19,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். மேலும் அருகாமை வீடுகள், சாலைகளிலிருந்து ஒரு சிலர் நின்று பார்த்தாலும் அது ஒரு ஆயிரத்தைக் கூட தாண்டாது. கொஞ்சம் பெரிய மனது கொடுத்து கணித்தாலும் 20,000பேருக்கு மேல் இங்கே இடமில்லை. இதை சங்க வானர அம்பிகளுக்கு ஒரு சவாலாகவே தெரிவிக்கிறோம். இதைத் தாண்டி அங்கே ஒரு ஈ, காக்காய் கூட அமர முடியாது. இதில் 1 அல்லது 2 இலட்சத்திற்கு என்ன வேலை?

நாற்காலி கணக்கு
ஒரு நாற்காலி மேல் ஐந்து நாற்காலிகளை அடுக்கினால் அது ஒரு இலட்சத்தை தொடும்.

யோசித்துப் பார்த்தால் ஒரு நாற்காலி மேல் ஐந்து நாற்காலிகளை அடுக்கினால் அது ஒரு இலட்சத்தை தொடும். அப்படி அடுக்கி ஐந்தாவது நாற்காலி மேல் ஒருவரை அமர்த்தினால் மட்டுமே அந்தக் கணக்கு சரியாக வரும். இப்படி ஒருவருக்கு ஐந்து நாற்காலி வழங்கும் இந்தப் புரட்சிகர திட்டத்தை தமிழக பாஜக கும்பல் அதி தீவிரமாக யோசித்து நடைமுறைப்படுத்தப் போகிறது.

இதெல்லாம் சாத்தியமா என்று கேட்காதீர்கள். உத்தர்கண்ட் வெள்ளத்தில் ஐந்து டாடா சுமோவை வைத்து 15,000 குஜராத் மக்களைக் காப்பாற்றும் போது 19,000 பேர் அமர முடிகின்ற இடத்தில் ஒரு இலட்சம் பேர் அமர்ந்ததாக கதை விட முடியாதா என்ன?

இப்பேற்பட்ட புளுகர்கள்தான் மைதானத்தில் 1 லட்சம் நாற்காலிகளை போடப்போகிறோம், இணையத்தில் ஒரு இலட்சம் பேர் பதிவு என்று வாய் கூசாமல் புளுகி வருகிறார்கள். குஜராத் வளர்ச்சி குறித்த மோடியின் பொய்கள் போல மோடியின் கூட்டத்திற்கு வரும் பார்வையாளர் எண்ணிக்கையும் பொய்யாகத்தானே இருக்க முடியும்?

மகஇக பொதுக்கூட்டத்தை இருட்டடிப்பு செய்த ஊடகங்கள், மோடியின் பேனர் கிழிபட்டதற்காக 30 பாஜகவினர் சாலை மறியல் செய்ததை மாபெரும் போராட்டமாக வெளியிட்டன. முதலாளிகளின் காசில் வயிறு வளர்க்கும் பாஜக தனது விளம்பரங்களுக்காக பேனர்களையும், சுவரொட்டிகளையும் ஒட்டுவார் ஆளின்றி இறக்குமதி செய்து வருகிறது.

பொன்மலை ரயில்வே திடலுக்கு அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரியை வரும் வியாழன் அன்று விடுமுறை அளிக்க கோரி பாஜக நிர்ப்பந்தித்து வருகிறது. அதை எதிர்த்து கல்லூரி நிர்வாகத்தினர் சென்னையில் முறையிட்டுள்ளனர். தொப்பி மற்றும் தாடி வைத்திருக்கும் இசுலாமிய மக்களெல்லாம் போலிசின் கெடுபிடிகளுக்கு ஆளாகி உள்ளனர். இதைக் கண்டித்து இசுலாமிய அமைப்புகள் போலிசிடம் புகார் அளித்திருக்கின்றன.

பொதுக்கூட்டம் முடிந்தாலும் எமது அமைப்புகளின் பிரச்சாரப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இசுலாமியர் குடியிருப்புகளிலெல்லாம் எமது தோழர்கள் நம்பிக்கையூட்டும் விதமாக தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மோடி வரும் நாளன்று திருச்சியில் உள்ளூர் விடுமுறை விடுவதற்கு பாஜக மற்றும் தமிழக அரசு முயன்று வருவதாக தெரிகிறது. மேலும் திருச்சி நகரின் போக்குவரத்தை ரத்து செய்து தீவு போல ஆக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். வெளியூர் பயணிகள் அன்று திருச்சியைக் கடந்து போவது கடினம் என்பதாகத் தெரிகிறது. எல்லாம் அந்த 19,000 சீட்டுகளுக்காக உள்ள கெடுபிடிதான்.

மேலும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு எதாவது கலவரம் செய்வதும் இந்துமதவெறியர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது. அது கூட்டத்திற்கு முன்போ பின்போ கூட இருக்கலாம். எனினும் இந்த மதவெறிக் கூட்டத்தை நிர்மூலம் ஆக்கும் வரை நாமும் ஓயக்கூடாது. அது வரை தமிழக மக்களுக்கும் நிம்மதியில்லை.

 1. கண்டுபுடிசிட்டரு அறிவுக்கொழுந்து..உங்களுக்கு வேற வேலையே இல்லையா???உங்க காமெடிக்கு அளவே இல்லாம போச்சு வினவு..

 2. ஜமால் முகமது கல்லூரியை வரும் வியாழன் அன்று விடுமுறை அளிக்க கோரி பாஜக நிர்ப்பந்தித்து வருகிறது. அதை எதிர்த்து பள்ளி நிர்வாகத்தினர் சென்னையில் முறையிட்டுள்ளனர்.

  கல்லூரியா பள்ளியா…ஒரு முடிவுக்கு வாருங்கள்…அது கல்லூரி…அதுவும் ஒரு மெம்பாலத்தின் கீழ் அமைந்துள்ளதால் எந்தப் பிரச்சனையும் இல்லை…அந்தக்கல்லூரியை விடுமுறை அளிக்க கோரி பாஜக நிர்ப்பந்தித்து வருகிறது என்று பேச்சு வாக்கில் சொன்னால் எப்படி? ஆதாரம் என்ன?

  உங்களுக்கு மோதிஜி ஜெயிக்கப்போகிறார் என்ற பயமும் பதட்டமும் அதிகரித்துவிட்டது அதனால் தான் இப்படி அவசர அவசரமான் அரைவேக்காட்டு கட்டுரைகள் எழுதுகிறீர்கள்

  (குறிப்பு – மோதிஜி கட்டுரைகள் அனைத்திலும் எனது மறுமொழிகள் பிரசுரிக்கப்படுவதேஇல்லை…அத்தனையும் அந்தந்த கட்டுரைகள் சம்பந்தப்பட்டதே…அதன் காரணம் என்ன…பயமா)

  • வரப்போவது 10,000 முட்டாள்கள்தான், ஒரு இலட்சம் முட்டாள்கள் இல்லை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. மேலும் பள்ளி நிர்வாகம் என்பதை கல்லூரி நிர்வாகம் என்று திருத்தி விட்டோம். இந்த புத்திசாலித்தனத்திற்கும் நன்றி

   • மோடி கூட முஸ்லீம்கலும் மேடை ஏற போறதா கேள்விப்படேன்..உண்மயா?

   • Dear Vinau

    Small regest please publish the article about “கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை காப்பாற்ற, மத்திய அரசு, இயற்றியுள்ள அவசர சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், சிறைத் தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தண்டனையை எதிர்த்து, மேல் முறையீடு செய்திருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது.”

    So that we can prove the real face of all politicians and more over it will be help for our people to choose right candidate.

 3. பொன்.கோஷ்டி கொஞசம் துட்டு பார்க்க திட்டம் போட்டா…
  விட மாட்டீங்களே!
  மாநாட்டுக்கு வரும்போது…ராமர் கால் செருப்பு,சீதை தாவணி…
  தசரதன் “நித்தம்” கட்டிக்கிட்ட பெண்டுகளின் பெயர்,முகவரி
  விபரங்களை வானர சேனை(குரங்கு கூட்டம்) கொண்டு வருமாறு
  ஆணையிட்டு….
  தலைக்கு 100 ரூவா,கட்டிங்,அப்புறம் வேறு என்ன?
  திருச்சி ஷ்தம்பிக்காதோ?

 4. அது எப்படியோ சுதந்திரத்திற்கு பின்னால் பெரும்பாலான இந்திய மீடியாக்கள் பார்ப்பனர்களின் வசமே சிக்கிக்கொண்டது. இதனால் தான் இவர்களால் பெரும்பான்மை மக்கள் தங்கள் கழுத்தையே தாங்களே அறுத்துக்கொள்ள வைக்கவும் முடிகிறது. தற்சமயம் இணையதளங்களால் சூழ்நிலை சிறிது மாற்றம் தெரிகிறது. அவாக்களின் மீடியாக்களை ஒதுக்கினாலே போதும். இந்தியா கொஞ்சம் உருப்பட வாய்ப்பிருக்கிறது.

 5. கார்பொரேட் முதலாளிகள் மோடிக்கு கூஜா தூக்கும் காரணம் மோடி அஆட்சிக்கு வந்தால் அன்னிய நாட்டுக்கு இந்தியாவின் வர்த்தகத்தை தாரை வார்த்துகொடுக்கும் மாமா வேலை நடக்கும் இதனால் தாங்கள் வங்கிக்கணக்குகள் நிரம்பும் என்பதே ஒழிய வேறில்லை, தக்கதமிழகத்திற்கு வருகைதரும் கேடி அண்ணனை அன்புத்தங்கை எப்படி வரவேற்காமல் இருப்பார் இவரின் வாய்மொழி உத்தரவே திருச்சி காவல்துறையின் அளப்பரைக்கு காரணம் என்பதை நமரியாமலா போவோம்.

  Tamil Nesan,
  KSA

 6. ஏற்கனவே,கொலகாரருக்கு பாதுகாப்பு பில்டப்பு, இதுல கூட்டம்சேருமுன்னு பில்டப்பா, அண்ணன் இயக்குநர்ர் சங்கர்ட்ட சொன்னா,பத்துபேர பத்து கோடியா பில்டப்பு பண்ணி காட்டுவாரே… அத ஊரு உலகமெல்லாம் ஜோரா காட்டலாமே…………..

 7. மோடியின் தயவில் ம.க.இ.க விற்கும் இலவச விளம்பரம். நடத்துங்க, நடத்துங்க!!

 8. //யோசித்துப் பார்த்தால் ஒரு நாற்காலி மேல் ஐந்து நாற்காலிகளை அடுக்கினால் அது ஒரு இலட்சத்தை தொடும். அப்படி அடுக்கி ஐந்தாவது நாற்காலி மேல் ஒருவரை அமர்த்தினால் மட்டுமே அந்தக் கணக்கு சரியாக வரும்../// 🙂 🙂

 9. What does Modi’s visit have to be to Tamilnadu? It is useless. People in Tamilnadu really don’t care about BJP. In Tamilnadu there is no way they can create a fight between Hindus and Muslims because we are Tamilians first and Hindus and Muslims next. Tamil Vaazhga ! Tamil Inam Vaazhga ! Ozhiyattum vetrumai ! Ongattum Otrumai ! Tamilan Jeyippaanda !

 10. வினவு,
  ஒரு பரிந்துரை. தளத்தில் மோடி தொடர்பாக பல்வேறு கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலான மறுமொழிகள் அந்தந்த கட்டுரையின் குறிப்பிட்ட பொருள் பற்றி அல்லாமல் மோடி பற்றிய பொது விவாதம் சார்ந்தவையாக இருக்கின்றன. இந்த மறுமொழிகள் துண்டு துண்டாக பல்வேறு பதிவுகளின் கீழ் உள்ளன. இவ்வாறு இல்லாமல், ஒரே இடத்தில இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். எனவே, ஒரு dummy பதிவு போட்டு, மோடி பற்றிய பொது விவாதங்கள் அங்கே நடைபெற செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன். நன்றி.

 11. நாற்காலி போட்டால் தான் பிரச்சனை. தரையில் உட்கார வைத்தால் அதிக பேர் அமரலாம். ஒருவர் மடி மீது மற்றொருவரை அமர செய்யலாம். எல்லாரையும் நிற்க வைக்கலாம். ஒருவர் மீது ஒருவர் நின்று மனித பிரமிட் அமைக்கலாம். மைதானத்தை சுற்றி உள்ள மரங்கள் மீது ஏறிக் கொள்ள சொல்லலாம். ஒல்லியானவர்களை மட்டும் அனுமதிக்கலாம். சட்டமன்ற மேற்கூரை அமைதார்போலே, அவசரமாக இரு தளம் உள்ள சாரம் கட்டி, பாதி பேரை மேலே அனுப்பலாம். ஆன்லைனில் பதிவு செய்தோர் ஆன்லைனில் பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லி விடலாம். நினைத்தால் முடியாதது ஏதுமில்லை 🙂

 12. வினவு மற்றும் தோழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு

  வரலாற்றிலிருந்து நாம் அறிவதெல்லாம் வரலாற்றிலிருந்து மனிதர்கள் எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பதைத்தான்’ என்று ஜெர்மன் தத்துவஞானி ஹெகல் சொன்னது எல்லோருக்கும் பொருந்துவதைப் போலவே வரலாற்று வளர்ச்சியின் விதிகளைக் கண்டறிவதில் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட கார்ல் மார்க்ஸின் வழிவந்ததாக கூறிக்கொள்பவர்களுக்கும் பொருந்துவது ஒரு முரண்நகைதான். சமீப காலங்களில் உலக அரங்கில், இந்தியாவில், மற்றும் தமிழகத்தில் நடந்துவரும் சில நிகழ்வுகள் மற்றும் போக்குகள் காட்டுவது இதைத்தான்.

  http://www.kalachuvadu.com/issue-165/page05.asp
  நன்றி – திருநாவுகரசு
  காலசுவடு

  • காலச்சுவடு திருநாவுக்கரசு குருட்டு கண்ணுக்கு அப்படிதான் தெரியும்.

  • இதுங்களுக்கு உறைக்கும்கறீங்க?

   //இந்தியாவைப் பொறுத்தவரை இந்துத்துவாவும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குபவை, வலுப்படுத்துபவை. இவற்றில் இந்து அடிப்படைவாதத்தைக் கடுமையாக எதிர்ப்பதும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கெதிராக ஒரு மென்மையான எதிர்ப்பைக் கடைப்பிடிப்பதும் இந்துத் துவா சக்திகளை மிகவும் வலுப்படுத்தும். தங்கள் மனச்சாய்வை (prejudice) வலுப்படுத்தும்படியான உண்மைகளை ஏற்பதும், அதற்கெதிரான உண்மைகளைப் புறந்தள்ளுவதும் பெரும்பாலான மக்களின் இயல்பு. சாதி, மதம், மொழி, இனம் போன்ற விஷயங்களில் மனிதர்களுக்கு இருக்கும் மனச்சாய்வு மிக வலிமையானது. இதன் காரணமாக இந்துக்களில் பலர் சங் பரிவார் அமைப்புகளை மத அடிப்படைவாத அமைப்புகளாக பார்க்காது தேச பக்த அமைப்புகளாகப் பார்க்கிறார்கள். ஆகவே, சங் பரிவாரத்திற்கெதிரான இடதுசாரிகளின் எதிர்ப்பு பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கெதிரான அவர்களின் எதிர்ப்பு சம அளவில் தீவிரமானதாக இருப்பது அவசியம். இந்த இடத்தில்தான் இடதுசாரிகள் பெரும் சறுக்கலை சந்திக்கிறார்கள்.//

 13. ஹா..ஹ..ஹா….நல்லா சொல்றாங்கயா டீடைலு…சாரி ஸ்டேடிஸ்டிக்ஸ்சு…
  ஏலேய் மோடி மஸ்தான் உன் பாய்ச்சா எல்லாம் தமிழ்நாட்டுல பலிக்காதுடியேய் மாப்பு….!!! ஓடிபோயிரு….!!

 14. 20,000பேருக்கு மேல் அங்கே கூடஇடமில்லை. ஆனா உட்டான்யா ரீலு!!!! கூட்டத்தில் கலந்து கொள்ள 1 இலட்சம் பேர் பதிவு …………..

 15. Direct registration 50000.Online registration 1 lakh tells Vanathi Srinivasan.Faithfully reported by Vaithi maamaa of Dinamani.If it is a statistics related to any other party,Vaithi maamaa will do a detailed analysis.

  • டைம்ஸ் ஆப் இந்தியா ரெண்டு லட்சம் பேர் வந்தாங்கன்னு சொல்லுது. நெஜமா? இல்ல அடிச்சு உடறானுங்களா? (தில்லி பதிப்பு – பக்கம் 11).

 16. தினத்தந்தி ஏடு ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றதாகக் கூறுகிறது ( பக்கம்-2).இது தகவலுக்காக.

 17. உலகெங்கும் உள்ள பல இடதுசாரிகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஒரு விதப்பரிவுடன் அணுகுவதும், அவர்களுடன் சில சமயங்களில் கைகோர்த்து செயல்படுவதும், ‘‘என் எதிரியின் எதிரி என் நண்பன்’’ என்ற எளிய போர்த் தந்திரத்தின் அடிப்படையில்தான் உலகெங்குமுள்ள பல இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் அமெரிக்காவை எதிர்ப்பதன் காரணமாக அவற்றைத் தங்களது அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்திற்கான கூட்டாளிகளாக இடதுசாரிகள் பார்க்கிறார்கள். ஆனால், ‘‘என் எதிரியின் எதிரி என் நண்பன்’’ என்பது எல்லாக் காலங்களுக்குமான உலகளாவிய உண்மை அல்ல. எதிரியின் எதிரி சில சமயங்களின் நமது ஆக மோசமான எதிரியாகவும் இருக்க முடியும். இடதுசாரிகளுக்கும் மத அடிப்படைவாதிகளுக்குமான உறவைப் பொறுத்த வரை இதுவே உண்மை

  மேற்கு வங்க இஸ்லாமிய அடிப்படைவாதிகளை திருப்தி செய்த முற்போக்கு எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரினை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற நெருக்கடி தந்தது, கேரளாவில் அப்துல் நாஸர் மதானி போன்றவர்களுடன் நெருக்கமாக இருப்பது, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டி கலந்துகொள்வதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்து ருஷ்டிக்குத் தடை விதிக்கப்பட்ட போது மவுனம் சாதித்தது, சமீபத்தில் தமிழ்நாட்டில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பின் போதும், மிகச் சமீபத்தில் இஸ்லாமிய அறிஞர் அமீனா வதூத் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்ட போதும் களமிறங்கி போராடாதிருந்ததையும் பார்க்கிறபோது – why even there is a simple article on these issues?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க