Saturday, May 3, 2025
முகப்புசெய்திமோடி எதிர்ப்பிற்காக திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது !

மோடி எதிர்ப்பிற்காக திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது !

-

சாருவாகன்
சட்டக் கல்லூரி மாணவர் மற்றும் புமாஇமு தோழருமான சாருவாகன் (கோப்புப் படம்)

ந்தியாவின் ராஜபக்சே நரேந்திர மோடிக்கு எதிராக திருச்சி ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் மேற்கொண்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் சாருவாகன், ஷேக் மற்றும் முத்துகுமார், வசந்த், சங்கத்தமிழன் ஆகியோர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோடியின் கூட்டத்துக்கு வருமாறு மாணவர்களை அணிதிரட்டுகிறது பாரதிய ஜனதா. லட்சம் பேர் பதிவு, லேப்டாப்பில் முன்பதிவு என்று பீலா விடுகின்றன மீடியாக்கள். எஸ்.ஆர்.எம் முதலாளி பாரிவேந்தர் தன்னுடைய கல்லூரி மாணவர்களை ஆட்டு மந்தை போல ஓட்டிக் கொண்டு வர இருக்கிறார்.

இந்த அயோக்கியத்தனங்களை செய்ய இவர்களுக்கு அனுமதி உண்டாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு சிறைத்தண்டனையாம்.

த்தூ… வெட்கமாக இல்லை?

 

(கடைசியாக வந்த செய்தி)

திருச்சி மாவட்ட அனைத்து மாணவர் போராட்டக் குழு வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கை :

26.9.2013 அன்று திருச்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வருகையையொட்டி ஜமால் முகமது கல்லூரி மற்றும் ஈ.வெ.ரா கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எங்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சாருவாகன் உட்பட கல்லூரி மாணவர்கள் 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்களின் தலையீட்டின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மோடி திருச்சிக்கு வந்தால் பயந்து ஓடுவதற்கு மாணவர்கள் என்ன கிரிமினல்களா? அல்லது தீவிரவாதிகளா? கல்லூரிகளை செயல்பட விடாமல் முடக்கும் அதிகாரத்தை மோடிக்கு யார் கொடுத்தது? பிரதமரும், முதல்வரும் திருச்சிக்கு வந்தபோது கூட கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதில்லை. ஆனால், மோடியின் வருகையையொட்டி ஏவப்பட்டிருக்கும் இந்த அடக்கு முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

மூடப்பட்ட கல்லூரிகளை திறக்க உடனே உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள,

மணிகண்டன்,
போராட்டக் குழு உறுப்பினர்,
திருச்சி மாவட்ட அனைத்து மாணவர் போராட்டக் குழு.