Mr. NaMo NaNo

-

Mr. NaMo NaNo

டாடா - மோடி - ராடியா

மோடியின் சந்நிதியில் கலெக்டரே மண்டியிட்டு வணங்கும் மாநிலத்தில், ரொம்ப தெனாவெட்டாக கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்காகளே ஒரு பொம்பிளை –

அது யாருன்னு தெரியுதா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் நீரா ராடியாதான்.

இது 25 நவம்பர் 2010-ல் எடுத்த படம்.

 • அலைக்கற்றை ஊழல் பற்றிய சி.ஏ.ஜி அறிக்கை வெளியான தேதி – நவம்பர் 10, 2010.
 • “ராடியா டேப்புகளை” ஓபன் மாகசீன் வெளியிட்ட தேதி – நவம்பர் 20, 2010
 • இந்த செய்தியும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கும் தேதி நவம்பர் 25, 2010

இந்த படத்தை வெளியிட்டுள்ள “தேஷ் குஜராத்” இணைய தளம், அம்மையாரை குஜராத்தின் மருமகள்” என்று கொட்டேசனில் போட்டுள்ளது. எதுக்காக குசும்பா கொட்டேசன்ல போட்ருக்குன்னு விவரம் சொல்லணுமில்ல? சொல்லலியே!

நல்லாத் தர்றாங்கய்யா டீட்டெய்லு!

NaMo (நமோ) கறை படியாத கரமாச்சே! புரோக்கர், ஊழல், கமிசன்னு யாராவது பேசினா சுட்டுத்தள்ளிடுவாருன்னு அர டவுசர் அம்பிக சொல்றாங்களே! ஒரு வேளை அம்மா ஒரு புரோக்கர்னு அய்யாவுக்கு தெரிஞ்சிருக்காதோ!

“அட போய்யா, அம்மாவோட அய்யாவுக்கு பிசினஸ் கனைக்சன் 2004 இலேயே உண்டு”ன்னு சொல்லியிருக்கிறார் கிங் சுக் நாக் என்ற டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையாளர்.

அவருடைய டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை வெளிவந்திருக்கும் தேதி நவம்பர் 22, 2010.

இனி, கிங் சுக் நாக் எழுதியுள்ளதிலிருந்து சில பகுதிகள்:

“2003 இல் நான் டைம்ஸ் ஆப் இந்தியா அகமதாபாத்தின் ஆசிரியராக இருந்தேன். நீரா ராடியா என்னைப் பார்க்க விரும்புவதாக என்னிடம் ஒரு நண்பர் சொன்னார்…

அடுத்த முறை நான் டெல்லி வந்தபோது, ராடியாவின் அலுவலகத்தில் அவரை சந்தித்தேன். போன, வந்த கதையையெல்லாம் கொஞ்சம் பேசி விட்டு, நைசாக விசயத்துக்கு வந்தார் ராடியா. “நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எல்லாம் மோடியை சித்திரவதை செய்து வருகிறீர்கள். அவரையும் அவருடைய கொள்கையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கங்களேன்” என்றார்.

“டாடாவுக்கு அடுத்தபடி, மோடியும் உங்கள் வாடிக்கையாளர் பட்டியலில் சேர்ந்து விட்டாரோ” என்று நான் ராடியாவிடம் கேட்டேன்.

“சே சே குஜராத்தின் மருமகள் என்ற முறையில் என் கடமையை செய்கிறேன்” என்றார் ராடியா.

“குஜராத் அரசைப் பற்றி (இனப்படுகொலையைப் பற்றி) நாங்கள் எழுதுவது எல்லாம் உண்மை விவரங்களின் அடிப்படையிலானது. அதை எப்படி நாங்கள் திரிக்க முடியும்?” என்று நான் கேட்டேன்…

சில மாதங்களுக்குப் பின் 2004 இல் குஜராத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் “வைப்ரன்ட் குஜராத்” என்ற நிகழ்ச்சியை அகமதாபாத்தில் நடத்தினார் மோடி. அன்றைக்கு மோடியின் இமேஜ் பெரும் அடி வாங்கியிருந்தது…

பொதுவாகவே, தொழிலதிபர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் குஜராத்தில் நிலவிய போதிலும், குஜராத்துக்கு வருவதையே முதலாளிகள் அன்று விரும்பவில்லை. மோடியுடன் அவர்கள் ஒரே மேடையில் தோன்றுவது என்பதோ கற்பனைக்கு எட்டாததாக இருந்தது. அன்று மோடியின் கொள்கைகளை விமரிசித்தவர்களில் முக்கியமானவராக டாடா இருந்தார். அப்படியிருக்க, வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சியில் ராடியாவுடன் டாடாவை பார்த்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை…

அன்றைக்கு பிற்பகலே ராடியா என்னை தொலைபேசியில் அழைத்தார்… மோடி விசயத்தில் கொஞ்சம் மென்மையாக அணுகுமாறு மீண்டும் கேட்டுக்கொண்டார். அவருடைய கோரிக்கைக்கு செவி மடுத்தால், உரிய சன்மானம் உண்டு என்பதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை.

டாடாவை அகமதாபாத்துக்கு கொண்டு வருவது, டைம்ஸ் ஆப் இந்தியாவை வழிக்கு கொண்டுவருவது என்று இரண்டு இலக்குகளை ராடியாவுக்கு மோடி தந்திருக்கிறார் போலும்!” ..

அலைக்கற்றை ஊழலை ஒட்டி, ராஜாவின் ராடியா கனெக்சன் பற்றி ரவுண்டு கட்டிய சோ ராமஸ்வாமி அய்யர், டாடாவின் ராடியா கனெக்சன், மோடியின் ராடியா கனெக்சன் பற்றி மூச்சு விடவில்லை.

மோடி டாடாவுக்கு அளித்த பரிசுகள் என்ன?

 • நானோ ஆலைக்கு டாடா போட்ட முதலீடு ரூ. 2900 கோடி

இதற்கு மோடி அரசு வழங்கிய சலுகைகள்:

 • 9570 கோடி ரூபாய் மோடி அரசின் கடன். 20 ஆண்டு தவணையில் திருப்பித் தரவேண்டும். ஆண்டு வட்டி நூறு ரூபாய்க்கு பத்து பைசா.
 • 20 ஆண்டுகளுக்கு வாட் வரி கிடையாது. இவையன்றி சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி, மின்சார வரி சலுகைகள்; பத்து ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரி தள்ளுபடி.
 • வழங்கப்பட்ட நிலம் மொத்தம் 1100 ஏக்கர். அகமதாபாத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள சனந்த் எனும் இடத்தில் உள்ள விவசயாப் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான நிலம் இது. இதன் சந்தை மதிப்பு சதுர மீட்டர் 10,000 ரூபாய். மோடி நிர்ணயித்த விலை ச.மீட்டர் 900 ரூபாய்.
 • இந்த நிலத்தை பதிவு செய்வதற்கான முத்திரைக் கட்டணம் 20 கோடியும் தள்ளுபடி.
 • ஆலைக்கு செல்வதற்கான நான்கு வழிச்சாலையை மோடி அரசே அமைத்துத் தரும்.
 • குடியிருப்புகளை அமைப்பதற்காக 100 ஏக்கர் நிலத்தையும் மோடி அரசே வழங்கும்.

மோடி அரசே காரை உற்பத்தி செய்து, அதே மோடி அரசே சந்தையில் கூவி விற்று, லாபத்தை மட்டும் டாடாவுக்கு ஒப்படைப்பது என்ற புரட்சித்திட்டத்தை அடுத்த கட்டமாக மோடி அமல் படுத்தக் கூடும்.

மோடி ரசிகர்கள் அவரை NaMo (நமோ) என்று அழைப்பதை விட NaNo (நானோ) என்று செல்லமாக அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

 1. மோடி பெண்களை மிதிக்கிறவர் சாரி, மதிக்கிறவருன்னு பிளக்ஸ் அடிச்சு சொல்லிக்கிறாம்ல.அதுக்குத்தான்.

 2. Thanks a lot for exposing Mody and his politics. I never imagined that I was admiring a Person as a great Statesman who in fact not worth a ….! Vinavu has brought me out of total ignorance that was once my bliss.

 3. The link provided in the articles are all written speculating the connection. Nothing is proved. Even I can write about your site alleging links with China for creating havoc in my country. Please be human enough to admit the faults from your side. Thanks and Jai Hind.

  • தினேஷூ
   படத்தில் நீரா ராடியா, டாடாவோட இருக்கிற மோடி யாரு? மோடி வேடம் போட்ட நடிகரா? இல்லை ஃபோட்டோஷாப் வேலையா? டாடாவுக்கு மோடி கொடுத்த சலுகைகள் அனைத்தும் அரசு ஆவணம். இதில் என்ன ஸ்பெக்குலேஷன் வெங்காயம்? நீங்கள் முட்டாளாக இருப்பது உங்களது உரிமை. ஆனால் அதே முட்டாள்தனத்தை, மோடி வெறியை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள். தள்ளாடாமல் பதிவை மீண்டும் நிதானமாக படியுங்கள். சொய் ஹிந்த்.

   • சூப்பர் பதில்.அதிலும் தினேஷு அவர்களின் உரிமையை நிலை நாட்டி இருப்பது பாராட்டத்தக்கது.

    சொரி ஹிந்த்.

   • ஐய்யா, நீங்கள் அறிவாளியாகவே இருந்துவிட்டுப்போங்கள். நான் முட்டாளாகவே இருக்கிறேன். மேலே என் கருத்தை பதிவு செய்தேன். அது கருத்து திணிப்பு என்று நீங்கள் கருதினால் மன்னிக்கவும். தன்னை எதிர்த்து ஒருவன் பேசி விட்டால், அவனை சர மாறியாக திட்டி வாய் திறக்க முடியாத படி செய்து விட வேண்டும். யாரும் உங்களை எதிர்த்து குரல் என்ன சிறு சத்தம் கூட போடக்கோடாது. நல்லது. தான் அறிவாளி என்று வெறி பிடித்தவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு நாகரீகமான கருத்து பரிமாற்றத்தை எதிர்பார்த்த நான் ஒரு முட்டாள் தான்.

    • தினேஷு, திரும்பவும் நழுவுகிறீர்கள்.நழுவுவது உங்கள் உரிமை என்றாலும். நீரா ராடியா மோடி சந்திப்பு, டாடாவுக்கு மோடி அளித்த சலுகைகள் இதில் கார்ப்பரேட் தரகர்கள், கார்ப்பரேட் தாசன் மோடி இவர்களது உறவு இது குறித்து கட்டுரை ஆதாரங்களுடன் நிறுவுகிறது. இது உண்மை என்று ஒத்துக் கொள்ளுங்கள், இல்லையேல் பொய் என்று நிறுவுங்கள். இதை விடுத்து நாகரீகம், கருத்து பரிமாற்றம், நாட்டுப்பற்று என்று திசை திருப்ப வேண்டாம்.

     • நீரா ராடியா மோடி சந்திப்பு – இந்த உலக மகா படு பாதக செயலுக்கு மோடியை என்ன செய்யலாம் என்று சொல்லுகிறீர்கள் ?

      டாடாவுக்கு மோடி அளித்த சலுகைகள் – ஒரு அரசு, தன்னுடைய மாநிலத்தில் ஒரு தொழில் நிறுவனம் தன்னுடைய தொழிலை நிறுவ சில சலுகைகள் அளித்து தான் பெற வேண்டி இருக்கிறது. அதையே அவர் செய்தார். இதில் தவறேதும் இருப்பதாக எனக்குப்படவில்லை.

      • எங்கள் தகத்தகாய சூரியன் அண்ணன் ஆ.இராசா அவர்கள் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சிலபல விட்டுக் கொடுப்புகளைச் செய்து தொலைத்தொடர்புத் துறையில் இருந்த கார்ட்டலை உடைத்ததும், அதன் பலனாக எஸ்.டி.டி கால் ஒரு ரூபாய் வரை குறைந்ததும் ஊர் அறிந்த வரலாறு… அப்படி இருக்க, எங்கள் அண்ணன் செய்த ‘சிலபல விட்டுக் கொடுப்புகளை’ மாத்திரம் ஊழல் என்று ஏன் சொல்ல வேண்டும்?

       மோடிக்கு வந்தால் ரத்தம் எங்கள் தகத்தகாய சூரியனுக்கு வந்தால் மட்டும் தக்காளி சட்னியா?

       திருவாளர் தினேஷ் கொஞ்சம் பார்த்து மீட்டருக்கு மேல் போட்டுக் கொடுக்கும் படி உனாபினாக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

      • இடது சாரிகள் ஆதரித்தாலும் மக்களுக்கு எதிரான டாடா நானோ கார் ஆலையை மேற்கு வங்கத்திலிருந்து விரட்டியடித்தார் மம்தா பானர்ஜி. அங்கிருந்து பெட்டியைத் தூக்கிக் கொண்டு நேராக ரத்தன் டாடா சென்ற இடம் குஜராத். குஜராத்தில் கட்டப்படும் நானோ கார் ஆலைக்காக, 1100 ஏக்கர்கள் நிலம் ஒதுக்கப்பட்டன. மோடியின் ராஜதந்திரம் வென்று விட்டது. குஜராத்தை தொழில் வளர்ச்சியடைந்த முன்னோடி மாநிலமாக்க மோடி விரைந்து நடவடிக்கை எடுக்கிறார் என்று மோடியின் அடிப்பொடிகள் புகழ்ந்தனர். ஆனால், அந்த 1100 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான முத்திரைத்தாள் கட்டணம் கூட ரத்தன் டாடா நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படாமல் விலக்களிக்கப்பட்டது தெரியுமா? மோடி அரசில் ஊழலே இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு மிகப்பெரிய முதலாளி, பல கோடி ரூபாய்களுக்கு அதிபதி, அந்த முதலாளியிடம் நிலம் வழங்கி, அதற்கு முத்திரைத் தாள் கட்டணம் கூட வசூலிக்காமல் தொழில் தொடங்கச் சொல்வது ராஜதந்திரமா ? அது மட்டுமல்ல…. ஒரு நிலத்தை விவசாய நிலத்திலிருந்து வேறு பயன்பாட்டுக்காக மாற்றினால், ஒரு சதுர மீட்டருக்கு குஜராத் விதிகளின்படி ரூபாய் 6 செலுத்த வேண்டும். இந்த 6 ரூபாய் செலுத்துவதிலிருந்தும் ரத்தன் டாடா நிறுவனத்துக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது. இணைப்பு.

       இது மட்டுமல்ல, ரத்தன் டாட்டாவின் காலடியில் மொத்த குஜராத்தையே அடகு வைத்தவர்தான் மோடி. மேற்கு வங்கத்திலிருந்து ரத்தன் டாட்டாவை மம்தா பானர்ஜி விரட்டியடித்ததும் குஜராத் அரசோடு ஒப்பந்தம் கையெழுத்திட்டார் ரத்தன் டாட்டா. இந்த ஒப்பந்த த்தின் ஒரு பகுதி என்ன தெரியுமா ? குஜராத்திலிருந்து டாட்டா நானோ ஆலையின் இயந்திரங்கள் மற்றும் இதர பாகங்களை குஜராத்தில் உள்ள ஆலைக்கு எடுத்து வர ஆகும் மொத்த செலவான 700 கோடியையும் குஜராத் அரசே ஏற்றுக் கொள்ளும். சரி.. இந்த சலுகையோடு நிறுத்தப்பட்டதா என்றால் இல்லை. நானோ கார் ஆலையை குஜராத்தில் தொடங்குவதற்காக மோடி அரசு அரசு, டாட்டா நிறுவனத்துக்கு 9570 கோடி ரூபாய் கடன் வழங்கும். இந்தக் கடனை டாட்டா நிறுவனம் அடுத்த 20 ஆண்டுகளில் மெள்ள மெள்ள திருப்பிச் செலுத்தினால் போதும். இதற்கான வட்டி எவ்வளவு தெரியுமா ? அதிர்ச்சி அடையாதீர்கள். புள்ளி ஒரு சதவிகிதம்தான் இதற்கான வட்டி.

       இது மட்டும்தான் சலுகையா என்றால், இல்லை. முதல் இரண்டாண்டுகளுக்கு டாட்டா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 1100 ஏக்கருக்கான தவணைத் தொகையை செலுத்த வேண்டியதில்லை. இது தவிரவும், தொழில் வரி, மற்றும் இதர வரிகளுக்கு சலுகை. டாட்டா நானோ கார் தொழிற்சாலை குஜராத்துக்கு வந்தது முதல் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, குஜராத் மக்களின் வரிப்பணம் டாட்டாவுக்கு அள்ளி வழங்கப்படும் அளவு என்ன தெரியுமா ? 30 ஆயிரம் கோடி. 20 ஆண்டுகளில் 50 லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்வதாக டாட்டா நிறுவனம் அறிவித்திருந்த்து. ஒரு காரின் விலை ஒரு லட்சம் என்று வைத்துக் கொண்டால், 50 லட்சம் கார்களுக்கு குஜராத் மக்கள், ஒரு காருக்கு 60 ஆயிரம் வீதம் மானியமாக அளிக்கிறார்கள். இன்று சாலையில் ஓடும் ஒவ்வொரு நானோ காரும், குஜராத் மக்களின் வரிப்பணத்தில் கிடைத்த மானியத்தால் ஓடுகிறது. குஜராத் மக்களின் வரிப்பணத்தில் சலுகை பெற்ற ரத்தன் டாட்டாவுக்கு வெறும் லாபம் மட்டுமே. இணைப்பு
       இந்த விபரத்தை மோடி ஆதரவாளர்களிடம் கூறினால், குஜராத்தில் வேலை வாய்ப்பை பெறுக்குவதற்காக மோடி இந்தச் சலுகைகளை அளிக்கிறார் என்று கூறுவார்கள். 30 ஆயிரம் கோடி செலவழித்து வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு பதிலாக, அரசே மேலும் பல பணியிடங்களை உருவாக்கினால், பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாகுமே… !!! ரத்தன் டாட்டா போன்ற பன்னாட்டு முதலாளிக்கு லாபத்தை வழங்கி எதற்காக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்… ? சரி ஒரு வாதத்துக்காக இதை ஏற்றுக் கொள்ளலாம். உண்மையில், குஜராத்தில் தொடங்கப்பட்ட நானோ கார் ஆலையால் வேலை வாய்ப்பு பெருகியதா ?

       குஜராத்தில் அமலில் உள்ள சட்டத்தின் படி ஒரு தொழிற்சாலை தொடங்கப்படுகையில் 85 சதவிகிதமான பணியாளர்கள் உள்ளுரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது தவிரவும் மேலாண்மை மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களில் (Managerial and Supervisorial positions) குறைந்தபட்சம் 60 சதவிகிதம் உள்ளுர் மக்களால் நிரப்பப்பட வேண்டும். இந்த சட்டம், உள்ளுர் வேலைவாய்ப்பை உத்தரவாதப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

       ஆனால் டாட்டாவின் நானோ ஆலைக்காக இந்த சட்டத்தையும் தளர்த்தி உத்தரவிட்டுள்ளார் மோடி. அப்படி தளர்த்தி உத்தரவிடப்படுகையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா ? “டாட்டாவுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகை சிறப்புச் சலுகை. இந்தச் சலுகை மற்ற தொழிற்சாலைகளுக்கும், தொழில்களுக்கும் பொருந்தாது”. எப்படி இருக்கிறது மோடியின் ராஜதந்திரம் ?

       மோடியின் இந்த செயலுக்கும், ஸ்பெக்ட்ரத்தை சகாய விலையில் முதலைகளுக்கு விற்ற ஆ.ராசாவின் செயலுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ?

       Courtesy: Savukku
       http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=1878:2013-09-26-02-05-51&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

    • தினேஷு சும்மா கோவப்பட்டு புரோஜனமில்லை.

     The link provided in the articles are all written speculating the connection. Nothing is proved என்று முதல்ல சொல்லிகிறீங்க.

     இப்ப \\டாடாவுக்கு மோடி அளித்த சலுகைகள் – ஒரு அரசு, தன்னுடைய மாநிலத்தில் ஒரு தொழில் நிறுவனம் தன்னுடைய தொழிலை நிறுவ சில சலுகைகள் அளித்து தான் பெற வேண்டி இருக்கிறது. அதையே அவர் செய்தார்.// ன்னு சொல்றீங்கோ.

     இதைத்தானே கட்டுரையும் சொல்லுது டாட்டாவும் மோடிம் கூட்டு சேந்து மக்கள் வரிப்பணத்த சூரையாடிருக்காங்கன்னு .அதையே வேற வார்த்தைல நீங்க சொல்றீங்கோ.

     \\ இதில் தவறேதும் இருப்பதாக எனக்குப்படவில்லை.//

     நீங்க சுப்ரீம் கோர்டுக்கே ஜட்ஜா போவலாம்.நல்லா தீர்ப்பு சொல்றீங்கோ.ஆளும் கும்பலை அண்டிப் பிழைக்கும்,அவை தின்னுட்டு போட்டுட்டு போகும் மிச்சம் மீதியில் வயிறு வளர்ப்போர் வேண்டுமானால் தப்பில்லை என சொல்லலாம்.உழைத்து பிழைக்கும் மக்கள் அப்படி சொல்ல மாட்டார்கள்.

     உங்கள் நாட்டுப்பற்றை கொச்சைப்படுத்துறதா கோச்சுக்கிறீங்க.அய்யா,நாட்டுப்பற்றுன்னா பாரதமாதா வுக்கு பட்டு உடுத்தி பூ பொட்டு வச்சு கும்புடு போடுறதுன்னா I am sorry அதை ஏத்துக்கறதா இல்லை. மக்கள் நலனே நாட்டு நலன்.மக்கள் நல்வாழ்வு மீதான பற்றே நாட்டுப்பற்று என்பதுதான் சரியானது.

     நாட்டின் வளங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிமையானது.அவர்கள் நலனுக்கு பயன்படவேண்டியவை அவை..அந்த வளங்களை தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க துணை போகும் மோடி உள்ளிட்ட எத்துவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு எல்லாம் நாட்டின் மீது பற்று இருப்பதாக சொன்னால் அது நாட்டுப்பற்று என்ற கான்செப்டையே கொச்சைப்படுத்துவது ஆகும்.

  • தினேஷ்,
   உறுதிப்படுத்துவது என எதைக் குறிப்பிடுகிறீர்கள்னு தெரியல. நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கணுமா? இன்னும் நீரா ராடியாவை குற்றவாளிகள் பட்டியல்ல சேர்க்கவே இல்லைன்னு உங்களுக்குத் தெரியுமா? அவரை ஒரு சாட்சியாக சேர்த்து ஒரே ஒருமுறை மட்டும் ஆஜர் ஆகியிருக்கிறார்னு தெரியுமா? இணையத்தில் புழங்கிய அவர் தொடர்பான டேப்புகளைக் கேட்டிருக்கிறீர்களா? ஊழல் நடந்து முடிஞ்சு நாலு வருஷம் ஆச்சு. இன்னும் ஒரு தூசு துரும்பு கூட உங்கள் இந்திய நீதிமன்றத்துல நகலவே இல்லை. உங்கள் கொள்ளுப் பேரன் தலைமுறை வரைக்கும் டாடா உயிரோட இருந்தார்னாக் கூட அப்பவும் வாய்தா போய்க்கிட்டே இருக்கும்.

   அதெல்லாம் போகட்டும். ஒரு காமன்சென்ஸ் கூடவா கிடையாது??? ராடியா அடிப்படைல ஒரு புரோக்கர். ஒரு மாநில முதல்வருக்குப் பக்கத்துல கால் மேல் கால் போட்டு உட்கார்ற அளவுக்கு ஒரு புரோக்கரால இருக்க முடியுதுன்னா அது என்ன மாதிரியான உறவுன்னு உங்களால புரிஞ்சிக்க முடியலையா? இதுக்கு கருப்புக் கோட்டுக்காரன் வருஷம் புல்லா கேசு நடத்தி தீர்ப்பு சொன்னாத்தான் நம்புவீங்களா?

 4. I am republishing this message with some addition here

  Purpose of the Govt is not JUST to COLLET TAX.
  Also to provide good environment for business to develop

  Karuna brought Hyndai car company by giving tax free for 4 years. Now 4 other companies have started in TN. State will eventually get tax . job and related business will flourish and state will prosper.

  Now consider a state with land and no tax income
  After Nano , a state with land and no tax income but added jobs and will get tax in future
  It sends message to other business owners and rest will follow, that means more jobs and prosperity

  Or you can backup Rahul, who pays 1 lakh crore free money in right to work scheme
  Will distribute 1 lakh crore for free food
  Will increase salary of Govt employees with another lakh crores

  Or select Karuna/JJ who will give
  Free TV
  Free mixi grinder
  Free ….

  • மோடி சரக்கு அட்ச ஆளுங்களுக்கு எவ்வளவுதா வேப்பிலை அடிச்சாலும் போதை தெளிய மாட்டேங்குது.

   ரூ. 2900 கோடி முதலீடு போட்ட டாட்டாவுக்கு மக்கள் வரிப்பணம் 9570 கோடி ரூபாயை கடனா அள்ளி வுட்ட மோடி அரசு தான் வாங்கியுள்ள கடனுக்கு ஒரு நாளைக்கு கட்டுற வட்டி எவ்ளோன்னு தெரியுமா மோடியின் அல்லக்கைகளே .34.50 crore.அவன் குஜராத் மக்கள் மீது சுமத்தும் கடன் சுமை 2,07,695 crore.ஆதாரம்.
   http://articles.timesofindia.indiatimes.com/2013-04-06/india/38326369_1_capita-debt-gujarat-government-crore

   தான் கடன் வாங்கி வீண் கடன் கொடுக்கும் இந்த காரிய கிறுக்கன் உங்களுக்கு கெட்டிக்காரனாக தெரிந்தால் அது மோடியின் குற்றமில்லை அவனது பிரச்சார எஜெண்டுகளின் வெற்றி அது..கேக்குறவன் கேனப்பயல்னா கேப்பையிலும் நெய் வடியும்.அதுக்காக இந்திய மக்கள் எல்லாரும் ராமன்கள் இல்லை.

   • He could have very well chosen to sell liquor to raise funds instead of borrowing
    He could have distributed freebies to get popularity among poor

    Borrowing and investing is not bad thing! Borrowing and spending is..

    Same debt situation is given in diff perceptive…

    Author, Please read this article to increase your knowledge how to write an article.. A better and holistic criteria of surveying the debt situation would be to look at the figures Debt as % of GSDP! According to Planning Commission data, when Narendra Modi took over as the CM of Gujarat in 2001-02, the public debt of Gujarat was a whopping 38.78% of GSDP. The Government has been steadily decreasing the debt over the years and the Budget Data shows that revised estimates of Public Debt for 2012-13 were at 19.93% of GSDP. It is amply clear that the Gujarat Government has been phenomenal in reducing the load of debt. Also a major chunk of this debt is due to the Narmada project which is very important for the water needs of Gujarat. While on the topic of debt, it is imperative to discuss the interest on the debt repayment. The Interest payment on the debt as a percentage of revenue receipts also has been on a constant decline, from 26.82% in 2004-05 to 14.52% in 2012-13.

    “Lies, damned lies, and statistics”

   • Tamilnadu is also in same debt situation.But

    10000+ crores are spent for free idlies/tv/grinder not for bringing business
    2000 crores was spent or assembly building on barrowed money and not used by jj Govt for ego

    • ராமன் அவர்களே,
     GSDP க்கும் வாங்குன கடனுக்கும் கட்டுர வட்டிக்கும் உள்ள விகிதம் எல்லாம் தனியே இருக்கட்டும்.அந்த ஈர வெங்காயத்தை அப்றமா உரிச்சுக்கலாம்.இப்ப பேசுறது மோடி அரசு ரூ.2900 கோடி முதலீடு போட்ட டாட்டாவுக்கு மக்கள் வரிப்பணம் 9570 கோடி ரூபாயை கடனா அள்ளி வுட்டது பத்திதான்.இப்டி இன்வெஸ்ட் பண்ணுறது வேலை வாய்ப்பை அதுகரிக்கும்னு சப்பை கட்டு கட்டுற உங்களுக்கு நானோ தொழிற்சாலை எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குதுன்னு தெரியுமா.நேரடியாவும் மறைமுகமாவும் 10000 பேருக்குதா வேலை வாய்ப்பு கெடச்சிருக்கு.

     ஆதாரம் http://tata.com/article.aspx?artid=XFBpop5GFuM=

     அதாவது ஒரு ஆளுக்கு வேலை கொடுக்க ஒரு கோடி முதலீடு.

     மக்கள் வரிப்பணத்தை டாடா என்ற தனி ஒரு முதலாளியின் கொள்ளைக்கு திறந்து விட்ட மோடி கெட்டிக்காரன்.அந்த கொலைகார அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்க ராமன் போன்ற இங்கிலிபிஸ்சுல பொளந்து கட்டும் அறிவாளிகள்.வெட்க கேடு.

     • Kindly compare it with other states.

      How many jobs are created with respect to
      1) money invested
      2) natural resource invested
      3) pollution created

      10000 crores wastted in TN for free TV ,mixie stuff. How many jobs are created?

      2000 crore assembly building wasted just for ego….EGO. I repeat 2000 crore wasted just for EGO

      1 lakh crore is being spent every year for Rural work project? Howmany jobs it has created? If Govt stops funding how many jobs will sustain in future?

      Modi is not perfect. Given the choice i will vote for Aam admi party. But Rahul with his socialist spending will bankrupt our country

      • இதேது வம்பா இருக்கு.மத்தவர்களுடைய குறைகள் எப்படி மோடியின் குறைகளை இல்லாமல் ஆக்கி விடும்.அவர் பிரதமர் ஆனால் மன்மோகன் மேரி இன்னொரு கார்பொரட் அடிமை.அவ்வளவுதான்.நெருக்கி புடிச்சு சிந்திக்க சொன்னால் மோடி நல்லவர் வல்லவர்ன்னு உங்களால சொல்ல முடியல பாருங்கோ.இந்த கண்றாவிக்கு இன்டர்நெட் பூரா மோடி மோடின்னு அவாள் கழிஞ்சு வைக்கிறதுதா சகிக்க முடியல.

       • //மோடி நல்லவர் வல்லவர்ன்னு உங்களால சொல்ல முடியல பாருங்கோ.//

        நான் கூறுகிறேன் , மோடி வல்லவர் . கெட்டவர் என்று நீதி மன்றத்தால் நிரூபிக்க முடியாதலால் நல்லவர்

        மோடி தீயவனாக இருந்து இருந்தால் , மக்களுக்கு போதை தரும் இலவச திட்டங்களை அள்ளி விட்டு இருந்திருப்பார்

        தொலை நோக்கு திட்டங்கள் தீட்டாமல் சட்டசபை கட்டிடம் கட்டி கொண்டு இருந்திருப்பார்

        அல்லது மாயாவதி போல சிலை வடித்து கொண்டு இருந்திருப்பார்

        குஜராத்திகள் எல்லோரும் மத வெறியர்களாக இருந்திருப்பின் , மோடியின் சாதனையாக எத்துனை ராமர் கோவில் கட்டினார் என்று பேசி இருந்து இருப்போம்.

        மோடியின் குறையாக நான் காண்பது லோக் ஆயுக்தாவை புறம் தள்ளியது

        இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்காலிக தேவை மோடி
        நிரந்தர தேவை லஞ்சத்தை ஒழிக்கும் லோக்பால் போன்ற திட்டங்கள்.

        தனி நபரை நம்பி நாட்டின் வளர்ச்சி இருக்க கூடாது

        தனி நபருக்கு பயந்து வாழும் சூழ்நிலை சிறுபான்மையினருக்கு இருக்க கூடாது.

        • \\மோடி வல்லவர் //

         .ஒரு ஆளுக்கு வேலை குடுக்க ஒரு கோடி முதல் போடுற மோடி வல்லவர்ன்னு நம்புனா உடோபியன் சொர்க்கத்தில் குடியிருக்கும் உங்கள் உரிமையில் தலையிட விருப்பமில்லை..

         \\கெட்டவர் என்று நீதி மன்றத்தால் நிரூபிக்க முடியாதலால் நல்லவர்//

         முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்.
         நான் யூதன் அல்ல, அதனால் நான் பேசவில்லை.
         பின்பு அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்.
         நான் கம்யூனிஸ்டு அல்ல, அதனால் நான் பேசவில்லை.
         பின்பு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்,
         நான் தொழிற்சங்கவாதியல்ல, அதனால் நான் பேசவில்லை.
         இறுதியாக அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்.
         இப்பொழுது எனக்காகப் பேச எவரும் இல்லை. – நிமோலர்

         இப்படியே போனால் இறுதியாக மோடி ஒரு நாள் ராமன்களை தேடி வருவார்.அப்போதும் நீதிமன்றங்கள் மோடியை தண்டித்திருக்காது.

         • //ஒரு ஆளுக்கு வேலை குடுக்க ஒரு கோடி முதல் போடுற மோடி வல்லவர்ன்னு நம்புனா //

          1) Do you have statistics for other states?
          2) How do you know this number is bad without comparison?
          3) Do you know how much money Central Govt is spending on free salary scheme?
          4) How many jobs will be available after Central Govt spending Vs Gujarat spending ?

          Some other group is trying to rank the states. I am not sure about the methodology or the team behind it. However some good initiative.

          http://www.iforindia.org/ReportCard.aspx?cm=745771a7-6fa7-49fd-b854-713541b78c09

          http://www.iforindia.org/ReportCard.aspx?cm=d7e6c0dc-d56f-4ead-b0a1-1d3c34fc1dc8

          \\கெட்டவர் என்று நீதி மன்றத்தால் நிரூபிக்க முடியாதலால் நல்லவர்//

          Along with that , I have given my justification

          மோடி தீயவனாக இருந்து இருந்தால் , மக்களுக்கு போதை தரும் இலவச திட்டங்களை அள்ளி விட்டு இருந்திருப்பார்

          //இப்படியே போனால் இறுதியாக மோடி ஒரு நாள் ராமன்களை தேடி வருவார்.அப்போதும் நீதிமன்றங்கள் மோடியை தண்டித்திருக்காது.//

          Thats why I said ,
          நிரந்தர தேவை லஞ்சத்தை ஒழிக்கும் லோக்பால் போன்ற திட்டங்கள்.

          we have to revamp our judicial system and investigation agencies.

          But you guys were making mockery of Arvind Kejriwal and Anna

          Pray tell me , What is the point of barking at an individual, When you have a big hole in your system?

        • //மோடி தீயவனாக இருந்து இருந்தால் , மக்களுக்கு போதை தரும் இலவச திட்டங்களை அள்ளி விட்டு இருந்திருப்பார்//

         மக்களுக்கு கொடுத்தால் தீயவன்…கார்பொரட் நிறுவங்களுக்கு இலவசமாக கொடுத்தால் அறிவாளி….:-) 🙂

         சம்போ சிவ சம்போ…..சம்போ சிவ சம்போ….

         • @Maakaan

          Corporates create Job, pay tax ,export the product and bring wealth to country. It will be good for future and your kids may get employment

          Individual will eat and poop. Your kids can maximum learn to beg the Govt.

  • Raman u r NOT getting the point… You are saying to attract investment MODI and Karuna are doing this… But What is the development after 12 years of freebies to corporates and no freebies to common man ?? As per RBI’s data gujarat is still in least developed states list blindly giving freebies to people is wrong in the same way blidly giving incentives to MNCs is also wrong… what MODI wants is some or how to get big investments and remain in the lime light… As u said Karuna also gave tax exemption to hundai even now many companies are getting it but tat didn’t make TN most debt ridden state why ? even after giving freebies TN is not as debt ridden as Gujarat why ? The reason is before u give incentives u have to sit and calulate wat will the govt get and wat wil the people get out of this .. but i think MODI is not doing this, all he wants is a headline saying “TATA to invest 3000 crores in Gujrat”.. Also in the state which is spoiling people with freebies u cannot et any manual labour below 300 per day in cities(might not be accurate in my place its 600) but in the great developed gujarat the average salary for mannual labour is 108 rs per day… If this is called development and only this will boost economic growth iam sorry i do NOT support tat kind of economic growth.

   • but tat didn’t make TN most debt ridden state why ?

    Tamil nadu
    The state’s debt was estimated at 20.39 per cent of GDP in 2011.[9][10]
    In contrast Gujarat’s public debt was Rs 1,38,978 crore or 19.93% of GDP

    // The reason is before u give incentives u have to sit and calulate wat will the govt get and wat wil the people get out of this //

    If TN has low debt, why do you think TN is running Tasmaac?
    Do you know the percentage of 40000 crores Tasmaac business in TN GDP?

    //“TATA to invest 3000 crores in Gujrat”//
    Nothing wrong in that. Some states need advertisement. Chennai is a metropolitan city becasue of british and its location.TN is grown or what it is today is because of Kamarajar

    //. Also in the state which is spoiling people with freebies u cannot et any manual labour below 300 per day in cities(might not be accurate in my place its 600) //

    In your words people are not spoiled with freebies

    ///great developed gujarat the average salary for mannual labour is 108 rs per day//
    You have the answer ,remove MNEGRA project from TN and see these skewd numbers

  • Also the reason for failure in unwise borrowing of money.. I agree with u to some extent on giving incentives to business initiatives but here tat is NOT the case,

   The latest CAG report tabled in the assembly last week stated, “As of 31 March 2012, the government had invested Rs 39179 crore in areas where the average return on investment was just 0.27 per cent in last five years while the government paid an interest of 7.75 on its borrowings during the same period.” It said continued use of borrowed funds to fund investment which do not have sufficient returns will lead to an unsustainable financial position.

   As u can read is it a wise decidion to invest in a sector where the return will be only 0.27 percent by borrowing money at a intrest rate 7.75 ?? This itself proves wat MODI exactly wants and its LIME LIGHT on HIM…

   • //the government had invested Rs 39179 crore in areas where the average return on investment was just 0.27 per cent in last five years while the government paid an interest of 7.75 on its borrowings during the same period//

    Wow! So TN has invested in TASMAC which will get high growth
    And central govt has invested 1 lakh crores of free salary every year which will give good return

    Before I come to conclusion , I will ask where is the investement yield graph for other states..

   • //As u can read is it a wise decidion to invest in a sector where the return will be only 0.27 percent by borrowing money at a intrest rate 7.75 ?? This itself proves wat MODI exactly wants and its LIME LIGHT on HIM…
    //

    Kamarajar invested on education, how will you calculate return on investment ?
    Tamilnadu makes money on liquor, how will you calculate loss of health , increaed crime …
    Infact GDP growth is calculated without considering the environmental impact

 5. ரத்தன் டாட்டாவின் காலடியில் மொத்த குஜராத்தையே அடகு வைத்தவர்தான் மோடி!!!!

  இடது சாரிகள் ஆதரித்தாலும் மக்களுக்கு எதிரான டாடா நானோ கார் ஆலையை மேற்கு வங்கத்திலிருந்து விரட்டியடித்தார் மம்தா பானர்ஜி. அங்கிருந்து பெட்டியைத் தூக்கிக் கொண்டு நேராக ரத்தன் டாடா சென்ற இடம் குஜராத். குஜராத்தில் கட்டப்படும் நானோ கார் ஆலைக்காக, 1100 ஏக்கர்கள் நிலம் ஒதுக்கப்பட்டன. மோடியின் ராஜதந்திரம் வென்று விட்டது. குஜராத்தை தொழில் வளர்ச்சியடைந்த முன்னோடி மாநிலமாக்க மோடி விரைந்து நடவடிக்கை எடுக்கிறார் என்று மோடியின் அடிப்பொடிகள் புகழ்ந்தனர். ஆனால், அந்த 1100 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான முத்திரைத்தாள் கட்டணம் கூட ரத்தன் டாடா நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படாமல் விலக்களிக்கப்பட்டது தெரியுமா ? மோடி அரசில் ஊழலே இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு மிகப்பெரிய முதலாளி. பல கோடி ரூபாய்களுக்கு அதிபதி. அந்த முதலாளியிடம் நிலம் வழங்கி, அதற்கு முத்திரைத் தாள் கட்டணம் கூட வசூலிக்காமல் தொழில் தொடங்கச் சொல்வது ராஜதந்திரமா ? அது மட்டுமல்ல…. ஒரு நிலத்தை விவசாய நிலத்திலிருந்து வேறு பயன்பாட்டுக்காக மாற்றினால், ஒரு சதுர மீட்டருக்கு குஜராத் விதிகளின்படி ரூபாய் 6 செலுத்த வேண்டும். இந்த 6 ரூபாய் செலுத்துவதிலிருந்தும் ரத்தன் டாடா நிறுவனத்துக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது.

 6. அடப்பாவி! கனிமொழி, ராடியா பேச்சு எவ்வளவு பிரபலம். இந்த படம் வெளியவே தெரியல!

  கட்டுரை ஒரு முக்கிய விஷயத்தை சொல்லவில்லை. டாடாவுக்கு அளிக்கப்பட சலுகைகள் ரகசியமாக வைத்தனர். எப்போடியோ வெளியே கசிந்து விட்டது.

  திமுகவும், காங்கிரசும் சேர்ந்து ஸ்பெக்ட்ரத்தை அடிமாட்டு விலைக்கு கூறு போட்டு விற்ற போது, அவர்களது ஆதரவாளர்களால் இது ஒரு கொள்கை முடிவு என்று வாதிடப்பட்டது. இப்படி செய்வதால் நாட்டில் மொபைல் துறை வளரும் என்று சொல்லப்பட்டது. மோடி செய்ததிற்கும் இவர்கள் செய்ததுக்கும் என்ன வித்தியாசம்? மோடி கூட தொழில் வளர்ச்சி என்று தான் சொல்கிறார்.

  ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் எனக்கு இருக்கும் முக்கிய விமர்சனம், அந்த விற்பனை வெளிப்படையாக நடைபெறவில்லை, கமுக்கமாக முடித்துவிட்டனர் என்பது. இவர்கள் யோக்கியர்கள் என்றால், அடிமாட்டு விலைக்கு விற்கும் முன், இதன் சாதக-பாதகங்கள் பொதுவெளியில், பாராளுமன்றத்தில் விவாதித்து விட்டு செய்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

  இப்போது மோடியும் கமுக்கமாகதான் செய்திருக்கிறார்! கலைஞர் டிவிக்கு இருநூறு கோடி வந்தது போல, டாடா விஷயத்திலும் ஏதாவது நடத்தா? போட்டு உடையுங்கள். மொத்தமாக மங்களம் பாடி விடலாம்.

  // அலைக்கற்றை ஊழலை ஒட்டி, ராஜாவின் ராடியா கனெக்சன் பற்றி ரவுண்டு கட்டிய சோ ராமஸ்வாமி அய்யர், டாடாவின் ராடியா கனெக்சன், மோடியின் ராடியா கனெக்சன் பற்றி மூச்சு விடவில்லை. //

  ரொம்ப மோசம்.

  இந்த போட்டோ சூப்பர் ஒய்! facebook ல ஷேர் பண்றேன்.

 7. Mr Raman the top most economist should explain why Modi gave Rs9570 crore loan to Tata at 0.1% interest?And also gave exemptions from the Gujarat Labour legislation stipulating 85% reservation for local labourers and 60% reservation for local management staff?Let him find out and tell Vinavu readers how many Gujarathis are emoployed in Tata”s Nano factory after Tata availed benefits to the tune of 30000 crore from Modi.Even DRI loans to the poorest among poor is given at 4% interest by nationalized banks.Let Raman read Savukku,rediff.com and counterview.org for more details about myths about Gujarat.

 8. இந்த நீரா ராடியாவை அலைக் கற்றை ஊழலில் கைது செய்யாதது குரித்து ஏன் எந்த அரசியல்வாதியும், காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திமுக, அதிமுக, சமஜ்வாடி, மதசார்பற்ற முஸ்லிம் கட்சிகள் எதுவும் வாயைத் திறக்கவில்லை? பாஜகதான் மோடிக்காக வாய் மூடி இருந்திருக்கும், சரி. வினவு கூடவா இது குறித்து கவலைப் படவில்லை?

 9. மொதல்ல நீங்கல்லாம் ட்ராபிக் சிக்னல ஒழுங்கா பாலோ பண்ணுங்க, பப்ளிக்ல ஒன்னுக்கு போகாம இருங்க, அதுலயும் முக்கியமா தெனம் காலையும் மாலையும் ரெண்டு தடவ குளிங்க. அதுக்கு அப்புறம் நாட்டு நடப்ப பத்தி பேசலாம்.

 10. இப்பொதாவது புரிந்து கொள்ளுங்கள் அய்யா! பி ஜே பி, காங்கிரஸ்,இடதுகள் என்பதெல்லாம் வெறும் மாயை! பின்னணி அமெரிக்க, பிரிட்டன் ஏகாதிபத்தியங்களுடன் இணைந்த இந்திய ஏகாதிபத்தியமான ஆர் எஸ் எஸ்! நண்பர் வெங்கடேசன் இப்போதாவது புரிந்து கோள்ளட்டும்! கலைஞரையும், தி மு க வையும் ஒழித்து கட்ட அவாள் சதி 2G! கலைஞரின் சார்பாக கனிமொழியும், மாறனும் பழிவாங்க படுகின்றனர்! அடுத்து இவர்கள் மட்டும் யோக்கியமா என்று கேட்பீர்கள்! அரசியலில் யோக்கியர்கள் பினாமியின் மூலம் அயொக்கியத்தனம் செய்வார்கள்! பொய் பிரச்சாரத்தின் மூலம் சாதிப்பார்கள்! மக்கள் எப்பொதும் ஏமாளிகளே! இந்திய சுதந்திரமே ஒரு அவசரமாகநடந்த குறை பிரசவம்தான்!நமது ஜனனாயகத்தின்(?) உயிரொட்டமே ஊழல்தான்!

  முன்னாள் ராணுவ தள்பதி வி கே சிங், நாட்டை பாதுகாக்க வேண்டிய பொருப்பிலிருந்தவர், ராணுவத்தினருக்கு ஒதுக்கிய நிதியிலிருந்து அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கபட்டது எப்போதும் நடப்பதுதானே என்கிரார் ! முன்னால் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பலரும் ஊழல் கறை படிந்தவர்கள் என்று அப்பட்டமாக கூறினார்! இவர்களால் ஊழல் ஒழியுமா ?

  மோடி பிரதமர் ஆனாலும் ஊழல் ஒழியாது! இப்போது நடக்கும் ராக்கொள்ளை, பகற்கொள்ளையாக நடக்கும்! சாதிக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டு, வேறு வழியின்றி ‘இந்துக்கள்’ ஆர் எஸ் எஸ் அமைப்பின் அடிமையாகி விடுவார்கள்! மைனோரிடிகள் பயத்தினாலும், பணத்தினாலும் வழிக்கு கொண்டுவரப்படுவர்! சாணக்கியன் சும்மா ஜெயிக்கவில்லை!

 11. நல்லவனைப்போல் இருப்பான் பரம சண்டாளன் என்று பழமொழி உண்டு.உதாரணம் மோடி ஆர்.எஸ்.எஸ் கும்பல்.மோசடி கும்பலோடு மோடிக்கு என்ன வேலை?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க