Wednesday, April 21, 2021
முகப்பு செய்தி மழையை முன்னிட்டு சென்னை பொதுக்கூட்டம் இடம் மாற்றம் !

மழையை முன்னிட்டு சென்னை பொதுக்கூட்டம் இடம் மாற்றம் !

-

சென்னையில் மழைக் காலம் தொடங்கி விட்ட நிலையில், திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடத்த முடியாத சூழலில், எம்.ஜி.ஆர் நகரில் நடைபெறவிருந்த பொதுக் கூட்டம் அரங்க கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இடம் மாற்றம் குறித்த விவரம் கீழே,

இந்து மதவெறி பாசிஸ்டு
இந்தியாவின் ராஜபக்சே

மோடியின் முகமூடியைக் கிழித்தெறியும்

அரங்க கூட்டம் 26.10.2013 சனிக்கிழமை  மாலை 6 மணிக்கு

புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபத்தில்

(ஓட்டல் தாச பிரகாஷ் – பூந்தமல்லி சாலை – புரசைவாக்கம் எதிரில், சங்கம் தியேட்டர் அருகில்)

நடைபெறும்.

        “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி”

என்ற திருச்சி பொதுக் கூட்டத்தில் தோழர் மருதையன் பேசிய உரை அடங்கிய
நூல் வெளியிடப்டும்.

இடம் மாற்றத்தை நண்பர்கள் மத்தியில் பரவலாக பகிரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

உரையாற்றுவோர் :

தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க

வழக்குரைஞர் பாலன், பெங்களூரு உயர்நீதி மன்றம்

புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு

மோடி போஸ்டர்

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

 1. கிழிக்க வேண்டிய முகமூடிகள் தமிழ்நாட்டில் நிறையவே இருக்கும் போது ஏன் நீங்கள் அடுத்த வீட்டு முற்றதில் நடக்கும் பிரச்சனைக்கு நீதிபதியாகுறீர்கள்?

  பருவம் வந்ததும் காலம் கனியும் போது அவர்களே அந்த பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வார்கள்.உதவிக்கு கூப்பிட்டால் மட்டும் உங்கள் பரோபாகரதன்மையும் தியாகத்தின் தழும்புகளை காட்டு போர்முனையில் அணிவகுத்து நில்லுங்கள்.

  அதுவரைக்கும்…

  தலித்திய வக்கீல்லுக்கு மலம்தீத்துப்படுகிறது.தலித்திய நீதிபதி சகநீதிபதிகளால் அவமானப் படுத்தப்படுகிறார். இப்படியெல்லாம் நடப்பு வரலாற்றில் தினம்தினம் நடக்கும் போது கல்வி அறிவில்லாத அதுவும் சாதிரீதியாக அடக்கியொடுக்க பட்டமக்களுக்கு என்ன நடக்கிறது என்பது சொல்லத் தேவையில்லை.

  நரேந்திர மோடி அரசசொத்துகளை கருணாநிதி மாதிரி குடும்ப சொத்தாகவா மாற்றி வைத்திருக்கிறார்? அல்லது அம்மையார் ஜெயலலிதா மாதிரி ஒரு ரூபா சம்பளம் வாங்கி கொண்டு கோடிக்கணக்கில் பெறாமகனுக்கு திருமணமா நடத்தி வைக்கிறார். வெட்டவெளிக்கு வெளிச்சம் வந்ததும் சாரதாதேவி கோலம்.

  முதலில் தமிழ்நாட்டில் இருக்கும் ஓட்டை உடசல்களை அடைக்க முதலில் கற்றுக்கோள்வோம். முதலில் எமது சொத்த நிலத்தை எப்படி உழுவது என்பதைப் பற்றி தத்துவார்த்த பயிற்சி எடுப்போம். அப்புறம் ஆந்திரா என்னா? அகில இந்தியாவுக்குமே பயிற்ச்சி வழங்கி முழு இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக தமிழ்நாட்டை முன்நிறுத்துவோம்.

 2. தவறு செய்பவர்களை இவன்,அவன்,இவள்,அவள் என்று பேதம் பார்த்து தண்டிக்கும் வழகக்கம்மாவோவுடையது அல்ல சகோதரா தவறு செய்பவன் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.உண்மையான கொள்கை கொண்டவர்களுக்கு வெற்றி அடையும் வழியும் தெரியும். பாபுபகத்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க