Monday, August 15, 2022
முகப்பு வாழ்க்கை நுகர்வு கலாச்சாரம் சுதேசி மோடியின் விதேசி மேக்கப் செலவு தெரியுமா ?

சுதேசி மோடியின் விதேசி மேக்கப் செலவு தெரியுமா ?

-

சீமான் மோடி
சீமான் மோடி

நான் ஏழ்மையில் பிறந்தவன், வறுமை என்னவென்று தெரியும்?” என்று முழங்குகிறார் மோடி. ஆனால், 80% மக்கள் ஒரு நாளுக்கு ரூ 20-க்கும் குறைவான பணத்தில் வாழும் இந்தியாவின் பிரதமராகத் துடிக்கும் மோடி, உடுத்தும் ஆடைகள் முதல், போட்டுக் கொள்ளும் கண்ணாடி, எழுத பயன்படுத்தும் பேனா, கையில் கட்டும் கைக்கடிகாரம் வரை ஐரோப்பிய பிராண்டுகளையும், விலை உயர்ந்த மேட்டுக் குடி மக்களுக்கான ஆடைகளையும் பயன்படுத்துகிறார்.

ஸ்ரீ நரேந்திர மோடியை உருவாக்கும் பிராண்டுகள்- டாக்டர் விக்ரம்

மூக வலைத் தளங்களில் நமோ என்று அறியப்படும் ஸ்ரீ நரேந்திர மோடி அவரளவில் ஒரு மாபெரும் பிராண்டாக உள்ளார். ஆனால், அவருக்கு விருப்பமான பிராண்டுகள் என்னென்ன என்று தெரியுமா?

ஸ்வர்னிம் சங்குல்
மோடியின் ரூ 150 கோடி அலுவலகம்.

மோடிக்கு பிடித்தமான கைக்கடிகாரம் மோவாடோ. 1881-ல் சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட மோவாடோ பிராண்ட் பின்னர் கியூப யூதர் குடும்பம் ஒன்றினால் வாங்கப்பட்டது. மோவாடோ பிராண்டின் உரிமையாளர்கள் தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள பாரமஸ் என்ற இடத்தில் செயல்படுகின்றனர்.

பேனாக்களைப் பொறுத்த வரை ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரத்தின் பெயரால் அழைக்கப்படும் மோன்ட்பிளாங்க் பேனாக்கள்தான் ஸ்ரீ மோடிக்கு விருப்பமானவை. 1906-ம் ஆண்டு கிளாஸ் யோஹான் வாஸ் என்ற எழுதுபொருள் வணிகர், ஆல்பிரட் நெகமியாஸ் என்ற வங்கியாளர், மற்றும் ஆகஸ்ட் எபர்ஸ்டெயின் என்ற பொறியாளர் ஆகிய மூவரால் உருவாக்கப்பட்ட இந்த பிராண்டை 1977-ம் ஆண்டு டன்ஹில் குழுமம் விலைக்கு வாங்கியது. மலிவான பேனாக்கள் செய்வதை நிறுத்தி விட்டு, ஆடம்பர சொகுசு பிராண்டாக மோன்ட்பிளாங்கை டன்ஹில் கட்டியமைத்தது, டன்ஹில். இன்று கார்ட்டியர், வான் க்ளீஃப், க்ளோயே போன்ற ஆடம்பர பிராண்டுகளின் உடமையாளரான தென் ஆப்பிரிக்காவின் ரூபர்ட் குடும்பத்தின் ரிச்மாண்ட் குழுமத்துக்கு சொந்தமாக உள்ளது மோன்ட் பிளாங்க்.

டிசைனர் மோடி
டிசைனர் மேட் மோடி

ஸ்ரீ நரேந்திர மோடியின் தேர்வு புல்காரி பிராண்ட் மூக்கு கண்ணாடிகள்தான். கிரேக்க நகைவணிகர் சோடிரியோஸ் வோல்காரிஸ் புல்காரி பிராண்டை உருவாக்கினார். பின்னர் இத்தாலியின் நேப்பிள்சுக்குப் போய் ரோமில் கடை திறந்தார். 2011-ல் அந்த நிறுவனத்தை எல்விஎம்எச் (லூயி விட்டான்) என்ற சொகுசு பொருட்கள் நிறுவனம் வாங்கியது.

கடைசியாக, ஸ்ரீ நரேந்திர மோடி தனது சூட்டுகளையும், குர்த்தாக்களையும் அகமதாபாத்தில் உள்ள ஜேட் புளூ டிசைனர் ஆடை தயாரிப்பாளர்களிடம் தைத்து வாங்குகிறார். பிபின் சௌகான், ஜிதேந்திர சௌகான் சகோதரர்களுக்கு சொந்தமான இந்த நிறுவனம் 1989 முதல் மோடியின் ஆடைகளை தைத்து வருகிறது. மோடி குர்த்தா என்ற பெயரிட்டு ஒவ்வொரு மாதமும் அவர்கள் விற்கும் சுமார் 2,000 குர்த்தாக்கள் 40 வயதுக்கு அதிகமான வெளிநாட்டு குஜராத்திகளால் பெருமளவு வாங்கப்படுகிறது.

சோனியா காந்தியின் தனி உதவியாளர் அகமது படேலும் இந்தக் கடையில்தான் ஆடைகளை தைத்துக் கொள்கிறார். அவருக்கு அளவு எடுப்பதற்காக பின்னிரவு விமானத்தில் டெல்லிக்குப் போய் அளவு எடுத்து விட்டு, அதிகாலை விமானத்தில் திரும்பு வருகிறார் சௌகான் சகோதரர்களில் ஒருவர்.

ஆகவே, நரேந்திர மோடியை கட்டியமைக்கும் பிராண்டுகள் – புல்காரி, மோவாடோ, மோன்ட்பிளாங்க், மற்றும் மோடி குர்த்தாக்கள்.

ஸ்ரீ நரேந்திர மோடியே ஒரு பிராண்ட்தான் ஆனால், அடுத்த முறை நீங்கள் அவரை தொலைக்காட்சியிலோ சமூக வலைத் தளங்களிலோ பார்க்கும் போது நரேந்திர மோடி என்ற பிராண்டை உருவாக்கும் பிராண்டுகளை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். மோவாடோ கைக்கடிகாரம், மோன்ட்பிளாங்க் பேனா, புல்காரி கண்ணாடி, மோடி குர்த்தா இவற்றை கண்டுபிடியுங்கள்.

நன்றி : Desibrandstrategy.com

ஏழைகளின் நண்பன்
நான் ஏழ்மையில் வளர்ந்தவன், வறுமையை அறிந்தவன்
1. டிசைனர் ஆடைகள்
2. ரூ 150 கோடி செலவிலான அலுவலகம்
3. Z+ பாதுகாப்பு
4. வெளிநாட்டு கண்ணாடிகள்
ஆண்டவன் எல்லோரையும் இப்படி ஏழையாக படைக்க மாட்டானா!

மேலும் விபரங்களுக்கு

 1. மோவாடோ கைக்கடிகாரங்கள் – ரூ 20,000 முதல் ரூ 70,000 வரைMovado Watches
 2. மோன்ட்பிளாங்க் பேனா – ரூ 30,000 முதல் ரூ 70,000 வரைMontblanc pens
 3. புல்காரி கண்ணாடி – ரூ 10,000 முதல் ரூ 20,000 வரை
 4. மோடி குர்த்தாNarendra Modi’s personal tailor
 5. 150 கோடி அலுவலகம்Inside Narendra Modi’s Rs 150 crore office
 1. சாதாரண வேஷ்டி சட்டைபோட்டுக் கொண்டு காலையில் வெளியே போனால் என்ன சார் உடம்பு சரியில்லையான்னு கேட்குற அளவுக்கு காலம் மாறிப் போய்கிடக்கும். அவரும் என்ன தான் பண்ணுவாரு?

  • கரெக்டா உங்க மேட்டர கேட்டீங்க போங்க……அது என்னமோ காவிகலர்ல பாரதமாதா படம் போட்ட லங்கோடுதானாம் வழக்கம்போல் அதுவும் காஸ்ட்லிதான் ப்ப்பியா அவர்களே….?

  • அதுவும் காஸ்லியாகதான் இருக்கும் பையா ? என்ன அவர் அவுத்து காட்டினா நல்லது, நாகரீகம் கருதி நாங்கள் கூறவில்லை அதுவும் உஙகளுக்கு தெரிய வேண்டும் எனில் அங்கேயே சென்று பார்க்கவும், எங்கே உங்க ஆங்கிலம் ஜட்டிக்கு ஆங்கிலத்தில் தெரியவில்லை பையாஆஆஆஆஆஆ ?

  • இப்போதெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பிறர் உபயோகித்த ஜட்டிகளை அதிகம் வாங்குவதில் இந்தியாவில் உள்ள பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அதை நடத்துபவர் கூறியதாக படித்த நினைவு. இந்த கேடி மோடி அப்படி யாருடையதையாவது வாங்கி போட்டிருப்பார். ஆதலால் அதை கண்டுபிடிப்பது சிரமம் தான். நீங்கள் வேண்டுமானால் நண்பர் அவர்கள் பின்னூட்டம் 2.2 – ல் கூறியபடி சென்று பார்க்கவும்.

 2. ராம் பக்தர்கள் எல்லாம் ராம்ராஜ் வேஷ்டி,சட்டை தான் அணியவேண்டுமா என்ன?நீரா ராடியா முன்னிலையில் டாடா பிர்லா ,அம்ப்பானி களை சந்திக்கும் போது ஒரு இமேஜ் வேண்டுமே!முன்னால் டீ மாஸ்டர் என்றுநினைத்து விட கூடாது அல்லவா?

  • தம்முடைய அடையாளத்தை நிறுவுவதற்காக தாம் பயன்படுத்துகிற பிராண்ட்களையும் பொருள்களின் மினுமினுப்பையும் சார்ந்து நிற்கிற தேவை யாருக்கு ஏற்படுகிறது? எவரிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லையோ அவர்தான் பிராண்ட்களின் பின்னாலும் லேட்டஸ்ட் மாடல்களின் பின்னாலும் அலைகிறவர்கள். அத்தகைய மனிதர்களுக்கு சுய பிராண்ட் வேல்யூ மதிப்பு இருப்பதில்லை. இவ்வாறு பிராண்ட்களையும் மாடல்களையும் சார்ந்து இருப்பது மனித கண்ணியத்துக்கும் மதிப்புக்கும் இழைக்கப்படும் அவமானம் ஆகும்.

 3. இப்படி ஏதாவது பில்டப் பண்ணினாதான் அத்வானிய கூட மிரள வைக்க முடியும்.

 4. நன்றி தோழர்களே. எந்தவித தனிமனித தாக்குதலும் இல்லாமல், மற்றும் ஒரு கட்டுரை.

  இது போன்ற ஒரு கருத்தை தான் தமிழருவி மணியன், தலித் தலைவர்களை பற்றி சொல்லபோய், நக்கீரன் அதை திரித்து வெளியிட, நமது தலித் தலைவர்களும் அவர்களின் சுற்றமும் அவரை கடித்து குதறினார்கள்.

  தலைவனுடைய உடை அவன் சார்ந்த சமுக மக்களிடம் அவனை வேறுபடுத்துவதாக இருக்க கூடாது. அதனால் தான் காந்தி, தனது உடை விசயத்தில் கடை பிடித்தார், ஆனால் வினாவுக்கு தான் அதில் உடன்பாடு இல்லையே? இன்று மோடியை எதற்காக விமர்சனம் செய்ய என்று கேட்கமாட்டோம்.

 5. Communism and islam are similar as ideologies to group and and administer masses. Both require uncompromising belief in the system, both require total submission to the system, punishment for not being an adherent is harsh, both systems have similar methods of erasing and re-writing history, the methodology of countering any opposing voices is same (make lot of noise and digress). Both advocate complete centralization of power and handing down of doles. Please don’t ask me to provide examples of each and every instance as mentioned. Do a little research and find out.

  Somehow, I find culmination of both these ideologies in the workings of Cong (i). Another strain that runs through the party is that of amassing of wealth through “any means possible”. It has successfully planted people who think on the party lines in each and every institution responsible for providing governance. If, and I hope so it happens, NaMo becomes PM, first five years are going to be used up in weeding out these commie plants. I remember during the times of NDA, how these commies had created a racket in the name of change of education syllabii, which NDA wanted to change, probably to take care of all the “shuddho”. A sample of what could be, can be easily seen from the link provided by Ravinar on the Ayodhya judgement issue.

  Media, on the other hand just reminds me of that dog, sitting dutifully in front of gramophone on HMV records. They are enjoying power and pelf just like a rich man’s dog would. These dogs would be deprived of juicy bones only when the rich man ceases to be rich. Else, NaMo should expect crazy barks during premiership. Only way to is to put these dogs on a tight leash through proper legislation and accounting.

 6. என்னனு தெரியல வினவுக்கு மோதிய வெச்சுதான் சமீபகாலமா யாவாரம் ஓடுது…. கல்லாவும் நல்லா கட்டுறிங்க. இந்த யாவாரத்துல , மார்க்ஸ் கருத்துகளை உங்கள் தோழர்களே மறந்துடுவாங்க போல…. அத பத்தி எழுதி நினைவுபடுத்துங்க, இல்லன்ன மோதி பின்னாடியே போயி கொள்கையே மாறிட போகுது………

  • மார்க்ஸ் கருத்து மறக்கக்கூடியது அல்ல சகோதரா,மார்க்சியம் படித்துப்பார்.பாபுபகத்.

 7. Narendira Modi will never be a human being at all since the kothra event and more than six IAS officials living proof of all the events that had happened in Maharashtra. which will be a land mark that he will loose all the power because of massacre of many people in the state of Mahatma. All money belonged to the people but no money comes to the side of the poor. All money goes to the political leaders and it will never back to the backward people anymore.
  50% of the Indian being Crorepathies but still the India is Borrowing only more than 100 lakhs Black money is in the swiss bank How can be INDIA? Developed country?

 8. ஹிஹி…

  இத தா நாங்க மோடி போபியா ன்னு சொல்றாங்க.. உங்களுக்கும் இந்த வியாதி வந்ததுல எனக்கு

  ரொம்ப சந்தோஷம்…. இன்னும் நல்லா பதிவு எழுதுங்க… இலவச விளம்பரம் கிடைக்குமில்ல….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க