Saturday, May 3, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விபள்ளி மாணவர் மீது போலீஸ் தடியடி !

பள்ளி மாணவர் மீது போலீஸ் தடியடி !

-

ருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஏரியூர் முதல் பழையூர் வரையிலான சாலையை சீரமைத்து, பேருந்து இயக்கக் கோரி பள்ளி, கல்லூரி மாணவர்களின் சாலை மறியல், போலிசு தடியடித் தாக்குதல் :

students-protest-1ஏரியூர் முதல் பழையூர் வரையிலான சாலையை சீரமைக்கக் கோரி பழையூரில் 22.10.2013 அன்று காலை மறியல் செய்த மாணவர்கள் மீது போலீசு தடியடி தாக்குதல் நடத்தியது என்ற தகவலை அறிந்த பு.மா.இ.மு தோழர்கள் 2 பேர் பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பழையூரில் இருந்து 10 கி.மீ தூரம் வரை நடந்தே சென்று 5 கிராம மாணவர்களிடமும், பொது மக்களிடமும் தகவலை சேகரித்துள்ளனர்.

ஏரியூர் முதல் பழையூர் வரை இந்த சாலை 25 கி.மீ தூரம் ஆகும். தினமும் மேச்சேரி முதல் ஏரியூருக்கும், மறு மார்க்கத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் ஊத்துப்பள்ளத்தூர், பூச்சூர் வத்தல்பட்டி, செல்லமுடி, ஏர்கொல்லப்பட்டி போன்ற 15 மலை கிராமங்கள் உள்ளன.

கடந்த ஆறு மாத்ததிற்கும் மேலாக இச்சாலை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும், மணலும் மண்ணுமாகவும், ஜல்லிகள் நிறைந்தும் போக்குவரத்துக்கு சற்றும் அருகதை இல்லாத சாலையாக உள்ளது. பல்வேறு பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. மழை வெள்ளத்தினால் பல இடங்கள் கால்வாய்களாக மாறியது மட்டுமின்றி சிறிய, பெரிய கற்கள் உருண்டு கிடக்கின்றன. சாதாரண டூவீலரில் போவதற்கும் கூட மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலையில், அருவருப்பையும் ஏற்படுத்துகிறது.

students-protest-2இதனால், பேருந்து போக்குவரத்து இரண்டு மாதத்திற்கும் மேலாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுமக்கள் தங்களது அன்றாட போக்குவரத்திற்கும் கடுமையான துன்ப துயரங்களுக்கு தள்ளப்பட்டனர்.

கல்வித் தனியார்மயத்தினால் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து வரும் இந்த சூழ்நிலையில், இவர்கள் படிப்பையே நிறுத்திவிட்டு ஆடு, மாடு இவற்றையே மேய்த்துக் கொண்டு இருக்க சொல்லும் வகையில் ‘அரசு’ போக்குவரத்தை கிராமங்களில் முடக்கி வருவதை உணர முடிகிறது.

இப்பகுதியில் இருந்து மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக பெரும்பாலை, மேச்சேரி போன்ற மாணவர்கள் சென்று வருகின்றனர்.

பேருந்துகள் இயக்கப்படாததால், இந்த வழியாக செல்லும் டெம்போ, டிராவல்ஸ் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் நிலைக்கு மாணவர்களும், பொதுமக்களும் தள்ளப்பட்டனர். இதை வாய்ப்பாக பயன்படுத்திய டெம்போவினர் மேச்சேரிக்கு சென்று வர நபருக்கு ரூ. 150 வரையிலும் வசூல் நடத்தியுள்ளனர்.

இதை சமாளிக்க முடியாத சாதாரண ஏழை மாணவர்கள் பூச்சூர், வத்தல்பட்டி போன்ற பகுதியிலிருந்து 5 முதல் 10 கி.மீ நடந்தே பழையூருக்கு வருகின்றனர். இதற்காக காலை 6 மணிக்கே பள்ளிக்கு தயாராக வேண்டியுள்ளது. மாலை வீட்டிற்கு வருவதற்குள் இருட்டி விடுவதால், மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சிலர் இதை ஆச்சரியத்துடன், இந்த காலத்திலும் இவ்வளவு தூரம் நடந்து சென்று படிக்கின்றனரா? என ஆச்சரியத்துடன் கேட்கலாம். ஆம், இது தான் உண்மை.

இப்படி, தினம் தினம் பல்வேறு சிரமங்களையும், கொடுமைகளையும் அனுபவித்து வந்த மாணவர்கள் 16.9.2013 அன்று கலெக்டரிடம் மாணவர் மன்றம் சார்பாக, நேரில் மனு கொடுத்துள்ளனர். மனுவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நம்பிக்கையாக இருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மனுவை மயிரளவுக்கும் மாவட்ட ஆட்சியர் மதிக்கவில்லை. மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் எல்லாம் ஏமாற்று என்பதை பகுதி மாணவர்களும், பொதுமக்களும் உணந்துள்ளனர்.

இதற்கு பிறகுதான், இச்சாலையை பயன்படுத்தும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தன்னெழுச்சியாக 22.10.2013 அன்று காலை 9 மணியளவில் பழையூர் பேருந்து நிறுத்தத்தில்  500-க்கு மேற்பட்டோர் சாலை மறியல் செய்துள்ளனர். இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களும் அடங்குவர். மறியல் தொடங்கி 3 மணி நேரமாகியும் எந்த அதிகாரியும் வரவில்லை.

பின்னர், தாசில்தார் போராட்டம் நடந்த இடத்துக்கு வந்து, “ரோடு போடணுமா, சரி நடவடிக்கை எடுக்கிறேன், எல்லாம கலஞ்சி போங்க” என மிரட்டியுள்ளார். இதை மாணவர்கள்  மறுத்து, “ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. கலெக்டர் வரணும்” என்று கூறியுள்ளனர். பேச்சுவார்த்தை என்பது இவ்வளவுதான். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் முடித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசு வந்தபின் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். தலை நிற்காத அளவுக்கு சாராயம் குடித்திருந்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், “144 தடை உத்தரவு இருக்கு, பெரியவங்க எல்லாம் விலகிப் போங்க, இல்ல தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போட்டுருவேன்” என கிறுக்குத்தனமாக மிரட்டியுள்ளான்.

இன்ஸ்பெக்டர் ‘ராஜ்குமார்’ போதையில் உலாவருபவன். யாராக இருந்தாலும் வாய்க்கு வந்தபடி இழிவாக பேசுவது, பெண்களை பார்த்தால் இன்னும் அதிகமாக கெட்ட வார்த்தைகளால் கொட்டி தீர்ப்பது போன்ற பண்புகளை இயல்பாகக் கொண்டவன். காவல் ஆய்வாளர் என்ற முறையில் அதிகாரத் திமிரோடு போராடும் மக்களையும், தோழர்களையும் தாக்கி தற்பெருமை கொள்பவன். இந்த பகுதியில் செயல்படும் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களைத் தாக்கிய விவகாரத்தில், ராஜ்குமார் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைவிட இந்த பகுதி மக்களிடம் விசாரித்து பார்த்தால் தெரியும் ராஜ்குமாரின் உண்மை முகம்.

சாலை மறியல் செய்த மாணவிகளை பார்த்து, “நீங்க எல்லாம் படிக்க வர்றீங்களா, இல்ல ‘நிரோத்’ வாங்கிட்டு காட்டுக்குள்ள போறவங்க மறியலா பண்றீங்க” என்று இழிவுபடுத்தி பேசியும், மேலும் பல்வேறு தகாத வார்த்தைகளில் திட்டிக் கொண்டே காட்டுமிராண்டித் தனமாக தடியடியை நடத்தியுள்ளான்.

செய்வது அறியாது மாணவர்கள் நான்கு திசையிலும் சிதறி ஓடினர். ஓடியும் விடாத போலீசு ‘துரத்தி துரத்தி’ தாக்கியுள்ளது. இதில் ஒரு மாணவனுக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. பல மாணவர்களுக்கு கடுமையான உள்காயம் ஏற்பட்டது.

தடியடியில் கலைந்த மாணவர்கள் சிலர் அருகில் இருந்த வகுப்பறைக்குள் புகுந்துள்ளனர். அப்போதும் விடாத இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், உள்ளே அத்துமீறி நுழைந்து தாக்கியுள்ளான். ‘சின்ன பசங்கள அடிக்காதீங்க’ சார் என அங்கிருந்த பெரியசாமி ஆசிரியர் தடுத்துள்ளார். உடனே “டேய்! போராட்டத்துக்கு நீதாண்டா காரணம்” என தகாத வார்த்தையில் பேசி, சட்டையை கிழித்து தாக்கியுள்ளான். இதனால், ஆசிரியருக்கு நெஞ்சுப் பகுதியில் விரல் நகத்தால் காயம் ஏற்பட்டுள்ளது. பின் போலீசு ‘ஜீப்’ல் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளான்.

போலீஸ் அராஜகம்10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை வேனில் ஏற்றி சென்று போலீசு, நடுவழியில் இறக்கி விட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், போலீசின் அராஜகத்தை நேரில் உணர்ந்தாக பலர் கூறினர்.

கிராமப்புற மாணவர்கள் கல்வி உரிமை, இந்த அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதான் மேற்கண்ட மாணவர்களின் போராட்டம்.

ஏற்கனவே கல்வி தனியார் மயமாகி இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சொத்துக்களை எல்லாம் பிடுங்கி மக்களை போண்டியாக்கியுள்ளது. தங்களின் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். நாம் தான் படிப்பறிவின்றி தற்குறிகளாக இருந்துவிட்டோம். நமது பிள்ளைகள் படித்து நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என மாவட்டம் கடந்து, மாநிலம் கடந்து சென்று கூலி வேலை செய்து படிக்க வைக்கின்றனர். இந்த அரை குறை கல்வி உரிமையையும் பிடுங்கி, நாடோடிகளாக மாற்றும் சதி.

கிராமப்புற கல்வி கூடங்கள் எல்லாம் ஆசிரியர் பற்றாக்குறை, மரத்தடி பள்ளிகள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் கட்டிடங்களில் உயிரை பணயம் வைத்து படித்து வருகின்றனர். இந்த அவல நிலையில் தான், மேலும் இடியாக இறங்கிய போக்குவரத்து பிரச்சனை. இப்பிரச்சனையை அரசு தீர்க்காது. அது ஒரு அடக்குமுறை கருவி, மக்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுத்து, கேட்க கூட அவர்களுக்கு ‘நேரம்’ இல்லை. போராடி உரிமையை மீட்க வீதிக்கு வருபவர்களை அடித்து துவம்சம் செய்யவும், அதிகாரத்தை நிறுவிக் கொள்ளவும், ஓடோடி வருகின்றனர்.

எனவே, மாணவர்கள் ஒன்றுபட்டால் தான் இந்த அதிகார திமிர்பிடித்த ஆணவக்காரர்களை வெல்ல முடியும் எனவும், இந்த அரசு மக்களுக்கானதல்ல என்பதை விளக்கி மாணவர்களை அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயார் செய்ய செயல்பட்டு வருகிறது, பு.மா.இ.மு.

மாணவர்களின் விண்ணப்பம் – 1

போலீசார் அராஜகம்

ரியூர் தார்ச்சாலை மிகவம் மோசமாக இருக்கிறது. ஆகையால் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அவர்கள் அதை பராமரிக்க வில்லை. ஆகையால் நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம். போலீசார் கடுமையாக அவர்களை அடித்து விரட்டினர். பள்ளியில் அமர்ந்து கொண்டிருந்த ஆசிரியை அடித்து உதைத்தனர். கல்லூரி மாணவர்களையும் அடித்தனர். ஆகையால் அவர்களை வேலையிலிருந்து நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோமு. ஆசிரியரை அடித்த காட்சியை நேரில் பார்த்தோம் வாக்குமூலம் தருகிறோம்.

(கையொப்பம் – பள்ளி மாணவர்கள்)

மாணவர்களின் விண்ணப்பம் – 2

 

students-petition-1

போலீஸ் அராஜகம் ஒழிக

ரியூர் தார்சாலை ரொம்ப மோசமான நிலையில் இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் செய்து வருவதால் போலீஸ்சார் கல்லூரி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியரை கைது செய்து வேனில் ஏற்றி கொடுரமாக அடித்து சில மாணவர்களையும் அடித்தார் அடித்த உடன் மயக்கம் அடைந்தார் மயக்கம் அடைந்த காரணத்தாள் இதநாள் எங்களுக்கு உடனடியாக சாலை மறியல் செய்து கொடுக்க வேண்டும் அமைத்து கொடு அமைத்து கொடு சாலை வசதிகளை அமைத்து கொடு பெண்களுக்கு பாதுகாப்புகொடு போராடுவோம் போராடுவோம் இறுதிவரை போராடுவோம். மத்திய அரசு மாநில அரசு.

(கையொப்பம் – பள்ளி மாணவர்கள்)

தகவல
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
தருமபுரி மாவட்டம்.