Friday, September 29, 2023
முகப்புகலைகவிதைநன்றி நரகாசுரன்...!

நன்றி நரகாசுரன்…!

-

அசுரர்கள்ன்பமயமாய் வாழ்ந்தவர்கள்
தேவர்கள்! – அதற்கு
இடையூறு செய்தவன் நரகாசுரன்
அவனைத் தீர்த்துக்கட்டியது தீபாவளி!
கொண்டாடுங்கள் என்கிறது புராணம்…

அசுரன் கெட்டவன் என்றதால்
அப்பொழுதே மறந்தேன்,
தேவர்கள் நினைவில் தெருவில் கலந்தேன்
தீபாவளி விளம்பரத்தில் ஊரே தேவலோகம்!

கவர்ச்சிகரமான டிசைன்களுடன்
காத்திருக்கும் துணிக்கடை முதலாளிகள்,

”இந்த தீபாவளிக்கு
எங்களிடம் தலையைக்கொடுங்கள்” என
வாழ்த்துக்களோடு வழியும் எண்ணெய் முதலாளிகள்.

இந்துக்களின் புனிதத் திருநாளை
தலைமுடியில் பிடித்திழுக்கும்
பன்னாட்டு ஷாம்பு கம்பெனிகள்,

கவர்ச்சிகரமான வட்டியுடன்
நம் வாழ்வில் ‘ஒளியேற்றும்’
கார்ப்பரேட் வங்கிகள்,

விளைநிலத்தை தரிசாக்கி
‘ரெண்டுகிலோ ஸ்வீட், புஸ்வானத்தோடு’
தீபாவளி பரிசாக்கும்
ரியல் எஸ்டேட் முதலாளிகள்,

தென்திசைக் காற்றின் முகந்தனை தீய்த்து
நன்நீர் ஊற்றுக்கண் நிலத்தடி மாய்த்து
தலைமுறை மார்பினில் காசநோய் பூத்து
தீபாவளி விளம்பரமாய் சிரிக்கிறது
வேதாந்தா ஸ்டெர்லைட்.

சாதாரண இருமலுக்குப் போனவனை
‘சங்கு சக்கரமாய்’ சுத்த விட்டு,
வாயில் தர்மாமீட்டரை விட்டு
வயிறு வழியாக சொத்தை எடுத்து,
கிட்னிக்கு ‘வெடி’ வைத்து
இதயத்தில் பாம்பு மாத்திரை கொளுத்திய
மருத்துவமனை முதலாளிகள் வாயிலிருந்து
‘மகிழ்வான வளம் கூட்டும்’ தீபாவளி வாழ்த்துக்கள்.

தேவலோகம் இப்படியெனில்,
தேவர்களின் கொண்டாட்டமோ,
செத்த எலிக்கே வீச்சம்!

நெய்யிலும், பொய்யிலும் பிரபலமான
ஸ்வீட் கடைகளில் வித வித ‘ஆர்டர்கள்’!
கிரெடிட் கார்டில் முறுக்கு பிழியும்
ஐ.டி. வளர்ச்சிகள்!
இனிப்புகள் பீதியுற
மொய்க்கும் விழிகள்!
எல்லாம் செரிக்க
தீபாவளி மருந்தாய் தீபாவளி மலர் ஜெயமோகன்கள்.

ஆடையே அறியாதவர் போல்
அலைந்தலைந்து ஒரேநாளில்
ஆயிரக்கணக்கில் கடை நுழைந்து
புதிய ரகங்களை பொறுக்கியெடுக்க,
ஜவுளிக்கடை ஊழியர்களின்
எலும்புகளை முறிக்கும்
ஜாலி ஷாப்பிங்!
புதுத்துணியில் இழையோடும்
தொழிலாளியின் காயம்
பூசும் பண்டிகை மஞ்சளால் புலப்படும்.

திளைப்பும், கொழுப்பும்
காரின் வேகத்தில் தெரியும்,
புது நகை வாங்க போகும் வழியில்
தானும் பிழைக்கும் சாலையோர வியாபாரியின்
கால்களைப் பார்த்து
காரின் விளக்குகள் கண்களில் எரியும்!
”தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்”
என பண்டிகை வேகம்
உதட்டினில் வெடிக்கும!

தீபாவளி ஷாப்பிங்
“தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்”

கொளுத்தும் பட்டாசிலும்
குறிவைத்து அனுப்பும் ராக்கெட்டிலும்
வர்க்கத்தின் வனப்பு மின்னும்!
வேடிக்கைப் பார்த்து
தெருவினில் வெடிக்காத பட்டாசைத்
தேடித் திரியும் ஏழைப் பிள்ளை நெஞ்சில்
ஆசை வெடிமருந்தாய்ச் சேரும்!

அனாதைகளை உருவாக்கும்
சமூக அமைப்பிற்கு வெடிவைக்காமல்,
அனாதை இல்லங்களில் போய் வெடிவைத்து
ஆடை, இனிப்பு என ஆடிப்பாடி கொண்டாடி
அடுத்த நொடியே அவர்களின் தேசத்தை சூறையாடும்
கார்ப்பொரேட் தருமங்கள்!

மிச்சம் வைக்காமல் ‘பில்’ போட
தீபாவளியை ‘நுகர’ அழைக்கும் முதலாளிகள்
‘மிச்சம்’ வைக்காமல் கொண்டாட
தலை தீபாவளிக்கு தயாராகும் மாப்பிள்ளைகள்…

தேவரீர் சமூகத்தின்
இந்தத் திளைப்புகளைய்ப் பார்க்கையில்
நான் திடமாக நம்புகிறேன்…
இந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையூறாக இருந்த
நரகாசுரன் நிச்சயம் நல்லவன்தான்!

– துரை.சண்முகம்

 1. தீபாவலியின் கொண்டாட்டங்களுக்கு இடையூறாக இருந்த
  நரகாசுரன் நிச்சயம் நல்லவர்தான்! சந்தேகமே இல்லை…..

 2. நான் எழுத வேண்டியதை நீங்கள் எழுதியுள்ளீர்கள். யார் எழுதினால் என்ன? வெளிப்பாடு முக்கியம். அதிலும் இதுபோன்ற வெளிப்பாடு அவசியம். எனது எண்ணம் உமது எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

 3. “அனாதைகளை உருவாக்கும்
  சமூக அமைப்பிற்கு வெடிவைக்காமல்,
  அனாதை இல்லங்களில் போய் வெடிவைத்து
  ஆடை, இனிப்பு என ஆடிப்பாடி கொண்டாடி
  அடுத்த நொடியே அவர்களின் தேசத்தை சூறையாடும்
  கார்ப்பொரேட் தருமங்கள்!”………………………பிடித்த வரிகள்.

  தீபாவளிக்குப் பிறகு –

  “முதலாளி கணக்குப் பார்ப்பான் – லாபம் எவ்வளவு என்று!
  உழைப்பாளியும் கணக்குப் பார்ப்பான் – இழந்தது எவ்வளவு என்று!”

  தித்திக்கும் தீபாவளி! யாருக்கு?
  http://www.hooraan.blogspot.in/2012/11/blog-post_12.html

 4. மிக நல்ல கருத்துக்கள்! இத்தருணத்தில் தனியொருவராக போராடிய பெரியாரை நினைக்கிறேன்! ஆனால், என் வீட்டில் தீபாவ்ளி படைப்பதில்லை என்றாலும்,நண்பர்கள் வீட்டிலிருந்து பலகாரஙகள், பட்டாசு வெடிக்கும் சீசன் என்று, படையலற்ற பண்டிகையை விட முடியவில்லையே! அரசு உத்தியொகம் பார்க்கும் பக்கத்து வீட்டாருக்கு இலவச அன்பளிப்பாக பல ஆயிரம் ரூபாய் பட்டசுகளும் , இனிப்புகளும் குவிகின்றன!நம் வீட்டு குழைந்தைகளுக்கு காசு கொடுத்தாவதுநாம் வாஙகித்தானே தரவேண்டும்? ஆயுதபூஜையும், தீபாவளியும் அன்பளிப்பு பண்டிகை ஆயிற்றே!

 5. கவிதை இன்றைக்கும், பழமைக்கும் எப்படியெல்லாம் அருமையாக முடிச்சு போடுகிறது..!!!

  கவிதை மட்டுமல்ல, படமும் நுட்பமாக இருக்கிறது.. படத்தில் நரகாசுரன் மகிசாசுரனாகக் காட்சி அளிப்பது அசுரர்கள் மாயாஜாலங்களில் வல்லவர்கள் என்று புராணங்கள் கூறுவதை குறிப்பாக உணர்த்துகிறது..

  • பாண்டியன் தம்பி..இப்படித்தான் அவனோட அப்பன் சமயம் பார்த்து கடை விரித்தான்…
   கருனாநிதியும் மூப்பனும் நல்லாவே கல்லா கட்டினார்கள்….
   பழையபடி அப்பன்(மூப்பன்) கடையை காங்கிரசிடம்”அடமானம்” வைத்து புள்ளைக்கு
   அமைச்சர் வேலை வாங்கிக் கொடுத்தான்…
   இப்போ பையன்,மூப்பனின் பேரனுக்கு டெல்லியில் வேலை(அமைச்சர் பதவி) வாங்க
   கடை திறக்கப் போகிறான்..
   அனேகமாக தொப்புளில் பம்பரம் விடும் ஆசாமி,
   கடையில் பொட்டலம் மடிக்கும் வேலைக்கு சேர்ந்து விடுவான்!
   மன்Gசல் துண்டு….கிழட்டு நரி என்ன செய்யும்?
   மீதியை வெள்ளித் திரையில் தமிழன் வாய் பிளந்து பார்ப்பான்…..

  • பாண்டியன் தம்பி..அப்பன் அரசியிலில் தீவிரமாக இருந்தபோது…
   அம்பிகா,ராதா, மாயா,ஜெயசிதிரா,போன்றோரை கட்சியில் இனைத்தார்…
   உங்களுக்கும் எனக்கும் சொல்லாமல்,.விடுதிகளில் நடந்த அரசியல் சேவைகளில்
   “தடியடி” வாங்கியதால் இப்போது வாடி வதங்கி உள்ளனர்:
   பையன், கட்சி ஆரம்பித்தபின்
   மீண்டும் “தடியடி” சேவை நடக்க வாய்ப்புண்டு….

 6. பண்டிகைகள் நமது பண்பாட்டின் வெளிப்பாடகநாம் ஏற்றுக்கொள்ளலாம்! எல்லோரும் சந்தொசமாகவும்,நண்பர்கள், உற்வினர்களிடம் வாழ்த்து பரிமாரிக்கொள்வதும், ஏழைகளுக்கு உதவுதும் குறிக்கோளாக கொள்ளப்படல் வேண்டும்! அதை விடுத்து, புராண குப்பைகளை அரஙகேற்றி அரசியல்நடத்துவது அபத்தம் ! கிருஸ்துமஸ் இப்பொது உலக மகா பண்டிகை ஆகிவிட்டது! பக்ரித் ஈகை திருநாள் என்று முஸ்லிம்கள் கொண்டாடினாலும், பல இந்துநண்பர்களும் பிரியாணி சாப்பிடுகிறோமே! பொதுவாக பண்டிகைகள் மனிதநெயத்தை வளர்ப்பதாக கருதுகிறேன்! மற்றபடி பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பினால் மதவாத சக்திகளை முறியடிக்கலாம்!

 7. இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது நான் பட்டாசு வெடித்து. காரனம் என்னிடம் பணம் இல்லாமல்
  இல்லை, இறைவன் எனக்கு அளித்த பகுத்தறிவை உபயோகிப்பதால்.

 8. பெரியாரின் கொள்கைகளை பரப்பினால்? யார் செய்வது>

  எனக்கு வல்லம் கல்லூரியின் வரவு செலவை பார்ப்பேனா?
  பெரியார் திடலை இயேசு அழைக்கிறார் ப்ரொக்ராமுக்கு வாடகைக்கு விடுவேனா?

  நேரம் இல்லை!

 9. Why you are criticizing Hindu Festivals only? Why you are not criticizing Muslim Festivals like Bakrid etc which has lot of misbelief? Whether you have fear over Muslims?

 10. அம்பி ,

  பெரும்பான்மையான மக்களை ஹிந்துக்களாக மாற்றியதாகட்டும் , மண்ணின் மைந்தர்களை சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் மாற்றியதாகட்டும், பாற்கடல் கடைந்து அமுதத்தை ஆட்டையைப் போட்டதாகட்டும் ,ஆணும் ஆணும் சேர்ந்து ஆணை பெற்றாதகட்டும் , பன்றி அவதாரம் எடுத்து பூமியை பாயாக சுருட்டியதாகட்டும்…etc அசுரர்களை விட தேவர்களே மாயாஜாலங்களில் சிறந்து விளங்கினர்.

 11. நரகாசுரனை கொன்றதற்கான ஒரு காரணம் விக்கியில் படித்தது ,

  Besides eight principal queens,[1] Hindu god Krishna, an avatar of the god Vishnu and the king of Dwarka – in the Dwapara Yuga (epoch), is described to have many unnamed junior wives. Their number is mentioned as 16,000 or 16,100 in different scriptures. The chief amongst them is sometimes called Rohini. They were all kidnapped and held captive by the demon-king Narakasura. When Krishna slew Narakasura, he married all the captive women to safeguard their dignity. After marriage, they all lived in Dwarka, in a blissful happiness.

  • பொம்பிளைங்க குளிக்கிற இடத்தில் மறைந்து
   நின்று,அவங்களோட பொடவையை களவாண்டு
   போவதுதான்…க்ரிஷ்னலீலை..
   .
   அடுத்தவன் வீட்டில் புகுந்து வெண்ணையை திருடித் திண்பத்துதான்
   பரமாத்வாவின் அன்றாட சேஷ்டைகளில்(திருவிளையாடல்) ஒன்று…

   உஙக மகனோ/எனது மகனோ இந்த வேலையை
   செய்தால்..மக்கள் கன்னத்தில் போட்டுக்கொள்வர்களா?(அ) கன்னத்தில் போடுவார்களா?

 12. க்ரிஷ்ணனுடைய காம லீலைகளுக்கு இடையூறாக இருந்ததாலே நரகாசுரன் கொல்லப்பட்டான் . இதை புராண இதிகாச குப்பைகளே சொல்கின்றன .

  நன்றி விக்கி

  • // They were all kidnapped and held captive by the demon-king Narakasura. When Krishna slew Narakasura, he married all the captive women to safeguard their dignity. After marriage, they all lived in Dwarka, in a blissful happiness.//

   16,000 பெண்களை கடத்திக் கொண்டுபோய் வைத்திருந்த நரகாசுரர் உத்தமர்.. அவர்களை விடுவித்து மணந்து கொண்ட க்ரிஷ்ணன் மோசம்..

   • 16,000 பொண்டுகளை கல்யானம் செய்த
    க்ரிஷ்ன பரமாத்வாவுக்கு எத்தனை குழந்தைகள் அம்பி?
    பிரசவம் எங்கே நடந்தது?
    அப்புறம் க்ரிச்னர் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொண்டாரா?
    இல்லை,தொடர்ந்து ஆத்தோரம்…துணிகளை களவாண்டு..களவாண்டு
    லீலைகளை தொடர்ந்தாரா?

 13. எல்லா பண்டிகைகளும் எந்தநோக்கத்திற்காக கொண்டாடப்படுகின்றன என்றனோக்கத்தை பொறுத்து விமர்சிக்கப்பட வேண்டியவைதான்!

  ஈகை திருனாள் என்று மகமதியர் கொண்டாடுகின்றனர்! ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் , ஒரே இடத்தில் தொழுது, ஒரே இறைவனை போற்றி கொடையளிக்கிறார்கள்! விமரிசிக்க என்ன இருக்கிறது? உணவுக்காக ஏராளமான ஆடு, ஒட்டகஙள் பலியிடப்படுவதை தவிர?

  உலகெங்கும் கிருஸ்துமச் கொண்டாடுகிரார்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், அவரவர் தகுதிக்கு ஏற்ப அன்பளிப்பு, வாழ்த்துக்கள் பரிமாறி ஒற்றுமையை பேணுகிரார்கள்! விமரிசிக்க என்ன இருக்கிறது? செலவினம் தவிர?

  இந்துக்களும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்; அரசு ஊழியர்கள் போனசு வாங்கி செலவிடுகிரார்கள்! மற்றவர்கள் கடன் வாங்கி விழி பிதுங்கி கொண்டாடுகிரார்கள்! ஆண்டைகளிடம் எண்ணை, துனிக்காக கையேந்திய அடிமைகள் , நவீன ஆண்டைகளிடம் போனஸ் கேட்டு போராடுகிரார்கள்!

  சம்பாதித்த பணத்தை பட்டாசுக்கும், ஆடம்பர வகையிலும் செலவு செய்துவிட்டு, நரகாசுரனை யாரோ எதுக்காகவோ கொன்னுட்டாங்களாம் என்று, பட்சனம் திண்று ஏப்பமிட்டு டீவீ பார்த்து, பொழுதை கழிக்கும் பண்டிகைகள் தேவையா அய்யா?

  பட்டாசுகளால் ஏற்படும் வளிமண்டல மாசு எவ்வளவு பேருக்கு சுவாசக்கோளாறு எற்படுத்துகிறது?
  அன்று ஒருனாளில் சேரும் குப்பகளினால் எத்தனை சாக்கடைகள் அடைபடுகிறது? சுகாதாரமற்ற மற்றும் பெருமைக்காக செய்யப்படும் உணவுப்பொருதள் வீணாகி, அதனால் ஏற்படும் நலக்குறைவு எத்தனை? உல்லாச பண்டிகை கொண்டாடும் மக்கள், தங்களினும் வசதி குறைந்த ஏழை சகொதரர்களை நினைப்பதுண்டா?

  பார்பன ஆதிக்கத்தைநிலைனாட்டும் ஒரெ குறிக்கோள் கொண்ட பண்டிகைகளை பாராட்டமுடியுமா?

 14. god didn’t ask anyone to burst crackers and who makes money from crackers?

  i think you are not aware of the amount of fuel that is guzzled and exhaust released by arab land cruisers racing on gulf highways and killing poor workers who might be crossing the road.

  i dont see any difference between diwali/eid or christmas.

  house maids/workers etc get diwali bonus all the time.

  government and companies should also do so and unlike here,in muslim countries you only get free food and kids get some gifts nothing more.

  many poor people make money by selling crackers.

  crackers are anyday better than tasmac.

 15. உங்களோட oxymoron வாதங்கள் வைத்து எத்தனை காலத்திற்குதான் ஏமாதுவீகனு தெரியல.
  ஒரு பக்கம் புராணம் புரளிம்பீங்க இன்னொரு பக்கம் அந்த புராணத்துல இருந்து நீங்க புதுசா ஒரு கத திரீப்பீங்க.
  புராணம் இதிகாசம் எல்லாமே one-line story தான் – நல்லவன் வாழ்வான் கெட்டவன் சாவான்.
  நரகாசுரன் நல்லவன் கிருஷ்ணன் தான் கெட்டவன்னு prove பண்ணி என்ன சாதிக்க போறீயனு தெரியல. அப்படி prove பண்ணாலும் கெட்டவன் வாழ்வான் நல்லவன் சாவான்னுல வருது. ஒண்ணுமே புரியல.
  ஒரு பக்கம் இல்லாத ராமனுக்கு கோயிலேதுக்குனு கேப்பிக இன்னொரு பக்கம் இராவணன் திராவிடம்பீக. அட மக்கா நாம்படிச்ச ராமாயணத்துல அவன் ஐயனாசென்னு யோசிச்சேன். ஐயனெல்லாம் ஆரியன்னு சொன்னது பொய்யா இல்ல இது பொய்யா ஒன்னும் வெளங்கல.
  தவறான காமம் கொள்ளும் பெண்கள் மூக்கு அறுபடும் – message தெளிவாதான் இருக்கு. ஆனா சூர்பனகை மூக்குக்கு பூச போடும்போது கொலம்பி கெடக்கு.

 16. அதைத்தான்நானும் சொல்கிறேன் அரிகுமார்! பின் ஏன் இந்த அராஜகம்! அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறை இருந்தும் புறநகர்களில் அதிக ஒலியெழுப்பும் பட்டாசுகள் தொல்லை தாங்க முடியவில்லை! முதியவ்ர்கள், குழைந்தகள், வளர்ப்பு பிராணிகளின் நிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்! பட்டாசு வெடிப்பதுபண்டிகையின் முக்கியனமான அம்சம் என்று முன்பு ஒருமுறை ஜெயேந்திரர் கூறியதாக நினைவு! அடுத்தவர்களை துன்பப்படுத்தி, இன்பமடைவது ஒரு வகை சாடிஸம் அல்லவா?
  சாரய கடை களால் கொள்ளை லாபமடிக்கும் கும்பலே பட்டாசு வியாபாரத்திலும் கொள்ளையடிக்கின்றனர்! எத்தனை சிறுவர்கள், பெண்கள் வருடா வருடம் பட்டாசு தொழிற்சாலைகளில் உயிரிழக்கின்றனர்? இதை டீவியிலும், செய்திதாள்களிலும் பார்க்கும் நாம் இந்த கறை படிந்த பட்டாசுகளை வாங்கி வெடிக்கலாமா? நம் குழைந்தைகளுக்குநாம் அறிவுறுத்த வேண்டாமா? எனது அண்டை வீட்டாரின் இலவச பாட்டாசு பற்றி நான் வினவில் பகிர்ந்து கொண்டபின்,நேற்று புஸ்வாணம் வெடித்து கையில் காயம் ஏற்பட்டுவிட்டது, எனக்கு மன வேதனை அளிக்கிறது! அகாலங்களில் கூட பட்டாசு வெடிப்பது தீபாவளியில் மட்டுமல்ல, கிருசஸ்துமஸ், பொங்கல் மற்றும் இறுதி ஊர்வலங்களிலும் நடக்கும் அனாகரிகமாகிவிட்டது! கூடவே சரக்கு என்ற பெயரில் டாஸ்மாச்! எல்லோரும் இந்த சமூக சீரழிவை எதிர்த்து குரல் கொடுங்களேன்!

  • எதிர்த்து குரல் கொடுப்பதா?
   மக்கள் சந்தோசமாக வாழ
   மலிவு விலையில் சொமா/சுரா பானம்
   அரசாங்கமே நேரிடையாக விற்பது
   உங்களுக்கு பிடிக்கவில்லையா…மவனே,உன்னை தேசிய
   பாதுகாப்பு சட்டத்தில் போட்டால்தான் சரியா வருவே!
   எம்புட்டு வருவாய்?
   எம்புட்டு லாவம்?
   அடே ஆத்தா,

 17. செய்தாலும் செய்வார்கள் அய்யா! ஆனால் சொல்ல வேண்டியது பெரிசுகளின் கடமை அல்லவா? எல்லா இனத்து பெண்களுக்கும் ஒரு அறிவுரை: குஷ்ட ரொகியை வேண்டுமானால் மணக்கலாம், குடிகாரனை மணக்க சம்மதிக்காதீர்கள்! டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டத்தை பார்த்தால், இவர்கள் வீடு என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம்தான் வருகிறது! இவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் மனைவி,மழலையர்நிலை என்ன?

 18. அருமையான கவிதை தோழர்,அனைத்து தோழர்களுக்கும் வருகிற நவம்பர் 7 ரசிய சோசலிசப் புரட்சி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • டாச்மார்க்கை விடுங்கள்…எங்களது புதுச்சேரி/காரைக்கால் எல்லைகளை….
   காலை முதல் நள்ளிரவு வரை அண்டை மாநில குடிகார பன்னாடைகள்
   மூச்சு முட்ட குடித்துவிட்டு,சாலையோரம் சாய்ந்து விடுவார்கள்..
   இவர்கள் எல்லோரும் பெரும் சுமை..நமக்கும் சுமைதான்..இவர்களுக்கேல்லாம்
   நாம் போராடவேண்டியுள்ளது!

 19. நல்ல கவிதை. கவிஞர் எழுதாவிட்டாலும் பொது மக்களுக்கு பார்ப்பனியத்தை முடிச்சுப் போடாமல் தூக்கம் வரவில்லை.

  நாத்திகம் பேசுகிறவர்கள் இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் விட்டு விடுவதற்கு என்ன காரணம் என்று (பயம் தவிற) இன்று வரை எனக்குப் புரியவில்லை.

  • சிவாவுக்கு ரொம்ப வருத்தம்போல…
   வாங்க..இனிமேல் சுரம்,வயிற்றுப் போக்கு வந்தால்,மருந்து சாபிடவேண்டாம்…அன்னை ஆரோக்கிய மாத ஆலயத்தில் முட்டிக்கால் போட்டு தொழுதுவிட்டு, நாகூர் பள்ளிவாசலில்
   முடிகயிறு போட்டுக் கொண்டு போகலாம்…மிச்சம் மீதி காசு இருந்தால்,திருநல்லாறு சனி பகவான்,
   வாருங்கள்…அரைஜான் கவுறையும் உறுவி அனுப்புவார்கள்!

 20. //நாத்திகம் பேசுகிறவர்கள் இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் விட்டு விடுவதற்கு என்ன காரணம் என்று (பயம் தவிற) இன்று வரை எனக்குப் புரியவில்லை.//……..சிவாவுக்கு ரொம்ப வருத்தம்போல…வருத்தம் மட்டுமல்ல! இது ஏதோ வயித்தெரிச்சல் மாதிரி தெரியுது! பெரியார் கடவுள் எதிர்ப்பு என்று வரும்போது எல்லா மத கோட்பாடுகளையும் விமர்சித்து இருக்கிரார்! வின்வும் எல்லா மதத்தையும் சமமாகவே விமரிசிக்கிரது! ஒரு சில மனசாட்சியற்ற, வக்கிரங்களே பொத்தாம் பொதுவாக இப்படி கூறுகிரார்கள்!நடுனிலையாளர்கள் உஷார்!

 21. //பெரியார் கடவுள் எதிர்ப்பு என்று வரும்போது எல்லா மத கோட்பாடுகளையும் விமர்சித்து இருக்கிரார்!// ethavathu ondrai koora mudiyuma?

 22. புரட்சி பாதிரியார் ஜோசெப் எடமருகுவின் ‘யெசுவும் கிருஷ்னனும் ஜீவிச்சிருக்கனில்லா’ என்ற மலையாள புத்தகத்தை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது! பழைய மொழிபெயர்ப்பு ‘உண்மையில்’ தொடராக வந்துள்ளது! கிருஸ்துவர்களின் பேய் பிசாசு நம்பிக்கைகளை, இலங்கையை செர்ந்த மாஜிக் நிபுணர் மருத்துவர் கோவூர் எழுதியதும் விடுதலையிலும், உண்மையிலும் படித்திருக்கிறேன்! கிருத்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் ‘ஒரே இறைக்கொள்கையும், சாதி வேற்றுமையின்மையும் ‘ சுட்டி காட்டியிருக்கிரார்! மனிதனுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் ஒரே மதம் இந்துமதம் மட்டுமே என்று சாடியிருக்கிரார்! பழைய ‘குடியரசு’ தொகுதி வாங்கி படியுங்களேன்! கண்ணன் கண்ணைதிறந்து பாருங்களேன்! உங்கள் கேள்வி ஏற்கனவே பெரியாரிடம் கேட் க பட்டவைதானே!

 23. அடுத்து கண்ணன் போன்றோரிடமிருந்து என்ன கேள்வி வரும்? பெரியார் ஏன் அமெரிக்கா சென்று கிருத்துவத்தை எதிர்க்கவில்லை? அரேபியா சென்று இஸ்லாத்தை எதிர்க்கவில்லை? அதானே! பார்ப்பன தந்திரங்களை எல்லாம் கடந்து வந்த எங்களுக்கு தெரியாதா இவர்கள் நரித்தனம்!

 24. கண்ணன் அவர்களே! பெரியார் பதிப்பித்த கீழ்க்கண்ட நூல்களையும் படித்துவிட்டு சொல்லுங்களேன்!

  1.மதப் புரட்சி (ஜோசப் மெக்கேல் – மொழி பெயர்ப்பு)

  2.முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை

  3.மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன?

  4.பாதிரியும், பெண்களும், பாவமன்னிப்பும்

  5.மதமும் விஞ்ஞான சாஸ்திரமும்

  6.பிரபஞ்ச உற்பத்தி

  7.நான் ஏன் கிறிஸ்தவனல்ல? (ரசல் – மொழி பெயர்ப்பு)

  8.நான் சம்சயவாதி ஆனதேன்? – இங்கர்சால்

  9.பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்? (ப. ஜீவானந்தம் மொழி பெயர்ப்பு)

  10.பகுத்தறிவு அல்லது கத்தோலிக்க குருவின் மரண சாசனம் (மூன்று பாகங்கள்)

  11.லெனினும் மதமும்

  12.கடவுளும், பிரபஞ்சமும்

  13.மேயோ கூற்று மெய்யா, பொய்யா?

  14.நரகம் எங்கே இருக்கிறது?

  15.கடவுள் தோன்றியது எப்படி? (இரண்டு பாகங்கள்)

  16.கடவுளர் கதைகள்

  17.பேய் – பூதம் – பிசாசு

  18.மதப் புரட்சி

  19.கடவுள் தோன்றியது எப்படி?

  (ஆங்கிலத்தில் கிராண்ட் ஆலன் தமிழில் பேராசிரியர் வெள்ளையன் மொழி பெயர்ப்பு)

  இன்னும் ஏராளம் உண்டு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க